Monday, October 3, 2011

JOHNNY ENGLISH REBORN - அதிரடி ஆக்சன் - வயிறு குலுங்க வைக்கும் காமெடி கலந்த ஹாலிவூட் திரை விமர்சனம்!

ஒரு நடிகருக்குப் பொருத்தமான கதா பாத்திரம் இது தான் என்று ரசிகர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் சூழலில், ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக வித்தியாசமான கேரக்டருடன் அந் நடிகர் திரையில் தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தால் எப்படி இருக்கும்? ஹாலிவூட் நகைச்சுவை நடிகர்கள் மத்தியில் அன்று முதல் இன்று வரை தன்னுடைய அசத்தல் நிறைந்த நகைச்சுவை வசனங்களை உள்ளடக்கிய படங்களின் மூலமாகவும், ஆங்கிலம் புரியாத மக்களிடையே தன்னுடைய உடல் அசைவுகள் மூலம் நகைச்சுவை உணர்வுகளை வெளிப்படுத்தி (BODY LANGUAGE) மக்கள் மனங்களில் மிஸ்டர் பீனாக இடம் பிடித்திருக்கும் - "மிஸ்டர் பீன் காமெடிக் கதா பாத்திரம் மூலம் புகழ் பெற்ற" Rowan Atkinson" அவர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதா பாத்திரத்திற்கு இணையாக 2003ம் ஆண்டு நடித்து வெளியான படம் தான் JOHNNY ENGLISH. 
பெருமளவான மக்கள் மனங்களில் ஒரு காமெடி ஹீரோவாக இடம் பிடித்திருந்த மிஸ்டர் பீன் கதா பாத்திரப் புகழ் ROWAN ATKINSON அவர்களிற்கு முதன் முதலாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு இணையான அந்தஸ்தினை ஹாலிவூட் திரையுலகில் கொடுத்த 2003ம் ஆண்டு வெளியான JOHNNY ENGLISH திரைப்படத்தின் தொடர்ச்சியான வெளியீடாகவும்; மெரு கூட்டப்பட்ட , அதி நவீன தொழில் நுட்பங்கள் நிறைந்த ஆக்‌ஷன் - த்ரிலிங்- மனம் விட்டு சிரிக்கச் செய்யும் நகைச்சுவை காட்சிகள், யுனிவேர்சல் ஸ்டூடியோவிற்கே உரித்தான பிரமாண்டமான காட்சியமைப்புக்கள் எனப் பல அம்சங்களைத் தன்னகத்தே உள்ளடக்கிய படம் தான் JOHNNY ENGLISH REBORN.  இத் திரைப்படமானது சர்வதேச அளவில் செப்டெம்பர் 15ம் திகதி ரிலீஸ் செய்யப்பட்டுள்ள போதிலும்; அக்டோபர் 07ம் திகதியன்று
 பிரித்தானியாவிலும், 28.11.2011 அன்று ஐக்கிய அமெரிக்கா கண்டத்திலும் ரிலீஸ் ஆகின்றது.

UNIVERSAL படத் தயாரிப்பு நிறுவனத்தின் உருவாக்கத்தில், 
Oliver Parker அவர்களின் இயக்கத்தில்,Ilan Eshkeri அவர்களின் நிமிடத்திற்கு நிமிடம் விறு விறுப்பினையும், நகைச்சுவையினையும் தரவல்ல இசையிலும், மிஸ்டர் பீன் பாத்திரப் புகழ் Rowan Atkinson (இப் படத்தில் Johnny ஆக நடிப்பவர்) அவர்களின் நடிப்பிலும், வசன உருவாக்கத்திலும், Gillan Anderson, Rosamund Pike, Dominic West, Danial Kaluuya, Richard Schiff முதலிய முன்னணி ஹாலிவூட் நட்சத்திரங்களின் நடிப்பிலும், மற்றும் பல கலைஞர்களின் பங்களிப்பிலும் வெளியாகியிருக்கிறது Johnny English Reborn.

ஐந்து வருடங்களிற்கு முன்பதாக பிரித்தானிய உளவுத் துறையில் பணியாற்றிய Johnny அவர்கள், மொசாம்பிக் நாட்டில் ஏற்பட்ட சதி முயற்சியினைக் கண்காணிக்கும் நோக்கில் அனுப்பப்படுகின்றார். அங்கே தன் கவனக் குறைவால், ஜொனி அவர்கள் சென்ற முயற்சி தோல்வியில் முடிவடைந்து கொள்ள பிரித்தானிய உளவுத் துறையினரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜொனி அவர்கள், தன் மனதிற்கு ஆறுதல் தேடி, சிறப்பான ஆன்மிகப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் திபெத்திற்குச் செல்கின்றார். திபெத்தில் பல் வேறு வகையான தற் பாதுகாப்புக் கலைகளைக் கற்றுக் கொண்டிருந்த ஜொனி அவர்களை மீண்டும் கடமைக்குத் திரும்புமாறு கோரி பிரித்தானிய உளவுத் துறை அழைப்பு விடுக்கின்றது.

