Wednesday, February 29, 2012

கல்லூரி நினைவுகளும் கண் முன்னே நிற்கும் கவிதைகளும்

என் சிந்தனையை சிறகடித்த சிட்டுக்கள் - சுகந் தரும் ரணங்கள்!
அவள் கையிலிருந்து லெட்டரும், தின் பண்டமும், என் கைக்கு தாவியது. கொஞ்சம் வெட்கப்பட்டு, லெட்டரை என் கையினுள் திணித்து விட்டு, ஓடி விட்டாள். நான் கொஞ்ச நேரம் என்னை மறந்தவனாய் அக் காலத்தில் பேமஸான "உயிரே...உயிரே இது தெய்வீக சம்பந்தமோ" பாடலை மீட்டியவாறு கற்பனையில் மூழ்க ஆரம்பித்தேன். அப்போது அருகே வந்த நண்பன் கனியன், என்னைச் சுய நினைவிற்கு கொண்டு வந்தான். அந் நேரம் தான் கையில் ஆர்த்திகா கொடுத்த லெட்டர் இருக்கிறதே என்று உணர்ந்து லெட்டரைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது என்னை கெடுத்த பெண்கள் தொடரின் ஆறாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள்.

Tuesday, February 28, 2012

கலியாணம் கட்டாத பசங்களின் கலர்புல் பார்ட்டி - 28/02/2012

ஆபாசானந்தா மேல சத்தியமா இப் பதிவானது ஆபாசப் பதிவு இல்லை என்று சொன்னாலும் நம்பவா போறீங்க? வாருங்கள்! கலர் கலராய் இன்றைய டியூஸ்டே பார்ட்டியை கலக்குவோம். 
மகிந்தரை காப்பாற்ற அனைவரும் மன்றாடுங்களாம்! 
பதிவின் இறுதியில் ஒரு முக்கிய அறிவிப்பு இருக்குங்க. 
முற் பகல் செய்யின் பிற் பகல் விளையும் என்பது நம்ம ஆன்றோர் வாக்குங்க. இந்த வாக்கிற்கு எம் கண் முன்னே அர்த்தம் கிடைக்கும் காலம் வந்து விட்டது என மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மக்களின் உள்ளங்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டன. இன்றைய தினம் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில்; லட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு பதில் கிடைக்கும் என்பதனை உணர்ந்த இலங்கையின் அரசியல்வாதியான எம்.ஆர்.எம்.அப்துல்காதர் அவர்கள் மகிந்தரையும், இலங்கையின் நல் வளர்ச்சியினையும் கருத்திற் கொண்டு, இந்த வாரம் முழுவதும் நாடு முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்திருக்கிறாருங்கோ! 

Sunday, February 26, 2012

வயசுப் பையனின் வாலிப லீலா விநோத கு(சு)றும்புகள்!

என்னமோ பேசுகிறாள்! ஒண்ணுமே புரியலையே! என் செய்வேன் நான்?

கனவுகளில் கரைந்து போகாதவாறு
உன் நினைவுகளை
பத்திரப்படுத்த முனைகிறேன்; ஆனாலும்
கனவுகளில் வந்து சென்றாலும்,
நினைவுகளினூடே நேரலையில் 
தரிசனம் தர மறுக்கிறாய் நீ 
தவிக்கிறேன் நான்; என் 
மன உணர்வை கூட்டுறாய் நீ
மதி மயங்கி கனவில்
முனகி காதல் வெறுப்பினில்
திளைத்து களைக்கிறேன் நான்!

Friday, February 24, 2012

நமக்கு நாமே விருது கொடுத்து மகிழலாம் - வாருங்கள் பதிவர்களே!

எல்லோருக்கும் வணக்கமுங்க, எல்லாரும் நல்லா இருக்கீங்களா? பதிவின் தலைப்பினைப் பார்த்திட்டு பல பேரு உணர்ச்சி வசப்பட்டிருப்பாங்க. எல்லோரும் கூல் டவுண். வெளியே என்ன எழுதி இருக்கு என்று முடிவு பண்ணிக்க முன்னாடி, பதிவினைப் படித்து, பதிவில் என்ன எழுதி இருக்கு என்பதனை படிச்ச பின்னாடி நிச்சயமா உங்களின் கோபம், ஆத்திரம் எல்லாம் காணாமற் போயிடுமுங்க. இப் பதிவானது தனக்கு தானே விருது வழங்கி மகிழும் பதிவர்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. ஒத்தப் பதிவினூடாக மொத்த ஹிட்சையும் அள்ளுவது எப்படி எனும் தொடரின் ஏழாவது பாகமாக இப் பதிவு உங்களை நாடி வருகின்றது. இப் பதிவின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள்.   இனி பாகம் ஏழினுள் நுழைவோமா?

Tuesday, February 21, 2012

சிங்கள தேசத்திற்கு ஆப்படிக்க தயாராகும் சர்வதேசம் - மனங் கலங்கும் மகிந்தர்!

இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக,தமிழர்களின் உரிமைகளைத் தீர்மானிப்பதற்கு தக்கதோர் சக்தி ஈழத்தில் இல்லை என்கின்ற துணிவில் இந்தியா, மற்றும் சீனாவின் செல்லப் பிள்ளையாக அவர்கள் மடியில் படுத்துறங்கியவாறு, உலக நாடுகளையும், உலகில் வாழும் மனிதாபிமானம் மிக்க அமைப்புக்களையும் ஏமாற்றி வந்தது இலங்கை அரசு. பிரபாகரனுக்குப் பின்னரான சகாப்தம் எப்போது வருமென இலவு காத்த கிளியாக காத்திருந்த சிங்கள இனவாதிகள்; மே 17ம் திகதி 2009ம் ஆண்டின் பின்னர் ஈழத்தில் இடம் பெற்ற அசாதாரண மாற்றங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு இன்று தான் பதில் வந்ததோ!
பாவி உன் கண்களும் செய்த பாவத்தை நினைத்து அழுகின்றதோ?

Monday, February 20, 2012

கட்ட கவுண் பொண்ணுங்களின் எக்கு தப்பான புரிதல்கள்!

ஆத்திரத்தால் நாத்திறத்தை இழந்த அபலை!

அவன் அவளைப் பின் தொடர்ந்து சென்றான். அவளோ அவனைத் திரும்பித் திரும்பி முறைத்துப் பார்த்தபடி நடந்தாள். சன நடமாட்டமற்ற ஒரு வீதியின் திருப்பம் வர அவன் அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். "ஹலோ சாருகா!! உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்" எனச் சொன்னான். 

Sunday, February 19, 2012

வெட்கப்பட்டாள் - அச்சப்பட்டேன் - கட்டிக்கிட்டாள் - கட்டுப்பட்டேன்!

ஏய்! ஏய் என்ன பண்ணுறீங்க என்று சாரங்கனைப் பார்த்துக் கேட்டாள் சாம்பவி. சாரங்கன் செய்யும் செயலைப் பார்த்து வெட்கப்பட்டாள்! மெல்லச் சிரித்தாள்! கொஞ்சமாய் முகத்தைச் சுளித்தாள்! 
சீ….சீ நான் ஒண்ணும் பண்ணலையே ! என் அழகு தேவதைய சிலையா செதுக்க நினைத்தேன்.அதன் வெளிப்பாடு தான் இது அப்படீன்னு பதிலுரைத்தான் சாரங்கன்.
ஓஹோ! முன்னாடி நீங்க கவித சொல்லி என்னை மடக்கினீங்கள்! அப்ப, இப்போ ஓவியம் வரைகிறவரைக்கும் வந்திட்டீங்களே!என்றவாறு செல்லமாய் சிணுங்கினாள்!

கலியாணம் கட்டாத பசங்களின் ஹவுஸ்புல் பார்ட்டி!

சத்தியமா இது ஓர் ஆபாசப் பதிவு இல்லைன்னு சொன்னாலும் நம்பவா போறீங்க? நம்புங்கைய்யா! இது ஓர் ஆபாசப் பதிவில்லை! இப் பதிவானது அனைத்து வயதினரும் படிக்கும் வண்ணம் இந்த வாரம் முதல் மாற்றியமைக்கப்படுகின்றது. பல வாசக உள்ளங்களின் வேண்டுகோளுக்கு அமைவாக வழமையாக வாரந்தோறும் 18++ பதிவாக இடம் பெற்ற இப் பதிவு, இந்த வாரம் முதல், புது மெருகுடன் உங்களை நாடி வருகின்றது. எல்லோரும் ரெடியா? வாருங்கள் பதிவிற்குள் நுழைவோம்.

Friday, February 17, 2012

மீண்டும் ஓர் ஈழ யுத்தம்! பச்சோந்திகளின் கூட்டில் ஆரம்பமாகிறது!

மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் இலங்கை, இந்தியக் கூட்டுத் தயாரிப்பாகவும், உலகத் தமிழர்களின் பெருமளவான பொருட் செலவுடனும், பங்களிப்புடனும், பிரமாண்டமான முறையில் திரைக்கு வரத் தயாராகிறது இத் திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் பெயர் தான் மீண்டும் ஓர் ஈழ யுத்தம்! ஆசியாக் கண்டத்தில் உள்ள மங்களவர் கூட்டுத் தாபனத்தின் தயாரிப்பில், கோமான், சைக்கோ, மற்றும், வருவாய்நிதி, பனிமொழி, பொருமா, கொலைஞர், முதலிய முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பிலும், ஸ்பெக்ரம் விருது புகழ் பாசாவின் இசையிலும் திரைக்குவரத் தயாராகிறது இந்தப் படம். இனித் திரைப்படம் பற்றிய ஒரு சிறிய முன்னோட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Wednesday, February 15, 2012

மின் வெட்டால் கொல்றியே அம்மா - புண் பட்டு போகாதா மனம் சும்மா?

அம்மா ஜெயலலிதா
உந்தன் ஆட்சி காலமதில் நீயோ
பலருக்கும் புரியாத புதிரம்மா 
2G ஊழல் போதையில்
கொட்டமடித்த கலைஞர் 
கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பி நிரூபன் நாற்று
கெட்டியாக ஆட்சியினை பிடித்து
இலவச திட்டங்களோடு பலவற்றோடு
நீ நுழைந்தாய்!

Tuesday, February 14, 2012

என் சிந்தனையை சிதறடித்த சிட்டுக்கள் - சுகந் தரும் ரணங்கள்

இவளுக்கு பொறந்த நாள் இன்னைக்கு இல்லையே என நெனைச்சேன். ஆனால் இவள் ஏன் இன்னைக்கு சாக்கிலேட் கொடுக்கிறாள் என ஒன்னும் தெரியாத பாப்பாவாய் யோசித்தேன். அதற்கான விடை ஒரு சில மாதங்களில் கிடைத்தது. ஆர்த்திகா எட்டாம் கிளாஸ் முடிய முன்பதாக மீண்டும் பிறந்த நாளிற்கு சாக்கிலேட்டுடன் வந்தாள். மொதல் பொறந்த நாளுக்கு சாக்கிலேட் கொடுக்கும் போது கிளாஸ் எடுத்த அதே வாத்யார் தான் இப்போதும் கிளாஸ் எடுத்திட்டிருந்தாரு. அவர் கேட்டார்! "உனக்கு மட்டும் எப்படி ஒரு வருடத்தில் ரெண்டு பொறந்த நாள் வரும்?” அவள் தலை குனிந்து வெட்கப்பட்டு ஓர் பதில் சொன்னாள்! நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது என்னை கெடுத்த பெண்கள் தொடரின் ஐந்தாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யவும்.

பெண் பதிவர்கள் தொடர்பில் திரட்டிகள் கரிசனை கொள்ளுமா?

எம்முடைய பதிவுகள் பலரையும் சென்று சேர்வதற்கான இணைப்பு ஊடகமாக திரட்டிகள் விளங்குகின்றன.திரட்டிகளில் அதிகளவில் அடையாளம் காணப்படுபவை ஆண் பதிவர்களின் பதிவுகள் என்றால் மிகையல்ல. தமிழ்மணம் டாப் 20 போட்டி காரணமாக வெறி கொண்டு எழுதும் பல பதிவர்களின் எழுத்துக்களுக்கு மத்தியில் காத்திரமான பெண்களின் எழுத்துக்கள் காணாமற் போய் விடுகின்றன. பதிவர்களில் என்னைப் போன்ற ஆண் பதிவர்கள் ஒரு சூடான தலைப்பை வைத்து நான்கு ஜோக்குகளை எழுதினாலே போதும். அவை திரட்டிகளில் முன்னணிக்கு வந்து பலரையும் சென்றடைந்து விடும். பெண் பதிவர்களாலும் அவ்வாறு எழுத முடியும். ஆனால் காலங் காலமாக நம்மில் பல பதிவர்கள் கட்டிக் காத்து வரும் ஆணாதிக்க கலாச்சாரம் இதற்கு ஒத்துழைக்காது உள்மை வருத்தத்திற்குரியது.

Rise of the planets of Apes - ஆங்கில பட விமர்சனம்

கோலிவூட்/கோலிவுட்/ஹாலிவூட்/ஹோலிவூட்/ஹொலிவூட் பட விமர்சனம்:
மிருகத்திற்கு மனித அறிவு வந்தால் எப்படி இருக்கும்?  அறிய ஆவலா? வாருங்கள்!
மனிதர்களுக்கு மிருக அறிவு வந்துட்டா,நம்ம மனிதனுக்கும் மிருக்கத்திற்குமே வித்தியாசம் தெரியாதுன்னு சொல்லுவாங்க. தீவிரவாதிங்களாகவும், கொடூர வெறி பிடித்த கொல வெறியர்களாகவும், அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி கொல்லும் தீவீர வெறியர்களாகவும் மனிதர்கள் மிருக புத்தி மற்றும் சைக்கோ குணம் கொண்டு இந்த உலகத்தில் வாழ்ந்திருப்பதை நாம் அவதானித்திருக்கிறோம்.  ஒரு மிருகத்திற்கு மனிதக் குணம் அல்லது ஆறாம் அறிவு கிடைத்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் இந்தப் படம் பற்றிய விமர்சனத்துள் நுழைவோம்.

Monday, February 13, 2012

காதலர் தினமும், கண்ணீரில் தவிக்கும் மானிடப் பொணமும்!

காதலை மாற்றும் காதலர்கள்

உன் மடி மீது தவழ வேண்டும் என்பதற்காய்
தினந் தோறும் தவிக்கிறேன் - உன்
உடையாக இருக்க வேண்டும் என என்ணி
எனையே நான் மறக்கிறேன் - நீயோ
முதற் காதலன் நான் என்றாய் - மூன்று 
வருடங்களின் பின்னர் மூன்றாம் காதலன்
இவன் என அறிமுகம் செய்தாய்!!

தமிழரை வருத்தி கொல்லும் பிரிவினைகளும் பிரதேசவாதமும்

பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்: 
எல்லோருக்கும் வணக்கமுங்க,
இப் பதிவினூடாக நாம் படிக்கவிருப்பது; வன்னிப் பகுதியில் வாழும் தமிழர்களிடையே காணப்படும் உட் பூசல்கள் / பிரிவினைகள் பற்றிய அலசலாகும். தமிழர்கள் இன அடிப்படையில் ஒற்றுமையின்றி, வடக்கான் என்றும், கிழக்கான் என்றும், மட்டக்களப்பான், யாழ்ப்பாணத்தான் என்றும் தமக்குள் தாமே பிரிவினை பாராட்டி வரும் சூழலில், அந்தப் பிரிவினைகள் பற்றி பேச முன்பதாக தனித் தனியாக தமிழன் வாழும் சூழலில் எவ்வாறு அவன் புறக்கணிக்கப்படுகின்றான் என்பதனை உணர்த்திட ஓர் பதிவினை எழுத ஆரம்பித்தேன். நண்பர்கள் முதலாவது பாகத்துடன் எம் அழுக்குகளை நாமே தோண்டி மணப்பது அழகல்ல எனக் கூறி அந்தப் பதிவினை நிறுத்தச் சொல்லிக் கேட்டார்கள். அப்படியே நிறுத்தி வைத்த பதிவினை மீண்டும் ஆரம்பித்தாச்சு.

Sunday, February 12, 2012

பதிவர்களின் ஹிட் வெறியால் புறக்கணிக்கப்படும் பெண் பதிவர்கள்!

வலையுலக வங்குரோத்து அரசியலும், வன்மங்களும் - விவாதிப்போம் வாருங்கள்!
எல்லோருக்கும் வணக்கமுங்கோ, எல்லோரும் நல்லா இருக்கீங்களா? 
தமிழ்ப் பதிவுலகம் ஆரோக்கியமான வழியில் செல்லுகின்றதா என்று எம்மை நாமே கேள்வி கேட்டு சுய பரிசோதனை செய்து கொள்வோம். கூகிள்காரன் ப்ரீயா வுடுறான் தானே! நாம என்ன வேண்ணாலும் எழுதுவோம் அப்படீன்னு எல்லோரும் கருத்துச் சொல்லிட்டு போகலாம். ஆனால் தோழமையுடன், உங்களில் ஒருவனாக என்னுடைய சில மன உணர்வுகளை, என் கேள்விகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். இப் பதிவில் தமிழ்ப் பதிவுலகை நாச வழியில் கொண்டு செல்லும் ஆபாசப் பதிவர் (அப்படித்தான் ஊரெல்லாம் பேசிக்கிறாங்க) அடியேனும் உள்ளடக்கம் என்பதால், உங்கள் தெளிவான கருத்துக்களைச் சொல்லுமாறு தாழ்மையாக கேட்கின்றேன். 

Saturday, February 11, 2012

ஆபாசம் - நிர்வாணம் - அந்தரங்கம் - வக்கிர குணத் தமிழன்!

அனைவரும் படிக்க வேண்டிய காரசாரமான பதிவு: இங்கே முகம் சுளிக்கும் வார்த்தைகள் எதுவும் இல்லை! 
எல்லோருக்கும் வணக்கமுங்க. பதிவுலகில் உள் குத்து, ஊமக் குத்து, நேர்க் குத்து என எந்தப் பதிவு எழுதுவோராக இருப்பினும், விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்கள் முன் வைக்கப்படும் போது பரிசீலிக்கும் மன உறுதி இருப்பவராக இருந்தால் மாத்திரம் எழுதுங்க. அப்படி மன உறுதி இல்லாதோர், பதிவர்களின் பதிவுகளைக் கண்டிக்கிறேன் அப்படீன்னு பதிவு எழுத ஆரம்பித்து, பதிவர்கள் யாராச்சும் எதிர்க் கேள்வி கேட்டா, ஐயோ, உங்களைச் சொல்லவில்லையே, உங்கள் மனசாட்சி ஏன் குறு குறுன்னு குடையுது அப்படீன்னு கேட்டு மழுப்பல் பதிலைச் சொல்லி எஸ் ஆக முயற்சி பண்ணாதீங்க. நீங்க ஒரு விடயத்தை கையிலெடுத்தால், சரியோ, பிழையோ கேள்வி கேட்கும் வாசகர்களுக்கு சரியான பதிலைச் சொல்லும் வண்ணம் உங்கள் பின்னூட்டங்களை எழுதப் பாருங்க. இல்லே என்னோட பதிவிற்கு என் கருத்து தான் சரி என்று சொல்லுவீங்களா இருந்தா, மத்த பதிவர்களின் கருத்துக்களை ஏற்கமாட்டேன் அப்படீன்னு எழுதி வைச்சிடுங்க! யாரையுமே தாக்காம பம்மிட்டு இருந்திடுங்க. இனிப் பதிவிற்குள் போவோமா?

Friday, February 10, 2012

அசிங்கத்திற்கு ஆதரவளிக்கும் + அமைதியை கெடுக்கும் ஆலயங்கள்!

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது ஔவையாரின் முது மொழி. "ஆலயம்- இது ஆன்மாக்கள் இலயப்படும் அல்லது ஒன்று படும் இடம் என்றும், கோயில்- கோன்(அரசன்) உறையும் இடம் எனவும் பொருள் கூறுவார்கள். மனதில் அமைதியில்லாதவர்கள், மனதில் பல்வேறு குறைகள் உள்ளவர்கள் மன அமைதியை வேண்டி பிரார்த்தனை செய்யும் இடம், தங்களது உள்ளக் குமுறல்களை சொல்லி இறைவனுடன் உரையாடும் இடமாக இவ் ஆலயங்கள், மத நிறுவனங்கள் விளங்குகின்றன.

Thursday, February 9, 2012

அழுந்திச் செத்து, அவலத்துள் அமிழ்ந்து துடிக்கும் அரசிய(ற்)ல் காதல்!

நீயும் நானும்
இரு வேறு துருவங்கள்
என்பதனை உணர
நீண்ட நேரம் எடுக்காது
என்பது உனக்கும், 
உனைச் சார்ந்தவர்களுக்கும் தெரியும்- ஆனாலும் 
உன்னை விட்டால்
சார்ந்திருப்பதற்கு வேறு வழியில்லை
எனும் தோரணையில் ஒட்டியும் ஒட்டாமலும்
உன்னோடு உறவாடியபடி நான்!

கலியாணம் கட்டாத பசங்களின் ஹவுஸ்புல் பார்ட்டி!

அபாய அறிவிப்பு /முன் எச்சரிக்கை:(ஒலித் தொகுப்பு இணைக்கப்பட்டிருக்கிறது) இப் பதிவானது சின்னப் பசங்களுக்கும், ஆபாசம் பற்றிய அருவருப்பு உடையவர்களுக்கும் உகந்தது அல்ல. வாரத்தில் ஒரு நாள் கல கலப்பினைக் கொடுக்கும் குறும் பதிவுகளின் தொகுப்பாக, சல சல என உங்கள் மனதினை மகிழ்ச்சி வெள்ளத்தில் அடித்துச் செல்ல வருகின்றது இப் பதிவு. இனிப் பதிவிற்குள் நுழைவோமா? இப் பதிவின் ஒலித் தொகுப்பு கீழே உள்ள போட்டோவின் கீழ் இணைக்கப்பட்டிருக்கிறது. கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்வதன் ஊடாக பதிவின் முழுத் தொகுப்பையும் கேட்டு மகிழலாம். நாற்று www
இப் பதிவின் ஒலி வடிவத்தினைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்.

Wednesday, February 8, 2012

ரேவரியின் படைப்புக்கள் பற்றிய விமர்சனம் + ரகசியம்

இயந்திர வேக உலகில் இணையத்தில் படைப்புக்களைப் பகிர்ந்து வரும் பதிவர்களிற்கு இதயங்களை வருடுகின்ற விமர்சனங்கள் இலகுவில் கிடைப்பதில்லை என்றே கூறலாம்.ஒவ்வோர் படைப்பாளியும் தன் படைப்புக்களை மெருகேற்ற எப்போதாவது ஓர் நாள் நல்ல விமர்சனங்கள் கிடைக்காதா எனும் ஏக்கத்தில் காத்திருப்பான்.அத்தி பூத்தாற் போல என்றேனும் ஓர் நாள் ஒரு நிறைவான விமர்சனம் தரமான படைப்பினை நோக்கி முன் வைக்கின்ற போது, படைப்பாளியின் மகிழ்சிக்கு எல்லையே இல்லை என்று கூறலாம். வாரந் தோறும் நாற்று வலைப் பதிவின் ஊடாக பதிவர்களின் படைப்புக்களைப் பற்றிய விமர்சனங்களை அம்பலத்தார் பக்கம் வலைப் பதிவின் சொந்தக்காரர் திரு பொன்னர் அம்பலத்தார் அவர்கள் எழுதி வருகின்றார். அவர் இந்த வாரம் தருகின்ற விமர்சனத்தைக் கொஞ்சம் படிப்போமா?

என்னை கெடுத்த சிட்டுக்கள் - சூடான & சுவையான சுய சொறிதல்

எல்லோருக்கும் வணக்கமுங்க; 
பள்ளி செல்லும் மாணவர்களை ஏற்றி, இறக்கும் சேவையில் ஆண்களுக்குத் தனியான பேருந்தும், பெண்களுக்குத் தனியான பேருந்தும் இருப்பதால், என்னால் ஆறாங் கிளாஸ் ஆரம்பத்தில் ஆர்த்திகாவை, அபிநயாவை பார்க்க முடியலை. கண்டிப்பாக இவங்க ரெண்டு பேரில் ஒருத்தியை சந்தித்தால் தான் சைந்தவியைப் பத்தி அறிய முடியும் என்ற ஆவலில் காத்திருந்தேன். ஒரு நாள் பெண்களை ஏற்றி இறக்கும் பஸ் பஞ்சராகிட்டுதுங்க. நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது, என்னைக் கெடுத்த பெண்கள் தொடரின் ஐந்தாவது பாகமாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யவும். 

கையை தூக்கி பேசினே கண்டபடி சுட்டுப்புடுவேன் - கேப்டன் ஜில் ஜல்!

ஓட்டுக்கு இல்லாத மதிப்பும் ஒத்த வெரலுக்கு கிடைச்சிருக்கே - தேதிமுக உடன் கூட்டொன்று வைக்காத கட்சி மானமும் காத்தோட போயிருச்சே: வழிப் போக்கன் டட்டுவம்
*****************************************
கையை தூக்கி பேசினே கண்டபடி சுட்டுப்புடுவேன் - வாஞ்சிநாதன் IPS
வெரல உயர்த்தி பேசினே சட்ட சபையை வுட்டு டிஸ்மிஸ் செஞ்சுபுடுவேன் - CM ஜெயலலிதா நாற்று

Sunday, February 5, 2012

பதிவுலக துக்க தினம் & பதிவர் மாயாவின் நினைவு நாள்!

பதிவுலகச் சொந்தங்கள் அனைவரிடத்தும் ஓர் அன்பு வேண்டுகோள்!
பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய வலையுலகச் சொந்தங்களே, 
மனித வாழ்க்கை நீர்க் குமிழி போன்று நிலையில்லாதது. இன்றிருப்போர் நாளை இருப்பாரா என்கின்ற ஐயங்களுக்கிடையில், எமக்குக் கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தில் மன ஆறுதல் வேண்டியும், சின்னச் சின்னச் சந்தோசங்கள் வேண்டியும், பொழுது போக்கினை விரும்பியும் வலையுலகில் அனைவரும் இணையத் தமிழூடாக இதயங்களால் இணைந்திருக்கிறோம். இன்பங்களும், துன்பங்களும் இரண்டறத் தொடர்வது தான் மனித வாழ்க்கை என்றாலும், எம்மோடு பழகிய ஒருவர் பிரிகின்ற போது எம்மால் இலகுவில் எம் மன உணர்வுகளை ஆற்றுப்படுத்த முடியாதிருக்கும்.

The Roommate : Physical - சைக்காலஜி & த்ரிலிங் பட விமர்சனம்

கோலிவூட்/ ஹாலிவூட்/ கோலிவுட்/ஹோலிவூட் பட விமர்சனம்:
நட்பிற்குப் பல குணங்கள் உண்டு. பிரதி உபகாரம் ஏதும் கருதாது பழகும் நட்பே உயர்ந்த நட்பு என்பது மனித குல அனுபவத்தின் வெளிப்பாடு. உண்மை அன்பிற்காக ஏங்கித் தவிக்கும் ஒருவர், தனக்கு ஆறுதலாக யாரும் இல்லாத சமயத்தில் நண்பர்கள் கிடைக்கமாட்டார்களா என ஏங்கித் தவித்துக் கொண்டிருப்பார். இத்தகைய சூழலில் அவருக்கு நண்பர்கள் யாராச்சும் கிடைக்கப் பெற்றால் சொல்லவா வேண்டும்? கெட்டியாக அந்த நட்பினைப் பற்றிப் பிடித்து தன் வாழ் நாள் முழுவதும் அந்த நண்பன் தன் கூட வர வேண்டும் என ஆசைப்படுவார். இனிப் படம் பற்றிய எமது பார்வையினைப் பார்ப்போமா?

Saturday, February 4, 2012

பதிவர் மாயா அகால மரணம் அடைந்து விட்டார்!

இதயத்தில் ஊறிய நட்பு - எம்மை விட்டு இலகுவில் பிரிந்ததேனோ?

இன்றும் எம் மனத் திரைகளில்
உன் ஞாபகங்கள் தாலாட்டுகிறது தோழா
முகம் தெரியாது இணையத்தில் நட்பாகி
எம் எல்லோர் முன்னும் சிரித்த முகத்துடன்
பல பதிவுகள் வாயிலாக கதை பேசி
இன்று இடியாய் ஓர் சேதியை
இதயத்தில் இறக்கி விட்டுச் சென்றாயோ மாயா?

மப்படித்த கேப்டனும், சொல் அம்பு தொடுத்த ஜெயாவும்!

நறுக், விறுக், சுருக் நகைச்சுவை மேடை!

தொண்டன்: கேப்டன் சார்! சரக்கு அடிக்கும் போது, ஏனுங்க விரலை காண்பிக்கிறீங்க? 
சரக்கு ஆர்டர் செய்யும் போதும் ஏனுங்க விரல் லேபிள் அப்படீன்னு ஆர்டர் பண்றீங்க?
கேப்டன்: தொண்டா, இப்போதெல்லாம் சொல்லுக்கு கெடைக்காத மருவாதை விரலுக்குத் தானே கெடைக்குது. அத்தோட White label தரும் பவர் கூட என் விரல் மூலமா தான் வெளிப்பட்டிருக்கு. அதால என்னோட அகராதில எனிமே white label இன் பெயர் விரல் லேபிள் தான்! நிரூபனின் நாற்று வலைப் பூ ஒரிஜின

Friday, February 3, 2012

ஈழத் தமிழர் வாழ்வை அழிக்க தயாராகும் மகிந்த & இந்திய அரசு

ஈழத் தமிழர்கள், உலகத் தமிழர்கள் வாழ்வில் கறை படிந்த நாளாக முள்ளிவாய்க்கால் இறுதி நாளான மே 17 விளங்குகின்றது. கடந்த இரு வருடங்களுக்கு முன்பதாக முள்ளிவாய்க்காலில் தமிழர் சேனை இலங்கை, இந்திய, மற்றும் உலக நாடுகளின் துணையுடன் முடக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் வளமான எதிர்கால வாழ்விற்குரிய தீர்வினை எப்படியாவது ஏமாற்றி காலதி காலமாக முழு இலங்கையினையும் தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கலாம் எனும் வழியில் மகிந்த ராஜபக்ஸ கூட்டத்தினர் தமது அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்கிறார்கள். இன்றளவில் இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு கொடுக்கின்ற நிலையில் இலங்கை அரசு இல்லை என்பதற்கான பல அணுகுமுறைகளை இலங்கை அரசின் செயற்பாடுகளினூடாக காண முடிகின்றது. நிரூபனின் நாற்று

நாளை எனக்கு கல்யாணமாம் - என்ன நான் செய்வேன் சொல்லுங்களேன்!

நாளை எனக்கு கல்யாணமாம் - நான்
என்ன செய்வேன் சொல்லுங்களேன்!
காலை எழுந்தவுடன் கரும்பாய் ஓர் சேதி
மதுரனோ என் காதில் மெதுவாய் சொன்னான்
ஓலை எழுதி ஒருத்தியை பார்த்து
ஒன்னை எனக்கு புடிச்சிருக்கு என்றும் சொல்லவில்லை
வேளை வரும் வரை காதல் வெறி கொண்டு அலைந்து
வெட்டியாய் நானும் காத்திருக்கவில்லை

Thursday, February 2, 2012

என்னை கெடுத்த பெண்கள் - சூடான & சுவையான தொகுப்பு

பள்ளிக்கூடம் 7.45 மணிக்கு ஆரம்பிக்குது என்றால் நான் காலை 7.20 மணிக்கே பள்ளியில் ஆஜார் ஆகிடுவேன். எதுக்கென்று கேட்கிறீங்களா? நம்ம வகுப்புத் தோழிங்க, தோழர்கள் கூட விளையாடி மகிழனும் என்ற ஆசையால் தான். இப்படியாக ஒரு நாள் ஓடி விளையாடும் போது, என்னோட காற்சட்டையின் பட்டன் அறுந்திட்டுதுங்க. காற்சட்டையிலிருந்து கையை எடுத்தா கழுசான் கீழே நழுவிடும். அப்புறமா என்ன நடந்திருக்கும் என்பதனை கீழே உள்ள பந்தியில் சொல்லியிருக்கேனுங்க. நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது என்னைக் கெடுத்த பெண்கள் தொடரின் நான்காவது பாகமாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க இங்கே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள். 

கலியாணம் கட்டாத இளசுகளின் ஹவுஸ்புல் கச்சேரி!

அபாய அறிவிப்பு / முன் எச்சரிக்கை: எல்லோருக்கும் வணக்கமுங்க;
இப் பதிவு குழந்தைகள், பெண்கள், தாய்க் குலங்கள் மற்றும் கலாச்சார காவலர்களுக்கும் உகந்தது அல்ல. ஆனாலும் ஆர்வமுள்ளவங்க படிக்கலாம். விரும்பினா கமெண்ட் கூடப் போட்டுக்கலாம். விருப்பமில்லைன்னா படிச்ச தடயம் இல்லாம சாமி குத்தம் வர முன்னதா எஸ்கேப் ஆகி, நெத்தியில விபூதியைப் பட்டையை தீட்டி; பாவத்தினைப் போக்கிட சாமிக்கு முன்னாடி போய் உட்கார்ந்துக்கலாம். அலுவலகங்களிலும்,பொது இடங்களிலும் இப் பதிவினைப் படிக்க விரும்புவோர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. "கலியாணம் கட்டினவங்க இப் பதிவினைப் படிக்க முடியாதா?" அப்படீன்னு உங்களுக்கு இப்போ லைட்டா ஒரு டவுட்டு வரலாம். அவங்களும் படிக்கலாமுங்க. இனி பதிவிற்குள் நுழைவோமா?

Wednesday, February 1, 2012

என்னை கெடுத்த குட்டிப் பிசாசுகள் - சூடான & சுவையான தொகுப்பு

பாகம் 03:
ஷிரோமியும், நானும் நண்பர்களாக இருந்த காலத்தில் அவங்க குடும்பத்தோட யார்கிட்டேயும் சொல்லாம, எங்க ஊரை விட்டு எங்கேயோ போயிட்டாங்க. அப்புறம் நான் அவங்களைக் காணவே இல்லைங்க. இறுதியாக யாரோ ஒரு நண்பன் சொன்னான். அவங்க இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பக்கமா இருக்கிற கண்டிக்குப் போயிட்டாங்க அப்படீன்னு. என் பதின்ம வயது வரை நான் மீண்டும் காண மாட்டேனா என ஏங்கிய பொண்ணு இந்த ஷிரோமி தான். ஷிரோமியின் பிரிவினால் ரொம்பவுமே வாடிப் போயிட்டேனுங்க. அந்தச் சின்னவயசில் சேலை கட்டும் பொண்ணுக்கொரு வாசம் உண்டு என்ற பாடலைப் படிக்கும் போது மனதினுள் ஓர் இனம் புரியாத குறு குறுப்பினை எனக்கு கொடுத்தவங்க இந்தச் ஷிரோமி.

என்னோட பாய் பிரெண்டிற்கு அறுபது பவுண்ல தாலி கட்ட போறேன்!

ஆச்சரியமாக இருக்கா? தொடர்ந்து படியுங்கள்....
அனைவருக்கும் வணக்கமுங்க. தாய்த் தமிழகத்தின் திருச்சி மாநகரத்தின் மலைக்கோட்டை எனும் அழகிய நகரத்தில் உள்ள கல்யாண மண்டபத்த்தில் மாப்பிளைக் கோலத்தில் மணவறையில் நான் காத்திருக்கிறேன். என்னங்கடா இன்னமும் பொண்ணைக் காணவில்லையே எனும் ஏக்கம் ஒரு புறம், என் உளமும், மனமும் இன்பக் கடலில் மூழ்கப் போகிறதே எனும் ஆவல் மறுபுறம் என என் உணர்வுகள் அடிக்கடி எனக்கு ஆனந்த தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தன.மண்டபத்தின் முன்னே ஓர் அழகிய மேர்சிடஸ் கார் வந்திறங்கியது. மணப் பெண் நேமிசா என்னைத் தேடி வலது காலை எடுத்து வைத்து காரிலிருந்து இறங்கி வருவாங்க எனக் காத்திருந்த எனக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! 

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க