Sunday, September 2, 2012

மதம் பரப்புவோம் - மக்களே திரண்டு வாரீர்!

செய்முறை விளக்கங்களுடன் கூடிய ஓர் செப்படி வித்தைப் பதிவு! 

வணக்கம் உறவுகளே, எல்லோரும் நலமாக இருக்கீங்களா? வாருங்கள் மதவாதிகளே! என்ன அம்புட்டு அவசரப்படுறீங்க? கொஞ்சம் பொறுமையா, நிதானமாக மைனஸ் ஓட்டு குத்திட்டு பதிவினைப் படிக்கலாமில்லே!! அதான் சொல்லிட்டமில்லே! அம்புட்டு அவசரம் எதுக்கு?நாம பதிவிற்குள் போவோமா? எந்த ஒரு மனிதனுக்குத் தாழ்வு மனப்பாங்கு அதிகமோ, அவன் தான் தன்னைப் பற்றி எந் நேரமும் சுய தம்பட்டம் அடிக்கும் வண்ணம் சுய புகழ் பாடிக் கொண்டிருப்பான். நிலை குலையும் தன் மன உணர்வினை நிலை நிறுத்த அயராது பாடுபடுவான். இது உலக நியதி.
அதே போல் எந்த ஓர் மதத்திற்கு தாழ்வு மனப்பான்மை அல்லது எந்த ஓர் மனிதனுக்கு தம் மதம் மற்றவர்களால் புறக்கணிக்கப்படுகின்றது எனும் மாயை இருக்கிறதோ, அந்த மதமும் அம் மதத்தைப் பின்பற்றுவோரும் தான் தன் நிலையினை உணர்த்த, தாழ்ந்து போகும் தன் தரத்தினைத் தூக்கி நிறுத்த, உலகில் உள்ள ஏனைய மதங்களைக் கிண்டல் செய்து, ஏனைய மத நம்பிக்கைகளை புறக்கணித்து தன் மத வலிமையினை வலிந்து திணிக்கப் பார்ப்பார்கள்.

உலகில் எம் தமிழ் மொழியில் உள்ள மதவாதிகள் தான் அதிகளவில் ஏனைய மதக் கொள்கைகளை சகட்டு மேனிக்கு விமர்சித்து, ஏனைய மதங்களைத் தூற்றி எழுதி தம் முட்டாள்தனமான மதப் பிரச்சாரத்தினை வலிந்து புகுத்துகிறார்கள். இதன் ஒரு கட்டம் தான் தம் மதப் பிரச்சாரத்திற்கு ஆதரவு இல்லை எனும் நிலை வந்ததும், ஒருவரே பல்வேறு பெயர்களில் வலைப் பூக்களை உருவாக்கி மதம் பரப்பும் கொள்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள். எல்லோரும் மதம் பரப்ப தயாரா? வாருங்கள்! ரெசிப்பியினைப் படியுங்கள்! மதம் பரப்பி மகிழுங்கள்!

தேவையான பொருட்கள்:

* கூகிள்காரன் ப்ரியா கொடுக்கும் ஒரு வலைப் பூ
*டொமைன் நேம் (விரும்பினால் மாத்திம் வாங்கிக்கலாம் - பத்து டாலர் தான்) 
*பல்வேறு பெயர்களில் உங்கள் மதம் பரப்பும் கொள்கையை வலுப்படுத்தும்  வகையில் போலி புரோபைல் உருவாக்க வேண்டும். (நீங்கள் தனி ஒருவராக இருப்பினும், மதம் பரப்ப பல புரோபைல்ஸ் (Profile) வேண்டும், அப்போது தான் உங்கள் மதம் பரப்பும் கொள்கையினை வலுப்படுத்த முடியும்)
*தமிழ்மணத்தில் ஓட்டுப் போடக் கூடிய வகையில் பல்வேறு பயனர் கணக்குகளை உருவாக்க வேண்டும். ( உங்கள் மதம் பரப்பும் முயற்சியை யாராச்சும் விமர்சித்து எழுதினால் மைனஸ் ஓட்டு குத்தவும், உங்கள் மதம் தொடர்பான கருத்துக்களை ஆபாசப் பதிவில் எழுதினால் கூட, பதிவினைப் படிக்காது மதவாத கருத்துக்களைப் படித்து ப்ளஸ் ஓட்டு போட இந்த ஐடிக்கள் உதவும்)
*அப்புறமா உங்கள் மதக் கோட்பாட்டை முன்னிறுத்தி செல்லும் இடமெல்லாம் பின்னூட்டம் எழுத வேண்டும்.
அதனைப் படிக்கும் பதிவர்கள் பின்னூட்டம் ஊடாக உங்க மூஞ்சியில் காரி உமிழும் போது தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும். (மன உறுதி ரொம்ப முக்கியம்)

*சமுதாயக் கருத்துக்களை அல்லது சமூகத்தில் நிகழும் அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கி எழுந்து பதிவு எழுதி, பின்னர் அப் பதிவினூடாக மூஞ்சி வீங்கும் வண்ணம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் வகையில் உங்களைத் திடப்படுத்திட சில பொதுக் கருத்துக்களைத் தாங்கிய வலைப் பூக்களை உருவாக்கி வைத்திருக்க வேண்டும்.
*வேண்டிய போது அநியாயங்களைக் கண்டு பொங்குவதோடு, உங்கள் பின்னே ஓர் கூட்டத்தைச் சேர்த்து ஏனைய பதிவர்களை கும்ம வேண்டும்.

இனிச் செய்முறை எப்படீன்னு பார்ப்போமா?/ படிப்போமா?

*முதலில் கூகிள்காரன் ப்ரியாவுடுற வலைப் பூவில உங்க மதக் கருத்துக்களை வலுப்படுத்தும் வண்ணம் ஓர் ப்ளாக்கினை உருவாக்கிக் கொள்ளனும். அப்புறமா அந்த ப்ளாக்கின் ஊடாக ஏனைய மதங்களை சகட்டு மேனிக்கு திட்டி எழுதனும். உங்களின் இந்தச் செயலுக்கு ஆதரவாக உங்களுக்குப் பல பெண்களும் ஆதரவா இருக்கிறாங்க என்று காண்பிக்கனும் எனும் ஆசை இருந்தா, உடனடியாக அம்மணி, பெண்மணி, மின்மினி, கண்மணி எனும் பெயர்களிற்கு முன்பதாக உங்கள் மதப் பெயர் வரும் வண்ணம் சில வலைப் பூக்களை உருவாக்கி ஏனைய மதங்களில் உள்ள பெண்களினைப் பற்றி சகட்டு மேனிக்கு திட்டி எழுதனும்.

அதே போன்று, ஏனைய மதங்களில் உள்ள பெண்கள் அடக்கு முறையில் வாடுகின்றார்கள் என்றும், நீங்கள் பரப்பும் ஒரே மதம் மாத்திரம் தான் உலகினுக்கு விடிவினைக் கொடுக்கும் எனும் வகையில் மிமிக்கிரி ஆர்ட்டிஸ் போல எழுதனும்.

இப்படியெல்லாம் நீங்க எழுதிட்டு வந்தா,சில காரணங்களால் திரட்டிகளிலிருந்து உங்க பதிவுகள் நீக்கப்படலாம். ஆனாலும் மதம் பரப்பும் கொள்கையில் நீங்கள் மனந்தளரக் கூடாது. உடனடியாக ஓர் பதிவரைச் சீண்டி எழுதனும். அல்லது பதிவுலகில் அக்கிரமம் நடக்கிறது, முறை கேடு நடக்கிறது எனப் பொங்கியெழுந்து, சமூகக் கருத்துக்களைச் சொல்லும் உங்கள் ப்ளாக்கில் ஓர் பதிவினை எழுதனும். அப் பதிவின் கீழ் திரட்டிகளால் புறக்கணிக்கப்பட்ட உங்களோட மதம் பரப்பும் மெயின் ப்ளாக்கின் லிங்கினை போட்டு நன்றி அப்படீன்னு ஓர் வசனம் போடனும். அப்புறமா, நீங்க எழுதிய சமூக கருத்துக்களைப் படிக்க வரும் பதிவர்கள் உங்களின் மதப் பதிவுக்கும் வந்திருக்காங்க என எண்ணி நீங்க சுய சொறிதல் செய்யலாம்.

இறுதியாக இதமாக, பதமாக, வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒட்டு மொத்தப் பதிவுலகத்தினையும் எம் மதம் பரப்பும் வலைப் பூ மூலம் மதம் மாற்றி விட்டோம் என பெருமிதப்படும் வண்ணம் ஓர் பதிவு மாதத்தில் ஒரு தடவையாச்சும் போடனுமுங்க. பதிவர்களைச் சீண்டி, சமூக கருத்துப் பதிவினை எழுதும் போது ஒட்டு மொத்தப் பதிவுலகமும் உங்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினா, அது சம்பந்தப்பட்ட பதிவரைப் பற்றி எழுதப்பட்டதில்லை எனக் கூறி, சரண்டர் ஆகத் தெரிந்திருக்கனும்.
இவ்வளவு நிபந்தனைகளுக்கும் நீங்கள் உடன்படுகிறீர்களா? உடனடியாக உங்கள் மதம் பரப்பும் மானங் கெட்ட விளையாட்டை ஆரம்பியுங்கள்!

வழமை போலவே இப் பதிவிற்கு மைனஸ் ஓட்டு மழை பொழியப் போகும் மத வெறியர்களுக்கு நன்றி! கூடவே ஒரு விடயம் சொல்லிக்கிறேன்.
நீங்க எம்புட்டுத் தான் மைனஸ் குத்தினாலும், வாசகர் பரிந்துரையில் பதிவு வருவதனைத் தான் உங்களாக் தடுக்கலாம். ஆனால் சூடான இடுகையில் பதிவு வருவதை தடுக்க முடியாதில்லே! வழமை போலவே இப் பதிவினையும் ஆவேசத்துடன் ஓடி வந்து, மூஞ்சியில் விழும் எச்சிலைப் பொறுமையாகத் துடைத்தபடி Page Refresh செஞ்சு இப் பதிவிற்கும் 1500+  Page Views கொடுக்கப் போகும் மத வாதிகள் அனைவருக்கும் நன்றி.

வாருங்கள் இன்றைய பதிவர் அறிமுகம் பகுதிக்குச் செல்வோம்.

இலக்கிய ரசனை உள்ளவர்களுக்கும், இதயத்தில் பல நினைவுகளைச் சுமந்து தமிழைக் காதல் செய்வோருக்கும் களமாக இருக்கும் வண்ணம் வல்வையூரான் எனும் வலைப் பூவினை எழுதி வருகின்றார் இராஜமுகுந்தன் அவர்கள். அறிவிப்பாளர், கவிஞர், எனப் பல்வேறுபட்ட திறமைகளைக் கொண்டவரும்,இலங்கையில் நாடறிந்த அறிவிப்பாளராக பணியாற்றியவருமான இராஜமுகுந்தனின் வலைப் பூவிற்கு நீங்களும் செல்ல வேண்டுமா? வல்வை வெளித் தென்றல் சுமந்து வரும் இனிய தமிழ்க் காற்றைச் சுவாசிக்க வேண்டுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
http://valvaiyooraan.blogspot.com

உபரித் தகவல்: இப் பதிவு எந்த ஓர் மதத்திற்கும் எதிரான பதிவு அல்ல! முற்று முழுதாக மதம் பரப்பும் மத வெறியர்களுக்கு எதிரான பதிவு! 
எங்கே! ஆரம்பியுங்கள் உங்கள் மைனஸ் ஓட்டு வேட்டையை பார்க்கலாம்! 

13 Comments:

Prem S said...
Best Blogger Tips

எங்க போடுறது தமிழ் மணம் வேலை செய்யல அன்பரே உங்களுக்கு மைனஸ் ஓட்டு கிடைக்காதுங்க

Yoga.S. said...
Best Blogger Tips

காலை வணக்கம் நிரூபன்!இண்டைக்கு ஞாயிற்றுக் கிழமை.ஒருத்தரும் வரையில்லை!மைனஸ் வோட் போடலாமெண்டு பாத்தா எனக்கு இங்க வோட் போடுற தகுதி இல்லையாம்.இதுக்கு ஒரு வழி சொல்லுங்கோ!உங்களுக்கு என்ரை ஐ.டி தெரியும் தானே?சொல்ல மறந்திட்டன்,என்னட்டையும் ஒரு "ப்ளாக்" இருக்கு!அதிலயும் எக்கச் சக்கமான பிரச்சினை!கொஞ்சம் பாத்துக் குடுத்தியளண்டா ,உங்கட அத்தன ஆசையையும் நிறைவேற்றுவன்,ஹ!ஹ!ஹா!!!!!

ராஜ் said...
Best Blogger Tips

பாஸ்,
இன்னைக்கு தமிழ்மணம், இன்டலி டௌன்..அதனால இன்னைக்கு மத போதகர்கள் லீவ்.... :):):)
தமிழ்மணம் அப் ஆன உடனே வந்துருவாங்க... :):)

Kalaimahan said...
Best Blogger Tips

செந்தமிழ் வலைத்தளம்
www.kalaimahanfairooz.co.cc

Yoga.S. said...
Best Blogger Tips

Prem Kumar.s said...

எங்க போடுறது தமிழ் மணம் வேலை செய்யல அன்பரே உங்களுக்கு மைனஸ் ஓட்டு கிடைக்காதுங்க!///உங்க வாய்க்கு சர்க்கரை போடணும்,கொஞ்சம் திறங்க!/////குத்திட்டாங்கையா,(மைனஸ் ஒட்டு)குத்திட்டாங்க!இவங்க கடமை உணர்ச்சிக்கு...............!!!???

மலரின் நினைவுகள் said...
Best Blogger Tips

ரைட்டு, கைப்புள்ள கெளம்பிட்டாரு...!!

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம்,மலர்வண்ணன் சார்!"கைப்புள்ளை" ன்னு யாரை சொல்லுறீங்க,என்னையா?ஹி!ஹி!ஹீ!!!

சுதா SJ said...
Best Blogger Tips

அப்படியே மைனஸ் குத்துவது எப்படி என்றும் ஒரு விளக்க பதிவு போடுங்கோவன் நிருபன்,

அவிங்களுக்கு ஹெல்பா இருக்கட்டும் :))) அவிங்கள சில பன்னிகளுக்கு மைனஸ் போடுவது எப்படி என்று தெரியாதாம்.... :(

சுன்னத்பிரியன் தங்க ரகசிய குழுவில் சில பன்னிகளுக்கு மைனஸ் ஓட்டு போடுவது எப்படி என்று கிளாஸ் எடுப்பதாய் நமக்கு தகவல் வந்திருக்கொங்கோ கோ... கோ கோ......

Anonymous said...
Best Blogger Tips

சரியாக சொன்னீர்கள் .. இந்த மதம் பரப்பும் மொள்ளமாறிகள் தமிழ் வலையுலகில் மட்டுமல்ல, பேஸ்புக், டிவிட்டர், யுடுயுப், என எங்கே போனாலும் எவனாவது வந்து கடுப்பேற்றிக் கொண்டே இருக்கின்றார்கள் ...

பதிவுலகில் இப்போது எல்லாம் திட்டி பதிவு எழுதுவதும், கும்பல் கும்பலாக மைனஸ் வோட்டுக் குத்துவதும் வழக்கமாகிவிட்டது ... !!! அவர்கள் லிஸ்டில் நானும் இருப்பது பெருமையாக இருக்கின்றது .. ஹிஹி !!!

திருடானப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க ..... ? பார்ப்போம் என்ன நடக்கின்றது என !

Yoga.S. said...
Best Blogger Tips

(இக்பால் செல்வன்)யாரைய்யா உங்களைச் சொன்னது/சேர்த்தது?????

நிரூபன் said...
Best Blogger Tips

கருத்துரை வழங்கிய அத்தனை உறவுகளுக்கும், பதிவினைப் படித்த சொந்தங்களுக்கும் மிக்க நன்றி.
அடுத்த பதிவில் சந்திப்போம்.
மைனஸ் ஓட்டு விழவில்லை என்பதால் மதவாதிகள் திருந்தி விட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

இந்திரா said...
Best Blogger Tips

ஹஹா..
செம உள்குத்து பாஸூ..

சிரிப்புசிங்காரம் said...
Best Blogger Tips

ஒங்களப்பத்திதான் எங்களுக்குத் தெரியுமே.....நீங்க அந்த மதத்த பத்திதானே எழுதினீங்க...அவுகள பத்திதான் எளுதியிருப்பபீக..என்ன நான் சொல்லுறதுசரிதானே....சும்மா சொல்லுங்க தம்பீ

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails