Tuesday, October 28, 2014

செக்ஸிற்காக பேஸ்புக்கில் அலைந்து அசிங்கப்படும் பெண்கள்.. ஒரு எக்ஸ்ட்ரே ரிப்போர்ட்

எல்லோரின் கை விரல் இடுக்கிலும் உலகம் தவழ்ந்து கொண்டிருக்கிறது. உள்ளங் கைக்குள் உலகம் என்பதன் பதம் இன்றளவில் தொழில்நுட்ப வளர்ச்சியூடே சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் அதன் நன்மை? தீமைகள் ...அடப் போய்யா அது பத்தியெல்லாம் எவண்டா உன்னிடம் கேட்டது? மேட்டருக்கு வாய்யா அப்படீன்னு தானே சொல்றீங்க.. சரிங்க மக்கள்ஸ்..

பேஸ்புக் இல்லாதவர்களே இவ் உலகில் இல்லை என்று சொல்லலாம். அதுவும் முகம் தெரியாதவர்களை நண்பர்களாக்குவது முதல், காதல், திருமணம் என்று இன்ன பிற விடயங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது பேஸ்புக். முன்பெல்லாம் நண்பர்களைத் தேட வேண்டும் என்றால் பல வாரங்கள், மாதங்கள், வருடங்கள் காத்திருந்து பேனா நண்பர்கள் மூலம் நட்புக் கொள்வோம்.  ஆனால் இன்றோ.. வெறும் நொடிப் பொழுதில் விரும்பியவர்களை நண்பர்களாக்க முடியும், விரும்பாதவர்களை தூக்கி வீசிட்டு போய்க்கிட்டிருக்க முடியும். 

முன்பெல்லாம் நாணம், மடம், அச்சம் நிறைந்திருந்த பெண்கள்.. இன்று பேஸ்புக்கில் எதற்கு வெட்கப்படனும் என்ற நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். உலகம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கப்பால் நமக்கு வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள ஏன் தயக்கம் என்ற பதிலே பல பெண்களிடம் இருந்து வருகின்றது. ஒரு காலத்தில் சைக்கிளில் சவாரி செய்து, ஒரு பெண்ணின் பின் பல முறை அலைந்த்து காதலை ஒப்புவித்து காதலிக்க ஆரம்பிப்போம். ஆனால் இன்று சூப்பராகவோ...சுமாராகவோ நான்கு - ஐந்து போட்டோக்கள் போட்டால் போதும். பெண்கள் வலிய வந்து ரிக்குவெஸ்ட் கொடுக்கிறார்கள். பேசுகிறார்கள்..அடப் போங்கப்பா...இதை விட உடம்பெல்லாம் புல்லரிக்கும் வண்ணம் என்ன என்னவோ விடயங்கள் பண்றாங்க.. இருங்க வர்றேன்...

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பெண்கள்.. இதில் இன்னும் ஓர் வகையறா என்று கொழும்பில் வசிக்கும் நெருங்கிய நண்பர் சொன்னார். போட்டோ போட்டு, தான் பணி புரியும் நிறுவன விபரம் போட்டது தான் தாமதம்.. கொழும்பிற்கு வரவா என்று கேட்கிறார்களாம் என்று சிரித்தபடி சொன்னார்.  இதில் இன்னும் வல்கரா விசயம் என்னவென்றால் எனக்குத் தெரிந்த பதிவர் நண்பர் ஒருவர் “கரும்பு தின்ன கைக் கூலியா? “ என்ற கதையாக கையில காசு...வாயில தோசை என சம்பாதித்திருக்கிறார் என்றால் பாருங்களேன்..அது என்ன சம்பாத்தியமா இருங்க சொல்றேன்.

லண்டனைச் சேர்ந்த அம்மணி ஒருவர்.. அவருடைய கணவர் நீரிழிவு நோயால் இறந்து விட்டார். என் நண்பரோ சுவாரஸ்யமான விடயங்களை, அந்த மாதிரிக் கவிதைகளை, கட்டுரைகளை, ஆலோசனைகளை பேஸ்புக்கில் அப்டேற் செய்வதில் வல்லவர். அம்மணி தனக்கு எல்லா வசதிகளும், வளமும் இருந்தும் கணவர் இறந்த காரணத்தினால் அந்த விசயம் மட்டும் சாத்தியமாகவில்லை என்று கெஞ்சியிருக்கிறார் நண்பரிடம்.. அப்புறம் என்ன? அதுவும் பொருளாதார ரீதியில் குறைவில்லா அம்மணியோ அதிக பணத்தினை ஆடவரின் மோகத்தினால் அள்ளி இறைத்திருக்கிறார். இறுதியில் ஆடவரும் பணத்தைச் சுளையாக கறந்த பின் டாட்டா..பை பை சொல்லியிருக்கிறார்.

தன்னை அந்த பேஸ்புக் நண்பர் திருமணம் செய்வதாக அம்மணி புலம்பினார் சில நாள்.. பின்னர் நடந்தது என்ன? சாட்சியம் அற்ற புஷ்வாணமாக விடயம் அமுங்கி விட்டது.. இது மட்டுமா? பல பெண்கள் முகம் தெரியாதவர்களை நண்பர்களாக்கி அவர்களுடன் “அந்த மாதிரி ஆசைகளைத் தீர்க்கும் வண்ணம் ஸ்கைப், ரெலிபோன், வைபரில் அந்த மாதிரிப் பேசி மகிழ்கிறார்கள். ஆனால் திரை மறைவில் அவை யாவுமே ரெக்கோர்ட் செய்யப்பட்டு பலானா இணையத் தளங்களில் உடனுக்குடன் அப்டேற்றும் ஆகிக் கொண்டிருக்கிறது..

கொஞ்சம் சிந்த்திதால் மானம் போவதையும் தடுக்கலாம்.

நேசமுடன்,
உங்கள் நிரூபன்
நன்றி சொந்தங்களே.. மீண்டும் சந்திக்கலாம்.

2 Comments:

'பரிவை' சே.குமார் said...
Best Blogger Tips

நல்ல பகிர்வு....
விழிப்புணர்வு வருமா?

Thava said...
Best Blogger Tips

இப்போதைய காலக்கட்டத்துக்கு தேவையான பதிவு..நன்றி

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails