Sunday, May 27, 2012

உறவுப் பாலமும், உணர்வுச் சிதறல்களும்!

ஈழப் போரியல் வரலாற்றில் முதன் முறையாக கள முனைச் செய்திகளை நேரடியாகத் தொகுத்து வழங்கும் நோக்கில் தமீழ விடுதலைப் புலிகள் நேரடி ஒலிபரப்பினை, முழு நேர போர்க் காலச் சிறப்பு வானொலி ஒலிபரப்பினைச் செய்த காலப் பகுதி அது. ஆம் 1999ம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் மூன்று படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது, கள முனைச் செய்திகள் புலிகளின் குரல் வானொலியின் போர்க் காலச் சிறப்பு ஒலிபரப்பினூடாக உடனுக்குடன் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. என்ன தான் சிறப்பு ஒலிபரப்பினூடாகச் செய்திகளைக் கேட்டாலும், மனம் அடங்குமா? இரவாகி விடிந்து எழும்பும் போது நள்ளிரவில் என்ன நடந்திருக்கும் என்பதனை அறிய மனம் ஆவல் கொண்டது. 

Thursday, May 24, 2012

சாதாரணமானவனின் மனது கொண்ட அசாதாரணமான பதிவர்!

விபரம் அறிய, விரைந்து வாருங்கள்..
இணையத்தினூடே, உங்கள் இதயங்களைத் தம் பதிவுகளூடாக கொள்ளை கொள்ளும் வலைப் பதிவு எழுத்தாளர்களுக்கு அவர் தம் படைப்புக்களைப் பற்றிய விமர்சனங்கள் இலகுவில் கிடைத்து விடுவதில்லை. இன்றைய இயந்திர மயமான சூழலில் இலக்கணத் தமிழிற்கு விடுதலை கொடுத்து அனைத்துப் பதிவர்களும் இயல்புத் தமிழினூடாக, பேச்சுத் தமிழில், தத்தம் வசதிக்கு ஏற்றாற் போல இலகுவான மொழி நடையில் இணையத்தில் எழுதி வருகின்றார்கள். எம் போன்ற பதிவர்களுக்குரிய விமர்சனங்கள் கிடைக்காதா எனும் ஏக்கத்தில் பல பதிவர்கள் ஏங்கி நிற்க, அந்த குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்யும் நோக்கில் பதிவர் அம்பலத்தார் அவர்கள் பதிவர் விமர்சனம் என்றோர் பகுதியினை நாற்று வலைப் பதிவினூடாக தொடர்ச்சியாகப் பகிர்ந்து வருகின்றார். அம்பலத்தாரின் அரிய முயற்சிக்கு அனைவரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு, இன்றைய பதிவர் விமர்சனம் பகுதியினுள் நுழைவோமா?

அடடே! நம்புங்கப்பா! நானும் ஓர் ப்ளாக்கர் தான்!

மகா ஜனங்கள் அனைவருக்கும் அடியேனின் மெகா வணக்கமுங்க,
எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? குளிச்சீங்களா? சாப்பிட்டீங்காளா என்றெல்லாம் நான் கேட்க மாட்டேன். ஏன்னா நேரந் தவறாம சாப்பிடுவது தமிழனோடு ஒட்டிப் பொறந்த பழக்கம், ஆனால் குளிப்பது என்பது அதை நான் சொல்லியா நீங்க தெரிஞ்சுக்கனுமுங்க. ரொம்ப நாளா நானும் ஒரு பதிவர் என்று சொல்லிக்க ஆசை தானுங்க. ஆனால் ப்ளாக் எழுத டைம் கிடைக்க மாட்டேங்குது. அப்படியும் இருக்கிற நேரத்தில கம்புகுட்டர் முன்னாடி உட்கார்ந்து ப்ளாக் எழுத ஆரம்பித்தால் எழுத எதுவுமே தோணலைங்க. அப்புறம் என்னத்த நான் எழுதி கிளிப்பதுங்க. 

Friday, May 18, 2012

மண்டை ஓடுகளில் ரத்தம் குடித்த சிங்களப் பேய்களும் பேரினவாதிகளும்!

கைகளில் சுடுகலன்
கனரக ஆயுதங்களின்
திணிப்பில் கற்பழிப்புக்கள்
மெய்யினில் தமிழர் மீதான
வெறியினை வெளிப்படுத்தும்
அங்க அடையாளங்கள்!

Thursday, May 17, 2012

நடிகையை கற்பழித்த எழுத்தாளர் ஜெயமோகன்!

எழுத்துலக மோதாவிகளின் மறு பக்கம் - தமக்கு தாமே விமர்சனம் செய்து மகிழும் வித்தகர்களின் சில்லறைக் குணம்! 

வணக்கம் வாசக உள்ளங்களே.... இப் பதிவின் தலைப்பு “நடிகையை கற்பழித்த எழுத்தாளர் ஜெயமோகன்" என்பதாகும். எழுத்தாளர் ஜெயமோகன் ஓர் நடிகையினை கற்பழித்திருக்கார் என்று சொல்லும் போது அதனை நிரூபிக்கும் வகையில் என்னிடம் ஆதாரம் இருக்க வேண்டும். இல்லையேல் தொடர்புடைய செய்திகள் இருக்கனும். அது கூட இல்லாவிட்டால் ஜெயமோகனால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட நடிகையின் வாக்குமூலமாச்சும் இருக்கனும். இங்கே எடுகோளாக ஜெயமோகன் எனும் எழுத்துலக மனிதரை எடுத்து வைத்துக் கொண்டு, அவர் கோடம்பாக்க சினிமா வட்டாரத்துடன் தொடர்புடைய ஓர் பெண்மணியை வல்லுறவிற்கு உட்படுத்தி விட்டார் என்று கூறினால் அந்தச் செய்தி பொய்யான செய்தியாகும். லாஜிக் அடிப்படையில் எழுத்தாளர் கற்பழித்தார் என்று ஓர் செய்தியினை கூறுவது அப்பட்டமான பொய்யாகும்! 

திமுக கழக கண்மணிகளின் திருவிளையாடல்கள்! - படம் இணைப்பு

சந்திக்கு வராத சங்கதிகள், திமுக விசுவாசிகளின் சம்பாசணைகள் உங்களுக்காக!
கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, திமுகவின் அதி தீவிர விசுவாசி ஒருவரும், கட்சியின் தொண்டருமாகிய ஒரு ப்ராப்ள பதிவர் கலைஞரின் கவர்ச்சி மிகு கோவணத்தை பற்றிப் பிடித்தால் தமிழீழம் கிடைக்கும் என டாஸ்மாக் ஊட்டிய பக்திப் பரவசத்துடன் தன் ஓவர் விசுவாசத்தை வெளிப்படுத்தும் வண்ணம் ஓர் கட்டுரை வரைந்து பல பதிவர்களிடமும் வாங்கி கட்டிக் கொண்டார். ஈழப் புளியமரம் எனும் ஈனத் தனமான பதிவெழுதி திமுக கட்சிக்கு இணையத் தளங்களில் இருக்கும் கொஞ்ச மரியாதையினையும் கெடுத்து குட்டிச் சுவராக்கிய பெருமையினை கொண்டவர் தான் இந்த அல்லக் கை விசுவாசி அவர்கள்.

Monday, May 14, 2012

வெறி கொண்டலையும் தமிழன் - வேடிக்கையாகும் நிலமை!

வருமுன் காப்பதே சிறந்தது! 

நெல் அரிசி சோறு 
நேற்றிரவு தந்தவளோ யாரு
சொல்லழகால் காதல் சொன்னாள்
சொக்கவைத்து காதில் முத்தமிட்டாள்
பில் எடுக்க சொன்னேன்
பிள்ளை வேண்டும் என்றாள்
வில்லெடுக்கா வினை தந்தாள்
விருந்தோடு மயக்கம் தந்தாள்
நள்ளிரவில் கொள்ளையிட்ட நாயே
நானுமிப்போன் ஆகிவிட்டேன் தாயே - என
கள்ள மொழி சொன்னாள் - என்னை
கம்பி எண்ண வைத்தாள்!!

*பில் : மாத்திரை

Monday, May 7, 2012

லேடி போல் காதல் தந்து காயம் தந்த கேடிக்கு ஓர் கவிதை!

எப்படி தான் தொடங்குவது
என்று எனக்கு தெரியவில்லை
மப்படித்து கவி எழுத
மடி லேஞ்சில காசு தேறவில்லை
செப்படி வித்தையாய் ஆனதோ எம் நட்பு
செல்லாத காசாக ஆகிடுமா இந்த வாழ்வு?

Thursday, May 3, 2012

மானங் கெட்ட மத வெறியர் கூட்ட ஈனப் புருஷனுடன் ஓர் நேர்காணல்!

பதிவுலகில் தன் மதத்தை வலிந்து திணித்து, தீவிர வெறியனாக மதம் பரப்பும் நோக்கில் அலைந்து கொண்டிருக்கும் ஈனப் புருஷனை ஓர் நேர்காணலுக்காக சந்தித்தோம். மதம் பரப்பும் நோக்கிலும், மைனஸ், ப்ளஸ் ஓட்டுப் போடும் நோக்கிலும் ரொம்ப பிசியாக இருந்தவர் கொஞ்ச நேரம் பிகு பண்ணி விட்டு பேட்டி கொடுக்க சம்மதித்தார்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க