Sunday, February 5, 2012

The Roommate : Physical - சைக்காலஜி & த்ரிலிங் பட விமர்சனம்

கோலிவூட்/ ஹாலிவூட்/ கோலிவுட்/ஹோலிவூட் பட விமர்சனம்:
நட்பிற்குப் பல குணங்கள் உண்டு. பிரதி உபகாரம் ஏதும் கருதாது பழகும் நட்பே உயர்ந்த நட்பு என்பது மனித குல அனுபவத்தின் வெளிப்பாடு. உண்மை அன்பிற்காக ஏங்கித் தவிக்கும் ஒருவர், தனக்கு ஆறுதலாக யாரும் இல்லாத சமயத்தில் நண்பர்கள் கிடைக்கமாட்டார்களா என ஏங்கித் தவித்துக் கொண்டிருப்பார். இத்தகைய சூழலில் அவருக்கு நண்பர்கள் யாராச்சும் கிடைக்கப் பெற்றால் சொல்லவா வேண்டும்? கெட்டியாக அந்த நட்பினைப் பற்றிப் பிடித்து தன் வாழ் நாள் முழுவதும் அந்த நண்பன் தன் கூட வர வேண்டும் என ஆசைப்படுவார். இனிப் படம் பற்றிய எமது பார்வையினைப் பார்ப்போமா?
படத்தின் மையக் கதை: அமெரிக்காவின் லாஞ் ஏஞ்சல் யூனிவர்சிட்டியில் கல்வி கற்பதற்காக காலேஜ்ஜிற்குள் நுழையும் மாணவிகள் தான் சேரா (Shera) மற்றும் ருபேக்கா (Rebecca) இவர்கள் இருவரில் சேரா பேஷன் டிசைனிங் படிப்பதற்காக காலேஜ்ஜிற்குள் வருகின்றார். சேராவின் வீடு காலேஜ்ஜில் இருந்து 20 நிமிட தூரத்தில் இருந்தாலும் காலோஜ் விடுதியில் தங்கி படிப்பதே சிறந்தது என முடிவெடுத்து ரூம் எடுக்கின்றார். சேராவின் ரூம் நண்பியாக அறிமுகமாகின்றார் ருபேக்கா. சேராவின் மார்புப் பகுதியில் ஒரு Emily என்ற பெயரில் ஓர் பச்சை அடையாளம் (Tattoo) இருப்பதனைக் கண்டு அது பற்றிய விளக்கங்களைக் கேட்கின்றார் ருபேக்கா.

சேராவின் மார்புப் பகுதியில் உள்ள Tattoo இற்கான காரணம் ஒன்பது வயதில் இறந்த சேராவின் தங்கை என்றும், அவரது நினைவாகவே, சேரா தன்னுடன் தங்கையின் போட்டோவினை காவிச் செல்வதாகவும், தங்கை அணிந்த நெக்லஸை இன்றும் பத்திரமாக வைத்திருப்பதாகவும், தனக்கு தன் தங்கை Emily என்றால் உயிர் என்றும் கூறுகின்றார். இந்தக் கதைகளையெல்லாம் கேட்ட ருபேக்கா சேரா மீது ஒரு தலையாக காதல் & நட்பு கொள்கின்றார். ஆரம்பத்தில் ருபேக்காவின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொள்ளும் சேரா, தனது பாய் பிரண்ட் Stephen இடம் ருபேக்கா பற்றிச் சொல்லி வைக்கின்றார்.

சேராவுடன் நெருங்கிப் பழகும் நண்பிகளைத் தனியே சென்று மிரட்டி, சேராவுடன் நெருங்கிப் பழக முடியாதவாறு பயமுறுத்தி வைப்பது, சேரா வீட்டை விட்டுச் சென்று தன் பாய் ப்ரெண்டுடன் தங்கியிருக்கும் வேளையில் தன் உடலை வருத்தி கூரிய ஆயுதங்களால் கீறி விட்டு திருடன், மற்றும் அடையாளந் தெரியாத மர்ம மனிதன் வந்து தன்னை காயம் செய்து விட்டான். நீ என் கூட இருக்காத காரணத்தினால் தான் இப்படியான நிகழ்வுகள் இடம் பெறுகின்றன என கூறி சேராவைத் தன்னுடம் இருக்கப் பண்ணப் ப்ளான் போடுவது என ருபேக்காவின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. 

இந் நேரத்தில், ரூபேக்கா பற்றிய நடவடிக்கைகளை சிறிது சிறிதாக அறிந்து வைத்திருந்த சேரா, ருபேக்கா வீட்டிற்குச் சென்று வந்ததும், அவரினது Drawer இனைத் திறந்து பார்த்து அதனுள் Zyprexa எனும் மாத்திரை இருப்பதனைக் கண்ணுற்று அது பற்றி அறிய முயற்சி செய்கிறார். இந் நேரத்தில் சேராவின் தங்கையின் ஆடையினையும், நெக்லஸினையும் அணிந்து தன்னைச் சேராவிண்ட் தங்கையாக ஏற்றுக் கொள்ள முடியாதா என தவிப்புடனும், பரிதாபத்துடனும் கேட்கின்றார் ருபேக்கா. தான் ஓர் சைக்கோவிடம் மாட்டிக் கொண்டேன். இப்போது தான் போகும் ரூட் ராங் ரூட் என்பதனை உணர்ந்த சேரா, தன்னுடைய பாய் பிரெண்ட் Stephen இன் உதவியுடன் ருபேக்காவுடன் தங்கியிருந்த வீட்டினை காலி செய்கின்றார்.

படம் பற்றிய சில சுவாரஸ்யங்கள்:
தன்னை விட்டுச் சேரா பிரிந்திருக்கும், நிலை, சேராவை யாரும் நெருங்கக் கூடாது எனும் மன நிலையினால் தன்னுடைய கோபத்தினைத் தணித்துக் கொள்ள கொடூர வழியினைக் கையாளத் தொடங்குகின்றார் ருபேக்கா. அது என்ன வழி என்று அறிய ஆவலா? நீங்கள் திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பிக்கலாமுங்க. முதற் பாதிப் பகுதி கொஞ்சம் ஸ்லோவாக நகர்ந்தாலும், ஒரு மணி நேரத்தில் படத்தில் த்ரிலிங் சூடு பிடிக்க ஆரம்பிக்கின்றது. ரேட்டிங் அடிப்படையில் இப் படம் கொஞ்சம் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும், பொழுது போக்கு நோக்கில் பார்க்கக் கூடிய படம். முடிவு கொஞ்சம் வித்தியாசமாக இருக்காதா என தமிழ் சினிமாவினைப் பார்த்துப் பழகிய எனக்குத் தோன்றுகின்றது. காரணம் குற்றவாளியினை நல் வழிப்படுத்துவதனைத் தவிர்த்து, குற்றவாளிக்கு அவர் வழியிலே பதில் சொல்லும் முடிவினைத் தந்திருக்கிறது இப் படம். 
*2011ம் ஆண்டு பெப்ரவரி 04ம் திகதி திரைக்கு வந்திருக்கும் இத் திரைப்படத்தில் Rebecca ஆக Leighton Master அவர்களும், 
Sara Matthews ஆக, Mink Kelly அவர்களும், Stephen ஆக, Cam Gigandet அவர்களும், Tracy எனும் கதா பாத்திரத்தில் Aly Michalka  அவர்களும், Iron எனும் பாத்திரத்தில் Danneel Harris அவர்களும், இவர்களுடன் இன்னும் சில ஹாலிவூட் நட்சத்திரங்களும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
*கொஞ்சம் த்ரிலிங், கொஞ்சும் நட்பு, அஞ்ச வைக்கும் சைக்கோ குணங்கள் நிரம்பிய பெண்ணின் வாழ்க்கையினைப் பேசும் இப் படத்தினை இயக்குனர் Christen.E மற்றும், Christeansen அவர்களும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.
*Screen Games நிறுவனத்தினர் இப் படத்தின் வெளியீட்டு உரிமத்தினைப் பெற்றிருக்கிறார்கள்.

படத்தில் வருகின்ற மனதை உறைய வைக்கும் காட்சிகள்:
*வீதியில் கண்டெடுத்த அழகிய பூனைக் குட்டியினை வீட்டில் வளர்த்து வரும் போது சேராவிற்கு பூனைக் குட்டி மீது அன்பு அதிகமாகி விட்டதே என நினைத்து பூனைக் குட்டியினை ருபேக்கா வாஷிங் மெசினுள் போட்டு கொல்லும் காட்சி கொடூரமானது.
*சேராவின் தோழி மீது சேராவிற்கு அன்பு கூடி விட்டதே என நினைத்து சேராவின் தோழி குளிக்கும் வேளை; ருபேக்கா அவள் வீட்டினுள் சென்று பயமுறுத்தி காதில் உள்ள தோட்டினை அறுக்கும் காட்சி கொடூரம்.
*பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் ஓர் ஆண்மகன் பெற்றோல் பில் பண்ணும் போது, ருபேக்காவின் கையினைத் தடவி, என்னோட வாறியா எனக் கேட்டு, அவள் அழகினை வர்ணிக்கும் போது ஆத்திரம் கொண்டு, பெற்றோலால் அவன் முகத்தில் ஊத்தி தீ வைக்க முயற்சிக்கும் காட்சி கொடூரமானது. 
*இதனை விட, இன்னும் பல கொடூரமான காட்சிகளும் இத் திரைப்படத்தில் உள்ளது. 


The Roommate: சைக்கோ, த்ரில்லரின் கொடூரமான பக்கங்களைப் பற்றிப் பேசும் படம்

பிற் சேர்க்கை: சகோதரன் மாயாவின் மறைவு தொடர்பான துக்க தினம் அனுஷ்டிக்கும் அறிவிப்பு இன்று மாலை பிரசுரமாகும் என்பதனை அறியத் தருகின்றேன்.

9 Comments:

Thava said...
Best Blogger Tips

என் இனிய வணக்கம் நண்பரே,
கதையே ரொம்ப திரிலிங்காக இருக்கிறது, அதை தங்கள் எழுத்துக்கள் மேலும் சுவாரஸ்யத்தை ஏற்றிவிடுகின்றன.சிறப்பான விமர்சனம்..கொடூ
ரமான காட்சிகள் நிறைய உண்டு என்று தெரிகிறது.அதிகமான ரத்தக்காட்சிகள் உள்ள படங்களை பார்ப்பது குறைவு..வாய்ப்பு கிடைப்பின் பார்க்கிறேன்,நன்றி.

Yoga.S. said...
Best Blogger Tips

Bon jour Mr.NIROOPAN!!!!

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

விமர்சனம் மிகவும் நன்றாக இருக்கிறது. இப்போ பார்க்க நேரம் இல்லை. புக்மார்க் பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரம் பார்க்க முயற்சிக்கிறேன்.

ட்ரெயிலரை பதிவிலேயே எம்பெட் பண்ணலாமே? ஏன் லிங்க்?

K said...
Best Blogger Tips

மச்சி வழக்கத்தைவிட வித்தியாசமா எழுதியிருக்கிறாய்! சத்தியமா படிச்சனான்! நம்பு சொல்லிப்போட்டன்!

Admin said...
Best Blogger Tips

விமர்சனம் எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டும்..அது உங்களுக்கு உண்டு..வாசித்தேன் தொகுத்து சொன்ன விதம் சிறப்பு..மனதை உறைய வைக்கும் காட்சிகள் நிறைந்த படம் போல..

KANA VARO said...
Best Blogger Tips

இந்தப்படத்தை நான் பார்க்கத்தான் வேண்டுமோ? ஏன்னா நான் இங்கிலீஸ்ல கொஞ்சம் வீக்கு..

சசிகுமார் said...
Best Blogger Tips

விமர்சனம் நல்லா இருக்கு மச்சி...

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

விமர்சனம் ஓக்கே, யூ டான்ஸில் ஓட்டு போட முடியலை, செக் இட்

ஜேகே said...
Best Blogger Tips

சீரியஸ் விமர்சனம் .. உங்கள் பாணியில் இருந்து கொஞ்சம் விலகி, திரை விமர்சன பாணிக்கு தாவி இருக்கிறீர்கள் .. வாழ்த்துக்கள் தலைவரே!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails