Thursday, July 12, 2012

வண்டலூர் வனிதாவின் கொண்டையில் மலர்ந்த பூ என்ன பூ?

வாங்க நண்பர்களே, வாங்க.. எல்லோரும் ஜோரா இருக்கீங்களா? புரட்சி இணைய வானொலி கேட்டுக் கொண்டே ப்ளாக்கை படிக்கிறீங்களா? 
அதென்ன வண்டலூர் வனிதாவின் கொண்டையில் மலர்ந்த பூ அப்படீன்னு யோசிக்கிறீங்களா? வாங்க சார்.. வாங்க.. இப்பவே பதிவிற்குள் இறங்கி நீராடுவோம்.
நம்ம சிலோனில முன்னாடி ரொம்ப பேமஸான நகைச்சுவை இரட்டையர்கள் இருந்தாங்க. அவங்க தான் டிங்கிரி, சிவகுரு. அவங்களோட நகைச்சுவையினை அண்மையில் கேட்டப்போ ஒரு விவகாரமான சிந்தனை என் மனதைத் தட்டியது. அந்த சிந்தனையின் வெளிப்பாட்டை கவிதையாக இப் பதிவினூடாக பகிரலாம் எனும் நோக்கில் இந்தப் பதிவினை எழுதியிருக்கேனுங்க. 

டிங்கிரி, சிவகுரு இரட்டையர்கள் பூவை வைத்து அருமையான ஓர் பாடல் பாடியிருந்தார்கள். நான் அங்க சுட்டு, இங்க சுட்டு வனிதாவின் கொண்டைக்கு பூ வைத்திருக்கேன் வாருங்க..

வண்டலூர் வனிதாவின் கொண்டையில் மலர்ந்த பூ என்ன பூ?

வண்டலூர் வனிதா - வார்த்தையால் வர்ணிக்க இயலாத
வனப்புடன் கூடிய கனிகா
கண்டதும் காதல் கொள்ளும் எண்ணம் தோன்றும்
கண்களால் பருகிட மனம் ஏங்கும்
கொண்டதோர் கோலம் எனில் இவள் தான்
கோல மயில் என நினைக்க தோணும்
நின்ற இடத்தில் கூட அவளால் நினைப்பின்றி
நிலை குலைந்து பறந்திட தோணும்

அந்தியில் வருவாள், அன்புடன் அழைப்பாள்
அடிக்கடி கனவுகள் தருவாள்
சிந்தையில் விருந்தளிப்பாள், சிறப்புடனே
சில்மிஷம் செய்வாள், போவாள்
மந்தியை போல மனம் ஏங்கும்
மயக்கத்தில் அவள் அழகை பருகிட உளம் துடிக்கும்
சந்தமில்லா கவி போல அவள் இடையோ
சந்தம் கொண்டு அசையும், சிரிப்பாள்!

காதல் கவி தருவாள், கன்னி கவலை மறக்க செய்வாள்
காதில் கிசு கிசுப்பாள் - காலால் கோலமிடுவாள்
மோதல் கொள்வது போல நெஞ்சுடையாள்
மேனியெங்கும் வியர்க்க செய்வாள்
சாதல் என் மடியில் சுகம் என சொல்வாள்
சத்தமின்றி தாள்பாள் போடுவாள் பாவை
கீதம் இசைக்க வைப்பால், தினமும்
கிளிப் பேச்சாள் கெஞ்ச வைப்பாள்

அன்றொரு நாள் நானும் ஆசையாய் அணைத்தேன்
அத்தான் எனச் சொல்லி கேள்வி கேட்டாள் - வழக்கு
மன்றத்தில் நிற்பது போலானேன், விடையின்றி
வாயுள் போண்டா கடித்த பண்டா நிலையானேன்
அன்பில் சிறந்தவர் நீங்கள் என்பதால் அடியேனும்
அந்த கேள்விகளை உங்கள் முன் வைக்கின்றேன்
பண்பாய் பதில் சொல்வீர், பரிசேதும் கொடுக்க மாட்டேன்
பாவையிடம் பெறும் பாராட்டை மாத்திரம் பகிர்ந்திடுவேன்!

கன்னியோ என்னிடம் வந்தாள், காதலை உரைக்கும் வேளையில்
கேள்வியை கேட்டாள், கண் பார்க்க முடியாது
என்னையே நான் பார்த்து ஏங்கிடா குறையா
ஏப்பம் விட்டேன். என்னடி செல்லம் என்றேன்
மன்னவா பதில் சொல்லு, மங்கையரிடம் உள்ள பூ
மதிப்பிற்கு உரிய பூ என்ன பூ என்றாள்? என்னடி என்றேன் நான்?

காலினால் உரசினாள், காதோரம் வந்தாள்
காலையில் மலரும் பூ என்ன பூ என்றாள் -
மாலையில் மலரும் பூ தெரியுமா என்றாள்
மயக்கத்தில் நானும் இருக்கையில் மங்கையோ
வேலையில் வரும் பணத்தை வேகமாய் முடிக்கும்
வெட்டிப் பூ என்ன பூ என்றாள், ஏக்கத்துடன் நானும்
சோலியில் சிக்கிய மீனாய் சோதனையில் அகப்பட்டேன்
சோதரர் நீரும் பதில் சொல்லினால் நானும் சிரிப்பேன்!

நண்பர்களே.. புரட்சி எப்.எம் கேட்டீங்களா.. கேட்கலைன்னா.. இங்கே கிளிக் செஞ்சு அங்கே போனீங்க என்றால் இசையுடன் இலயித்திடுவீங்க.. நீங்க ரெடின்னா மட்டும் கிளிக் பண்ணுங்க.


5 Comments:

Anonymous said...
Best Blogger Tips

நலமா?

புரட்சி எப் எம் கேட்டேன்
அருமையா இருக்கு..

IPHONE APP சில நேரங்களில் நிற்கிறது...நன்றி சகோதரம் லிங்க் அனுப்பியதற்கு...

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி
வாங்கண்ணே..
ஒரு சில தொழில்நுட்ப குறைபாடுகள் இருக்கு,.
வெகு விரைவில் சீர் செய்கின்றேன்.
தங்கள் அன்பிற்கு நன்றி.

மின் வாசகம் said...
Best Blogger Tips

நல்ல பதிவு !!!

Yoga.S. said...
Best Blogger Tips

காலை வணக்கம்,நிரூபன்!நலமா?///நேக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒரே பூதான்,அது குஷ்பூவாக்கும்!!!!!!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

புரட்சி எப்.எம் அப்பப்போ ப்ளாக் திறக்கும் போது கேட்கிறேன்!நான் ரொம்ப பிசிப்பா!!!!!!!!!!!!!!!!!!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails