Saturday, September 21, 2013

வெட்கப்பட்டாள் - அச்சப்பட்டேன் - கட்டிக்கிட்டாள் - கட்டுப்பட்டேன்!

ஏய்! ஏய் என்ன பண்ணுறீங்க என்று சாரங்கனைப் பார்த்துக் கேட்டாள் சாம்பவி. சாரங்கன் செய்யும் செயலைப் பார்த்து வெட்கப்பட்டாள்! மெல்லச் சிரித்தாள்! கொஞ்சமாய் முகத்தைச் சுளித்தாள்! 
சீ….சீ நான் ஒண்ணும் பண்ணலையே ! என் அழகு தேவதைய சிலையா செதுக்க நினைத்தேன்.அதன் வெளிப்பாடு தான் இது அப்படீன்னு பதிலுரைத்தான் சாரங்கன்.
ஓஹோ! முன்னாடி நீங்க கவித சொல்லி என்னை மடக்கினீங்கள்! அப்ப, இப்போ ஓவியம் வரைகிறவரைக்கும் வந்திட்டீங்களே!என்றவாறு செல்லமாய் சிணுங்கினாள்!
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 
ஓரமாய் நின்று ஓவியத்தை உற்றுப் பார்த்தவளை அருகே சென்று அணைத்தான் சாரங்கன்! சாம்பவி சிணுங்கினாள்!செல்லமாய்க் கோபப்பட்டாள்! மெல்லிதாய் கட்டை விரலால் கோலமிட்டாள்!
என்னங்க இப்பவே உங்கலீலையை ஆரம்பீச்சிட்டீங்களா?
என்னடி நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை! அதற்குள்ள நீ ………….. என்றவாறு பெருமூச்சு விட்டான் அவன்!
ம் …………… சரி சரி அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம். ஏங்க இப்ப ஒன்று சொல்லுங்க கேட்பம் என்று மெதுவாய் காது மடலைக் கொடுத்தாள். 

"என்னது கவிதையா? நான் சொல்லுவேனா? எனக்கு அதெல்லாம் சுத்தமாகத் தெரியாதே?" அப்படீன்னு மொழியுரைத்தான் சாரங்கன்.
என்னடி கள்ளி! எனக்கேவா? நான் ஏதோ காதல் மயக்கத்தில் வார்த்தைகளைக் கொட்டியிருப்பேன். அதைப் போய் நீ கவிதை என்கிறாய். உனக்கு கொஞ்சம் விசர் புடிச்சிட்டுதே? அப்படீன்னு கேட்டான் சாரங்கன்.
ஆமாங்க! எனக்கு உங்க மேல(லை)  தான் விசர் பிடிச்சிட்டுதுங்க எனக் கோபமாய் மொழிந்தாள் சாம்பவி!.

சரி சரி கோபடாதேங்க; என்றவாறு அவளின் இடையை லேசாகக் கிள்ளியபடி; "ஒனக்குத் தெரியுமா தமிழ்ல எத்தனை காலமிருக்கெண்டு" எனக் கேட்டான் சாரங்கன்
என்னங்க நீங்க!நல்லா தெரியுமேங்க.மூன்று காலம் இருக்குங்க. இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம். இதப் போயி நீங்க பாலர் வகுப்பு புள்ளையிடம் கேட்டிருந்தா கூட சொல்லுமே!நீங்க பள்ளியறையிலா கேட்கிறது? எனக் கடிந்தாள் சாம்பவி!

அடி லூசு தமிழ் இலக்கியத்தில சங்ககாலம், சங்கமருவியகாலம், பல்லவர்காலம்,சோழர்காலம் என்றெல்லாம் இருப்பது உனக்கு ஞாபகமிருக்கா?
ஆமாங்க; அதுக்கு இப்ப என்னங்க? இது போல தான் இந்த கலியுக காலத்திலையும் எங்கட நாட்டில காதலுக்கு முந்தின காலம் (கா.மு), காதலுக்குப் பிந்தினகாலம் (கா.பி) கம்பியூட்டர் காலம், (க.கா) என்றெல்லாம் இருப்பது ஒனக்கு தெரியாதோ? எனக் கேட்டான் சாரங்கன்.

அடி மக்கு! என்கிட்ட கவித கேட்டாயில்லே! நான் அந்த காலத்தின் அடிப்படையில இந்தக் கால காதலை வைத்து கவிதை சொல்லட்டுமா?
ஆமாங்க! சொல்லுங்க கேட்கலாம்! என்றவாறு நெளிந்தாள். அவன் சட்டை பட்டனில் கோலமிட்டாள்!
தேடலும் தெறிப்பும் உள்ளவரை
தேனாக இனிக்குமாம் காதல்- பின்னர்
ஊடலும் கூடலும் முடிந்த உடன்
உப்பாக கசக்குமாம் அது நவீன காதல்!

ம் … ம்’ சுத்தம்! ஆளுக்கு அனுபவம் போல என்றவாறு அவனின் கன்னத்தில் அவள் கிள்ளினாள்.

