Monday, October 31, 2011

முத்தத்தை கேட்டால் வெட்கத்தை தருகிறாயே - ஏன்?

மனதினுள் ஒரு படபடப்பு, என் உள்ளத்தினுள் ஒரு குறு குறுப்பு. இன்றைக்கு எப்படியாச்சும் அவளிடம் போன தடவை கொடுத்த கடிதத்தில் சொல்லியதைப் பற்றி கேட்டுப் பார்த்திடனும். "அவள் அதற்கு ஒத்துக் கொள்வாளா" என மனம் ஏங்கியது. என்ன இருந்தாலும் நான் கட்டிக்கப் போகும் என் காதலி அல்லவா இவள் என அங்காலாய்த்தவாறு அவள் வருகைக்காய் காத்திருந்தேன் நான். கடற் கரையோரம் கனிந்த நல் காற்று உடலைத் தழுவ, அருகே அவள் இரு கைகள் என் உடலைத் தழுவாதா எனும் ஏக்கம் என்னுள் எழுந்தாட காத்திருந்தேன் நான். "ஓ! தூரத்தில் யாரது? குடையோடு! அவள் தானா! அடடா! நான் எதிர்பார்த்த மாதிரியே குடையோடு வருகிறாளா?" சிந்தையில் ஒரு கணம் சுய நினைவற்று சில்லென வீசிய காற்றினால் வருடப்பட்டு நிமிர்ந்து பார்த்தேன்!

Thursday, October 27, 2011

வெளியே சொன்னால் வெட்க கேடு - விவகாரமான விடயம்!

ஈழத்தில் நிலவிய யுத்த சூழல் காரணமாக தாயகத்தை விட்டுப் புலம் பெயர்ந்த உறவுகளின் மூலம் ஈழ மக்களிடையே தொற்றிக் கொண்ட வெளிநாட்டு மோகம் இன்றும் நின்றபாடில்லை. ஈழத்தில் தாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும், தமது பிள்ளைகளை தாம் படும் அதே அவல நிலைக்குள் வளர்க்க விரும்பாத பெற்றோர் பலர் வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும், என்ற நிலைக்கு ஆளாகின்றார்கள். அல்லது அம் மக்களைச் சூழ்ந்து வாழும் சமுதாய அமைப்பில் தமது பிள்ளைகள் வெளி நாட்டில் வாழ்கின்றார்கள் என்றால் பெருமை கிடைக்கும் எனும் நியதிக்கு அமைவாக தம் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பினால் தமக்கும் பிள்ளைகள் புலம் பெயர் நாட்டில் உள்ளார்களே; என்று மார் தட்டிக் கொள்ளலாம் எனும் நிலைக்கு ஆளாகின்றார்கள்.

வேலாயுதம் - தூள் கிளப்பும் ஆக்சன் - கொஞ்சம் பழைய சாயலடிக்கும் சென்டிமென்ட்!

இளகிய மனமுடையோர், மற்றும் குழந்தைகளுக்கு உகந்த படம் அல்ல!
புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொழுத்தி மகிழ்வோடு உறவினர்கள் அனைவருடன் இணைந்து தீபத் திருநாளைக் கொண்டாடி விட்டு, கணினி முன்னே உட்கார்ந்திருப்போருக்கும், மற்றும் ஏனைய உறவுகளுக்கும் வணக்கம் & மீண்டும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்! தமிழ் சினிமா வரலாற்றில் நீண்ட காலமாக இருந்து வந்த பண்டிகைக் கால ரஜினி - கமல் படங்களின் அந்தஸ்தினையும், தியேட்டர் உரிமத்தினையும் தற்போது தன் வசம் தக்க வைத்திருக்கும் ஒரேயொரு மாஸ் ஹீரோ இளைய தளபதி விஜய் அவர்கள் தான்.  பண்டிகைக் காலத்தில் வெளியிடப்படுகின்ற படங்கள் ஜனரஞ்சக அந்தஸ்தினைக் கருத்திற் கொண்டு வெளியடப்படும் அதே சூழலை உணர்ந்தவர்களாக கதாநாயகர்கள் படக் கருவினைக் தேர்வு செய்தால் மக்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும்! அதே வேளை சலிப்பும் இருக்காது.

Tuesday, October 25, 2011

LIMITLESS - ஹாலிவூட் திரிலிங் பட விமர்சனம் - போதை மாத்திரையால் சூப்பர் மேனாகும் ஹீரோ!

முன் அறிவித்தல்: இளகிய மனமுடையோர்க்கு உகந்த படம் அல்ல.
பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய உறவுகளே! சில திரைப்படங்கள் அப் படம் கொண்டிருக்கும் கதை நகர்விற்கு அமைவாக "ஏன்டா இப் படத்திற்கு வந்தோம்" என மனதில் சலிப்பினை ஏற்படுத்தி விடும். சில திரைப்படங்களோ, எம் மனதில் இருக்கும் ஏனைய சிந்தனைகளையெல்லாம் மறந்து அப்படியே அத் திரைப்படத்தோடு ஒன்றித்திருக்க வைத்து விடும். ஆரம்பத்தில் கொஞ்சம் சலிப்பினை வர வைத்தாலும் படத்தின் மையப் பகுதியில் சூடு பிடிக்கத் தொடங்கும் திரைப்படங்களும் இருக்கின்றன. இன்றைய இயந்திர உலகில் மக்கள் பொதுவாக விரும்புவது மனதினை மகிழ்விக்கின்ற, அதே நேரம் மக்களை இலகுவில் கவர்கின்ற படங்களையே ஆகும். அந்த வகையில் நாம் இப் பதிவின் வழியே அலசவிருக்கும் படம் தான் LIMITLESS.

திண்டிவனத்தில் சீரழிக்க நினைத்தவனை மண்டியிட வைத்த பெண்!

திண்டிவனம் அருகே தீராத காதலோடு
தேவதையை எதிர்பார்த்து நின்றார் கங்காணி
கொண்ட கொள்கை என்னவோ கொளுத்த 
ஹன்சிகா போல் உடல் வாகு
கொண்ட பிகர் தனை பார்த்து
காதல் உரைத்து; அவள் மறுத்தால்
மன்றாடி மங்கை காலில் விழுந்து
மனசிற்குள் நுழைந்து கொண்டாடி மகிழனுமாம்! 

Saturday, October 22, 2011

மாலை நேரம் - விமர்சனம் - ஆர்வ கோளாறால் அவதிப்பட வைக்கும் பருவ காதல்!

மனிதனிடத்தே காதல் எப்போது வந்து தொற்றிக் கொள்ளும் என்று யாராலும் இலகுவில் அறிந்து கொள்ள முடியாது. மனித இனத்தில் உடல் உள ரீதியான வளர்ச்சி ஏற்படும் போது வந்து கொள்ளும் காதலுக்கும், பருவமடைய முன்னர் வரும் காதலுக்கும் இடையில் பல வகையான வேறுபாடுகள் உண்டு. எம் தமிழ் சமூகத்தின் வரலாற்றுப் பாதையில் தெய்வீக காதல் முதல் நாய் காதல் வரை மனிதன் தன்னால் எங்கெல்லாம் அன்பைச் செலுத்த முடியுமோ அங்கெல்லாம் தன் அன்பைச் செலுத்தி மகிழ்ந்திருக்கிறான். அறியாத வயதில் தாம் ஏன் காதல் கொள்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவேதுமின்றி எமக்குள் தோன்றும் காதல் கை கூடி வந்தாலும், அந்தக் காதல் தருகின்ற விளைவு என்னவோ சமூகத்திற்கு ஒவ்வாத ஒரு தகாத செயலாகவே இருக்கின்றது.

குடு குடு பாட்டிகளின் கல கல நினைவுகள்!

ஒவ்வோர் வருடமும் பிறந்த நாள் வருகின்றதே என நாம் மகிழ்ச்சிக் கடலில் துள்ளிக் குளித்து குதூகலிக்கும் போதெல்லாம், அணைக்கப்படும் மெழுகுவர்த்திப் புகையோடு சேர்ந்து காணாமற் போய் விடுகின்றது வயதாகின்றதே என்கின்ற நினைப்பு. நாம் வாழும் காலத்தில் ஒவ்வோர் வருடமும் ஓராண்டு குறைகின்றதே என கவலை கொள்வோரை விட; எமக்கு அடுத்த பிறந்த நாள் எப்போது வரும் என ஆவல் கொண்டிருப்போர் தான் இவ் உலகில் அதிகமாக உள்ளார்கள். வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் எம் உலகியல் ஆசாபாசங்கள் நீங்கப் பெற்றவர்களாக நாம் ஆண்டு, அனுபவித்து மாண்டு போகும் நாளை எண்ணிக் காத்திருந்தாலும் தீராத நோயால் வாடுவோரைத் தவிர யாருமே சாவை விரும்பி அழைத்துக் கொள்வதில்லை.

Friday, October 21, 2011

OPERATION ELLALAN - மெய் சிலிர்க்க வைக்கும் தற் கொடை போராளிகளின் உண்மைச் சம்பவம்!

ஒரு இயக்குனர் தன்னிடம் உள்ள குறைந்தளவான மூல வளங்களின் உதவியோடு மிகப் பிரமாண்டமான தயாரிப்பிற்கு நிகரான படத்தினைக் கொடுப்பாராயின் அந்த இயக்குனரின் சாதனைக்கும், அவரது கிரியேட்டி விட்டி மனப் பாங்கிற்கும் ஈடு இணை இல்லை என்று கூறலாம். இலங்கையின் தமிழ்த் திரைப்பட வளர்ச்சிப் பாதையில் வட கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் எப்போதும் தனித்துவமானவை.வரலாற்றுப் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. யுத்தப் பிரதேசத்தில் பாரியளவு மூல வளங்கள், தொழில் நுட்ப உதவிகள் இல்லாத சந்தர்ப்பத்திலும் புலிகளின் திரைப் படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட படங்கள் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நிகரான அந்தஸ்தினைப் பெற்று நிற்கின்றன. 

Thursday, October 20, 2011

ஈழத் தமிழர்களின் இருள் சூழ்ந்த வாழ்வு - சிறக்குமா இல்லை சிதையுமா?

"ஈழத்தில் இருப்பவர்க்கு இப்போது என்ன குறை" என ஒரு சிலரும், ஈழத்தில் இப்போதும் அதே அடிமை நிலையும் சிங்கள அரசின் அடக்கு முறையும் நிலவுகின்றதே என இன்னொரு தரப்பினரும் ஒரு வரை ஒருவர் போட்டி போட்டு வெல்ல முடியாதவர்களாய் பிரச்சாரப் போர் நடாத்தி வருகின்றார்கள். ஈழத்தில் யுத்தமற்ற சூழல் நீங்கி, மக்கள் வாழ்வினை மீளக் கட்டியெழுப்பும் திட்டங்கள் பெயரளவில் தொடங்கப்பட்டாலும், ஈழத்திலுள்ள மக்கள் தம் நாளாந்த வாழ்க்கையினை வெளியே சொல்ல முடியாத ஒரு வித அச்ச உணர்வோடு தான் கழிக்கின்றார்கள். ஆக இங்கே ஈழத்தில் பாலாறும் தேனாறும் ஓடுகின்றது என்பது உலக நாடுகளை ஏமாற்றும் நோக்கில் இலங்கை அரசால் முன் வைக்கப்படும் பொய்ப் பிரச்சாரேம்! 

Wednesday, October 19, 2011

UNLIMITED DARKNESS - விமர்சனம் - கள்ளக் காதல் பற்றிய புரிதலற்ற நிலை!

வாழ்க்கையில் புரிந்துணர்வோடு நாம் வாழப் பழகிக் கொண்டால் பல புரிதலற்ற விடயங்களை வெற்றிகரமாகச் சாதிக்க முடியும். சந்தேகமும், நம்பிக்கையினை உடைத் தெறிகின்ற சபல புத்தியும் சந்தோசத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது யதார்த்தம். நாம் ஒருவர் மீது கொண்டிருக்கிற அளவு கடந்த நம்பிக்கையின் வெளிப்பாடு தான் சந்தேகம் என்று மனோதத்துவ ஆய்வாளர்கள் விளக்கம் கூறினாலும், ஒரு மனிதன் வாழும் சூழலும், அவனைச் சூழ்ந்து நடக்கும் சமூக மாற்றங்கள் அவனது துணை பற்றிய சந்தேகத்திற்கு தூண்டு கோலாக அமைந்து கொள்கிறது.

Tuesday, October 18, 2011

அகதித் தமிழனின் அவலச் சாவு - உண்மைச் சம்பவம்!

"டெய்சி,  நான் உணர்ச்சி வேகத்தில அப்படிச் செய்திட்டேன். என்ன பண்ண? ஒரு நிமிடம் யோசித்திருந்தா, உங்களை கை படாத பூவாக வாழ விட்டிருக்கலாம். என் மேலையும் தப்பில்லைத் தானே? நீங்க வளைந்து கொடுத்தீங்க. நான் வளைத்துக் கொடுத்தேன். இனிமே இந்த உறவு வேணாம். நான் உங்களைக் கல்யாணம் கட்டுற முடிவ மாத்திக்கப் போறேன். ஒரு கீழ்ச் சாதிப் பொண்ணை கல்யாணம் கட்ட எங்க வீட்டில ஒத்துக்க மாட்டாங்களாம். மன்னிச்சிடு டெய்சி!" என அவள் காலில் விழுந்து மண்டியிட்டுப் பேசிய வேந்தனைப் பார்த்து சடாரென ஓங்கி கன்னத்தில் அடிக்காத குறையாக வார்த்தைகளை அனல் பறக்க வீசத் தொடங்கினாள் டெய்சி. 

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 11

இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....

பத்தாவது பாகத்தின் தொடர்ச்சியாக....
ஐயா எப்படி ஒத்த பண்பாடு, ஒத்த மொழிப் பேச்சு உடையவர்கள் என்று எப்படி ஆதாரம் இல்லாது சொல்லுவீங்க. Any Evidence? என நான் கேட்கையில், ஐயா சிரித்தவாறு, பொடியனுக்கு சுமதி டீச்சரிடம் ரெண்டு நாள் படிச்ச இங்கிலீஸ் ஒர்க் பண்ணுது என நக்கல் அடித்தார்.  ஆதாரம் இல்லாமல் நான் ஏதும் சொல்லுவேனோ பேரா? கொஞ்சம் பொறுமையாக கதையினைக் கேள் பேரா எனச் சொல்லியவாறு ஐயா தொடர்ந்தார்.

Sunday, October 16, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 10

இலங்கைத் தமிழர்களின் மொழி - கலாச்சார - வரலாற்றுப் பரம்பல்:
இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....

ஒன்பதாவது பாகத்தின் தொடர்ச்சியாக.....

இவ்வாறு ஐயா நீண்ட தன்னுடைய பிரசங்கத்தை நிறைவு செய்கையில் அம்மா தான் வரலாற்றினை முழுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தா(ர்) என்பதற்கு சான்றாக "இலங்கையில் தமிழ் மொழியின் பரம்பல், தமிழ் மொழி தமிழர்களின் பேச்சு மொழியாக எப்படி உருமாற்றம் பெற்றது என்று சொல்லாமே" என ஐயாவிற்கு நினைப்பூட்டினா(ர்). 


"இன்னைக்கே நான் சொல்லத் தொடங்கி என்னோட நித்திரையினையும் கை விட்டு நிற்பதுதான் உனக்கு விருப்பமோ? இப்பவே பேரன் தூங்கிட்டான். அவனைக் கொண்டு போய் தூங்க வை.நான் நாளைக்கு மிகுதி வரலாற்றினைச் சொல்கிறேன்" எனப் பேசியவாறு படுக்கையறையினை நோக்கிப் போனார் ஐயா.

Saturday, October 15, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 09

இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு: 
இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....
ஏழாவது பாகத்தின் தொடர்ச்சியாக.......
இலங்கைத் தீவில் வாழும் மக்களுள் முஸ்லிம் மக்களும் தமக்கென்றோர் தனியான, நீண்ட பாரம்பரிய வரலாற்றினைக் கொண்டவர்களாக வாழ்கிறார்கள்.  இலங்கைத் தீவில்(ஈழத்தில்) முதன் முதலாக வியாபார நோக்கோடு கி.பி 414ம் ஆண்டு தென் அரேபிய வர்த்தகர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆனாலும் அவர்களது வருகையானது வியாபார நோக்கத்தோடு அமைந்து கொள்கிறது. இதன் பின்னர், கி.பி 628ம் ஆண்டளவில் "வஹாப் இப்னு அபீ ஹப்ஸா" எனும் நபிகளின் தோழர் இலங்கைக்கு வருகை தந்து, "இலங்கையர்களை இஸ்லாமியர்களாகவும், இலங்கை மன்னனாக அக் காலத்திலிருந்தவனை இஸ்லாமிற்கு மதம் மாறும் படியும்" கோரியிருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

Friday, October 14, 2011

மஹிந்த மாமா மரணத்தை மறந்து பேசலாமா!

வணக்கம் ஐயே
என்று என் கவியை(ச்)
சுணக்கம் ஏதுமின்றி
ஆரம்பிக்க முடியாது,
"ஐயே" என்றால்
நீங்கள் இப்போது
உச்சரிக்கும்
அரை குறைத் தமிழில்
அது ஐயம் என ஆகிப்
பொருள் கொள்ளப் படுமோ
என அடியேனுக்கு
ஐயம் உண்டாகி விட்டது!

Thursday, October 13, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 08

இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....
ஏழாவது பாகத்தின் தொடர்ச்சியாக.......
"ஐயா முஸ்லிம்கள் பற்றி ஏதும் சொல்லையே?" என நான் மீண்டும் நினைபடுத்தினேன். "நிரூபன் பொடியன் (பையன்) என்னைத் தூங்கவும் விட மாட்டான் போலிருக்கே" என்று ஐயா செல்லமாய்க் கோபித்தவாறு, "நாளைக்கு இரவு உனக்குத் தூக்கம் வரப் பண்ண ஏதும் வேணுமில்லே! அப்போ நாளைக்கே சொல்றேன்" என்றவாறு படுக்கையறைப் பக்கம் போனார்..............

விம்மும் கலைஞர்! வாக்குறுதி வீசியதால் பம்மும் ஜெயலலிதா!

விம்மியழும் கலைஞர்!


கண்ணீரில் மூழ்கி கதறியழுகின்றார் ஐயா கலைஞர்
கனிமொழியின் வாழ்வையும் சிதைத்த முன்னாள் தமிழ் தலைவர்!
மண் ஆசையால் இன்றும் போக மனமின்றி தள்ளாடுகின்றார்
மஞ்சள் துண்டே சரணம் என நாளும் திண்டாடுகின்றார்!

தமிழ்த்தாயின் மடியில் தன்னுயிர் போகுமாம்
தவறுகளைச் செய்த உயிர் காரணமாய்
தமிழுக்கும் அ(இ)ழிவு வந்து சேருமோ?

Wednesday, October 12, 2011

ஈழத்தில் இயல்பு நிலை தோன்றின் புலம் பெயர் தமிழர்கள் தாயகம் திரும்புவார்களா?

விவாத மேடை:
பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே, உங்கள் அனைவரையும் மீண்டும் மற்றுமோர் விவாதமேடை பதிவினூடாகச் சந்திப்பதையிட்டு அகம் மகிழ்கின்றேன். ஈழத் தமிழர்களுள் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை நாம் பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்ளலாம். 
*உயர்கல்வி நோக்கிலும்,தமது கல்வித் தகமை அடிப்படையில் (Professional Qualification) புலம் பெயர்ந்தோர் (Skilled Migrants)
இம் மக்கள் எக் காலத்திலும் தாயகம் திரும்ப மாட்டார்கள். காரணம் இவர்கள் தாமாகவே வசதி வாய்ப்புக்களினைத் தேடிப் புலம் பெயர்ந்த மக்கள்.

Tuesday, October 11, 2011

HITMAN -ஹாலிவூட் பட விமர்சனம்- விறு விறுப் பூட்டும் திரிலிங் - விருந்தளிக்கும் கிளாமர்!

முற்று முழுதாகப் பொழுது போக்கினையும், சிறியளவில் சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய நற் கருத்துக்களையும் உள்ளடக்கி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களில் அதிகளவானவை பல தரப்பட்ட ரசனையுள்ள மக்கள் மனங்களைத் திருப்திப்படுத்துவதில்லை. ஆக்‌ஷன் பட விரும்பிகளையும், காதல் ரசனையுள்ளவர்களையும், கவர்ச்சிக் காட்சி விரும்பிகளையும் ஒருங்கு சேர்த்துத் திருப்திப்படுத்தும் தரமான கமர்சியல் படைப்பினை எல்லா நேரத்திலும் இயக்குனர்களால் வழங்க முடிவதில்லை. கமர்சியல் படைப்பாகப் பல தரப்பட்ட ரசனையுள்ளவர்களின் மன ஓட்டத்தினைப் புரிந்து கொண்டு ஒரு படத்தினை இயக்குனர் தருகின்ற போதும் படத்தினைப் பார்ப்பதற்கான வயதெல்லை என்பது அப் படத்திற்கு கிடைக்கும் சமூக அங்கீகாரத்தினை உடைத் தெறிந்து விடும்.

Monday, October 10, 2011

பெண் புலிகள் கூட்டம் - களமாடிப் பெருமை கொண்ட ஈழப் போராட்டம்!

கரு முகில்கள் சூழ்ந்து இடி இறக்கி, கணப் பொழுதில் தமிழினம் அழிந்து விடும் என பரப்புரை செய்து நின்றவர்கள் மத்தியில் வாழும் தமிழினம் இலகுவில் வீழும் நிலையினை எய்திடாது என்பதனை உணர்த்தி நின்றவர் பிரபாகரன். அகில உலகிற்கு ஈழத் தமிழருக்கென்று ஒரு தனித்துவமான வீரஞ் செறிந்த வரலாறு உண்டென்பதை நிரூபித்துக் காட்டிய பெருமை அவரால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினையே சாரும். தரை, கடல், வான் என முப் படைகளையும் உள்ளடக்கி தமிழர் வரலாற்றின் கறை படிந்த நாட்களில் இனவாதம் விதைத்த சாபங்களை அடியோடு அகற்றிடக் களமாடிய பெருமையினையும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கொண்டிருந்தார்கள்.

Sunday, October 9, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 07

இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....
ஆறாவது பாகத்தின் தொடர்ச்சியாக......
இவ்ளோ பெரிய வரலாற்றினைக் கொண்டிருக்கிற புலி மாமாக்கள் ஏன் சிங்கள ஆமியாக்களோட அடிபடுறாங்க? என்று நான் வாயினை ஆவென்றபடி கேள்வியெளுப்பினேன். அம்மா என்னை உற்றுப் பார்த்தவளாய் "தம்பி எவ்ளோ நேரத்திற்குத் தான் வாயினை ஆவென்று வைத்திருப்பாய்? இலையான் (கொசு) வாயிற்குள் போயிடுமெல்லோ. வாயை மூடலாமே?" என்று சொல்லிக் கொண்டிருக்க ஐயா "தம்பி நிரூக் குட்டி, இப்ப நாங்கள் சாப்பிடுவோம்,. இரவைக்கு (இரவிற்கு) மிகுதிக் கதையினைப் புள்ளைக்குச் சொல்லுறன்" என்றவாறு அடுப்படிப் (கிச்சன்) பக்கம் நகரத் தொடங்கினார். 

Friday, October 7, 2011

கிழிந்த கிடுகிடையே தலை கவிழ்ந்து தொங்கும் வௌவால்கள்!

பெண் உரிமை பற்றி
அனல் பறக்கும்
வார்த்தைகளைப் பேசிய
பெரியவரின் வீட்டு
வேலைக்காரியின்
விடுதலையை நோக்கிய காற்
கடத்தில் சீழ் படிந்த தழும்புகள்!

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 06

இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....
ஐந்தாவது பாகத்தின் தொடர்ச்சியாக......
அம்மா மெதுவாக எங்களின் பூர்வீக வரலாற்றினைச் சொல்லத் தொடங்கினா(ர்). 
"நாங்கள் இற்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பதாக இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள்! எங்களின் பூர்வீகம் இந்தியா தான்!" 
சிங்களவர்களின் வரலாறு எங்களுக்குப் பின்னர் தான் தொடங்கியது. இந்தியாவின் குமரிக் கண்டத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாக வாழ்ந்த மூதாதையர்களின் எச்சம் தான் நாங்கள். 

எனக்கு அம்மா என்ன சொல்ல வருகிறா என்றே புரியாதவனாக அவாவின் விழியினை உற்றுப் பார்த்தேன். 

Thursday, October 6, 2011

செல்லமாய் அவள் பெயர் சொன்னேன் - சீ! தூ என செருப்பால் அடித்தாள் பாவி!

நவீன மகளுக்காய் நடு ரோட்டில் வீழ்ந்த தந்தை!

பொங்கலுக்கு வந்த மகள் ரீட்டா
போதையேத்த கேட்டாள் ஒரு குவாட்டர்
போத்தலது வாங்க சென்ற அவள் அப்பன்
போதையிலே தள்ளாடி வீழ்ந்தார் அரை மப்பில்!

Wednesday, October 5, 2011

MONTE CARLO - விமர்சனம்- ஆள் மாறாட்டும் செய்து அட்டகாசம் புரியும் இளம் சிட்டுக்கள்!

வாழ்க்கையில் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் ஒரு வித்தியாசமான ஆசை இருக்கும். அதுவும் தம் மனதிற்குப் பிடித்த இடங்களில் ஏதாவது ஒன்றுக்குத் தாம் இறப்பதற்கு முன்பதாகப் போய் விட வேண்டும் என்கின்ற ஆசை பல உள்ளங்களின் அடி மனதில் நீண்ட நாட்களாகியும் நிறைவேறாத கனவாகப் பொதிந்திருக்கும். எம் மனதிற்குப் பிடித்த ஒரு இடத்திற்கு நண்பர்களுடன் ஜாலியாகச் செல்கின்ற போது, அதுவும் எமக்கு ஒத்த ரசனையுள்ள நண்பர்களுடன் ஜாலியாகச் செல்லும் போது கிடைக்கின்ற இன்பங்களும், எதிர்பாராத அதிர்ச்சிகளும் அந்தக் கணப் பொழுதில் ஏற்படுத்துகின்ற மகிழ்ச்சியின் அளவிற்கு எல்லை இல்லை என்றே கூறலாம். 

Tuesday, October 4, 2011

ஈழத் தமிழர்கள் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படும் ஈனப் பிறவிகளா!

உலகில் வாழுகின்ற ஒவ்வோர் இனத்திற்குமுரிய தனித்துவமான ஜனநாயக உரிமைகளைப் பிரதிபலிக்கின்ற வல்லமை கொண்டவர்களாக அம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் விளங்குவார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் விடயத்திலும், தமிழகத் தமிழ் உறவுகள் விடயத்திலும் அரசியல்வாதிகள் என்போர் வாக்குகளை பெற்ற பின்னர் மக்களின் ஜனநாயகத் தேவைகளைப் புறக்கணிப்போராகத் தான் காலங் காலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்கென்று தனியான ஒரு அரசியல் கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது என்று பலர் கூறினாலும், அவ் அமைப்பினால் பெயரளவில் ஈழத் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாடுகளைச் செய்வதற்கான வல்லமையினை இலங்கையில் உள்ள பெரும்பான்மை அரசியல்வாதிகள் கொடுக்கவில்லை என்பது நிஜம். 

வரைந்த கோடுகளினூடே வளைந்து நெளியும் காதல்!

"புள்ள சுமாரா கொஞ்ச நேரம் கடையில நிற்க முடியுமா? வாப்பா டவுனுக்குப் போயி கடைக்கு கொஞ்ச சாமான் வாங்கிட்டு வரனும்" எனத் தன் மளிகைக் கடையினுளிருந்து தன் மகளின் செல்லப் பெயரைச் சொல்லிக் குரலெழுப்பினார் பைசூர். 
"வாப்பா, பொறுங்க வாப்பா. இப்பத் தான் குளிச்சிட்டு வந்திருக்கேன். பர்தாவைக் காணல்ல. தேடி எடுத்து மாட்டிக்கிட்டு வாரேன்" எனப் பதிலுரைத்தவாறு நொடிப் பொழுதினுள் ரெடியாகித் தன் தந்தையின் கடைக்குள் நுழைந்தாள் சுமாரா. "வாப்பா சுருக்கா (விரைவாக) வந்திடுவீங்க ஏலேய்?" எனத் தன் தந்தையிடம் கேள்வி கேட்டு அவரை வழி அனுப்பி விட்டு கடையில் பொருட்களை அடுக்கத் தொடக்கினாள் சுமாரா.

Monday, October 3, 2011

ஆபாசப் படங்கள் தான் ஓரினச் சேர்க்கையைத் தூண்டுகின்றனவா?

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே;
மனித மனங்களில் உள்ள உணர்வுகளிற்கு நாம் கடிவாளம் போட்டு, அவ் உணர்வுகளைக் கட்டி வைக்க நினைக்கின்ற போது ஏற்படுகின்ற விளைவுகள் பற்றி நீங்கள் யாவரும் அறிவீர்கள். எம் உணர்வுகளை அடக்கி வாழப் பழகிக் கொள்ளும் போது, எம்மையறியாமலே நாம் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றோம். மனிதனது உணர்வுகள் இயற்கையின் நியதிக்கமைவாகத் தூண்டப்பட்டாலும், ஒரு சில வேளைகளில் தவறான வழிகளும் மனித உணர்வுகளைத் தூண்டுகின்ற காரணிகளாக மாறி விடுகின்றன. 

JOHNNY ENGLISH REBORN - அதிரடி ஆக்சன் - வயிறு குலுங்க வைக்கும் காமெடி கலந்த ஹாலிவூட் திரை விமர்சனம்!

ஒரு நடிகருக்குப் பொருத்தமான கதா பாத்திரம் இது தான் என்று ரசிகர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் சூழலில், ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக வித்தியாசமான கேரக்டருடன் அந் நடிகர் திரையில் தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தால் எப்படி இருக்கும்? ஹாலிவூட் நகைச்சுவை நடிகர்கள் மத்தியில் அன்று முதல் இன்று வரை தன்னுடைய அசத்தல் நிறைந்த நகைச்சுவை வசனங்களை உள்ளடக்கிய படங்களின் மூலமாகவும், ஆங்கிலம் புரியாத மக்களிடையே தன்னுடைய உடல் அசைவுகள் மூலம் நகைச்சுவை உணர்வுகளை வெளிப்படுத்தி (BODY LANGUAGE) மக்கள் மனங்களில் மிஸ்டர் பீனாக இடம் பிடித்திருக்கும் - "மிஸ்டர் பீன் காமெடிக் கதா பாத்திரம் மூலம் புகழ் பெற்ற" Rowan Atkinson" அவர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதா பாத்திரத்திற்கு இணையாக 2003ம் ஆண்டு நடித்து வெளியான படம் தான் JOHNNY ENGLISH. 

Sunday, October 2, 2011

பதிவுலகில் பரபரப்பை ஏற்படுத்தப் போகும், பதிவர்களுக்கு பரவசத்தை கொடுக்கப் போகும் கிளு கிளுப்பான் பின்னூட்ட மெசின்!

புத்தம் புதிய கண்டு பிடிப்பு!

அகில உலகப் பதிவுலக வரலாற்றில் விற்பனைச் சந்தையில், வசூலில் சாதனை படைத்த- பதிவினைப் படிக்காது கமெண்ட் போடும் நபர்களைக் கண்டறியும் நோக்கில் "மூலக் கருத்தை முகர்ந்து அறி" எனும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் நாற்று வலைப் பதிவின் சொந்தக்காரர் செல்வராஜா நிரூபன் அவர்களால் கண்டு பிடிக்கப்பட்ட "ஸ்மார்ட் கமெண்ட் பவுண்டர் (SMART COMMENT FOUNDER) சிஸ்டத்தின்" வெற்றியினைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது கண்டு பிடிப்பாக நிரூபன் அவர்களின் முயற்சியிலும், நிகழ்வுகள் கந்தசாமி அவர்களின் வடிவமைப்பிலும் பதிவுலகச் சந்தைக்கு வந்துள்ள புத்தம் புதிய மெசின் தான் கிளு கிளுப்பான் பின்னூட்ட மெசின்! (SMART COMMENT FOUNDER SYSTEM பற்றி அறியாதோர் இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம்)

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க