Wednesday, November 30, 2011

மகிழ்ச்சியில் திமுக! நெகிழ்ச்சியில் கனி! குழப்பத்தில் ராசா!

மகிழ்ச்சியில் திமுக! கனியை காணும் விருப்பினில் கலைஞர்!

கோபாலபுரத்தின் வாசற் கதவுகள்
கோதை நீ திஹார் சென்ற
காரணத்தால் மூடி(க்) கொண்டன- உன்னால்
பெருமை கொள்ளும் என
நான் ஊட்டி வளர்த்த நாற்று நிரூபன்
அரச சபை(த்) தமிழோ
கனியே நீ தமிழில் கவிதை தரலையே
என நொந்து புலம்பத் தொடங்கி விட்டது- இன்றோ
நாளையோ என இருக்கும்
தில்லிக்கு கடிதம் எழுதும் 
கலைஞர் எந்தன் நிரூபனின் நாற்று வலையிலிருந்து கொப்பி
வாழ்வும் முடிய முன்னம்
அரியணையில் உன்னை ஏற்றி
அழகு பார்த்திடவும், பிறர் அறிந்திடாது
பணத்தை சுருட்டுவோர்க்கு
துணை இருந்திடவும் 
ஐடியாக்கள் பல சொல்லித் தந்தேன்!
கிழவன் புத்தி கிறுக்கு(ப்)  புத்தி எனவாகி
அழகே! எம் வீட்டின் அணங்கே! நீயும்
கொடும் வெயிலிடை கொதித்துமா போய் விட்டாய்?

Tuesday, November 29, 2011

என் சுவாசமே- விமர்சனம் - மருந்தில்லா நோயால் மௌனித்த காதல்!

அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்:
மௌனம் என்பது மனதிற்கு பாரமாக அமைந்து கொள்ளும் ஓர் விடயமாகும். எம்மால் தீர்வு காண முடியாத விடயங்களை, வெளியே பகிர முடியாத உணர்வுகளை மனதிற்குள் பூட்டி வைத்து அடை காத்து, மன அழுத்தத்திற்கு ஆளாகி எம் மன நிம்மதியினைத் தொலைக்கின்ற செயற்பாடுகளைத் தான் நாம் அன்றாடம் செய்து வருகின்றோம். மனதிற்குள் பூட்டி வைத்துத் தீர்வு காண முடியாத சில விடயங்களை நாம் வெளியே பகிர்ந்து கொண்டால் எம் மனப் பாரம் குறைந்து விடும். மனமும் அமைதியடைந்து எம் மூளையும் வேகமாக இயங்கத் தொடங்கி விடும். எமது எதிர்பார்ப்புக்களை எண்ணங்களை நிறைவேற்ற இயலாத சமயத்தில் ஏற்படுகின்ற மன விரக்தியினையும்,கவலைகளையும் எந்த மருந்திட்டும் குணப்படுத்த முடியாது.

Monday, November 28, 2011

சைக்கிள் கேப்பில் சைட் அடிக்கும் சைலன்டான பெண்கள்!

நம்மில் பலர் எம் வாழ் நாளில் என்றோ ஒரு நாள் நம்மை; ஒருத்தனோ ஒருத்தியோ திரும்பிப் பார்க்க மாட்டார்களா எனும் ஏக்கத்தினைத் தாங்கியவர்களாக எம் இளமைப் பருவத்தினைக் கடந்து வந்திருப்போம். ஆணுக்காகப் பெண்ணும், பெண்ணுக்காக ஆணும் காத்திருக்கும் விடயங்களை விட; "தன்னைப் பார்த்து ரசிக்க ஒருவர் காத்திருப்பாரே" எனும் ஆவலுடன் அழகுபடுத்திச் செல்லும் நிகழ்வுகள் இருக்கிறதே! அப்பாடா! அவை பருவ வயது மாற்றத்திற்கமைவாக எம்மை விட்டுத் தூர விலகிச் சென்றிருப்பது போலத் தோன்றினாலும், மீளவும் நினைத்துப் பார்க்கையில் சுகம் தரும் நினைவுகளாக அல்லவா இருக்கின்றன.

Sunday, November 27, 2011

ஈழத்தின் இன்னல் துடைக்க வந்த கால(க்) கடவுளர்கள்!

இன்றைய நாள்,
ஈழத் தமிழர்களின்
வரலாற்று பாதையில்
கால(க்) கடவுளர்களை
நினைவு கூரும்
கண்ணீர் கலந்த நாள்!

ஐயோ! தமிழீழம் கிடைத்து விட்டதாம் - கி(கெ)ளம்புங்கள்!

ஐயகோ தமிழீழம் கிடைத்து விட்டதாம்
மெய்யாய் இச் சேதி இருக்குமென
நினைக்கையில் மேனியெல்லாம்
நிலை கொள்ள முடியாது
சந்தோசத்தில் நடனமாடி
அலை போல்
ஆர்ப்பரிக்க தொடங்கி விடும்!

Saturday, November 26, 2011

சுய நல ஈனத் தமிழருக்காய் போராடிய சுதந்திர வீரன் பிரபாகரன்!

ஈழத்தின் ஒரு ஓரத்தில் அடிமைகளாக அடக்கு முறையாளர்களின் கால்களின் கீழ் சிக்கிச் சிதைந்து வேரோடு அழிந்து விடும் எனக் கருதிய தமிழனத்திற்கு வழி காட்டியாகப் பிறந்தவர் திரு. வே.பிரபாகரன். ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக வன் முறைகளும்,அநீதிகளும் சிங்கள வல்லாதிக்க வாதிகளால் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது எனும் உண்மையினையும்; தமிழன் எனும் இனம் அடக்கு முறையாளர்களின் கீழ்ப் பணிந்து வாழும் அடிமை இனம் அல்ல என்பதனையும் உலகறியச் செய்த பெருமை அவரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அவ் அமைப்பினை வழி நடத்திய தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களையுமே சாரும். 

Friday, November 25, 2011

Colombiana - வெறியோடு விரோதம் தீர்க்கும் அழகுப் பதுமையின் ஆக்‌ஷன் திரிலிங்!

புத்தம் புதிய ஹாலிவூட் பட விமர்சனம்!
குழந்தைகள் மனம் மென்மையானது.குழந்தைகளின் உள்ளத்திலிருந்து உதடுகள் ஊடே வெளி வரும் வார்த்தைகள் கபடமற்றவை. சிறு வயதில் மனதில் ஆழப் பதிகின்ற பல விடயங்கள் தான் மழலைகள் பெரியவர்களானதும் அவர்களின் எதிர் காலத்தினைப் பற்றிய சிந்தனைகளைத் தூண்டி விட ஏதுவாக அமைந்து கொள்கின்றன. ஒரு குழந்தையின் குணவியல்பும், அக் குழந்தை வாழும் சமூகத்தின் மற்றும் சூழலின் இயல்பும் ஒன்றித்துப் போகும் தனையினைக் கொண்டிருக்கும். குழந்தைகள் மனம் என்பது தாம் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றும் பச்சோந்திகளின் இயல்பினை ஒத்தது அல்ல. சிறு வயதில் கண்டு தரிசித்த விடயங்களை நெஞ்சில் நிலை நிறுத்திப் பரீட்சித்துப் பார்க்கும் உணர்வைக் கொண்டது என்று கூறுகின்றார்கள் அறிஞர்கள்.

Thursday, November 24, 2011

பழைய மொந்தையிலூறி மோகத்தை கூட்டும் இளமை உணர்வுகள்!

அடுத்தவன் மனைவி மீது அலை பாயும் ஆண்களின் கண்கள்!

உன் அருகே 
வாழ முடியாத நினைவுகளோடு
தெருவோரத்தில் தத்தித் தாவும்
உன் பாதச் சுவடுகளில்
முட்டி மோதிட முடியாது- உனை(ப்)
பின் தொடர்ந்து சென்று அழுகின்றன
என் பாதங்கள்- ஆனால் நீயோ;
அலைபேசியில் பேசியவாறு
மோட்டார் பைக்கில் 
அடுத்தவன் பின்னிருந்து 
போகும் போதாவது
ஒரு செல்லப் புன்னகையை 
உதிர்த்து விட்டு(ச்) செல்லலாமே!
நீ அடுத்தவன் மனைவியாயிருந்தாலும்
யா(ஆ)ருக்கும் தெரியாமல்
ரசித்திடும் ஆண்களின் 
உள்ளத்து உணர்வும் இது தானோ?

Wednesday, November 23, 2011

ஈழத்தின் இறுதிப் போரைத் திசை திருப்ப புலிகள் கையாண்ட தந்திரங்கள்!

நெருப்பு, டக்ளஸ், விமலன் ஆகியோர் களத்தில் இறங்கினார்கள். மறு நாள் 12.04.2007 அன்று; வவுனியா நகரம் அதிரத் தொடங்கியது. வவுனியா வைத்தியசாலையினை நோக்கி அம்புலன்ஸ் வண்டிகள் ஓடத் தொடங்கியது. 11.04.2007 அன்று புலிகளுக்கு ஆதரவானோர் மூவரையும் இராணுவத்தினர் சுட்டுக் கொன்ற சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. புலிகளின் கோட்டையாக வவுனியா அரச கட்டுப்பாட்டுப் பகுதியிற்குள் இருந்த உக்குளாங்குளம்,கூமாங்குளம் பகுதிகளில் இராணுவத்தினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களினால் புலிகளோடு நெருங்கிப் பழக மக்கள் அச்சம் கொண்டார்கள். மக்கள் ஆதரவு இல்லாத ஒரு பிரதேசத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது மிகவும் இயலாத காரியமாக இருந்தது.

ஈழத்தில் சோதனைகளின் மத்தியில் சாதனை படைத்த புலிக் குரல்!

ஒரு போராட்டத்தின் வெற்றிக்கும், அப் போராட்டமானது மக்கள் மனங்களை வெல்வதற்கும் ஊடகங்களின் பணி அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கும், போராட்ட கள நிலமைகளை மக்கள் முன் கொண்டு செல்வதற்கும் ஊடகங்களின் பணி இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது. இதனை நன்கு உணர்ந்த புலிகள் தமது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைச் சேவைகளை ஆரம்பித்தார்கள்.ஈழத்தில் பல்வேறு இடர்களையும், இடப் பெயர்வுகளையும் சந்தித்தாலும் மக்களுக்காக ஓயாது ஓங்கி ஒலித்த வானொலி எனும் பெருமையினைத் தன்னகத்தே கொண்டு விளங்குவது தான் புலிகளின் குரல் வானொலியாகும்.

Tuesday, November 22, 2011

ஆணாத்திக்கத்தால் அடக்கப்படும் பெண்கள்! பெண்ணாதிக்கத்தால் கண்ணீர் விடும் ஆண்கள்!

எமது சமூகத்தில் குடும்பத் தலைவர் என்கின்ற பாரிய பொறுப்பினைக் காலாதி காலமாக ஆண்கள் தான் சுமந்து வருகின்றார்கள். ஒரு குடும்பமானது சிறப்புற தன் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமெனில் ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானமாய்த் தம் பங்களிப்பினை வழங்க வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் பழமை வாதிகளால் விதைக்கப்பட்ட இல்லத்தரசி என்பவள் வீட்டினுள்ளே இருக்க வேண்டும் எனும் மூட நம்பிக்கையும், கணவனை மாத்திரம் நம்பித் தங்கி வாழ்பவளாக மனைவி வாழ வேண்டும் என்கின்ற பழமைக் கோட்பாடுகளும் இன்றைய 21ம் நூற்றாண்டில் மெது மெதுவாக சிதைந்து போகின்றன.

விதானையாரின் பெட்டையிடம் சிக்கிய விடலைப் பருவ நினைவுகள்!

எதிர் வாங்கில் வந்திருப்பாள்
என்னை விட உயர்ந்திருப்பாள்
புதிர் போட்டு புன்னகைப்பாள்
பூங் குழலால் உரசிடுவாள்
கதிர் பட்டு(க்) கண்ணுடையாள்
காதல் மொழி பேசிடுவாள்
புதிர் நீக்கி என்னிடத்தே
பூங்கோதை நீ வருவதெப்போ?

Monday, November 21, 2011

அண்டி விட்டு கூத்தடிக்கும் அடுத்தாத்து பொம்பிளைங்கள்!

மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் இருக்கும் உணர்வுகள் வித்தியாசமானவை. மனம் ஒரு குரங்கு என்று நாம் வர்ணிப்பதற்கு அமைவாக எம் மனதில் பல்வேறு மாற்றங்கள் மரத்திற்கு மரம் மந்தி மாறி மாறித் தாவுவதனைப் போன்று தாவிக் கொண்டிருக்கும். ஒவ்வொர் மனிதனுக்கும் உள்ளே ஆத்திரம், சுய நலம் கலந்த மிருக உணர்வுகள் குடி கொண்டிருந்தாலும் சில வேளை அவ் உணர்வுகள் வாழ் நாள் பூராகவும் வெளித் தெரியாது அம் மனிதனை ஒரு நல்ல மனிதன் என்ற அடை மொழியோடு சுடு காட்டில் புதைத்து விடும். சில மனிதர்களது விரும்பத்தகாத உணர்வுகள் வெளித் தெரிவதன் ஊடாக பிறரது பார்வையில் அம் மனிதர்கள் மனித உருவில் உள்ள மிருகங்கள் எனும் அடை மொழியால் வர்ணிக்கப்படுகின்றார்கள். 

Sunday, November 20, 2011

Domino - ஹாலிவூட் பட விமர்சனம்: கவர்ச்சிப் பதுமையின் மெய் சிலிர்க்கும் அதிரடி!

இளகிய மனமுடையோருக்கும், 18 வயதிற்கு குறைந்தோருக்கும் உகந்த படம் அல்ல!
ஒரு குழந்தையினைத் தன் அன்பால் பாராட்டிச் சீராட்டி வளர்ப்பதில் அன்னை எந்தளவு தூரம் முக்கியத்துவம் பெறுகின்றாளோ, அதே போன்று ஒரு குழந்தையின் முன்னேற்றத்திற்கும், அக் குழந்தையினைப் பின்னிருந்து வழி நடத்துவதிலும் தந்தையும் சிறப்புப் பெறுகின்றார்.அன்னை வளர்ப்பில் வளரும் குழந்தைகளிலும் பார்க்க தந்தையின் மேற் பார்வையிலும், கண்டிப்பிலும் வளரும் குழந்தைகள் தம் எதிர் கால வாழ்வில் நின்றும் விலகி வழி தவறிப் போவது குறைவு என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றார்கள். 

ஈழப் போராட்டத்தை வேகப்படுத்திய புலிக் குரல்!

ஈழத் தமிழர்களின் வாழ்வில் கார்த்திகை மாதம் பல வழிகளிலும் சிறப்பினைப் பெற்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது. விடுதலைக்காக தன் மூச்சை நிறுத்திய ஓர் உயிரின் இறப்பும், விடுதலை வேண்டிய தமிழர்களினை வேகப்படுத்திட ஓர் உயிரின் உயிர்ப்பும் இம் மாதத்தில் தான் அரங்கேறின. ஈழத்தில் முன்பொரு காலத்தில் இந்த இரு பெரும் வரலாற்று நிகழ்வுகளுக்கும் அப்பால் புலிகளின் குரல் வானொலி, தமிழீழ காவல் துறை முதலியவையும் இந்த கார்த்திகை மாதத்தில் தான் ஆரம்பித்து வைக்கப்பட்டன. தாயக மக்களின் உண்மைக் குரலாய்,  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் எண்ணக் குரலாய் புலிகளின் குரல் ஈழத்தின் வட கிழக்கெங்கும் தன் ஒலி வீச்சு எல்லையை விரிவுபடுத்தியிருந்தது.

Saturday, November 19, 2011

Not Lucky - விமர்சனம் - ஜோதிட நம்பிக்கைக்கு சொற்களால் சாட்டையடி!

மனித மனங்களின் ஆழ் மனத் தேடலைப் பொறுத்து அவரவர் மன நம்பிக்கைகள் வேறு பட்டுக் கொள்ளும். இறைவனைத் தேடி இன்று வரை சலித்துப் போனோரும், இறைவன் அல்லது எம்மை விட மேலான ஓர் சக்தி இவ் உலகினில் உள்ளது எனும் நம்பிக்கையில் வாழ்வோரும் எம்முள் உள்ளார்கள். மனித உணர்வுகளின் அடிப்படையில் ஆத்திகவாதி, நாத்திகவாதி என இரு வேறுப்பட்டோரை நாம் பிரித்து நோக்கினாலும்;எம்மை இயக்குகின்ற சக்தி அல்லது எம்மை விட மேலான ஒரு சக்தி இவ் உலகினில் உள்ளது என்பதனை யாராலும் மறுக்க முடியாது. 

Friday, November 18, 2011

நடிகையின் சதையை நம்பி நடுத் தெருவில் நிற்கும் தமிழ் சினிமா!

சினிமாவும், அரசியலும் தமிழ் மக்கள் வாழ்வோடு இன்றைய கால கட்டத்தில் இரண்டறக் கலந்து விட்டன. சினிமாவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் நட்சத்திரங்கள் தமக்குரிய ஆதரவு சினிமாவில் பல்கிப் பெருகியவுடன், தம்மைச் சூழ்ந்திருக்கும் ரசிகர்களின் பலம் தமக்கும் அரசியலில் காலூன்றப் பின்னணியாக இருக்கும் எனும் நம்பிக்கையுடன் களமிறங்கி தம் வசமுள்ள பணத்தையெல்லாம் வாரியிறைந்த்து மண் கவ்வுகின்றார்கள். மக்கள் திலகத்திற்குப் பின்னர் அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனும் ஆசையோடு களமிறங்கிய பல நட்சத்திரங்கள் இறுதியில் மண் கவ்விய வரலாற்றினைத் தான் நாம் அனைவரும் கண்டு வருகின்றோம். 

புலம்பெயர் தமிழர்களும் புலம்பிப் புளுகும் புண்ணாக்குகளும்!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே! எல்லோரும் நல்லா இருக்கிறீங்களா? இப் பதிவு ஒட்டு மொத்தப் புலம் பெயர் தமிழர்களுக்கும் எதிரான பதிவு அல்ல. ஆனால் புலம்பெயர் தமிழ் உறவுகளுள் இருக்கும் ஒரு சில புல்லுருவிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில் தான் இப் பதிவினை எழுதியிருக்கிறேன். உங்கள் நாற்று வலைப் பதிவில் ஏற்கனவே வெளியாகி பலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருந்த ஆலமரத்தடி அரட்டை எனும் பகுதியினை நீண்ட நாட்களாக காணவில்லையே என்று யோசித்திருப்பீங்க தானே. உங்கள் கவலைகளைப் போக்கும் வகையில் ஆலமரத்தடி அரட்டைப் பகுதியினைக் கொஞ்சம் பட்டை தீட்டிப் புதிய வடிவில் "விண்ணாணம் விநாசியாரும், வேடிக்கை விநோதங்களும்!" எனும் தலைப்பில் வழங்கவுள்ளேன். 

Thursday, November 17, 2011

ஈழப் போரியலில் இது வரை வெளி வராத மர்மங்கள்!

சத்தியன் தலமையில் இராணுவத்தினர் நெருப்பினையும்,ஏனைய போராளிகளையும் தேடி அழிக்கும் நோக்கில் ஒரு அதிரடி நடவடிக்கைக்குத் திட்டமிட்டார்கள். சத்தியன் தலமையிலான குழுவினர் புலிகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியினுள் பொது மக்கள் போன்று வேடமிட்டுச் சென்று தாக்குதல் நடத்தினால் தான் புலிகளை உயிரோடு பிடிக்க முடியும் என கனவு கண்டார்கள்.தாம் புலிகளினைத் தேடிச் செல்வதனை புலிகள் அறியாதவர்களாக பொது மக்களோடு உரையாடிக் கொண்டிருப்பார்கள். இப்படியொரு சந்தர்ப்பம் அமையும் போது தாக்குதல் நிகழ்த்த வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள் இராணுவத்தினர். மழைக் காலத்தில் ஓடுவதனைப் போன்று ஆட்டோவின் இரு பக்க யன்னல் பகுதிகளையும் தரப்பாள் / படங்கு கொண்டு மூடித் தம் தாக்குதலுக்குத் தயாராக ஆட்டோவினையும் ஒழுங்கு செய்தார்கள் இராணுவத்தினர். 

Wednesday, November 16, 2011

கணவனுக்கு தெரியாமல் பேஸ்புக்கில் கள்ளக் காதல் செய்யும் மனைவியர்!

ஆதாரங்களுடன் கூடிய அதிர்ச்சியூட்டும் விழிப்புணர்வுப் பதிவு:
வலைப் பதிவின் ஊடாக அறிமுகமான சக நண்பி ஒருவரின் பதிவுகளைச் சமீப காலமாக காண முடியவில்லையே எனும் ஆதங்கத்தில் அவருடைய முகப் புத்தகத்திற்கு ஒரு குறுந் தகவல் அனுப்பிப் பார்த்தேன். தான் இப்போது ப்ளாக் எழுதுவதனை நிறுத்தி விட்டு புதிதாக ஒரு சாட் ரூம் திறந்திருப்பதாக பதில் அனுப்பி, என்னையும் விரும்பினால் சாட் ரூமுக்கு வருமாறு அழைத்தார் அந்த நண்பி. அட இது என்ன சாட் ரூம் அதுவும், தமிழ் பெயரில் சாட் ரூம் என்று விழியினை உருட்டிக் கொண்டிருந்த எனக்கு அந்த நண்பியின் ஸ்கைப் (Skype) முகவரிக்கு அழைப்பினை மேற் கொண்டால் பல விடயங்களை அறிந்து கொள்ளலாம் எனும் ஆவல் மேலெழ அவரின் ஸ்கைப்பிற்கு அழைப்பினை மேற்கொண்டேன். 

பொண்டாட்டியை செல்லம் பொழிந்து திண்டாட வைப்பது எப்படி!

தாரமும் குருவும் தலை விதிப்படி எனும் எம் ஆன்றோரின் வாக்கிற்கமைவாக எம்மை விட மேலான சக்தி ஒன்றின் மூலம் தான் எம் ஒவ்வொருவரினதும் இல் வாழ்க்கைத் துணையின் தெரிவும் இடம் பெறுகின்றது. இரு மனம் சேர்ந்து ஒரு மனதாக தீர்மானம் மேற்கொண்டு இடம் பெறும் நல் வைபோகம் திருமணம் என்று நாம் கூறினாலும் இரு மனங்களும் இணைந்த ஏகமனதான தெரிவு இடம் பெற ஏதோ ஒரு காரணி ஏதுவாக அமைந்து கொள்கின்றது. எம்மை நம்பி வீட்டிற்கு இல்லாளாக காலடி எடுத்து வைக்கும் துணைவியரை நமது அன்பினால் அரவணைத்து அனுசரித்துச் செல்ல வேண்டிய தேவை ஆண்கள் அனைவருக்கும் உள்ள மிக முக்கியமான செயலாகும். இனி நாம் இப் பதிவினூடாக "திருமணமான ஆண்களுக்கும், திருமணம் ஆகப் போகும் ஆண்களுக்கும்"மிகவும் பயன்மிக்க சில விடயங்களை ஆராய்ந்து பார்ப்போமா?

Tuesday, November 15, 2011

பப்ளிக் வூ(பூ)த்தும் மிஸ்ட் கோல் பார்ட்டிகளும்!

தொலைபேசி என்பது இன்று எல்லோர் வாழ்வோடும் இணைந்து விட்ட ஒரு இன்றியமையாத தொடர்பாடல் சாதனமாகும். விலை வாசி உயர்வான ஊரில் வாழ்ந்தாலும் அலை பேசி இன்றி வாழ மாட்டோம் எனும் நிலைக்கமைவாக நம் மக்களில் பலரும் கையில் ஓர் தொலைபேசியுடன் செல்லுகின்றார்கள். சிலரோ கொஞ்சம் வித்தியாசமாக இரண்டு அல்லது மூன்று அலை பேசிகளை வைத்துப் பொது இடங்களில் தாம் ஏதோ ஹீரோ எனும் நினைப்பு வரப் பெற்றவர்களாக ஸ்டைல் காட்டுவார்கள். பட்டணத்தில் உள்ளோர் தொடக்கம், பாமர மக்கள் வரை இன்று அனைவரும் அலைபேசிப் பாவனையாளர்களாக மாறி விட்டார்கள். அலைபேசி பாவிப்போரில் ஒரு சிலருக்கு அலைபேசியினூடாக அழைப்புக்கள் வரா விட்டாலும் பிறருக்கு ஸ்டைல் காட்டுவதற்காகவும் அலைபேசியினை பாவிக்கின்றார்கள்.

The Pursuit Of Happyness: விமர்சனம் - கண்களில் நீர் சொரிய வைக்கும் கண்ணீர் காவியம்!

கண்டிப்பாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்: இளமையில் கொடுமை வறுமை என்று ஔவையார் சொல்லிய வரிகளுக்கான அர்த்தத்தினை எம் வாழ் நாளில் நாம் ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் கடந்து வந்திருப்போம். ஒரு இளைஞனின் வாழ்வில் வறுமை வந்தால் தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்து தள்ளாடும் தன் வாழ்வினைத் தூக்கி நிறுத்திட அவன் முயற்சி செய்வான். ஆனால் ஒரு குடும்பஸ்தனின் வாழ்வில் வறுமை ஏற்பட்டால் அவனது நிலமை என்னாகும்? உலகில் இடம் பெற்ற யுத்தங்களில் பெரும்பாலான யுத்தங்கள் பசிக் கொடுமையினாலும், ஆற்றாத வறுமைப் பிணியினாலும் இடம் பெற்றிருக்கின்றன. ஏன் இன்றும் ஆபிரிக்க கண்டத்தில் கொடிய வறுமையின் காரணத்தினால் பல துயரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

Sunday, November 13, 2011

Killer Elite - விமர்சனம் - உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கிய அதிரடி ஆக்‌ஷன்!

அதிகார வர்க்கத்தின் ஆயுதக் கரங்களின் பிடிக்குள் அகப்பட்டால் பல நிஜமான நிகழ்வுகளும் வெளித் தெரியாத மர்மங்களாகப் புதைந்து போய் விடும். பிரித்தானிய வரலாற்றில் பெரும் பரபரப்பினயையும், பிரித்தானியாவின் தரை மற்றும் விமானப் படையினருக்கு உலகளவில் அவமரியாதையினையும் ஏற்படுத்திய; எழுத்தாளர் Ranulph Fiennes அவர்களது The Feather Men எனும் நாவலினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் Killer Elite. 1971ம் ஆண்டு இடம் பெற்ற ஓமான் - துபாய் யுத்தத்தின் பின்னர், இரு நாடுகளும் பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழிருந்து சுதந்திரம் பெற்ற அதே வருடத்தில் ஓமான் நாட்டு மன்னரின் பணிப்பின் பேரில் நான்கு லண்டன் இராணுவத்தினரால் துபாய் ஷேக் ஷாக்புத் பின் சுல்தான் அவர்களின் மூன்று புத்திரன்களைக் கொல்வதற்கு பிரித்தானிய இராணுவத்தினர் திட்டம் தீட்டுகின்றார்கள்.

Saturday, November 12, 2011

ஈழப் போரியல் வரலாற்றில் வெளி வராத மர்மங்கள்!

வவுனியாவில் உள்ள கருணா குழுவினரின் முகாம்களைத் தாக்கியளிக்க வேண்டும் அல்லது கருணா குழு முகாம்கள் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தவன் தான் டக்ளஸ்! இப்போது போராளி டக்ளசும், போராளி நெருப்பும் ஒன்றாகச் சேர்ந்து விட்டார்கள். தம் தாக்குதல்களுக்கான திட்டங்களை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். நெருப்பு வவுனியாவிற்குள் நுழைந்து மூன்று நாட்களாக முன்னரே ஏனைய போராளிகளின் உதவியோடு பட்டாணிச்சூர் பகுதிகுச் சென்று கருணா குழுவு முகாம் காவலரன் மீது கைக் குண்டுத் தாக்குதல் (கிரேனட்) நடாத்தி விட்டு பாதுகாப்பாகத் தளம் திரும்பினான். ஏற்கனவே சமாதான காலத்தில் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரின் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியிருந்த இராணுவம்,தற்போது புலிகளில் இருந்து மக்களைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகளை முழு மூச்சில் மேற் கொள்ளத் தொடங்கியது.

Friday, November 11, 2011

ஆசை கூட்டுகிறது இன்பத் தேடல்! ஆளை கொல்கிறது அவளின் காதல்!

முறிகண்டிப் பிள்ளையார் கோயில் முன்றலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்புகையில் தேகம் கடந்து செல்லும் பூவின் நறு மணம் கலந்த காற்றைச் சுவாசித்து திரும்பிப் பார்த்தேன். அது அவள் தான், அவளே தான்!
புலன் ஐந்திலும் அந்தக் கணத்திலே உறைந்து விட்டதாய் ஒரு நினைப்பு!
பூமியில் அவள் எனைத் தன் மடி மீது வைத்து தாலாட்டா மாட்டாளா என்று கேட்கிறது என் மன உணர்வு!
மேகங்கள் கீழிறங்கி என் மார்பில் பூமாரி பொழிவது போன்ற மகிழ்ச்சியில் அவளைப் பார்த்தேன். அவள் பின்னேயிருந்து/ பின்னிருந்து ஒரு சிறு குழந்தை வந்து அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டது (அழைத்தது) மட்டும் காதில் கேட்டது. "பிரியம்வதனா அக்கா! என்ன செய்யுறீங்க! நேரமாகுது, வீட்ட போக வேணுமில்லே!"

ஈழத்தில் அவசரப்பட்டுத் தவறிழைத்த புலிகளும் அதிரடி நடவடிக்கை தொடங்கிய இராணுவமும்!

புலிகளின் உள்ளிருந்து தாக்கும் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாது திண்டாடிக் கொண்டிருந்த இராணுவம் தனக்கு கிடைத்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி வன்னி மீதான படையெடுப்பிற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளத் தொடங்கியது. இதே வேளையில் புலிகளின் உள்ளிருந்து தாக்கும் அல்லது புலிகள் வவுனியா நகரின் உள்ளே மக்களோடு மக்களாக இருந்து தாக்கும் தாக்குதல்களின் வீரியத் திறனினை உணர்ந்த இராணுவம் ஏற்கனவே திட்டமிட்ட படி வழமைக்கு மாறாகப் புதிய தாக்குதல் நுட்பத்தினை நான்காம் கட்ட ஈழப் போரில் கையாளத் தொடங்கியது. அது தான் புலிகளின் குகைக்குள் சென்று பொது மக்கள் போன்று வேடமிட்டு தாக்குதல் நடாத்துவது. இந்தத் தாக்குதல் அணியினரை ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினர் என்றும் இவர்களின் தாக்குதல்களை ஆழ ஊடுருவித் தாக்குதல் என்றும் பெயர் சொல்லி அழைப்பார்கள். 

Thursday, November 10, 2011

கலைஞரையும் ஜெயலலிதாவையும் ஓரங் கட்டுவது எப்படி!

அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்: திமுக - அதிமுக கட்சிகளின் தனி நபர் விசுவாசம் என்கின்ற உள்ளுணர்வோடு இப் பதிவினைப் படிக்க நினைப்பவர்களுக்குப் பொருத்தமான பதிவு இது அல்ல! தயவு செய்து உங்கள் விசுவாசங்களைக் கொஞ்ச நேரம் தூரத் தள்ளி வைத்து விட்டு; மனச்சாட்சிக்கு நேர்மையான முறையில் இப் பதிவினை நீங்கள் உற்று நோக்கினால் நன்றாக இருக்கும் அல்லவா! தயவு செய்து அனைவரும் பதிவினை முழுமையாகப் படித்து விட்டுக் கருத்தினைப் பகிருங்கள். உங்கள் வருகைப் பதிவிற்காக இப் பதிவில் கருத்துரைகளைப் பகிர்ந்து மொய்க்கு மொய் தேட முயற்சிக்க வேண்டாம்! இது என் அன்பான வேண்டுகோள்! மன்னிக்கவும்!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய தாய்த் தமிழக உறவுகளே! 
ஈழத்தின் தெருக் கோடியில் கிடக்கும் இவனுக்கு உங்கள் தாய்த் தமிழகம் மீது ஏன் இந்த அக்கறை! "இந்தப் பதிவை அழித்து விட்டு பொத்திட்டுப் போடா நிரூபன்" என்று நீங்கள் என் மீது கோபப்படலாம்! இலங்கையின் ஊடகச் சுதந்திரம் பற்றி நீங்கள் யாவரும் அறியாததல்ல! இலங்கையில் "ஆச்சி மாற்றம் வேண்டும்" என்று எங்கள் கொள்ளுப் பாட்டியைப் பார்த்து நாங்கள் கேட்கும் போது அருகே ஒரு சீருடை தரித்த கொஞ்சம் தமிழ் பேசத் தெரிந்த இராணுவ வீரன் நின்றால், "ஆட்சி மாற்றம் வேண்டும்" என நாங்கள் கூறியதாக நினைத்து எங்கள் கதையினையே முடித்து விடுவார்கள். இது பற்றி நீங்கள் அறியாதல்ல. உங்கள் ஆத்திரங்கள், கட்சி விசுவாசங்கள், பொங்கியெழும் உணர்ச்சியலைகள் என அனைத்தையும் கொஞ்சம் தூரத் தள்ளி வைத்து விட்டு இனிப் பதிவிற்குள் நுழைவோமா? 
ஐயா ஆட்சியில் இருக்கும் போது செய்யும் மரண மொக்கைகளை அம்மா டீவிக்குள்ளால் பார்த்து சிரிப்பார்! அம்மா ஆட்சியில் இருக்கும் போது பண்ணும் காமெடிகளை ஐயா பார்த்து சிரிப்பார்!

Last Night - விமர்சனம் - கணவனா / காதலானா தேவை என குழம்பும் பெண்ணின் நிலை!

மனித மனம் விசித்திரமானது என்று கூறுவார்கள். யார் மனதுள் எத்தகைய விடயங்கள் பொதிந்திருக்கின்றன என்றோ,அல்லது மனதில் எப்போது மாற்றங்கள் வந்து கொள்ளப் போகின்றது என்றோ இலகுவில் அறிய முடியாதளவிற்கு ஆழமானது தான் மனம் என்று அறிஞர்களும் ஆன்றோர்களும் சொல்லியிருக்கிறார்கள். எம் உணர்வுகளைப் பொறுத்து மனங்களில் இயல்புகள் மாறுபடுமா? அல்லது எம் மனத்தினைப் பொறுத்து உணர்வுகளின் இயல்பு மாறுபடுமா என்று எண்ணினால் எம் மனங்கள் தான் சில வேளைகளில் உணர்வுகளைத் தீர்மானிக்கின்றன எனும் நிலையினையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.ஒரு மனதிற்குள் பொதிந்திருக்கும் விடயத்தினை வெளியே கொட்டித் தீர்த்து விட்டால் மனப் பாரம் குறைந்து விடும் என்பார்கள்.

Wednesday, November 9, 2011

ஈழத்தின் இறுதிப் போருக்கான நகர்வுகளும் துலங்கும் மர்மங்களும்!

தமிழர்களை அழிப்பதற்கு உலக நாடுகள் உதவினாலும், தமிழர்களிடமிருந்து பணத்தினைப் பெருமளவில் பெற்று அதனை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் தேவைகளுக்காகவும்;தமிழருக்கு எதிரானோருக்கும் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என நினைத்தார்கள் இராணுவத்தினர்.இதன் பிரகாரம் மட்டக்களப்பில் இருந்த கருணா குழுவினரின் செயற்பாடுகளை வவுனியா நோக்கி விரிவுபடுத்தினார்கள் இராணுவத்தினர். (Please Notify, I'm Clarifying those sentences Very Clearly. This is not my opinion Or Not my quotation.) இனி நான்காவது பாகத்தின் தொடர்ச்சியாக உங்கள் நாற்று வலைப் பதிவில்! இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள்! 
ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு!
பாகம் 05: 

வில்லங்கத்தை தூண்டும் விபரீதமான கு(சு)றும்புகள்!

ள்ளக் காதலும் கணவன் கையில் ஆதாரமும்!
பெண்டிலை(க்) கேட்டாராம் பெருசு
பெறு மாதம் எப்போதென்று?
அண்டை வீட்டு அழகனிடம்
அன்பாக கேட்ட பின்
மண்டே சொல்லுகிறேன் என
மனதுக்குள் யோசித்தாள் தேவி;
இன்றைய காலத்தில் நடக்கும்
இடக்குமுடக்கான வேலையிது
என்றே சொல்லி எனை
ஏமாளியாய் அனுப்பினாள்- பாவி
நன்றாய் இது இல்லையென
நான் பொங்கினால் ஆணாதிக்கமாம்!
மன்றம் போட்டு மைக்செட் பூட்டி
மங்கையர் முழங்கும் காலத்தில்
"கன்றாவி லைப்" இதுவென
கணவன்மார் புலம்பினால் வாழ்வும்
திண்டாடி கோர்ட்டேறி
தீராத தொல்லையோ; டிவோசில் முடியுமாம்!

Tuesday, November 8, 2011

ஐயோ! என்னைப் பார்க்க எனக்கே அசிங்கமா இருக்கு!

உவர் நீர் கலந்த குளிர் காற்று
சில்லென்று வீசி என் மேனி தடவ
அவளை அணைத்திருந்த 
என் வலது கையை(க்) 
கொஞ்சம் மேலால் எடுத்து
அவள் செவ்வாய் திருப்பி 
செல்லமே என்று சொன்னேன்!

என்னை ஏற இறங்கப் பார்த்தாள்;
குளோசப்பில் வைத்து
1000 வாட்ஸ் பவர் லைட் பூட்டி
வெளிச்சம் பாய்ச்சாது;
என் முகத்தை உற்றுப் பார்த்த
அவள் முகத்தின் பிரகாசத்தினால்
நானும் கொஞ்சம்
பிரகாசம் பெற்றுத் தோற்றமளித்தேன்!

பிரதேச வாதத்தை தூண்டுகிறதா யாழ்ப்பாணம் குறும்படம்!

மரணங்கள் மலிந்த பூமியில் மகிழ்ச்சிக்கான கதவுகள் போர் தின்ற வாழ்விற்குப் பின்னரும் திறக்கவில்லை என்றே கூறலாம். தமிழனின் எழுச்சியின் போது இருந்த ஒற்றுமை இறுதி வரை தமிழனின் இரத்தத்தோடு ஊறியிருந்தால் தமிழர் தம் வாழ்வானது எப்போதோ ஒரு காலத்தில் செழிப்படைந்திருக்கும். வளமான வாழ்விற்காக போராடிய தமிழர்களை அவர்களின் போராட்ட நோக்கத்திலிருந்து திசை திருப்ப வேண்டும் எனும் காரணத்திற்காக கட்டவிழ்த்து விடப்பட்ட நச்சுப் பாம்பு தான் இப் பிரதேசவாதமாகும்.

Monday, November 7, 2011

வன்னி போரை திசை திருப்ப புலிகள் கையாண்ட வியூகங்கள்!

இந் நேரத்தில் இராணுவம் புலிகளை வலை வீசித் தேடும் முயற்சியில் களைத்துப் போயிருக்கும் போது, "தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி" எனும் வாக்கிற்கமைவாக சத்திய வரதன் எனப்படும் தமிழ்ப் புலனாய்வாளார் தன் பணியினைத் தீவிரமாக்கினார். இனி மூன்றாவது பாகத்தின் தொடர்ச்சியாக... இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள்.
ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு! 
பாகம் 04: 
யார் இந்த சத்தியவரதன்: இலங்கையின் வடக்கில் வன்னிப் பகுதியில் உள்ள மல்லாவிப் பகுதியினைச் சேர்ந்த ஊமக் கந்தையர் எனும் பெயரால் அழைக்கப்படும் கந்தசாமியின் மகன் தான் சத்தியவரதன். 1990ம் ஆண்டு வரை புளொட் அமைப்பில் சேர்ந்திருந்த சத்திய வரதன். (நிஜப் பெயர்) இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்த மாற்று இயக்கங்களைப் புலிகள் மன்னிப்புக் கொடுத்து வாழ விடுகின்றோம் என்று ஆசை காட்டி அழைத்த காலப் பகுதியில்; ரெலோ இயக்க அமைப்பினர் பலர் உயிரோடு பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்ட போது, தனக்கும் இதே நிலமை வரும் என உணர்ந்து புலிகளால் தனக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்பதனை அறிந்து இராணுவத்தோடு சேர்ந்து புலிகளையும், புலிகளுக்கு ஆதரவானோரையும் தேடி அளிக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்ட நபர் தான் இவர்.

Sunday, November 6, 2011

கருணையின்றி கலங்கும் கனிமொழி! கதிரையின்றி கவலையுறும் கலைஞர்! புத்தியின்றி தடுமாறும் ஜெ!

ருணையின்றி கலங்கும் கனிமொழி!
நிரூபனின் நாற்று வலை
ஆப்பர் கொடுத்தேன்
முதலில் வருவோருக்கு
முன்னுரிமை அடிப்படையில்
முற்பணக் கேள்வியின்றி
அலைக் கற்றையினை 
அரை விலையில் கொடுத்தேன் - அப்பன் 
கருநாய் நிதியின் அதட்டற்
சொல் கேளாது
ஏல அடிப்படையில்
எல்லோருக்கும் பங்குகளை கொடுத்திருந்தால்
இன்று எனக்கிந்த நிலை வருமா?
தப்புச் செய்தவன் தண்ணி குடிக்கனுமாம்
யாரோ ஒரு ஆன்றோன் தமிழில்
எழுதி வைத்து விட்டு போய் விட்டான்,
அப்பன் சொற் கேட்டு ஆட்டையை போட நினைத்து
வெப்பம் மிகுந்த திஹாரில் வெதுமி வாடுறேன் நான்!
ஜாமீன் கேட்டும் நிராகரித்த பின்னர்
கருணை கிடைக்காதா என ஏங்குகிறேன் ஏன்?

Saturday, November 5, 2011

வன்னி முற்றுகையை திசை திருப்ப புலிகள் மேற் கொண்ட அதிரடி நடவடிக்கைகள்!

இந்தப் பதிவில் இடம் பெறப் போகும் சம்பவங்களின் அடிப்படையில் தற்போது சிறையில் உள்ள போராளிகள்; மற்றும் இச் சம்வத்தோடு தொடர்புடைய பொது மக்களின் பெயர்கள் யாவும் மாற்றப்படுகின்றது. இப் பதிவில் இடம் பெறும் கதாபாத்திரங்களில் ஒரு சிலரின் பெயரினை மாத்திரம் நீங்கள் நிஜப் பெயர்களூடாக அல்லது சிறப்புப் பெயரினூடாகத் தரிசிக்கலாம். ஏனையோரின் பெயர்களை இங்கே மாற்றியிருக்கிறேன்.

ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு! 
பாகம் 03:
இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள்.
 இனி இரண்டாவது பாகத்தின் தொடர்ச்சியாக............
வவுனியா, மற்றும் மன்னார்ப் பகுதியில் உள்ள இராணுவத்தினர் வன்னி மீதான முற்றுகை பற்றிச் சிந்திக்கா வண்ணம் குழம்ப வேண்டும்; அச்சத்தில் உறைய வேண்டும் என முடிவு செய்த புலிகள் தமது தாக்குதற் பிரிவில் உள்ள சிறப்புப் போராளிகளை அழைத்து உளவுப் பிரிவு அல்லது வேவுப் பிரிவோடு ஒருங்கிணைத்து வன்னியில் 2006ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் இறுதி நாட்களில் ஒரு திட்டத்தினைத் தீட்டத் தொடங்கினார்கள். அந்தத் திட்டம் தான் வவுனியாவில் உள்ள இராணுவத்தினரின் உறக்கத்தினைச் சீர்குலைக்கும் திட்டமாகும். 

Water For Elephants - ஹாலிவூட் பட விமர்சனம் - மணமான பெண் மீதான டீன் ஏஜ் பையனின் காதல்!

தும்மலையும், காதலையும் நெருப்பு புகையினையும் இலகுவில் மறைக்க முடியாது என்று கூறுவார்கள். காதல் உணர்வின் அடிப்படையிலும், ஒரு மனிதனது உடல் இச்சையின் அடிப்படையிலும் எங்கு வேண்டுமானலும் எப்போது வேண்டுமானலும் பிறந்து கொள்ளும். இளங் கன்னியர் மீதும், மணமான பெண்கள் மீதும் வாலிப வயசுப் பையன்களுக்கு அவர்களின் மன உணர்வின் அடிப்படையில் காதல் பிறந்து கொள்ளும். இந்த வகையான காம உணர்வோடு கூடிய பொருந்தாக் காதல்கள் கை கூடுவதென்பது அரிதிலும் அரிது. ஆனால் மனதளவில் சுகம் காண நினைக்கும் ஆடவனுக்கு அவனது மன உணர்வினைப் பூர்த்தி செய்யும் வகையில் பிறக்கும் காதலானது சில வேளை கசப்பான உணர்வுகளையும் தோற்றுவிக்கக் கூடும் அல்லவா?

Friday, November 4, 2011

நான்காம் ஈழப் போரை திசை திருப்ப புலிகள் கையாண்ட தந்திரோபாயங்கள்!

ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு!
பாகம் 02....
யாழ் குடா நாட்டிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 24 மணி நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியது இலங்கை அரசு. இராணுவம் புலிகள் அமைப்பினருக்குத் தண்ணி காட்டும் நோக்கோடு கிழக்கு மாகாணத்தில் புதிய கள முனையினை வாகரையினை அண்டிய பகுதியிலும், சம்பூரிலும் திறந்தது. மக்களைப் பற்றிய கவலையேதுமின்றி புலிகளைப் பூண்டோடு அழித்தால் போதும் என்ற நோக்கோடு கிழக்கு மாகாணத்தில் இராணுவம் தன் தாக்குதல் நடவடிக்கையினைத் தொடங்கியது. இதே வேளை புலிகளுக்கு இருந்த மக்கள் ஆதரவினைச் சீர் குலைக்கும் நோக்கோடு வன்னிப் பகுதியில் வாழ்ந்த மக்களிற்குப் புலிகள் மீது வெறுப்பினை உருவாக்கும் நோக்கில் கண் மூடித்தனமான விமானக் குண்டு வீச்சினை இலங்கை இராணுவம் ஆரம்பிக்கின்றது.

வன்னிப் போரை திசை திருப்ப புலிகள் கையாண்ட தந்திரோபாயங்கள்!

ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு!
பாகம் 01:
2005ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்க வேண்டும் எனும் தீவிர குறிக்கோளோடு செயற்பட்ட புலிகள் அமைப்பினர் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாக்குரிமையினைப் புறக்கணிக்கச் செய்து அச் செயற்பாட்டில் வெற்றி பெற்றுக் கொள்கின்றார்கள். 2002ம் ஆண்டில் இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையே கைச்சாத்தான சமாதான ஒப்பந்தத்தின் வாயிலாக; "தமிழர் தரப்பு ஏமாந்தது போதும்! இனிமேல் பலன் ஏதும் இல்லை!" எனும் நிலையினை உணர்ந்த புலிகளின் தலமைப்பீடம் சர்வதேச நாடுகள் முன்னே தான் நல்ல பிள்ளை எனும் பெயரினைத் தக்க வைக்கும் நோக்கில் அரசாங்கத்தின் ஊடாக சமாதான ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து போரினை ஆரம்பிக்க வேண்டும் எனும் செயற்பாட்டில் தனது கவனத்தினைச் செலுத்தத் தொடங்குகின்றது.

Thursday, November 3, 2011

ஈழத்தில் ஆழம் அறிய முடியாத காலப் பெரு வேர்கள்!

இப்போது கார்த்திகை மாதம்!
கரு மேகம் சூழ்ந்து இடி இறக்கி
எம் கண்ணீரில் வறண்டு போன
தேசத்திற்கு மழை பொழிந்து
காலப் பெரு வெளியில்
தமிழர் தம் வாழ்விற்காய் 
கல்லறையுள் துயில் கொள்ளும்
ஞாலத்தில் வாழும் தெய்வங்களினை
நினைவு கூர்ந்து 
குளிர்விக்கும் நன் நாள் இது!

THE OPPOSITE - விமர்சனம் - ஓரினச் சேர்க்கையும் தமிழ் சமூகமும்!

சங்க இலக்கியங்கள் காதலையும், காமத்தினையும் கைக்கிளை, பெருந்திணை எனும் இரு வேறு பிரிவுகளினூடாகப் பிரித்து நிற்கின்றன. ஆனால் இன்றைய மாறி வரும் நாகரிகச் சூழலுக்கு அமைவாகவும், மனித உணர்வுகளை மதிக்கப் பழக வேண்டும் எனும் நல் எண்ணத்தின் வெளிப்பாட்டிற்கமைவாகவும் ஓரினச் சேர்க்கையினையும் தமிழ் இலக்கியப் பகுப்பினுள் உள்ளடக்கி அங்கீகரிக்க வேண்டிய நிலைக்கு எம் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டிருக்கின்றது. கைக்கிளை என்பது ஒரு தலைக் காதலாகவோ அல்லது ஒருவர் தனது மனதுக்குப் பிடித்தவரைப் பற்றி மனதால் விரும்பி வாழுதலை குறித்து நிற்கிறது. பெருந்திணை என்பது பொருந்தாத காதல் மற்றும் காமத்தினைப் பற்றிப் பேசி நிற்கிறது. 

Wednesday, November 2, 2011

விஜயிற்காய் தீக்குளிக்க தயாரான பதிவர் - வேலாயுத வெறி!

பதிவின் நோக்கம்: இச் சம்பவத்தோடு தொடர்புடைய பதிவரை அவதூறு செய்வதோ அல்லது தனி மனிதத் தாக்குதல் நிகழ்த்துவதோ அல்ல. 
விஜய் ரசிகர்கள் பதிவினைப் படித்த பின் உங்கள் கருத்துக்களை முன் வைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். சே! கேவலமா இருக்கு! எம் தமிழ்ச் சமூகத்தின் தீவிர வெறியினை நினைத்தால்!

ஒரு மனிதனது தனி மனித ஆசாபாசங்களுக்குள் தலையிட வேண்டிய கட்டாயத்தில் இப் பதிவினை எழுதவில்லை. ஒவ்வோர் மனிதர்களுக்கும் ஒவ்வோர் விதமான உணர்வுகள் இருக்கும். ஒவ்வோர் மனிதனின் ரசனைகளும் அவனது உள் மன உணர்வுகளைப் பொறுத்து வேறுபட்டுக் கொள்ளும். நடிகர்கள் மீதான ரசனையும் ஒரு அளவோடு இருந்தால் சமூகத்தில் உள்ள ஏனைய மக்களுக்கு வெறுப்பினை வரவைக்காது என்பது யதார்த்தம். எந்த ஒரு விடயமும் அளவுக்கு மீறி தீவிர வெறித்தனத்தோடு நோக்கப்படுகையில் தான் அவை விபரீதமான முடிவினைத் தருகின்றது.

வண்டலூர் பையனை ஏமாற்றிய லண்டன் தமில் பெண்!

காலையில் கன்னியை(க்) கண்டான்; அவள் மேல்
காதலை(க்) காளையும் கொண்டான் 
வேளைகள் நெருங்குமென்றிருந்தான்; தினமும் தன்
வேட்கையை தீர்த்திட முயன்றான் 
ஓலையில் எழுதியே கொடுத்தான்; அவள் அதை
ஒருமுறை(க்) கிருதரம் படித்தாள்
வேலையை வெட்கத்தை இழந்தான்; இப்போ அவள்
வெளிநாடென்றுமே பறந்தாள்!

Tuesday, November 1, 2011

அம்மா நான் போராடப் போறேன்!

அம்மா நான் இயக்கத்துக்குப் போறேன்/ போகிறேன்!
ஞாபகச் சிதறல்களாய் எம் குருதி தோய்ந்த மண்ணில் இற்றை வரை எஞ்சியிருக்கும் ஒவ்வோர் சம்பவங்களும் பல வரலாற்றுக் கதைகளை எம் கண் முன்னே கொண்டு வரும் சக்தி வாய்ந்தவையாக விளங்குகின்றன. முன்னொரு காலத்தில் அழகு நிறை பூமியாக, பூத்துக் குலுங்கும் வளம் நிறைந்த சோலையாக இருந்த எங்கள் ஈழ வளத் திருநாட்டின் தமிழர் தாயகப் பகுதியினை யுத்த அரக்கன் சூழ்ந்த வேளையில் பிரபல்யமாக இருந்த ஒரு விடயம் தான் இந்தப் இயக்கத்துக்குப் போறேன் எனும் விடயமாகும். இயக்கம் எனப் பொதுவாக ஈழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரைத் தான் அழைப்பார்கள். இயக்கம் என்றால் ஒரு போராட்டக் குழு,அமைப்பு எனவும் பொருள் கொள்வார்கள்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க