கலப்பு முடிந்தபின் இன்றைய காதல்களோ
கானல் நீர் போலாகுமாம்- பின்
உலக்கை எடுத்து மனைவி 
அடுத்தவன் பொண்டாட்டியை ஜொள் விட்டோமே 
என்பது உறைக்குமாம் - உணர்வு பிறக்குமாம்!
"ஆகா அருமையாயிருக்கே" எனச் சொல்லியவாறு சாரங்கனின் இதழோடு தன் செவ் இதழைப் பதித்தாள் சாம்பவி! "என்னது ஸ்ரோபரி லிப்ஸ்டிக்கா போட்டிருக்காய்? இப்படி இனிக்கிறதே!" எனச் சொல்லி அவளின் வாய் இதழை தன் வாய் கொண்டு மூட எத்தனித்தான் சாரங்கன்!
"பொறு பொறு இதைக் கேளும் பார்ப்பம்!" என ஆசை கொண்டு விழி மூடி, அவனிடம் ஆவல் கொண்டவளின் மனதை உலுப்பினான் சாரங்கன்!

"கான் போன் மணியது ஒலித்திட அவள்
காதல் மொழியது புரிந்திடும்- மாசம்
போன் பில் அது உயர்ந்திட வீட்டில்
பொல்லால் அடி விழும்- மனம்
ஏன் இன்று call வரவில்லை என
ஏதிலியாய் அலைந்து தவிக்கும்- அழகு
மான் மொழியாள் மடி சாய காளை
மனமோ தினம் தினம் துடிக்கும்- ஆனால்
வீண் காசு இதுவென்று அந்த
விட்டில்களுக்குப் புரிந்திடாது!
தினம் பல தேன்
வார்த்தைகளை வீசியே அந்த தேனீக்கள்
வாழ்க்கையும் தொடர்ந்திடும்
மனம் போன் நம்பரில் அடுத்த
பிகரை தேடி ஓடிடும் - கன்னி உளம் வாடிடும்!”

ம்………. ம்
இதுவும் நல்லாய் இருக்கேங்க…சரி…… சரி! கவித சொல்லி அசத்தினது போதுமுங்க. நான் கேட்ட புதுச் சாறி எப்போ வாங்கி தர போறீங்க? என்று கேட்டவளைப் பார்த்து; எல்லாம் என்ரை தலை விதி என்றவாறு மனதினுள் நொந்தான்.

"என்னது விதியோ? அதெப்படி நான் மனதினுள் நினைத்தது உமக்கு எப்படி தெரியும்?" எனக் கேட்டான் சாரங்கன்! 
"என்னில் ஓடுவதும் உங்கள் கலப்பு ரத்தம் அல்லவா?" என சிலேடை மொழியுரைத்தாள் சாம்பவி! அப்புறமா உங்களுக்கு தெரிந்த விதிகளைச் சொல்லுங்க பார்ப்போம் எனக் கேட்டாள்.

ம்…… என்கிட்டேவா? ஐயா சயன்சில புலியென்று தெரியுமில்லே! எங்கிட்டயே வம்பா? பிளமிங்கின் விதி, கெப்லரின் விதி, அயன்ஸ்டின் விதி இப்பிடி நிறையச் சொல்லலாம் எனச் சொல்லி முடித்தான் சாரங்கன்.
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 
ம்….. சரி போதுமுங்க! உங்க talent ஐப் பத்திச் சொன்னது போதுமுங்க. உங்களால முடிந்தா விதி பற்றி ஒரு கவிதை சொல்லுங்க பார்ப்போம்? எனக் கேட்டாள்! அவன் கவிதையை அவிழ்த்து விட்டான்!
"நான் காதலிலே ஒரு நாடிழந்த அகதி
நரம்பெல்லாம் இல்லை வெட்கமெனும் சகதி
என்னருகே நீயிருந்தால் ஏழுலகும் பேசுமிது தனி விதி
என்னை விட்டு நீயும் சென்று விட்டால் எனக்கேது மதி?"
சீ... சீ... இது பொருத்தமாவே இல்லைங்க. வேற ஏதாச்சும் சொல்லுங்க" எனக் கேட்டாள் சாம்பவி!!

எனக்குள் நீ
இது எழுதப்படாத விதி
என்னுள் என்றும் நீ- இது
நான் உன்மேல் எழுதிய விதி!
இப்படி ஓர் விதிக் கவிதை சொல்லியவாறு; அவள் உடல் மீது கை தொட்டு
இடைவரை படர்ந்தான் சாரங்கன். சாம்பவி வளைந்து கொடுத்தாள்! அவன் வளைத்துக் கொடுத்தான்! உள்ளம் இரண்டும் உடலால் ஒன்றாகின! உடல் மேடு பள்ளம் தேடி மனங்கள் அலை பாய்ந்தன - இன்ப வெள்ளம் எனும் கடலில் நீந்தலாகின!
உப்பமைந் தற்றால் புலவி அது சிறிது
மிக்கற்றால் நீள விடல்: திருக்குறள் - குறள் 1302

விளக்கவுரை: உணவில் உப்புச் சேர்ந்திருப்பதைப் போன்றது கலவி இன்பத்திற்கு அவசியமான ஊடல். அந்த ஊடலை அளவுக்கதிகமாக நீடித்தால் உப்பின் அளவினைக் கூட்டிய உணவின் சுவைக்கு ஒப்பானதாக அமைந்து விடும் வாழ்க்கை. 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails