Thursday, February 2, 2012

கலியாணம் கட்டாத இளசுகளின் ஹவுஸ்புல் கச்சேரி!

அபாய அறிவிப்பு / முன் எச்சரிக்கை: எல்லோருக்கும் வணக்கமுங்க;
இப் பதிவு குழந்தைகள், பெண்கள், தாய்க் குலங்கள் மற்றும் கலாச்சார காவலர்களுக்கும் உகந்தது அல்ல. ஆனாலும் ஆர்வமுள்ளவங்க படிக்கலாம். விரும்பினா கமெண்ட் கூடப் போட்டுக்கலாம். விருப்பமில்லைன்னா படிச்ச தடயம் இல்லாம சாமி குத்தம் வர முன்னதா எஸ்கேப் ஆகி, நெத்தியில விபூதியைப் பட்டையை தீட்டி; பாவத்தினைப் போக்கிட சாமிக்கு முன்னாடி போய் உட்கார்ந்துக்கலாம். அலுவலகங்களிலும்,பொது இடங்களிலும் இப் பதிவினைப் படிக்க விரும்புவோர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. "கலியாணம் கட்டினவங்க இப் பதிவினைப் படிக்க முடியாதா?" அப்படீன்னு உங்களுக்கு இப்போ லைட்டா ஒரு டவுட்டு வரலாம். அவங்களும் படிக்கலாமுங்க. இனி பதிவிற்குள் நுழைவோமா?
மம்மியின் காலில் போய் விழுந்து கெஞ்சும் மகிந்தா!
www.thamilnattu.com
தமிழக மக்களின் உணர்வெழுச்சியினைப் பார்த்து திண்டாடிக் கொண்டிருந்த இலங்கை அதிபர் மகிந்தவிற்கு இப்போது புதிதாக ஒரு கிலி பிடித்திருக்கிறது. தமிழகத்திற்குச் செல்லும் தன் உறவினர்கள்,அமைச்சர்கள்,அரச விசுவாசிகள் ஆகியோர் மீது இனந் தெரியாத தமிழ் உணர்வாளர்கள் திடு திப்பென கண்ட இடங்களில் வைத்து தம் அன்பைச் சொரிகிறார்களாம். இதனால் தமிழகத்திற்குச் செல்லும் இலங்கை அரச உறுப்பினர்கள் ஹாஸ்பிட்டலில் அட்மிற் ஆகி சிகிச்சை பெற வேண்டிய நிலமை அதிரிப்பதால், வேறு வழியின்றி மம்மியின் காலைப் பிடித்து மன்றாடியுள்ளார் மகிந்த ராஜபக்ஸே.
நாற்று நிரூபன்
இது இலங்கையில் நடந்திருந்தால் இந்த நிமிடம் வரை தாக்குதல் நடாத்துவோரின் தடயம் இல்லாதவாறு துப்பாக்கி முனையில் அப்பாவித் தமிழர்கள் துடைத்தழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தியாவில் இலங்கை அரசின் ஆதாரவாளர்கள் தொடர்ந்தும் குறிவைக்கப்படுவதால் வேறு வழியின்றி மம்மி நீங்க தான்; எச்சில் நக்கும் ஜிம்மியின் கூட்டத்தை பாதுகாக்கனும் என கெஞ்சியுள்ளார் நம்ம மகிந்தா.

சினங் கொண்ட ஜெயலலிதா! சீறிப் பாய்ந்த கேப்டன்!
நாற்றிலிருந்து காப்பி செய்யப்பட்ட பதிவு
சங்கரன் கோயில் எலக்சனில அம்மா கட்சி கண்டிப்பா ஜெயிக்கும் என்று நேத்தைக்கு மம்மி சட்ட சபையில் சொன்னது தானுங்க தாமதம்! ரெண்டு பெக்கை கூடுதலா உள்ளே தள்ளின ஆள் மாதிரி தேதிமுக கேப்டன் எந்திருச்சு சட்ட சபையினையே பாகிஸ்தான் பார்டரா நெனைச்சு ரணகளம் பண்ணிட்டாரு! கேப்டனின் சீற்றத்தினாலும், சட்ட சபையில் கை உயர்த்திப் பேசி கேப்டன் ரணகளம் செஞ்சுப்ப்டாரு என்று கூறி சட்ட சபையை ஒத்தி வைச்சிட்டாங்க. தீவிரவாதிங்களை ஒழிக்கிறதுக்காக சினிமாவில எடுத்த பயிற்சியை மான்பு மிகு கேப்டன் தான்; சட்ட சபையில எதிர்க்கட்சி வரிசையில இருகிறேன் என்பதை மறந்து ஒத்திகை பாத்துப்புட்டாரோ!!
நாற்றிலிருந்து காப்பி செய்யப்பட்ட பதிவு
சிரியாவை வைத்து கபடி ஆடத் தயாராகும் ரஷ்யா
நாற்றிலிருந்து காப்பி செய்யப்பட்ட பதிவு
சிரியாவில் இடம் பெறும் உள்நாட்டுப் போரை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில் சிரியா மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்க மேற்குலகம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலினூடாக தயாராகி வருகின்றது. ஐநாவின் வீட்டோ பாதுகாப்பு சபையில் மத்தியஸ்தம் வகிக்கும் நாடுகளுள் ரஷ்யாவும் உள்ளது. ஆனால் சிரியா விடயத்தில் ஐநா நிறைவேற்றும் தீர்மானத்திற்கு ரஷ்யா தன் எதிர்ப்பைக் காட்டியிருப்பதோடு, இன்னோர் உள்நாட்டுப் போரிற்கும் இந்த தீர்மானம் வழி வகுக்கும் எனக் கூறி மேற்குலகின் இந்த அணுகு முறையினைக் கண்டித்திருக்கிறது. சும்மாவா சொன்னாங்க சோழியன் குடுமி சும்மா ஆடாதுன்னு.
ரஷ்ய விமானத் துறையின் ஒரு பகுதி வருமானம் சிரியாவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் மூலம் கிடைக்கும் போது, ரஷ்யா தன் ஆதரவை மேற்குலகிற்கா காட்டும்?
www.thamilnattu.com
மனைவிக்காக இரவை ஒதுக்கிய பதிவர்:
பிரான்ஸ் நாட்டில உள்ள ரெண்டு பதிவருங்க நீண்ட நாளைக்கு அப்புறமா சந்தித்திருக்கிறாங்க. "காட்டான் அண்ணே, உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு" அப்படீன்னு துஸிப் பையன் சொல்லியிருக்கான். பதிலுக்கு காட்டானும் ஆமாங்க, "ரொம்ப நாளாச்சு துஸியந்தன்" அப்படீன்னு பேசியிருக்காரு.
"அப்படீன்னா வாங்கண்ணே, காப்பி சாப்பிட்டு பேசுவோம்"என்று எதிர்த்தாப்பில இருந்த காப்பி சாப் பக்கமா கையை காண்பித்து கேட்டிருக்காரு துஸி. www.thamilnattu.com
"இல்ல தம்பி, நான் வீட்டிற்கு போற டைம்மாகுது" அப்படீன்னு சொல்லி நழுவப் பார்த்திருக்காரு காட்டான்.
"ரொம்ப நாளைக்கு அப்புறமா பார்த்திருக்கோம். சொல்லுங்கண்ணே,ஒங்க வீட்டுக்காரங்க, புள்ளைங்க எல்லோரும் சௌக்கியமா இருக்காங்களா?" அப்படீன்னு கேட்டிருக்காரு துஸி.
"நான் வீட்டிற்கு போகனும்", அப்படீன்னு மறு மறுபடியும் சொல்லியிருக்காரு காட்டான்.
இதனால ரொம்பவே கடுப்பான துஸி, "என்னங்க அண்ணே! ரொம்ப நாளைக்கு அப்புறமா ரெண்டு பேரும் மீட் பண்ணியிருக்கோம். வீட்டிற்கு போக துடிக்கிறீங்க. வீட்டில ஏதாச்சும் விஷேசங்களா?" அப்படி கேட்டிருக்காரு. ”விஷேசம் ஒன்னுமில்லை.என் பொண்டாட்டி எனக்காக காத்திட்டிருப்பா" அப்படீன்னு சொல்லியிருக்காரு காட்டான்.
"அடடா! கையை கொடுங்க சார்! இந்தக் காலத்தில இப்படி ஒரு பொண்டாட்டியா! அதுவும் கணவன் வரும் வரைக்கும் காத்திருந்து சாப்பிடுற பொண்டாட்டியா!" ஆச்சரியமா இருக்கே! என்று துஸியும் காட்டான் சாரைப் பத்தி பெருமையா பேசியிருக்காரு.
"அடப் போங்க தம்பி!அவங்களாச்சும் எனக்காக சாப்பிடாம காத்திட்டிருப்பதாவது. நான் போய் தான் அவங்களுக்கே சமைச்சு போடனும்" அப்படீன்னு சொன்னாரு காட்டான்.
www.thamilnattu.com
நான் ரொம்ப வெளிப்படையான பொண்ணாம்! சமீரா ரெட்டி அதிரடி!
நாற்றிலிருந்து காப்பி செய்யப்பட்ட பதிவு
சமீபத்தில் நடிகை சமீரா ரெட்டி தான் ரொம்ப வெளிப்படையான பொண்ணு அப்படீன்னு பேட்டி கொடுத்திருக்காங்க. இதெல்லாம் நீங்க சொல்லியா நாம தெரிஞ்சுக்கனும்! அதான் பார்த்தாலே தெரியுதில்லே!
பதிவர் முரண் - யோகா ஸ்பெஷல்:

பன்னிரண்டு வயதில் உள்ளம் பறித்தெடுத்தாள் பத்மினி
எண்ணிரண்டு வயதில் என்னை கடைந்தெடுத்தாள் சரோஜாதேவி
கண்ணிரண்டில் இப்போது நுழைந்து விட்டாள் ஹன்சிகா
தன்னழகால் தமிழகத்தை கட்டி போடுவாளா அமலாபால்?
நாற்றிலிருந்து காப்பி செய்யப்பட்ட பதிவு
பதிவர் ஜோதிடம்:
நாற்றிலிருந்து காப்பி செய்யப்பட்ட பதிவு
பதிவர் ஒருவருக்கு அண்மைக் காலமாக உச்சியில சனீஸ்வரன் வந்து குந்தியிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மணிப் பதிவருக்கு எதிராக யார் உள்குத்து போட்டாலும், தாம் அவருக்கு எதிராக போடலை அப்படீன்னு சொல்லி சமாளிச்சுடுறாங்களே என்பதால் பாரிஸில் உள்ள அம்மன் கோயில் படியெல்லாம் ஏறி இறங்கா குறையாக அங்கப் பிரதிஷ்ட்டை செய்ய முயற்சித்திருக்காரு மணிப் பதிவர்.
நாற்றிலிருந்து காப்பி செய்யப்பட்ட பதிவு
பதிவர் பலிபாடல்:
நாற்றிலிருந்து காப்பி செய்யப்பட்ட பதிவு
அன்பே உனக்கு எங்கே மச்சம் இருக்கு என்றேன்?
மிச்சம் பார்க்காது; நீயோ உச்சம் போகாது
எச்சில் மட்டும் குடித்து விட்டு - என்னை இளைக்க விட்டு
காமத்து ஏழையே நீயும் காதலில் கேள்வி கேட்கலாமோ என்றாள் - விரக
தாபத்தை போக்க முன்னர் படுக்கையை விட்டு எழுந்தாள்!!

பதிவர் குசும்பும் - குழப்பமும்! 
இங்கே என்னா நடக்குதுங்க? அவரு எங்கே பார்க்கிறாருங்க?
*******************************************************************************************************************************
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்று சொல்லுவார்கள். அப்படீன்னா கலைக் கம்பனின் வலைப் பூ எப்படி இருக்கும்? வாருங்கள் ஒரு தடவை கலைக் கம்பனின் வலை பூவிற்கும் சென்று வருவோம். கவிதைகளை வித்தியாசமான வடிவில் பதிவுகளாக தன் தளத்தில் பகிர்ந்து வருகிறார் "கலைக்கம்பன்" அவர்கள். 
கலைக்கம்பனின் வலைப் பூவிற்குச் செல்ல:
http://kalaikkampan.blogspot.com
http://kalaikkampan.blogspot.com.in/

*******************************************************************************************************************************

13 Comments:

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////"அடப் போங்க தம்பி!அவங்களாச்சும் எனக்காக சாப்பிடாம காத்திட்டிருப்பதாவது. நான் போய் தான் அவங்களுக்கே சமைச்சு போடனும்" அப்படீன்னு சொன்னாரு காட்டான்.////

ஹி.ஹி.ஹி.ஹி........

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////சமீபத்தில் நடிகை சமீரா ரெட்டி தான் ரொம்ப வெளிப்படையான பொண்ணு அப்படீன்னு பேட்டி கொடுத்திருக்காங்க. இதெல்லாம் நீங்க சொல்லியா நாம தெரிஞ்சுக்கனும்! அதான் பார்த்தாலே தெரியுதில்லே!
////

ஹி.ஹி.ஹி.ஹி.........

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

வாங்கோ மச்சான் சார்,

ஊர் எல்லாம் பல பேரு கஷ்டப்பட்டு கை உளைய என் பேரை டைப் செஞ்சு வேதனைப்பட கூடாதென்று
என் பேரை மாத்தி வைச்சிருக்கேன்!

எப்பூடி நல்லா இருக்கா என் பேரு?

K said...
Best Blogger Tips

அடோய், மச்சி அல்லக் கை! ஆர் யூ ஃபைன்? மச்சி, நீதான் என்னோட அல்லக்கைன்னு உலகத்துக்கே தெரியுமே? அதை வேற பேருலயும் சொல்லிக்காட்டணுமா? இருந்தாலும் செம காமெடி மச்சி!:-)

Unknown said...
Best Blogger Tips

//தான் ரொம்ப வெளிப்படையான பொண்ணு//
அடிக்கடி அவங்களே பொண்ணுன்னு சொல்றாய்ங்க இல்ல! பாக்கிறவன் எல்லாம் பயப்பிடுறானுக....அவ்வ்வ்!

Unknown said...
Best Blogger Tips

//சட்ட சபையினையே பாகிஸ்தான் பார்டரா நெனைச்சு ரணகளம் பண்ணிட்டாரு!// :-)
கொஞ்சம் ஒவாராயிடுச்சோ!
இன்னொரு பெக் போட்டிருந்தா என்னாயிருக்கும்? :-)

Marc said...
Best Blogger Tips

பல மணம் கமலும் அருமையான பதிவு வாழ்த்துகள்.

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!நன்றாக இருந்தது!நன்றாக இருக்கிறது,நன்றாக இருக்கும்!எனக்குப் பிடித்தவர்(இன்றைய தேதிவரை)'அ' எழுத்தில் ஆரம்பித்து 'லா' எழுத்தில் முடியும் பெயர் கொண்டவர்!சகோதர இனத்தவரானாலும் கழுத்தில் என்போன்றே ஓர் சிறு கரும்புள்ளி உடையவர்!கண்டுபிடித்தால் நேசன் உபயத்தில் சூடாக பால்கோப்பி ஒன்று கிடைக்கும்!////அல்லக்கை நிரூபன்////நல்ல வேளை அல்(உ)லக்கை இல்லை!!!!!!!!!!!!!!Ha!Ha!Haa!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

வெளிநாட்டில் வாழும்?!தன்மானச் சிங்கங்களை (தூசி)தட்டி எழுப்பிவிட்டீர்கள் நிரூபன்!வன்(மென்)மையாகக் கண்டிக்கிறேன்!///(நாளைக்கே என்னையும் இழுக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?அதான்.......)

சசிகுமார் said...
Best Blogger Tips

ஓட்டு மட்டும் இப்போ... அப்புறம் வந்து படிக்கிறேன்

Thava said...
Best Blogger Tips

இனிய வணக்கம் நண்பரே,
கொஞ்சம் வேலை..அதான் இந்த பக்கம் வரல..மன்னிச்சுக்குங்க.
செம்ம கலக்கலான பதிவு..அதுவும் ஆரம்பத்துல வார்னிங்கு எல்லாம் போட்டு மனச திரில் ஆக்கிட்டீங்க./ சமீரா ரெட்டி செம்ம கலாய்ச்சல்.மிகவும் ரசித்தேன்.நன்றி.

Anonymous said...
Best Blogger Tips

புதிதாய் களம் மாறுகிறீர்கள்...சிரியா ...ரஷ்சியா...விஷயம் தான்...

நான் போய் தான் அவங்களுக்கே சமைச்சு போடனும்" அப்படீன்னு சொன்னாரு காட்டான்.//// அது சரி வீட்டுக்கு வீடு வாசப்படி...

ஆரம்பத்துல வார்னிங் எதுக்குன்னு கடைசி வரை புரியலை...

கதம்பம் கலக்கலாய் இருந்தது....

காட்டான் said...
Best Blogger Tips

அல்லக்கை நிருபனுக்கு எனது கண்டனங்கள்... ஹி ஹி !!!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails