Thursday, June 30, 2011

கர்ப்பிணிப் பெண்ணை கண் கலங்க வைக்கலாமா?

ஒரு பெண் தாய்மை நிலையினை அடையும் போது, சத்தான உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும். அப் பெண்ணைக் கண் கலங்காது பராமரிக்க வேண்டும் என்று எம் தமிழ் மரபு வழி பெரியோர்கள் சொல்லுவார்கள். இதுவே யதார்த்தமும் கூட. 

இன்பத்தை கூ(ஊ)ட்டும் இலக்கண காதல்!

நிரூபன்: சாரி நேமிசா, இன்னைக்கு கொஞ்சம் லேட்டாகிடுச்சு, 
உங்களைப் பார்க்க இனைக்காச்சும் கொஞ்சம் வேளைக்கு வரனும். 
நீ வர்ற முன்னாடியே, நான் வந்து நின்று, நீ வந்ததும் ஓடோடி வந்து உன்னைக் கட்டிப் பிடித்து ஒரு பிரெஞ்ச் கிஸ் அடிக்கனும் என ஆவல் மேலிட வந்தேன். வர்ற வழியிலை வண்டி சொதப்பிடிச்சு. அதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. என்னை மன்னிக்க மாட்டியா செல்லம்?

Wednesday, June 29, 2011

பொது இடத்தில் இப்படி அசிங்கம் பண்ணலாமா!

பாய அறிவிப்பு: 
அன்பிற்கினிய உறவுகளே, இன்றைய பதிவு கொஞ்சம் விவகாரமான பதிவு. ஆர்வமில்லாதவர்கள், கலாச்சார காவலர்கள் பதிவின் தலைப்பினையும், முன்னுரையினையும் பார்த்த பின்னர் ஓடிவிடுவது நன்மையான செயல். அதனையும் மீறிப் பதிவினைப் படித்து விட்டு, சீ....நீ இதையெல்லாம் பதிவில் எழுதுறியா என்று திட்டினால், நொந்து கொண்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

Friday, June 24, 2011

பிரபல பதிவரால் ப்ராப்ளம் ஆன பெண்- உண்மைச் சம்பவம்!

ச்சரிக்கை:  இப் பதிவில் வரும் உரையாடல்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல. நிஜமே. உலகின் எங்கோ ஓர் மூலையில் ஒரு பதிவர் வீட்டில் இச் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால், இது தமது வீட்டுக் கதை என யாராவது 
உரிமைகோரினால், அதற்கு கம்பனி பொறுப்பல்ல.

Thursday, June 23, 2011

நன்றி அம்மா- ஈழத்து குறும்பட விமர்சனம்

ஈழத்துத் தமிழ்ச் சினிமா என்ற ஒன்று காலவோட்ட மாற்றத்தில் காணாமற் போய் விட்ட பிற்பாடு, அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒரு முறை வெளியாகும் ஈழத்துக் குறும்படங்கள், ஈழத்தவர்களாலும் ஒரு சினிமாவினை எடுக்க முடியும் எனும் நம்பிக்கையினை மெய்ப்பித்து விடுகின்றன. 
முழு நீளத் திரைப்படங்கள்(நீலப் படம் அல்ல) எனும் வரிசையில் இருந்து ஈழச் சினிமாவானது விலகி, இன்று அதற்கென்றோர் தள வடிவம் ஏதுமற்றிருப்பதற்கான பிரதான காரணம் ஈழத்துப் போர்ச் சூழலாகும்.

Tuesday, June 21, 2011

முன்னாள் பெண் புலியின் கண்ணீர் கதை!

இடம் பெயர்ந்த பின்னர்
இடிந்து போன 
துயிலுமில்லமொன்றின்
அருகிருந்து கைவிடப்பட்ட
நிலையிலிருந்த
லுமாலா சைக்கிள் ஒன்றை(க்)
கண்டெடுத்தேன்
துயிலுமில்லமருகே
இருந்த மகிமையோ என்னவோ
இன்று வரை 
துருப்பிடிக்காதிருந்தது சைக்கிள்,

Sunday, June 19, 2011

ஈழம் என்ன தொட்டு நக்கும் ஊறுகாயா?

அண்மையில் வெளியான பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியின் ஈழத்தின் இறுதி யுத்தம் பற்றிய விபரணத் தொகுப்பின் எதிரொலியாக, (கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்) ஈழத் தமிழர்கள் பற்றிய இறுகிய சிந்தனையுடைய மனங்கள் பலவும், ஈழத்தின் மீது தமது இரக்கப் பார்வையினை வீசத் தொடங்கியிருக்கின்றன. 

Friday, June 17, 2011

தமிழக அரசியலை நோண்டிப் பார்க்கலமா?

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே; 
தமிழக அரசியலை நோண்டிப் பார்க்கலாமா? இன்றைய கால கட்டத்தில் அரசியல் கொஞ்சம் விவகாரமான விடயமாகத் தான் இருக்கிறது. தமிழக அரசியலை நோண்டிப் பார்க்கலாமா என்று தலைப்பு எழுதியதும் பல பேர் கடுப்பாகியிருப்பீங்க. ’ஈழத்து அரசியலை நோண்டிப் பார்க்கத் தைரியம் இல்லை. அதில நம்ம தமிழக அரசியலைப் பற்றி ஏதோ எழுதுறியா? உன்னை அப்புறமா டீல் பண்ணிக்கிறேன்’ என்று யாராவது உணர்ச்சிவசப்பட்டால் அதற்கு நான் சொல்லும் பதில் இது தான்.

Thursday, June 16, 2011

சமையல் செய்து சம்சாரத்தை அசத்தலாமா!

அன்பிற்கினிய உறவுகளே,
வாழ்க்கையில் சந்தோசமா இருக்க விரும்புகிறீர்களா? திருமணம் செய்ய விருப்பமா? இல்லை உங்களுக்கு ஒரு காதலி தேடிக் கொண்டிருக்கிறீர்களா?  எதுவானாலும் நீங்க ஒரு மிக முக்கியமான விடயத்தினை மறந்து விடக் கூடாது. அது தான் சமையற் கலையில் நீங்கள் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Wednesday, June 15, 2011

எரியூட்டப்பட்ட ஏகாந்த நேர நினைவலைகள்! 

'என்ரை நாடு, எங்கடை மக்கள், எங்கடை வயல் இதனை ஒரு போதும்.....
அடச் சீ, இந்த ட்ரக் வேறு இடத்துக்கெல்லோ போகுது, என்பதை உணர்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொண்ட மிருதுளனைப் பார்த்து, அவனது வகுப்பு டிச்சர், 
’’தம்பி, மிருதுளன், நான் உமக்கு காதல் என்ற தலைப்பில் தானே பேசுவதற்குச் சந்தர்ப்பம் தந்தனான். பிறகென்ன நாடு மக்கள், நிலம் என்று பேசிக் கொண்டிருக்கிறீர்?
உமக்கு வர வர மைண்ட் ஒரு இடத்தில நிற்குதில்லைப் போல கிடக்கு, நேரத்தை வீணடிக்காமல் நான் சொன்ன தலைப்பில பேசும் பார்ப்போம்!!

Monday, June 13, 2011

குறுக்கு வழியில் பிரபல பதிவராக அருமையான டிப்ஸ்! 

பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே,
வலைப் பதிவு எனப்படுவது, இன்றைய கால கட்டத்தில் தணிக்கைகள் ஏதுமற்ற ஒரு சுயாதீன ஊடகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எமக்குப் பிடித்தவற்றை, எங்களின் எண்ணங்களை வலையில் எழுதி உலகெங்கும் கொண்டு செல்வதற்கு கூகிள் அம்மம்மா இலவசமாக வழங்கும் ஓர் ஊடகம் தான் ப்ளாக்.

பிள்ளை பிடிகாரங்க பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள்! 


பிள்ளை பிடிகாரர் பற்றி அறியாதோர் யாரும் இருக்க மாட்டார்கள்.  இலங்கையில் வாழும் மக்களுக்கு இந்தப் பிள்ளை பிடிகாரர் பற்றிய செய்திகளைக் கேட்டாலே அதிர்ச்சியாகக் தான் இருக்கும். கூடவே பயத்தோடு கூடுய நடுக்கமும் ஏற்பட்டு விடும்.

Saturday, June 11, 2011

காமத்தையும் காதலையும் பிரித்தறிய முடியா நிலை! 

’’அக்கராயன் பள்ளிக் கூடத்தடியில் இறங்கிற ஆட்கள் யாராச்சும் இருக்கிறீங்களா? வேளைக்குச் சொல்லுங்கோ, அக்கராயன் பள்ளிக் கூடத்தடி யாராச்சும் இருக்கீங்களா? 
என நிமிடத்திற்கொரு தரம் கூவியவாறு, அடுத்த பஸ் நிறுத்தம் எது என்பதை நினைவுபடுத்திக் கொண்டிருந்தார் பேருந்து நடத்துனர்.

Thursday, June 9, 2011

நடு ரோட்டிற்கு வந்து விட்ட நாய்(க்) காதல்! 

சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்தல்! 

கலியாணம் கட்டச் சொல்லி 
கசின் ஓட்ட வடை சொல்லுறான்;
பலியாடு நானாகப் பார்த்துச் சிரிக்கவோ?
விலையின்றி மோதிரங்கள், விளையாடப் பல பொருட்கள்
சுளையாக கிடைத்திடுமாம்- ஆனாலும் அவனோ
சும்மா கிடந்த சங்கை ஊதி(க்) கெடுத்திடப் போடுகிறான் திட்டம்
சுதந்திரத்தை நான் இழந்து பெட்டிப் பாம்பாய் ஆகுவதில்
அவனுக்கு இப்போது இருக்கிறதாம் இஷ்டம்! 

Wednesday, June 8, 2011

தமிழக அபிவிருத்திக்கு ஜெயலலிதாவின் அதிரடித் திட்டங்கள்! 

வரலாற்றில் இது வரை எவருமே அபிவிருத்திப் புரட்சியினை முன்னெடுத்திராத வகையில், துரித கதியில் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தமிழக மேம்பாட்டிற்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளார். அவையாவன

Tuesday, June 7, 2011

ஊதிப் பருத்த ஊர்மிளா! 

தூர இடப் பயணங்களிற்கு எல்லோரும் இரவு ரயிலினைத் தான் தெரிவு செய்வார்கள். நானும் அலுவலகப் பணி நிமித்தம் தலை நகருக்குச் செல்லும் நோக்கோடு ஒரு நாள் இரவு ரயிலில் என் பயணத்தினைத் தொடங்கினேன். 

வழமையாகப் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் ரயில், என் நல்ல நேரம், யாருமே இல்லாத பெட்டி ஒன்று எனக்கு கிடைக்க, அதில் டபுள் சீட் உள்ள இடத்தில் நான் நீட்டி நிமிர்ந்து தூங்கத் தொடங்குகிறேன்.  பாயிண்டு பாயிண்ட் எக்ஸ்பிரஸ் ஆகப் புறப்பட்ட ரயில் ஒரு இடத்தில் நிற்கத் தொடங்க, நானும் விழித்துக் கொள்ள, அழகிய பெண்ணொருத்தி, நான் இருந்த அதே பெட்டியினுள் வந்து உட்காருகிறாள். 

Monday, June 6, 2011

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்- கலைஞர் ஒரு சபை குழப்பி! 

ஆல மரத்தடி அரட்டை!


ஆர்வமுள்ளோருக்காக, பழைய அரட்டைகளை நீங்கள் இங்கே சென்று படிக்கலாம்.


கையில் இருந்த ஆப்பிள் ஐபோனின் உதவியுடன், தமிழகத்தின் முன்னணி நாளிதழின் பரபரப்பு மிகுந்த செய்திகளைத் தாங்கி வெளியாகிய வலைப் பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்தான் நிரூபன்...

திடீரென, மரத்தடிக்குப் பின்னாடி கேட்ட சவுண்டைத் தொடர்ந்து திரும்பிப் பார்க்கையில், கைகளில் அவல், கடலை சுண்டல் முதலிய கோயில் பிரசாதங்களோடு மணியண்ணைஇளையபிள்ளையாச்சிகுணத்தான் முதலியோர் ஆலமரத்தடிக்க்கு அரட்டைக்காக வருகிறார்கள்.

Sunday, June 5, 2011

திர்ள் ப்புன் மோதும் காமெடி ஜிம்மி! 

பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே, காமெடியில் ஜிம்மியில் கலந்து கலக்குவதற்காய் ஆவலுடன் வருகை தரும் உங்களை வர வேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 

இன்றும் வழமை போல அக்மார்க் முத்திரை மற்றும் ISO 9001 தரச் சான்றிதழ் பெற்ற ஒரிஜினல் அருவாள்களை மத்திய கிழக்கில் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் நாஞ்சில் மனோ கம்பனியின் பிரதான அனுசரணையிலும், 

பிரெஞ்சுப் பிகருங்கள் தும்மும் போது கர்சிப் எடுத்து நீட்டும் வகையில் பறக்கும் கர்ச்சிப்களைத் தயாரித்தும் உலகமெங்கும் விற்பனை செய்யும் 
ஓட்ட வடை நாராயணனின் இணை அனுசரணையிலும் இணைய வலை ஊடாக உங்களை நாடி வரவிருக்கிறது ‘நாற்றின் பாடுக்குப் பாட்டு’ காமெடி ஜிம்மி! 

கண்டறியப்பட முடியாத காம நோய்!

முறிகண்டிப் பிள்ளையார் கோயில் முன்றலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்புகையில் தேகம் கடந்து செல்லும் பூவின் நறு மணம் கலந்த காற்றைச் சுவாசித்து திரும்பிப் பார்த்தேன், அது அவள் தான், அவளே தான்,
புலன் ஐந்திலும் அந்தக் கணத்திலே உறைந்து விட்டதாய் ஒரு நினைப்பு
பூமியில் அவள் எனைத் தன் மடி மீது வைத்து தாலாட்டா மாட்டாளா எனும் நினைப்பு!

Saturday, June 4, 2011

அவளுக்கு ஆட்டம் மெத்திப் போச்சு!

அன்பிற்கினிய உறவுகளே, வார்த்தைகளின் ஊடாக வர்ண ஜாலங்களைக் காட்டலாம், அதே போல வார்த்தைகளின் ஊடாக வசை பாடலினையும் செய்யாலம். அந்த வகையில் ஈழத்தில் வசை பாடலினைச் செய்யப் பயன்படுத்தும் சொற்கள் வரிசையில் பெண்களினைத் திட்டப் பயன்படுத்தும் ஒரு சில சொற்களினைப் பற்றி இப் பதிவினூடாகப் பார்ப்போம்.

வீட்டில் வயதுக்கு வந்த பெண் பிள்ளை ஒன்று , பெற்றோர் சொற் கேட்காது தன் வழியில் வீட்டை விட்டு வெளியேறி ஊர் சுற்றப் போகும் போது
’அவள் இனித் திருந்த மாட்டாள், அவளுக்கு ஆட்டம் மெத்திப் போச்சு’ என ஏசுவார்கள்.

Friday, June 3, 2011

தமிழகச் சந்தைகளில் இலவசப் பொருளாக ஈழம்! 

முன்னுரை: அன்பிற்கினிய உறவுகளே; இப் பதிவின் நோக்கம் தமிழக மக்கள் மத்தியில் உள்ள இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் மீதான தார் மீக ஆதரவைச் சீர் குலைப்பதோ அல்லது தமிழக உறவுகளின் இலங்கைத் தமிழர்கள் பற்றிய உணர்வுகளைத் துஷ்பிரயோகம் செய்வதோ அல்ல. 

ஈழம் எனும் சொல் இன்றைய கால கட்டத்தில் அகிலமெல்லாம் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாகி விட்டது. தமிழக மக்கள் மத்தியில் ஈழம் எனும் சொல்லிற்குரிய அர்த்தமோ, தலை கீழான நிலையில் நோக்கப்படுகிறது.

Thursday, June 2, 2011

ஈழ முஸ்லிம்களை அடக்கி வாழ நினைக்கும் இலங்கைத் தமிழர்கள்! 

இலங்கைத் தீவில் வாழும் மக்களுள் முஸ்லீம் மக்களும் தமக்கென்றோர் தனியான, நீண்ட பாரம்பரிய வரலாற்றினைக் கொண்டவர்களாக வாழ்கிறார்கள்.  இலங்கைத் தீவில்(ஈழத்தில்)  முதன் முதலாக வியாபார நோக்கோடு கி.பி 414ம் ஆண்டு தென் அரேபிய வர்த்தகர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆனாலும் அவர்களது வருகையானது வியாபார நோக்கோடு இருந்தது.  இதன் பின்னர், கி.பி 628ம் ஆண்டளவில் 'வஹாப் இப்னு அபீ ஹப்ஸா' எனும் நபிகளின் தோழர் இலங்கைக்கு வருகை தந்து, ’’இலங்கையர்களை இஸ்லாமியர்களாகவும், இலங்கை மன்னனாக அக் காலத்திலிருந்தவனை இஸ்லாமிற்கு மதம் மாறும் படியும் கோரியிருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க