"சீனப் பிரதமர்- பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டு பிரித்தானியப் பிரதமர், மற்றும் பிரித்தானிய உளவுத் துறை அமைப்புக்களுடன் சந்திப்பு நிகழ்த்தும் சமயத்தில், அவரைப் பிரித்தானியாவில் வைத்து நவீன தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய ஆயுதங்கள் மூலம் கொலை செய்து, பிரித்தானிய உளவுத் துறையின் முகத்தில் கரி பூசுவதனை நோக்கமாகக் கொண்டு திட்டங்களைத் தீட்டும் சீன- ஹாங் ஹாங் மாபியா கும்பலைப் பற்றிய தகவல்களைத் தேடியறிந்து, அக் கும்பலின் நடவடிக்கைகளை முற்றாக அழிப்பதற்குப் பொருத்தமானவர் ஜொனி தான் எனக் கலந்தாலோசித்து; ஜொனி அவர்களைத் திபெத்திலிருந்து மீண்டும் பிரித்தானியாவிற்கு வர வைத்து, தம்மோடு இணைத்துக் கொள்கின்றது டொஷீபா உளவுத்துறை.

ஹாங்காங் - சீன என மாபியா கும்பலைத் தேடிச் சென்று அவர்களின் நடவடிக்கைகளை அறிவதற்காகச் சண்டையிட்டுத், தாம் ஹாங் ஹாங் சென்ற நோக்கத்தினை நிறை வேற்றி விட்டுத் திரும்பும் ஜொனி மற்றும் அவரது உதவியாளர் TUCKER ஆகியோரினைப் பிரித்தானியா வரை பாலோ செய்து, ஹாங் ஹாங் வரை சென்று பெற்றுக் கொண்டு வந்த கொலை முயற்சியைத் தடுப்பதற்கான ஆயுதத்தினைக் களவாடி, ஜொனி அவர்களைக் சேஸிங் பண்ணிக் கொலை செய்யும் நோக்கோடு பின் தொடரும் மாபிய கும்பலின் விறு விறுப்பான நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஆக்சன் - மற்றும் அடுத்தது என்ன என்று ஒவ்வோர் தடவையும் திரையினை நோக்கி விழியினை நிமிர்த்திப் பார்க்க வைக்கும் அதிரடிக் காட்சிகளைத் தாங்கி நகர்கின்றது இந்தத் திரைப்படம்.

உளவுத் துறை அலுவலகத்தில் உள்ளவர்களையும் மாபிய அமைப்பினர் விலைக்கு வாங்கித் தம் நடவடிக்கைகளினைச் சுலபமாக்கும் நோக்கில் காய்களை நகர்த்தும் வேளையில், தனது உற்ற நண்பனும், மேலதிகாரியுமாக நடிக்கும் நடிகர் Dominic West அவர்களும் இந்த மாபியக் கும்பலோடு தொடர்புள்ளார் எனும் தகவலை அறிந்தும் ஜொனி அவர்கள் நம்ப மறுக்கும் காட்சியானது, "உண்மை நண்பர்கள் போல நடித்து நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் நட்பின் இயல்பினை" அழகுறக் காட்சிப்படுத்தி நிற்கிறது. 


படத்தில் இடம் பெறும் ஒவ்வோர் அசைவுகளின் பின்னேயும், விறு விறுப்பான காட்சிகளும், அதற்கு குறைவில்லாத வகையில் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் படத்தினுள் உள் இழுத்து ஒன்றிக்க வைத்துப் படம் பார்க்கும் வகையில் படத்தினை இயக்கியுள்ளார் இயக்குனர் Oliver Parker. ஹாலிவூட் திரையுலகில் சரியான வாய்ப்பேதுமின்றி 16 வருடங்களாக சாதாரண படங்களைக் கொடுத்து வந்த இயக்குனர் ஒலிவருக்கு இப் படம் இனிவருங் காலத்தில் தரமான ஹாலிவூட் வாய்ப்புக்களை அள்ளி வழங்கும் என்பதில் ஐயமில்லை. படத்திற்குப் பக்க பலமாக வசனங்கள் அமைந்திருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக படத்தின் வசனங்கள் அனைத்தையும் கதாநாகயன் மிஸ்டர் பீன் புகழ் Rowan Atkinson அவர்களே எழுதியுள்ளதோடு, தன்னுடைய நகைச்சுவைக் காட்சிகளில் சிறிதளவும் தொய்வு நிலை ஏற்படக் கூடாது என்பதனைக் கருத்திற் கொண்டு, வசனங்களினை அமைத்திருக்கிறார். 

இதற்கு எடுத்துக் காட்டாக அனைத்து வயதினரும் பார்த்து மகிழ்வதற்குப் பொருத்தமான படமாக இப் படம் உள்ளது என்று அடை மொழி போட்டு விட்டு, நாசூக்காக படத்தில் ஒரு கட்டத்தில் ஜொனி அவர்களிற்கு உதவியாக தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடும் பெண் ஊழியரைப் பார்த்து, அவரின் பெயர் என்னவென்று கேட்டவாறு, அவரின் மார்பிற்கு அருகே "BARBRA" எனும் பெயரினை இரண்டு தடவைகள் பிரித்துச் சொல்லி சிரிப்பொலியினைத் தியேட்டரில் அதிகரிக்கச் செய்திருக்கிறார் வசன எழுத்தாளரும் நடிகருமான Rowan Atkinson அவர்கள். 

Rowan Atkinson, அவரது உளவுத் துறை உதவியாளரான Tucker அவர்களும் இணைந்து மாபியா கும்பலின் நடவடிக்கைகளை முறியடித்தார்களா? பிரித்தானியாவிற்கு வரும் சீனப் பிரதமரின் உயிருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டதா? போன்ற கேள்விகளுக்கான பதிலினைப் படத்தினைப் பார்க்கையில் நீங்கள் நிச்சயம் பெற்றுக் கொள்ளுவீங்க(ள்). Ilan Eshkeri இன் இசை படத்தின் நகர்விலும், தியேட்டரில் உள்ள ஜனங்களின் மன மகிழ்ச்சியின் சம நிலையினையும் பேணுவதில் முதன்மை வகித்துள்ளது. 

மிக நீண்ட நாட்களாக ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் பார்க்க முடியவில்லையே எனும் ஆதங்கத்தில் இருப்போருக்கு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக ஆக்சன் கலந்த காமெடி நிறைந்த -  விறு விறுப்பிற்கு குறைவற்ற படமாக இப் படம் அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

JOHNNY ENGLISH REBORN: குழந்தைகளின் குதூகலத்திற்கும், பெரியவர்களின் விறு விறுப்பு நிறைந்த ஆக்சன் ரசனைக்கும் விருந்தளிக்கும் ஜாலியான படம்.

27 மில்லியன் செலவில் எடுக்கப்பட்டுள்ள இப் படத்தினைப் பார்ப்பதற்காக நீங்கள் செலவு செய்யப் போகும் நேரம் 102 நிமிடங்கள் மாத்திரமே!

படத்தின் ட்ரெயிலரினைக் கண்டு களிக்க:

இலங்கையில் கொழும்பு லிபர்ட்டி திரையரங்கில் இந்தப் படம் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

*********************************************************************************************************************************************************************************
எம் மனதில் பதிந்துள்ள நினைவுகள் சிலவற்றை காலப் போக்கில் நாம் மறந்து விடுவோம். ஆனால், சில நினைவுகள் அடி மனதில் பதிந்திருந்து நினைக்க நினைக்கச் சுகம் தரும் வல்லமை கொண்டு விளங்குகின்றன. மறக்க முடியாத நினைவுகள் என்றால் சில வேளைகளில் அவஸ்தையினையும், சில நேரங்களில் நினைத்துப் பார்க்கையில் அதீத சுகத்தியினையும் கொடுக்குமாம். 

"மறக்க முடியாத நினைவுகள்" வலைப் பதிவிற்குச் சென்றால் எமக்கு எவ்வாறான உணர்வுகள் ஏற்படும் என்று யாராவது சொல்ல முடியுமா?

கவிதைகள், சமூக நலன் சார் கருத்துக்கள், பதிவரசியல் பற்றிய குறும்பான விடயங்கள் எனப் பல அம்சங்களைத் தன் "மறக்க முடியாத நினைவுகள்" வலைப் பதிவில் பகிர்ந்து வருகிறார் கவிப்ரியன் அவர்கள். 

கவிப்ரியன் அவர்களின் வலைப் பதிவிற்குச் செல்ல:
***********************************************************************************************************************************************************************************

95 Comments:

Mathuran said...
Best Blogger Tips

நான் தான் முதலாவதா

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

அட..கலக்கல் படமா இருக்கும் போல..

K R Rajeevan said...
Best Blogger Tips

வணக்கம் பிரபல பதிவர், வலையுலக மெக்கானிக், கன்னிப் பெண்களின் காதல் டானிக், நிரூபன் அவர்களே!

எப்படி நலமா? ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்!

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

நகைச்சுவை படம் சமீபத்தில் வரலை என்ற குறையை தீர்த்த படம்

K R Rajeevan said...
Best Blogger Tips

4 வது வடை எனக்கா?

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

சிபியும் விமர்சனம் போட்டிருந்தார்

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

வாரம் ஒன்ணு போடுப்பா..பழைய படமும் போடலாம்

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

எப்படி இவ்வளவு பெரிய போஸ்ட் போடுறீங்களோ

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

அலெக்ஸா முந்திக்கொண்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

பட்டைய கிளப்புங்க

K R Rajeevan said...
Best Blogger Tips

ஒரு நடிகருக்குப் பொருத்தமான கதா பாத்திரம் இது தான் என்று ரசிகர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் சூழலில், ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக வித்தியாசமான கேரக்டருடன் அந் நடிகர் திரையில் தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தால் எப்படி இருக்கும்? //////////

எந்திரனில் ரஜினி நடிச்சது போல இருக்கும்!

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

இது மாதிரி நம்ம ஊர்ல நல்ல காமெடி படம் எடுக்க மாட்டேங்கிறாங்க

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

இது மாதிரி நம்ம ஊர்ல நல்ல காமெடி படம் எடுக்க மாட்டேங்கிறாங்க

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

ரஜினி இப்படி ஒரு காமெடி ரோல் பண்ணா கமல் இப்படி நடிச்சா வித்தியாசமா இருக்கும்..வடிவேலாவது முயற்சி பண்ணலாம்

K R Rajeevan said...
Best Blogger Tips

"மிஸ்டர் பீன் காமெடிக் கதா பாத்திரம் மூலம் புகழ் பெற்ற" Rowan Atkinson" அவர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதா பாத்திரத்திற்கு இணையாக 2003ம் ஆண்டு நடித்து வெளியான படம் தான் JOHNNY ENGLISH. ////////

ஓ! அவரா இவர்! அப்ப செம காமெடிதான்!

rajamelaiyur said...
Best Blogger Tips

Good review

Mathuran said...
Best Blogger Tips

மிஸ்டப் பீன் அசத்துறார்போலதாம் இருக்கு.
ஆனா என்ன.. நாங்க பார்க்க முடியாதே.. இப்பிடியான நல்ல படமெல்லாம் இங்க போடமாட்டாங்களே

Mathuran said...
Best Blogger Tips

கவிப்பிரியனுக்கு வாழ்த்துக்கள்

கோகுல் said...
Best Blogger Tips

இன்னும் படம் பாக்கல
இந்த விமர்சனத்த பாத்தவுடன் பாக்கனும்ங்கற ஆவல் அதிகமைட்டுது.

K R Rajeevan said...
Best Blogger Tips

இலங்கையில் கொழும்பு லிபர்ட்டி திரையரங்கில் இந்தப் படம் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது./////////

மச்சி லிபேர்ட்டியில் ஓடுவது இருக்கட்டும் நீ எங்கே பார்த்தாய் என்று சொல்லவி்ல்லையே!

மேலும் விமர்சன்ம் நிஜமாகவே நல்லா இருகுடா!

கோகுல் said...
Best Blogger Tips

barbra ஹாஹா!

K R Rajeevan said...
Best Blogger Tips

ப்ளாக் ஓனர் ப்ளீஸ் கம் அவுட்/

கோகுல் said...
Best Blogger Tips

ரசனையான விமர்சனம்!

கோகுல் said...
Best Blogger Tips

கவிப்ப்ரியனுக்கு வாழ்த்துக்கள்!இணைந்து விட்டேன்!

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

பதிவுகளை அதிகப்படுத்துங்கள்...ஓட்டு,முண்ணனி இதை தவிர்க்க பாருங்கள்..கண் திருஷ்டி அதிகமாகிவிட போகிறது

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

நான் தான் முதலாவதா//

அவ்....

ஆமா மச்சி.,,,

GOLD FM இல காலை நேர நிகழ்ச்சி கேட்டுத் தொலைபேசியில் அழைக்கும் கொழும்பைச் சேர்ந்த நான்கு அதிஷ்டசாலிகளுக்கு இந்தப் படத்திற்கான டிக்கட்டினை இலவசமா கொடுக்கிறாங்களாம்..


நீங்க தான் முதலாவது...

நிரூபன் said...
Best Blogger Tips

@’’சோதிடம்’’ சதீஷ்குமார்

அட..கலக்கல் படமா இருக்கும் போல..//

ஆமாண்ணே...

கலக்கல் படம் தான்...

ஈரோட்டிலயும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது...

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி
வணக்கம் பிரபல பதிவர், வலையுலக மெக்கானிக், கன்னிப் பெண்களின் காதல் டானிக், நிரூபன் அவர்களே!

எப்படி நலமா? ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்//

அடிங்....

என்ன மச்சி...ஏன் இவ்வளவு அடை மொழி...

பேசாம நேமிசாவின் ஆள் நிரூ என்று கூப்பிடலாமே...

உங்களுக்கும் இனிய ஞாயிற்றுக் கிழமை வாழ்த்துக்கள் மச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@’’சோதிடம்’’ சதீஷ்குமார்

நகைச்சுவை படம் சமீபத்தில் வரலை என்ற குறையை தீர்த்த படம்//

ஆமாண்ணா...

நான் செமையாச் சிரித்தேன்...

நான் விடாமச் சிரித்ததைப் பார்த்த எனக்குப் பக்கத்தில இருந்த மலேய்க் காரன் தியேட்டர் இருட்டில என்னை ஒரு மாதிரிப் பார்க்கத் தொடங்கிட்டான்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோகுல் said...
Best Blogger Tips

ஆமா!அந்த மெஷின் எனக்கு இன்னும் வந்து சேரல!

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

4 வது வடை எனக்கா?//

ஆமா...பாஸ்...
எமவுண்டை மொதல்ல கொடுங்க.

வடை அப்புறமா தாரேன்....

நிரூபன் said...
Best Blogger Tips

@’’சோதிடம்’’ சதீஷ்குமார்

வாரம் ஒன்ணு போடுப்பா..பழைய படமும் போடலாம்//


ஆமாண்ணே,
உங்களின் அன்புக் கட்டளைக்கமைவாகத் தான் வாரம் ஒரு படம் விமர்சனமாகப் போடத் தொடங்கியிருக்கிறேன்.

மிக்க நன்றி அண்ணாச்சி...

பழைய படமும் அப்பப்ப எடுத்து விடுறேன்...

நிரூபன் said...
Best Blogger Tips

@’’சோதிடம்’’ சதீஷ்குமார்

சிபியும் விமர்சனம் போட்டிருந்தார்//

ஆமா...பாஸ் படித்தேன், என் கருத்துக்களையும் அவர் பதிவில் சொல்லியிருக்கேன்....

நிரூபன் said...
Best Blogger Tips

@’’சோதிடம்’’ சதீஷ்குமார்


எப்படி இவ்வளவு பெரிய போஸ்ட் போடுறீங்களோ//

அவ்....என்னோட டெம்பிளேட் சின்னதா இருக்கில்லே...

அதோட எழுத்தும் பெருசு தானே...

அதான் பெரிய போஸ்ட்டா காண்பிக்குது..

அவ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@’’சோதிடம்’’ சதீஷ்குமார்

அலெக்ஸா முந்திக்கொண்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்//

இவற்றுக்கெல்லாம் உங்களைப் போன்ற பெரியவர்களின் அன்பு ஆதரவும், ஆசிர்வாதமும் தான் காரணம் அண்ணாச்சி...

இப்போ நன்றி சொல்றேன்..

அடுத்த வருடம் ஈரோட்டில் மீட் பண்னும் போது எமவுண்டைக் குடுத்திடுறேன்.

ஹா...ஹா...

நிரூபன் said...
Best Blogger Tips

@’’சோதிடம்’’ சதீஷ்குமார்


பட்டைய கிளப்புங்க//

சொல்லிட்டீங்க எல்லே...

செஞ்சுட்டாப் போச்சு...

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி


எந்திரனில் ரஜினி நடிச்சது போல இருக்கும்!//

இப்படி ஒத்த வரி சொல்லிட்டு ஓடலாமா மிஸ்டர் மணி சார்?

நிரூபன் said...
Best Blogger Tips

@’’சோதிடம்’’ சதீஷ்குமார்


இது மாதிரி நம்ம ஊர்ல நல்ல காமெடி படம் எடுக்க மாட்டேங்கிறாங்க//

ஆமாண்ணே...
நம்ம ஊரில காமெடி நடிகர் ஹீரோவாகினாலே படம் ஓடாதென்று காமெடி நடிகர்களைப் புறக்கணிக்கிறாங்கண்ணே..


கொடுமை((((((((((:-

நிரூபன் said...
Best Blogger Tips

@’’சோதிடம்’’ சதீஷ்குமார்

ரஜினி இப்படி ஒரு காமெடி ரோல் பண்ணா கமல் இப்படி நடிச்சா வித்தியாசமா இருக்கும்..வடிவேலாவது முயற்சி பண்ணலாம்//

ஆமாண்ணே...ஆனால் யாரும் முயற்சி செய்யுறாங்க இல்லையே...

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

ஓ! அவரா இவர்! அப்ப செம காமெடிதான்!//

ஆமாய்யா அவர் தான் இவரு...

நிரூபன் said...
Best Blogger Tips

@"என் ராஜபாட்டை"- ராஜா

Good review//

நன்றி தல...

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்
மிஸ்டப் பீன் அசத்துறார்போலதாம் இருக்கு.
ஆனா என்ன.. நாங்க பார்க்க முடியாதே.. இப்பிடியான நல்ல படமெல்லாம் இங்க போடமாட்டாங்களே//

அடிங்......லிபர்ட்டியில ஓடுதில்லே...

அதான் சொல்லியிருக்கேனே...

Mathuran said...
Best Blogger Tips

//நிரூபன் said...

@மதுரன்
மிஸ்டப் பீன் அசத்துறார்போலதாம் இருக்கு.
ஆனா என்ன.. நாங்க பார்க்க முடியாதே.. இப்பிடியான நல்ல படமெல்லாம் இங்க போடமாட்டாங்களே//

அடிங்......லிபர்ட்டியில ஓடுதில்லே...

அதான் சொல்லியிருக்கேனே...//

யோவ்.. நான் இருக்கிறது யாழ்ப்பாணமய்யா... உங்க செலவில அனுப்பிறதெண்டா சொல்லுங்க சந்தோசமா போயிட்டு வாறன் ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

டிரைலர் பார்த்தே வயிறு இப்பிடி குலுங்குதே, படத்தை பார்த்தால் என்னாவது எப்பிடியாவது நேரம் ஒதுக்கி பாத்துரனும்...

நிரூபன் said...
Best Blogger Tips

@கோகுல்

இன்னும் படம் பாக்கல
இந்த விமர்சனத்த பாத்தவுடன் பாக்கனும்ங்கற ஆவல் அதிகமைட்டுது.//

ஆகா...அப்படீன்னா தியேட்டருக்குப் போயிட்டு வாங்க..

சென்னையில எங்கே இந்தப் படம் ஓடுதென்று எழுதியிருக்கேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

மச்சி லிபேர்ட்டியில் ஓடுவது இருக்கட்டும் நீ எங்கே பார்த்தாய் என்று சொல்லவி்ல்லையே!

மேலும் விமர்சன்ம் நிஜமாகவே நல்லா இருகுடா!//

அவ்வ்வ்வ்வ்,....

ஏண்டா ஏனு...

போன படம் எங்கே பார்த்தேனே...அங்கே தான்...

நிரூபன் said...
Best Blogger Tips

@கோகுல்

barbra ஹாஹா!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

ப்ளாக் ஓனர் ப்ளீஸ் கம் அவுட்///

அதான் வந்திட்டமில்லே...

நிரூபன் said...
Best Blogger Tips

@கோகுல்

ரசனையான விமர்சனம்!//

நன்றி மச்சி..

நிரூபன் said...
Best Blogger Tips

@’’சோதிடம்’’ சதீஷ்குமார்


பதிவுகளை அதிகப்படுத்துங்கள்...ஓட்டு,முண்ணனி இதை தவிர்க்க பாருங்கள்..கண் திருஷ்டி அதிகமாகிவிட போகிறது//

போங்கண்ணே...என்னையை வைச்சு நீங்க காமெடி பண்றீங்க.


நான் எப்பவும் எழுதுவது போலத் தான் எழுதுவேன்..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


கண் திருஷ்டி பட்டால் உங்களிடம் வந்தாப் போச்சுதே...

பரிகாரமா ஒரு குறிப்புச் சொல்லித் தர மாட்டீங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@கோகுல்

ஆமா!அந்த மெஷின் எனக்கு இன்னும் வந்து சேரல!//

மச்சி..
எமவுண்டைச் சரியான அக்கவுண்டில போட்டிருக்கிறீங்களா என்று பாருங்க...

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

டிரைலர் பார்த்தே வயிறு இப்பிடி குலுங்குதே, படத்தை பார்த்தால் என்னாவது எப்பிடியாவது நேரம் ஒதுக்கி பாத்துரனும்...//

நேரம் கிடைக்கும் போது பாருங்கண்ணே...

maruthamooran said...
Best Blogger Tips

படத்தின் ரொய்லரே செம சிரிப்பை வரவழைத்திருந்தது. சீக்கிரம் பார்க்க வேண்டும்.

விமர்சனத்தில் கதைசொல்லுவதை மட்டுப்படுத்தினால் இன்னும் நன்றாகவிருக்கும்.

நிரூவின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். நல்லாயிருக்கய்யா.

சுதா SJ said...
Best Blogger Tips

Powder Star - Dr. ஐடியாமணி said...

வணக்கம் பிரபல பதிவர், வலையுலக மெக்கானிக், கன்னிப் பெண்களின் காதல் டானிக், நிரூபன் அவர்களே!

எப்படி நலமா? ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்!
<<<<<<<<

ஹீ ஹீ
வாழ்க நம் வலையுலக ஹீரோ நிரு பாஸ்

சுதா SJ said...
Best Blogger Tips

அண்ணே.. நீங்களும் நல்ல விமர்சனம் இப்போ எழுத தொடங்கீட்டீங்க
சூப்பர் விமர்சனம்.. படம் பார்க்கணும் போல இருக்கு
ஹீ ஹீ பார்த்துட்டா போச்சு...

சுதா SJ said...
Best Blogger Tips

நாற்றில் அறிமுகமாகி இருக்கும் அதிஸ்ட சாலி கவிபிரியனுக்கு என் வாழ்த்துக்கள்.

சுதா SJ said...
Best Blogger Tips

அண்ணாச்சி... குடும்பத்தோடு இருந்து பார்க்கலாமா....
அப்போ கில்மா மேட்டர் ஒண்ணும் படத்தில் இல்லையா.....
அவ்வ்வ்வ்

சுதா SJ said...
Best Blogger Tips

டிரைலர் சூப்பர்....
அப்போ படம் சூப்பர் தான்... ஹீ ஹீ

Yoga.s.FR said...
Best Blogger Tips

பிரெஞ்சு மாலை வணக்கம்!பீன் படம்,ஆளைப் பார்த்தாலே சிரிப்புத் தான்!

மாய உலகம் said...
Best Blogger Tips

கவிப்ப்ரியனுக்கு வாழ்த்துக்கள்!இணைந்து விட்டேன்!

மாய உலகம் said...
Best Blogger Tips

அருமையான அலசல் நண்பா... விமர்சனம் பார்க்கும்போதே படத்தை பார்க்கவேண்டும் போல் தோன்றுகிறது... வாழ்த்துக்கள்... கண்டிப்பா பார்ப்பேன்..

மாய உலகம் said...
Best Blogger Tips

என்ன பாஸ் கிளுகிளுப்பான் மெசின செட் பண்ணலையா....

மாய உலகம் said...
Best Blogger Tips

நடிகர் சாம்ஸ்.... மிஷ்டர் பீன் கதாபாத்திரம் தமிழில் பண்ணுவதற்க்கு பொறுத்தமாக இருக்கும்.. சாம்ஸ் எனது சாய்ஸ்....

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

கடுப்பாக்காதீங்க சார், படம் இன்னும் இங்க ரிலீஸ் ஆகல... அக்டோபர் 28 தான் ரிலீசாம்... ஹாலிவூட் படம், இந்தியாவுல ரிலீஸ் ஆகிடிச்சு.. அமெரிக்காவுல இன்னும் இல்ல, என்ன வாழ்கடா இது..

மாய உலகம் said...
Best Blogger Tips

trailer super boss

மாய உலகம் said...
Best Blogger Tips

Dr. Butti Paul said...
கடுப்பாக்காதீங்க சார், படம் இன்னும் இங்க ரிலீஸ் ஆகல... அக்டோபர் 28 தான் ரிலீசாம்... ஹாலிவூட் படம், இந்தியாவுல ரிலீஸ் ஆகிடிச்சு.. அமெரிக்காவுல இன்னும் இல்ல, என்ன வாழ்கடா இது..//

ஹா ஹா இந்தியா டெவலப் ஆகிடுச்சா... ஆஹா... அமேரிக்கா ஆசை இருக்குறவங்கல்லாம் மூட்ட கட்டி வச்சிருங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...
Best Blogger Tips

யாழ்ப்பாணத்தில் பார்க்க வழி ஏதாவது உண்டா?
என் புதிய பதிவு http://pc-park.blogspot.com/2011/10/hd-optimized-office-software.html

மகேந்திரன் said...
Best Blogger Tips

விமர்சனம் சும்மா அசத்தலா இருக்கு
பார்த்துர வேண்டியதுதான்.

நண்பர் கவிப்பிரியனுக்கு வாழ்த்துக்கள்.

பிஞ்சு ஞானவல்லி அதிரா:) said...
Best Blogger Tips

நானும் Trailer பார்த்தேன்..funny ஆகத்தான் இருக்கு.

செங்கோவி said...
Best Blogger Tips

கலகலன்னு ரகளையான விமர்சனம்.

செங்கோவி said...
Best Blogger Tips

ரோவனோட அட்ராக்சனே இன்னோசண்ட் ஃபேஸ் தான்..கண்டிப்பா பார்க்கணும், இந்தப் படத்தை.

தமிழ்மகன் said...
Best Blogger Tips

அசத்தலான விமர்சனம்

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips

அருமையான விமர்சனப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

Unknown said...
Best Blogger Tips

படத்தை பற்றி தெரிந்து கொண்டேன்...இந்த வாரம் செல்லவிருக்கிறேன் நன்றி மாப்ள... பதிவருக்கு வாழ்த்துக்கள்!

Unknown said...
Best Blogger Tips

படத்தை பற்றி தெரிந்து கொண்டேன்...இந்த வாரம் செல்லவிருக்கிறேன் நன்றி மாப்ள... பதிவருக்கு வாழ்த்துக்கள்!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

நல்ல ஒரு படத்தை பற்றி சொல்லியிருக்கிறீங்க பாஸ்...படம் பாக்கனும் என்ற ஆவலை தூண்டு கின்றது.நேற்று எனக்கு சில ஆப்புவைக்க பாத்தாங்க அதான் வரமுடியவில்லை சாரி பாஸ்

உணவு உலகம் said...
Best Blogger Tips

பட விமர்சனத்தில், பட்டயைக் கிளப்ப ஆரம்பிச்சிட்டீங்க. ம் நடக்கட்டும், நடக்கட்டும்.

உணவு உலகம் said...
Best Blogger Tips

இந்த இண்ட்லில எப்படி ஓட்டு போடுவதுன்னு ஒரு ஐடியா கொடுங்களேன்.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

குட்

சசிகுமார் said...
Best Blogger Tips

சூப்பர்...

M.R said...
Best Blogger Tips

அழகான அலசல் பகிர்வுக்கு நன்றி நண்பரே

M.R said...
Best Blogger Tips

தமிழ் மணம் ,தமிழ் 10,ulavu ,udaanz

all voted

indli 8 voted

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

படம் பார்க்கத் தூண்டுறீங்களே!

அம்பாளடியாள் said...
Best Blogger Tips

அழகிய திரைப்பட விமர்சனப் பகிர்வு .மிக்க நன்றி சகோ
பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .............

தனிமரம் said...
Best Blogger Tips

விமர்சனம் படித்தோம் படம் பார்க்கமாட்டோம் நேரம் திண்டாட்டம்  !

தனிமரம் said...
Best Blogger Tips

சகபதிவாளருக்கு வாழ்த்துக்கள்!

தனிமரம் said...
Best Blogger Tips

ஏய்யா ராசா இங்கிலீஸ் படம் பார்த்ததில் ஓட்டுப்பட்டையை செருவி விட மறந்தாச்சா!
அந்த மெசினைச் சரி பூட்டி விடலாமே!

Unknown said...
Best Blogger Tips

முடியல நிரூ Mr. பீன் சண்டை போடுறதை எல்லாம் பார்க்க

ஹா ஹா ஹா

Unknown said...
Best Blogger Tips

விமர்சனம் நல்லா தான் இருக்கு

எம்.ஞானசேகரன் said...
Best Blogger Tips

அன்பிற்குரிய நண்பர் நிரூபனுக்கு, அசத்திவிட்டீர்கள். மிக அருமையான என் வலைப்பக்கத்தைப் பற்றி நானே கூட எழுதவியலாத அறிமுகம்.
//கவிதைகள், சமூக நலன் சார் கருத்துக்கள், பதிவரசியல் பற்றிய குறும்பான விடயங்கள் எனப் பல அம்சங்களைத் தன் "மறக்க முடியாத நினைவுகள்" வலைப் பதிவில் பகிர்ந்து வருகிறார் கவிப்ரியன் அவர்கள்//
பல வாசகர்கள் இன்று உங்கள் தளத்திலிருந்து வந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐந்து பேர் பின் தொடர்பவர்களாக சேர்ந்திருக்கிறார்கள். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. மகிழ்ச்சியிலும், நெகிழ்ச்சியிலும் உறைந்துபோய் இருக்கிறேன்.

Muruganandan M.K. said...
Best Blogger Tips

நான் மிஸ்டர் பீன் படங்களை இரசித்துப் பார்ப்பவன். விரிவான விமர்சனம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது நன்றி

Anonymous said...
Best Blogger Tips

மிஸ்டர் பீன் எனக்கும் பிடிக்கும்...ஜேம்ஸ் பாண்ட் படங்களும் பிடிக்கும்...கலவை ஏனோ ஒட்டவில்லை...விமர்சனம் நன்று..

shanmugavel said...
Best Blogger Tips

பார்த்துட்டாப் போச்சு.!

Anonymous said...
Best Blogger Tips

///ஒரு காமெடி ஹீரோவாக இடம் பிடித்திருந்த மிஸ்டர் பீன் கதா பாத்திரப் புகழ் ROWAN ATKINSON அவர்களிற்கு முதன் முதலாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு இணையான அந்தஸ்தினை ஹாலிவூட் திரையுலகில் கொடுத்த 2003ம் ஆண்டு வெளியான JOHNNY ENGLISH திரைப்படத்தின் தொடர்ச்சியான வெளியீடாக///////

ஒரேவேள தமிழ்படம் மாதிரி ஸ்பூஃப் வகையறாவ பாஸ்?

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

பார்த்தேன். Johny English அளவுக்கு இருக்கவில்லை. என்றாலும் வயிறு குலுங்கவைக்கும் நகைச்சுவைப் படம்தான்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails