Saturday, December 31, 2011

செக்சுவல் ப்ளே பாய் ஷேண் வோர்ன் - கிசு கிசு & கிளு கிளு அலசல்!

பிரபலங்கள் என்றால் எப்போதும் ப்ராப்ளங்கள் சூழ்ந்து கொள்வதும், அப் ப்ராப்ளங்கள் சுவாரஸ்யமாக அமையும் பட்சத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து கொள்வதும் இயல்பான ஓர் விடயமாகும். கிரிக்கட்டில் தன் சுழற் பந்து மூலம் உலகப் புகழ் பெற்ற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரனா ஷேர்ன் வோர்ன் அவர்கள் கிரிக்கட்டில் புகழ் பெற்றுப் பிரபலமாக வாழ்ந்ததனைப் போன்று கிசு கிசுக்களுக்கும், மன்மத லீலைகளுக்கும் பஞ்சம் ஏதுமின்றி வாழ்ந்து வருகின்றார். உலகப் புகழ் பெற்ற பிரபலங்கள் சிக்கல்களில் மாட்டி விட்டாலே போதும்! பத்திரிகைகளின் முன் பக்கத்தில் வர்ணமயமான அட்டைப் படத்துடன் கூடியவாறு சூடான செய்திகளைப் போட்டு நல்ல வருமானமும் ஈட்டி விடுவார்கள் பத்திரிகையாளர்கள்.

வக்கிர குணங் கொண்ட பெண் பதிவரால் வாட்டமுறும் ஊழியர்கள்!

ப்ராப்ள பெண் பதிவர் பற்றிய ஆதாரங்களுடன் கூடிய உண்மைச் சம்வம்!
ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட குணாதிசயங்களைப் போன்று அவரது எழுத்துக்களும், படைப்புக்களும் அமைந்து விடுவதில்லை. படைப்பாளியின் எழுத்துக்களைப் படிக்கும் எமக்கு தனிப்பட எழுத்தாளர் தொடர்பான ஆராய்ச்சிகள் எதற்கு? எனும் நிலையினைத் தான் அண்மைக் காலமாக தமிழ் இலக்கிய உலகம் நடை முறைப்படுத்தி வருகின்றது. ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையானது எப்படியும் அமைந்து விடலாம். ஆனால் அப் படைப்பாளியின் எழுத்துக்களை மாத்திரம் விமர்சிக்க இருக்கும் உரிமையானது வாசகர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் அப் படைப்பாளியை விமர்சிக்கும் அளவிற்கு இல்லாதிருப்பதே ஆக்கபூர்வமான இலக்கிய உலகிற்கு வித்திடும் ஓர் வழியாக அமைந்து கொள்ளும்! 

Friday, December 30, 2011

பதிவர் சந்திப்பிற்கு தாம்பூலத் தட்டம் வைத்து அழைப்பு விடுக்கனுமா?

இணையத்தில் ஐயாரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச் சொந்தங்கள் வலைப் பதிவுகளை எழுதுபவர்களாக வலம் வருகின்றார்கள். இன்றைய நாளில் இவர்கள் அனைவரும் தம் மன உணர்வுகளைப் பத்திரிகையூடாகப் பகிர்ந்து கொள்ள நினைத்தால் எல்லோருக்கும் சம நேரத்தில் சந்தர்ப்பம் கிடைக்காது. அதே வேளை பத்திரிகையூடாக எல்லோரினதும் ஆக்கங்களையும் பகிருவதற்கு பத்திரிகைகளும் இடங் கொடுக்காது. "எம்முடைய எழுத்துக்கள் பத்திரிகையின் தரத்திற்கு நிகராக வருமா?" எனும் ஐய உணர்வே அதிகளவான பதிவர்கள் மனங்களிலும் இருக்கின்றது.இணையம் நமக்கு அருளிய இணையற்ற வரப்பிரசாதம் தான் இந்த வலைப் பதிவுகள். கணினித் திரைக்குப் பின்னிருந்து பதிவெழுதும் சொந்தங்களைக் கண்டு தரிசிக்க வேண்டும் எனும் ஆவல் ஒவ்வொரு பதிவர்களின் எழுத்துக்களைப் படிக்கையிலும் இயல்பாகவே எம்மிடம் தொற்றிக் கொள்கின்றது.

Thursday, December 29, 2011

அவர்கள் என்னை கல்லால் அடித்து கொன்றார்கள்!

எனக்குள் இப்போது உருவம் ஏதுமற்ற
எலும்புத் துண்டுகள் தான் என்னை இயக்குகிறது,
எனக்கான தேடலை வானத்திலுள்ளவனால் கூட
தர முடியாது - காரணம் வானத்திலுள்ளவனின்
தேவ தூதர்களாய் வாசலில்
வரிசை கட்டி பலர் புஸ்த்தகங்களோடு!

Disturbia - விறு விறுப்பு நிறைந்த ஹாலிவூட் திரிலிங் பட விமர்சனம்!

சின்னஞ் சிறு வயதில் எமது ஆர்வக் கோளாறின் காரணமாக சில புதிய செயல்களைச் செய்ய ஆரம்பிப்போம். எம் ஆர்வக் கோளாறின் காரணமாக நாம் செய்யத் தொடங்கும் செயல்களில் சில நன்மையில் முடியும். சில செயல்களோ தீமையில் முடிந்து கொள்ளும். அத்தோடு தீராத வலிகளையும், தழும்புகளையும் தந்து எம் பால்ய வயதின் ஆறா வடுவாக எம் வாழ்வோடு கூட வந்து கொண்டிருக்கும். இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பது போல எமக்குள்ள கல்வி மீதான ஆர்வமும், பிற விடயங்களை அறிய வேண்டும் எனும் தூண்டுதல்களும் பதின்ம வயதுகளில் தான் ஊற்றெடுக்கும். இவை எல்லாம் போனால் வராது என்பது போல மீண்டும் வராத பொழுதுகளாகப் போய் விடும். 

Wednesday, December 28, 2011

பீரங்கிப் படை மூலம் ஆமிக்கு பீதியைக் கொடுத்த புலிகள்!

கப்பல் மூலம் இராணுவத்தினருக்கு வந்த ஷெல்களைத் தந்திரமாகத் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தரையிறக்கிய புலிகள் அச் ஷெல்கள் அனைத்தையும் பயன்படுத்தி இராணுவத்தினர் மீது மழை போல எறிகணைகளைப் பொழிந்து தள்ளினார்கள். புலிகளின் ஆட்டிலறி அணிகள் மிக மிகத் துல்லியமாக ஷெல்களை இராணுவ முகாம்கள் மீது ஏவிக் கொண்டிருந்தனர். ”ஈழப் போரியல் வரலாற்றில் முதன் முறையாக இந்த ஓயாத அலைகள் மூன்றின் போது தான் புலிகளின் குரல் வானொலியானது நேரடி ஒலிபரப்பினூடாக கள முனை நிலவரங்களை உடனுக்குடன் மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தது”. நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது "பீரங்கி கைப்பற்றி ஆமிக்கு பீதியைக் கொடுத்த புலிகள்" தொடரின் இறுதிப் பாகமாகும்! தொடரின் கடந்த பகுதிகளைப் படிக்க இவ் Drop Down Menu இணைப்பில் கிளிக் செய்யுங்கள். 

Tuesday, December 27, 2011

ஆமியின் தலையில் ஆட்(டி)லறி ஷெல் மழை பொழிந்த புலிகள்!

இலங்கையின் காலித் துறைமுகத்திற்கு கப்பல் வரும் என இலங்கை அரசு விழி மேல் வழி வைத்துக் காத்திருக்கையில் அந்தக் கப்பலோ இன்னுமோர் இடத்திற்கு வந்தது. குறிப்பிட்ட தினத்திற்குள் கப்பல் வரவில்லையே என கப்பல் கம்பனியின் தலைமையகத்தினை இலங்கை அரசு தொடர்பு கொள்ளும் போது, இன்னும் சில தினங்களுள் கப்பல் இலங்கைக்கு வந்து விடும் என பதில் வழங்கப்பட்டது. இந் நேரத்தில் தான் இலங்கை அரசிற்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருந்தது. நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது "பீரங்கி கைப்பற்றி ஆமிக்குப் பீதியைக் கொடுத்த புலிகள்" தொடரின் ஆறாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க இங்கே உள்ள DROP DOWN MENU இல் கிளிக் செய்யவும்.  

இஸ்லாமியச் சொந்தங்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமா?

ஒரு பகிரங்க விவாத மேடை!
அன்பிற்கினிய உறவுகளே, பூமியில் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் தாம் விரும்பிய மதங்களையும்,தாம் விரும்பிய மொழியினையும் பின்பற்றுவதற்கான பூரண உரிமை இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுய நிர்ணய உரிமை பற்றிய கோட்பாடு விளக்கம் கூறுகின்றது.மனித மனங்களின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு அவனது விருப்புக்களும், வெறுப்புக்களும் அடிப்படையில் வேறுபட்டுக் கொள்ளும். உலகில் இன்று தாழ்த்தப்பட்ட இனமாக இஸ்லாம் சொந்தங்கள் தம்மைத் தாமே கருதுகின்றார்களா என்று ஓர் வினாவினை முன் வைக்கையில் அதற்கான விடை உங்கள் மனதிலிருந்து எப்படி வந்து கொள்ளும் என்பதனை அனுபவ உதராணக் குறிப்புக்களினூடாகப் பார்ப்போமா?

Monday, December 26, 2011

இலங்கை இராணுவத்தினர் மீது இடியாய் குண்டு மழை பொழிந்த புலிகள்!

ஓயாத அலைகள் இரண்டு படை நடவடிக்கையின் போது புலிகளால் மூன்றிற்கு மேற்பட்ட ஆட்டிலறிகள் கைப்பற்றப்பட்டன. கிளிநொச்சி மீட்கப்பட்ட பின்னர் புலிகள் அணிகள் மற்றுமொரு பாய்ச்சலுக்குத் தயாராகினார்கள்.இவ் வேளையில் புலிகள் வசம் பீரங்கிகளுக்கான எறிகணைகள் இருந்தாலும், பெருமளவான எறிகணைகள் புலிகளின் பகுதிக்கு கடல் வழியாக புலிகளின் அழைப்பின்றி வந்து சேர்ந்தது. இலங்கை அரசோ இவ் விடயத்தினை அறிந்து திண்டாடத் தொடங்கியது. நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது உங்கள் நாற்று வலையில் வெளியாகிக் கொண்டிருக்கும் "பீரங்கி கைப்பற்றி ஆமிக்குப் பீதியைக் கொடுத்த புலிகள்" தொடரின் ஐந்தாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழேயுள்ள DROP DOWN MENU இல் கிளிக் செய்யுங்க. 

பதிவுலகில் வேகமாகப் பரவி வரும் வைரஸ்- பதிவர்களே உஷார்!

எம் மன உணர்வுகளை, எமக்குப் பிடித்த விடயங்களை, எங்கள் உள்ளத்தினுள் நிழலாடும் சின்னச் சின்னச் சுவாரஸ்யங்களை இன்று இணையத்தினூடாகப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்திருக்கும் அதிரசம் தான் வலைப் பூக்கள். சின்ன வயசிலிருந்து நாமும் பத்திரிகையில் எழுத வேண்டும், எம் படைப்புக்களும் பத்திரிகைகளில் வர வேண்டும் எனும் ஆவல் மேலிட பல படைப்புக்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி விட்டு எப்போ எம் படைப்பு பிரசுரமாகும் என்று பார்த்த விழி பூர்த்திருக்கப் பட படப்புடன் காத்திருப்போம். ஆனால் இன்று அந்தக் கவலை இல்லை. இணையமும் கணினியும் இருந்தாலே போதும் நொடிப் பொழுதில் எம் படைப்புக்கள் அகில உலகம் எங்கும் கொண்டு செல்லப்பட்டு விடும். 

Saturday, December 24, 2011

வன்னிக் காடுகளில் துலங்கும் எண்ணச் சிதறல்கள்!

மல்லாவி மத்திய கல்லூரியின் மயில்வாகனம் மண்டபம் அரங்கு நிறைந்த பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. கண்களில் நீர் சொரிய உணர்ச்சிப் பெருக்கோடு மக்கள் குழுமியிருந்தனர். தன் மன உணர்வுகள் யாவற்றையும் ஒன்று திரட்டி விடுதலை வீரர்களின் பெருமையினையும், தியாகத்தினையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான் சுடரவன். 

நடிகை -கிசு கிசு - பரபரப்பு - ஏமாறும் தமிழர்கள்!

தீந்தை பூசப்படாத வானம்
தீ போல தகிக்கும் பாலை வனம்
சாந்தமான தென்றலென வருடும் ஞாபகங்கள்
சரசமாடும் சினிமா மீதான போதை! 

குற்றவாளி கூண்டில் கொங்காபுரி பதிவர்கள் - அதிர்ச்சியில் பதிவுலகம்!

கொங்காபுரி பம்பு செட்டு குழுவின் தலமையகத்தில் அவர்களின் அல்லக்கைகள், நொள்ளக் கைகள், அரியணையில் மன்னர் இருக்கிறார் எனும் நினைப்பில் தம் கூட இருக்கும் ஆலவாயன் அழுகைச் செல்வன் ஊதல் மன்னனை உயர்த்தித் துதி பாடுவோர் என அனைவரும் ஐயத்தில் இருக்கிறார்கள். காரணம் நீண்ட நாட்களாக குப்பை குவிந்திருந்த முற்றத்தை கணக்கில் எடுக்காது வயல் ஒன்றை உழுது,  நெல் விதைக்கும் நோக்கில் புதிதாக ஒரு படை கிளம்பியிருப்பதாகவும் இதனால் தம் போன்றோரின் தனி மனித துதி பாடல்கள் யாவும் வெளியுலகிற்கு தெரிய வந்திடும் எனும் அச்ச நிலையிலும் ஆலவாயன் உறைந்து விட்டாராம்.எங்கே! வாருங்கள்! அரங்கிற்குள் நுழைவோம்! அரங்கிலே மன்மதக் குஞ்சு, ஆலவாயன், மாதுமை, பாலகன் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள்.

Thursday, December 22, 2011

Catch 44 - ஹாலிவூட் - ஆக்‌ஷன் - திரிலிங் திரை விமர்சனம்!

அழகுப் பெண்களின் அதிரடி ஆக்சன் - துப்பாக்கி முனை துணிகர கொள்ளை! 
மக்களின் பொழுது போக்கு அம்சங்களோடு இரண்டறக் கலந்த விடயமாகச் சினிமா இன்று மாறி விட்டது. கதையம்சம் உள்ள படங்களினை விட வணிக நோக்கில் மசாலாத் தன்மையுடன் கூடியதாகத் தயாரிக்கப்படும் படங்களுக்குத் தான் உலகளவில் இன்று சிறந்த சந்தை வாய்ப்பும் கிடைக்கின்றது. ஆங்கிலத் திரைப் படங்கள் - உலகத் திரைப் படங்களின் நிலையினை இந்த சந்தை வாய்ப்பின் அடிப்படையில் நோக்கும் போது ஒவ்வோர் படத்திலும் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதிலும், வித்தியாசமான கதைக் களங்கள் கொண்ட படங்களை உலக ரசிகர்களுக்குக் கொடுப்பதிலும் உலக சினிமாவிற்கு நிகர் உலக சினிமா தான்.

Wednesday, December 21, 2011

கடுப்பைக் கிளப்பும் கனவுக் கன்னிகள் & கொஞ்சும் கவிதைகள்!

சிந்துவினால் சிந்தனையினை இழந்த வாலிப மந்தியின் நிலை! 

அந்தியிலே வந்து போனாள் சிந்து - எனை
ஆதரவாய் கூட்டி சென்ற இடம் ஓர் சந்து!
மந்தியினைப் போல அவள் பின்னே சென்றேன்
மயக்கமது தெளிகையில் கட்டிலினால் கீழே விழுந்தேன்!

பீரங்கிப் படை மூலம் ஆமிக்கு பீதியைக் கொடுத்த புலிகள்!

அவசர அவசரமாக சந்திரிக்கா அம்மையார் தன்னுடைய படைத் துறைத் தலைமை அதிகாரிகளையும்,ஆயுதக் கொள்வனவுடன் தொடர்புடைய அதிகாரிகளையும் கொழும்புக்கு அழைத்து புலிகள் வசம் பல்குழல் உந்துகணைச் செலுத்திகளும் உள்ளன எனும் விடயத்தினையும் சொல்லித் தமது படை வலுச் சமநிலைக்கும் பல் குழல் உந்து கணைகள் வாங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஈழப் போரியல் வரலாற்றில் புலிகள் ஜெயசிக்குறு எதிர் சமரின் போதோ அல்லது 1997-1999 வரையான காலப் பகுதியிலோ பல் குழல் எறிகணை - உந்து கணைச் செலுத்திகளைப் பயன்படுத்தவில்லை.

Tuesday, December 20, 2011

இலங்கை இராணுவத்தின் தலையில் குண்டு மழை பொழிந்த புலிகள்!

இலங்கையில் அப்போது ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்காவின் கணவர் விஜய குமாரதுங்கா அவர்கள் நடித்த சிங்களப் படத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது தான் ஜெயசிக்குறு எனும் படை நடவடிக்கைக்கான பெயராகும். ஜெயசிக்குறு என்பதன் தமிழ் அர்த்தம் வெற்றி உறுதி என்பதாகும்.ஜெயசிக்குறு எனும் பெயர் கொண்டு வன்னியைக் கைப்பற்றும் நோக்கில் வந்த படையினரைப் புலிகள் எதிர்த்து நின்று போர் செய்யும் போது, செய் அல்லது செத்து மடி எனும் பெயரிலான மற்றுமோர் நடவடிக்கையினையும் அப்போது இராணுவம் மன்னார்ப் பகுதியினூடாக ஆரம்பித்திருந்தது. அப்போது செய் அல்லது செத்து மடி எனும் பெயர் தாங்கி வந்த படையினருக்கும், உலக நாடுகளுக்கும் புலிகள் ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள்.

Monday, December 19, 2011

சரித்திரத் தோழிகள் பிரிந்தனர்! சந்தோச மழையில் ஜெயா குழுவினர்!

திமுக தொண்டர்களின் அளவற்ற மகிழ்ச்சி நிலை! 

ஒரு கட்சிக்குள் இரு வேறு அம்மணிகள் பவர் - இதனால்
தினந் தோறும் தொண்டர்கள் எமக்கோ திண்டாட்டம்
பெருமைக்குரிய ஜெயா பக்கம் போவதா - இல்லை
போயஸ் தோட்டத்தின் ராணி சசிகலா பக்கம் நிற்பதா?
ஒருமித்து நாமெல்லாம் ஆதரவு கரம் கொடுத்தால்- இன்னும்
ஒரு சில மாதங்களில் கட்சியின் தலமையும் சசி கையில்!
வருத்ததோடு இருந்தார் ஜெயா! பெங்களூர் விசாரணையால் - தினம்
வாட்டத் தோடு மனம் நொந்தார் அம்மா! 
குருவிக் கூட்டை கலைப்பது போன்றே தன் கூட இருந்த - கட்சி
குல விளக்கை கலைத்தார்!
இனிமேல் கட்சிக்குள் பிரிவில்லை என நினைத்தார்!

முல்லைப் பெரியாறும் வாய்ச் சொல்லில் முக்கி முனகும் தமிழர்களும்!

சொல்லுக்கு முன்னே செயல் இருக்க வேண்டும் என்பது வாழ்வில் தடம் பதித்த பெரியோர்களின் அனுபவ வெளிப்பாடாகும். ஆனால் எம் தமிழர்களில் அதிகளவானோர் வெறும் காகிதப் போர் வீரர்களாகவும், வாய் சொல்லில் வீர முழக்கமிடும் அறிக்கை மன்னர்களாகவும் இருப்பது வேதனையளிக்கிறது. தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் நோக்கில் மலையாளத் திரைப்பட இயக்குனர் சோஹன்ரோய் அவர்கள் அடங்கிக் கிடந்த அணைக்கட்டு விவகாரத்தினை தன் படத்தினூடாக மீண்டும் புத்தியிர் பெறச் செய்திருக்கும் இவ் வேளையில் எம் தமிழ் தலை முறையில் சிலரோ வாய் சொல்லில் வீர முழக்கமிடுகின்றார்கள்.

Saturday, December 17, 2011

கை தொடும் தூரத்தில் தமிழகம்! கண்களில் நீருடன் கையாலாகாது ஈழம்!

மேகம் இடி இறக்கி மழை பொழிந்து
மேனியெல்லாம் செந்தமிழ் வழிந்தோடும்
அழகு நிறை திரு நாட்டில் இன்று
தண்ணீரின் வடிவில் ஓர் அவலம் -உறவுகளே
எம்மால் தாங்கி கொள்ள முடியலையே!!
என் செய்வோம் நாம்?
ஏதும் செய்ய இயலாது
கை கட்டியல்லவா
ஈழத்தின் ஓரத்தில் இருந்து
கண்களில் ஈரத்தை சுமந்து
கேரள தமிழக எல்லையில் நடக்கும்
கொடுமைகளை கேட்டும் பார்த்தும்
வெறுங் கையராக நிற்கின்றோம்!

Friday, December 16, 2011

அவலச் சாவினுள்ளே அழிந்து போன சந்ததியின் அழுகை குரல்!

ஆனையிறவின் உப்பளக் காற்றில்
கரைந்து போன 
உதிரங்களின் சுவாசத்தில் 
பிறந்திருந்தது, எங்களுக்கான 
ஒரு வசந்த காலப் பொழுது

ஒரு கும்மிருட்டை(க்)
குதூகலத்துடன் தரிசித்த
பெருமையில் 
பேருவகை கொண்டிருந்தோம், 
மிக நீண்ட நாட்களின் பின்னர்
கந்தகத்துகள்களினால் நிறைந்திருந்த
எங்கள் காற்று மண்டலத்தில்
நறுமணம் பரவத் தொடங்கியது,

வன்னி மக்களை துரோகிகளாக சபிக்கும் வல்லூறுகள்!

ஈழ வள நாட்டின் வடபால் அமைந்துள்ள வன்னிப் பகுதியினுள் மன்னார், வவுனியா, முல்லைத் தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கும். ஈழத்தில் ரணில் விக்கிரமசிங்க அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான சமரச முயற்சிகள் முறிவடைந்த பின்னர் மகிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது மீண்டும் யுத்த மேகங்கள் கருக் கொள்ளத் தொடங்கியது. இதனால் இறுதிப் போருக்கான இலங்கை அரச படைகளின் நகர்வுகளும் வன்னி மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த முல்லைத் தீவு, மன்னார் மேற்கு, கிளிநொச்சி, மற்றும் வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பகுதி ஆகிய பிரதேசங்களினூடாகத் தான் இடம் பெற்றது.

Thursday, December 15, 2011

வன்னி மக்களை கொல்லுங்கள்! மகிந்தரிடம் கொழு(ப்)(ம்)புத் தமிழர்கள் ஆவேசம்!

தப்பி வந்த ஓணாண்களை எட்டி உதைக்கும் வெளவால்கள்!

மேகத் திரை கூட்டங்களை விலக்கி - தம்
மேனி பார்த்து மகிழத் துடிக்கும் 
முகில் கற்றைகளாய்
வன்னி மக்கள் வாழ்வு!
விரும்பிய போது 
வீறாப்பு வசனங்கள் பேசி
உருவேற்றிடவும், 
வெறுத்திடும் வேளையில்
உவமை அணிகளை கையாண்டு
உச்சுக் கொட்டிடவும்
சபிக்கப்பட்ட ஓர் இனமாக
இந்த உலகினில் உள்ள
விடுதலை விரும்பிகள் 
கொடு முடி வேந்தர்கள்
கொழும்புத் தமிழர்கள் பார்வையில்
இறுதிப் போரில் தப்பிய
ஈனப் பிறவிகளாய்- வன்னி மக்கள்!

அவளை நான் அப்படி அணுகியிருக்க கூடாது - வில்லங்கமான முடிவு!

"உன்னைக் கொஞ்ச நாளா நோட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இன்டைக்கு உனக்கு ஒரு பெரிய தண்டனை கொடுக்கப் போகின்றேன். இந்தத் தண்டனை உன் எழுத்துப் பணிக்கும், இலக்கிய ஆர்வத்திற்கும் நிச்சயமாகத் தீனியாக அமையும்" எனச் சொன்னார் நகுலன் மாஸ்டர். பேச்சோடு பேச்சாக தன் மோட்டார் சைக்கிளின் முன் பக்க கூடையிலிருந்து ஒரு புத்தகத்தினை எடுத்துக் கொடுத்தார். அது நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் எனப் பெயரிடப்பட்ட பச்சை நிற அட்டைப் படத்துடன் கூடிய ஓர் புத்தகம். "அடடா! என்ன ஆச்சரியம்!" என என் மனதுள் நினைத்தவாறு; "மாஸ்டர் நீங்கள் எனக்கேன் இவ்வளவு நாளும் அந்தப் புத்தகம் பற்றிச் சொல்லவில்லை என்று கேட்டேன்? புத்தகத்தின் முக்கிய வேலையினை நீ தான் செய்யப் போகின்றாய். அதான் உனக்கு கொஞ்சம் சஸ்பென்ஸாக இருக்கட்டுமே என்று தான் சொல்லாது விட்டேன் என்று சொன்னார்.
இக் கதையில் வரும் நகுலன் மாஸ்டர் இவர் தான்.

Wednesday, December 14, 2011

சே! அவளை அப்படி அணுகியிருக்க கூடாது - விபரீத மன வெளிப்பாடு!

சந்நிதி முருகனின் தேர்த் திருவிழா பக்தி பூர்வமாக இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளமாக மக்கள் வெள்ளம் தூக்குக் காவடிகள், பாற் காவடிகள் (பால் செம்பு), முள்ளுக் காவடிகள் சகிதம் வீதியை நிறைத்திருந்தது. இப்போது வல்லை வெளி இராணுவ முகாமிற்கு அருகே வந்து விட்டோம். இன்று மக்கள் வெள்ளம் இந்த வீதியில் அலை மோதுவதால் கமெரா கையிலிருந்தால் ஒரு தொகைப் படங்களைச் சுட்டுத் தள்ளியிருக்கலாம்.  ஆமிக்காரனுக்கும் எங்கள் மீது சந்தேகம் வந்திருக்காது. எல்லாம் என் நேரம் என நொந்து கொண்டு (முகாமின்) மப்பினை வரைவோம் என நினைத்து என் பொக்கட்டினுள் பேனையும் கொப்பி ஒற்றையும் (நோட் புக் பேப்பர்) இருக்கும் எனும் நினைப்பில் கையை விட்டேன்! ஜீன்ஸ் துணி தான் என் கையில் முட்டியது.

Tuesday, December 13, 2011

கலைஞர் கருணாநிதிக்கு உதித்த காமெடிச் சுடலை ஞானம்!

மனித மனங்கள் விசித்திரமானவை. மனம் ஒரு குரங்கு என்பதற்கு அமைவாக எவர் மனமும் எப்போதும் மாறிக் கொள்ளலாம் என்பது நாம் அறியாத விடயமல்ல. ஆனாலும் சில மனித மனங்களை நாம் இலகுவில் எடை போடவோ அளவிடவோ முடியாது. தீவிரமான கொள்கைப் பிடிப்போ, அல்லது நிலையான அரசியற் கருத்தோ இல்லாத நிமிடத்திற்கு நிமிடம் மனம் மாறும் கலைஞர் கருணாநிதி அவர்களின் மனதை யாரால் தான் அளவிட முடியும்? கலைஞரின் அண்மைய மெஹா ஹிட் காமெடி தான் முல்லைப் பெரியாறு விடயத்தில் கேரளம் பணியா விட்டால் படையெடுப்பு நிகழ்த்துவேன் என்பதாகும். 

முல்லைப் பெரியாறும் முள்ளந் தண்டற்ற தமிழக அரசியல் வா(வியா)திகளும்!

உலகில் யுத்தங்கள் உரிமைக்காகவும், வறுமையினை நிறைவேற்றிடவும், அடிமைத் தளையினை அறுத்தெறிந்திடவும் இடம் பெறுகின்றன. ஆனால் எம் தாய்த் தேசத்தில் இடம் பெறும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சண்டைகளும்;சச்சரவுகளும் கொஞ்சம் வித்தியாசமானவை. தமிழர்களிடமிருந்து விவசாய உற்பத்தியினையும், மின்சாரத்தினையும் பெற்றுக் கொண்டு, முல்லைப் பெரியாற்றிற்கு அண்மையாக - தமிழக - கேரள எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான நீரினைத் திறந்து விடத் தார்மீக அடிப்படையில் இரக்கமற்ற கேரள அரசு இன்று செய்யும் வித்தியாசமான போர் தான் DAM 999 திரைப்படத்தினை ஆதாரமாக வைத்து மீண்டும் கிளப்பி விடப்பட்டுள்ள அணைக்கட்டு உடையும் எனும் அபத்தமான குற்றச்சாட்டாகும்.

Sunday, December 11, 2011

அம்மம்மா குழலும் அந்த மாதிரி நினைவுகளும்!

எங்கள் மனதில் ஆழப் பதிந்து விட்ட பால்ய கால நினைவுகள் எப்போதும் சுகம் தரவல்ல அழகிய வண்ணக் கோலங்கள். அந் நினைவுகள் மீட்டிப் பார்க்கையில் நெக்குருக வைத்து மனதில் எல்லை இல்லா இன்பம் தரவல்ல சக்தி படைத்தவை. நண்பர்களைப் பிரிந்திருக்கும் பொழுதுகளில், தனிமையில் நாம் இருக்கும் வேளையில்,முதியவர்களாகியிருக்கும் பொழுதுகளில் எம் பால்ய காலக் குறும்புகளை நினைத்து நமக்குள் நாமே சிரித்துக் கொள்வோம் என அனுபவசாலிகள் கூறுகின்றார்கள். இது நிஜமான ஓர் செயல் தான். எம் சிறிய வயதில் எம்மை அறியாது நாம் செய்யும் ஒவ்வோர் செயலும் பிறருக்கு ரசனையூட்டும் விடயங்களாகத் தான் அமைந்திருக்கின்றன.

Saturday, December 10, 2011

சே! அவளை அப்படி அணுகியிருக்க கூடாது!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் 750ம் இலக்கப் பஸ் நிறுத்துமிடத்தில் காத்திருக்கின்றேன்! வழமைக்கு மாறாக அன்றைய தினம் அதிகளவான பயணிகளால் பருத்தித்துறை செல்லும் பஸ் நிறுத்துமிடம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பஸ் நிறுத்தப்படுவதற்கு முன்பதாகவே ஓடோடிச் சென்று சீட் பிடிப்பதற்காக அடிபட்டு ஏறுவோரும், கண்டக்டரின் கையில் இருந்த டிக்கட் புத்தகத்தினால் அடி வாங்கி பஸ் நிறுத்த முன்பதாக எப்படியாச்சும் ஏறிட வேண்டும் எனும் ஆசையினை நிராசையாக்கி மக்கள் கூட்டத்தின் முன்னே ஏமாற்றமடைந்து மனமுடைந்து திரும்புவோர் இன்னோர் புறமுமாகப் பயணிகள் தமது பிரயாணத்தினை வேகப்படுத்தும் நோக்கில் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தில் தேர்த் திருவிழா இடம் பெற்றுக் கொண்டிருந்த நேரமது.

மக்களை மனித கேடயமாகப் பயன்படுத்திய புலிகள்!

ஈழப் போராட்டம் பல சாதனைகளையும், பல வேதனைகளையும் தந்து ஆயுதப் போராட்டத்திலிருந்தும் விலகி அனைத்துலகம் தழுவிய அறப் போரினை நோக்கிய வழியில் நடை போடுகின்றது. ஈழம் எனும் கனவினைத் தாங்கி ஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் தம் கொள்கையில் நின்றும் தவறி வேறு வழிகளை நாடிச் சென்று,மக்களை ஏமாற்றிப் பிழைக்க நினைக்கையில் புலிகள் அமைப்பினர் மாத்திரம் தாம் கொண்ட கொள்கையில் தீவிர பற்றுறுதியோடிருந்தார்கள். இறுதி வரை ஈழம் எனும் கனவினைத் தாங்கித் தம்மால் இயன்ற வரை போர் செய்த பெருமை பிரபாகரன் அவர்களுக்கும், அவரால் கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்குமே சாரும்! 

Friday, December 9, 2011

பீரங்கி கைப்பற்றி இலங்கை ஆமிக்கு பீதியைக் கொடுத்த புலிகள்!

ஆட்டிலறிப் பீரங்கிகளைத் தொட்டுப் பார்த்த தலைவர் வன்னியில் மக்கள் பார்வைக்காக வீதியால் இழுத்துச் சென்று மக்களுக்கு காண்பிக்குமாறு ஓர் சிறப்பு அறிவிப்பினை அப்போது போராளிகளுக்கு வழங்கினார். காட்டிலிருந்து பெற்ற குழைகளால் மறைக்கப்பட்டு வன்னியின் சில பகுதிகளில் பீரங்கிகள் இரண்டும் பொது மக்களின் பார்வைக்காக வலம் வந்தது.இப்போது புலிகள் கைகளிற்கு கிடைத்த புதிய ஆயுதத்தினை இயக்குவது;பராமரிப்பது முதலிய செயல்கள் போராளிகளுக்குப் புதியனவாகவே இருந்தது. அப்போது தான் புலிகள் அமைப்பின் பொறியல் - கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்த கேணல் ராஜூ (குயிலன்) அவர்களிடம் ஆட்டிலறிகளை இயக்குவதற்கான ஆலோசனைகள் கிடைக்கப்பெறும் எனும் நோக்கில் ஆட்டிலறிகள் இரண்டையும் கையளித்தார்கள் புலிகள்.

Thursday, December 8, 2011

கலியாண வயசுப் பையனின் கனவு குசு(று)ம்புகள்!

கலியாணம் கட்டாத பிரமச்சாரியின் கனவு(ப்) புலம்பல்!

குட்டி குஷ்பூவிடம் தம் மனதை(க்) கொட்டி(த்) தொலைத்தனர் பலர் 
தமிழில் ஹன்சி கொடி கட்டி(ப்) பறக்காளா என கோயிலில் - அங்க(ப்)
பிரதிஷ்ட்டை அடிக்கின்றனர் இன்னும் சிலர்!
நட்ட நடு இராத்திரியிலும் கனவில் ஹன்சி(கா) வரவே 
மிட் நைட் மசாலா தேடுகின்றனர் சிலர் - அவள் அழகு படுத்தும்
பாட்டால் ஹன்சியே கதியென அலையும் ஜொள்ளர்களும் நம்மில் உளர்!

கனியை நம்பி மணியை (Money) இழந்த ராசா!

பொதுச் சொத்தை கொள்ளையிட்டோர் வெது வெதும்பி மாய்வர்!

கிடைத்த பதவியினை வைத்து
இனிக்கும் ஊழல் செய்துநிரூபனின் நாற்று 
எனக்கும் சொத்துச் சேர்த்து -தமிழ்
சுரக்கும் கவி மொழியாம் கனியையும்
என் பங்கிற்கு கூட்டுச் சேர்த்தேன்!நிரூபனின் நாற்று
சுவிஸ் பேங்கில் டெப்பாஷிட் பண்ணி
சுக போக வாழ்க்கை நடாத்திட
நினைக்கையில் CBI வடிவில்நிரூபனின் நாற்று
வந்தது சிக்கல் - இப்போது
திஹாரின் வெப்பத்தில்
தினம் தினம் நிரூபனின் நாற்று
தனிமையில் தவிப்பதால் அடிக்கடி 
தொண்டைக்குள் எடுக்குது விக்கல்!

Wednesday, December 7, 2011

புலிகளை தோற்கடிக்க ஈழப் போரில் இராணுவம் கையாண்ட சூழ்ச்சிகள்!

வன்னிக் கள முனையில் ஓர் சமரினை ஆரம்பிக்கும் நோக்குடன் இராணுவத்தினரால் ஆயுத தளபாடங்களை வவுனியாவிலிருந்து ஓமந்தைப் பகுதி நோக்கி நகர்த்தும் நடவடிக்கைகளுக்கு புலிகளால் ஏற்படுத்தப்பட்ட உள்ளிருந்து ஊடுருவித் தாக்கும் தாக்குதல்கள்; மறைந்திருந்து தாக்கும் செயற்பாடுகள் அனைத்துமே 2007ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் சிறிது சிறிதாகக் குறைந்திருந்தன. கூமாங்குளத்தில் காலில் காயப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வன்னிக்கு அனுப்பப்பட்ட அமலன் இப்போது சிகிச்சை முடிந்து புதிய சில திட்டங்களோடு வவுனியாவிற்கு வந்தார். அந் நேரம் தலமைப் பீடம் நெருப்பினை வன்னிக்கு அழைத்தது.இராணுவம் வவுனியாவிலிருந்தா, மன்னாரிலிருந்தா வன்னிக்குள் தன்னுடைய படை நடவடிக்கையினை ஆரம்பிப்பது என குழம்பிக் கொண்டிருந்தது

வாக்குமூலம்-இளகிய மனமுடையோர் + குழந்தைகள் பார்க்க கூடாத படம்!

வாக்கு மூலம் விமர்சனம்: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்!
போர் இடம் பெறும் பகுதிகளில் அராஜகம், அக்கிரமம் நிறைந்த மனிதாபிமான உணர்வுகள் அற்ற இராணுவத்தினர் தம் எதிர்த் தரப்பினரைக் கைது செய்தால் சொற்களால் வடிக்க முடியாத மிக - மிக கொடுமையான துன்புறுத்தல்களை நிக்ழ்த்திப் பல ரசசியங்களைக் கேட்டு அறிந்து கொள்ள முனைவார்கள். உலக வரலாற்றில் ஹிட்லரின் சித்திரவதை கூடாரங்களையும், அமெரிக்கப் படைகளால் ஈராக்கியப் போராளிகளை,மக்களைச் சித்திரவதைக்கு உட்படுத்திய குவாண்டனமோ சிறை ஆகியவற்றினை விடவும் மிகவும் குரூரமான சிறைக் கூடங்கள் இன்றும் இலங்கையில் இருந்து வருகின்றன.

Tuesday, December 6, 2011

4ம் ஈழப் போரை திசை திருப்ப புலிகள் கையாண்ட (இ)ரகசியங்கள்!

ஈழப் போரியல் வரலாற்றில் இது வரை வெளி வராத மர்மங்கள்!
இராணுவம் இப்போது முன்பை விட தீவிர வெறியோடு புலிகளின் வவுனியா நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கங்கணம் கட்டத் தொடங்கியது. விமலன் வவுனியா வைரவப் புளியங்குளம் வீதியூடாக வீதிச் சோதனை நடவடிக்கையின் நிமித்தம் (ரோந்து) செல்லும் இராணுவத்தினர் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்துவதற்குத் திட்டமிட்டார்.வவுனியா வைரவப் புளியங்குள குளக் கட்டிற்கும் கீழ்ப் பகுதியில் நெல் வயல் அமைந்திருக்கிறது. நெல் வயலின் பின்னே அம்மன் கோவில் ஒன்று உள்ளது. விமலன் தன் திட்டத்தினைச் செயற்படுத்தும் நோக்கோடு அம்மன் கோவிலடிக்கு வந்தார். நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது நிரூபனின் நாற்று தளத்தில் வெளியாகும், ஈழப் போரியல் வரலாற்றில் இது வரை வெளி வராத மர்மங்கள் தொகுப்பின் ஒன்பதாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யவும். 

Monday, December 5, 2011

சிங்கள அரசை அச்சத்திற்குள்ளாக்கும் புலம் பெயர் தமிழர்கள்!

ஈழப் போராட்ட வரலாற்றில் புலம் பெயர் தமிழர்களின் தியாங்களும், அர்ப்பணிப்புக்களும், கடுமையான உழைப்பின் மூலம் ஈழ மக்கள் வாழ்விற்காகவும், போராட்ட நகர்விற்காகவும் அவர்கள் திரட்டி அனுப்பிய பொருளுதவிகளும் என்றும் நினைவில் கொள்ளத் தக்கவை. ஈழப் போராட்டத்தின் நவீன தள வடிவ (நவீன ஆயுத களமுனை நகர்வு) நகர்விற்குப் பக்க பலமாகத் தோள் கொடுத்து தம் வியர்வைத் துளிகளையெல்லாம் பணமாக்கி ஈழ மக்களின் வீரத்தினை உலகறியச் செய்வதற்கு உழைத்த பெருமைக்குரியவர்கள் எம் புலம் பெயர் தமிழ்ச் சொந்தங்கள். 

Sunday, December 4, 2011

மூக்கிலிருந்து (அசிங்கமான) டின் பால் உற்பத்தி செய்வோர்!

பாடசாலைக் காலங்களில் ஒவ்வொருவரின் குணவியல்புகளும் வேறு பட்டிருந்தாலும், குழந்தை தனமான எமது உள்ளத்தில் அக் குணங்களைப் பிரித்தறிய முடியாதிருக்கும். சின்னஞ்ச் சிறு வயதில் எம்மிடையே இருக்கும் வித்தியாசமான பழக்க வழக்கங்களைக் கூட நாம் வேறு பிரித்தறிய முடியாதவர்களா ஏதோ நற் செயல்கள் செய்து சாதித்த பெரியார்கள் போலப் பெருமைப்பட்டிருக்கிறோம். பள்ளிக் காலத்தில் பாலர் வகுப்பு (நேசறி) படித்த போது எம்மில் பலருக்குப் பல விதமான பழக்க வழக்கங்கள் இருக்கும். சின்ன வயசில் எம்மில் சிலர் ஸ்டைல் என்றால் என்னவென்றே அறியாதவர்களாக பள்ளிக்குச் சென்றிருப்போம். 

Saturday, December 3, 2011

தமிழரின் மானத்தை கப்பலேற்றும் ஆபாசத் தளங்கள்!

இன்றைய கால கட்டத்தில் தொழில் நுட்ப விருத்தியின் பயனாக நமக்குக் கிடைக்கும் நன்மைகளை விட நம்மை அச்சத்திற்குள்ளாக்கும் தீமையான விடயங்களே அதிகளவில் நடந்தேறுகின்றன.தொழில் நுட்ப முன்னேற்றத்தின் ஊடாக சந்தையில் தற்போது; தரத்தில் உயர்ந்த - அளவில் மிகச் சிறிய ஒளிப் படக் கருவிகள் (வீடியோ கமெரா) மலிவான விலையில் விற்பனைக்கும் வந்து விட்டது. கடனட்டை வசதி உள்ள ஒருவர் EBAY எனப்படும் இணைய கொடுக்கல் வாங்கல் துறையூடாக சீனச் சந்தையில் வெறும் $20 அமெரிக்க டாலர்கள் செலவழித்தாலே கூலிங் கிளாஸில் பொருத்தப்பட்ட வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் இயங்கும் சிறியளவிலான வீடியோ கமெராவினை அல்லது கையில் கட்டும் மணிக் கூட்டில் பொருத்தப்பட்ட கமெராவினை குறுகிய தினங்களுக்குள் இலங்கை இந்தியப் பகுதிகளுக்கு இறக்குமதி செய்து கொள்ளவும் முடியும்.

வாருங்கள் புலிகளை வைத்து பிழைப்பு நடத்துவோம்!

காலப் பெரு வெளியின் கனத்த இருள் நிறைந்த பக்கங்களைக் கடந்தவர்களாய் இன்று பெரு மூச்சு விட்டு, எமக்கான ஏதும் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் மகிழ்ச்சியோடு வாழ்வதாக நடிக்கப் பழகி விட்டோம். நமக்கான தீர்வோ, நாம் எதிர்பார்த்த எண்ணங்களுக்கான ஒரு பிடி நிலமோ கிடைக்கவில்லை என்றாலும், ஆட்சியாளர்களின் போலி நாடகத் திரை முன்னே நாம் இப்போதும் சந்தோசமாக இருப்பதாக காண்பிக்கப்படும் வேளையில் பணம் வாங்காது உடலை விற்கும் விபச்சாரி போல் எம் பங்களிப்பினையும் செய்யத் தொடங்கி விட்டோம். கந்தகத் துகள் செறிந்துள்ள எங்கள் காற்றும் இப்போது சுத்தம் செய்யப்பட்டு சிங்களத் தமிழ் கலந்து வரும் வடக்கு நோக்கிய வசந்த காற்றாக மாற்றம் பெற்று விட்டது. 

Friday, December 2, 2011

பீரங்கி கைப்பற்றல் மூலம் பேரெழுச்சியுற்ற வன்னி மக்களும் புலிகளும்!

ஆட்டிலறிகள் புலிகள் வசம் வந்தால் அப்போது பலாலி கூட்டுப் படைத் தளம் மீது யாழ்ப்பாணக் குடா நாட்டிலிருந்து புலிகளால் தாக்குதல் நடாத்த வசதியாக இருக்குமே எனும் எண்ணம் மக்கள் மனங்களில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் யாழ்ப்பாணக் குடா நாட்டின் வீழ்ச்சி வரை புலிகள் வசம் அந்த ஆட்டிலறிகள் என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. புலிகள் யாழினை விட்டுப் பின்னகர்ந்த காலத்தில் புலிகள் பூண்டோடு அழிவார்களா என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கையில் தான் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் முல்லைத் தீவு இராணுவ முகா மீதான தாக்குதலுக்குத் திட்டங்கள் தீட்டப்படுகின்றது. இந்தக் தாக்குதல் தொடங்கப்படுவதற்கு இறுதி நேரம் வரை போராளிகளுக்கு எந்த முகாம் மீதான தாக்குதல் இடம் பெறப் போகின்றது எனும் விடயம் புலிகளால் சொல்லப்படாது மிகவும் ரகசியமான முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

ஈழத்தில் ஆட்டிலறி கைப்பற்றி ஆமிக்குத் திருப்பியடித்த புலிகள்!

வரலாற்றின் பாதையில் தமிழர் தம் வீரம் பண்டார வன்னியனின் பின்னர் கரிகாலன் எனும் நாமத்தினூடாகத் தான் உலக அரங்கில் உச்சரிக்கப்பட்டது. புலிகளின் வளர்ச்சி, புலிகளின் திறமைகள், புலிகளின் திட்டமிடல்கள் என அனைத்துமே உலகின் பார்வைக்கும், இலங்கை இராணுவத்தின் பார்வைக்கும் இலகுவில் உய்த்தறிய முடியாத புதிராக இருந்த காலங்கள் அவை. ஓர் இன மானத்தின் அடையாளமாக, வீரத்தின் குறியீடாக விடுதலைப் புலிகள் ஈழத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இன்று அழியாச் சுடராக மக்கள் மனங்களினுள் வாழ்கின்றார்கள். புலிகளின் பல்லைப் பிடுங்கியதாகவும், புலிகள் பலமிழந்து விட்டதாகவும் உலக அரங்கிலும், இலங்கையில் வாழும் ஒட்டு மொத்த மக்கள் மத்தியிலும் சிங்கள அரசு தனது பிரச்சார நடவடிக்கையினை முடுக்கி விட்டிருந்த காலப் பகுதி அது.

Thursday, December 1, 2011

ஐயோ அவளுக்கு எயிட்ஸாம்! (வயது வந்தோருக்கானது)

(வயது வந்தோருக்கான விழிப்புணர்வு கதை)
குமரன் வாத்தியிடம் டீயூசன் முடித்து வீட்டிற்கு வந்து தன் தாயார் கோமதி ரெடி பண்ணி வைத்திருந்த சூடான தேநீரைப் பருகியவாறு கம்பியூட்டரை ஆன் செய்யத் தொடங்கினாள் ஜிலக்‌ஷா. "புள்ள ஜிலக்‌ஷா உனக்கு எக்ஸாம் கிட்டுதில்லே!கம்பியூட்டரில உட்காந்திருந்து டைம்மை வேஸ்ட் பண்ணுறதை நிறுத்திட்டு ஒழுங்கா படிச்சு முன்னுக்கு வாற வழியைப் பார்க்கலாமில்லே" எனத் தன் தாயார் அதட்டலுடன் ஏசிய ஏச்சினைக் கூடச் செவிமடுக்காதவளாக கணினி முன் உட்கார்ந்து பேஸ்புக்கினை ஓப்பின் செய்தாள் ஜிலக்‌ஷா. "இன்னைக்கு யாராச்சும் புதுசா ப்ரெண்ட் ரீக்குவெஸ்ட் கொடுத்திருக்காங்களா?" எனத் தேடியவளின் கண்ணுக்கு வர்ஷன் எனும் பெயருடன் ஒருவர் வெயிட்டிங்கில் கட்டழகு நிறைந்த தோற்றத்துடன் கூடிய போடோக்களை உள்ளடக்கிய புரோபைலுடன் காட்சியளிப்பது தென்பட்டது.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க