Thursday, August 9, 2012

HITMAN - விறு விறுப் பூட்டும் திரிலிங் - விருந்தளிக்கும் கிளாமர்!

கோலிவுட், ஹாலிவுட், ஹொலிவூட், கொலிவுட் சினிமா விமர்சனம்!
முற்று முழுதாகப் பொழுது போக்கினையும், சிறியளவில் சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய நற் கருத்துக்களையும் உள்ளடக்கி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களில் அதிகளவானவை பல தரப்பட்ட ரசனையுள்ள மக்கள் மனங்களைத் திருப்திப்படுத்துவதில்லை. ஆக்‌ஷன் பட விரும்பிகளையும், காதல் ரசனையுள்ளவர்களையும், கவர்ச்சிக் காட்சி விரும்பிகளையும் ஒருங்கு சேர்த்துத் திருப்திப்படுத்தும் தரமான கமர்சியல் படைப்பினை எல்லா நேரத்திலும் இயக்குனர்களால் வழங்க முடிவதில்லை. கமர்சியல் படைப்பாகப் பல தரப்பட்ட ரசனையுள்ளவர்களின் மன ஓட்டத்தினைப் புரிந்து கொண்டு ஒரு படத்தினை இயக்குனர் தருகின்ற போதும் படத்தினைப் பார்ப்பதற்கான வயதெல்லை என்பது அப் படத்திற்கு கிடைக்கும் சமூக அங்கீகாரத்தினை உடைத் தெறிந்து விடும்.
ஆனால் ஹாலிவூட் திரையுலகில் இயக்குனர் Xavier Gens (சேவியர் ஜென்ஸ்) அவர்களால் கமர்சியல் அந்தஸ்தினை நோக்கி எடுக்கப்பட்டு, வேண்டத்தகாத நிர்வாண - கிளாமர் கவர்ச்சி காட்சிகளால் அவரது கமர்சியல் கனவினை உடைத்தெறிந்து வயது வந்தோர் மாத்திரம் பார்க்க கூடிய வகையில் சார்ட்டிபிக்கேட் வழங்கப்பட்ட படம் தான் Hitman.
ஏஜெண்ட் 47 எனும் பெயரால் சிறப்பித்து அழைக்கப்படும் இப் படத்தின் கதாநாயகன் Timothy Olyphant அவர்கள் லண்டன், நையீரியா, ரஷ்யா, துருக்கி என மாறி மாறி "The Organization" என்று மாத்திரம் வெளித் சுட்டப்படும் அடையாளந் தெரியாத தீவிரவாத அமைப்பினரின் கூலிக்கு அமர்த்தப்பட்ட {Contract} திரிலிங் கொலையாளியாகச் செயற்படுகின்றார். 

ஏஜெண்ட் 47 அவர்கள்; நையிரீயாவில் உள்ள போராட்ட அமைப்பினர் மீது தன் கை வரிசையினை (பின்னணியில் இருந்து நெறிப்படுத்தி) காட்டி விட்டு, இறுதியில் ரஷ்யாவின் ஆட்சி பீடத்தினைச் சிதைக்கும் நோக்கில் ரஷ்ய பிரதமர் மீது குறி வைத்துக் கொலை செய்யத் தயாராகுவதனையும், அவரைப் பின் தொடர்ந்து பிரித்தானியாவிலிருந்து இன்டர்போல் உளவுத் துறையினர் கைது செய்யும் நோக்கில் சேஸிங்கில் திரிவதனையும் காட்சிகளாக கண் முன்னே விரிய வைக்கும் படம் தான் இந்த ஹிட்மேன். ரஷ்ய ஆட்சி பீடத்தினை ஏஜெண்ட் 47 அவர்கள் சிதைத்தாரா? யார் இந்த ஏஜெண்ட் 47? ஏன் ரஷ்யா அமைச்சர்கள், ஏஜெண்டுகள் மீது குறி வைக்கின்றார்? இறுதியில் இன்ரபோலிடம் அகப்பட்டாரா?இல்லை தப்பினாரா? போன்ற வினாக்களிற்கான விடைகளை நீங்கள் படத்தினைப் பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். 

2006ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலும், பின்னர் ஏனைய உலக நாடுகளிலும் வெளியிடப்பட்ட Hitman படத்தினை பிரான்ஸினைச் சேர்ந்த இயக்குனர் சேவியர் ஜென்ஸ் அவர்கள் இயக்கியிருக்கின்றார்.  20th Century Fox  நிறுவன வெளியீட்டில், Timothy Olypahnt, Dougary Scoot, Robert Knepper, Olga Kurylengo, முதலிய ஹாலிவூட்,(அமெரிக்க), பிரித்தானிய, ரஷ்ய, உக்ரேன் நாட்டு நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இத் திரைப்படத்திற்கு Geoff Zanelli அவர்கள் இசை வழங்கியிருக்கிறார். ஹிட்மேன் எனப்படும் உலகப் புகழ் பெற்ற வீடியோ ஹேமினை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப் படத்தினை Skip Woods அவர்கள் தன் எழுத்துருவாக்கத்தால் கதை வசனம் அமைத்துக் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார். 

புரட்சி எப்.எம் கேட்டவாறு பதிவினைப் படிக்க கீழே உள்ள ப்ளேயரில் Play Button ஐ அழுத்துங்கள்.


 விறு விறுப்பூட்டும் சேஸிங், விழி நிமிர்த்தி ரசிக்க வைக்கும் திரிலிங் நிறைந்த அடுத்தது என்ன எனும் ஆவலைத் தூண்டும் சண்டைக் காட்சிகள் - அதன் பின்னே நடக்கும் கொலைக் காட்சிகள், நவீன லேசர் ஆயுதங்களின் உதவியுடன் நடாத்தப்படும் தாக்குதல்களை உள்ளடக்கிய அதிரடிக் காட்சிகள், இடையிடையே டூ பீஸ் ஆடையுடனும், ஆடையின்றியும் திரையில் தோன்றி கண்களுக்கு விருந்தளிக்கும்; கொலை வெறியோடும் தேடற் சுவையோடும் அலைந்து திரியும் கதா நாயகனுக்கு வெறுப்பேற்றி உணர்ச்சியினைத் தூண்டும்; ரஷ்ய - உக்ரேன் நாட்டின் பனி விசிறல்களின் துகள் எடுத்து வெண் கோதுமையோடு கலந்து செய்யப்பட்ட கலவையாக வரும் Olga Kurylengo அவர்களின் மென்மையான கிளாமர் நடிப்பும் இத் திரைப்படத்திற்க் உயிரோட்டமளிக்கின்றது. 
படத்தின் காட்சி நகர்வுகளிற்கமைவாக ரசிகர்களின் மனங்களினைச் சுண்டியிழுத்து திரைப்படத்தோடு ரசிகர்களை ஒன்றிக்க வைக்கும் வகையில் இலாவகமாக விறு விறு கதை நகர்விற்கு ஏற்றாற் போல Geoff Zanelli அவர்கள் இசை வழங்கியிருக்கிறார். படத்தின் நகர்வுகளில் தொய்வின்றி அதிரடி ஆக்‌ஷன், கிளாமர் காட்சிகள் மூலம் விறு விறுப்புடன் கூடிய படத்தினைப் படைத்திருக்கிறார் இயக்குனர் சேவியர் ஜென்ஸ் அவர்கள். தவிப்பு, வெறுப்பு, கோபம், ஏமாற்றம் முதலிய உணர்வுகளைப் பிரித்துக் காட்டும் வகையிலான வசனங்களை ஸ்கிப் வூட் அவர்கள் சிறப்புற எழுதிப் படத்தின் கதை வசனப் போக்கிற்கு மேலும் சிறப்பினைக் கொடுத்திருக்கிறார். எடுத்துக் காட்டாக;
"you are in Fear. I'm Sorry. I can' t allow that". (நீங்க பயந்திருக்கிறீங்க, என்னால இதனை அனுமதிக்க முடியாது) என ஏஜெண்ட் 47 பேசுகையில் பேரழகி ஒல்காவை If you are looking for a reason not to kill me. I don't have one என கண்ணீரோடு வசனம் பேச வைத்து எம் விழிகளையும் நனைத்திருக்கிறார். ரஷ்யர்களின் அரச மாளிகையில் நிர்வாணப்படுத்தப்பட்டு உடம்பில் அடித்துத் துன்புறுத்தப்படுவதன் மூலம் பார்த்து ரசிக்கும் கொடூர குணம் கொண்டோருக்கு விருந்தளிக்கும் பெண்ணாக (Brutally Abusing Women) ஆக ஆரம்பத்தில் காட்சிகளில் தோன்றும் ஒல்காவை, தன் வசப்படுத்தி ரஷ்யர்களின் நகர்வுகளை அறிந்து கொள்ளும் ஏஜெண்ட் 47, ஒல்காவை ஓட்டலில் சந்திக்கும் போது, எம் சிந்தைக்கு விருந்தளிக்கும் வசனங்களையும் பேச வைத்திருக்கிறார் ஸ்கிப் வூட் அவர்கள்.
"You remember everything you see? The women Sitting to table behind you, What she is wearing? என ஒல்கா கேட்கையில்; Red hair And Silk dress, Facing you? That's not a women." என ஆச்சரியமூட்டும் வசனம் பேச வைக்கும் ஏஜெண்ட் 47 அவர்களிடம் அடுத்த கேள்வியினை "What colour  underwear   I'm wearing? என ஒல்கா கேட்கையில், "You are not wearing any - - - - - -" எனச் சொல்லி ரசிகர்களுக்கு மேலும் விருந்து கொடுத்திருக்கிறார் ஸ்கிப் வூட் அவர்கள். 15 வயதிற்கு மேற்பட்டோர் மாத்திரம் பார்த்து மகிழக் கூடிய 94 நிமிடங்கள் நேர அளவை கொண்ட இப் படத்தினை $24 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 20TH Century Fox நிறுவனத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். திரிலிங் பிரியர்களுக்கும், பொழுது போக்கு எண்ணம் கொண்டோருக்கும் இப் படம் நல்லதோர் விருந்தாக அமையும்.
புரட்சி எப்.எம் கேட்டவாறு பதிவினைப் படிக்க கீழே உள்ள ப்ளேயரில் Play Button ஐ அழுத்துங்கள்.

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails