Friday, November 18, 2011

புலம்பெயர் தமிழர்களும் புலம்பிப் புளுகும் புண்ணாக்குகளும்!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே! எல்லோரும் நல்லா இருக்கிறீங்களா? இப் பதிவு ஒட்டு மொத்தப் புலம் பெயர் தமிழர்களுக்கும் எதிரான பதிவு அல்ல. ஆனால் புலம்பெயர் தமிழ் உறவுகளுள் இருக்கும் ஒரு சில புல்லுருவிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில் தான் இப் பதிவினை எழுதியிருக்கிறேன். உங்கள் நாற்று வலைப் பதிவில் ஏற்கனவே வெளியாகி பலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருந்த ஆலமரத்தடி அரட்டை எனும் பகுதியினை நீண்ட நாட்களாக காணவில்லையே என்று யோசித்திருப்பீங்க தானே. உங்கள் கவலைகளைப் போக்கும் வகையில் ஆலமரத்தடி அரட்டைப் பகுதியினைக் கொஞ்சம் பட்டை தீட்டிப் புதிய வடிவில் "விண்ணாணம் விநாசியாரும், வேடிக்கை விநோதங்களும்!" எனும் தலைப்பில் வழங்கவுள்ளேன். 
விண்ணாணம் விநாசியாரும்! வேடிக்கை விநோதங்களும்!
யார் இந்த விண்ணாணம் விநாசியார் என்று உங்களில் பலருக்கு ஐயமிருக்கலாம். எம் ஈழத்தில் 2002ம் ஆண்டிற்கு முன்பதாக செய்தித் தாள்களில் வந்த நையாண்டிக் கார்ட்டூன் பாத்திரங்களில் மிகவும் பிரபலமானவர்கள் முச்சந்தி முரளியும், இந்த விண்ணாணம் விநாசியாரும் தான். பத்திரிகையின் முகப்புப் பக்கத்தில் சிறியதோர் கேலிச் சித்திரமூடாக எம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் வகையில் தம் சேவையினைப் புரிந்தவர்கள் தான் இந்த விண்ணாணம் விநாசியார் மற்றும் முச்சந்தி முரளி ஆகிய பாத்திரங்களாகும். இப்போது உங்கள் நாற்று வலையினூடாக சம கால விடயங்களைப் பற்றிய அலசலோடு விண்ணாணம் விநாசியாரும் களமிறங்குகின்றார்.

நீண்ட நாட்களின் பின்னர் தம் விடுமுறையினை முடித்த விண்வெளி மனிதர்கள் போன்று விநாசியாரும், மணியண்ணையும், நிரூபனும் தேரடி அரட்டைப் பகுதிக்கு வருகின்றார்கள். அரட்டைப் பகுதியில் ஒரு உருவம் டெனிம் ஜீன்ஸ் போட்டு, காதில் நீண்ட தூக்கணம் தோடணிந்து, கையில் ஒரு ஐபோட்டில் பாடல் கேட்டவாறு 70 வயதிலும் இருபது வயது போன்ற தோற்றத்தோடு நிற்பதைக் கண்டவாறு ஆச்சரியப்பட்டார்கள் நிரூபனும், விநாசியரும், மணியண்ணையும். இம் மூவருக்கும் புற முதுகைக் காட்டிக் கொண்டு நின்றவரை இவர் இளையபிள்ளை ஆச்சிதான் என்று அடையாளங் காண முடியாதவர்களாய்;

மணியண்ணை: ஏலேய் தம்பி நிரூபா! கொஞ்சம் முன்னாடி பார்க்கிறது! சூப்பர் பிகருல்லே! எனக்கு ஏத்த மாதிரி நிக்குது மச்சான்
நிரூபன்: என்னது மச்சானே! அடிங்! படவா! ஏன் அண்ணே! கலியாணம் கட்டிப் புள்ள பெத்து புள்ளைங்களுக்கும் கலியாணம் கட்டுற வயசில இருக்கிற நீங்கள் என்னையைப் பார்த்து மச்சான் என்று சொல்லுறீங்க! ஒரு பிகரைக் கண்டாலே போதுமே!
விநாசியர்: தம்பி நிரூ! மணியண்ணைக்கு இருக்கிற ஆசையைப் பாரேன்! என்னைப் பொறுத்தவரை இது பிகராகவே இருக்க சான்ஸ் இல்லை! ஒரு படத்தில நடிகர் விவேக் சொல்ற மாதிரி தோற்றத்தில தான் இது உலக அழகி! உடுப்பும் மேக்கப்பும் இல்லேன்னா! இது உள்ளூர் கிழவி! 

இவ்வாறு சொல்லியவாறு மூவரும் காதில் ஐபோட் மூலமாக பாடல் கேட்டுக் கொண்டிருந்த இளையபிள்ளை ஆச்சிக்குப் பக்கமாப் போய் நிற்கையில்;

இளைய பிள்ளை: கன்றாவி! கறுமம்! நாதாரிப் பசங்களா! என்ன பேச்சுப் பேசுறீங்க! ஒரு கிழவி கொஞ்சம் ஸ்டைலான ஹெட்டப்பில நின்றால் போதுமே! என்ன? காதில ஹெட்போன் மாட்டிக்கிட்டு நின்னா எனக்கு கேட்காதென்று நினைப்போ? உங்களை எல்லாம் இழுத்து வைச்சு..................
நிரூபன்: ஆச்சி நான் சின்னப் பையன் தானே! அதால தான் ஐ போட்டில பாட்டுக் கேட்டுக் கொண்டு நின்றது நீங்களாகவும் இருக்கும் என்ற காரணத்தினால் கம்முன்னு இருந்திட்டேன்.
இளையபிள்ளை: சாகிற வயசில இருக்கிற மணியத்தாருக்கும், விநாசியாருக்கும் பிகர் கேட்குதாம்!என்ன காதில ஹெட்போன் மாட்டியிருந்தாலும் காற்றில வர்ற பேச்சு கேட்காமலா போகும்? அடிங் கொய்யாலா! என்ன பேச்சுப் பேசுறீங்க?

மணியண்ணை: இளையபிள்ளை! கேக்கிறேன்னு கோவிச்சுக்காத! என் மேல சத்தியமா நீ உண்மையைச் சொல்லு! உந்த எடுப்பான ட்ரெஸ்ஸை உனக்கு யார் வாங்கித் தந்தது? உண்மையில நீ அந்தக் காலத்தில பத்மினி சிவாஜியின் படத்தில நடிக்கும் போது என்னைப் பார்த்து "நலந்தானா நலந்தானா! உடலும் உள்ளமும் நலந்தானா?" என்று கேட்டுப் பாடுறது மாதிரி நீயும் டீவிக்குள்ளே நின்று என்னைப் பார்த்துப் பாடுவது போல இருக்கே; இளையபிள்ளை!
விநாசியார்: கிழிஞ்சுது போங்க! உலகத்தில இல்லாத காதல் இந்த மணியத்தாருக்கு வந்திட்டு. அதுவும் பேரப் பிள்ளைங்களைக் கண்டு சாகிற வயசில இருக்கிற கிழவி மேல காதலாம்! 
மணியண்ணை: சும்மா ஒரு பேச்சுக்கும் சொல்ல விடமாட்டாய் போல இருக்கே! கிழவி இந்த எழுபதிலும் 20 மாதிரித் தோற்றத்தில இருப்பதால சொன்னேன்!அதுக்கேன் இம்புட்டுக் கோவிக்கிறீங்க. இந்த நக்கல் நையாண்டிப் பேச்செல்லாம் இருக்கட்டும், உந்த ட்ரெஸ்ஸை எங்க சுட்டனி கிழவி?
இளையபிள்ளை: எங்கேயும் சுடவில்லை. என்னோட பேரப் புள்ளைங்க பாரினிலிருந்து கொண்டு வந்து தந்திருக்காங்க! இது மாதிரி இன்னும் டூ பீஸ் உடைகளும் தந்திருக்கிறாங்க. அதையெல்லாம் நான் போட்டுக் கொண்டு வந்தேன்! அப்புறம் தாங்க மாட்டீங்க! கொஞ்ச நாளைக்கு இந்த தேரடியில் உள்ள ஆம்பிளைங்க எல்லாம் தூங்க மாட்டீங்க. 

விநாசியார்: என்ன பேரப் பிள்ளைங்க தந்திருக்கிறாங்களோ! அப்பவே நெனைச்சேன்! உருப்படாத ஆளுங்க யாராச்சும் தான் இப்படித் தந்திருப்பாங்க என்று! வெளி கோடை காலத்திற்குப் போட்ட கழிவு ட்ரெஸ்களா இருக்கும் என்று நினைக்கேன்! இப்பவும் நாற்றம் அடிக்குதோ? அந்த நாற்றத்தைப் போக்கிறதுக்கும் நாத்த மருத்தும் கொடுத்திருப்பாங்களில்லே?
நாட்டில புலம் பெயர் தமிழர்கள் என்றிருக்கிற ஆளுங்களில ஒரு சிலர் பண்ற ரவுசு தாங்க முடியலைங்கோ! இந்த மாதிரிச் சனங்களாலை ஒட்டு மொத்தப் புலம் பெயர் தமிழர்களின் மானமும் இல்லே காத்தில பறக்குது!
நிரூபன்: ஏன் விநாசியண்ணே! புலம் பெயர் மக்கள் மீது அம்புட்டுக் கோவம்? அவர்கள் தானே எங்களின் ஈழப் போராட்டத்தை தூக்கி நிறுத்தும் தூண்களாக இருந்தவர்கள்!

மணியண்ணை: போராட்டத்தை தூக்கி நிறுத்தினவை ஒரு பகுதி ஆட்கள். மத்தப் பகுதி ஆளுங்க தங்கட புள்ளைங்களைப் படிக்க வைக்கிறதிலையும், போராட்டத்தின் பெயரால் வாழ்க்கையை ஓட்டுவதிலும் தான் குறியாக இருந்திருக்கிறாங்க. நாதாரிப் பசங்க!
இளையபிள்ளை: நீங்க சொல்றது நெசந்தானுங்கோ.ஒரு சில நாதாரிங்களால ஒட்டு மொத்தப் புலம் பெயர் மக்களுக்கும் அவமானமில்லே!
விநாசியார்: போராட்டம் நடக்கும் போது நாட்டை விட்டுப் போயிட்டு, ஐந்து வருஷமாக முன்னமே ஆங்கிலத்தையும், ஐரோப்பிய மொழிகளையும் ஓவர் நைட்டில ஒரு வேர்ட்டும் (Word) மிச்சமிலாம கத்துப் போட்டு, ஊருக்கு வந்து தஸ்க் புஸ்க் விஸ்க் என்று அரை குறை ஆங்கிலத்தில பேசி எங்களையெல்லே வேற்றுக் கிரக வாசிங்களாக ஒரு கூட்டம் பார்குதுங்க. 

மணியண்ணை: இது மட்டுமா ஒரு சிலர் நம்ம நாட்டை விட்டு கிளம்பி மூனு வருஷம் ஆக முன்னாடியே ஊருக்கு வந்து Sorry! I can't speak Tamil! But I can't understand Thamil! இப்படின்னு புலம்புறாங்க.
இளையபிள்ளை: இது மட்டுமா பசங்களே! போராட்டம் நடக்கும் போது தங்களோட புள்ளைங்கள நல்லா கல்வி கற்க வைக்கனும்! ஏன்னா போராட்டம் முடிஞ்சதும் ஈழத்தில உள்ள ஆளுங்க செத்துப் போயிடுவாங்க! அவங்களோட நாட்டை நிர்வகிக்க நம்ம புள்ளைங்க தானே வரனும்! ஈழத்தில உருவாகிற வளமான நாட்டின் நிர்வாகப் பொறுப்புக்களை கவனிச்சுக்கத் தான் நம்ம புள்ளைங்களை வளர்க்கிறோம் என்று பீத்திக்கிட்ட நரிகளும் புலத்தில இருக்கிறாங்களாம்;-)))
நிரூபன்: அடப் பாவமே! என்ன கொடுமை! நம்ம சனம் ஷெல்லடியிலும், விமானக் குண்டு வீச்சிலும், பீரங்கித் தாக்குதலிலும் செத்து ஒழியும் போது இந்த மாதிரி ஆளுங்க வந்து நாட்டை நிர்வாகம் செய்வாங்களோ! 
இந்த குள்ள நரிகள் வந்து நாட்டை ஆள்வதிலும் பார்க்க பேசாம ஒரு ஓட்டைச் சிரட்டைக்குள்ள தண்ணியை விட்டு குதிச்சு செத்துப் போகலாமில்லே! 

இளையபிள்ளை: நம்ம வூட்டுக்குப் பக்கமா இருக்கிற பமிலியோட புள்ளைங்களும் புலம் பெயர் நாட்டில தான் இருக்கிறாங்க. இப்போ ஒரு இரண்டரை வருஷத்திற்கு முன்னாடி தான் நாட்டை விட்டு கெளம்பி போயிருக்காங்க. திடீரென நாட்டிற்கு சுற்றுலா வரப் போறமுன்னு சொல்லி, வெஸ்ர்ட்டேன் டாயிலெட் கட்டச் சொல்லி கேட்டிருக்கிறாங்க.
மணியண்ணை: நீ வேற ஆச்சி! "முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு மறைக்கிறது மாதிரி"; இப்ப ரெண்டு மூனு வருஷத்திற்கு முன்னாடி நாட்டை விட்டு கெளம்பின ஆளுங்க சிலரும் ஊருக்கு வரும் போது வெஸ்ட்டேர்ன் டாய்லெட் (Western Toilet) கேட்பதும் குண்டி துடைக்க பேப்பர் கேட்பதும் ரொம்ப அபத்தமா இருக்கில்லே!
விநாசியார்: அதுவும் சரி தான்! ஊரில பனை வடலிக்குள்ளையும், பற்றைக் காடுகளுக்குள்ளும் போத்தலோட ஒதுங்கின ஆளுங்க டாய்லெட் கேட்பது ஓவராத் தானே இருக்கு! இதுகளைத் திருத்தவே ஏலாதில்லே! 

இளையபிள்ளை: இந்த மாதிரி விஷக் கிருமிகளை எப்படித் திருத்த முடியும்? இதுகளா உணர்ந்து திருந்தினால் ரொம்ப நல்லா இருக்கும்; இல்லேன்னா இனி ஊரில இருக்கிறதுகளும் வெஸ்ட்டேன் டாய்லெட், குண்டி துடைக்க பேப்பருகளும் கேட்கத் தொடங்கிடும்.
மணியண்ணை: இது மட்டுமா, ஒரு சில ஆளுங்க, ஊருக்கு வந்தால்; நம்ம கிணத்து தண்ணி சரில்லைன்னு சொல்லி போத்தல் வாட்டர் வாங்கி குடிக்கிறாங்க! என்னமோ மினரல் வார்ட்டர் குடிச்சா தளுக்கி குலுக்கி மினுக்கின மாதிரி இருப்பாங்க என்று நெனைப்பு போல!!
நிரூபன்: இந்த மாதிரி ஆளுங்களும் இருக்கிறாங்க தான்! இப்படியான ஆளுங்க ஊருக்கு வரும் போது தண்ணி இல்லாத இடத்தில கொண்டு போய் இவனுங்களை நிற்க வைக்கனும்!!

இளையபிள்ளை: தம்பிங்களா; இன்னும் சிலர் ஊரில ஒரு மோட்டார் சைக்கிளில போக வசதியில்லாம வாழ்ந்திட்டு, இங்கே வரும் போது டொல்பின் வேன் கேட்கிறதும், குளிக்க சோப் இல்லாமல் பனம் பழச் சாறிலையும், உள்ளூரி லாலா சோப், மில்க் வைட் சோப்பில குளிச்சுப் போட்டு Body Wash ஈழத்தில இல்லேன்னா குளிக்க மாடோம்! வரும் போது கண்டிப்பா எடுத்திட்டுத் தான் வருவோம்னு அடம் பிடிக்கிறதும் ரொம்ப ஓவரில்லே!
நிரூபன்: ஒருவேளை வெளி நாட்டில குளிக்காம இருந்திருப்பாங்களோ? ஏன்னா, ஊருக்கும் வரும் போது நாம குளிச்சிட்டு சாப்பிட வாங்க என்று கேட்டுப் போடுவமில்லே!அப்போ குளிக்காம தப்பிக்க ஒரு வழி இருக்கனுமில்லே! அதுக்குத் தான் Body Wash கேட்கிறாங்க போல இருக்கே!
மணியண்ணை: இன்னும் சிலர் நம்ம ஊரு வெய்யிலில காய்ஞ்சு கருவாடாப் போயிட்டு; இப்போ வந்து நாம குடை இல்லேன்னா வெளியே போக மாட்டோம்! நமக்கு ஏசி பூட்டின கார் தான் வேணும்! 
வெளியே போகும் போது பூச்சுப் பூசி மினுக்கிக் கொள்ள Sunscreen Cream தான் வேணுமின்னு அடம் பிடிக்கிறாங்க! இவனுங்களை எல்லாம் என்ன பண்றது என்றே தெரியலை! 
ஐஸ் வாட்டர் வேணுமாம்! ஆனால் ஊரில குடிச்சது என்னமோ செம்பாட்டு கிணத்து தண்ணி! இவனுங்களை திருத்தவே முடியாது!
இளையபிள்ளை: இந்த மாதிரி ஆளுங்களுக்கு புலம் பெயர்ந்ததும் ரெக்கை முளைச்சிடுதுங்க. கொஞ்ச காசை கண்டாலே போதும்! பணமுன்னா பிணமும் வாய் திறக்குங்கிற மாதிரி இவனுங்களும் கொஞ்சப் பணம் வந்தாலே போதும்! ஓவரா பிலிம் காட்டத் தொடங்கிடுறாங்க. இந்த நாதாரிப் பசஙளைத் திருத்த வேண்டும்!இல்லேன்னா!நம்மளோட ஊரில உள்ளவங்களும் இப்படி பாடி ஸ்பிரே! சாரி நாத்த மருந்து; பூசிக்க விலை உயர்ந்த கிரீம், மினரல் வார்ட்டர், குந்தி இருக்க வெஸ்ட்டேர்ன் கொமட் என்று கேட்க கிளம்பினாங்க என்றா நம்ம நெலமை வெளங்கிடும்! வெளங்கிடும்!
விநாசியார்: தம்பிங்களா மனுசரா உணர்ந்து திருந்தனும்! நம்ம நாடுகளை விட்டு கெளம்பினதும் ரெக்கை முளைக்கிறதா நெனைச்சு வாழுற இந்த ஜென்மங்கள் தாங்கள் ஊரில வாழும் போது வாழ்ந்த வாழ்க்கையை மறக்க கூடாது! இல்லேன்னா நம்ம ஊரில உள்ள புள்ளைங்களையும் சீரழிக்கிற நெலமைக்குத் தானே நாம ஆளாக வேண்டி வரும்!

மணியண்ணை: நேரம் சாயந்தரம் ஏழு மணி ஆகுதுங்க! பொழுதும் இருட்டுதுங்க. நான் "புதிய தலைமுறை டீவியில" செய்தி பார்க்கனும்! எல்லோரும் கிளம்புவோமா! 
நிரூபன்: அட புதிய தலைமுறைன்னு நல்ல பெயரில்லே வைச்சிருக்காங்க! இப்போ தமிழகத்தில் பழமை வாதத்தில இருக்கிற பழைய சேனல்களுக்கெல்லாம் முன் மாதிரியாக புதிய தலைமுறைங்கிற பேரில நல்ல முயற்சியை தொடங்கியிருக்கிறாங்க! 
அந்த இளைஞர் கூட்டத்தின் சேவை மேலும் வளர நாம எல்லோரும் வாழ்த்துவோமா! 
அப்புறம் என்னங்க! மீண்டும் மற்றுமொரு விண்ணாணம் விநாசியார் பகுதியில் சந்திப்போமில்லே! வாங்க! எல்லோரும் கிளம்புவோம். 

பிற் சேர்க்கை: இப் பதிவினை என்னை எழுதும்படி தூண்டிய மதிப்பிற்குரிய "காட்டான்" மாமாவிற்கு என் உளமார்ந்த நன்றிகளை உங்கள் சார்பிலும், என் சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

27 Comments:

K.s.s.Rajh said...
Best Blogger Tips

ஹா.ஹா.ஹா.ஹா பலரின் டவுசரை உருவீட்டிங்க போங்க.....

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////இது மட்டுமா ஒரு சிலர் நம்ம நாட்டை விட்டு கிளம்பி மூனு வருஷம் ஆக முன்னாடியே ஊருக்கு வந்து Sorry! I can't speak Tamil! But I can't understand Thamil! இப்படின்னு புலம்புறாங்க.////

ஹா.ஹா.ஹா.ஹா......இது பற்றி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இருக்கு நான் ஒரு பதிவு போடுறன் பாருங்க.....

SURYAJEEVA said...
Best Blogger Tips

கொளுத்தி போட்டாச்சு, வெடிக்கும் போது திரும்பி வந்து பாக்கிறேன்

rajamelaiyur said...
Best Blogger Tips

//இப் பதிவு ஒட்டு மொத்தப் புலம் பெயர் தமிழர்களுக்கும் எதிரான பதிவு அல்ல. ஆனால் புலம்பெயர் தமிழ் உறவுகளுள் இருக்கும் ஒரு சில புல்லுருவிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில் தான் இப் பதிவினை எழுதியிருக்கிறேன்
//

நீங்க கலக்குங்க

சசிகுமார் said...
Best Blogger Tips

மாப்ள அறிமுகம் பகுதி காணல...

ஆகுலன் said...
Best Blogger Tips

// Sorry! I can't speak Tamil! But I can't understand Thamil! இப்படின்னு புலம்புறாங்க.//
Actually..... அட சீ...

ஒரு உண்மை தொடர்ந்து தமிழ் கதைகாததன் காரணத்தால் சில ஆங்கில சொற்கள் பாவிக்க வேண்டி வருகுது....அதைவிட தமிழ் தொலைகாட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன...... நமக்கு தங்கிலீஸ் சொல்லி தருறதுல...

ஆகுலன் said...
Best Blogger Tips

//இன்னும் சிலர் நம்ம ஊரு வெய்யிலில காய்ஞ்சு கருவாடாப் போயிட்டு; இப்போ வந்து நாம குடை இல்லேன்னா வெளியே போக மாட்டோம்! நமக்கு ஏசி பூட்டின கார் தான் வேணும்! ///

ஹீ ஹீ இங்க நடையில திரியுறது எல்லாம் மறந்து போடும்..ஆமா....அதெல்லாம் ஒரு பீலிங்...

ஆகுலன் said...
Best Blogger Tips

///வெளியே போகும் போது பூச்சுப் பூசி மினுக்கிக் கொள்ள Sunscreen Cream தான் வேணுமின்னு அடம் பிடிக்கிறாங்க! இவனுங்களை எல்லாம் என்ன பண்றது என்றே தெரியலை! ///

எனக்கு ஒரு நல்ல அனுபவம் உண்டு..உச்சி வெய்யிலில் டென்னிஸ் விளையாடும்போது ஒருநாள் நான் சன் கிரீம் போட்டன் ஒரு சப்பை கேட்டான் உனக்கு எதுக்கு இது எண்டு..ஏன் என்றால் கலர் கம்மியானவர்களுக்கு சூரிய எரிப்பு (sun burn) வராதாம்...

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!

இந்த குள்ள நரிகள் வந்து நாட்டை ஆள்வதிலும் பார்க்க பேசாம ஒரு ஓட்டைச் சிரட்டைக்குள்ள தண்ணியை விட்டு குதிச்சு செத்துப் போகலாமில்லே! 

ஹா ஹா ஹா!
அவங்க வந்து சாகிறாங்களோ இல்லையோ கட்டாயம் நான் சாகப்போறன் காட்டானின் கோமணத்த உருவாம விடமாட்டாய் போல...! ஏன்யா இந்த கொல வெறி!!

காட்டான் said...
Best Blogger Tips

லாச்சப்பல்ல பூநகரி மொட்டைக் கறுப்பன் அரிசிதான் வேனும்ன்னு வாங்கி சாப்பிட்டுட்டு உங்க வந்து நாங்க பீஸாதான் சாப்பிடுவம்ன்னுன் அடம்பிடிக்கிறானுங்க சிலபேர்..

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

அடிச்சு ஆடுங்க!

தனிமரம் said...
Best Blogger Tips

முகத்தினைக் கிழிக்கின்றது என்ற முடிவா மச்சி! 
இப்படித்தான் இங்க கொஞ்சப்பேர் அடிச்சுப்பிடிச்சு குடியேறிய நாட்டில் குடியுரிமை பெற்று விட்டு அங்கே போய் விருந்துண்டு விட்டு அங்க அலாப்பாரை பண்ணுவாங்க லண்டன்,பாரிஸ் ,சுவிஸ் ,போல வராது என்ன ஒரு ஒழங்கு வசதி,வாழ்க்கைத்தரம் மக்கள் சோம்பேரி இல்லாத நாடுகள் மற்றவர்களைக் கண்டால் வணக்கம் வைப்பார்கள் இனவாதம் ,இல்லாதவர்கள் அன்பானவர்கள் என்று இங்கு வந்ததும் பிளேட்டை மாற்றிப் போடும் அழகு இருக்கே விருந்துக்குப் போய் விட்டு போனவீட்டிலே கொலை செய்வதைப் போல என்ன மொழிப்பற்று ,இனப்பற்று ,இப்படியும் ஒரு கூட்டம் கூட்டத்திற்கு வா என்று வருந்தி அழைக்கும் ஆனால் இருந்த நாட்டின் சட்டம் சமுகம் எப்படி அமைப்பானது என்று ஒன்றும் தெரியாத பன்னாடைகள் பேசுவைக்கண்டால் விசில் அடிக்கனும் மச்சி!

தனிமரம் said...
Best Blogger Tips

மச்சி சிலகூட்டம் இங்க அந்த நடிகர் போராட்டத்திற்கு எதிராக குரல் தரவில்லை அவர் படத்தை தடை செய்யனும் என்பார்கள் அங்கு போய் குடும்பத்துடன் கொன்கோட்,சினி சிட்டி,செல்வம்ஹால் என்று ஓடி ஓடிப்பார்க்கும் இனப்பற்றாளர்  பலர் எழுத்துப்பிழையை மட்டும் சூப்பரா கண்டுபிடிக்கும் பூதக்கண்ணாடி போல பட்ம்த்தை ரசித்துப்பார்த்துக் கொண்டு முன்னம் கானத கோக்குடிப்பினம் தோலகட்டியும்,தேசிக்காய் தண்ணீரையும் குடித்ததைத் தெரியாதது போல போங்கடா உங்க வேசத்திற்கும் நடிக்கனுக்கும் என்ன வேறுபாடு?????

தனிமரம் said...
Best Blogger Tips

என்ற பிள்ளை சங்கீதம் படிக்குது,மிருதங்கம் ,தவில் பழகுது என்று பீத்தூவார்கள் அங்கு போய் தவில் பழகுவது அந்தக்குலம்,மிருதங்கம் அடிப்பது இந்தக்குலம் என்று கூப்பாடு போடும் குலப்பிரியர்கள் மீது எந்த குண்டைப் போடுவது மச்சி!

தனிமரம் said...
Best Blogger Tips

சங்கீதம் படிக்கும் தம்பிள்ளையை அங்கு போய் பாடு பாடு என்று நச்சரிக்கும் குடும்பத்தார்கள் அந்த குழந்தை பாடும் சங்கீதம் என்ன தெரியுமா?மம்மதராசா மம்மதராசா கன்னிமனச,ரத்தத்தின் ரத்தமே,நான் அடிச்சா போய்யா காலங்காத்தால இந்த சங்கீத வீபூசனங்களுக்கு எத்தனை கலைஞர்கள் முகம் தெரியாமல் முகாரி வாசிக்கின்றனர் என்று சரி தாயகம் போகும் போது தேடட்டும்!

தனிமரம் said...
Best Blogger Tips

இங்கு இருக்கும் கோயில்களுக்கு நல்ல நாள் பெருநாளுக்கு குடும்பத்துடன் போகமாட்டினம் இங்க மதிப்பில்லை/நாத்திகம் என்று குலுக்கிவிட்டு அங்கு போய் பட்டு வேட்டி கட்டி முதல்மரியாதையுடன் பத்துக்கூட்டம் மேளம் அடிக்க வைத்து பூசை செய்து பக்திசிரோன்மனியாக படம் எடுக்கும் பன்னாடைக்கு ஒரு தேவராம்,திருவாசகம் தெரியாது ஆனால் மொழிப்பற்றும் இனப்பற்றும் என்ன பரவசமாகப் பொங்கும் நுரையை இவனுங்கலை எல்லாம் எந்தசாட்டையாட அடிக்கனும் மச்சி!

Bala Ganesan said...
Best Blogger Tips

மீண்டு(ம்) உயிர் பெற்று வந்திருக்கும் அவர்களுக்கும், மீள வைத்த தங்களுக்கும் நன்றிகள். மீண்டும் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.

தனிமரம் said...
Best Blogger Tips

இவர்கள் தன் மக்கள் செல்வத்திற்கு வைக்கும் பெயர் இருக்கே என்ன
ஒரு எடிசன் கண்டு பிடிப்பு அடுத்த வருடம் என் தளத்தில் ஒரு பதிவு போடுறன் இந்த பற்றாளர்களின் முகத்தினை இப்ப நேரம் இல்லை எழுத்துப்பிழைகளுடன் சண்டை பிடிக்க !

தனிமரம் said...
Best Blogger Tips

இப்படியானதுகள் ஒரு சமுகவியாதியுள்ள அரைவேர்க்காடுகள் இலங்கைச் சாமான் மட்டும் தடை செய்யோனும் என்று குக்குரல் போடுவார்கள் போய் இறங்கியவுடன் குடிப்பது கொழும்பில் லயன் லாகரும் ஸ்டாவுட்டும் மெண்டிஸ்சும் தான் என்ன
ஒரு காவலன் வேசம் நாதாரிகள்!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

இந்த மாதிரி ஆளுங்களும் இருக்கிறாங்க தான்! இப்படியான ஆளுங்க ஊருக்கு வரும் போது தண்ணி இல்லாத இடத்தில கொண்டு போய் இவனுங்களை நிற்க வைக்கனும்!!//

யோவ் வெளிநாட்டு வாழ்க்கை வாழ்ந்துட்டு வந்து ஊர் தண்ணியை குடிச்சதும் ரெண்டு நாள்ல ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனவங்களும் இருக்காங்க, குழந்தைகளை பின்னே கேட்கவே வேண்டாம், நானும் ஊர்போனால் குழந்தைகளுக்கு மினரல் வாட்டர்தான் வாங்கி கொடுப்பேன், அவிங்க அவிங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு இல்லையா....

Angel said...
Best Blogger Tips

இதையெல்லாம் விட வெய்ட் குறைய ஒரு அம்மா டிவியில சொன்னாங்க
//உடல் இளைக்க உணவில் கொள் //
அப்ப பாக்கணுமே எல்லா தமிழ் கடையிலையும் செம பிஸ்னஸ் .கொள்ளு விற்பனை அமோகமா இருந்தது .இது நடந்தது இங்கிலாந்து வந்த புதிதில் எனக்கு அப்பத்தான் ஒரே ஆச்சர்யமா போச்சு லண்டன் பக்கம் சில இடங்கள் இருக்கும் எங்கூர் பர்மா பஜார் /ரங்கநாதன் தெரு மாதிரி
மினரல் வாட்டர் விஷயத்தில் நானும் கொஞ்சம் பயம் .உங்க ஊர் தண்ணீர்
எப்படின்னு தெரில ஆனா சென்னை தண்ணி கொஞ்சம் வேலை காட்டும் .

shanmugavel said...
Best Blogger Tips

//Sorry! I can't speak Tamil! But I can't understand Thamil! இப்படின்னு புலம்புறாங்க.//

ஹே..ஹே...இப்படி கூடவா?

Anonymous said...
Best Blogger Tips

Sorry! I can't speak Tamil! I can't understand Thamil!...ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ

அம்பலத்தார் said...
Best Blogger Tips

//போராட்டத்தை தூக்கி நிறுத்தினவை ஒரு பகுதி ஆட்கள். மத்தப் பகுதி ஆளுங்க தங்கட புள்ளைங்களைப் படிக்க வைக்கிறதிலையும், போராட்டத்தின் பெயரால் வாழ்க்கையை ஓட்டுவதிலும் தான் குறியாக
இருந்திருக்கிறாங்க. நாதாரிப் பசங்க!//

மிகவும் சரியான வார்த்தைகள்

அம்பலத்தார் said...
Best Blogger Tips

//நாட்டில புலம் பெயர் தமிழர்கள் என்றிருக்கிற ஆளுங்களில ஒரு சிலர் பண்ற ரவுசு தாங்க முடியலைங்கோ!//
ஒரு புலம்பெயர் தமிழனாக இவ்வாறானவர்களிற்காக வெட்கித்தலைகுனிகிறேன்.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

//ஏன் விநாசியண்ணே! புலம் பெயர் மக்கள் மீது அம்புட்டுக் கோவம்? அவர்கள் தானே எங்களின் ஈழப் போராட்டத்தை தூக்கி நிறுத்தும் தூண்களாக இருந்தவர்கள்!//

போராட்டத்தை தூக்கி நிறுத்தியதும் புலம்பெயர் சமூகம்தான். அதன் அழிவிற்கான காரணங்களில் ஒன்றாக இருந்தவர்களும் இதே புலம்பெயர் தமிழரில் ஒரு பகுதியினர்தான்.

Unknown said...
Best Blogger Tips

//லாலா சோப், மில்க் வைட் சோப்பில// அந்த கால ஞாபகங்கள் :-)

சில பேருக்கு சாட்டையடி. முச்சந்தி முரளி, விநாசியார் இன்டெர்நெட் இல்லாத அந்த கால எங்கள் சிறு வயதில் ஒவ்வொரு நாளும் பேப்பர் பார்க்க தூண்டும் விடயங்களில் ஒன்று

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails