Saturday, December 24, 2011

குற்றவாளி கூண்டில் கொங்காபுரி பதிவர்கள் - அதிர்ச்சியில் பதிவுலகம்!

கொங்காபுரி பம்பு செட்டு குழுவின் தலமையகத்தில் அவர்களின் அல்லக்கைகள், நொள்ளக் கைகள், அரியணையில் மன்னர் இருக்கிறார் எனும் நினைப்பில் தம் கூட இருக்கும் ஆலவாயன் அழுகைச் செல்வன் ஊதல் மன்னனை உயர்த்தித் துதி பாடுவோர் என அனைவரும் ஐயத்தில் இருக்கிறார்கள். காரணம் நீண்ட நாட்களாக குப்பை குவிந்திருந்த முற்றத்தை கணக்கில் எடுக்காது வயல் ஒன்றை உழுது,  நெல் விதைக்கும் நோக்கில் புதிதாக ஒரு படை கிளம்பியிருப்பதாகவும் இதனால் தம் போன்றோரின் தனி மனித துதி பாடல்கள் யாவும் வெளியுலகிற்கு தெரிய வந்திடும் எனும் அச்ச நிலையிலும் ஆலவாயன் உறைந்து விட்டாராம்.எங்கே! வாருங்கள்! அரங்கிற்குள் நுழைவோம்! அரங்கிலே மன்மதக் குஞ்சு, ஆலவாயன், மாதுமை, பாலகன் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள்.
மன்மதக்குஞ்சு: பம்பு செட்டின் பம்மல் செம்மலே! எங்கள் துதி பாடலை ரசிக்கும் தும்பிக்கையானே! சே...ஒரு ப்ளோவில நானும் ஒரு வைரமுத்து எனும் நினைப்பில் இக் கவிதை வந்து விட்டது. மன்னியுங்கள் மன்னா.
ஆலவாயன்: மன்னிப்பெல்லாம் எதற்கு மன்மதக் குஞ்சே!உங்களை நினைத்தால் எனக்கு எரிச்சலாக வருகிறது. என் தனி மனித துதி பாடும் அறையில் நீவிர் எல்லாம் அமைச்சர்களாக சாரி ஒரு எழுத்தாளர்களாக இருக்கிறீர்களே! உங்களைப் போன்றோரை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது. கொங்காபுரியின் வைரமுத்து, கொங்காபுரியின் சுஜாதா, கொங்காபுரியின் கிரிக்கட் திலகம் எனப் பலர் இருக்கும் இடத்தில் ஒரு வயலைக் கருக்க முடியாது வாந்தி எடுக்கிறேனே. எனக்கே என்னைப் பார்க்க அசிங்கமாக இருக்கிறது. 

மாதுமை: மன்னா! என்னது நீங்கள் வாந்தி எடுக்கிறீர்களா? என்ன கொடுமை மன்னா! உங்களால் இன்னொருவர் வாந்தி எடுக்கலாம். ஆனால் நீங்கள் வாந்தி எடுக்கிறீர்கள் என்பதை நினைக்க என்னால் நம்ப முடியவில்லையே. ஒரு வேளை கொங்காபுரி இராமகிருஷ்ணா ரோட்டில் இருந்த உங்கள் .ஒரு தலைக் காதல் ராணி மீது கொண்ட மோகம் காரணமாக நீங்கள் பின் தொடர்ந்து கொங்காபுரியின் தலமைக் கம்பஸ் வரை சென்று அடி வாங்காத குறையாக மனம் நொந்து தும்முல்லைச் சந்தி ஊடாக பாதுகாப்பாக உங்களை கொண்டு வந்து விட்டார்களே! அந்தச் சம்பவத்தின் வெறித்தனத்தால் நீங்கள் சில வேளை ஏதும் தப்புத் தண்டா பண்ணி வாந்தி எடுத்திருக்கலாம் அல்லவா?

ஆலவாயன்: ஐ சே மாதுமை! என்ன பேச்சுப் பேசுகிறீர்! உம்மை என்னுடைய பீச்சாங் கை சாரி, என்னுடைய இடது கை, வலது கை என்று சொல்லுவதில் எனக்கே வெட்கமாக இருக்கிறது. சமீப காலமாக உம்முடைய துதி பாடல்கள், வால் பிடி நடவடிக்கைகள் யாவும் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆனாலும் நீர் மாதுமை என்று பெண் பெயரில் உம்முடைய பெயரை வைத்திருப்பதால் தான் உம் மீது எனக்கு ஒரு இது வந்து உம்மை இப்போது வரை என் அரண்மனையில் சாரி என் தனிமனித அறையில் வைத்திருக்கிறேன்!எதுக்கும் கொஞ்சம் அவதானமாக இரும் மிஸ்டர் மாதுமை! உம்முடைய இடத்தை எனக்காக கனடாவில் பூசகரை ஒழுங்கு செய்து அர்ச்சனை செய்த பாலகன் பிடித்து விடுவான்.

துதிப் பாலகன்: மன்னா நாம் இப்போது சீரியஸ்ஸான விடயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் இங்கே காமெடி கலாட்டா செய்து காலையில் கேட்கும் புன்னகை பாடலை நினைவுபடுத்துறீங்க. இதுவா எமக்கு முக்கியம்? கடந்த சில ஆண்டுகளாக எமக்குள் நாமே சுய இன்பம் கண்டு கொண்டிருந்த கொங்காபுரியின் சொந்தக்காரர்கள்,எழுத்தாளர்கள்,தலை சிறந்த இலக்கியவாதிகள் எனும் ஏக போக உரிமைக்கு கூட இப்போது எவன் எவனோவெல்லாம் ஆப்பு வைத்து விட்டார்கள். கவலையாக இருக்கிறது.

மாதுமை: பெரிய வட்டம் சிறிய வட்டம் என நமக்குள் நாமே வட்டம் கீறி, வாழ்த்துப் பாடி, பூசகரை வைத்து அர்ச்சனை செய்து விளையாடிக் கொண்டிருப்பதால் தான் எமக்கு இந்த நிலமை மன்னா. நாம் இவற்றைத் துறந்து வெளியே வரவேண்டும்! இருட்டறைக்குள் இருப்பதை விடுத்து வெளியுலகை தரிசிக்க வேண்டும். கிரிக்கட்டும், சினிமாவும் என ஒரே கிளிஞ்சல்களை மீண்டும் கிழித்துக் கொண்டிருப்பதால் எம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கே இப்போது ஏக்க காய்ச்சல் பிடித்து விட்டதாம். எம்மைச் சுற்றியிருந்தோரில் சிலர் இப்போது எமது படைப்புக்களைப் படிக்காது அண்டை நாட்டவரின் படைப்புக்களையல்லவா தேடிப் படிக்கப் புறப்பட்டு விட்டார்கள். 

ஆலவாயன்: நிறுத்துங்கள்! இப்போது நாம் ஒரு முக்கியமான விடயம் பற்றி பேச மறந்து விட்டோம்! இன்று என்ன திகதி என்பது கூட நினைவே இல்லாமல் அல்லவா பேசிக் கொண்டிருக்கிறோம். இன்று நாம் அனைவரும் நீதிமன்றிற்குச் செல்ல வேண்டும்.எமது முற்றத்தின் முதல்வன் பெற்றோல்மேக்ஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக வயலை அடியோடு அழிக்க நச்சு விதைகளைத் தூவும் நோக்கில் நீதிமன்றில் வழக்குப் போட்டிருநோம் அல்லவா. வாருங்கள் கிளம்புவோம்! உடனடியாக நாம் அனைவரும் நீதிமன்றில் அல்லவா ஆஜராக வேண்டும். 

மாதுமை: மன்னா அந்த நீதிபதியின் பெயர் உங்களுக்குத் தெரியும் தானே! அப்படியாயின் என் வலையினைத் தூசு தட்டி அவர் பெயரில் ஓரு வாழ்த்துக் கவிதை, போற்றல் கவிதை எழுதி விட்டு வந்தால் எமக்குச் சார்பாக அல்லவா தீர்ப்பு வழங்குவார்கள்!!

மன்மதக் குஞ்சு: என்ன பேச்சுப் பேசுகிறீர் மாதுமை! எம் மன்னரின் பீச்சாங் கை நீர் என்பதால் எதிர்ப் பேச்சுப் பேசாமல் நான் இப்போது இருக்கின்றேன். உமக்கு ரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பல்லவா கேட்கிறது. கொடுமை மாதுமை! 

பம்பு செட்டு மன்னர்கள் அனைவரும் இப்போது நீதிமன்றில் நிற்கின்றனர். நீதிபதி திரு கொடு முடி வேந்தன் எடு படை வேலவன் அவர்கள் இப்போது பம்பு செட்டு மன்னர்களை விசாரணை செய்யத் தொடங்குகிறார். பிறர் மீதான உங்கள் குற்றச்சாட்டுக்களை நான் கேட்க முன்பதாக உங்கள் மனச்சாட்சியைத் தொட்டு உங்கள் பக்கத் தவறுகளைச் சொல்லுங்கள் பார்ப்போம்! 

மன்மதக் குஞ்சு: மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே! ஒருவனை ஒன்பது பேர் கூடச் சேர்ந்து நின்று அடித்து எம் பம்பு செட்டிற்குப் போட்டியாக வந்து விடுவான் என விரட்டினோம். இது தான் எம் முதல் தவறு.
ஆலவாயன்: ஐயா மன்மதக் குஞ்சரே! எனக்கு டவுசரோடு ஊச்சா போகாத குறை! நீர் ஏன் இப்படி அரசியல் பேசுகின்றீர்? எனக்கு அரசியல் என்றால் அலர்ஜி என்று தெரிந்த பின்னுமா நீர் இப்படிப் பேசுகின்றீர்?
மன்மதக் குஞ்சு: உமக்கு என்ன குலை நடுக்கம் பிடித்து விட்டதா. நான் கொங்காபுரி நாட்டின் அரசியல் பற்றிப் பேசவில்லை மன்னா. தலை நகரை மையமாக வைத்து நாம் நடத்தும் மங்காத்தா விளையாட்டுப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்! கனம் நீதிபதி அவர்களே! என்னை இவர் அவமதித்து விட்டார். இனிமேல் இவரைப் பற்றிப் போற்றிப் புகழ்வது அழகில்லை என்பதால் அடியேன் இப்போதே விலகுகிறேன்! இவர்கள் கூட்டும் வேண்டாம்!  தனி மனித துதி பாடும் பாட்டும் வேண்டாம்! 
நீதிபதி: அடுத்ததாக யார் இங்கே வரப் போகிறீர்கள்?

பாலகன்: ஐயா! நான் தான் பாலகன் வந்திருக்கிறேன்! என்னைப் பற்றிச் சொல்ல முன்பதாக நாம் செய்த சாதனைகளைச் சொல்கிறேன் கேளுங்கள். 
முதற் பதிவினை வீக்கிப்பீடியாவிலிருந்து நகல் எடுத்து என் வலையில் வீரியமாய் சொந்தப் பதிவு போன்று எழுதினேன். எங்கள் பம்பு செட்டு மன்னருக்கு நலம் வேண்டி ஈழக் கோயில்களில் அர்ச்சனை செய்தால் பலன் கிடைக்காது எனும் நினைப்பில் கனடா நாட்டில் என் அக்காவைக் கொண்டு காலம் முழுதும் மன்னர் இதே இளமையுடன் வாழ வேண்டி யாகம் செய்தேன்! யாருக்கும் தெரியாது பம்பு செட்டு மன்னர்கள் தான் கொங்கா புரியின் கொடு முடி வேந்தர்கள் எனும் நினைப்பில் கவியரங்கம் வைக்கையில் ஒலிப்பதி செய்து என் தலையில் சாரி என் வலையில் ஏற்றி மகிழ்ந்தேன். அப்புறமா நானும் ஓர் ஊதல் மன்னாகுவேன் எனும் நினைப்பில் ஊரெல்லாம் மார் தட்டித் திரிந்தேன்! இறுதியில் எதுவுமே ஆகா நிலையில் இன்று நொந்து போனேன். 

நீதிபதி: இவ்வளவு தவறுகளையும் நீங்கள் உங்கள் வசம் வைத்துக் கொண்டு எப்படி பாலகரே! பிறர் மீது நீர் குற்றம் சாட்ட முடியும்? இன்று முதல் குற்றம் குறை கூறுவதை விடுத்து திருந்தி வாழும் வழியைப் பாரும். 

அடுத்ததாக கொங்காபுரியின் சுஜாதா அவர்கள் வருகிறார்: வணக்கம் நீதிபதி! மற்றும் கொங்கா புரி மக்களே! 

நான் தான் கொங்காபுரியின் சுஜாதா. என்னுடைய பிரதான தொழில் நாரதர் வேலை! ஹி....ஹி...
அப்புறமா என்னுடைய இன்னோர் வேலை, உண்ட வீட்டுக்கு வஞ்சகம் செய்தல். ஒட்டி இருந்து ஒட்டுக் கேட்டு எம் மன்னரிடம் போட்டுக் கொடுக்கும் நச்சுப் பாம்பு நான் என்று கொங்காபுரிப் பக்கத்தின் வடக்கில் பேசுகிறார்களே! அது உண்மை தான் ஐயா.

நீதிபதி: உம்மையும் திருத்த முடியாது கொங்காபுரி சுஜாதா அவர்களே! உம் தவறுக்குத் தண்டனையை முதலில் நீர் அனுபவியும். பிறகு அடுத்தவர் மீது குற்றம் சுமத்துவது தொடர்பாக நாம் ஆலோசிப்போம்! 

அடுத்ததாக ஆலவாயனை கூண்டிற்கு அழைக்கின்றோம்:
ஆலவாயன்: அனைவருக்கும் வணக்கமுங்க! நாற்பது பேரை என் கூட வைத்திருந்தேன்.எனக்குப் பிறந்த நாள் வரும் போது, என் கூட இருப்போருக்கு பிறந்த நாள் வரும் போது வாழ்த்தி மகிழுமாறு உத்தரவு போட்டேன். வலைப் பதிவும் ஓர் ஊடகம் என்பதனை மறந்து என்னை வாழ்த்துப் பாடுமாறு அறிவுரை சொல்லிக் கொடுத்தேன். யாருக்கும் தெரியாமல் நாம் ஓர் குட்டி இராஜ்ஜியம் நடாத்தி நமக்குள் நாம் தான் மன்னர் என்றும் உலகில் எம்மை விஞ்ச யாரும் இல்லை எனவும் உணர்ச்சிக் கொதிப்பில் வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று எங்கிருந்தோ வந்து எம் அண்ணன் பெற்றோல்மேக்ஸிற்கு எதிராக யாரோ படை திரட்டுகிறார்களாம். 

மாதுமை: என்னது படை திரட்டுகிறார்களா? எலுமிச்சம் பழத்தையும், தேசிக்காயையும் போட்டுத் தேய்த்தால் படை கழன்று விடும் அல்லவா?

ஆலவாயன்: என்ன பேச்சுப் பேசுகிறீர் மாதுமை? இப்படியா நான் உம்மை வளர்த்தேன்? 
மாதுமை: நாம் உம்மை வளர்த்தேன் என்று சொன்னால் ஏற்றுக் கொண்டிருப்பேன்! நீங்கள் நான் என்று தனிமையில் அல்லவா சொல்லி விட்டீர்கள். நீங்கள் எம்மை உங்களிலிருந்து பிரித்துப் பார்த்து விட்டீர்கள் ஆலவயா. ஆதலால் இனிமேல் உங்களோடு இணைந்திருப்பதில் எனக்கு துளியளவும் விருப்பமில்லை. இப்பொழுதே போகிறேன். நீங்களும் உங்கள் பம்பு செட்டும்! 

நீதிபதி: நிறுத்தும் மிஸ்டர் ஆலவாயன்! உங்களுக்கு எதிராக யாரோ படை திரட்டுகிறார்கள் என நீங்கள் கனவு காண்கிறீர்கள். நீண்ட நாட்களாக கூட்டித் துப்புரவு செய்யாத உங்கள் முற்றத்தினை இப்போது கூட்டி உங்களையும் யாரோ கணக்கில் எடுப்பதாக கனவு காண்கிறீர்கள். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்! புதியவர்களை நீங்கள் உங்கள் முற்றத்தில் இணைத்து ஒத்திசைவாக நடந்திருந்தால் இப்படி ஓர் நிலமை வந்திருக்குமா? இப்போது புதியவர்கள் அவர்கள் வழியில் கிளம்பியிருக்கிறார்கள். இவ்வளவு நாளைக்குப் பின்னரும் உங்களையும் யாராவது கணக்கில் எடுப்பார்கள் என நினைத்து நீங்கள் பில்டப் கொடுத்தால் அது உங்களின் அறியாமை. பிறர் மீது குற்றஞ்சாட்ட முன்பதாக உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம் அல்லவா? 

ஆலவாயன்: ஐயா நீதிபதியே தாங்கள் என்ன பேச்சுப் பேசுகின்றீர்கள்? எமக்கு ஆதரவாக தீர்ப்புச் சொல்லி வயலை அழிக்கும் முயற்சிக்கு நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்றால்; நீர் எம் மீதான தவறுகளை மாத்திரம் கேட்டு விட்டு; எம்மை நாமே திருத்தினால் பிறர் தானாகத் திருந்துவார்கள் எனத் தத்துவம் உரைக்கின்றீர். பொத்திக் கொண்டு இரும்! 
இருந்து பாரும்! இனி என்ன செய்கிறோம் என்று! இதோ எங்கள் வழியை நாங்களே பார்க்கிறோம்! வீரர்களே! சாரி என் அல்லக்கைகளே! என்னைப் போற்றிப் புகழும் வால் பிடிகளே! கிளம்புங்கள்! இப்போதே நாம் யார் என்று காட்டுகிறோம் இவர்களுக்கு! 

நீதிபதி: கொஞ்சம் பொறுங்கள் கோழைகளே! என்னது நீங்கள் யாரென்று காட்டப் போகிறீர்களா? ஹே...ஹே...என்ன சவால் விட்டு விட்டுப் போகின்றீர்கள்? எனக்குத் தெரியாதா நீங்கள் என்ன செய்வீர்கள் என்று? வயலைப் போன்று இன்னோர் போலி வலையினை உருவாக்குவீர்கள். இல்லையேல் வயலைப் போல இன்னோர் போலி வலையினை உருவாக்கி விட்டு, அதனை உருவாக்கியதும் வயல் குழுவினர் தான் என புரளியும் கிளப்பி விடுவீர்கள். எனக்குத் தெரியாதா உங்களைப் பற்றி? ஹே....ஹே... இது தானே உங்களால் முடிந்த உச்ச பட்ச வீரத் தனம்! இதோ இதனையும் காட்டுங்கள்! 

நீதிமன்றத்திலிருந்து தலையில் கை வைத்தவாறு எல்லோரும் ஓட்டம் எடுக்கின்றனர். அட நம்மளோட வீரத்தனம் சாரி கோழைத்தனம் கூடப் புதியவர்களுக்குத் தெரிந்து போச்சா? நமக்குள் யாரோ ஒருத்தன் இப்போது அவர்களுக்கு ஒற்றனாகி விட்டானா/ யாரவன் என்று ஐயம் மேலிட எல்லோரும் தமக்குள் தாமே அடித்துக் கொள்ளத் தொடங்குகின்றனர். 

இப் பதிவிற்கு நகைச்சுவைக்காக அல்ல! இப் பதிவினைப் படித்தாவது சிலருக்கு ஞானம் பிறக்க வேண்டும் எனும் நல் நோக்கத்திற்காக இப் பதிவு எழுதப்பட்டுள்ளது! இப் பதிவு யாரையும் குத்திக் காட்டும் நோக்கில் எழுதப்படவில்லை. இங்கே சுட்டியிருப்போர் தம்மைச் சூழ்ந்துள்ள வினைகளை போக்கி நல் வழியில் செயற்படவே எழுதப்பட்டுள்ளது. 
                                                                                                 யாவும் கற்பனையல்ல!
பிற் சேர்க்கை: இப் பதிவில் கூறப்பட்டுள்ள விடயங்கள் யாவும் மூத்த பதிவர்கள்,மற்றும் பதிவுலக நண்பர்களின் அனுபவங்களினூடாகப் பெறப்பட்ட விடயங்களாகும். இப் பதிவிற்கான உட் கருத்துக்களை வழங்கிய நண்பர்களுக்கு உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். இப் பதிவில் வரும் கொங்காபுரி எனும் நாட்டிற்குப் பதிலாக நீங்கள் இலங்காபுரி என்று மாற்றிப் போட்டு வாசித்து ஏதும் உபாதைகளுக்கு ஆளானால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல. ஹே...ஹே..

அன்பிற்கினிய உறவுகளே! உங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய நத்தார் மற்றும் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! பிறக்கப் போகும் இந்தப் புதிய ஆண்டில் எமைச் சூழ்ந்த தொல்லைகள் யாவும் விலகி வல்லமையுடன் தமிழன் வாழ்வு சிறக்க வாழ்த்துவோம் வாரீர்! 

47 Comments:

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

மொத சாட்சி

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நிரூபா! போஸ்ட் போட்டதும் வந்துட்டேன், தமிழ்மணத்துல நான் ஓட்டூப்போடாமயே 2 ஓட்டு இருக்கே? அது எப்படி? பை பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் கமெண்ட் போட்டு சண்டை போட துடிப்போர் சங்கம் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

ட்வீட்டர்ல நீங்க லிங்க் குடுத்ததும் வந்தேன், ஏதோ டெக்னிக்கல் பிராப்ளம் போல ,ஓப்பன் ஆகலை, இப்போ ரெடி ஆகிடுச்சு

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

மொத சாட்சி
//

வணக்கம் அண்ணே,
வருக வருக என்று வரவேற்கிறேன்.

ஹே...ஹே...

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>இந்தப் புதிய ஆண்டில் எமைச் சூழ்ந்த தொல்லைகள் யாவும் விலகி வல்லமையுடன் தமிழன் வாழ்வு சிறக்க வாழ்த்துவோம் வாரீர்!

ennadhu என்னது? விக்கி உலகம் பதிவுலகை விட்டு விலகனுமா? அப்புறம் போர் அடிக்குமே? நாம யார் கூட சண்டை போட ?

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
நிரூபா! போஸ்ட் போட்டதும் வந்துட்டேன், தமிழ்மணத்துல நான் ஓட்டூப்போடாமயே 2 ஓட்டு இருக்கே? அது எப்படி? பை பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் கமெண்ட் போட்டு சண்டை போட துடிப்போர் சங்கம் ஹி ஹி//

அவ்வ்வ்வ்..
அண்ணே பதிவு எழுதியதும் அப்லோட் ஆகலை. அதான் இப்படி ஆச்சு. அப்புறம் டிலீற் செய்திட்டு மறுபடியும் புதிய இணைப்பில் இதே பதிவினை இணைச்சிருக்கேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
>>இந்தப் புதிய ஆண்டில் எமைச் சூழ்ந்த தொல்லைகள் யாவும் விலகி வல்லமையுடன் தமிழன் வாழ்வு சிறக்க வாழ்த்துவோம் வாரீர்!

ennadhu என்னது? விக்கி உலகம் பதிவுலகை விட்டு விலகனுமா? அப்புறம் போர் அடிக்குமே? நாம யார் கூட சண்டை போட ?//

ஹே...ஹே..

என்னா ஒரு கொல வெறி உங்களுக்கு..

பாவம் அந்தாளு.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>மன்மதக்குஞ்சு: பம்பு செட்டின் பம்மல் செம்மலே! எங்கள் துதி பாடலை ரசிக்கும் தும்பிக்கையானே! சே...ஒரு ப்ளோவில நானும் ஒரு வைரமுத்து எனும் நினைப்பில் இக் கவிதை வந்து விட்டது.

மன்மதக்குஞ்சு: - இவர் ட்விட்டர் அக்கவுண்ட்ல இருக்காரே அவரா?

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

>>மன்மதக்குஞ்சு: பம்பு செட்டின் பம்மல் செம்மலே! எங்கள் துதி பாடலை ரசிக்கும் தும்பிக்கையானே! சே...ஒரு ப்ளோவில நானும் ஒரு வைரமுத்து எனும் நினைப்பில் இக் கவிதை வந்து விட்டது.

மன்மதக்குஞ்சு: - இவர் ட்விட்டர் அக்கவுண்ட்ல இருக்காரே அவரா?
//

அவர் இல்ல பாஸ்..இது கொங்காபுரி நாட்டில உள்ள ஒராளு!

குட்டிப்பையன் said...
Best Blogger Tips

வணக்கம் அண்ணே இது ஒரு மெகா உள்குத்து பதிவு போல இருக்கு ஹா.ஹா.ஹா.ஹா. செம கலாய்ப்பு போங்க

குட்டிப்பையன் said...
Best Blogger Tips

////அடுத்ததாக கொங்காபுரியின் சுஜாதா அவர்கள் வருகிறார்: வணக்கம் நீதிபதி! மற்றும் கொங்கா புரி மக்களே!

நான் தான் கொங்காபுரியின் சுஜாதா. என்னுடைய பிரதான தொழில் நாரதர் வேலை! ஹி....ஹி...
அப்புறமா என்னுடைய இன்னோர் வேலை, உண்ட வீட்டுக்கு வஞ்சகம் செய்தல். ஒட்டி இருந்து ஒட்டுக் கேட்டு எம் மன்னரிடம் போட்டுக் கொடுக்கும் நச்சுப் பாம்பு நான் என்று கொங்காபுரிப் பக்கத்தின் வடக்கில் பேசுகிறார்களே! அது உண்மை தான் ஐயா.////

ஹா.ஹா.ஹா.ஹா.எப்படி அண்ணே இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க ஹா.ஹா.ஹா.ஹா

குட்டிப்பையன் said...
Best Blogger Tips

படித்து படித்து சிரித்தேன் காலையில் ஒரு மெகா உள்குத்து பதிவின் மூலம் மனதை ரிலாக்ஸாக மாத்திவிட்டீர்கள் நன்றி அண்ணே

உங்கள் இந்த பதிவை படித்துவிட்டாவது.அவர்கள் புரிந்து கொண்டால் சரி....

ஜீ... said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ்!
என்னென்னமோ சொல்றீங்க பாஸ்! எதுவுமே எனக்குப் புரியல! எனக்குத் தெரியாதவர்களை,சம்பந்தமில்லாதவர்களை நான் கவனிப்பதில்லை!

நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.

ஆனால்...

இங்கு சுஜாதா பெயரைப் பாவித்திருப்பதை அவரின் ரசிகனாக , வன்மையாகக் கண்டிக்கிறேன்! தயவு செய்து அவரைக் கேவலப்படுத்த வேண்டாம்.
வேண்டுமானால் 'சுப்பிரமணிய சுவாமி' என்று மாற்றிக் கொள்ளவும்!

விக்கியுலகம் said...
Best Blogger Tips

மாப்ள என்னமோ நடக்குது ஹிஹி...நடக்கட்டும்...யாவும் நன்மைக்கே!

M.Shanmugan said...
Best Blogger Tips

ஹா ஹா ஹி ஹி

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

Powder Star - Dr. ஐடியாமணி said...
Best Blogger Tips

மச்சி, ரெண்டு மூன்று நாட்களாக செம பிசி! வலையுலகில் என்ன நடக்குதென்றே புரியலை! இன்னுமா அந்தப் பிரச்சனை தீரலை!

அப்புறம் ஒரு காமெடி சொல்கிறேன் கேள்! ஆக்சுவலி, நீ அவர்களைத் தாக்கியது எனக்குப் பிடிக்கலை! அதை நேரடியாகச் சொல்லி, உன்னுடன் பகையைத் தேடிக்கொள்ளவும் விரும்பல! ஸோ, இந்தப் பதிவுல ஏதாவது குற்றம் கண்டு புடிச்சு, அவர்களைக் கூல பண்ணணும் இல்லையா?

ஹி ஹி ஹி ஹி இப்ப பாரு என்னோட திறமையை! இனித்தான் நான் கமெண்டே போடப் போகிறேன்!

வணக்கம் நிரூ!

இப்பதிவில் நீ யாரை கிண்டல் பண்ணியிருக்கிறாய் என்று தெரியல! ( ஏன்னா எனக்கு வாய்க்குள்ள வெரல வைச்சா சூப்பத் தெரியாது பாரு!)

இருந்தாலும் இதில் திலகம் அக்காவின் பெயரைப் பாவித்திருப்பதைக் கண்டிக்கிறேன். திலகம் அக்கா ஒரு காலத்தில் எங்கள் ஊரில்........ சரி வேணாம்!

ஹி ஹி ஹி அவவோட ஹிஸ்ட்ரியா முக்கியம்! கண்டிக்கணும்! அதுதான் முக்கியம்!

ஹி ஹி ஹி !

Powder Star - Dr. ஐடியாமணி said...
Best Blogger Tips

மச்சி இதில் எனது அபிமான நடிகை, ( வில்லியாக நடிப்பவர் ) ராணியின் பெயரைப் பாவித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்! அவவின் ரசிகனாகச் சொல்லுகிறேன்! ராணி என்ற பெயரை நீக்கவும்!

வேண்டுமானால் சாணி என்று மாற்றவும்!

Powder Star - Dr. ஐடியாமணி said...
Best Blogger Tips

மச்சி இதில் முதல்வன் என்ற பெயரைப் பாவித்திருப்பதைக் கண்டிகிறேன்! அது எனது அபிமான படம்!

வேண்டுமானால் ஜெண்டில்மேன் என்று மாற்றவும்!

Powder Star - Dr. ஐடியாமணி said...
Best Blogger Tips

நிரூ, செம காமெடியா இருந்துச்சு! சிப்பு சிப்பா வருது........ !

மன்னரைக் கூட “ சரி ஓகே! ஏதோ பாவம் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படுறாரு! அப்படியே இருந்துக்கட்டும்”னு விட்டுடலாம்!

ஆனால் அந்த வால்பிடிகளின் இம்சை தான் தாங்க முடியல! அதிலும் அந்த பாலுக்கு அழுத பாலகனின் டார்ச்சர் தாங்கவே முடியல!

இந்தப் பாலுக்கு அழுத பாலகனின் இம்சை அரசனால் கூடத் தாங்க முடியவில்லையாம்! அதனால் தனது 500 வது பதிவில், இந்தப் பாலகனிடம் , “ என்ர செல்லக் குட்டியெல்லே! தேவையில்லாமல் ப்ளாக் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்காமல் போய் படியுங்கோ ராசா! உங்களுக்குப் படிப்புத்தான் முக்கியம்” என்று மறைமுகமாக மன்னர் அட்வைஸ் சொல்லிப் பார்த்தாராம்!

அதைக் கூடப் புரிந்துகொள்ளாத பாலகன், மன்னரைப் போற்றிப் புகழ்ந்துகொண்டு இருக்கிறாராம்!

மன்னர் தான் பிறந்த இடத்துக்குப் போகும் போது, மிகவும் எச்சரிக்கையாக இருப்பாராம்! காரணம் இந்தப் பாலகன் போற இடமெல்லாம் பின்னால வந்து, மன்னர் என்ன பண்ணுறார்? யார் கூட பேசுறார் என்று நோட்டம் விடுவாராம்!

மன்னர் சாதாராணமாக ஒரு பெண்ணுடன் தொழில் ரீதியாக ( அந்த தொழில் ரீதியாக அல்ல ) பேசினாலும் கூட, இந்தப் பாலகன் அந்தப் பெண்ணை அண்ணி என்று கூப்பிடுமாம்! அந்தளவுக்கு ஒரு வெங்காயமாம்!

Powder Star - Dr. ஐடியாமணி said...
Best Blogger Tips

மச்சி, அப்புறம் நாங்கள் ஏதோ எரிச்சல் பொறாமை, காழ்ப்புணர்வு கொண்டு மன்னரை திட்டுவதாக எல்லோரும் நினைப்பார்கள்!

நமக்கு மன்னர் மீது தனிப்பட்ட முறையிலும், அவரது தொழிலிலும் எந்தவித பிரச்சனையோ, எரிச்சலோ கிடையாது!

சொல்லப் போனால் அவரது தொழிலில் அவர் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்! அவரைப் பற்றி இதுவரைக்கும் யாருமே சரியானதொரு மதிப்பீட்டை வழங்கவில்லை என்பது எனது கருத்தாகும்!

மன்னரைப் பற்றி நான் ஒரு ரிப்போர்ட் வைத்திருக்கிறேன்! அது மன்னரைப் பற்றிய எனது மதிப்பீடு! மன்னருக்கே தெரியாத பல சங்கதிகள் இருக்கு! அவரின் திறமை + முக்கியத்துவம் அவருக்கே புரியாமல் இருக்கலாம்! ஆனால் நமக்குப் புரியும்!

மன்னரின் அல்லைக்கைகள் மன்னரின் பிறந்த நாளுக்கு எழுதும் பதிவுகளில் மன்னரைப் பற்றி எடை போட்டு, கண்டதையும் எழுதுவார்கள்! அவர்களது எழுத்தில் சின்னப் பிள்ளைத்தனம் தான் இருக்கும்!

“ மன்னர் ஒரு மனிதர்! அன்பானவர்! பண்பானவர்! நன்றாகப் பேசுவார்! நட்பை மதிப்பார்” இப்படித்தான் எழுதுவார்களே தவிர, மன்னரின் தொழில் சார்ந்து அவர் தமிழுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை எந்தவொரு வெங்காயமும் எழுதுவதில்லை! எழுதத் தெரியாது அவர்களுக்கு!

ஹி ஹி ஹி ஹி மன்னர் “ தான் யார்” என்று உண்மையாக அறிய வேண்டுமானால் அவரது அன்புக்குரிய எதிரிகளாகிய எம்மிடம் தான் கேட்க வேண்டும்!

எதிரிகளிடம் இருந்து பாராட்டுப் பெறுவதைப் போல ஒரு பாக்கியம் யாருக்கும் கிடைக்காதல்லவா?

Powder Star - Dr. ஐடியாமணி said...
Best Blogger Tips

அப்புறம் மச்சி, நீ ஒரு முறை கிளிநொச்சியில் ”பலரின்” முன்னிலையில் மன்னரின் திறமைகள் பற்றி உரையாற்றியது இன்னமும் என் காதில் ஒலிக்குது!

veedu said...
Best Blogger Tips

நிரூ....யாரை பற்றி எதுவும் சொல்லியிருக்கிங்களா...?கொங்காபுரி...எங்க ஊரை ஞாபகப்படுத்துது....ஹிஹி.
நாமளும் பிரபலமாகுனமல்ல....

veedu said...
Best Blogger Tips

//ennadhu என்னது? விக்கி உலகம் பதிவுலகை விட்டு விலகனுமா? அப்புறம் போர் அடிக்குமே? நாம யார் கூட சண்டை போட ?//
ஆஹா....ஹலோ மாம்ஸ் சீக்கிரம் உள்குத்து போடுங்க...(நாங்களும் கோத்துவிடுவம்ல்ல......)

Powder Star - Dr. ஐடியாமணி said...
Best Blogger Tips

நாம் பதிவுகளில் கண்டிப்பதைப் போல மன்னர் இந்த துதிபாடுறது, அதுக்குள்ள இதுக்குள்ள தலையை விடுறது இப்படியான வேலைகளை நிறுத்தினால் மன்னர் என்றென்றும் மதிக்கப்படுவார்!

மன்னரின் பிரதானே எதிரியே மன்னரின் ப்ளாக்கும் அவரது அல்லக்கைகளும் தான்!

மன்னர் தனது திறமையினால் நல்ல பெயரையும் புகழையும் சேர்த்து வைத்துக்கொண்டு, இந்த வீணாப்போன பதிவர் வட்டம், பதிவர் முக்கோணம், அதிகார மையம், என்று தேவையில்லாமல் தனது எனர்ஜியையும், நற்பெயரையும் வீணாக்குகிறார்! இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்!

மன்னர் தனக்குக் கிடைக்கும் ஃப்ரீ டைமில் நன்றாக உறங்கி ஓய்வெடுத்தாலே அவரது ஹெல்த்துக்கு நல்லது! அவருக்கு இந்த வட்டம் தேவையில்லை என்பது எனது கருத்து!

ஒன்று தெரியுமா, பதிவுலகில் இன்னும் சிலருக்கு துரத்தி துரத்தி அடிக்க வேண்டியுள்ளது! ( எழுத்தால் தான்! )

பல சமயம் மன்னருக்காகவும் பொறுப்பதுண்டு! மன்னர் தனது வேலையைக் கவனித்தால், அல்லக்கைகளை நாம் கவனிப்போம்!

எல்லாவற்றுக்கும் ஒன்றே ஒன்றுதான் காரணம்! - இலங்கைக் கலையுலகம் இனியாவது உருப்படணும்!

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

நிரூ, அடியும் தெரியாம நுனியும் தெரியாமல் ஏதோ தெரிஞ்ச கொஞ்ச பாத்திரங்களையும் நீங்க சொன்னதையும் வச்சு ஓரளவுக்கு விளங்கிட்டன்.. போக போக தெளிவா புரியும் தானே.. ஹி ஹி ஹி

FOOD NELLAI said...
Best Blogger Tips

செம உள்குத்துன்னு தெரியுது. கொஞ்ச நாளா பதிவுலகம் வராததால யாரை வாரியிருக்கீங்கன்னு தெரியல.

மதுரன் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூ..

சிரிச்சு சிரிச்சு முடியல்ல.. இத அரசபையில இருந்து யாராச்சும் படிச்சிருந்தா உச்சி மண்டைல சம்மட்டியால ஓங்கி அடிச்ச மாதிரி இருந்திருக்குமே

மதுரன் said...
Best Blogger Tips

அப்புறம் மணியண்ணை சொல்லுறதையும் நான் ஏற்றுக்கொள்ளுறன்.

நாங்க யாரையுமே எதிரியா பார்க்கல்ல. மன்னர் மீது இப்போதும் மதிப்பிருக்கிறது. அவர் அதை கெடுக்காமல் இருந்தால் சரி

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

வாரு வாருன்னு வாறியாச்சு அவ்வ்வ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

தமிழ்ப்பத்து என்னாச்சு நிரூபன்...?

மதுரன் said...
Best Blogger Tips

அப்புறம் நம்ம பாலுக்கழுத பாலகனின் இன்னொரு பக்கமும் எனக்கு தெரியும் பாஸ்.. ஹா ஹா அதெல்லாம் சொன்னா நாறிடும்..

தனிமரம் said...
Best Blogger Tips

நிரூபன் பாஸ். யாரையோ நல்லா அன்பு மழையில் நனையவிட்டிருக்கிறீங்க என்று மட்டும் புரியுது. 

தனிமரம் said...
Best Blogger Tips

 கிரிக்கட்டும், சினிமாவும் என ஒரே கிளிஞ்சல்களை மீண்டும் கிழித்துக் கொண்டிருப்பதால் எம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கே இப்போது ஏக்க காய்ச்சல் பிடித்து விட்டதாம். எம்மைச் சுற்றியிருந்தோரில் சிலர் இப்போது எமது படைப்புக்களைப் படிக்காது அண்டை நாட்டவரின் படைப்புக்களையல்லவா தேடிப் படிக்கப் புறப்பட்டு விட்டார்கள்.//
இதை நான் முழுமனதோடு ஏற்றுக்கொள்கின்றேன்  .இதை புரிந்துகொண்டால் நட்புக்கள் பெருகும் அல்லவா? 

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Best Blogger Tips

/பிறக்கப் போகும் இந்தப் புதிய ஆண்டில் எமைச் சூழ்ந்த தொல்லைகள் யாவும் விலகி வல்லமையுடன் தமிழன் வாழ்வு சிறக்க வாழ்த்துவோம் வாரீர்! //

வாழ்த்துகள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Best Blogger Tips

இன்று

ராஜபாட்டை பட விவகாரம் :விக்ரம் மேல கேஸ் போட போறேன்

திண்டுக்கல் தனபாலன் said...
Best Blogger Tips

அருமை! ரசிக்க வைத்தது உங்கள் குறும்பு!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்..!
என்ன இழவோ எனக்கு ஒண்டும் விளங்கள.. ஆனா கருணாநிதி தன்னை சுற்றி புகழ்சி கூட்டத்தை வைத்திருந்து யதார்த்தத்தை மறதது போல நீங்க சொல்லும் மன்னரும்(உண்மையாக அப்படி ஒருத்தர் இருந்தால்..!!??) இருந்தால் அவருக்கும் கருணாநிதி கதிதான்..!!)

shanmugavel said...
Best Blogger Tips

எனக்கு உள்குத்து பற்றி ஒண்ணும் தெரியவில்லை.ஆனால் பதிவு சுவாரஸ்யமாக இருக்கிறது.

எஸ்.பி.ஜெ.கேதரன் said...
Best Blogger Tips

என்னடா இது...
மதுரைக்கு வந்த சோதனை.!!!
டவுசரோடு உச்சா போவதா?
ஒன்றும் புரியவில்லையே.!!!ம்???

துஷ்யந்தன் said...
Best Blogger Tips

ஹா ஹா................ நிரு வை திஸ் கொலை வெறி??? :)))

துஷ்யந்தன் said...
Best Blogger Tips

நீங்கள் சொல்லும் கதைகள் எனக்கு அதிகம் தெரியாது... இப்போதுதான் கேள்வி பட்டோண்டு இருக்கேன்.... ஆனால் வயல் பேரில் போலி வயல் திறக்க சொன்னீங்களே... அந்த கதை மட்டும் தெரியும். எல்லாம் ..ரோ மயம். ஹீ ஹீ

Mahan.Thamesh said...
Best Blogger Tips

வணக்கம் மச்சி
நலமா இர்கீன்களா ,?
மச்சி சிரிப்பு சிரிப்பா வருது . இது உள் குத்த வெளிக்குத்த புரியல்ல

சசிகுமார் said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி...

♔ம.தி.சுதா♔ said...
Best Blogger Tips

நிரு இந்தப் பதிவை படித்து விட்டாலும் கருத்திடுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தேன்...

சிலதை சொல்லாமல் விடுவதால் பலரின் வீணான கற்பனைகளுக்குள் சிக்க வேண்டிவரும் என்பதால் கருத்திலேயே இடுகிறேன்...

என்பதிவுலக நோக்கம் பற்றி நீங்கள் அறிவீர்கள்.. இருந்தாலும் பொது இடத்தில் மற்றவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது...

எனது நோக்கங்களுடனும் தேவைகளுடனும் ஒத்துப் போகும் எவருடனும் சேர்ந்தியங்க நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன்...

பதிவுக்கு நொ கமண்ட்ஸ்..

(இதே பதில் தான் ரஜிக்கும் குழுமத்திற்கும் வழங்க உள்ளேன்..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

ஏன்யா இப்படி? ஒண்ணும் புரியல......!

பரமசிவம் said...
Best Blogger Tips

பன்னிக்குட்டி ராம்சாமிக்கு மட்டுமில்ல, நான் நாமக்கல் பரமசிவத்துக்கும் ஒன்னும் புரியலை ஐயா!!!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails