Tuesday, October 4, 2011

ஈழத் தமிழர்கள் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படும் ஈனப் பிறவிகளா!

உலகில் வாழுகின்ற ஒவ்வோர் இனத்திற்குமுரிய தனித்துவமான ஜனநாயக உரிமைகளைப் பிரதிபலிக்கின்ற வல்லமை கொண்டவர்களாக அம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் விளங்குவார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் விடயத்திலும், தமிழகத் தமிழ் உறவுகள் விடயத்திலும் அரசியல்வாதிகள் என்போர் வாக்குகளை பெற்ற பின்னர் மக்களின் ஜனநாயகத் தேவைகளைப் புறக்கணிப்போராகத் தான் காலங் காலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்கென்று தனியான ஒரு அரசியல் கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது என்று பலர் கூறினாலும், அவ் அமைப்பினால் பெயரளவில் ஈழத் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாடுகளைச் செய்வதற்கான வல்லமையினை இலங்கையில் உள்ள பெரும்பான்மை அரசியல்வாதிகள் கொடுக்கவில்லை என்பது நிஜம். 
ஒவ்வோர் தடவையும் தேர்தல் நிகழும் போது வட கிழக்குத் தமிழ் மக்களின் வாக்குரிமைப் பலத்தினை மாத்திரம் பறைசாற்றுகின்ர ஒரு அமைப்பாகத் தான் தமிழரசுக் கட்சி இயங்கி வருகின்றது. ஒப்பீட்டு அடிப்படையில் இலங்கையில் உள்ள ஈபிடிபி, கருணா, பிள்ளையான் கட்சி முதலியவை அரசாங்கத்துடன் சேர்ந்திருந்து மக்கள் பிரதி நிதிகள் போல எவ்வாறு வேஷம் போடுகின்றனவோ அதற்குச் சமனான நிலையில் அரசாங்கத்தினைச் சாராது எதிர்க் கட்சிகள் வரிசையில் இருந்து மக்களுக்கான பயன்மிக்க செயற்பாடுகளைப் புரியாதிருக்கிறது தமிழரசுக் கட்சி. இவ்வாறு நான் குறிப்பிடுவதற்கு காரணம், பெயரளவில் தமிழர் தரப்பின் வாக்குப் பலத்தினை மாத்திரம் உணர்த்தி விட்டு, தமிழ் மக்களின் கைப் பொம்மைகளாக இன்று வரை பாராளுமன்றத்தில் போய் உட்கார்ந்து விட்டு வருவது தான் இவர்களின் வேலையாக இருக்கின்றது. 

இன்றைய கால கட்டத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கான பிரதான தேவையாக இருப்பது அரசியல் ரீதியிலான பலம் பொருந்திய ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியாகும். இந்தச் செயற்பாட்டினை காலதி காலமாக உட் பூசல்களாலும், போட்டிகளாலும் சிறுகச் சிறுக உடைந்த நிலையிலும் தமிழ் மக்களின் பெருமளவான வாக்குப் பலத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்ற தமித் தேசியக் கூட்டமைப்பே செய்தும் வருகின்றது. ஆனால் மக்களின் தேவைகளையோ, அல்லது மக்களுக்கு வேண்டிய அபிவிருத்தி தொடர்பான உதவிகளையோ அரச தரப்பிடமிருந்தோ உலக நாடுகளிடமிருந்தோ பெற்றுக் கொள்ள முடியாத முட்டுக்கட்டை அரசியல் நிலையில் நின்று தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தள்ளாடி - திண்டாடி வருகின்றது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு பெரும்பான்மை அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தமிழ் மக்களுக்கு எதிரான அல்லது தமிழர்களுக்குத் தீமை விளைவிக்கும் தீர்மானங்களைத் தடுத்து நிறுத்துகின்ற ஜனநாயகப் பலம் இல்லை என்பது கவலையான விடயம். ஒவ்வோர் தடவையும் தமிழ் மக்களின் வாக்குகளை வாங்கித் தாம் தமிழர் தரப்பின் தனித்துவமான பிரதிநிதிகள் என்று அரசாங்கத்திற்கும், அனைத்துலகிற்கும் பறை சாற்றுவது தான் இவர்களின் நோக்கமா? பெரும்பான்மை அரசியல்வாதிகளின் கீழ் அடங்கித் தமிழ் மக்கள் வாழ வேண்டும் எனும் நிலையினை மாற்றி அனைத்துலகோடு கலந்துரையாடித் தமிழர்களின் தனித்துவமான வாக்குப் பலத்திற்கு ஒரு முடிவினை இத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எட்ட முடியாதா? 
தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்கள்.
தமிழ் மக்கள் இன்று நட்டாற்றில்; தாம் அரசியல் ரீதியில் கரைசேர முடியாதவர்களாகி கைவிடப்பட்டு நிற்கும் நிலையில் அவர்களிற்கு ஒரு ஜனநாயக உரிமையினைப் பெற்றுக் கொடுக்க முடியாத சுய நல அரசியல்வாதிகளாகவா இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருக்கின்றார்கள்? ஆண்டு தோறும் சொகுசான வெளி நாட்டுப் பயணங்களை மேற்கொள்ளுவதும், வானொலி தொலைக்காட்சிகளில் தாம் தமிழர்களின் பிரதி நிதிகள் என்று நீட்டி முழக்கிப் பேசி, வாய் சொல்லில் அரசியல் ஜாலம் செய்வது தான் இவர்கள் பணியா?  சிங்கள அரசியற் தலமைகளின் கீழ் அமிழ்ந்து போயிருக்கும் ஒட்டு மொத்த இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் - ஜனநாயகக் கனவுகளிற்கு நல்லதோர் முடிவு கிட்டும் வகையில் இலங்கையில் உள்ள அனைத்துச் சிறுபான்மைக் கட்சிகளையும் ஒன்று திரட்டிச் செயற்பட முடியாது வாய் சொல்லில் வீரம் காட்டுவதா இவர்களின் வேலை?

இலங்கையின் ஜனநாயக உரிமையும், பெரும்பான்மை இன மக்களுக்குச் சாதகமாக உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களும் தமிழர் தரப்பின் அரசியல் ரீதியான உள்ளூர் செயற்பாடுகளிற்கு இடங் கொடுக்காது என்று சுடலை ஞானம் பேசிக் கொண்டு இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் வாக்குப் பலத்தினை மாத்திரம் நிரூபித்துச் செயற்படப் போகின்றது? வாக்களிக்கும் மக்களிற்காவது நல்ல திட்டங்களைச் செய்யும் வண்ணம் அரசியல் வழிகளில் உலக நாடுகளோடாவது கலந்தாலோசித்து இலங்கை அரசின் நிலைப்பாட்டினை எடுத்து விளக்கி இத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் செயற்பட முடியாதா?

எண்ணம் எழுத்துருவாக்கம்: செல்வராஜா நிரூபன்.
******************************************************************************************************************************
இன்றைய வலைப் பதிவு அறிமுகத்தினூடாக ஈழத்து மண் வாசனையினை விளக்கி நிற்கும் பல நினைவுகளைத் தன் வலைப் பதிவில் பொக்கிஷங்களாகப் பகிர்ந்து வருகின்ற எஸ்.சக்திவேல் அவர்களின் வலைப் பதிவிற்குத் தான் நாம் செல்லவிருக்கின்றோம். 

ஈழத்தில் பல வருடங்களிற்கு முன் நிகழ்ந்த சுவையான மண் வாசனையோடு கூடிய நிகழ்வுகளையெல்லாம் ஞாபகச் சிதறல்களாத் தன் "வேப்பந்தோப்பு"வலையில் சுவையுறத் தொகுத்துத் தருகின்றார் எஸ் சக்திவேல் அவர்கள்.
"எஸ்.சக்திவேல்" அவர்களின் "வேப்பந்தோப்பு" வலைப் பதிவிற்குச் செல்ல:
*******************************************************************************************************************************

38 Comments:

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

நிரூபன் சாருக்கு வணக்கம். ஈழ மக்கள் பிரச்சினை என்பது அரசியல் சார்ந்தர்த்து என்பதனையும், அதற்கு அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதனையும் கூற முயற்ச்சித்திருக்கிறீர்கள். போராட்டத்தின் இறுதி நாட்களும், அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுமே அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், உண்மையான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதா, என கேள்வி எழுப்பும் உங்கள் பதிவுகள் அருமை. எம்மை போன்ற அவதானிகளுக்கு ஈழ விவகாரத்தின் பல பரிமாணங்களையும் தொட்டுக்காட்டும் உங்கள் செவைதொடர வாழ்த்துகிறேன்.

Unknown said...
Best Blogger Tips

ஈழ மக்கள் பிரச்சினை பற்றி நல்லாவே சொல்லிருக்கீங்க நண்பா....

தொடரட்டும் உங்கள் பணி

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

இதுகுறித்து விவாதங்களை பின்னூட்டத்தில் எதிர்பார்க்கிறேன்.....

கடம்பவன குயில் said...
Best Blogger Tips

போராட்டமும் மனிதஉரிமை மீறல்களும் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுவந்த நிலையில் ஈழத்து அரசியலில் ்இத்தனை பிரச்சினை இருப்பது தங்கள் பதிவின் வாயிலாகத்தான் தெரிந்தது. நல்ல அலசல். நல்ல கேள்விகளை முன்வைத்திருக்கிறீர்கள்.

செங்கோவி said...
Best Blogger Tips

//இன்றைய கால கட்டத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கான பிரதான தேவையாக இருப்பது அரசியல் ரீதியிலான பலம் பொருந்திய ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியாகும்.//

சரியான கருத்து. அப்படி ஒரு கட்சி இருந்தால் மட்டுமே, தமிழருக்கெதிரான தீர்மானங்கள் முறியடிக்கப்பட முடியும். ஒற்றுமையே பலம்.

செங்கோவி said...
Best Blogger Tips

போராட்டத்துக்கான சாத்தியங்கள் முடக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசியல்ரீதியாக நாம் பலம் பெறுவது அவசியம். அதற்காவது நம் மக்கள் ஒன்றுபடிவார்களா?

தனிமரம் said...
Best Blogger Tips

காலகாலமாக இந்த கூட்டணி என்பது ஒரு கூத்தனி என்றே நடந்திருக்கின்றது ஒவ்வொருத்தர் சிவசிதம்பரம்  பின் சம்மந்தன் ,ஆனந்த சங்கரி போன்றோர் சுயநலப்போக்கில் சீரலித்தவர்கள் தமிழர் வாக்கை ஒரு துரும்பாக பாவிக்கும் வல்லமை இருந்தும் சில அயலவருக்கு அன்னக்காவடி தூக்கியவர்கள்!

தனிமரம் said...
Best Blogger Tips

கூட்டமைப்பில் எப்போதும் ஒரு மித்த கருத்து இருந்த தில்லை தலைவர் ஒன்று சொல்லுவார் மற்றவர்கள் மூவர் ஒரு அணியில் சிலர் மதில் மேல் பூனையாக இருக்கும் போது பெரும்பாண்மை அரசாங்கம் இவர்களை எப்படி கணக்கு எடுக்கும்!

தனிமரம் said...
Best Blogger Tips

கூட்டமைப்பில் எப்போதும் ஒரு மித்த கருத்து இருந்த தில்லை தலைவர் ஒன்று சொல்லுவார் மற்றவர்கள் மூவர் ஒரு அணியில் சிலர் மதில் மேல் பூனையாக இருக்கும் போது பெரும்பாண்மை அரசாங்கம் இவர்களை எப்படி கணக்கு எடுக்கும்!

தனிமரம் said...
Best Blogger Tips

கூட்டமைப்பில் எப்போதும் ஒரு மித்த கருத்து இருந்த தில்லை தலைவர் ஒன்று சொல்லுவார் மற்றவர்கள் மூவர் ஒரு அணியில் சிலர் மதில் மேல் பூனையாக இருக்கும் போது பெரும்பாண்மை அரசாங்கம் இவர்களை எப்படி கணக்கு எடுக்கும்!

கோகுல் said...
Best Blogger Tips

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு பெரும்பான்மை அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தமிழ் மக்களுக்கு எதிரான அல்லது தமிழர்களுக்குத் தீமை விளைவிக்கும் தீர்மானங்களைத் தடுத்து நிறுத்துகின்ற ஜனநாயகப் பலம் இல்லை என்பது கவலையான விடயம். //

நிச்சயமாக!வெறும் வாக்கு பலத்தை மட்டும் நிரூபித்து விட்டு தம இன மக்கள் துயருருவதை கைகட்டி வேடிக்கை பார்பதற்க்கு எதற்கு இந்த நிரூபணம்?

தனிமரம் said...
Best Blogger Tips

கூட்டமைப்பு முன்னர் 2009 முதல் ஒரு மித்த கருத்தில் ஓங்கி பேசியவர்கள் இப்போது தொடர்ந்து பேச்சுவார்த்தை என்று நாடகம் போட்டு மக்கள் மனதில் வீண் சித்து விளையாட்டை ஆடுகின்றார்கள்! அவர்கூட ஒப்பிடும் போது ஈபிடீபி பருவாய்யில்லையே!

தனிமரம் said...
Best Blogger Tips

கூட்டமைப்பு முன்னர் 2009 முதல் ஒரு மித்த கருத்தில் ஓங்கி பேசியவர்கள் இப்போது தொடர்ந்து பேச்சுவார்த்தை என்று நாடகம் போட்டு மக்கள் மனதில் வீண் சித்து விளையாட்டை ஆடுகின்றார்கள்! அவர்கூட ஒப்பிடும் போது ஈபிடீபி பருவாய்யில்லையே!

தனிமரம் said...
Best Blogger Tips

ஒரு எம்பியின் பன்முகப்பட்ட நிதியில் சரி சீர்செய்யக்கூடிய சில அத்தியாவசிய விடயங்களைக்கூட மக்களுக்கு செய்தார்களா சொகுசு ஓட்டலிலும் உல்லாசமாக வெளிநாடுகளிலும் மக்கள் பிரதிநிதி என்ற போர்வையில் குளிர்காயும் இவர்கள் எங்கள் அவலத்தை உலகநாட்டுக்கு சொல்லக்கூடிய வழிவகைகள் இருந்தும் ஊழலிலும் சுயநலப்போக்கிலும் மக்களை மறந்து விட்டு மனோகரா வசனம் பேசி மக்களை மயக்கும் ஓட்டுவாங்கி மனிதர்கள்தான் இதில் சில முன்னால் போராளிக்குழுக்கள் சேர்ந்து கொண்டு விடும் வாய்ச்சாடல் பார்க்கும் போது தமிழன் ஒரு நாதியற்றவன் என்று பொருள் கொள்ள வேண்டி யிருக்கும்'

தனிமரம் said...
Best Blogger Tips

ஒரு எம்பியின் பன்முகப்பட்ட நிதியில் சரி சீர்செய்யக்கூடிய சில அத்தியாவசிய விடயங்களைக்கூட மக்களுக்கு செய்தார்களா சொகுசு ஓட்டலிலும் உல்லாசமாக வெளிநாடுகளிலும் மக்கள் பிரதிநிதி என்ற போர்வையில் குளிர்காயும் இவர்கள் எங்கள் அவலத்தை உலகநாட்டுக்கு சொல்லக்கூடிய வழிவகைகள் இருந்தும் ஊழலிலும் சுயநலப்போக்கிலும் மக்களை மறந்து விட்டு மனோகரா வசனம் பேசி மக்களை மயக்கும் ஓட்டுவாங்கி மனிதர்கள்தான் இதில் சில முன்னால் போராளிக்குழுக்கள் சேர்ந்து கொண்டு விடும் வாய்ச்சாடல் பார்க்கும் போது தமிழன் ஒரு நாதியற்றவன் என்று பொருள் கொள்ள வேண்டி யிருக்கும்'

தனிமரம் said...
Best Blogger Tips

அண்மையில் முன்னால் போராளித் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தாராம் கிரீஸ்மனிதன் பற்றிய விடயமாக பேச அப்போது நாட்டின் தலைவர் இவர் காதோரம் சொன்னாராம் நண்பா 1994 ஆட்சியில் நீ என் பிரதிபதிவியில் இருக்கும் போது செய்த லீலைகள் பையில் இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கு  என்று அப்போது அவர் சிரித்துக் கொண்டே நாங்கள் இப்போது மக்களுக்காக வந்திருக்கின்றோம் என்றாராம் இப்படியானவர்கள் தான் மக்கள் சேவகர் என்ற போர்வையில் பாராளமன்றத்தில் இருக்கின்றார்கள் இவர்கள் பாரமன்றக் கூட்டத்தொடரில் எத்தனைதரம் மக்கள் பிரச்சனை பற்றி பேசி இருப்பார்கள்!

தனிமரம் said...
Best Blogger Tips

கூட்டமைப்பில் இப்போது இருப்பவர்களால் ஒரு காலத்திலும் ஒத்த முடிவில் இருக்க முடியாது பிரதேசவாதமும் போட்டித்தன்மை வயது மூப்பில் தீர்க்கமாக சிந்திக்கத் தெரியாதவர்கள் இவர்கள் எப்போதும் அயலவரின் அறிவுரையில் இயங்கும் முதுகெலும்பு இல்லாத பண்டிதர்கள் (இது என் தனிப்பட்ட கருத்து விருப்பம் இல்லை எனில் வலைப்பதிவாளர் அகற்றும் உரிமை உண்டு!)
மேலும் பேசலாம் போதிய நேரம் இல்லை!

F.NIHAZA said...
Best Blogger Tips

@தனிமரம்

இது என்றால் உண்மையிலும் உண்மை....

Anonymous said...
Best Blogger Tips

இது கொஞ்சம் சென்சிடிவ் விடயம்...புட்டிபாலின் கருத்துகள்தான் எனது கருத்துகளும்!!

Yoga.s.FR said...
Best Blogger Tips

இரவு வணக்கம், நிரூபன்!இந்தக் கால கட்டத்துக்குத் தேவையான ஒரு கண்டனம் பொருந்திய கேள்வியுடன் கூடிய ஒரு பதிவை இட்டிருக்கிறீர்கள்!உண்மையில் ஒரு கையறு நிலையில் தான்,இன்று த.தே.கூ இருக்கின்றது என்பது உண்மையே!தந்தை செல்வா,அண்ணன் அமீருக்குப் பின்னர் விடுதலைக் கூட்டணி பிளவடைந்தது!தொண்டமானின் காங்கிரஸ் பெயருக்கே அந்தக் காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.உடைந்த கூட்டணி வி.பு.களின் முயற்சியால் வேறும் முன்னாள் விடுதலை இயக்கங்களின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பானது.இன்று வரை தாய்க் கட்சிகள் கலைக்கப்படவில்லை,உயிருடனேயே உள்ளன!இவை கலைக்கப்படின் கூட்டமைப்பு முதுகெலும்புடன் செயற்படலாமோ?தெரியவில்லை.அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன,கூட்டமைப்பின் மீது!மெல்லவோ,முழுங்கவோ முடியாது தடுமாறுகிறது கூட்டமைப்பு.இலங்கை அரசு மீது சர்வதேச அழுத்தங்கள் மேலோங்கும் பொழுது கூட்டமைப்பு ஆசுவாசப்படுத்தி,மூச்சு விடக் கூடும்!

Anonymous said...
Best Blogger Tips

உங்கள் நிலையை தெளிவு படுத்தியுள்ளீர்கள்...
பின்னூட்டங்களில் இருந்து மற்றவர் நிலையும் அறிய அவா...

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

ம்ம் உவங்களுக்கு உள்ளுக்குள்ளயே ஒற்றுமையாய் இருக்க தெரியாது பிறகென்ன மக்களுக்காக செய்யப்போகிராங்கள்!! ஆளுக்கொரு கொள்கை ,போக்கோடு செயற்ப்பட்டால் அங்கே எப்படி மக்கள் நலன் முன்னிறுத்தப்படும் !!!

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

இரண்டாயிரத்து ஒன்பது மே வரை நாணயப்பிடியில் வைத்திருக்கப்பட்ட மாடுகள் இப்ப ஒவ்வொரு திசையில இழுபடுகுதுகள்.... அப்புறம் எப்படி வண்டில் சேர வேண்டிய இடத்துக்கு போய் சேர்வது

Unknown said...
Best Blogger Tips

அரசியல்வாதிகளின் கய்யாலாகாத்தனத்தை பறைசாற்றுகிறது உங்க பதிவு...பகிர்வுக்கு நன்றி மாப்ள!

உணவு உலகம் said...
Best Blogger Tips

விரிவான அலசல்.

மாய உலகம் said...
Best Blogger Tips

வேப்பந்தோப்பு எஸ். சக்திவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

மாய உலகம் said...
Best Blogger Tips

சரியான கேள்வியை முன் வைத்திருக்கிறீர்கள்

தமிழன் வர்த்தகம் said...
Best Blogger Tips

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுமந்திரன் புத்திமதி
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=LBaEK_j8ET4

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கருத்துத் தெரிவித்து உரையாற்றிய அவர்,

போர்க்குற்றம் இரண்டு பகுதியினருக்கும் எதிராக இருப்பதால் அதை விசாரணைக்குட்படுத்தி, எமக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளப் போகின்றோமா? என கேள்வி எழுப்பிய சுமந்திரனின் உரையின் தொனி, புலம்பெயர் மக்களின் எழுச்சியையும் அவர்களின் செயல்பாடுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்திருந்து.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்வதற்கு தமிழரசுக்கட்சி முட்டுக்கட்டையாக இருக்கின்றதே? எனக் கேள்வி எழுப்பிய போது நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய இரத்தினசிங்கம் என்பவர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த விடயத்திற்கு பதில் வழங்க முடியாது என்று சுமந்திரன் நழுவியிருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இவர்களும் இப்படிதான் போல

SURYAJEEVA said...
Best Blogger Tips

தனியுடமை கொள்கைகள் தாங்கும் அனைத்து அரசியல் வாதிகளும் இப்படி தான் இருப்பார்கள்...

சசிகுமார் said...
Best Blogger Tips

எல்லா அரசியல் வாதிகளும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள்.

Unknown said...
Best Blogger Tips

இது தான் நிரூ அரசியல் இது இலங்கையில் மட்டும் அல்ல எல்லா நாடுகளிலும் உண்டு. சூடான் இரண்டானதும் இதனால் தான் எல்லோரும் சிந்திக்க வேண்டும்

அருமை நிரூ..

Unknown said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ்...
"இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் தமிழன் அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப்படும் ஈனப்பிறவிதான் "

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

Yoga.s.FR கருத்துடன் உடன்படுகிறேன்.தற்போதைய சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசையும் ஏனைய அதன் சார்பு தமிழ்க் கட்சிகளையும் மீறி ஒன்றும் சாதித்து விட இயலாது.மேற்கத்திய நாடுகளின் தலையீடு இன்றி மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடவும் முடியாது.கூடவே ஏரியா தாதா இந்தியா,சீனாவின் இலங்கை பொருளாதார ஆக்கிரமிப்பும் இருப்பதால் அமெரிக்கா,பிரிட்டன் நாடுகள் தமிழ் தேசியக்கட்சிகளுக்கு ஆதரவு தராமல் வலுவாக இருக்கும் சாத்தியமில்லை.சம்பந்தன் போன்றவர்கள் ஒற்றைக் குடையில் நிழல் காண்போம் என்கிற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள்.மக்களின் குரல் என்ன என்பதை வாக்கெடுப்பு வாயிலாக அறிய வேண்டியது அவசியம்.

விடுதலைப்புலிகள் இல்லாத வெற்றிடத்தை நிரப்பும் வலு யாருக்குமே இல்லை என்பது வருத்தமான விசயம்.

tamilvaasi said...
Best Blogger Tips

சுடலை ஞானம் பேசிக் கொண்டு இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் வாக்குப் பலத்தினை மாத்திரம் நிரூபித்துச் செயற்படப் போகின்றது?//

எல்லா கட்சிகளுமே வாக்கு பலத்தை நிருபிப்பது மட்டும் தான் செய்கிறது.

shanmugavel said...
Best Blogger Tips

இனிய மதிய வணக்கம் நிரூபன்,

அரசியல்வாதிகள் என்றாலே எல்லா இடங்களிலும் இப்படித்தான் என்பதை தெளிவாகத் தருகிறது உங்கள் பதிவு.சமூகத்தை யோசிக்க வைத்துவிட்டீர்கள்.

Unknown said...
Best Blogger Tips

என்னமோ போங்க பாஸ்! எல்லாரையும் ஒன்றிணைக்கும் சக்தியை விடுங்க..ஒன்ரினையக்கூடிய மனோபாவம் மக்களுக்கு உள்ளதா?

'கூட்டணி மனப்பான்மை' என்ற ஒரு சொல் குறிப்பிடப்படுவதுண்டு! அது யாழ்ப்பாணத்து பெரும்பான்மை மக்களின் மனப்பான்மையே!

அது ஒன்றே போதும் மக்களை ஒன்றினையாமல் தடுக்க!

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

விடுதலைப்புலிகள் இல்லாத வெற்றிடத்தை நிரப்பும் வலு யாருக்குமே இல்லை என்பது வருத்தமான விசயம்.////எதையாவது செய்யப் போய் மீண்டும் பயங்கரவாதமாகப் பிரச்சாரம் செய்து,பார்த்தீர்களா நாம் சொன்ன போது நம்பவில்லை என்று போர்க் குற்றங்களை மறுக்கவும்,மறக்கடிக்கவும் இலங்கை அரசு முயற்சி செய்யும்!அண்மையில் ஐ,நா மனித உரிமை மகா நாட்டில் இலங்கை அரசு தெரிவித்த பொய்யான கருத்துக்களை உடனடியாகவே மறுத்து சர்வதேசத்துக்கு த.தே.கூ அறிக்கை வெளியிட்டது ஒரு துணிச்சல் மிக்க காரியமே!எனினும்,இன்றைய நிலையில் ஒரு வலுவான ஆதரவு தமிழ் மக்களுக்கு இல்லை என்பதே யதார்த்தம்!பார்ப்போம்,பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பது உண்மையானால்..................

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails