ஆனால்; இன்றோ நிலமை தலை கீழாக மாறி விட்டது. யுத்தம் முடிவடைந்து விட்டது எனும் இறுமாப்பிலும், இனி எம்மை எதிர்பதற்கு, தட்டிக் கேட்பதற்கு அவர்களில்லை என்ற திமிரினாலும் இளைஞர்கள், யுவதிகள் தங்களது தலைகளில் தாமே தென்னிலங்கை நாகரிகத்தை நம் குடா நாட்டிலும் புகுத்துவோம் எனும் பாணியில் மண்ணை அள்ளிக் கொட்டுகிறார்கள் என்றே கூறலாம். இன்றைய காலகட்டத்தில் வெளி நாட்டில் உள்ள சக உறவினர்களின் உதவியினால் சகல வகையான டியிற்றல் நவீன தொலைபேசிகளும் வெளி நாட்டில் அறிமுகமாகி ஒரு சில தினங்களுக்குள் உள்ளூரிற்கு வந்து விடுகின்றன. இதற்கு நான் மட்டும் என்ன விதிவிலக்காம்?
இளைஞர்களும் யுவதிகளும் காதல் எனும் போர்வையில் கட்டுப்பாடுகளற்ற சிட்டுக் குருவிகளாய் அலைவதும், திருமணத்திற்கு முன்பே தங்களது பசியினைத் தீர்த்துக் கொள்வதும், இறுதியில் எல்லாம் முடிந்தவுடன் சாதி, பொருளாதாரம் கல்வியினைக் காரணங்க் காட்டி டாட்டா காட்டுவதும் இன்று வழமையாகி விட்டது. பாடசாலை மாணவ, மாணவிகளின் கைகளில் இருக்கும் அதி நவீன துல்லியமான தொழில் நுட்பங்களைக் கொண்ட கமரா போன்களும், அதி உன்னத நேரங்களில் தாங்களும் ஏன் சும்மா இருக்க வேண்டும் எனும் கோணத்தில் தங்களின் வேலையைக் காட்டி விடுகின்றன. முடிவு? Scandal எனும் போர்வையில் குடா நாட்டு இளசுகளின் பருவ வயசு லீலைகள் ஒரு சில பாலியல் இணையத்தளங்களில் காட்சிக்கு விடப்பட்டுள்ளது.
இதில் நகைச்சுவையான விடயம் என்ன வென்றால் கூகிளில் யாழ்ப்பாணத்திலுள்ள பெண்களுக்கு வரன் பார்ப்பதற்காக, யாழ்ப்பாண பெண்கள் எனும் தலைப்பில் தேடும் போது முதலி வரும் விடயம் யாழில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை மாணவியின் Scandal காட்சியினைப் பற்றிய விபரம் தான். பாடசாலைகளில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் ஒரு சில மாணவர்கள் ஆணுறையினைக் கொண்டு வந்து பலூன் போன்று ஊதி விளையாடி மகிழ்வதும் பெரும் பாலான மாணவர்கள் தங்களது பேர்ஸிற்குள் ஆணுறைகளுடன் அலைவதும் இன்று சகஜமாகி விட்டது.
’குடாநாட்டில் முன்னரைப் போல அல்லாது தற்போது சந்திக்குச் சந்தி பெருகி விட்ட இன்ரநெற் கபேகளும் இத்தகைய செயல்களுக்கு ஒரு களமாகவே இருக்கின்றன. யுத்த காலத்தில் அதிரடியாக களமுனைச் செய்திகளை மட்டுமே வெளியிட்டுத் தமது இருப்பினைத் தக்க வைத்த ஊடகங்களும், தற்போது குடா நாட்டில் புதிதாக முளைத்துள்ள இணையத் தளங்களும் தமது இருப்பினை மேலும் மேலும் தக்க வைப்பதற்காக குடாநாட்டில் நடைபெறும் வெளிவராத செய்திகள் எனும் போர்வையில் இச் செய்திகளைப் போட்டு, இளைஞர் யுவதிகளை நல் வழிப்படுத்தாது அவர்கள் யார், யார் என அடையாளம் காட்டி அவர்களது வாழ்க்கையினை இழிவுபடுத்துவதிலே ஆர்வம் காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இணைய வசதியும், WordPress தொழில் நுட்பமும் இருந்தால் போதும், ஒரு இணையத்தளத்தை உருவாக்கி நாங்களும் குடாநாட்டுச் செய்தியாளராகலாம் என்ற ரீதியில் ‘யாழ்’ குடாநாட்டுப் பெயர்களோடு இணையத்தளங்களும் உருவாகி குடாநாட்டு இளைஞர்களை திருத்துகிறோம் எனும் பாணியில் அவ் இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குகின்றன. இதற்கு உதாரணமாக ஒரு சில மாதங்களிற்கு முன்னர் குடா நாட்டின் பிரபல பாடசாலை மாணவியின் வீடியோ பற்றி ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டமையும், இச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவி இந்த இணையத்தளத்தினூடாகத் தான் என்னை இழிவு நிலைக்கு உட்படுத்தினார்கள் எனும் தொனியில் பேட்டி வழங்கியதோடு, மனமுடைந்து தற்கொலைக்கும் முயன்றுள்ள சம்பத்தைக் குறிப்பிடலாம்.
சட்டவிரோதக் கருக்கலைப்புக்கள், பாதுகாப்பற்ற உடலுறவுகள் எல்லாம் சிறுவயதில் குழந்தைகளுக்குப் பெற்றோராவதற்கு காரணமாகி விடுகின்றன. இத்தகைய செயற்பாடுகளால் வருத்தப்பட வேண்டிய விடயம், எழுபத்தியாறு பேருடன் உடலுறவில் ஈடுபட்ட குடா நாட்டினைச் சேர்ந்த பதினேழு வயதுச் சிறுமிக்கு எயிட்ஸ் நோய் உள்ளது கண்டறியப்பட்டதும், மிகுதி எழுபத்தியாறு பேர் யார் எனக் குடா நாட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் தேடத் தொடங்கியிருப்பதுமே ஆகும்,
இந்தப் பதினேழு வயது மாணவி யாழ் நகரத்தில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஆசிரியருடன் உடலுறவில் ஈடுபடும் Scandal வீடியோ குடாநாட்டிலுள்ள கைத் தொலைபேசிகளில் தற்போது பரிமாறி வருவதும் குறிப்பிடத்தக்கது. தொழில் நுட்பத்தை வளர்க்கிறோம் என்று கூறியபடி நாங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது இங்கே சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
கந்தபுராண கலாச்சாரம், கலாச்சாரத்தின் முக்கிய மையம் எனச் சொல்லப்பட்ட யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது விபச்சாரமும் தன் காலினை மெது மெதுவாக அங்கீகாரம் பெற்ற ஒன்றாக மாறத் தொடங்குகிறது என்றே கூறலாம். இதற்கான பிரதான காரணம் முன்பு ஒளிவு மறைவாக இடம் பெற்ற இவ் விபச்சாரம், கலாச்சாரம் பேணும் குழுவினரால் நையப்புடைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டமையும், இக் கலாச்சாரம் பேணும் குழுவினரின் சொல் கேளாது மீண்டும், மீண்டும் விபச்சாரம் செய்தவர்கள் மன்னர்களின் பெயர் தாங்கிய படைகளினால் எச்சரிக்கை வழங்கப்படு, பின்னர் கொல்லப்பட்டதும் கடந்த கால நிகழ்வுகள். ஆனால் தற்போது யாழ் நகரப் புறப் பஸ் நிலையத்தை அண்டிய பகுதிகளிலும் இவர்களது நடவடிக்கைகள் மம்மல் பொழுதில் அதிகரித்துக் காணப்படுகின்றன.
பஸ் நிலையத்தில் பஸ்ஸிற்காக காத்திருக்கும் பயணிகளில் இருந்து சற்று வேறுபட்டுக் காணப்படும் இவர்களை மாலை நேரங்களில் அரச, தனியார் பேரூந்துத் தரிப்பிடத்தை அண்டிய பகுதிகளிலும், நகரச் சுற்று வட்டாரத்திலும் காணலாம். முகத்திற்கு அதிகளவான முகப் பூச்சுக்களையும் இறுக்கமான உடைகளையும் அணிந்தவாறு வலம் வரும் இந்த மங்கைகள் சாதாரண பயணிகளைப் போன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவதும், பின்னர் ஒரு சில இளைஞர்கள் கண்ணடித்து சைகை காட்டியதும் அந்த இளைஞர்களின் பின்னே இவர்கள் சென்று ஆட்டோ ஒன்றில் ஏறி எங்கேயோ போவதும் குடாநாட்டின் மாலை நேர வழக்கமாகி விட்டது. இதன் பின்னால் ஏற்படப் போகும் நோய்களைப் பற்றிய அக்கறையோ, அறிவோ இவர்களுக்கு இருக்குதா என்றால் பெரும்பான்மையான பதில் இல்லை என்ற தொனியிலே வரும்.
இத்தகைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காலங்கடந்த நிலையில் பொலிஸார் இறங்கியிருப்பதும் ஒரு நல்ல செயலே, ஆயினும் குடா நாட்டில் பாலியல் நோய்கள் பற்றிய விழிப்புணர்வும், பாலியல் கல்வியறிவும் இன்னும் பின் தங்கிய நிலையிலே உள்ளது, முன்னேறி வரும் தொழில்நுட்ப விருத்திக்கு அமைவாக நாமும் எமது சமூக மாற்றங்களைக் கருத்திற் கொண்டு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு, ஏனைய சந்ததியின் நலன்களைக் கருத்திற் கொண்டு செய்திகளை வெளியிடுவோமாயின் குடாநாட்டுச் சமூக பிறழ்வுகளில் இருந்து நமது சமூகத்தைக் கட்டிக் காக்க முடியும்.
இறுதியாக குடாநாட்டு நிலமைகளை விளக்க ஒரு சிறிய உரையாடல்.
ஒரு மாமியார் மருமகளைப் பார்த்துக் கேட்கிறா, பிள்ளை தம்பி எங்கை போயிருக்கிறான்?
மாமி அவர் கிரவுண்டிற்கு தன்ரை வகுப்பு பொடியங்களோடை கிரிக்கட் அடிக்கப் போயிட்டார்.
|
28 Comments:
:)
வளர்ந்து வரும் கலாச்சார சீர்கேடுகளைச் சரிசெய்ய வேண்டிய வென்வழிக் கொன்ற்பனர்களைச் சார்ந்து நிற்கிற சமுதாய அவலத்தைப் பற்றி சிந்தித்து பார்க்க வேண்டிய கட்டாயம் வாழ்ந்துவரும் வன்ன மருகில் போதுடைய விற்பன சேஷ்த்திரர்கள் அனைவருக்கும் உள்ள தல்லவா ? வீறு கொண்ட நான்கின் கொகவர் ஆட்டத்தினை கட்டுபடுத்துதல் கார்கால மூங்கில் போன்ற முப்பெரும் தரப்பினருக்கு உள்ள ஆற்றாமைக் கடும் கடமை என உணர்வதெப்போ? செல் இட பேசியில் செருக்கமுற சின்ன வர்க்க சாஸ்திரம் பேசிட திரிபவர் உள்ளக் கிடக்கையில் உய்வல சொம்பனாதி விஷயங்கள் குஸ்தியிட ரம்பாளச் சேர்க்கை தவறு தானே
உண்மையில் படிச்ச போது ரொம்ப வருத்தமாய் இருந்தது...எரியும் தீயில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊத்தும் நிலைமை தான் இது...இதெல்லாம் அவர்களே உணர்ந்து திருந்தினால் தான் உண்டு நிருபன்...
கலாச்சாரத்தை பேணுபவர்கள் எங்கே! அந்த கலாச்சாரத்தை பேணுபவர்களை அவதானிக்கப்போவோர் யார்? இவற்றை முறைப்படுத்த வேண்டியவர்கள் எவர்! ஏயது எது, ஏயம் எது என்று மக்கள் சிந்திக்கும் முன்னரே சீர்கேடு என்னும் பூதம் விஸ்பரூபம் எடுத்து நிற்கின்றது. தாங்கள் குறிப்பிட்டது கொஞ்சம்தான் சகோதரா! இன்னும் நியை முறைப்பாடகளாக நான் கேட்டிருக்கின்றேன்.
இந்த நேரத்தில் இளையவர்கள்மீது பெற்றோர்கள், ஆசிரியர்கள், மத தலைவர்களின் பங்கு கூடுதலாக தேவைப்படுகின்றது.
இன்றைய தொழில்நுட்பங்களும் அதீத வளர்ச்சியும் இளம் தலைமுறையினரை ரொம்பவும் சோதிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அருமையான அலசல் கட்டுரை,. இங்கே (கோவை) குடித்துவிட்டு ட்ரக்ஸ் அடிக்டட் ஆகி, காதலனோடு ஜாலியாக சுற்றும் பெண்களும் உண்டு... காலேஜ் என்றாலே கலீஜ் ஆகிவிட்டது போங்க.
good post
யாழ்ப்பாண மக்களின் வாழ்வு ஒரு பெருத்த transition காலத்தில் இருக்கிறது. யுத்தத்தில் இருந்த் யுத்தமில்லா வாழ்க்கை, சீரழிந்த பொருளாதாரத்தில் இருந்து பொருளாதாரத் மாற்றம், அது மட்டுமில்லாமல், யாழ்ப்பாண மக்களில் 60 சதவீதம் மக்கள் வெளிநாடுகளில் இருப்பதால், வெளிநாடு-உள்நாடு என பொருளாதார இடைவெளி, அருகில் இருக்கும் தமிழகம் - சிங்களம் ஆகிய இரு நாட்டிலும் ஏற்பட்ட கலாச்சார-பொருளாதார மாற்றம், இடையில் இருக்கும் யாழ்ப்பாணத்தவருக்கு கிட்டாத ஏக்கம் !!! பழைய கலாச்சாரத்தில் இருந்துப் படிப்படியாக தமிழ்நாட்டில் புதியக் கலாச்சாரம் மாறிவருகிறது.ஆனால் யாழ்ப்பாணத்தில் பழைய கலாச்சாரம்-போரியல் கலாச்சாரம்-போருக்கு பின்னான கலாச்சாரம் ஆகிய மூன்றுக்கும் இடைவெளி அதிகம். sudden change and cultural shock போன்றவை. இன்னொன்ரு யாழ்ப்பாண மக்கள் தொகையில் இளையவர்கள் குழப்பமான choice-யில் இருக்கிறார்கள். வெளிநாடு-தமிழ்நாடு-சிங்களநாடு-ஈழ பாரம்பரியம் என நான்கு வாழ்வியல் முறையில் எதை தேர்ந்து எடுப்பது என்றக் குழப்பம். ஆண்களில் தொகைக் குறைந்ததால், பெண்களுக்கு ஆண் துணை தேவையினால் ஏற்பட்ட போராட்டம். என பல்வேறு காரணங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டியவை.
சுறுக்கமாக சொன்னால், குளத்தில் பெரும் கல்லை எறிந்தால், அது கலங்கித் தெளிவடைய கால அவகாசம் தேவை. யாழ்ப்பாண மக்களின் வாழ்வு-பொருளாதாரம்-கல்வி-கலாச்சாரம் தெளிவடைய இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேலாகாலம்.
எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல வழிகாட்டும் தலைவர்கள் தேவை. வெளிநாட்டு தமிழர்கள் யாழ்ப்பாணத் தமிழர்களிடம் பொருளாதார - கலாச்சார அதிர்வலையை ஏற்படுத்தாது விடுததால் மட்டுமே ! தெளியும் !
அதுவரை இது நீடிக்கும் என்பது தமிழ்நாட்டு தமிழனின் பார்வையில் . எனதுக் கருத்தில் வன்மை இருந்தால் மன்னிக்க !!!
யாழ்ப்பாண இளையவர்கள் கல்வி-வேலை-மாற்றம் அடையும் கலாச்சாரத்தை பக்குவமாய் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் வேண்டும்.......
இளையவர்கள் மன் ஆற்றாமையாய் செக்சிலும், போதையிலும் காட்டாமல், கல்வியிலும் வேலையிலும் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பாடுபட வேண்டும்.
அதிர்ச்சி தரும் தகவல்
நினைத்து பார்கவில்லை
சுட்டுத்தள்ள ஆக்களில்லை
ஏன் யாழ்பாணத்தில் ஆண்களே இல்லையா? இது பெண்கள் மட்டும் தப்பு செய்கிறார்கள் என்னும் ஒரு ஆணியவாதியின் பார்வையில் சொல்லபட்டிருக்கிறது..
பாலியல் தவறுகள் பெரும்பாலும் அறியாமையிலேயே உருவாகின்றன... அதில் மூழ்கியபின்னர்தான் தெழிவு கிடைக்கும்....
இப்படியான ஒரு அருமையான சூழலில் நான் யாழ்பணத்தில் இல்லையே என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.... :)
அரசியலுக்கு இதுவும் ஒரு இலாபம் நிரூபன்.தமிழர்களின் வாழ்வில் கலாசார சீர்கேட்டைக் கொண்டுவரவும், படிப்பைச் சீர்குலைக்கவும் கனகாலம் எதிர்பார்த்திருந்தார்கள்.
இப்போ எங்களவர்கள் அவர்கள் வலைக்குள் !
வருத்தமும் ஆத்திரமும் ஒருங்கே வரவழைக்கும் விடயம்.
கலாசாரச் சீர்கேடு வளர்ச்சியின் விளைவு என்பதை ஏற்கமுடியவில்லை என்றாலும் வளர்ச்சியை கேட்டுக்குப் பயன்படுத்துவோர் இருக்கிறார்கள் என்பதை உணர வைக்கிறீர்கள். ஆனந்தி சொல்வது போல் தானே திருந்தினால் உண்டு. உறங்குவோரைத் தான் எழுப்ப இயலும்.
இந்தக் கலாச்சார சீரழிவு திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறதோ என்ற அச்சம் வருகிறது.
இங்கே வருகை தந்த அனைவருக்கும் உங்கள் பொன்னான நேரத்தை என் பதிவிற்கும் ஒதுக்கி கருத்துரையளித்த அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்.
ஆனந்தி.. said...
உண்மையில் படிச்ச போது ரொம்ப வருத்தமாய் இருந்தது...எரியும் தீயில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊத்தும் நிலைமை தான் இது...இதெல்லாம் அவர்களே உணர்ந்து திருந்தினால் தான் உண்டு நிருபன்..//
திருந்தக் கூட விடாமாட்டார்கள் போல. இனி யாருதான் திருத்துவார்களோ!
Jana said...
கலாச்சாரத்தை பேணுபவர்கள் எங்கே! அந்த கலாச்சாரத்தை பேணுபவர்களை அவதானிக்கப்போவோர் யார்? இவற்றை முறைப்படுத்த வேண்டியவர்கள் எவர்! ஏயது எது, ஏயம் எது என்று மக்கள் சிந்திக்கும் முன்னரே சீர்கேடு என்னும் பூதம் விஸ்பரூபம் எடுத்து நிற்கின்றது. தாங்கள் குறிப்பிட்டது கொஞ்சம்தான் சகோதரா! இன்னும் நியை முறைப்பாடகளாக நான் கேட்டிருக்கின்றேன்.
இந்த நேரத்தில் இளையவர்கள்மீது பெற்றோர்கள், ஆசிரியர்கள், மத தலைவர்களின் பங்கு கூடுதலாக தேவைப்படுகின்றது//
கலாச்சாரத்தைப் பேணுபவர்களை அவதானிப்போர்.. இங்கே தொக்கி நிற்கும் வினா. இன்னும் எழுதியிருக்கலாம்.ம்.. ஆனால் எல்லா விடயங்களையும் பதிவினுள் உள்ளடக்கினால் பதிவு நீண்டு விடும் என்று விட்டு விட்டேன். இனி எல்லா விடயங்களையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து ஒரு பதிவுகளாக்கலாம் என்று எண்ணியுள்ளேன் சகோதரா.
ஆதவா said...
இன்றைய தொழில்நுட்பங்களும் அதீத வளர்ச்சியும் இளம் தலைமுறையினரை ரொம்பவும் சோதிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அருமையான அலசல் கட்டுரை,. இங்கே (கோவை) குடித்துவிட்டு ட்ரக்ஸ் அடிக்டட் ஆகி, காதலனோடு ஜாலியாக சுற்றும் பெண்களும் உண்டு... காலேஜ் என்றாலே கலீஜ் ஆகிவிட்டது போங்க//
எல்லா ஊரிலும் இத்தகைய செயற்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இச் செயற்பாடுகள் வரம்பு மீறும் போது...முடிவு என்னாகும். நன்றிகள் நண்பா.
இதில் விடுதிகளும் முக்கிய பங்கு வகிப்பது தான் மிக மிக கவலையானது...
ஆரோணன் உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன். ஆனால் இச் செயற்பாடுகளினை புதிதாக எதையோ கண்டவர்கள் போல பாய்ந்தோடும் இளைஞர்கள் தொடர்ந்தும் செய்து கொண்டிருப்பது தான் வேதனையான விடயம். உங்களின் வியூகம் அருமை.
டி.சாய் said...
ஏன் யாழ்பாணத்தில் ஆண்களே இல்லையா? இது பெண்கள் மட்டும் தப்பு செய்கிறார்கள் என்னும் ஒரு ஆணியவாதியின் பார்வையில் சொல்லபட்டிருக்கிறது..
பாலியல் தவறுகள் பெரும்பாலும் அறியாமையிலேயே உருவாகின்றன... அதில் மூழ்கியபின்னர்தான் தெழிவு கிடைக்கும்....//
ஆங்...வேணாம்..வலிக்குது. இங்கே நான் ஆண்களையோ, பெண்களையோ எடை போட்டுப் பதிவெழுதவில்லை சகோதரம். இரு சாராரும் செய்யும் தவறுகளை மட்டும் தான் சுட்டியுள்ளேன். இதில் எங்கே ஆணாதிக்கம் வெளிப்படுகின்றது என்பதனை அறிய ஆவலாக உள்ளேன். உங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்.
டி.சாய் said...
இப்படியான ஒரு அருமையான சூழலில் நான் யாழ்பணத்தில் இல்லையே என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.... :)//
ஏன் நீங்களும் ஒரு நோய் காவி ஊடகமாக மாறியிருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை..:)
இல்லை சகோதரா அதன் அகலம் அதிகமாக இருப்பதால் புளொக்கின் கவர்ச்சியை குறைக்கிறது சிலவேளை நீங்கள் வேறு டெம்ளெட் மாற வேண்டியிருக்கலாம்...
இதில் என்ன தொந்தரவு...
இப்போ சரியான அளவில் மிகவும் அருமையாக இருக்கிறது காரணம் நானும் எனத டெம்ளெட்டை அகட்ட முற்பட்டேன் ஆனால் அந்த டெம்ளெட்டில் செய்ய மடியாது...
நல்லாயிருக்கு...
உங்கள் தலையங்கம்(குடா நாட்டில் விப(ச்)சாரம்) அதிசயமானது. உலகத்தில் இல்லாத விடயமா? அல்லது குறைந்தபட்சம் பக்கத்தில் உள்ள தமிழ்நாட்டில் இல்லாத விடயமா?
ரொம்ப கவலையா இருக்கு....
வருத்தம் தரும் செய்திதான்.... என்னசெய்ய பட்டுதான் திருந்துவார்கள்...
உங்க பகிர்வு சமூக அக்கறை கொண்டது.
நேற்று சரோஜா சிவச்சந்திரன் என்ற பெண்மணி GTV க்கு சொன்ன தொலைபேசி உரையாடல் கேட்க நேர்ந்தது.
முறை தவறி பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாவதாக சொன்னார்கள்:(
போர் முடிந்தும் தீர்வுகள் தராத இலங்கை அரசு பற்றியும் பெண்கள் மீதான ராணுவ அத்துமீறல்கள் பற்றி விவாதங்கள் எழுப்பினால் நாங்கள் இப்ப நல்லாவே இருக்கிறோம் என்கிற மாதிரியான பின்னூட்டங்களைக் கூட காண நேர்வதில் வருத்தமே மிஞ்சுகிறது.
இந்த மாதிரி...ஒன்று மண்ணின் நிலையை சரியாக பிரதிபலிக்கும் எழுத்துக்கள் பரவ வேண்டும்.இல்லையெனில் தீர்வுக்கான வழிகளுக்கு யாராவது குரல் கொடுத்தால் அவர்களுடன் இணைந்து குரல் கொடுக்கவாவது செய்யவேண்டும்.
எந்த இதிகாசமும் நிறைவானதல்ல.விமர்சனங்களுக்கு உட்பட்டவையே.ஈழ இதிகாசமும் அதுபோலவே.ஆனால் அதன் ஆணிவேர் என்ன என்பது புரியவேண்டும்.
Post a Comment