Sunday, July 31, 2011

பதிவர்களே! திரட்டிகளே! நீங்கள் இனியும் மௌனமாக இருக்கலாமா?

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே, 
திவர்களே! திரட்டிகளே! நீங்கள் இனியும் மௌனம் காக்கலாமா? 

ப் பதிவின் நோக்கம் தனி மனித தாக்குதலை நடாத்துவதோ, அல்லது யாருடனும் சண்டை போடுவதோ அல்ல. ஒரு சில பதிவர்களால் பாதிக்கப்படும் பல பதிவர்களின் உழைப்பினையும், பதிவுகளின் காப்புரிமத்தினை உறுதிப்படுத்தும் வகையிலும் இப் பதிவானது எழுதப்படுகின்றது. 
இப் பதிவில் ஏதாவது தவறுகள் இருப்பின், நான் இப் பதிவினூடாக, தனிப்பட்ட முறையில் மனம் நொந்து கொள்ளும் வகையில்; யாரையாவது சாடி எழுதியிருந்தால், தயவு செய்து என்னை மன்னியுங்கள். 

Saturday, July 30, 2011

வால் பிடிப் புலிகளால் அழிந்த ஈழ விடுதலைப் புலிகள்!

அன்பிற்கினிய உறவுகளே,
தமிழ் என்னும் மொழிக் கடலில், நாம் நீந்திக் கொண்டிருந்தாலும், தமிழைக் கரைத்துக் குடித்து இலகுவில் கரையேற முடிவதில்லை. காரணம் அவ்வளவு ஆழமான மொழி தமிழ். எம் தமிழ் மொழி எமக்குத் தந்திருக்கும் இன்னோர் சிறப்பு, ஒரு சொல்லில் பல பொருள்(பல அர்த்தங்கள்)  வருமாறு நிறைவான பொருளைத் தருவதாகும். 

Thursday, July 28, 2011

காதல் உடல் சார்ந்த பசியா அல்லது உணர்வு சார்ந்த தேடலா? - சுவையூட்டும் தொடரின் இரண்டாம் பாகம்!


நீ இல்லை என்றாலும், நான் உன் நினைவுகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
இல்லாத ஒரு பொருளின் நினைவலைகளை எப்படிப் பத்திரப்படுத்தி வைக்க முடியும்? ஓ.... இப்போது தான் நினைவுக்கு வருகின்றது. விமானக் குண்டு வீச்சின் அழியாத வடுவாக என் கையில் இருக்கும், தழும்பிலிருந்து உன் நினைவுகள் இன்றும் வந்து போகின்றதே. அப்படியாயின் நீ எங்கே? உன்னை தொலைத்து விட்டுத் தேடுகிறேனா?
இல்லை, நீ என்னுள் உறைந்ததனால் தவிக்கிறேனா?
ஓ.....இப்போது தான் உய்த்தறிந்து கொண்டேன்.

அன்றைய தினம் மாலை வேளை...........................
                                                                            பசியும், தேடலும் தொடரும்.......

பதிவின் முதலாம் பாகத் தொடர்ச்சியாக.......

காதல் உடல் சார்ந்த பசியா அல்லது உணர்வு சார்ந்த தேடலா!

ஒரு மிஸ்ட் கோலில் தான் இன்றைய காதலின் நீடித்து நிலைக்கும் பண்பு தங்கியிருக்கிறது. அன்பின் வெளியீடாய் அவளிடமிருந்து கிடைக்கும் மிஸ்ட் கோலும், தன் பண பலத்தின் குறியீடாய் ஆடவன் மேற்கொள்ளும் அழைப்பும் கதிரியக்கம் மூலமாக காதல் இயங்க வேண்டும் எனும் தொனிப் பொருளை விளக்கி நிற்கிறது. அவளது ஒவ்வோர் அசைவுகளும், என்னுள் வந்து போகையிலும், என் மன அலைகளைச் சிதறடித்து விட்டுச் செல்லுகையிலும், என் இருத்தல்கள் சில வேளை, இனம் புரியாத ஒன்றினால் தூண்டப்பட்டு, எங்கோ ஓர் தொலை தூர வெளியில் நான் இறக்கை கட்டிப் பறப்பது போன்ற பேரின்பத்தை அடைந்து கொள்கிறேன்.

Tuesday, July 26, 2011

பதிவர்கள், டுவிட்டர்- பேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை அறிவிப்பு!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே,
சமூக வலைத் தளங்களான பேஸ்புக், டுவிட்டர், ப்ளாக்கரில் உள்ள பலரது கணக்குகளை முடக்கும் அல்லது செயலிழக்கச் செய்யும் நோக்கில் உங்கள் வலைப் பதிவுகளுக்கும், பேஸ்புக், டுவிட்டர், ப்ளாக்கர் மின்னஞ்சலுக்கும் கீழ் காணும் விபரங்களோடு அனுப்பப்படும் ஈமெயில்களை யாரும் கிளிக் பண்ணிப் பார்க்கவோ அல்லது பின் தொடர்ந்து செல்லவோ; வேண்டாம் என அன்போடு
கேட்டுக் கொள்கின்றேன்.

Monday, July 25, 2011

இலங்கையிடம் சரணாகதியடையப் போகும் திமுக!

மீண்டும் வசந்த காற்றாய்
நம்பிக்கை ரேகைகள்
தமிழர்
மேனியெங்கும் 
தழுவத் தொடங்கியிருக்கிறது,

Sunday, July 24, 2011

எழுத்துலக விபச்சாரர்களால் மானபங்கப்படுத்தப்படும் தமிழர்கள்!


ஆச்சியின் பழைய
நைந்து போன 
சீலையின் ஓரத்தினை
மாத்திரம் நம்பி
நகர்கின்றது 
அவளின் அந்த நாட்கள்,
சானிட்டரி நாப்கினுக்காக
சல்லாபம் புரிந்து 
வேலை வாய்ப்பின்மையை
மானமாக்கி அணிந்து கொள்ள
அவள் மனம்
இடங்கொடுக்கவில்லை!

Tuesday, July 19, 2011

கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!

                                                                                                                                            16.07.2011,
                                                                                                                                           கோபாலபுரம்,
                                                                                                                                              தமிழகம்.


மிழாய் என் குடும்பத்தில் வந்துதித்த கனியே, என் அருமைத் தமிழ் மகவே!
உன்னை அருகே வைத்து ஆராதித்துப் பேசி மகிழ முடியலையே என கவலை கொண்டாலும், கடிதம் மூலமாக இணைவதில் கோடி இன்பம் மகளே!
தொலைபேசிக்கான அலைக் கற்றைகளையே அந்தமான் வரை அனுப்பி பணமாக்கிய எம் குடும்பத்திற்கு. இன்றோ உன்னோடு அலைபேசி மூலம் பேச முடியாத அளவிற்கு(துன்பப்பட) அந்தரிக்க வைக்கிறது காலம். ஆனாலும் காகிதம் மூலம், உன்னோடு கவலைகளை மறக்கப் பேசுவதில் சந்தோசம் உள்ளது மகளே. எம் வீட்டில், கொளுத்தும் வெய்யிலிலும், குளிர் அறைக்குள் குளு குளு என்று இருக்க வேண்டிய நீ, இன்றோஅனல் கக்கும் பாலைவனச் சிறைக்குள் கொடியவர்களால் விருப்பமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாய். 

Monday, July 18, 2011

மாறனிடம் மண்டியிட்ட திமுக - தாத்தாவின் புரிந்துணர்வற்ற செயல்!

நீண்ட இடை வேளையின் பின்னர், மீண்டும் வழமை போல ஆலமரத்தடி அரட்டை கூடுகின்றது.  பழைய ஆலமரத்தடி அரட்டைகளை நீங்கள் இங்கே சென்று படித்து மகிழலாம். 

'திமுகவை நான் திங் பண்ணுறேன்
திஹார் ஜெயிலை நான் அவோய்ட் பண்ணுறேன்
உன் குடும்ப அரசியலை புறக்கணிக்கிறேன்,
இதனாலை வந்த விளைவை நினைச்சு நான் சிரிக்கிறேன்...
ஹா....ஹா...ஹா...என வடிவேலுவின் பாட்டினை மாற்றிப் பாடிக் கொண்டிருந்த நிரூபன், திடீரெனப் பின் வருமாறு பாடத் தொடங்கினான். 
’உன்னை நான் லவ் பண்ணுறேன்
உன் தங்கச்சியை லைக் பண்ணுறேன்
உங்க அக்காவை லுக்கு விடுறேன்
உன் வீட்டு வேலைக்காரியை ரூட்டு விடுறேன்....
உன் தம்பி கூட வருவதைத் தள்ளி வை
உங்க அண்ணன் கிட்ட என்னைப் பற்றி சொல்லி வை................

Sunday, July 17, 2011

அவர்கள் உன்னைக் கற்பழித்தார்களா- ஈழப் போரின் மறு வடிவம்!

’’மன்மதன் வந்து மனசிற்குள் நுழையும் வரையும்,
மனதினுள் உண்ர்ச்சிகள் உறங்கியே இருக்கும் 
உன் பொன் முகமது பதிலொன்றைத் தந்தால், 
என் தேகமும் உன் நினைப்பினில் 
தினம் தினம் சிலிர்க்கும்; 
எனத் தனக்குள் யோசித்தபடி நிவேதிகாவின் வருகைக்காக காத்திருந்தான் கானகன்.  

Saturday, July 16, 2011

குளு குளு குற்றாலத்தில் கிளு கிளு நடிகையுடன் குளித்த பிரபல பதிவர்!

றிவிப்பு: அரபு நாட்டில் தண்ணீர் பஞ்சம் எனப் பொய் சொல்லிக் குளிக்காது; தற்போது தமிழகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு தண்ணீர் மேல் உள்ள தன் கண்டத்தினைப் போக்கும் நோக்கில் நீர் நிலைகளில் திவ்ய தரிசனம் செய்யும் பதிவருக்கும்,  இச் சிறுகதைக்கும் யாராவது தொடர்பிருக்கென்று கருதினால். அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
*************************************************************************************

Thursday, July 14, 2011

ஐங்கரனின் தங்கை ஈழத்தில் ஜந்துகளால் சிதைக்கப்பட்டாள்!

ஒரு இலக்கியத்திற்குரிய
பாடு பொருட்கள்
பல இருந்தும்,
எழுது கோல் கொண்டு
எழுத முடியாதவாறு
கண்காணிப்புக்கள்
அச்சமூட்டும் ஆக்கிரமிப்பு
வடிவங்களாக நகர்ந்து செல்கின்றன!

சீன் பட சீடியால் சீரழிந்த பதிவர்- உண்மைச் சம்பவம்!

பாய அறிவிப்பு: இப் பதிவில் வயது வந்தோருக்கான விடயங்கள் அடங்கியிருப்பதால், சிறுவர்களுக்கும் கலாச்சார காவலர்களுக்கும் இப் பதிவு உகந்ததல்ல.
பாகம் 2:
இதன் முதற் பாகத்தினைப் படிக்க, இந்த இணைப்பில் கிளிக் பண்ணுங்கள்.

ஒரு விடயத்தினைப் பற்றி நன்றாக அறிந்து, அனுபவித்துக் கொள்ளும் வரைக்கும் தான் அவ் விடயம் மீதான எம் ஆர்வம் அதிகமாகவும், அவ் விடயத்தைப் பற்றிய எமது மன உணர்வுகள் ஆசையினைத் தூண்டும் வகையிலும் அமைந்து கொள்ளும். உதாரணமாக புதிதாக அறிமுகமாகியுள்ள கையடக்கத் தொலைபேசி(அலை பேசி) மீது, அதனை வாங்கி, எம் கையால் அழுத்தி அனுபவிக்கும் வரைக்கும் தான் அத் தொலைபேசி பற்றிய ஆர்வமும், ஆசையும் அதிகமாக இருக்கும். அதே போலத் தான் எம் மனதில் எழும் பாலியல் சிந்தனைகளும், அவ் விடயத்தினைப் பற்றி அறியும் வரைக்கும் தான் ஒரு வித வெறியினைத் தூண்டும் வகையிலும், தூக்கத்தைக் கெடுக்கும் வகையிலும் அமைந்து கொள்வதுண்டு. 

Tuesday, July 12, 2011

ஆபாச பட ஆசையால் அவமானப்பட்ட பதிவர்!

பாய அறிவிப்பு: இந்தப் பதிவு கலாச்சார காவலர்களுக்கும், சிறுவர்களுக்கும் உகந்ததல்ல. முகம் சுளிக்கும் விடயங்கள் நிரம்பியுள்ள இப் பதிவினைப் பிடிக்காதோர் முன்னெச்சரிக்கையாகத் தவிர்ப்பது நல்லது.

ஒவ்வோர் மனிதனது மனங்களுக்குள்ளும் வித்தியாசமான ஆசா பாசங்கள் வெவ்வேறு உருவில் மெது மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும். சமூகத்தின் முன்னால் என்னை நல்லவன் என்று எடை போட்டுக் காட்டும் வகையில் நான் ரொம்ப நல்லவன் இல்லைங்க. பல பேர் தாம் நல்லவர்கள் என்று சொல்லித் திரை மறைவில் தில்லு முல்லு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் இக் காலத்தில்; வெளிப்படையாகவே சொல்லிடுறேன் நான் ரொம்ப நல்லவன் இல்லைங்க. ஹி.....ஹி.....

ஈழம் சாவிற்கு சவால் விட்ட சரித்திர பூமி!


மரணங்கள் மலிந்த பூமி எது என்று கேட்டால், ஈழத்தில் உள்ள இறைவனுக்குப் பேசும் சக்தியிருந்தால் அவன் தன் சுட்டு விரலா தொட்டுக் காட்டுவான் அது ஈழம் தான் என்று. வெளித்தெரியாத பல ஜீரணிக்க முடியாத ரணங்கள் உள்ளே அமிழ்ந்து, புதைந்து கிடக்கும் ஒரேயொரு பூமியாக உள்ளது எது என காலத்திடம் கேட்டால், அதற்குப் பேசுகின்ற வல்லமையிருப்பின் அதுவும் கூறும் ஈழம் தான் என்று.  உள்ளே கனன்று எரிந்த பெரு நெருப்பின் பின்னர், புதைந்து போன அகழ்வுகளை இலகுவில் கண்டறிந்து விட முடியாதவாறு வெள்ளரசுகள் மீது சட்டித் தொப்பிகள் கவிழ்க்கப்பட்டு அசையும் உயிரினங்களாக நடப்படிருக்கிறது. 

Sunday, July 10, 2011

ஈழப் போர் தந்த சாபங்கள்- உண்மைச் சம்பவம்!

இருபத்தியிரண்டு ஆண்டுகளாக உலக அரங்கில் விடுதலை கோரிய நாடு ஒன்று, இன்றைய கால கட்டத்தில் தென் சூடான் எனும் நாமத்தோடு சுதந்திரக் குழந்தையாகப் பிறந்திருக்கிறது. முப்பது வருடத்திற்கும் மேலான ஆயுதப் போராட்டத்தில்- உலகின் பல விடுதலை அமைப்புக்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டியவர்கள் எனச் சொல்ல்லப்படும் ஈழத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று அமைப்பு- வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏதுமின்றி வேரோடு வெட்டிச் சரிக்கப்பட்டிருக்கிறது.

நமீதாவை மடக்கிய நம்ம ஊர் நண்பன்!

ஈழத் தமிழனாகப் பிறந்தால் சுதந்திரம் முதற் கொண்டு, ஏனைய மனித உணர்வுகளையும் இழந்து தான் ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக எம் வாழ்க்கையோடு இணைந்து வந்து கொண்டிருக்கிறது. எம்மைச் சூழ்ந்திருந்த கவலைகள், துன்பங்கள்.  இடப் பெயர்வு- கொடிய யுத்தம் முதலிய பல காரணிகளுக்கு நடுவேயும், எம் மனங்களைச் சந்தோசமாக வைத்திருக்க உதவிய ஒரு விடயம்; நண்பர்களின் இணை பிரியாத நட்பு என்று தான் கூறலாம். அதே வேளை என் மனதை வேதனைப்பட வைத்த விடயமாகப் பல நண்பர்களது உயிரிழப்புக்களையும் கூறலாம்.

Friday, July 8, 2011

கலைஞரின் கலர் டீவியில் ஜெயலலிதாவின் கருத்துப் படம்!

ஐம்பதாண்டு கால அரசியல்
முதிர்ச்சியின் சுயாதீன
குடும்ப நலன் எனும் 
ஆடையினை(த்) தமிழ்
அன்னைக்கு போர்த்தி
அவள் கண்களை
இலவசம் எனும்
பாசக் கயிற்றினால் கட்டி
அதன் மேல் 
பிறர் கண்பாடதவாறு 
மக்கள் சொத்தினை
வாரிச் சுருட்டி- தன் 
மக்கள் வாழ்வு மேம்பட வைத்து
இறுதியில்- கொடுத்தல்
வாங்குதல் எனும் 
தர்க்கமானது இலவசங்கள்
வாயிலாக இவரிடமிருந்து
வெளித்தெரிகின்றது 
எனும் ஜீரணிக்க 
முடியாத உண்மை
மக்கள் மனங்களிற்குத் தெரியவர
ஆசனப் பகுதியில் 
இறுக்கி ஒட்டியிருந்த
இலகுவில் கழற்றி எறிந்திட முடியாத
ஆட்சி எனும் கட்டிலிருந்து
தூக்கியெறியப்பட்டார் கலைஞர்! 

Saturday, July 2, 2011

ஈழப் போர் விட்டுச் சென்ற தடயங்கள்!


போர் ஒரு வரலாற்றை அழித்து, இன்னோர் வரலாற்றை நிலை நிறுத்தப் பயன்படுத்தும் உத்தியாக உலக நாடுகளில் எங்கோ ஓர் முலையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் ஓர் பரிணாமம் தான் ஈழ மக்கள் வாழ்வினையும் ஈழப் போர் எனும் வடிவில் திசை மாற்றியிருக்கிறது. இந்தப் போர் பல உயிர்களைத் தன் பசிக்கு இரையாக்கியிருக்கிறது.

மகிந்தவுக்கு செய்வினை வைக்க முடியுமா- ஒரு சவால்! 

ப் பதிவின் நோக்கம், ஒரு சில விடயங்களினைத் தெளிய வைப்பதாகும். இப் பதிவில் வரும் கருத்துக்கள் யாவும் தமிழ் ஊடகங்களின் செய்திகளை அடிப்படையாக வைத்தே தொகுக்கப்பட்டுள்ளன. இங்கே எழுதப்பட்டுள்ள என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை, ஊடகங்களில் வரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு வினாக்களாக மாத்திரம் முன் வைக்கிறேன். 

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க