Friday, September 30, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 05

இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....
நான்காவது பாகத்தின் தொடர்ச்சியாக......
எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றினைத் தோண்டி எடுத்து, தோல்விகளை ஆற்றுப்படுத்த முடியாதவர்களாய் நாங்கள் இன்று நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.


"ஊர் நினைவுகள் எப்பொழுதும் நினைக்க - நினைக்க சுகத்தை அள்ளி வழங்கும் இயல்புடையவை" என்று பாடுகின்ற பல கவிஞர்கள் மத்தியில் எம் இறந்த காலங்கள் இதயத்தை வாட்டுகின்ற நரக ஞாபகங்களாக மட்டுமே நெஞ்சில் நிழலாடுகின்றன. என்னவோ தெரியவில்லை! ஈழத் தமிழன் மட்டும் தன் மண்னில் உள்ள வளங்களோடு தானும் ஒன்றித்து, அனுபவித்து வாழ்ந்து மண்ணோடு மண்ணாகிப் போகின்ற வரத்தினை காலம் தரவில்லை. 

வேஷம் போடும் சாதியம்- பாகம் 02- அவலங்கள் நிறைந்த மலையக மக்களின் வாழ்க்கை முறை!

முன் அறிவிப்பு: பாலுறவு சிறுகதையின் இரண்டாம் பாகம் கொஞ்சம் விவகாரமானது. பிடிக்காதவர்கள் அம்பாலிக்கா எஸ்கேப் ஆகிட்டு அடுத்த பதிவிற்கு வரலாம். ஒரு பிரதேச மக்களின் வாழ்க்கை முறையினைச் சிறுகதை மூலம் எழுதுகின்ற போது சில வேண்டத் தகாத விடயங்கள் என்று சமூகத்தில் முத்திரையிடப்படும் விடயங்களை விலக்கி வைத்து என்னால் எழுத முடியவில்லை. பெரியோர்களே! சமூக காவலர்களே! மன்னிக்கவும்!

இக் கதையினை ஐந்து நிமிடங்கள் செலவழித்துப் பொறுமையாகப் படித்து, இலங்கையில் அரசியற் கட்சிகளாலும், ஏனைய சமூகங்காலும் புறக்கணிக்கப்படும் மலையக மக்கள் பற்றிச் சிறு துளியினையாவது இப் பதிவின் மூலமாக நீங்கள் அறிந்து கொண்டால் நான் மிக்க மகிழ்ச்சியடைவேன்!


இனி முதற் பாகத்தின் தொடர்ச்சியாக:

தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிய பொன்னம்மாவை வழி மறித்த பாக்கியம், "பொன்னம்மா உங்களுக்கு எத்தினை வயசிருக்கும்?"  
''ஏன் கேட்கிறீங்கள் பாக்கியம்? 
"இல்லைச், சும்மா ஒருக்கா தெரிஞ்சு கொள்ளலாம் என்று தான் கேட்கிறேன்".

"எனக்கு முப்பத்திரண்டு வயசு இப்ப நடக்குது."
"ஓ......உங்களுக்கு முப்பத்திரண்டே, எனக்கு முப்பந்தைந்து வயசு எனத் தான் கேட்க வந்த விடயத்தை உள் மனதினுள் மறைத்துப் போலியாகப் புன்னகைக்கிறாள் பாக்கியம்.

பொன்னம்மா, நீங்கள் இனிமேல் என்னை அக்கா என்று தான் கூப்பிட வேண்டும். இன்னொரு விடயத்தினையும் சொல்ல மறந்திட்டேன். உண்மையில நீங்கள் அழகாக இருக்கிறீங்க எனப் பீடிகை போட்டாள் பாக்கியம்.

வேஷம் போடும் சாதியம்- மலையக மக்களின் அவலத்தினைச் சொல்லும் உண்மைச் சம்பவம்!

முன் அறிவிப்பு: அன்பிற்கினிய உறவுகளே, இச் சிறுகதையில் ஓரினச் சேர்க்கை, தகாத உறவு முதலிய விடயங்களோடு, இலங்கையில் வாழும் தமிழ் மக்களால் அடிக்கடி நையாண்டிக்கும், கேலிக்கும் உள்ளாக்கப்படும் மலையக மக்களின் அவல நிலையுல் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இக் கதையினை ஒரு ஐந்து நிமிடங்கள் செலவழித்துப் பொறுமையாகப் படித்து, இலங்கையில் அரசியற் கட்சிகளாலும், ஏனைய சமூகங்காலும் புறக்கணிக்கப்படும் மலையக மக்கள் பற்றிச் சிறு துளியினையாவது இப் பதிவின் மூலமாக நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கின்றேன்.

வவ்...........வவ்................வள்.........வள்.........என்றவாறு, மக்களின் பிரச்சினையைச் சரிவரப் புரிந்து கொள்ளாது பாராளுமன்றத்திற்குச் சென்று வாய் கிழியக் கதறும் அரசியல் வாதியினைப் போல, வீதியினை வெறித்துப் பார்த்த படி குலைத்துக் கொண்டிருந்த ஜிம்மியின் சத்தத்தைச் சகிக்க முடியாதவளாய், "எடோய் தம்பி......சுதன்... , உனக்குப் பள்ளிக் கூட லீவெண்டால் சொல்லவா வேணும்? பட்டம் கட்டி ஏத்தத் தொடங்கீடுவாய், இஞ்சை (இங்கே) வா, ராசா,ரோட்டிலை நாய் குலைச்சுக் கொண்டிருக்குது,  ஓடிப் போய் என்னவென்று பார்த்திட்டு வாவன் பிள்ளை" எனத் தனது மண் குடிசைக்குள் இருந்து குரலெழுப்பினாள் பாக்கியம்.

கருமமே கண் எனும் வாக்கிற்கமைவாக, இன்றைக்கு (இன்னைக்கு) எப்படியாவது (எப்படியாச்சும்) பட்டம் கட்டி, ஒட்டி, ஏத்தித் தான் தீருவேன் எனும் சபதத் தோடிருந்த சுதன், தாயின் கட்டளைக்குக் கீழ்ப் படிந்தவனாய், ரோட்டினை நோக்கி விரைகிறான்.

Thursday, September 29, 2011

பம்முகிறார் ஜெயலலிதா! பதறுகிறார் கலைஞர்! ப(கி)கடியாய் சிரிக்கிறார் கேப்டன்!

ம்முகிறார் ஜெயலலிதா!

சொந்தம் கொண்டாட அம்மாவிற்கு
ஆசைப் பிள்ளைகள் 
அதிகம் இல்லை - பணம்நிரூபனின் நாற்று வலை
பந்தம் எனும் பெயரில் 
தன் கூடத் தொடர்ந்திட
ஆவல் கொண்டவராய்
சொத்தை குவித்தார்,
தன் அருகே இருக்கும் 'சோ" விற்கும் 
தெரியாது மறைத்தார்!

Wednesday, September 28, 2011

ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதல் தோல்வியில் முடிந்தது எப்படி- வெளிவராத மர்மங்களின் இரண்டாம் பாகம்!

ஈழப் போரில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு.
முதற் பாகத்தின் தொடர்ச்சியாக...
கொழும்பு மாவட்டத்தில் நிகழும் புலிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல், தமிழ் வணிகர்களின் வியாபரத் தகவல்களைத் திரட்டி இராணுவத்தினருக்கு வழங்குதல் முதலிய விடயங்களில் இராணுவத்திற்குச் சார்பாக ஜால்ராப் போட்டு வீணை வாசித்துக் கொண்டிருந்த ஒருவர்...அடிக்கடி இராணுவத்தின் கொழும்பு மாவட்டப் புலனாய்வுப் பிரிவில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இஸ்லாமிய அதிகாரியினைத் தனது கட்சி அமைவிடத்திற்கு அழைத்துச் சந்திப்புக்களை மேற்கொண்டு இரசியத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார். நாற்று
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
இனி..........யார் மீது? எத்தனை பேரின் உதவியோடு, புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித வெடி குண்டுத் தாக்குதல் எனப்படும் கரும்புலித் தாக்குதல் தோல்வியடைந்தது? அது எப்படித் திசை திருப்பட்டது எனும் தகவல்கள் அடுத்த பாகத்தில் பார்ப்போமா.............

Tuesday, September 27, 2011

"ABDUCTION" - கிரிமினலின் அசைவுகள்- புத்தம் புதிய ஹாலிவூட் சினிமா விமர்சனம்!

இப் படமானது 15 வயதிற்கு மேற்பட்டோர் மாத்திரம் பார்த்து மகிழும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் பல்வேறுபட்ட குறிக்கோள்களின் அடிப்படையில் மனித உயிர்களைக் கொல்லுகின்ற யுத்தங்கள் இடம் பெற்று வருகின்றன. சுதந்திரத்திற்காகவும், உணவுத் தேவைக்காகவும், இனவாதக் கொள்கைகளின் அடிப்படையிலும் ஒருவரை ஒருவர் அடக்கி வாழும் நோக்கிலும் யுத்தங்கள் இடம் பெற்று வரும் இக் காலத்தில் சைபர் கிரைம் எனப்படுகின்ற நவீன தொழில் நுட்பத் தரவிற்காக (DATA) இடம் பெறுகின்ற கொலை முயற்சிகளைப் பற்றிப் பேசுகின்ற படம் தான் ABDUCTION ஆகும். 

Monday, September 26, 2011

சிங்களவர்க்கு அடிமையாக வாழ்ந்து செத்தொழிவதா இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை!

இலங்கையில் பல ஆண்டுகளாக இடம் பெற்ற விடுதலை வேண்டிய மக்களின் ஈழப் போரினை- பயங்கரவாதிகளின் போர் என்று உலகமெங்கும் பரப்புரை செய்து உலக நாடுகளின் அரவணைப்புடன் வெற்றியீட்டிய மமதையில் இலங்கை அரசாங்கமானது தற்போது தமிழர்களுக்கான தீர்வினைப் பின் தள்ளி வருகின்றது. புலிகளின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பின்னர்; ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்று தன்னுடைய மறைமுக ஆயுத பலப் பிரயோகத்தின் மூலம் (துப்பாக்கி முனையில்) மக்களின் உணர்வுகளை அடக்கி; மக்களுக்கு வசந்த வாழ்வை வழங்கி வருவதாக கபட நாடகமாடி வருகின்றது.

Saturday, September 24, 2011

காகிதப் புலிகளின் காழ்ப்புணர்ச்சிக்குள்ளாகும் ஈழத்து வன்னி மக்கள்!

இருண்ட மேகங்களின்
இடையறாத
மழைப் பொழிவிற்கு மத்தியில்
கந்தக(த்) துகள்களின்
எச்சங்களோடு 
காற்றில் கலைந்து
புதைந்து போக வேண்டிய
வன்னி மக்கள்
புனர்வாழ்வு பெற்று
புத்துயிர் பெற்றோராய்
எப்படி வாழ்ந்திட முடியும்?

Friday, September 23, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 04

இத் தொடரின் கடந்த பாகங்களைப் படிக்க..........
மூன்றாவது பாகத்தின் தொடர்ச்சியாக......
மார்கழி மாதத்தில் பாடசாலை விடுமுறை விட்டதும் பல திட்டங்கள் போட்டுப் பட்டங்கள் கட்டி ஏற்றத் தொடங்கிடுவோம். அதுவும் கழுசான் அவிழ்ந்து விழும் பருவத்தில் பட்டங்களைக் கட்டி வயற் தரை முழுதும் ஓடி, ஓடிப் பட்டம் ஏற்றிய அனுபவங்களை எளிதில் மறந்து விட முடியாது. ஆட்களின் உயரங்களுக்கேற்ப பட்டங்களின் வகைகள் பலவாறாய் அமைந்து கொள்ளும். 

Thursday, September 22, 2011

தமிழக உள்ளூராட்சித் தேர்தலும், தத்தளிக்கும் உதிரிக் கட்சிகளும்!

மீண்டுமோர் அந்தரங்க நாடகம்
எம் தெருக்களிலும்,
உக்கிப் போன சுவர்களிலும்
அரங்கேறத் தொடங்கியிருக்கிறது!
ஒவ்வோர் தடவையும் 
தேர்தல் பருக்கைகள் 
எறியப்படும் போது
தம் எச்சில் கையால் வணக்கமிட்டு
ஏழைகளின் வாக்கினை நோட்டமிட்டு
மக்கள் பணியில் மகத்துவமுடையோராய்
நாட்டம் கொண்டு நிரூபனின் நாற்று வலை
பச்சோந்திகளாய் வாசல் தேடி வந்து
பரமபத கூத்தடிக்கும் அரசியல்வாதிகள்-இன்று
உள்ளூர் வேட்பாளர்கள் ஊடாக
வாக்குரிமை கேட்டு வாங்குதற்காய்
வாசல் நோக்கி வருகிறார்கள்!

Unstoppable - நிறுத்த முடியாத ரயில் ஹாலிவூட் பட விமர்சனம்!

குழந்தைகள் மற்றும் இளகிய மனமுடையோர் பார்ப்பதற்கு உகந்த படம் அல்ல!

வாழ்க்கையினை நாம் எல்லோரும் சவாலாக எடுத்துக் கொண்டால் தான் தடைகளையும்- தடங்கல்களையும் தாண்டி வளர்ச்சியடைய முடியும். சவால்கள் நிறைந்த தமது வாழ்க்கையினைப் பிறருக்காக அர்ப்பணிக்கின்ற தியாக மனப்பான்மை எல்லா மனிதர்களுக்கும் அமைவதில்லை. தன் வாழ்க்கையினை அர்ப்பணித்து, பிறருக்காகப் போராடுகின்ற சவால்கள் நிறைந்த மனிதனின் திரைக் கதையினை உள்ளடக்கிய ஒரு படத்தினைப் பற்றித் தான் நாம் இப் பதிவினூடாகப் பார்க்கப் போகின்றோம்.

Wednesday, September 21, 2011

அரசியல்வாதிகள் அடக்கி வாசிக்கனுமா அல்லது அழுத்திப் பேசனுமா?

அரசியல் என்பது மக்களுக்கான ஜனநாயகம் பேணும் பாதையென்று விளிக்கப்பட்டாலும், எம் இலங்கை- இந்திய நாடுகளில் நாட்டினது வளர்ச்சி- மக்களின் முன்னேற்றம் முதலிய செயற்பாடுகளைப் பற்றிய தூர நோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகளால் இவ் அரசியலானது மாசுபடுத்தப்பட்டு வருகின்றது. மக்களுக்கான குரலையும், மக்களின் உரிமையினையும் உரத்துச் சொல்ல வேண்டிய கடப்பாடு ஒரு அரசியல்வாதிக்கு அல்லது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிக்கு இருக்க வேண்டும். ஆனால் எம் நாடுகளிலோ ஓட்டு வாங்கி, சட்ட சபை சென்ற பின்னர் தம் சுய ரூபத்தைக் காட்டி மக்களை மறக்கின்ற போலி அரசியல்வாதிகள் தான் அடக்கியும் வாசிக்கின்றார்கள். சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல அழுத்தியும் வாசிக்கின்றார்கள்.

Tuesday, September 20, 2011

கலியாணம் கட்டாத பிரமச்சாரியின் காலக் கிறுக்கல்கள்!

தலை தப்பினால் போதும்!


கோயில் முன்றலில் அவளின்
சிரிப்பொலி கேட்டு(த்) திரும்பிப் பார்த்தேன்- அவள்
பின்னே கோமதி மாமி கையில் தேங்காயுடன்
நிற்பதைக் கண்டு தலையில் கை வைத்தேன்!
(இக் கவிதையில் தொக்கி நிற்கும் பொருள் என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்- ஏன் தலையில் கை வைத்தேன் என்று யாராச்சும் சொல்ல முடியுமா?)

Monday, September 19, 2011

வெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை!

பூப்படைந்த பெண்களில் அதிகமானோருக்கு உள்ள பிரச்சினை தான் வெள்ளைபடுதல் எனப்படும் (Vaginal Discharge) பிறப்புறுப்பின் கருப்பைக் கழுத்து வழியே எச்சில் போன்ற திரவம் சுரப்பதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இப் பிரச்சினை இருக்கின்ற போதும்; பிறப்புறுப்பினைத் தொற்று நோய்களிலிருந்து கழுவிச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் தான் வெள்ளைபடுதலினைக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் ஒரு சில சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவும் இந்த வெள்ளைபடுதலைக் குணப்படுத்த முடியும். 

Sunday, September 18, 2011

ஜனங்களே! கேட்டீங்களா சங்கதி! எனக்கு கலியாணம் நடக்காதாம்!

மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் பல் வேறு விதமான ஆசா பாசங்கள் இருக்கும். மனித இனத்தில் வந்த எனக்கும் இயல்பான ஆசாபாசங்கள் இருப்பது வழமை தானேங்கோ. ஒரு சில விசயங்களைத் தனி மனிதனின் சிந்தனைக்கு ஊடாகத் தீர்த்து விடலாம். இன்னும் சில விடயங்களை ஏனையோருடன் கலந்தாலோசித்து,  ஒரு தீர்வினைப் பெற்று சுமூகமாகத் தீர்த்து விடலாம். சில விபரீதமான விடயங்களை மெல்லவும், முடியாமல், விழுங்கவும் முடியாமல் மனசுக்குள் பூட்டிப் பூட்டி வைத்து; தீர்க்க முடியாதவர்களாகி,  இறுதியில் மன அழுத்தத்திற்கு ஆளாகியல்லவா மனிதன் நொந்து நூடுல்ஸ் ஆகின்றான். என்னுடைய ஒரு சில பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கையிலை தான் உங்களிடம் இப்பதிவினைக் கொண்டு வருகிறேன்.
(இவங்களோட அட்ரஸ் தெரிஞ்சவங்க சொல்லுங்க. அப்பிளிக்கேசன் போட்டுப் பார்ப்போம்)

Friday, September 16, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 03

அன்பிற்கினிய உறவுகளே! இந்தத் தொடரின் மூன்றாவது பாகத்தினூடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! நாள் தோறும் நீங்கள் வழங்கி வரும் பேராதரவு தான் ஈழத்து மண் வாசனை கலந்த இத் தொடரினை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்குத் தூண்டு கோலாக இருக்கின்றது! அந்த வகையில் மீண்டும், மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி(கள்)!
ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் - 3
இத் தொடரின் கடந்த பாகங்களைப் படிக்க..........
எங்கள் வீட்டில் உள்ள ஐயனாருக்கு மடை பரவுவதற்காய்(படையல் வைப்பதற்காய்) எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தோம்.அப்போது மாமா, மீண்டும் ஓடோடி வருகிறார். இராசாத்தியைக் காணேல்லையாம்...........என பதை பதைத்தபடி வார்த்தைகள் எச்சிலோடு மல்லுக் கட்டி, வெளியே வர முடியாத நிலையில் இருக்கும் மனிதனைப் போல உணர்வற்றவராகி நடுக்கத்துடன் சொல்லத் தொடங்குகிறார்.......................................................

பற்றி எரிகிறது பரமக்குடி! கொற்றவையே நீயும் கோபம் ஏனோ?

ஜாதிப் பேய் பசியெடுக்கையில்
தாழ்த்தப்படோரின் குருதி தான்
உணவாக வேண்டுமெனும்
எழுதப்படாத விதி
எம் நாட்டில் மட்டும் தான் 
நடை முறையில் உள்ளதோ?

Wednesday, September 14, 2011

திஹாரில் கனிமொழி! திண்டாடும் திமுக! கொண்டாடும் முப்பெரும் விழா!

னிமொழியின் காத்திருப்பு!

அசையாச் சொத்திற்காய்
அப்பாவின் சொற் கேட்டு
ஆசை கொண்டேன் - அன்று
அப்போது ஒரு நிமிடம்
உட்கார்ந்து யோசித்தால்
பாசை மறந்த ஊரில்
பரிதவித்திருப்பேனா?
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினர் பதிவு thamilnattu.com

ஞாபகச் சிதறல்களில் சிக்கி நரக அவஸ்தையினைத் தரும் நினைவுகள்!

மனமென்னும் பெருங் கடலின் ஓரத்தில் சிறு துகள்களாய் ஞாபகச் சிதறல்களின் பெரும் பாகத்தினை அவள் எடுத்து விடுகின்றாள். நினைவுகளில் நீந்தச் செய்து, உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து, காலப் பெரு வெளியின் கோலக் கிறுக்கல்கள் அவள் மூலமாக வசியம் செய்யப்பட்டு விடுகின்றது. இரவுகளின் அர்த்தமற்ற பொழுதுகள் இதமான கனவுகள் மூலம் இனிமையாக்கப்படும் வேளைகளில் மனம் எத்தனை சாந்தம் பெறும்? 
ஓ! அப்படியானால் அவள் நினைவுகளைத் தந்து விட்டுச் செல்லும் நீல மேகமா?
சே... இல்லை! இல்லை! மேகத்திற்கு இணையாக அவளை எப்படி ஒப்பிட முடியும்?

Tuesday, September 13, 2011

இரண்டாகப் பி(ள)ரிந்தது பதிவுலகம்!

வள் ஒரு டெம்பிளேட்!

அன்பே ஆடையினை மாற்றுகையில் மனதில்
ஆசையினைத் தூண்டுகின்ற நீயோ பளிச்சிடும் டெம்பிளேட்(டு)
அடிக்கடி அணைக்க வைத்து மனசை மாற்றி
ஆப்பிள் உதட்டினைக் கடிக்க வைக்கும் உன் குணமோ 
எளிதில் புரிந்திட முடியாத இறுக்கமான பாஸ்வேர்ட்டு!

பயங்கரவாதிகளை உருவாக்குவோர் யார்?

உலக சமூகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பெரும்பான்மையானோர் அடக்கப்படும் மக்களுக்கு எதிராகவும், ஆதிக்கவாதிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த சம்பவங்களைத் தான் வரலாற்றுப் பக்கங்கள் எமக்குப் பாடமாய்ச் சொல்லி நிற்கின்றது. விடுதலை வேண்டிப் போராடும் ஒரு இனத்தினது ஆணி வேரைப் பூண்டோடு அறுத்து எறியவும், அதன் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யவும் பயங்கரவாதம் என்ற ஒரு சொல் பிரபல்யமான ஒரு சொல்லாக உலக அரங்கில் பயன்படுத்தப்பட்டு வருவதனை நாம் அனைவரும் அறியாதவர்கள் அல்ல. பயங்கரவாதிகள்- தீவிரவாதிகளுக்கான வரைவில்லக்கணமானது பொதுவானதாக இருந்தாலும், ஆதிக்கவாத அரசுகள் தமது தேவைக்கு ஏற்றாற் போல அச் சொற்களை மாற்றி விடுகின்றன.

Monday, September 12, 2011

மஹிந்தரின் மமதையும் மண் கவ்வப் போகும் இந்திய மத்திய அரசும்!

ஈழப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாகப் போராடிய விடுதலை அமைப்புக்களின் போராட்ட வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் இந்தியா எவ்வளவு தூரம் உதவியதோ, அதே போன்று இன்றைய கால கட்டத்தில் போராட்ட அமைப்புக்களை வேரோடு கிள்ளி எறிவதற்கும் இந்திய மத்திய அரசு தன்னாலான முழுமையான பங்களிப்புக்களையும் வழங்கியுள்ளது.  இவை எல்லாவற்றுக்கும் பின்னணியில் ராஜீவ் காந்தி விடயமும், சோனியா அம்மையாரின் ரத்தத்திற்கு ரத்தம் என்கின்ற பழி வாங்கும் படலத்தினையும் தான் காங்கிரஸ் அரசு கையாண்டு வருகின்றது என்று கருதும் பல்லாயிரக்கணக்கானோருக்கு சோழியன் குடுமி சும்மா ஆடாது எனும் யதார்த்தம் மட்டும் தெரியவில்லை. நிரூபன் 

ஈழ மகன் இன்னும் இறக்கவில்லை!

எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்,
எல்லோரும் இன்றைய பயிற்சிக்கு ரெடியோ?
என்ன கடைசி வரிசையில ஒராள் குறைகிற மாதிரி இருக்கு.
ஓ...செந்தோழன் இன்னும் ட்ரெயினிங்கிற்கு வரவில்லையே!
ஓக்கே நீங்கள் எல்லோரும் ஒரு ஐஞ்சு நிமிசம் துள்ளத் தொடங்குங்கோ. நான் செந்தோழனைப் போய்க் கூட்டி வாரேன்" என்று சொல்லியவாறு ட்ரெயினிங் மாஸ்டர் புரட்சி வேகமாக தன் வேஸினுள்(போராளிகள் முகாம்) போய் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த செந்தோழனைத் தட்டி எழுப்புகிறார்.

Saturday, September 10, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்!

பாகம் 02
முதற் பாகத்தின் தொடர்ச்சியாக...மாமா வீட்டின் மேற் புறக் கூரையினுள் பதுங்கி, மறைந்திருப்பதற்காக ஓடிப் போய் ஏறத் தொடங்குகிறார். அவரை வைத்த கண் வாங்காது பார்த்த படி நான்.................................எனும் வகையில் முதற் பாகம் நிறை வடைந்திருந்தது. இத் தொடரின் முதற் பாகத்தினைப் படிக்காது தவற விட்டவர்கள், இங்கே கிளிக் பண்ணிப் படிக்கலாம்.

மாமா, ஏன் ஏறினார், எதற்கு ஏறினார் என்பது அறியாதவனாய், அவரது செய்கைகளை வைத்த கண் வாங்காமற் பார்த்துக் கொண்டு நின்றேன். மாமாவினைப் பின் தொடர்ந்து பூட்ஸ் கால்கள் பட படக்க, குதிரைக் குழம்பின் ஓசையினைப் போல நிலம் எல்லாம் தடதடக்க பச்சை நிறம் என்றால் பசுமையிற்கான குறியீடல்ல, பகைமையிற்கான பொருள் விளக்கம் என்பதற்கான அறை கூவலுடன் அவர்கள் வந்தார்கள்.

தமிழ் சினிமா இயக்குனர்கள் அரைத்த மாவையா மீண்டும் அரைக்கிறார்கள்!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே, எல்லோரும் நலம் தானே?
தமிழ் சினிமா இன்றைய கால கட்டத்தில் ஒவ்வோர் தமிழனின் வாழ்வோடும் இரண்டறக் கலந்து விட்டது. பொழுது போக்கு அம்சமாகவும், நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற, அல்லது நடிகர்களை அரசியல் எனும் சாக்கடையினுள் தள்ளி விடுகின்ற ஊடகமாகவும் எம் சினிமா இன்று விளங்குகிறது. மேற்கத்தைய சினிமாவின் தரத்தினை- வளர்ச்சியினை, வெரைட்டியான கதைகளை எம் தமிழ் சினிமா எட்டித் தொட முடியாதளவிற்குப் பின் தங்கி நிற்கிறதா எனும் ஆதங்கத்தின் வெளிப்பாடே இப் பதிவு. நாற்று நிரூபன்

Thursday, September 8, 2011

அப்பீட் ஆகப் போகும் ஜெயலலிதாவும், அடித்தாடப் போகும் கேப்டனும்!

ப்பீட்டாகப் போகும் ஜெயலிலிதா


பலமான சீட்டுக்கள் பெற்று
தாத்தா கட்சிக்கு தமிழகத்தில்
வேட்டுக்கள் வைத்து
ஊழலைக் காட்டி;
உருப்படியான சேவைகள் வழங்காத
காரணம் காட்டி மக்கள்
திமுக கட்சியை உதறித் தள்ளிட
காரிருள் அகற்றும் உதய சூரியனாய்
தள்ளாடிக் கொண்டிருந்த
சூரியனை தள்ளி வைத்து நிரூபனின் நாற்று வலையின் COPY
அம்மா கண் திறந்தார்,
ஆட்சியைப் பிடித்து
அமோக வெற்றி பெற்று
தானுமோர் அதிரடிப் பெண்
என்பதை மீண்டும் நிரூபித்தார்!

பெற்றோர்களே! இணையத்தில் மேயும் உங்கள் பிள்ளைகள் மேல் கண் வையுங்கள்!

பிரபல நடிகைகள் என்றால் அவர்கள் எப்போதும் ப்ராப்ளத்தில் மாட்டிக் கொள்வோராகத் தான் இருக்கின்றார்கள். திரிஷா, மனிஷா கொய்ராலா, ரீமாசென் எனப் பல நடிகைகளைத் தொடர்ந்து அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தும் சீடி விவகாரத்தில் மாட்டியிருப்பவர் தான் பூஜா. நடிகளைக் கனவுக் கன்னிகளாகவும், தமக்கு நெருங்கியவர்களாகவு கருதி வாழும் தமிழ் உலகம், நடிகைகளின் படங்கள் கிடைத்தால் அல்லது நடிகைகளைப் பற்றிய அந்தரங்க சீடிக்கள் கிடைத்தால் சும்மாவா இருக்கப் போகின்றது?

Wednesday, September 7, 2011

ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா இல்லை அழகுப் பொம்மைகளா?

உலகில் தன்னுடைய புற அழகிற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுகின்ற பெருமை பெண்களுக்கே உண்டு. பெண்கள் தம்மை அழகுபடுத்துவதற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுவதோடு, பிறர் தம் அழகினைப் பற்றிக் கூறும் போது ஆனந்தப்படுகிறார்கள். பெண்களின் மனம் அவர்களின் உடல் அழகினைப் பற்றி ஆண்கள் கமெண்ட் அடிப்பதால் சந்தோசத்தில் மிதக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இலங்கை, இந்திய நாடுகளிலும் சரி, உலகின் ஏனைய நாடுகளிலும் சரி பெண்களின் நடை- உடை- பாவனைகளை அடிப்படையாக வைத்து அவர்களை தம் கண்களின் மூலம் எடை போடுகின்றது ஆண்களின் உள்ளம்.

Tuesday, September 6, 2011

ஆணாதிக்கவாதிகளால் அவமானப்படுத்தப்படும் பெண் பதிவர்கள்!

மெல்லிதாய் மேலெழும்பி
நாள் தோறும் புலர்ந்து மறையும்
வலையுலக நாழிகைகள் நடுவே
தொலைந்து போகின்றன
எங்களின் உணர்வலைகள்!
நிரூபனின் நாற்று
ஆண்கள் மட்டும் தான்
அதிகம் எழுதலாம் என்பதும்
அவர்கள் மட்டும் தான்
தம் உணர்வுகளை
உச்சுக் கொட்டலாம்
என்று கூறுவதும்
யார் இங்கு இயற்றி வைத்த
சட்டமோ தெரியவில்லை!

Monday, September 5, 2011

ஈழ மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் கிறிஸ் மனிதர்கள்- துலங்கும் மர்மங்கள்!

ஈழத்தின் ஆயுதப் போராட்ட வரலாற்றினை உற்று நோக்கினால், காலதி காலமாக அராஜகத்திற்கும், இனவாதக் கொள்கைக்கும் பெயர் போனவர்களாக விளங்கும் ஆட்சியாளர்கள் சிறுபான்மை மக்கள் மீது தமது முழுமையான பலத்தினைப் பிரயோகித்து அவர்களை அடக்கி, அம் மக்களின் முழுமையான உணர்வுகளை தம் வல்லாதிக்கப் பிடியினுள் நசுக்கி வாழ வேண்டும் எனும் வெளி உலகிற்குத் தெரியாத, எழுதப்படாத விதியினைத் தான் கடைப்பிடிக்கின்றார்கள். சிறுபான்மை மக்கள் மீது நிழல் யுத்தம் ஒன்றினை ஆரம்பித்து, அம் மக்களின் உணர்வுகள் ஊடாகக் குளிர் காய்வது தான் இன்று ஆட்சியில் உள்ளோரின் பிரதான வேலையாக இருக்கின்றது.

Sunday, September 4, 2011

க(கொ)லைஞர் டீவியும் கம்பியூட்டர் கஸ்மாலமும்!

உலகத் தமிழர்களுக்கான ஒரு பொதுவான தொலைக்காட்சியினை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் திரு கஸ்மாலம் அவர்களின் தனித்துவமான முயற்சியில் உருவாக்கப்பட்டது தான் கும்ஸ்கா டீவி. கும்ஸ்கா டீவியில் பல்சுவையான, மக்களைக் கவரும் நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டு வந்தாலும், அவை மக்கள் மனங்களில் ஏகோபித்த வரவேற்பினைப் பெறாத காரணத்தினால், கும்ஸ்கா டீவியின் ஓனர் கஸ்மாலம் அவர்கள் தொழில்நுட்பத் தகவல்களைப் பகிரும் நோக்கில் கம்பியூட்டர் மற்றும் நவீன தொழில் நுட்பங்களோடு சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றினை ஆரம்பிக்கின்றார்.

Saturday, September 3, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்!

மீண்டும் அதே கணங்கள், அதே வலி சுமந்த நினைவுகள், உணவின்றி உயிர் மட்டும் ஊசலாடிய ரணங்கள் நிறைந்த மரத்தடி வாழ்க்கை இனிமேல் வரவே வரக் கூடாது எனும் எண்ணம் இப்போது எல்லார் மனங்களிலும் உட் புகுந்து விட்டது. ஆனாலும் என் ஞாபகச் சிதறல்களில் வெடி வைத்து, ஆங்காங்கே காயங்களை உண்டாக்கிய சீழ் கலந்த பருக்களை இலகுவில் அழித்து விட முடியாது எனும் எண்ணத்தோடு; என் நினைவுகளை எங்களூர் வயல் வரம்பினூடாகத் தரிசிக்கத் தொடங்குகிறேன்.

Friday, September 2, 2011

கட்டிலில் மனைவி! தொட்டிலில் பிள்ளை! கட்டிய கணவனோ கன்னியர் வீட்டில்!

அல்லியின் முகமாய் ஆதவன் வரவின்றி
அமைதியாய் ஆரணி துடித்தாள்- இன்ப(த்)
தொல்லையில் நெளிந்தாள், தேவதை போன்றவளின்
தேகத்தில் தீ கொதித்தெரிய- நாயகன் அருகே
இல்லையே என்பதால் ஏக்கத்தில் முனகினாள்
இடையோ அவன் உடலை போர்த்தி நிரூபனின் நாற்று
மெல்லிதாய் அணைக்காதா- தன் மேனியை
மீட்டிட மேனகன் வாரானா என்றவள் ஏங்கினாள்!

Thursday, September 1, 2011

ஆபாசப் பதிவெழுதுவோர் மீது அதிரடி ஆக்சன்!

டாங்...டாங்....என ஒலித்துக் கொண்டிருந்த கோயில் மணி ஓசையினைக் கேட்டுக் கண் விழித்தாள் சைலஜா. "அடக் கடவுளே, என் கணவனுக்கு வேலைக்கு நேரமாச்சே. அவருக்கு ஏதாச்சும் சமைச்சுப் போடனுமே" என்ற எண்ணம் மனதில் எழ, அவசர அவசரமாக அடுக்களைப் பக்கமாக ஓடினாள் சைலஜா.
"இன்னைக்கு என் கணவனுக்கு வெஸ்ரேன் பூட் பண்ணிக் கொடுக்கனும்" என்ற நெனைப்போடு புதிதாக சைதாப்பேட்டையில் திறந்திருந்த ஹன்சிகா பார்மஸிக்கு ஓடிச் சென்று ஓட்ஸ் பாக்கட் ஒன்றினை வாங்கி வந்து வீட்டில் இருந்த அமுல் பாலோடு மிக்ஸ் பண்ணி சூடாக்கி கணவனுக்கு வழங்கிய பின், தன் ஆசை நாயகனான லைமுகனை வேலைக்கு அனுப்பி விட்டு, வீட்டு வேலைகளில் கவனத்தைச் செலுத்த தொடங்கினாள் சைலஜா.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க