Monday, February 28, 2011

இனி நான் உங்களோடு

இனி நான் உங்களோடு 
இன்று முதல் இணைந்திருப்பேன்
கனிவாய் கவிதை சொல்லும்
கருத்துக்களை உங்களுக்காய் பதிவிடுவேன்
மனதின் எண்ணங்களால், உங்களை
மகிழ்ச்சியில் ஆழ்த்திடுவேன்- என்
நினைவில் உதித்தவை, உலக 
நிஜங்களின் எண்ணங்களை, உங்களுக்காய்
கணினியில் பதிவேற்றி மனக்
கண் முன்னே தந்திடுவேன்!

Wednesday, February 23, 2011

ஈழத்தில் சாதியம்- பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்

பதிவிற்கு நுழைய முன்: இங்கே நான் தனி நபர்கள் யாரையும் தாக்குவதாகவோ, அல்லது சமூகத்திலுள்ள பிரிவுகளை எள்ளி நகையாடுவதாகவோ எண்ண வேண்டாம். இப் பதிவின் நோக்கம் இலங்கையில் இற்றை வரை புரையோடிப் போயுள்ள வர்க்க வேறுபாடுகளையும் அவற்றின் ஆதிக்கப் போக்கினையும் ஆராய்வது மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம். இப் பதிவினை உங்கள் அனைவரின் ஒத்துழைப்புக்களோடும், ஆதரவோடும் ஒரு விவாத நோக்கில் கொண்டு செல்லலாம் என நினைக்கிறேன். இப் பதிவு பற்றிய அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. கருத்திட, தங்களை வெளிப்படுத்த தயங்கும் நல்லுள்ளங்கள் பெயர் குறிப்பிடாது கருத்துக்களை விவாத நோக்கில் வெளிப்படுத்தலாம்.

அமைதியைக் குழப்பும் ஆலயங்கள்

’கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது ஔவையாரின் முது மொழி. ‘’ஆலயம்- இது ஆன்மாக்கள் இலயப்படும் அல்லது ஒன்று படும் இடம் என்றும், கோயில்- கோன்(அரசன்) உறையும் இடம் எனவும் பொருள் கூறுவார்கள். மனதில் அமைதியில்லாதவர்கள், மனதில் பல்வேறு குறைகள் உள்ளவர்கள் மன அமைதியை வேண்டி பிரார்த்தனை செய்யும் இடம், தங்களது உள்ளக் குமுறல்களை சொல்லி இறைவனுடன் உரையாடும் இடமாக இவ் ஆலயங்கள் விளங்குகின்றன.

Monday, February 14, 2011

காதலர் தின கிறுக்கல்கள்

உலகில் காதலர்களுக்கெல்லாம் இன்று காதலர் தினம்- காதலை
உதறித் தள்ளும் எனக்கும் உன்னக்கும் இன்று என்ன தினம்?
.............................

காதலர்கள் மட்டும் காதலைக் கொண்டாடலாம்- ஆனால்
காதலர்களை காலத்திற்கு ஒரு தரம் மாற்றும்
நீயும் நானுன் மாத்திரம் எதைக் கொண்டாடலாம்?
...............................

Sunday, February 13, 2011

அரசிய(ற்)ல் காதல்!

நீயும் நானும் இரு வேறு துருவங்கள்
என்பதனை உணர
நீண்ட நேரம் எடுக்காது
என்பது உனக்கும், உனைச் சார்ந்தவர்களுக்கும் தெரியும்
ஆனாலும் உன்னை விட்டால்
சார்ந்திருப்பதற்கு வேறு வழியில்லை
எனும் தோரணையில் ஒட்டியும் ஒட்டாமலும்
உன்னோடு உறவாடியபடி நான்!

Wednesday, February 9, 2011

குடா நாட்டில் விப(ச்)சாரம்...

பெருகி வரும் தொழில் நுட்ப விருத்தியும், திறந்த வெளியாக மாறிப் போன குடா நாட்டின் கலாச்சாரக் கோட்பாடுகளும், பல்வேறு இன மக்களினது குடா நாட்டைப் பார்க்க வேண்டும் என்கின்ற சுற்றுலா ஆசைகளும் யாழ் குடா நாட்டில் தற்போது என்றுமே இல்லாத அளவிற்கு திறந்த வெளிக் காட்சிகளை உருவாக்கியுள்ளது என்றே கூறலாம். இற்றைக்கு மூன்று அல்லது நான்கு வருடங்களிற்கு முன்னர் கொக்குவிலில் தனியாக இளசுகளின் காதல் லீலைகளுக்கு என்று இருக்கும் ‘லவ் லேன்’ போன்று பல லேன்கள் இருந்தாலும் கலாச்சாரம் பேணும் குழுவினது செயற்பாடுகள், இன்னும் ஒரு சிலர் மீதான பயம் காரணமாக நிலமைகள் வரம்பு மீறாமல் நாலு சுவருக்குள் மட்டும் இருந்தன.

Thursday, February 3, 2011

மனதை மயக்கிய மாலதி!

மனதை மயக்கிய மாலதி
மயக்கம் தருகிறாய், நீ யாரடி
கனவில் தினம் வரும் காதலி
கவிதை எழுதுறேன் உன்னால் தானடி
நல்லூர் வீதியிலே நானடி
உனக்காய் நாளும் அலைகிறேன் பாரடி
கல்லோ உன் இதயம் சொல்லடி
கடைக் கண் பார்வை தந்து செல்லடி
என்னை உன் உயிரார் ஆதரி
என்னுள் உறவாட வா சகி!

Tuesday, February 1, 2011

உலகின் அதிசய நாடுகளின் வரிசையில் இலங்கை!

யுத்த்ம் முடிவடைந்து விட்டது, இலங்கையின் நகர்புறங்களை அண்டிய அனைத்து வீதிகளும் கமரா கண்காணிப்பின் கீழ் வந்து கொண்டிருக்கிறது, நாடு அபிவிருத்தியடைந்து, பசுமைப் புரட்சியை நோக்கிய வகையில் முன்னோறிக் கொண்டிருக்கிறது. இதனால் இன்னும் ஒரு சில வருடங்களில் இலங்கை சிங்கப்பூரை அபிவிருத்தியில் மிஞ்சி விடும் என்று யாராவது கருதினால் அது தவறு.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க