Tuesday, August 7, 2012

ரஞ்சியின் வேஷம் கலைந்தது!! நித்தியின் சாயம் வெளுத்தது!!

சிஷ்யன்: குருவே அந்த செஞ்சட்டை சாமியாரின் அறைக்குள் மாத்திரம் அடிக்கடி நடிகைங்க வந்து போறாங்களே! என்ன காரணமாக இருக்கும்?
குரு: சாமியார் நடிகை யோகாசனம் என்ற பேரில புதுசா ஒரு கலையை அறிமுகப்படுத்தியிருக்காரு! அதனால தான்!

வழிப்போக்கன்: ஏம்பா தெருப் பாடகா, தொழில் ஒண்ணுமே சரியா அமையுதில்ல. நான் சாமியாராகலாம் என்று முடிவு செஞ்சிருக்கேன். நீ என்ன சொல்றே?
தெருப்பாடகன்: நீங்க சாமியாராகுவது ஓக்கே! ஆனால் கமெரா மேனுக்கு அட்வான்ஸா பணம் கொடுக்கனுமே! உன்கிட்ட அம்புட்டு பணம் இருக்கா?

சித்தன்: வாழ்வில் ஆனந்த மயம், அனைத்தும் இன்பமயம், அகிலமே சிவமயம், பேரின்பமயம் அப்படீன்னு ஆன்மீக வாக்கியங்கள் கேட்டிருக்கேன். இப்போ புதுசா எல்லாம் ரஞ்சிதா மயம் அப்படீன்னு ஒரு வசனம் உலவுதே அதுக்கு என்னப்பா அர்த்தம்?
பித்தன்: இது கூடவா தெரியாம சாமி? ரஞ்சிதா மயம் என்றால் அருள் வழங்கும் சாமியார் ரஞ்சிதா மயக்கத்தில் தான் இருப்பதை மறைமுகமா சொல்றாருப்பா!!

வாத்தியார்: பசங்களா சாமியாருக்கும், சர்வாதிகாரிக்கும் என்னய்யா வித்தியாசம்?
மாணவன்: சர்வாதிகாரி மக்களை மிரட்டுவான்! சாமியார் கேமராமேனை மிரட்டுவார்!

ஜிங்கிடி: ஆன்மீக மசாஜ் பத்தி உனக்கு ஏதாச்சும் தெரியுமா?
சிங்கிடி: போங்க சாமி! அதை தானே இந்த உலகமே உங்க வீடியோ மூலமா அறிஞ்சிட்டிருக்கு! 

கவிதை கு(று)சும்பு

நித்தியின் சாயம் வெளுத்ததாம் - நேற்றிரவு
நீண்ட நேர தியானத்தின் பின் உடலும் சிவந்ததாம்
புத்தியில் தமிழன் உயராதவரை காற்றெனவே
புவியில் பல சாமிகள் சாமரம் வீசுவராம் 
பக்தியில் அனைவரும் ஏமாளிகளாய் உள்ளவரை - சாமியின்
படுக்கையறையில் நாளை நம் வீட்டு ஆன்மீகமும்
பொத்தென கிழிந்த கந்தல் துணி போல விலை போகும்
பொறுப்பற்ற தமிழனுக்கும் இது எப்போது உறைக்கும்?

சுங்க அதிகாரி: ஏன் சார் அவங்க பாஸ்போர்ட்டை அபகரிச்சிருக்கிறீங்க?
ஊழியன்: இந்தியாவில ஆன்மீக ஆயில் மசாஜ் பண்ணியது போதாதென்று 
இப்போ இண்டர்நெஷனல் வரைக்கும் கெளம்புறாங்களாம்! 
**************************************************************************************************

அன்பு உறவுகளே,
உங்கள் புரட்சி வானொலிக்குரிய பனர் விளம்பரத்திற்கான HTML கோடிங்கை கீழே இணைத்திருக்கிறேன். இதனை உங்கள் வலைப் பூக்களில் இணைத்து ஏனைய தமிழ்ச் சொந்தங்களிடமும் இந்த வானொலியை அறிமுகப்படுத்துவற்கு நீங்களும் உதவலாம் அல்லவா? 

<a href="http://www.puradsifm.com/" target="_blank"><img src="http://i1219.photobucket.com/albums/dd437/nirupans/puradshi-1.gif" border="0" alt="Photobucket"></a>
அன்பு நண்பர்களே, மேலே உள்ள கோடிங்கை, உங்கள் ப்ளாக்கின் சைட் பாரில் Widget பகுதி ஊடாக Add Html பெட்டியில் அட் செய்வதனூடாக எமது வானொலியை பல உறவுகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு நீங்களும் உதவலாம் அல்லவா?

இன்று; இலங்கை - இந்திய நேரம் காலை  10.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரைக்கும் உங்கள் புரட்சி இணைய வானொலியில் நேரடி நிகழ்ச்சிகள் இடம் பெற்றவிருக்கிறது.. நீங்களும், மின்னஞ்சல், தொலைபேசி, பேஸ்புக், Skype, Google Talk ஊடாக இணைந்து கொண்டு உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி மகிழலாம். 

ஹலோ இணையம் நிகழ்ச்சி காலை 10.00-12.00 மணி வரை இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் உங்கள் உற்றார், உறவினர் நண்பர்களுக்கு நீங்கள் வாழ்த்த்துக்களை தொலைபேசி, Skype ஊடாக நீங்களும் இணைந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
ஹலோ இணையம் நிகழ்ச்சியை தொடர்ந்து வாங்க பேசலாம் நிகழ்ச்சி உங்களுக்காக நண்பகல் 12.00-03.00pm வரை இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் நீங்கள் நாளாந்த செய்திகள், தினப் பலன்கள், இணையச் செய்திகளின் தொகுப்பு, சிறந்த வலைப் பதிவு பற்றிய விளக்கம் ஆகியவற்றையும் கேட்டு மகிழ்வதோடு நேரடியாக இணைந்து பாடல்களையும் கேட்டு மகிழலாம். 

இரவு 08.00 மணிக்கு அறிவிப்பாளர் இராமலிங்கம் ராகவன் தொகுத்து வழங்கும் "காதலா காதலா” நிகழ்ச்சி இடம் பெற காத்திருக்கிறது. அதனை தொடர்ந்து இரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இனிய இடைக்காலப் பாடல்களை நீங்கள் விரும்பி கேட்டு மகிழும் "இதயம் கேட்கும் பாடல்" நிகழ்ச்சி இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை உங்கள் மனதிற்கு பிடித்தமானவர்களுக்கு கேட்டு மகிழலாம். உங்கள் விருப்ப பாடல்களை அனுப்ப puradsifm@gmail.com

புரட்சி எப்.எம் உடன் இணைந்திருங்கள்! 

புரட்சி இணைய வானொலியில் இதயம் கேட்ட பாடல் நிகழ்ச்சி, காதலா காதலா நிகழ்ச்சியில் பாடல் விரும்பி கேட்க விரும்பும் நேயர்கள் இந்தப் பதிவின் பின்னூட்டம் வாயிலாகவும் உங்கள் விருப்ப பாடலின் பெயரையும், பாடலை யாருக்காக விரும்பி கேட்கிறீங்க என்பதனையும் குறிப்பிட்டால் நிகழ்ச்சியில் உங்கள் விருப்ப பாடலும் இடம் பெறும்! 

1 Comments:

வீடு சுரேஸ்குமார் said...
Best Blogger Tips

குத்துங்க....எசமான்! குத்துங்க...(இரண்டாவது படத்திற்கு)

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails