Tuesday, December 11, 2012

பதிவர் நிரூபனின் மிக கேவலமான பக்கம்!

அனைவரும் படிக்க வேண்டிய பதிவு!
பதிவர் நிரூபனா இப்படி? பதிவுலகம் அதிர்ச்சி!
வணக்கம் தமிழ் பதிவுலகச் சொந்தங்களே, உங்கள் பேராதரவால் உருவாக்கப்பட்ட நாற்று வலைப் பதிவு தற்போது பல மாதங்களாக தூசு தட்டப்படாது இருக்கின்றது. அந்த நாற்று வலைப் பதிவினை எழுதி வந்தவர் தான் இந்த நிரூபனுங்க. அது வேறு யாருமில்லைங்கோ. நான் தானுங்கோ! 
நண்பர்களே...நாற்று வலைப் பதிவில் எழுதுவதை நிறுத்தி , இப்போது http://www.puradsifm.com/ இந்த முகவரியில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஆகவே இதுவரை காலமும் நாற்று வலைப் பதிவிற்கு ஆதரவு நல்கும் அன்பு உறவுகள், ஆதரவு நல்கி வந்த சொந்தங்கள் அனைவரும், இப் புதிய வலைப் பதிவிற்கு உங்கள் பங்களிப்பை நல்குமாறு மிக மிகப் பணிவன்போடு வேண்டிக் கொள்கிறேன்.
அப்புறம் என்னங்க முறைக்கிறீங்க..வாங்க இங்கே வாங்க. http://www.puradsifm.com/ வந்து ஒரு ரவுண்டு கட்டுங்க! 
அப்புறம் எதுக்குங்க இப்படி ஓர் தலைப்பு என்று யோசிக்கிறீங்களா? அடப் போங்க மக்கள்ஸ்! நல்ல தலைப்பில எழுதும் பதிவுகளை எல்லாம் எவனுங்க படிக்கிறான் இந்த காலத்தில! 

நன்றி உறவுகளே! அங்கே சந்திப்போம்! அங்கேயும் நீங்கள் என்னை பாலோ பண்ணலாம்! மின்னஞ்சல் ஊடாக பதிவுகளையும் பெற்றுக் கொள்ளலாம்! 

Wednesday, September 26, 2012

தமிழ்மணத்திடம் மண்டியிடும் மதவெறியர்கள்!

மதவெறியர்களின் இன்னோர் முகத்தை அம்பலமாக்கும் பதிவு!!

வணக்கம் உறவுகளே, நீண்ட நாட்களின் பின்னர் உங்களை மீண்டும் ஓர் பதிவினூடாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி! எல்லோரும் சௌக்கியம் தானே?
அன்பு நிறை பதிவர்களே! ஏனைய மதங்களை விமர்சித்து, தன் மதத்தினுள் நிறைந்திருக்கும் அசிங்கத்தை புறந்தள்ளி வைத்தவாறு, அடுத்தவர்களின் மதத்தினை விமர்சிக்கும் போது, ஏனைய மதங்களைப் பின்பற்றுவோர் கூட்டமாகத் தாக்குவது இயல்புதானேங்க!"ஐயோ தமிழ்மணமே! எம் மதத்தினைப் பதிவர்கள் இழிவு செய்கிறார்களே" என கூப்பாடு போட்டு, தமிழ்மணத்திடம் தஞ்சம் புகுவது எப்படீன்னு தான் இந்தப் பதிவினூடாக நாம படிக்கப் போகின்றோம்! 

Friday, September 14, 2012

மதவெறி கொண்ட இசுலாமியப் பெண்மணி ஆமினாவுக்கு!

பெண்களை வைத்துப் போரிடும் வீரர்களிற்கான வசைமாரிப் பதிவு! 

வணக்கம் உறவுகளே, எல்லோரும் நலமா?
நானுண்டு, என் பாடுண்டு என இருக்கும் என்னை, வம்பிற்கு இழுத்தால் தம் பதிவுகள் பலரால் படிக்கப்படும் என்பது நீங்கள் இதுவரை அறியாத ஒரு விடயம் அல்ல. சும்மா ஒரு பேச்சிற்கு நிரூபன் உங்க கையைப் பிடிச்சு இழுத்துட்டான் அப்படீன்னு உங்க அண்ணன்களிடம் சொல்வதற்குப் பதிலாக ஓர் பதிவு எழுதிப் பாருங்க! ஹிட்டு மழை செமையாக கொட்டும்! கிக்கும் ஏறும்! ஆனால் அப்படி எழுதாம நேராவே நம்மளை சீண்டியிருக்கிறா மதம் பரப்பும் நோக்கத்தை கையில் எடுத்திருக்கும் ஆமினா அவர்கள்! நாம எல்லாம் ஹிட்டு வெறியர்களாம்! முஸ்லிம் மதவெறியர்களை வைத்துப் பதிவு எழுதி ஹிட்ஸ் அடிக்கிறோமாம்! இது தான் இன்றைய வலையுலக லேட்டஸ் ஹொட் நியூஸ்.

Tuesday, September 4, 2012

மடிலேஞ்சி - கொட்டப் பெட்டி - மனந் தாவும் அட்டக் கத்தி

வணக்கம் அன்புத் தமிழ் நெஞ்சங்களே,
இன்றைய பதிவினூடாக ஓர் வரலாற்றுச் சம்பவத்தினை மீட்டிப் பார்க்கவிருக்கின்றோம். அது என்ன வரலாற்றுச் சம்பவம் என்று நீங்க ஆழ்ந்த சிந்தனையினுள் செல்லலாம். வாருங்கள், மெதுவாக பதிவினுள் இறங்குவோம். 

Monday, September 3, 2012

கா(ம)விச் சாமி நித்தியானந்தா VS காசுச் சாமி கருணாநிதி!

கும்மதலக்கடி கல கல கும்மி! 

நித்தியானந்தா: கமெராவிற்கு முன்னாடி நடிக்கத் தெரிந்தவர் நித்தி. 
கலைஞர்:  கமெராவிற்குப் பின்னாடி கடிதம் எழுதி நடிக்கத் தெரிந்தவர்.

நித்தியானந்தா: வாய் கூசாமல் பொய் சொல்லுவார் நித்தி
கலைஞர்: வம்சத்தை ஆட்சியில் அமர்த்த வாழ்க்கை முழுவதும் அறிக்கை மூலமா பொய் சொல்லுவார்!

Sunday, September 2, 2012

மதம் பரப்புவோம் - மக்களே திரண்டு வாரீர்!

செய்முறை விளக்கங்களுடன் கூடிய ஓர் செப்படி வித்தைப் பதிவு! 

வணக்கம் உறவுகளே, எல்லோரும் நலமாக இருக்கீங்களா? வாருங்கள் மதவாதிகளே! என்ன அம்புட்டு அவசரப்படுறீங்க? கொஞ்சம் பொறுமையா, நிதானமாக மைனஸ் ஓட்டு குத்திட்டு பதிவினைப் படிக்கலாமில்லே!! அதான் சொல்லிட்டமில்லே! அம்புட்டு அவசரம் எதுக்கு?நாம பதிவிற்குள் போவோமா? எந்த ஒரு மனிதனுக்குத் தாழ்வு மனப்பாங்கு அதிகமோ, அவன் தான் தன்னைப் பற்றி எந் நேரமும் சுய தம்பட்டம் அடிக்கும் வண்ணம் சுய புகழ் பாடிக் கொண்டிருப்பான். நிலை குலையும் தன் மன உணர்வினை நிலை நிறுத்த அயராது பாடுபடுவான். இது உலக நியதி.

Thursday, August 30, 2012

இந்துக்கள் அனைவரும் இஸ்லாமியர்களே - அதிர்ச்சியூட்டும் ஆய்வு!

அதிர்ச்சியில் இந்துக்கள் - மகிழ்ச்சியில் இஸ்லாமியர்கள்!

வணக்கம் உறவுகளே, எல்லோரும் வியர்க்க, விறு விறுக்க ஓடி வந்து பதிவைப் படிக்க முன்னாடி “நிரூபன் பயலுக்கு பதிவிற்கு தலைப்பு வைக்க வேறு ஏதுமே சிக்கலையா” அப்படீன்னு மனசிற்குள் திட்டுறீங்களா? கொஞ்சம் பொறுங்க மக்கள்ஸ், பதிவினைப் படிச்சிட்டு அப்புறமா, என்னை திட்டுவது சரியான்னு நீங்களே யோசிப்பீங்க. 

Sunday, August 26, 2012

சென்னைப் பதிவர் சந்திப்பும், சொக்கவைக்கும் டாஸ்க்மாக்கும்

போதையேறிய டாஸ்மாக் பதிவனின் மிட் நைட் அதிரடிப் பதிவு!

வருக தமிழ் உறவுகளே - இங்கே நான் தெளித்திருக்கும்
தெள்ளு தமிழ் கள்ளை அள்ளிப் பருகுக - உங்களால் முயன்றால் கொஞ்சம்
தருக- சியர்ஸ் சொல்லி என்னோடு இணைந்து தமிழ் வாழ்த்து 
தருக! எம் உறவுகளை வாழ்த்த வருக!

Saturday, August 25, 2012

இட்லி குஷ்புவுக்கு அடித்த அதிஷ்டம் - கோடம்பாக்கம் பரபரப்பு

கோடம்பாக்கத்து முன்னணி நடிகைகள் அதிர்ச்சி - குஷ்பு வட்டாரத்தில் மகிழ்ச்சி!

வணக்கம் உறவுகளே, கோடம்பாக்கத்தில் லேட்டஸ் செய்தி என்ன தெரியுமா? ஹிந்தியின் சூப்பர் - டூப்பர் ஹீரோ அமிதாப்பச்சனுடன் ஜோடி சேரவுள்ளாராம் நம்ம இட்லி மாமி குஷ்பு! 
அடியாத்தீ! என ஏனைய நடிகைங்க எல்லோரும் மூக்கில் வெரலை வைத்து ஆச்சரியப்படும் வண்ணம் குஷ்புவிற்கு யோகம் அடித்திருக்காம்! அது மட்டுமா, http://www.puradsifm.com/
லிப்டு லிப்டு முத்தம் புகழ் அன்ட்ரியா இருக்காங்களே! அவங்க விஜய் கூட ஒரு படத்தில ஜோடி சேரப் போவதாக கோடம்பாக்கத்தில் பேசிக்குறாங்க. 

Tuesday, August 21, 2012

மொறாயஸ் சினி பதில்களும் சிலிர்ப்பூட்டும் அந்த நாட்களும்!

அதெல்லாம் ஒரு காலம் நண்பர்களே! மின்சார வசதி இருக்காது. குப்பி விளக்குகளும், லாம்புச் சிமிலிகளும் கண்ணசைக்க, அதன் மென்மையான வெளிச்சத்தின் பின்னே குஷ்பூவையும், மீனாவையும் மனம் அசை போட்ட காலம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பும், தமிழீழ வானொலியும், புலிகளின் குரலும்; இரவினில் தூத்துக்குடி வானொலி நிலையத்தின் திரை கடல் ஆடி வரும் தமிழ் நாதமும், இடையிடையே விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பும், வெரித்தாஸ் தமிழோசையும், ஆல் இந்திய ரேடியோவும் எம்மைக் கட்டிப் போட்ட காலம் அது. பத்திரிகைகள் வரிசையில் ஈழநாதமும், உதயனும் மாத்திரம் தினசரிப் பத்திரிகைகளாக விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வேளை அது.

Sunday, August 19, 2012

கலைஞரை, திமுக கட்சியை அவமானப்படுத்தினால் அவதூறு வழக்கு!!

திமுக, கட்சியினரின்  அதிரடிப் பாய்ச்சல்: 

இன்றைய கால கட்டத்தில் இலவசங்களுக்கு மேல் இலவசங்களை வாரி இறைத்து தமிழக மக்களின் மனங்களை வெல்ல முடியாத கலைஞரின் கட்சியினர் தற்போது சமூக வலைத் தளங்களினூடாகப் புதியதோர் பிரச்சாரப் போரினைக் கையிலெடுத்துள்ளார்கள்.இதன் பிரகாரம்,இளைய தலைமுறையினரைக் குறி வைத்து சமூக வலைத் தளங்கள் ஊடாக திமுக கட்சியின் கருத்துக்களை வலுப்படுத்துவதே கலைஞரின் பெயர் பொறிக்கப்பட்ட திமுக கட்சியினரின் பிரச்சாரப் பீரங்கிப் பேஸ்புக் - டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டதன் நோக்கமாகும்.

One Day: அனுபவிக்கப் போராடும் கில்மா வெறியன்!

கோலிவுட்/ ஹாலிவூட், ஹாலிவுட், கொலிவுட்  திரை விமர்சனம்:
12வயதிற்கு மேற்பட்டோர் பார்க்க கூடிய படம்.
எல்லோருக்கும் வணக்கமுங்க, 
நட்பினைக் காதலாக மாற்றுவதும், காதலை நட்பாக மாற்றுவதும் இக் கால இளசுகளின் ஒரு ஜாலியான வாலிப வயசின் விளையாட்டு என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.கல்லூரியில் ஓர் ஆணுக்கு கிடைக்கும் அதிஷ்டவசமான பெண் நட்பினை வாழ்வின் இறுதிக் கணங்கள் வரை தன் கூடவே அழைத்துச் செல்லும் பாக்கியம் எல்லோருக்கும் இலகுவில் கிடைப்பதில்லை. இப்படியான ஓர் சம்பவத்தினைக் கொண்ட படம் பற்றிய விமர்சனத்தினைத் தான் இப் பதிவினூடாக படிக்கப் போகிறோம். கொஞ்சம் வித்தியாசமான கான்செப்ட் ஆக இருந்தாலும், நம்ம தமிழ்ப் படங்களில் இப்படியான கான்செப்ட்டினைப் பார்த்திருக்கிறோம் என்று கூட கூறலாம். சரி, வாருங்கள்..படத்திற்குள் நுழைவோம்.

Saturday, August 18, 2012

கலைஞரை காக்கா பிடித்ததால் கவித்துவம் இழக்கிறாரா பா.விஜய்?

தமிழ்த் திரை உலகில் மிகவும் குறுகிய காலத்தினுள் தம் திறமை மூலம் அபார வளர்ச்சி கண்டவர்களைப் பட்டியலிடுகின்ற போது அவ் நபர்கள் வரிசையில் "வித்தக கவிஞர் பா.விஐய்" அவர்களும் வந்து கொள்வார். இயக்குனர் கே.பாக்கியராஜ் அவர்களது திரைப்படத்தின் டைட்டில் பாடல் மூலம் தன் திரையுலகப் பயணத்தினை ஆரம்பித்த பா.விஜய் அவர்கள் தன் கவித்துவத் திறமை மூலம் பல்வேறுபட்ட சாதனைகளைத் தமிழ் சினிமாவில் நிலை நாட்டினார். வெற்றிக்கொடிகட்டு திரைப் படத்தில் இடம் பெற்ற “கறுப்புத் தான் எனக்கு புடிச்ச கலரு” பாடல் மூலம் கறுப்பின் மகிமையினை ஓர் பாடலுக்குள் உட்புகுத்தி அனைத்து மக்களுக்கும் நன்கு அறிமுகமானார் பா.விஜய்.

கற்பக் கிரகத்தினுள் கா(ம)விச் சாமி!

*விக்கிரகங்களிற்குப் பூஜை செய்த காலம் போய் - இன்று
விலை மகளிருக்கும் சில கோவில்களில் பூஜை நடக்கிறது!

Friday, August 17, 2012

பேஸ்புக், டுவிட்டரில் கலைஞர் - பொழுதுபோக்கிற்கு ஏது குறைச்சல்!

தமிழினத் தலைவர் இப்போது சமூக வலைத் தளங்களிலும் இறங்கிட்டாருங்கோ! ஆல் அல்லக்கைஸ் ஓடிப் போய் லைக் செஞ்சு செம்பை தூக்குங்க!

கந்தசாமி: ஏலேய் டாக்குத்தர் கருணாநிதி பேஸ்புக் அக்கவுண்ட் திறந்திருக்காராம்ல. இனிமே பலருக்கு பொழுது போகாத நேரத்தில வெளாட ஒருத்தன் கிடைச்சிருக்காண்டா.
துஸ்யந்தன்: அடடா..அருமையா இருக்கில்லே! வாங்க மக்கள்ஸ், நாம செத்து செத்து வெளாடுவோம்!

Thursday, August 16, 2012

அவனை இப்பொழுதே சுட்டுக் கொல்லுங்கள் - ஆமியின் ஆவேசம்

தீந்தை பூசப்படும் சுவர்களின் மேல்
சாமரங்கள் வீசியவாறு 
பொன்னாடை போர்த்துவோர்
ஏறி நடக்கின்றார்கள்
ஆந்தை முழி கொண்ட
கண் கொத்திப் பாம்பாய்
அலை மீதேறி அணிவகுப்பேதுமின்றி
அச்சுறுத்தல் இன்றும் 
ஆளரவமற்ற சிறு தீவிலும் தொடர்கிறது

புலிகளை வைத்து பொ(பி)ழைப்பு நடத்துவது எப்படி?

செய்முறை விளக்கங்களுடன் கூடிய செம்மொழி ஆராய்ச்சிப் பதிவு! 
வணக்கம் உறவுகளே, உலகில் பல்வேறு தொழில்கள் இருந்தாலும், ஒரு சந்ததியின் மானத்தை விற்றுப் பிழைப்பது போன்று சூப்பரான தொழில் இருந்தால் நீங்கள் சுலபமாக பணத்தை ஈட்டலாம் அல்லவா? வாருங்கள் நண்பர்களே! காதோடு காது வைத்தாற் போல புலிகளை வைத்து எப்படியெல்லாம் பிழைப்பு நடத்தலாம் என்பதனை சொல்லித் தருகின்றேன்.

Sunday, August 12, 2012

மக்களே உஷார்! உள்குத்து பதிவெழுத ஊர்மிளா கெளம்பிட்டாங்கோ!

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

முற் குறிப்பு: இந்தப் பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவையான ஒரு பதிவு. இப் பதிவின் நோக்கம் யார் மனதையும் நோகடிப்பதல்ல. பதிவு பிடிக்காதவர்கள் இந்த அறிமுகத்தைப் படித்து விட்டு, எஸ்கேப் ஆகலாம். இவ் அறிமுகத்தின் கீழே அபாயக் குறியீடுகள், சிகப்புக் கோடுகள் உள்ளன. மனதில் தைரியம்- தெம்பு உள்ளவர்கள், சாதிக்க விரும்பும் அன்பர்கள், எல்லோரும் இந்தச் சிகப்புக் கோட்டினைத் தாண்டி வரலாம். பதிவில் உள்ள கருத்துக்கள் நேரடியாக உங்களில் யாரையாவது தாக்குகிறது, பதிவில் உள்ள கருத்துக்கள் எனக்கே குத்தலாக உள் குத்துடன் எழுதப்பட்டிருக்கிறது என்று பஞ்சாயத்துப் பண்ண சால்வையைத் தோளில் போடுற ப்ளாண் உள்ள உள்ளங்கள் இப்பவே எஸ் ஆகிடுங்க. சிகப்புக் கோட்டைத் தாண்டி வந்தீங்க- ரொம்ப சீரியஸ் ஆகிடுவீங்க! இனிப் பதிவிற்குள் போவோமா.
டிஸ்கி: சிகப்புக் கோடு உபயம்:  மாத்தியோசி மணி)
_________________________________________________________________________________

ரஞ்சிதா மாமி! நித்தியா சாமி! கமெராவில் வந்தது சுனாமி!

இது ஓர் தரமான பதிவு அல்ல!
அன்பிற்கினிய வாசகர்களே! காத்திரமான பதிவுகள் எவையும் கிடைக்காது என்பதனை முற் கூட்டியே அறியத் தருகின்றோம்! சரி! வாருங்கள் பதிவிற்குள் நுழைவோம்! 

Saturday, August 11, 2012

ஆபாச(ப்) படைப்பாளிகள் ஆழியாளை முன்னிறுத்தி தோன்றுகிறார்களா?

வணக்கம் உறவுகளே,
பதிவிற்குள் நுழைவதற்கு முன்பதாக ஒரு சிறிய எடுகோளை இங்கு முன் வைக்கிறேன்.
ஆபாசப் பதிவர்கள் வரிசையில் பதிவுலகில் அடியேனும் உள்ளேன் என்பது உங்கள் அனைவருக்கும் சொல்லியா தெரியனும்? நன்றாக எழுதும் பதிவர்கள் வரிசையில் நிரூபனின் பெயரையும் நீங்கள் சிபாரிசு செய்தால் உங்கள் மூஞ்சியில் காறி உமிழாத குறையாக உங்கள் நண்பர்கள்.."நிரூபனெல்லாம் ஒரு பதிவனா?" இவனை விட நன்றாக பலர் எழுதுகிறார்களே எனக் கூறி உங்களுக்கு தரமான பதிவர்களை அறிமுகப்படுத்துவார்கள்! நான் சொல்வது சரி தானே! ஆகவே நான் ஒரு சுத்தமான - ரொம்ப நல்ல பதிவர் என்று எப்போதும் சொல்லியதில்லை! நல்ல பதிவிற்கும், நாறின பதிவிற்கும் இடையிலான வித்தியாசம் உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். 

ஆம்புளைய காதலித்து நொந்த அப்பாவிப் பதிவர்!

எப்படி தான் தொடங்குவது
என்று எனக்கு தெரியவில்லை
மப்படித்து கவி எழுத
மடி லேஞ்சில காசு தேறவில்லை
செப்படி வித்தையாய் ஆனதோ எம் நட்பு
செல்லாத காசாக ஆகிடுமா இந்த வாழ்வு?

Thursday, August 9, 2012

துப்பாக்கி மன்னன் மகிந்த, தூக்கடா தம்பி கோத்தபாய காமெடி ஜிம்மி!

கோத்தபாய ராஜபக்ஸ: அண்ணா! உலகெல்லாம் வாழும் தமிழர்களோ உங்களை போர்க் குற்றவாளி என்று சொல்லி அசிங்கப்படுத்துறாங்க. ஆனா உங்க காலடிக்கு கீழே இருக்கும் தெமிழங்களோ நீங்க நல்லவன்னு சொல்லி பெருமைப்படுறாங்களே! ஏன் இவங்க மட்டும் இப்படி இருக்காங்க?
மகிந்த ராஜபக்ஸ: தம்பியே! அதுகள் நாய்கள்! நான் போடும் எலும்புத் துண்டிற்கு வாலாட்டுவது தானே அவர்களின் வழக்கம்! அவர்கள் குணத்தினை மாற்றவா முடியும்?

HITMAN - விறு விறுப் பூட்டும் திரிலிங் - விருந்தளிக்கும் கிளாமர்!

கோலிவுட், ஹாலிவுட், ஹொலிவூட், கொலிவுட் சினிமா விமர்சனம்!
முற்று முழுதாகப் பொழுது போக்கினையும், சிறியளவில் சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய நற் கருத்துக்களையும் உள்ளடக்கி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களில் அதிகளவானவை பல தரப்பட்ட ரசனையுள்ள மக்கள் மனங்களைத் திருப்திப்படுத்துவதில்லை. ஆக்‌ஷன் பட விரும்பிகளையும், காதல் ரசனையுள்ளவர்களையும், கவர்ச்சிக் காட்சி விரும்பிகளையும் ஒருங்கு சேர்த்துத் திருப்திப்படுத்தும் தரமான கமர்சியல் படைப்பினை எல்லா நேரத்திலும் இயக்குனர்களால் வழங்க முடிவதில்லை. கமர்சியல் படைப்பாகப் பல தரப்பட்ட ரசனையுள்ளவர்களின் மன ஓட்டத்தினைப் புரிந்து கொண்டு ஒரு படத்தினை இயக்குனர் தருகின்ற போதும் படத்தினைப் பார்ப்பதற்கான வயதெல்லை என்பது அப் படத்திற்கு கிடைக்கும் சமூக அங்கீகாரத்தினை உடைத் தெறிந்து விடும்.

டெல்லி சோனியா (டெசோ) மாநாடு குறித்து கதறுகிறார் கலைஞர்!

வணக்கம் உறவுகளே, 
டெசோ மாநாடு தொடர்பில் ரொம்ப பிசியாக இருந்த கலைஞர் ஐயாவை சந்திப்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து கொளுத்தும் வெயிலின் மத்தியில் கோபாலபுரத்தினை அடைந்தோம்! கோபாலபுரத்தை அடைந்த எமக்கோ காத்திருந்தது. அதிர்ச்சி. காரணம் கோபாலபுரத்தின் வாசலில் கடவுள் வாழும் இல்லம் என கலைஞர் இல்லத்திற்கு பெயர் மாற்றப்பட்டிருந்தது. ஆச்சரியத்துடன் உள்ளே சென்ற எமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

Wednesday, August 8, 2012

அதிமுக அடியோடு விரட்டப்படும் - கேப்டன் சூளுரை!

ஜிங்கா புங்கா! ஜிங்கிடி ஜம்பா! காமெடி கு(ஜி)ம்மி! 

செய்தி: அதிமுக வெகு விரைவில் அடியோடு விரட்டப்படும் - கேப்டன் சூளுரை
விமர்சகன்: அடப் போங்க தம்பி! போய் வேலையைப் பாருங்க! சூளுரை என்ற இடத்திற்கு பதிலா மப்புரைன்னு எழுதியிருக்கலாமில்லே!

புலிகளை வைத்து பொ(பி)ழைக்கும் புலம்பெயர் பினாமிகள்!

காலப் பெரு வெளியின் கனத்த இருள் நிறைந்த பக்கங்களைக் கடந்தவர்களாய் இன்று பெரு மூச்சு விட்டு, எமக்கான ஏதும் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் மகிழ்ச்சியோடு வாழ்வதாக நடிக்கப் பழகி விட்டோம். நமக்கான தீர்வோ, நாம் எதிர்பார்த்த எண்ணங்களுக்கான ஒரு பிடி நிலமோ கிடைக்கவில்லை என்றாலும், ஆட்சியாளர்களின் போலி நாடகத் திரை முன்னே நாம் இப்போதும் சந்தோசமாக இருப்பதாக காண்பிக்கப்படும் வேளையில் பணம் வாங்காது உடலை விற்கும் விபச்சாரி போல் எம் பங்களிப்பினையும் செய்யத் தொடங்கி விட்டோம். கந்தகத் துகள் செறிந்துள்ள எங்கள் காற்றும் இப்போது சுத்தம் செய்யப்பட்டு சிங்களத் தமிழ் கலந்து வரும் வடக்கு நோக்கிய வசந்த காற்றாக மாற்றம் பெற்று விட்டது. 

ஷன்னி லியோன் டாப்பு டக்கர் - சரோஜாதேவி சோப்பு டப்பா!

நீ அச்சப்படும் ஒவ்வோர் தடவையும், 
மச்சங்களைத் தேடுவதில் கழிகிறது என் நேரம்!

Tuesday, August 7, 2012

திமுகவிலிருந்து அடித்து விரட்டப்பட்ட பதிவர்!

திமுக கட்சியின் தீவிர விசுவாசிக்கு நிகழ்ந்த கொடுமை! 

மண்ணாங்கட்டி: ஏம்பா பதிவர் பன்னாடை, அந்த அப்பா பதிவரை கொஞ்ச நாளா திமுக அல்லக்கைங்க லிஸ்ட்டில காண முடியலையே! என்னாகியிருக்கும்?
பன்னாடை: ஏலேய் மண்ணாங்கட்டி! இது கூட தெரியாமலா? அவர் திமுகவிற்காக காட்டிய ஓவர் விசுவாசத்திற்காக மூஞ்சில காரி துப்பாத குறையா விரட்டிட்டாங்க.

டெசோ மாநாட்டின் கவர்ச்சி நடனத்தால் விம்மும் கலைஞர்!

வாக்குறுதி வழங்கியதால் பம்மும் ஜெயலலிதா!
விம்மியழும் கலைஞர்!

கண்ணீரில் மூழ்கி கதறியழுகின்றார் ஐயா கலைஞர்
கனிமொழியின் வாழ்வையும் சிதைத்த முன்னாள் தமிழ் தலைவர்!
மண் ஆசையால் இன்றும் போக மனமின்றி தள்ளாடுகின்றார்
மஞ்சள் துண்டே சரணம் என நாளும் திண்டாடுகின்றார்!

தமிழ்த்தாயின் மடியில் தன்னுயிர் போகுமாம்
தவறுகளைச் செய்த உயிர் காரணமாய் இருந்தவரால்
தமிழுக்கும் அ(இ)ழிவு வந்து சேருமோ?

டெசோவெனும் கபட நாடகத்தில் கவர்ச்சி நடனம் - அது
குஜாலென அமையாததால் குலுங்கி அழுகிறாராம்!
விடாத சனியென இன்னமும் பதவியெனும் ஆசையை - கை
விடாது தொடர்கிறார் கருணாநிதி! காலத்திற்கேற்றாற் போல
உலக தமிழர்களையும் தொட்டுக் கொள்கிறார் ஊறுகாயாய்!

கண்களால் குறிப்புரைக்கும் பெண்களைப் புரிந்து கொள்ளா ஆண்கள்!

எப்போதாவது ஒரு நாள் நீ வந்து போகும் தருணங்களில் உன்னைப் பக்குவப்படுத்தி கட்டி வைத்து, என்னுள்ளே திணித்துக் கொள்ள முடியாத காதலனாக நான்.
மெதுவாய் என்னுள் நுழைந்து கொண்டு, மெல்லவும், விழுங்கவும் முடியாத உவர்ப்பு நிறை உணவின் சுவையினைத் தந்து விட்டுச் செல்கின்றாய் நீ. ஒவ்வோர் நாளிகையும் உனைப் பற்றியதான என் உருவமற்ற உணர்வுகளுக்கு உணர்ச்சியூட்டிச் செல்கின்றது.நிரூபனின் நாற்று
மெதுவாய் மனதின் அடி வாராத்தில் நீ வந்து நிரந்தரமாய்த் தங்கி விட வேண்டும் எனும் ஆசையினால் என்னுடைய நாளாந்த கடமைகளை மறந்து உன் நாமத்தை உச்சரிப்பதோடு ஐக்கியமாகிவிட்டேன் நான்.
வெட்கம் மானமின்றி நிருவின் நாற்றிலிருந்து காப்பி பண்ணிய பதிவு.

MONTE CARLO - விமர்சனம்- அட்டகாசம் புரியும் இளம் சிட்டுக்கள்!

வாழ்க்கையில் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் ஒரு வித்தியாசமான ஆசை இருக்கும். அதுவும் தம் மனதிற்குப் பிடித்த இடங்களில் ஏதாவது ஒன்றுக்குத் தாம் இறப்பதற்கு முன்பதாகப் போய் விட வேண்டும் என்கின்ற ஆசை பல உள்ளங்களின் அடி மனதில் நீண்ட நாட்களாகியும் நிறைவேறாத கனவாகப் பொதிந்திருக்கும். எம் மனதிற்குப் பிடித்த ஒரு இடத்திற்கு நண்பர்களுடன் ஜாலியாகச் செல்கின்ற போது, அதுவும் எமக்கு ஒத்த ரசனையுள்ள நண்பர்களுடன் ஜாலியாகச் செல்லும் போது கிடைக்கின்ற இன்பங்களும், எதிர்பாராத அதிர்ச்சிகளும் அந்தக் கணப் பொழுதில் ஏற்படுத்துகின்ற மகிழ்ச்சியின் அளவிற்கு எல்லை இல்லை என்றே கூறலாம். 

ரஞ்சியின் வேஷம் கலைந்தது!! நித்தியின் சாயம் வெளுத்தது!!

சிஷ்யன்: குருவே அந்த செஞ்சட்டை சாமியாரின் அறைக்குள் மாத்திரம் அடிக்கடி நடிகைங்க வந்து போறாங்களே! என்ன காரணமாக இருக்கும்?
குரு: சாமியார் நடிகை யோகாசனம் என்ற பேரில புதுசா ஒரு கலையை அறிமுகப்படுத்தியிருக்காரு! அதனால தான்!

கண்டாங்கி சேலை வாங்கி கருணாநிதிக்கு கட்ட வாரீர்!

கண்டாங்கி சேலை வாங்கி எல்லோரும்
கருணாநிதிக்கு கட்ட வாரீர் - தமிழனை 
துண்டாக ஆக்கி துக்கடா அரசியல் நடத்திய
துஷ்டரின் வேசம் கலைந்ததை மறக்காத அனைவரும்
கொண்டாடி மகிழ்வோம் - குடும்ப அரசியலின்
கொலு விளக்காம் கலைஞருக்கு எல்லோரும்
கண்டாங்கி சேலை கட்டி மகிழ்வோம் 
கல கலப்பாய் கிளம்பி வாரீர்! 

Monday, August 6, 2012

மின் வெட்டில் ஆட்டயப் போடும் அம்மா ஜெயலலிதா!

அம்மா ஜெயலலிதா
உந்தன் ஆட்சி காலமதில் நீயோ
பலருக்கும் புரியாத புதிரம்மா 
2G ஊழல் போதையில்
கொட்டமடித்த கலைஞர் 
கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பி நிரூபன் நாற்று
கெட்டியாக ஆட்சியினை பிடித்து
இலவச திட்டங்களோடு பலவற்றோடு
நீ நுழைந்தாய்!

ஷகீலா - சன்னி லியோன் வரிசையில் அட நம்ம நமீதாவா?

இயக்குனர்: ஏம்மா அஸிஸ்டெண்டு, அந்த நடிகையை ரொம்ப நாளா பீல்ட்டில காணமே? எங்கே போயிருப்பாங்க?
அஸிஸ்டெண்ட்: என்ன சார், இது கூட தெரியாமலா? மார்க்கட்டி இறங்கியிருக்கு என்பதால் அமெரிக்காவுக்கு போயிருக்காங்க. சன்னி லியோன் மாதிரி அதிரடியா கெளம்பலமா என்ற நெனைப்பில

Sunday, August 5, 2012

சிற்றின்ப வெறியால் சீரழிந்த காதல்!

மறந்து போகுமோ முதற் காதல்!

புவியினிலே  கவிக்கும் பல பாடு பொருள் உண்டாம் – – இக்
கவியினிலே நானும் மறந்து போகுமா முதற்
காதல் என உரைக்க வந்தேன் – அட போடா நீயும் உன்
கவியும் என வார்த்தைகளை நீவிர் எறிந்து வீசாது
கேட்டிடுவீர் – குறை நிறைகளையும் பகிர்ந்திடுவீர்!

முஸ்லிம்களை பூண்டோடு அழிக்க தயாராகும் இலங்கை அரசு!

முஸ்லீம் ஈழம் கோரி போரடத் தயாராகும் ஈழ முஸ்லிம்கள்! 

அனைத்து வலைப் பதிவுச் சொந்தங்களுக்கும் நாற்று குழுமத்தின் இதயம் கனிந்த இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!
வாங்க மக்கள்ஸ்...சிங்கள இனவாதிகளுடன் முஸ்லிம் மக்கள் ரொம்ப நாளா ஒண்ணா வாழ்றாங்களாம்! அது போல தமிழ் மக்களும் வாழப் பழகிக்கனும். ஈழ மக்கள் சிங்களவர்களை எதிரிங்க போல பார்ப்பதை நிறுத்திட்டு, ஓடும் புளியம் பழமும் போல ஒண்ணா இணைஞ்சிருக்கிற முஸ்லிம் மக்களைப் போல வாழக் கத்துக்கனும்! இப்படிச் சொன்னவர் வேறு யாரும் இல்லைங்க! நம்ம பதிவுலக தீர்க்கதரிசி - சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெறப் போகிற அண்ணன் சுவனப்பிரியன் தானுங்க! அவர் போன வருசம் அக்டோபர் மாசத்துல சொன்னாரு! இப்போ தானுங்க அந்த வார்த்தையை நம்ம சிங்கள இனவாதிங்க நெசமாக்கியிருக்காங்க.

Saturday, August 4, 2012

வலைப் பதிவு வரலாற்றில் முதன் முறையாக ஓர் புரட்சி!

நீங்களும் நேரடியாக ப்ளாக்கர் எப்.எம் வானொலியில் இணைந்து கொள்ளலாம்! 

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்கும் உரிய உறவுகளே, என்னடா இவன் ரொம்ப தொல்லை பண்றானே அப்படீன்னு யோசிக்கிறீங்களா?
கவலையை விடுங்க. உங்கள் புரட்சி இணைய வானொலியில் இப்பொழுது ஒலிபரப்பாகும் "காதலா காதலா” நிகழ்ச்சியில் நீங்களும் நேரடியாக இந்தப் பதிவின் பின்னூட்டப் பெட்டி வாயிலாக இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை கேட்டு மகிழ முடியும். அன்பு உறவுகளே, நீங்கள் விரும்பி கேட்கும் பாடலை, யார் யாருக்காக கேட்கிறீங்க என்ற விபரத்தோடு உடனுக்குடன் பின்னூட்டம் ஊடாகப் பகிருங்கள். உங்களுக்காக பாடல் ஒலிபரப்ப காத்திருக்கிறார் "காதலா காதலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் இராமலிங்கம் இராகவன் அவர்கள்.

ஜெயலலிதா பிரதமரா? கேப்டன் காட்டம்- மகிழ்ச்சியில் கோபாலபுரம்!

கேளிக்கையில் கோபாலபுரம் - கோபத்தில் ஜெயா - வழக்கம் போல ஓவர் மப்பில் கேப்டன் - வெட்டியாய் மொக்க போடுறேன் நான்!! 

எமலோகத்தில் எம தர்மனும், குழுவினரும் பேசிக் கொள்கிறார்கள்.

*எமனின் சீடன்: மன்னா!! கேட்டீர்களா சேதி? பூலோகத்தில் ஜெயலலிதா எனும் முன்னாள் நடிகையை பிரதமராக தகுதி உள்ளவரா அப்படீன்னு கேப்டன் கேட்டுப்புட்டாராம்.
எம தர்மன்: அப்படியா சங்கதி? அதைக் கேட்பவருக்கு கேள்வி கேட்கிற தகுதி இருக்கான்னு அம்மா கேட்கமால் விட்டுப்புட்டாங்களே!!

Friday, August 3, 2012

வில்லங்கத்தை கொ(கெ)டுக்கும் விபரீத கு(சு)றும்புகள்!

ள்ளக் காதலும் கணவன் கையில் ஆதாரமும்!
பெண்டிலை(க்) கேட்டாராம் பெருசு
பெறு மாதம் எப்போதென்று?
அண்டை வீட்டு அழகனிடம்
அன்பாக கேட்ட பின்
மண்டே சொல்லுகிறேன் என
மனதுக்குள் யோசித்தாள் தேவி;
இன்றைய காலத்தில் நடக்கும்
இடக்குமுடக்கான வேலையிது
என்றே சொல்லி எனை
ஏமாளியாய் அனுப்பினாள்- பாவி
நன்றாய் இது இல்லையென
நான் பொங்கினால் ஆணாதிக்கமாம்!
மன்றம் போட்டு மைக்செட் பூட்டி
மங்கையர் முழங்கும் காலத்தில்
"கன்றாவி லைப்" இதுவென
கணவன்மார் புலம்பினால் வாழ்வும்
திண்டாடி கோர்ட்டேறி
தீராத தொல்லையோ; டிவோசில் முடியுமாம்!

அன்பான மனைவியை விடுத்து அடுத்தாத்து பெண்களை நாடும் ஆடவர்கள்!

*காலாதி காலமாக காதலி தேடி அலைந்தது ஆணாதிக்கம் - இப்போ
கழட்டி விட்டு விட்டு டாட்டா காட்டுவது நவீன பெண்ணாதீக்கம்!

*மிஸ்ட் காலில் லவ் செஞ்சு பணத்தை மீதப்படுத்தினால் நீ சுகவாசி
பேஸ்புக்கில் Tag செஞ்சு லவ் சொன்னால் நீயோ சர்வாதிகாரி! 

*உள்ளம் உன்னை நினைத்தாலும், உன்னை விட அழகான பெண்ணை
கண்டால்
பள்ளம் என நினைத்து இடறி விழுகிறது! 

Thursday, August 2, 2012

பேஸ்புக்கில் அரங்கேறும் கள்ள காதலும், தில்லு முல்லுகளும்!

ஒரு அதிரடி ரிப்போர்ட்! 
முக நூல் ஊடே நட்பாகிய தோழி அவள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது அரட்டையடிப்பதும், பதிவுகள், வலைப் பதிவு இணையம் பற்றிச் சிலாகிப்பதுடன் எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. அவளது காதல் திருமணம் முதல் இன்று கணவன் எங்கே இருக்கிறான் எனும் தகவல் வரை அனைத்து தகவல்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டிருந்தாள் அவள். திடீரென அவள் கணவனுடன், இன்னோர் பெண் நிற்கும் முக நூல் Profile இனை அனுப்பி இவர் யார் தெரியுமா என்று கேட்டாள் அவள்?

தாம்பூலத் தட்டில் தமிழீழம்! கலைஞர் கொடுக்கிறார்! வாங்க வாரீர்!

ஆகஸ்ட் 12ம் திகதி YMCA திடலில் கலைஞர் வழங்குகிறார்! உலக தமிழர்களே அணி திரளுங்கள்! !
இலங்கையில இறுதி யுத்தம் நடந்திட்டு (வைகாசி மாதம் 2009ம் ஆண்டு) இருந்த சமயம் ஓர் காமெடி உலக மக்கள் மத்தில் பரவிக் கொண்டிருந்தது. அப்போது இடம் பெற்ற தேர்தலில் கலைஞர் ஆதரவளித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் தோல்வியடைய நேர்ந்தால் கலைஞர் ஜி தன் வசமுள்ள இறுதி அஸ்திரத்தினையும் யூஸ் பண்ணி தேர்தலில் வெற்றி பெறுவார் என்பது தான் அந்தச் செய்தி. அதனைச் சற்று விரிவாக நோக்கினால், இலவசம் மேல் இலவசம் கொடுத்து தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றும் கலைஞர், தேர்தலில் தன் கட்சி தோல்வியடைய நேர்ந்தால் "தமிழீழத்தையும் இலவசமாக கொடுப்பார்” என்பது தான் அந்தச் செய்தி. 

கலைஞரும் - ஜெயாவும் தில்லாலங்கடி ஆடினா எப்படியிருக்கும்?

வணக்கம் அன்பு உறவுகளே, சேமம் எப்படி?
அரசியல்வாதிகள் ஆட்டம் போட்டாலே பூமி தாங்காதுன்னு பேசிக்குவாங்க. அந்த லட்சணத்தில கலைஞரும், ஜெயாவும் தில்லாலங்கடி ஆடினால் நம்ம நெலமை என்னாவது அப்படீன்னு ஒரு சிலரும், இப்போ ஐயாவும் - அம்மாவும் இதைத் தானே ஆட்சி கட்டிலில் பண்ணிட்டு இருக்காங்க அப்படீன்னு இன்னும் சிலரும் யோசிக்கிறீங்க தானே. சரி வாருங்க! இன்றைய பதிவினுள் நுழைவோம். 

ஊடகங்களின் வாயை அடைக்கும் ஸ்ரீலங்காவின் மகிந்த வம்சம்!

வணக்கம் உறவுகளே, எல்லோரும் சௌக்கியமா? சாப்பிட்டாச்சா?
இன்றைய நவீன தொழில்நுட்ப விருத்தியின் காரணமாக சுயாதீன ஊடகங்களின் வளர்ச்சி என்பது வளர்ந்த நாடுகளில் தாவிப் பிடிக்க முடியாத எல்லையினை எட்டியுள்ளது எனலாம். ஆனால் ஓர் இனத்தின் இரு கண்களுள் ஒன்றாக விளங்கும் மொழி வளர்ச்சியினைச் சிதைக்கும் நோக்கில் ஊடகங்கள் மீது சுருக்கு கயிறு வீசுகின்ற அசிங்கமான செயல் இலங்கையில் மாத்திரம் தான் இன்றும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 1983ம் ஆண்டு தென்னாசியாவில் மிகப் பெரியதும், பழமை வாய்ந்ததுமான யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துடன் பேரினவாதிகளின் தமிழர்களின் தாய் மொழியினைச் சிதைக்கின்ற செயற்பாடு ஆரம்பமாகின்றது.

Wednesday, August 1, 2012

கண்ணடித்த கல்லூரிப் பெண்களும், கண்ணுள் நிற்கும் நினைவுகளும்!

மறுபடியும் முதல்ல இருந்தா?
வணக்கம் உறவுகளே,
நேற்றைக்கு நைட் எழுதிய பதிவில, நைட்டில ஒரு தொடர் எழுதப் போறதா சொன்னேன் இல்லையா? அந்த தொடர் வரிசைல ஏலவே எழுத ஆரம்பிச்சிட்டு எழுதி முடிக்காம இடை வழில நிற்கிற என்னை கெடுத்த பெண்கள் தொடரை மறுபடியும் ஆரம்பிக்கலாம் எனும் நோக்கில் இந்த தொடரை இப்பொழுது உங்கள்  முன் சமர்பிக்கின்றேன்!

மனம் ஓர் குரங்கு என்று சொல்லுவார்கள். எல்லா மனிதருள்ளும் காதல், அன்பு, பாசம் என்கின்ற பல்வேறுபட்ட உணர்வுகள் பொதிந்து கிடக்கும். அவை ஓர் அலாரம் போன்று தமக்குரிய நேர காலம் வரும் போது தம் குண இயல்பினை வெளிப்படுத்தக் கூடியவை.பூமியில் பிறந்த மனிதனுக்கு என்றோ ஓர் நாள் காதல் என்ற ஓர் தெய்வீக உணர்வு நிச்சயமாக வந்திருக்கும். இரு தலையாக காதல் வரா விட்டாலும், ஒரு தலையாக நிச்சயமாக காதல் உணர்வுகள் அவன் மனதினைக் கட்டிப் போட்டிருக்கும் எனலாம். ஆசாபாசங்கள் என்பப்படுவது ஒரு திரி தூண்டி போன்று தூண்டி விட்டால் பற்றி எரியக் கூடிய வல்லமை பெற்றவை. யாருக்கு எப்போது, எந்த இடத்தில் தம் வெப்பியாரத்தினைக் காட்டுகின்ற திறன் கொண்டவை இந்த உணர்ச்சிகள் என்று இலகுவில் எல்லோராலும் அளக்கவோ, அறியவோ முடிவதில்லை.

Unstoppable - நிறுத்த முடியாத ரயில் ஹாலிவூட் பட விமர்சனம்!

ஹாலிவூட், ஹொலிவூட், Hollywood, கோலிவூட், கோலிவுட் திரை விமர்சனம்!
குழந்தைகள் மற்றும் இளகிய மனமுடையோர் பார்ப்பதற்கு உகந்த படம் அல்ல!
வாழ்க்கையினை நாம் எல்லோரும் சவாலாக எடுத்துக் கொண்டால் தான் தடைகளையும்- தடங்கல்களையும் தாண்டி வளர்ச்சியடைய முடியும். சவால்கள் நிறைந்த தமது வாழ்க்கையினைப் பிறருக்காக அர்ப்பணிக்கின்ற தியாக மனப்பான்மை எல்லா மனிதர்களுக்கும் அமைவதில்லை. தன் வாழ்க்கையினை அர்ப்பணித்து, பிறருக்காகப் போராடுகின்ற சவால்கள் நிறைந்த மனிதனின் திரைக் கதையினை உள்ளடக்கிய ஒரு படத்தினைப் பற்றித் தான் நாம் இப் பதிவினூடாகப் பார்க்கப் போகின்றோம்.

குஷ்புவின் இடுப்பும், குடி முழுகிப் போன திமுகவும்!

லேட்டானாலும் லேட்டஸ்ஸான நியூஸ்!

கற்புக்கு இலக்கணம் சொன்னார் அம்மணி
கச்சிதமாய் வாங்கி கட்டினார் சென்னையில்
வம்புக்கு போகாத பெண்களை கூட - வரிசையாய்
வீதிக்கு இழுத்தார் நம்ம குஷ்பு - ஆனாலும்
இன்றும் பலரின் மன கோயிலில் டாப்பில்!
இவா சினி பீல்ட்டில் இல்லையே என்றோர் தவிப்பு! 
அட இட்லியை கூட விற்றிட இவங்க பெயர் தானே
நமக்கெல்லாம் தினம் யூசு! (Use)

Tuesday, July 31, 2012

ப்ரீயா வுடுறான் கூகுள்காரன்! புகுந்து வெளாடு மாப்புள நீயி!

வணக்கம் மக்கள்ஸ்,
எல்லோரும் சௌக்கியம் தானேங்க? எல்லோரும் நல்லா வயிறு நெரம்ப சாப்பிட்டு விட்டு, கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்திருப்பீங்க என்று நெனைச்சிட்டு எழுதுறேன். ஏன்னா நீங்க சாப்பிடும் போது புரையேறி, வாந்தி எடுக்க கூடாது பாருங்க. என்னா மேட்டருன்னா, நான் மறுபடியும் எக்ஸ்பிரஸ் வேகத்தில எழுதலாம் என்று கெளம்பியிருக்கேனுங்க.அட..பலருக்கு இருக்கிற சந்தோசமும் இப்போ இல்லாம போயிருக்குமே என்று நினைக்கையில் ரொம்ப வருத்தமா இருக்குங்க. "ப்ரீயா தானே கூகுள்காரன் வுடுறான்”அதான் நானும் புகுந்து வெளையாடலாம் என்று இறங்கியிருக்கேனுங்க.

Monday, July 30, 2012

பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக ப்ளாக்கர் எப்.எம்

புதுப் பொலிவுடன் உங்கள் புரட்சி எப்.எம்
அன்பிற்கினிய உறவுகளே,
பதிவுலகத்தில் உள்ள நாற்று முக நூல் குழும உறவுகளின் ஒன்றிணைந்த செயற்பாட்டின் விளைவாக உங்களை இப்பொழுது புதுப் பொலிவுடன் நாடி வருகின்றது ப்ளாக்கர் எப்.எம் - புரட்சி எப்.எம்.
இணைய வானொலிகள் வரிசையில் புதுப் புரட்சி படைக்கும் வண்ணம் எமது வானொலி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Thursday, July 12, 2012

வண்டலூர் வனிதாவின் கொண்டையில் மலர்ந்த பூ என்ன பூ?

வாங்க நண்பர்களே, வாங்க.. எல்லோரும் ஜோரா இருக்கீங்களா? புரட்சி இணைய வானொலி கேட்டுக் கொண்டே ப்ளாக்கை படிக்கிறீங்களா? 
அதென்ன வண்டலூர் வனிதாவின் கொண்டையில் மலர்ந்த பூ அப்படீன்னு யோசிக்கிறீங்களா? வாங்க சார்.. வாங்க.. இப்பவே பதிவிற்குள் இறங்கி நீராடுவோம்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க