Sunday, March 13, 2011

ஈழ மக்களை துடி துடிக்க கொல்லும் ஈனர்களின் செயல்கள் - உண்மைச் சம்பவம்!

பெண் உறுப்பினுள் மிளகாய்த் தூள் தூவுதல்!
பதிவினைப் படிக்க முன்: இப் பதிவு முற்று முழுதாக உண்மைச் சம்பவங்கள் கலந்த பதிவாகும்.  இங்கு கடந்த காலங்களில் இடம் பெற்ற உண்மைச் சம்பவங்களும், கசப்பான நிகழ்வுகளையும் மட்டுமே பதிவாக உங்கள் முன் கொண்டு வருகிறேன்!

விவரணம் 1): மனித இனத்தில் பல் வேறு விதமான விசித்திர முகங்கள் உள்ளன. மனிதர்களினை அடித்து துன்புறுத்துவது, மனிதர்களைத் துடிக்கத் துடிக்க கொலை செய்வது இவையெல்லாம் இன்று சர்வ சாதாரணமாகி விட்டது. ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை குற்றவாளிகளுக்கு உடலளவில் தண்டனை கொடுத்தே குற்றங்களை நிறுத்தப்பார்க்கிறார்கள். மனிதனை உடலளவில் கொடுமைப்படுத்துவதனை Brutal என அழைப்பார்கள். மனிதர்களை மனிதர்கள் தங்களின் பல்வேறு விதமான தேவைகளுக்கு ஏதுவாக, தம் மனதின் அடிப்படையில் துன்புறுத்தி மகிழ்கிறார்கள்.


ஒரு சிலர் உடல் உறவிற்கு முன்பதாக பெண்களை துன்புறுத்தி, அவர்கள் வலியில் இன்பம் கண்ட பின்னர் உடலுறவு கொள்வதில் இன்பம் காண்கிறார்கள். இன்னும் சிலர் மனிதர்களை அனைவர் முன்னும் வைத்து தாக்கி அதன் மூலம் இன்பம் காணுகிறார்கள். இன்னும் சிலர் சித்திரவதைக் கூடங்களை உருவாக்கி அங்கே மனிதர்களைத் துன்புறுத்தி இன்பம் காண்கிறார்கள். இனி சம்பவங்களிற்குள் நுழைவோம்.

விவரணம் 2): 1996ம் ஆண்டின் தொடக்க காலப் பகுதி, யாழ்ப்பாணம் முற்று முழுதாக (1995இன் இறுதிப் பகுதிகளில்) இலங்கை இராணுவத்திடம் வீழ்சியுற்ற பின்னர், இராணுவத்தினர் தமது கண்களில் பொதுமக்களிடம் இருந்து புலிகளைப் வேறு பிரித்தறிய வலை வீசித் திரிந்த காலப் பகுதி அது.
எந்தவித முன்னறிவித்தல்களுமின்றி சுற்றி வளைப்புக்களும், கைது செய்தல்களும், காணாமல் போகடித்தல்களும் நிகழ்த்தப்பட்ட காலப் பகுதியது.

‘சரசாலை கனகம் புளியடிச் சந்தி( ஐந்து சந்தியடி) யாழ்ப்பாணம் ஊரெழு இறைச்சிக் கடையடி, அச்செழு முகாம், வடமராட்சி வல்லைப் பால பாரிய படை முகாம், புறாப் பொறுக்கி முகாம், நாவற்குழி முகாம்- செம்மணி முகாம் இவையாவும் அக்காலப் பகுதிகளில் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திய முகாம்கள்.

இந்த முகாம்களைக் கடந்து போவதற்கு மக்கள் அஞ்சிப் பயந்து ஓடிய காலப்பகுதி. மக்களிடம் கைத் தொலைபேசிப் பாவனை ஏதும் இருந்திராத காலப் பகுதியது. ஒருவரைக் காணவில்லை என்றால் அவர் பிணமாக கிடைக்கும் வரையோ இல்லை அவர் மீண்டு வரும் வரையோ மக்கள் காத்திருப்புக்களுடன் தங்கள் நாட்களினை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.

இறைச்சிக் கடை என்றால் எல்லோருக்கும் தெரியும். இறைச்சி வெட்டுவார்கள். இதனை கசாப்புக் கடை என்றும் சொல்லுவார்கள். யாழ் குடா நாட்டில் இறைச்சிக் கடை என்றால் பல்கழைக் கழக மாணவர்கள் முதல், பள்ளி செல்லும் மாணவர்கள் வரை பயந்து நடுங்குவார்கள். இறைச்சிக் கடை என்றால் உடனே நினைவிற்கு வருவது, இறைச்சி வெட்டுவது போல பொது மக்களை வெட்டிப் போடும் ஊரெழு முகாம் தான்.

இத்தகைய சித்திரவதைக் கூடாரங்கள் பற்றிய தகவல்களையும், இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதையும் இம் முகாமிற்குச் சென்று மீண்டு வந்தவர்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட தொடரினை உள்ளடக்கிய ‘சரிநிகர்’ பத்திரிகையினை இரண்டாயிரம் ஆண்டின் பிற்பகுதியில் தடை செய்திருந்தார்கள். பின்னர் இடி என்னும் பத்திரிகையில் பாலியல் பலான விடயங்களோடு இவ் முகாம்கள் பற்றிய விடயங்களையும் எழுதி வந்தார்கள். அதுவும் காலவோட்ட மாற்றத்தினால் காணாமற் போய் விட்டது.

இம் முகாம்கள் பற்றி பலர் பல் வேறு தகவல்களை அறிந்திருந்தாலும் வாய் திறக்காது இருப்பதே உசிதம் என உறைந்து போயிருந்தார்கள். இம் முகாம்களைப் பற்றி வெளியே சொன்னால் உயிர் இருக்காது எனும் அச்சம் மக்கள் மத்தியில் காணப்பட்டது.

இலங்கையில் இனங்களுக்கிடையிலான மோதல்கள் ஆரம்பிக்கப் பட்ட காலப் பகுதி முதல் இன்று வரை இத்தகைய முகாம்களும் சித்திரவதைக் கூடங்களும் காலதி காலமாக இருந்து வந்திருக்கின்றன. நாலம் மாடி, வவுனியா ஜோசேப் முகாம், வவுனியா வேப்பங்குளம் முகாம், கிழக்கிலங்கை வந்தாறுமூலை முகாம், அனுராதபுரம் புதிய நகரச் சிறைச்சாலை உட்பட மன்னார் திருகோணமலையிலும் இவ்வாறான முகாம்கள் இருந்தன.

இத்தகைய முகாம்களின் அடிப்படையில் மக்களைத் தண்டிக்கும் வகையில் புலிகளும் வட்டுவாகல் எனும் பகுதியில் ஒரு சித்திரவதை கூடாரத்தை வைத்திருந்தார்கள்.

விவரணம் 3): பெண்கள் பெண்களை உடற் சோதனை செய்வார்கள், பெண் கொஞ்சம் அழகாக இருந்தால் போதும் அப் பெண்ணை மேலதிக விசாரணை செய்ய வேண்டும் கொஞ்சம் வெயிற் பண்ணச் சொல்லிப் பெண் வீராங்கனை சொல்லுவார். அதன் பின்னர் ஆண்கள் அப் பெண்ணை விசாரணை செய்யத் தொடங்குவார்கள். ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து அப் பெண்ணை வாகனத்தில் ஏற்றி இம் முகாம்களுக்கு கொண்டு செல்வார்கள். முதலில் மேலதிகாரி பெண்ணின் சம்மதம் ஏதுமின்றிப் புணரத் தொடங்குவார். அவரைத் தொடர்ந்து ஏனைய அதிகாரிகள் புணரத் தொடங்குவார்கள். இவ் ஆண் வீரர்கள் செய்யும் இந்தச் செயலைப் பார்த்து ரசித்தபடி பெண் வீராங்கனைகள் அருகே நின்று தட்டிக் கொடுப்பார்கள்.

கைது செய்யப்படும் பெண் ஒரு அப்பாவியாக இருந்தால் புணர்வதும்,  அதன் பின்னரான தமது செயற்பாடுகள் முடிவடைந்ததும் கொலை செய்து விட்டுப் பாழடைந்த கிணற்றில் வீசி விடுவார்கள். இல்லை என்றால் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியிலோ புதைத்து விடுவார்கள்.

’’குறிப்பிட்ட ஒரு பெண் இந் நபர்களால் கைது செய்யப்படுவதை, அல்லது இம் முகாமிற்கு அருகில் தான் இவ் நபரைப் பார்த்தேன் என காணாமற் போன குடும்பத்தாரின் உறவினர்களுக்கு யாராவது தகவல் சொல்லி, அவ் உறவினர்கள் போய் அந்த முகாமினுள் கேட்டால்- ’’தாங்கள் யாரையும் அப்படிப் பிடிக்க வில்லை, அப்படி யாரையும் கைது செய்யவில்லை என்று கூறித் திருப்பி அனுப்பி விடுவார்கள்.  உறவினர்களின் நிலையோ அனலிடைப் பட்ட மெழுகாகி, தன் மகள், மகன் மீண்டும்- மீண்டு வருவான்/ வருவாள் எனும் காத்திருப்புடன் நகர்ந்து கொண்டிருக்கும்.

விவரணம் 4): பயங்கரவாதிகளுக்கு அல்லது புலிகளுக்கு உதவினார்கள் எனும் அடிப்படையில் யாராவது கைது செய்யப்பட்டால் அவர்களின் நிலமை அவ்வளவு தான். ஆண்கள் என்றால் அவர்களுக்கு கீழ் வரும் வகையில் தண்டனைகள் வழங்கப்படும்.
*தலை கீழாக கட்டி வைத்து விட்டு PVC பைப்பினுள் மண்ணை அடைந்து விட்டு அந்த பைப்பினால் அடித்தல்.

*இரும்பு பைப்பால் அடித்தால்.

*காலின் ஒற்றை விரலில் கயிற்றால் முடிச்சுப் போட்டு கொழுக்கியின் உதவியுடன் தலை கீழாக இழுத்தல்.

*முட் கம்பிகளால் தாக்குதல்

*குண்டி ஓட்டை அல்லது ஆசன வாயினுள் பைப்பினை அல்லது துப்பாக்கிப் பிடியினைச் செருகுதல். மிளகாய்ப் பொடி தூவி ரசித்தல். இதனை ஏனைய சக வீரர்கள் பார்த்து ரசிப்பார்கள்.

*கை நகங்களில் ஊசி ஏற்றுதல்

*உடலில் கூரிய ஆயுதங்களால், ஊசிகளால் குத்துதல்.

*சாப்பாடு கொடுக்காமல் ஏதாவது உண்மைகளை அறியும் வரை வைத்து அடித்தல்.

பெண்கள் என்றால்

*பெண் என்றால் இவர்கள் பார்வையில் எல்லோரும் ஒன்று தான். வயது வேறுபாடின்றி கூட்டமாக புணர்ந்து தள்ளுவார்கள்.

*பெண்களிடம் உண்மைகள் கேட்டுச் சொல்லாது விட்டால் அவர்களின் பெண்ணுறுப்பினுள் மிளகாய்த் தூள் கொட்டுவார்கள். முள்ளுக் கம்பியை பிறப்புறுப்பு, ஆசன வாய் முதலிய இடங்களில் செலுத்துவார்கள்.

*மார்பகம் எல்லாம் கடித்துக் குதறிச் சித்திரவதை செய்வதோடு உண்மைகளைச் சொன்னாலும் சரி சொல்லா விட்டாலும் சரி இறுதியில் மீட்சி இல்லாத உயிர்க் கொலை என்பது தான் இவர்களின் அகராதி.

*இந் நபர்களால் கைது செய்யப்பட்டால், அவர்கள் கைது செய்வதன் நோக்கமே கொலை செய்வது தான். ஏன் இவ்வாறு மனித உயிர்களைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்கிறார்கள் இந்த இரக்கமில்லாத மனிதர்கள்?
கொலை செய்வது தான் ஒரே நோக்கம் என்றால் கைது செய்த உடனே கொலை செய்யலாம் தானே? பிறகு ஏன் இப்படியான துன்புறுத்தல்கள்?

இம் முகாம்களுக்கு அருகில் மக்கள் குடியிருப்புக்கள் இருப்பது அரிதான விடயம். ஆனாலும் வீதியால் செல்வோருக்கும், இரவு நேரங்களிலும் இம் முகாம்களில் இருந்து அழுகுரல்களும், அவலக் குரல்களும் இரவு நேரங்களில் கேட்கும்.

இத் தண்டனை வழங்கும் நபர்கள் ஒரு சில அப்பாவி இளைஞர்களைக் கைது செய்து பெற்றோல் ஊற்றி எரித்து விட்டு வீதியோரத்தில் போடுவார்கள்.

*2006ம் ஆண்டின் பிற் பகுதியில் வவுனியா இறம்பைக் குளம், மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஒரு புதுமாதிரியான முறையினை இந் நபர்கள் கைக் கொண்டார்கள். அதாவது பகலில் அழகான பெண்கள் இருக்கும் இடங்களைப் பார்த்து வைத்து இரவில் வெள்ளை வான் கொண்டு வந்து ஏற்றிக் கொண்டு போய்த் தமது தேவைகள் முடிந்தவுடன் மறு நாள் காலையில் ஒரு சில பெண்களைக் கொண்டு வந்தும் விட்டிருக்கிறார்கள்.

*இவர்களிடம் அகப்பட்டு மீண்டவர்கள் பிற் காலப் பகுதியில் சித்த சுவாதீனமற்ற பைத்தியக்காரர்கள் ஆகிவிடுவதும், உடல் அவையங்கள் தொழிற்பட முடியாது செயலிழந்தவர்களாகவும் ஆகிவிடுவார்கள்.

புலிகளின் பகுதிகளில் குற்றம் செய்தவர்கள் மற்றும் துரோகம்-  காட்டிக் கொடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களுக்கும், மாற்றுக் குழு உறுப்பினர்களுக்கும்-  இவ்வாறான கொடிய தண்டனைகளைப் புலிகளும் வழங்கியிருக்கிறார்கள்.

*1987களின் பின்னரான காலப் பகுதியில் ரெலோ குழு உறுப்பினர்களை இந்தியாவில் இருந்து வர வழைத்து தாங்கள் இனிமேல் மாற்று இயக்கத்தவர்களுடன் மோதமாட்டோம் என உறுதி மொழியழித்து
‘ஒரே இரவில் முந்நூறிற்கும் மேற்பட்ட ரெலே கட்சி உறுப்பினர்களை பெற்றோல் ஊற்றி வவுனியாவில் வைத்து எரித்தமை.

*புலிகளின் சிறைக் கூடமான வட்டுவாகலில் இருக்கும் நபர்களுக்கு ‘பச்சை மட்டை அடி கொடுத்து விசாரணை செய்தல்’.
(பச்சை மட்டை என்பது பனையிலிருந்து பெறப்படும் மட்டையினையும், தென்னையிலிருந்து கிடைக்கும் தென்னோலையின் நடுப் பகுதியில் உள்ள மட்டையினையும் குறிக்கும்).

*நலம் எடுத்தல்: கற்பழிப்பு, மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களில் ஒரு சிலருக்குப் புலிகள் அவர்களின் விதைப்பையினைக் கீறி இரண்டு விதைகளையும் எடுத்த பின்னர் தைத்திருக்கிறார்கள்.
’’இந்தச் சம்பவத்திற்கு எடுத்துக் காட்டாக யாழ்ப்பாணத்தில் தீனாக் குறூப் என்ற ஒரு இளைஞர் அடி தடிக் குழுவினரில் ஒரு சிலரை 2002ம் ஆண்டு(சமாதான காலப் பகுதியில்) கைது செய்து செம்மணியில் வைத்து புலிகளின் அப்போதைய யாழ் நகரப் பொறுப்பளரான ஈஸ்வரன் அவர்கள் தலமையிலான குழுவினர் இச் செயற்பாட்டினைச் செய்திருக்கிறார்கள்.

*குற்றம் செய்தவரை மின்சாரக் கம்பத்தில் கட்டி வைத்துச் சுட்டுக் கொல்லுதல்.
நடு வீதியில் பொது மக்கள் பார்த்திருக்க அடித்துக் கொலை செய்தல்.

*ஒரு பெரிய பூங்காவிற்கோ அல்லது தோட்டத்திற்கோ சிறிய சோடா மூடியின் உதவியுடன் நீர் பாய்ச்ச விடுதல். அதாவது ஒரு பெரிய வாளியில் இருக்கும் தண்ணீரைச் சிறிய சோடா மூடியால் அள்ளிக் குறிப்பிட்ட நேரத்தில் ஊற்றி முடிக்க வேண்டும். இல்லையேல் அவர்களுக்குப் பச்சை மட்டை அடியும், இதர தண்டனைகளும் வழங்கப்படும்.

*புலிகளின் தண்டனை முகாம்களைப் பற்றிய உண்மைகளை விளக்க ஊரில் ஒரு பழ மொழி சொல்லுவார்கள், ‘மவனே நீ வட்டுவாகல் போனாய், உனக்குப் பற்பொடி தந்தால் தான் விடிஞ்சுது என்று தெரியும்’ ஆகவே கவனமாக இரு என்று மிரட்டுவார்கள். அந்தளவிற்கு வெளி உலகே தெரியாத இருட்டறைகளாகத் தான் அச் சித்திரவதைக் கூடங்கள் விளங்கியிருக்கின்றன.

பிற் குறிப்பு:  செம்மணிப் பகுதியில் இடம் பெற்ற மனிதப் படுகொலைகள் தொடர்பான சான்றாதாரங்களாக அறுநூற்றிற்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டும், குற்றவாளிகள் கைது செய்யபட்டும் எவ்வித தண்டனைகளும் இன்றி அக் குற்றவாளிகள் பிற்காலத்தில் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகவே எங்கள் நாட்டில் மனித உயிரை விட மயிரைச் சிலிர்க்க வைக்கும் பணத்திற்குத் தான் ராஜ மரியாதை!

64 Comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

ரொம்ப பவங்க இந்த பெண்கள்... அவங்கள கொடுமைப்படுத்துற நாய்களை சுட்டு போட்டாக் கூட அந்தப் பெண்களோட ஆத்திரம் குறையாது.

எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரு மிகப்பெரிய விஷயம்! நல்ல தகவல் தொகுப்பு! நான் பிறகு வந்து விரிவாக எழுதுகிறேன்!!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ரத்தமெல்லாம் கொதிக்குது....

நிரூபன் said...
Best Blogger Tips

தமிழ்வாசி - Prakash said...
ரொம்ப பவங்க இந்த பெண்கள்... அவங்கள கொடுமைப்படுத்துற நாய்களை சுட்டு போட்டாக் கூட அந்தப் பெண்களோட ஆத்திரம் குறையாது.

எனது வலைபூவில் இன்று: //

இப்படியான உணர்வுகள் அங்கு வாழும் எல்லோருக்கும் இருக்குமே தவிர ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஒரு அடி அசைய நினைத்தாலே சங்கை அறுத்திடுவார்கள்.
நன்றி சகோ!

நிரூபன் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நிரு மிகப்பெரிய விஷயம்! நல்ல தகவல் தொகுப்பு! நான் பிறகு வந்து விரிவாக எழுதுகிறேன்!//

உங்களின் விரிவான விளக்கங்களிற்காக காத்திருக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

MANO நாஞ்சில் மனோ said...
ரத்தமெல்லாம் கொதிக்குது...//

எல்லோருக்கும் ரத்தமெல்லாம் கொதிச்சுது தான். ஆனால் வாயைத் திறந்தாலோ, கையை உயர்த்தினாலோ உடல் துண்டாடப்படும் என்பதற்காய் கண்ணால் காண்பதும் பொய்யே என வாழ்ந்தார்கள்.

வசந்தா நடேசன் said...
Best Blogger Tips

எங்க ஊர் வைகோ(ல்)மற்றும் நெடுமாறனுக்கு இந்த பதிவை அனுப்பி படிக்க வைக்கவேண்டும் போல் உள்ளது..

//ஒரு அடி அசைய ‘நினைத்தாலே‘ சங்கை அறுத்திடுவார்கள்.//

மனித வலிகள் மனதை உறைய வைக்கின்றன, சிங்களனுக்கு ஈடாக புலிகள் செய்ததை படிக்கும் போது.. வேதனை தான் இருந்தாலும் இன்னும் நிறைய எழுதுங்கள் இது குறித்து தமிழ்நாட்டு சனங்கள் இன்னும் நிறைய தெரிந்துகொள்ளவேண்டும்..

நிரூபன் said...
Best Blogger Tips

வசந்தா நடேசன் said...
எங்க ஊர் வைகோ(ல்)மற்றும் நெடுமாறனுக்கு இந்த பதிவை அனுப்பி படிக்க வைக்கவேண்டும் போல் உள்ளது..

//ஒரு அடி அசைய ‘நினைத்தாலே‘ சங்கை அறுத்திடுவார்கள்.//

மனித வலிகள் மனதை உறைய வைக்கின்றன, சிங்களனுக்கு ஈடாக புலிகள் செய்ததை படிக்கும் போது.. வேதனை தான் இருந்தாலும் இன்னும் நிறைய எழுதுங்கள் இது குறித்து தமிழ்நாட்டு சனங்கள் இன்னும் நிறைய தெரிந்துகொள்ளவேண்டும்//

வணக்கம் சகோ, முதல் வருகைக்கு நன்றிகள். இப்போது என்னென்ன நடக்கிறது என்பது தெரியாமல் அறிக்கை விட்டு, தமிழர்களின் பிரதிநிதிகளும், தாங்களே தான் எனும் நினைப்பில் வீர வசனம் பேசி, ராகுல் காந்தி இலங்கைத் தமிழர்கள் பற்றிப் பேசியதை மறுத்துரைத்து ஈழத்தமிழர்கள் சார்பில் மக்களின் எந்தவிதமான ஜனநாயக அனுமதிகளும் இன்றி அறிக்கை விடும் சீமானும், ஏனைய நபர்களும் இவற்றைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். முடிந்தால் அவர்களுக்கு யாராவது அனுப்பி வையுங்கள்.

இன்றைய இலங்கையின் வட கிழக்கு மக்களின் யதார்த்த நிலமை, அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், போருக்குப் பின்னரான அவர்களின் வாழ்வியற் கோலங்களைப் பதிவு செய்து அதனை இந்த அறிக்கைவிட்டே காலத்தை ஓட்டும் வள்ளல்களான சீமான், வைகோ, நெடுமாறன் முதலியோரின் செயற்பாடுகளுடன் வெகு விரைவில் ஒப்பிட்டு எழுதலாம் என நினைக்கிறேன்.

Thenammai Lakshmanan said...
Best Blogger Tips

படிக்கவே முடியலை..

அடப்ப்பாவிகளா நல்லா இருப்பனுகளா அவனுங்க..

Anonymous said...
Best Blogger Tips

என்ன கொடுமை

Anonymous said...
Best Blogger Tips

ஓநாய்கள் போல இவர்களை சுட்டு தள்ள வேண்டும்

எல் கே said...
Best Blogger Tips

படிக்கவே மனம் பதைபதைக்கிறது

Pirapakaran said...
Best Blogger Tips

இது வாசிப்பவர்களுக்கு உரு ஏற்றுவதற்காக எழுதப்பட்ட மிக அரிதாக நடந்தவைகளை கோர்த்து -நடந்தது ஒரு சம்பவம் ஆனால் அதுவே ஒவொரு நாளும்..எல்லாருக்கும் நடப்பதாக மிகைப்படுத்தபட்ட பொய் கட்டுரை இது..

Anonymous said...
Best Blogger Tips

பிரபாகரன்,
நீங்கள் கூறியதே சரியானது. மிக மிக அரிதாக நடந்தவைகளை வைத்து பலரை கவர வேண்டும் என்ற நோக்கத்திற்க்காக பெண் உறுப்பினுள் என்று தலைப்பிட்டு எழுதபட்ட கட்டுரை.

Sivakumar said...
Best Blogger Tips

மனிதர்கள் என்று வெகு சிலரே இப்பூமியில் எஞ்சி உள்ளனர். மீதி எல்லாம் மிருகங்கள்.

ஹேமா said...
Best Blogger Tips

வாசிக்கவே உடம்பு நடுங்குது !

நேசன் said...
Best Blogger Tips

Pirapakaran said...
இது வாசிப்பவர்களுக்கு உரு ஏற்றுவதற்காக எழுதப்பட்ட மிக அரிதாக நடந்தவைகளை கோர்த்து -நடந்தது ஒரு சம்பவம் ஆனால் அதுவே ஒவொரு நாளும்..எல்லாருக்கும் நடப்பதாக மிகைப்படுத்தபட்ட பொய் கட்டுரை இது.//

நண்பரே இங்கு ஒவ்வோர் நாளும் தொடர்ச்சியாக நடந்ததாகக் குறிப்பிடவில்லையே. இது எப்போது எக் காலப் பகுதியில் இடம் பெற்றது என்று தானே கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். கொஞ்சம் நேரமிருந்தால் இதனைப் முதன்மையாகப் படித்து விட்டு வாருங்கோ.

நேசன் said...
Best Blogger Tips

Pirapakaran said...
இது வாசிப்பவர்களுக்கு உரு ஏற்றுவதற்காக எழுதப்பட்ட மிக அரிதாக நடந்தவைகளை கோர்த்து -நடந்தது ஒரு சம்பவம் ஆனால் அதுவே ஒவொரு நாளும்..எல்லாருக்கும் நடப்பதாக மிகைப்படுத்தபட்ட பொய் கட்டுரை இது.//

இப்போது உங்கள் மனச் சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் நண்பரே! இந்தப் பதிவர் எழுதுவது உண்மையா இல்லைப் பொய்யா? 1996ம் ஆண்டின் பிற்பகுதியில் சரத்பொன்சேகா ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஜானக பெரேரா தளபதியாக யாழ்மாவட்டத்தில் இருந்த காலப்பகுதியில் காணாமற்போன பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு என்ன நடந்தது?
நாலாம் மாடிக்கு நீங்கள் போன அனுபவம் உள்ளதா? நாலாம் மாடியில் என்னவெல்லாம் செய்வார்கள் என்று அறிந்தது உண்டு? செம்மணியில் மட்டும் மீட்கப்பட்ட அறுநூறிற்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகளின் DNA பரிசோதனைகளின் போது அடித்துத் துன்புறுத்தப்பட்டுத் தானே பலர் கொல்லப்பட்டதாக இந்த வழக்கை விசாரித்த சட்டமா அதிபரே ஏற்றுக் கொண்டுள்ளார்.

என்னய்யா உங்களின் அரசியல் ஞானம்? நீங்கள் இலங்கையில் இருக்கிறீர்களா? இல்லை இலங்கையில் இருந்தும் நடந்தவைகளை கடந்த காலங்களை மறந்து பொய் பேசுகிறீர்களா?

நேசன் said...
Best Blogger Tips

Pirapakaran said...
இது வாசிப்பவர்களுக்கு உரு ஏற்றுவதற்காக எழுதப்பட்ட மிக அரிதாக நடந்தவைகளை கோர்த்து -நடந்தது ஒரு சம்பவம் ஆனால் அதுவே ஒவொரு நாளும்..எல்லாருக்கும் நடப்பதாக மிகைப்படுத்தபட்ட பொய் கட்டுரை இது.//


இவையெல்லாம் மிக மிக அரிதாக நடந்த சம்ப்வம். உங்கள் உடலில் மானமுள்ள தமிழ்த் தாயின் இரத்தமா ஓடுகிறது? சொல்லுங்கள் தோழரே!
புலிகள் குடாநாட்டில் வைத்துப் பலபேரை அடித்துக் கொன்ற போது, சித்திரவதை செய்து கொன்ற போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

1996-2002வரையான காலப் பகுதியில் இடம் பெற்ற விடயங்கள் உங்களுக்குத் தெரியாவிட்டாலும் சமாதான ஒப்பந்தங்களை மீறி இரு தரப்பினரும் 2006ம் ஆண்டின் பிற்பகுதியில் யுத்தங்களை ஆரம்பித்த போது பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பல மாவட்டங்களிலும் காணாமற் போனார்களே? அப்போது எங்கே இருந்தீர்கள்? பல இளைஞர்கள் கொல்லப்பட்டு தலைகள் வெட்டப்பட்டு குளங்களின் அருகிலும், வீதியோரங்களிலும் போடப்பட்டார்களே! அப்போது எங்கே இருந்தீர்கள் நீங்கள்?

ஓ நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் தமிழரா! உங்களுக்குத் தெரியாது எங்களின் வலிகளும் வேதனைகளும்! தயவு செய்து இனியாவது எங்களை வாழ விடுங்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்கிறோம்! ஐயா புலம் பெயர் தமிழர்களே! நடந்ததை மறந்து, எங்களை இன்னும் பலிக்கடாக்கள் ஆக்கி உங்களின் இருப்புக்களை நிலை நாட்டத் துடிக்கும் அன்பு உள்ளங்களே! வேணாம் இந்த வலி அரசியல்! கடந்த காலங்களை மறந்து, பட்ட காயங்களை ஆறாமல் உள்ளத்தில் இன்னும் இருக்கையில் இப்படியெல்லாம் நடந்தது எனும் உண்மைகளை மறைக்க நினைக்கும் உங்களை என்ன சொல்வது?

இலங்கையில் குற்றச் செயலின் அடிப்படையிலோ அல்லது பயங்கரவாதச் சட்டத்தினடிப்படையிலோ கைது செய்யப்படும் இளைஞர்களை எந்தவகையில் நடாத்துகிறார்கள்? கொஞ்சம் புரியும் படி சொல்லுங்களே தோழர்?

யாழ் வேந்தன் said...
Best Blogger Tips

Pirapakaran said...
இது வாசிப்பவர்களுக்கு உரு ஏற்றுவதற்காக எழுதப்பட்ட மிக அரிதாக நடந்தவைகளை கோர்த்து -நடந்தது ஒரு சம்பவம் ஆனால் அதுவே ஒவொரு நாளும்..எல்லாருக்கும் நடப்பதாக மிகைப்படுத்தபட்ட பொய் கட்டுரை இது.//

http://www.globalpeacesupport.com/globalpeacesupport.com/post/2010/09/22/tamil-article-20100922006.aspx

யாழ் வேந்தன் said...
Best Blogger Tips

Pirapakaran said...
இது வாசிப்பவர்களுக்கு உரு ஏற்றுவதற்காக எழுதப்பட்ட மிக அரிதாக நடந்தவைகளை கோர்த்து -நடந்தது ஒரு சம்பவம் ஆனால் அதுவே ஒவொரு நாளும்..எல்லாருக்கும் நடப்பதாக மிகைப்படுத்தபட்ட பொய் கட்டுரை இது.//

அண்ணே பிரபாகரன், அப்போ சிறையிலை வைத்து என்ன கூல் றிங்சும், கம்பளக் கட்டிலுமா குடுக்கிறாங்க?

Anonymous said...
Best Blogger Tips

யாழ் வேந்தன் அண்ணே! சந்தில் புகுந்து நல்லா தான் விளையாடுகிறீர்கள்.

சொல்லச் சொல்ல said...
Best Blogger Tips

மீதியைப் படிக்க முடியாமல் கண்களில் ரத்தக் கண்ணீர் தழும்புகிறது.

Anonymous said...
Best Blogger Tips

பாவம்! பரிதாபம்! ஆட்சியாளர்கள் விதைத்த வினையை இன்று மக்கள் அறுக்கிறார்கள். இலங்கையில் லட்சோப லட்ச மக்கள்(மூன்று லட்சம்)கொல்லப்பட இதே ஜப்பான் தான் அதிக நிதிஉதவி செய்தது! அன்று (மனிதர்களால் மனிதர்களுக்கு ஏற்பட்ட அழிவு!) இலங்கையில் ஒலித்த அந்த மக்களின் அழுகுரல்! கூக்குரல்! மரண ஓலம்! சாபம்! இன்று ஜப்பானில்(கடவுளின் தண்டனை)இந்த மக்களிடத்தில் (முப்பது லட்சம்)அழுகுரல்! கூக்குரல்! மரண ஓலம்! ஒலிக்கிறது. இதற்கே இப்படி என்றால் இந்தியா செய்த உதவியை நினைத்தால், இந்தியாவிற்கு என்ன நேரிடுமோ? அதற்கு முன் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்! ஒரு வேலை அந்த மக்கள் மன்னித்தால் வாழ்வு இந்தியாவிற்கு! இல்லை அழிவு இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் தான்! சிந்தனை செய்வோம்!
வினையை விதைத்தவன் வினையை அறுத்தே தீருவான்!

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

அய்யோ.. படிக்கவே பயங்கரமா இருக்கே...

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் துணிவுடன் எழுதியதற்கு சிறியேனின் பாராட்டுக்கள்.
இப்படி தான் எங்கள் பகுதியில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட ஒருவர் சில தினங்களில் வயல் வெளிகளில் இருந்து பிணமாக மீட்க்கப்பட்டார். பின் இறுதி கிரிகைகள் செய்து பிணத்தை எரித்து அடுத்தநாள் அஸ்தி எடுக்க சுடலை சென்று சாம்பலை கிளாறிய போது தலை பகுதியில் இருந்து பெரிய ஆணி ஒன்று கண்டெடுத்தார்கள். அதாவது கொலை செய்ய முன்னர் நாடு உச்சி மண்டையிலே ஆணியால் அறைந்துள்ளார்கள். அன்று இதை கேட்கவே கண்களால் கண்ணீர் வந்து..
இப்படி இன்னமும் பல

Anonymous said...
Best Blogger Tips

புலிகளை பொறுத்தவரை சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கும் (உதாரணமாக பொம்புளை சேட்டைகள்) தமக்கு எதிராக செயர்ப்பட்டவர்களுக்கும் மிக கடுமையான தண்டனைகள் வழங்கினார்கள். நீங்கள் சொன்னது போல பச்சை மட்டை அடி, மக்கள் முன்னாடி மின்கம்பத்தில் கட்டி விட்டு சுட்டு " தேச துரோகி" என்று எழுதி அவர்கள் கழுத்திலே தொங்க விடுவார்கள். பூவா பொட்டா என கேட்டு நெற்றியிலும் காதிலும் சுடுதல், தனி ஒருவராக பாரிய பங்கர் வெட்ட விடுவார்கள். ஓட்டை வாளியால் மரங்களுக்கு தண்ணி ஊற்ற விடுவார்கள்.

Anonymous said...
Best Blogger Tips

இவ்வளவு ஏன்? குட்டிமணி தங்க துரையின் கொடூர கொலைகள் இதற்க்கு சிறந்த ஆதாரமே...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

சகொதரம் உங்க அடுத்த பதிவுக்கு விளக்கமாக பதிலளிக்கட்டுமா ?

முக்கியமாக ஒன்று மாடுகள் பயிரை மேய்வதை விட வேலிகள் மேய்வது தாங்க மடியாதது தான்....

ம.தி.சுதா said...
Best Blogger Tips

தயவ செய்து யாரும் இப்பதிவை தமிழக அரசியல்வாதிகளுக்கு காட்ட வேண்டாம்... இதுவும் ஒரு அரசியல் பிரச்சாரக் கருவியாக்கப்படலாம்...

settaikkaran said...
Best Blogger Tips

இவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கின்றன என்பதை வாசிக்கும்போது மனதை என்னமோ செய்கிறது. :-(

நிலவு said...
Best Blogger Tips

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_14.html நடிகர்கள் - சாதி சங்கங்கள் வழியாக சட்டமன்ற புரட்சி

koomaganblogspot.fr said...
Best Blogger Tips

I think i haven't comments,becourse no one cann't realise our moral pains.Like "blind man looks elephant" in our problem.Why don't you discribe IPKF's busnes in your artical?If you add i'll salut for you.so you allso one side kicker.
Thanks
Koomagan

Anonymous said...
Best Blogger Tips

உண்மைதான் ! தோழரே - ஈழத்தமிழர்களின் இன்றைய தேவை எது எனத் தெரியாமல் தமிழ் - வீரம் - தூஷணம் பேசி அலையும் என் தமிழ்நாட்டு தலைவர்கள் நிச்சயம் இதைப் புரிந்துக் கொள்ள வேண்டும் ........... இந்த தமிழ் நாட்டு தலைவர்களான சீமான், வைக்கோ, நெடுமாறன், ராமதாஸ், திருமா - அறுந்த வால்களான விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் எல்லாரும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். இவர்கள் பேசுவதால் ஈழத்தமிழர்கள் வாழ்வில் வசந்தம் வீசப்போவதில்லை, மாறாக எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையாக முடியும். மத்திய இந்திய அரசைப் பகைப்பதால் ஈழத்தமிழர்களுக்கு நன்மை ஒன்றும் கிடைக்கப் போவதில்லை, அவர்களை சிலர்ப் பகைத்ததன் விளைவு ஈழத்தமிழர்களை குழியில் தான் தள்ளியது. இப்போது இருக்கும் ஒரே சூழல் ஈழத்தமிழர்கள் அவர்களுக்கான தலைமையை ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுத்து சிங்கள் அரசுடனும், இந்திய அரசுடனும் பேசுவது - இது அரசியல் ... ஈழத்தமிழர்கள் படிக்கவும், வேலைவாய்ப்பு பெறவும் தமிழ்நாட்டிலும். இலங்கையில் வடக்கு கிழக்கில் நல்ல பள்ளி, மருத்துவமனை, சாலை, சுயதொழில், விவசாயம் போன்றவற்றுக்கு தமிழகத் தமிழர்கள் முன்வந்து உதவ வேண்டும் .................................. இது வாழ்வியல்.. இது தான் அவசியமும் கூட

suvanappiriyan said...
Best Blogger Tips

சிரமத்தில் தவிக்கும் அகதி முகாம்களில் அல்லலுரும் சாமான்ய மக்களின் அத்தியாவசிய தேவைகளை எவ்வாறு பூர்த்தியாக்கப் போகிறோம? அதற்கு என்ன வழி என்று சிந்திக்க வேண்டிய நேரமிது.

சித்திரவதைக் காட்சிகளைப் பார்த்து மனது மிகவும் சங்கடப்பட்டது. போரின் கொடுமை இனிமேலாவது இல்லாமல் ஒழியட்டும்.

தாடியின் விசுவாசி said...
Best Blogger Tips

யாழ் வேந்தன் said...
Pirapakaran said...
இது வாசிப்பவர்களுக்கு உரு ஏற்றுவதற்காக எழுதப்பட்ட மிக அரிதாக நடந்தவைகளை கோர்த்து -நடந்தது ஒரு சம்பவம் ஆனால் அதுவே ஒவொரு நாளும்..எல்லாருக்கும் நடப்பதாக மிகைப்படுத்தபட்ட பொய் கட்டுரை இது.//

அண்ணோய் கட்டுரை எழுதினவர் பொய் சொல்லுறார் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு உண்மைகளை மறைக்க இதுவும் ஒரு வழி தானே?

மலிங்க பண்டார said...
Best Blogger Tips

கந்தசாமி. said...
வணக்கம் நிரூபன் துணிவுடன் எழுதியதற்கு சிறியேனின் பாராட்டுக்கள்.
இப்படி தான் எங்கள் பகுதியில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட ஒருவர் சில தினங்களில் வயல் வெளிகளில் இருந்து பிணமாக மீட்க்கப்பட்டார். பின் இறுதி கிரிகைகள் செய்து பிணத்தை எரித்து அடுத்தநாள் அஸ்தி எடுக்க சுடலை சென்று சாம்பலை கிளாறிய போது தலை பகுதியில் இருந்து பெரிய ஆணி ஒன்று கண்டெடுத்தார்கள். அதாவது கொலை செய்ய முன்னர் நாடு உச்சி மண்டையிலே ஆணியால் அறைந்துள்ளார்கள். அன்று இதை கேட்கவே கண்களால் கண்ணீர் வந்து..
இப்படி இன்னமும் பல//

கட்டுக்கதை. அத்தனையும் பொய்கள். இப்படியான சம்பவங்கள் ஈழத்தில் எப்பகுதியிலுமே நடக்கவில்லை. அரசாங்கம் பொதுமக்களைக் கைது செய்து துன்புறுத்துவதேயில்லை.

Anonymous said...
Best Blogger Tips

////கட்டுக்கதை. அத்தனையும் பொய்கள். இப்படியான சம்பவங்கள் ஈழத்தில் எப்பகுதியிலுமே நடக்கவில்லை. அரசாங்கம் பொதுமக்களைக் கைது செய்து துன்புறுத்துவதேயில்லை.//// வட்டுக்கோட்டை பகுதியிலே இராணுவா முகாமுக்கு முன்னாலே இருந்த வீட்டினில் இரவு ஊரடங்கு வேளையிலே நுழைந்த சிலர் தாயை அடித்து போட்டுவிட்டு மகனை தூக்கிக்கொண்டு சென்றார்கள்... இது யார் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? இராணுவ முகாமுக்கு முன்னாலே உள்ள வீட்டில் வந்து ஊரடங்கு வேளையிலே கடத்துகிறார்கள் என்றால் இராணுவம் தூங்கிக்கொண்டா இருந்தது.

நிரூபன் said...
Best Blogger Tips

வசந்தா நடேசன் said...
எங்க ஊர் வைகோ(ல்)மற்றும் நெடுமாறனுக்கு இந்த பதிவை அனுப்பி படிக்க வைக்கவேண்டும் போல் உள்ளது..

//ஒரு அடி அசைய ‘நினைத்தாலே‘ சங்கை அறுத்திடுவார்கள்.//

மனித வலிகள் மனதை உறைய வைக்கின்றன, சிங்களனுக்கு ஈடாக புலிகள் செய்ததை படிக்கும் போது.. வேதனை தான் இருந்தாலும் இன்னும் நிறைய எழுதுங்கள் இது குறித்து தமிழ்நாட்டு சனங்கள் இன்னும் நிறைய தெரிந்துகொள்ளவேண்டும்.//


வணக்கம் சகோதரம், நான் இப் பதிவை நடு நிலையான பார்வையோடு தான் எழுதினேன். ஆதலால் புலிகளின் தவறுகளை மட்டும் மறைத்து எழுதுவது முறையல்லத் தானே. புலிகள் என்றால் தவறு செய்ய மாட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. அவர்களும் மனிதர்கள் தானே?

நிரூபன் said...
Best Blogger Tips

தேனம்மை லெக்ஷ்மணன் said...
படிக்கவே முடியலை..

அடப்ப்பாவிகளா நல்லா இருப்பனுகளா அவனுங்க..//

இந்த உலகத்தில் மக்களை ஏமாற்றுவோரும், மக்களைப் பலிக்கடாக்களாக்குவோரும் தான் நல்லா இருப்பார்களாம். இது வாழ்க்கை எனக்குச் சொன்ன பாடம்.

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஓநாய்கள் போல இவர்களை சுட்டு தள்ள வேண்டும்//

இனியொரு சந்ததி அப்படியான முயற்சிகளில் ஈடுபடுமா தெரியுமா சகோதரம்?
//
ஆர்.கே.சதீஷ்குமார் said...
என்ன கொடுமை//

இது கொடுமையல்ல.. கொடுமையிலும்.........................கொடுமையிலும் கொடுமை.

//எல் கே said...
படிக்கவே மனம் பதைபதைக்கிறது//

இதனை விட மனம் பதை பதைக்கும், நீங்கள் அனைவருமே நம்ப முடியாத விடயங்கள் இன்னும் நிறைய இருக்கு. காலக் கிரமத்தில் அவை அனைத்தும் உங்களை வந்தடையக் காத்திருக்கின்றன.

நிரூபன் said...
Best Blogger Tips

Pirapakaran said...
இது வாசிப்பவர்களுக்கு உரு ஏற்றுவதற்காக எழுதப்பட்ட மிக அரிதாக நடந்தவைகளை கோர்த்து -நடந்தது ஒரு சம்பவம் ஆனால் அதுவே ஒவொரு நாளும்..எல்லாருக்கும் நடப்பதாக மிகைப்படுத்தபட்ட பொய் கட்டுரை இது..//

வணக்கம் பிரபாகரன்! முதலில் உங்கள் பெயருக்கு ஒரு சிறப்பு வணக்கம். தமிழர்கள் என்றொரு சிறுபான்மை இனம் இலங்கையில் இருந்து வாழ்ந்து வந்தது, வந்து கொண்டிருக்கிறது என்பதனை உலகறியச் செய்த உத்தமனின் பெயரும் உங்களைப் போன்ற ஒரு பெயர் தான்.

ஈழத்தில் நீங்கள் வாழ்ந்த காலம் குறைவு என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இல்லை நீங்கள் ஈழத்தில் வாழ்ந்தாலும் வெளியுலகு தெரியாமல் சொகுசு வாழ்க்கையினை மேல் மாகாணத்தில் வாழ்ந்திருக்கலாம். அதனால் நாங்கள் அனுபவித்த இந்த விடயங்கள் உங்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம்.

வேலியே பயிரை மேய்வது போல புலிகளும், மற்றும் முகாம்களுக்கு அருகே உள்ளவர்களும் மக்களைச் சித்திரவதைக்கு உட்படுத்தித் தான் கொன்றார்கள்.

சரத்பொன்சேகா தளபதியாக இருந்த காலத்தில் யாழ் குடாநாட்டில் மட்டும் ஜானக பெரேராவின் கீழ் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கடத்தப்பட்டு, கண்ட துண்டமாக வெட்டப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுப் புதைக்கப்பட்டார்கள். இன்னும் ஆதார பூர்வமாக இவ் விடயங்களை வெளியிடலாம். ஆனால் நான் இலங்கையில் இருப்பதால் இந்தளவோடு நிறுத்திக் கொள்கிறேன்.

எனது உயிருக்கு உத்தரவாதம் இருக்கும் பட்சத்தில் நான் இன்னும் நிறைய விடயங்களை வெளியிடலாம்.

உயிருக்குப் பயந்தவன் ஏன் இப்படி எழுதுகிறான் என்று நீங்கள் யோசிக்கலாம். வவுனியா அகதி முகாமை விட்டு வெளியேறி இப்போது தான் மெது மெதுவாக எங்கள் வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்பி வருகிறோம்.

என்னை நம்பி அம்மா, அப்பாவுடன், தங்கையும், தம்பியும் இருக்கிறார்கள்.

பிளீஸ் எங்கள் காயங்களைக் கீற வேண்டாம். உண்மைகளை மட்டுமே இங்கே எழுதினேன். இன்னும் நிறைய விடயங்களை எழுத வைத்து விட வேண்டாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

! சிவகுமார் ! said...
மனிதர்கள் என்று வெகு சிலரே இப்பூமியில் எஞ்சி உள்ளனர். மீதி எல்லாம் மிருகங்கள்.//

ஒவ்வோரு மனிதருக்குள் ஒரு மிருகம் மறைந்திருக்கிறதாம். நன்றிகள் சகோதரம்.

ஹேமா said...
வாசிக்கவே உடம்பு நடுங்குது !//

ஏன் ஊரிலை குளிர் அதிகமே சகோதரி?

நிரூபன் said...
Best Blogger Tips

நேசன், யாழ்வேந்தன் உங்களுக்கும் எனது நன்றிகள் சகோதரர்கள். நான் சொல்ல வேண்டிய கருத்துக்களை நீங்களே சொல்லி விட்டீர்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

கந்தசாமி. said...
வணக்கம் நிரூபன் துணிவுடன் எழுதியதற்கு சிறியேனின் பாராட்டுக்கள்.
இப்படி தான் எங்கள் பகுதியில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட ஒருவர் சில தினங்களில் வயல் வெளிகளில் இருந்து பிணமாக மீட்க்கப்பட்டார். பின் இறுதி கிரிகைகள் செய்து பிணத்தை எரித்து அடுத்தநாள் அஸ்தி எடுக்க சுடலை சென்று சாம்பலை கிளாறிய போது தலை பகுதியில் இருந்து பெரிய ஆணி ஒன்று கண்டெடுத்தார்கள். அதாவது கொலை செய்ய முன்னர் நாடு உச்சி மண்டையிலே ஆணியால் அறைந்துள்ளார்கள். அன்று இதை கேட்கவே கண்களால் கண்ணீர் வந்து..
இப்படி இன்னமும் பல//

ஆமாம் சகோதரா. இப்படி இன்னும் நிறைய விடயங்கள். மனித உயிருக்கு மதிப்பு இல்லாத நாட்டில் இன்னும் இன்னும் நிறைய விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன.
நீங்கள் சொல்வது போல ஆணி மட்டுமா அடிப்பார்கள். குறட்டால் கை நகத்தைப் பிடுங்குவார்கள். இப்படிப் பல விடயங்களைச் சொல்லலாம். நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

கந்தசாமி. said...
////கட்டுக்கதை. அத்தனையும் பொய்கள். இப்படியான சம்பவங்கள் ஈழத்தில் எப்பகுதியிலுமே நடக்கவில்லை. அரசாங்கம் பொதுமக்களைக் கைது செய்து துன்புறுத்துவதேயில்லை.////

வட்டுக்கோட்டை பகுதியிலே இராணுவா முகாமுக்கு முன்னாலே இருந்த வீட்டினில் இரவு ஊரடங்கு வேளையிலே நுழைந்த சிலர் தாயை அடித்து போட்டுவிட்டு மகனை தூக்கிக்கொண்டு சென்றார்கள்... இது யார் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? இராணுவ முகாமுக்கு முன்னாலே உள்ள வீட்டில் வந்து ஊரடங்கு வேளையிலே கடத்துகிறார்கள் என்றால் இராணுவம் தூங்கிக்கொண்டா இருந்தது//

சகோதரா கந்தசாமி, எம்மிலும் ஒரு சில நிறம் மாறும் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு எது நடந்தாலும், தங்களையும், தங்களையும் சார்ந்தவர்கள் பாதிக்கப்படாத வரை இது பற்றிக் கவலைப்படவே மாட்டார்கள். ஆகவே இவர்களைப் பற்றியெல்லாம் கருத்தில் கொள்ளக் கூடாது. நாமுண்டு, நமது கருத்துக்கள் உண்டு என்று இருப்போமாக.

நிரூபன் said...
Best Blogger Tips

ம.தி.சுதா♔ said...
தயவ செய்து யாரும் இப்பதிவை தமிழக அரசியல்வாதிகளுக்கு காட்ட வேண்டாம்... இதுவும் ஒரு அரசியல் பிரச்சாரக் கருவியாக்கப்படலாம்..//

//ஆமாம் சுதா. அவர்கள் எங்களை வேள்விக் கிடாய்களாக அல்லவா மீண்டும் ஆக்கத் துடிக்கிறார்கள்.//

//சேட்டைக்காரன் said...
இவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கின்றன என்பதை வாசிக்கும்போது மனதை என்னமோ செய்கிறது. :-//

இதனை விட இன்னும் பல சொல்லிலடங்காத கொடுமைகள் நிக்ழந்துள்ளன. அவற்றினையும் வெகு விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

KOOMAGAN said...
I think i haven't comments,becourse no one cann't realise our moral pains.Like "blind man looks elephant" in our problem.Why don't you discribe IPKF's busnes in your artical?If you add i'll salut for you.so you allso one side kicker.
Thanks
Koomagan//

வணக்கம் சகோதரம், Hi Brother!
I'm not a one side kicker. Because IPKF காலத்தில் இடம் பெற்ற மண்டையன் குழுவின் செயற்பாடுகள். இளைஞர்கள் வீட்டின் லெவல் சீற்றுக்குள் ஒளித்த செயற்பாடுகள், இளைஞர்களைப் பிடித்துச் சிங்கம் புலி கீறி விளையாடிய இந்திய ஆமி, மற்றும் வரதராஜப் பெருமாளின் செயற்பாடுகள், யாழ் இந்துக் கல்லூரிக்கு முன் உள்ள வீதியில் இருக்கும் உதயன் பத்திரிகையின் ஹெஸ்ட் ஹவுஸ்ஸில் கசாப்புக்கடையில் ஆடுகளை வெட்டுவது போல மனித உயிர்களை சுரேஷ் பிரேமச்சந்திரன் உத்தரவு வழங்க ஈபி.ஆர்.எல்.எப் வெட்டிக் கொன்ற விடயங்கள், ரயில் நிலையத்தில் வைத்து மாற்றுக் குழு உறுப்பினர்களைப் புலிகள் துரத்திக் துரத்திக் கொன்றமை எனப் பலவிடயங்களைத் தவற விட்டு விட்டேன். நான் எழுதிய கட்டுரைகளில் ஒரு சில விடயங்களை மட்டுமே முதன்மைப் படுத்தியதால் இவ்வாறான தவறினை இழைத்து விட்டேன்.

இன்னொரு பதிவில் இந்தச் சம்பவங்களையும், தவற விடப்பட்ட விடயங்களையும் சேர்த்து எழுதுகிறேன்.
தவறுகளைச் சுட்டிக் காட்டியதற்கு மிகுந்த நன்றிகள். உங்களைப் போன்ற நல்லுள்ளங்களினால் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் தான் என்னைப் போன்ற சிறு நாற்றுக்களின் வளர்ச்சிப் பாதைக்கு வழிகாட்டியாக அமையும்.
நன்றிகள், நன்றிகள்.

ஜீவன்சிவம் said...
Best Blogger Tips

உலகின் ஒரு மூலையில் நம் சகோதர சகோதரிகள் இவ்வளவு கொடுமைக்கு உள்ளாகும் பொழுது
அதனை தடுக்க வாய்பிருந்தும் தட்டி கழித்த இந்த குள்ளநரி அரசியல் வாதிகளை நினைக்கும் போது
உடலெல்லாம் எரிகிறது.
மீண்டு(ம்) பிரபாகரன் வரவேண்டும்

ம.தி.சுதா said...
Best Blogger Tips

/////ஜீவன்சிவம்


மீண்டு(ம்) பிரபாகரன் வரவேண்டு/////

வேண்டாம் சகோதரம் எங்கட அடுத்த சந்ததியாவது 9, 10 ம் வகுப்பகளில் (14,15 வயதில்) ஆயுதம் ஏந்தக் கூடாது அதுகளாவது வெளி நாட்டில் உள்ள மற்ற தமிழ் பிள்யைல் போல படித்து நல்ல இடத்திற்கு வரட்டு்ம்...

Anonymous said...
Best Blogger Tips

நிரூபன் says March 15, 2011 5:18 PM
வணக்கம் பிரபாகரன்! முதலில் உங்கள் பெயருக்கு ஒரு சிறப்பு வணக்கம். தமிழர்கள் என்றொரு சிறுபான்மை இனம் இலங்கையில் இருந்து வாழ்ந்து வந்தது, வந்து கொண்டிருக்கிறது என்பதனை உலகறியச் செய்த உத்தமனின் பெயரும் உங்களைப் போன்ற ஒரு பெயர் தான்.நன்றி நிரூபன். நீங்கள் யார்? என்ன நோக்கத்திற்காக இந்த பொய் பதிவு எழுதினீர்கள் என்பதை தெளிவுபடுத்திவிட்டீர்கள்.

யாழ் வேந்தன் said...
Best Blogger Tips

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயங்களில் சித்திரவதைக் கூடங்கள்
[ புதன்கிழமை, 16 மார்ச் 2011, 01:05.20 AM GMT ]

வலிகாமம் வடக்கில் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பாடசாலைச் சூழலில் பாரிய மனித புதைகுழிகள் இருக்கலாம் என்ற அச்சம் பலரிடையேயும் ஏற்பட்டுள்ளதாக ஜீரீஎன்னின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்தப் பகுதிகளில் பாரிய சித்திரவதை முகாம்கள் இருந்திருக்கலாம் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.
உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீளக்குடியமர்வு தாமதமாவதற்கு இந்தப் பின்னணியும் காரணமாக இருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகின்றது.

மேலும் பல தடுப்பு முகாம்கள் அல்லது சித்திரவதை முகாம்கள் உள்ளே இருப்பதாகவே பொதுமக்கள் பலரும் சந்தேகம் கொண்டுள்ளனர்.

அண்மையில் மீள இயங்க அனுமதிக்கப்பட்ட வசாவிளான் மத்திய மகாவித்தியாலய சூழலில் சர்ச்சைக்குரிய வகையில் சித்திரவதைக் கூடங்களை அப்பகுதிப் பொதுமக்கள் கண்டுள்ளனர். எனினும் அடுத்த சில தினங்களில் படையினர் அவசர அவசரமாக அவற்றினை உருக்குலைத்து விட்டனர் எனவும் ஜீரீஎன்னின் புலனாய்வுச் செய்தியாளர் கூறுகிறார்.

முற்றுமுழுதாக கதவுகள் மூடி அடைக்கப்பட்ட நிலையில் இருண்ட அறைகளையும் அங்கு பெருமளவில் இரத்தம் சிந்தப்பட்ட நிலையில் தடயங்களையும் கண்டுள்ளனர்.

அத்துடன் பலகைகள் கொண்ட கட்டில்கள் பல சித்திரவதை செய்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டும் குறிப்பாக முட்கம்பிகளால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப்பட்டதான முட்கம்பித் தடயங்களையும் அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.

எனினும் இது தொடர்பாக படை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதை அடுத்து அவசர அவசரமாக அங்கு சென்ற அதிகாரிகள் அங்கு பிரசன்னமாகியிருந்த அனைவரையும் திருப்பி அனுப்பியுள்ளனர். பின்னர் படையினர் மீண்டும் ஓரிரு வாரங்கள் அங்கிருந்து அனைத்தையும் சுத்திகரித்த பின்பே பாடசாலையை மீண்டும் வழங்கியதாக தெரியவந்துள்ளது.

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இவ்வாறு விடுவிக்கப்பட்ட பல பகுதிகளிலும் இவ்வாறு தடயங்கள் காணப்படுகின்றன.

யாழ்குடாநாட்டில் படையினரால் கடத்தப்பட்டு அல்லது காணாமல் போன ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எங்கே என்ற தகவல்கள் இன்றுவரை இல்லாமல் போயுள்ளது. இவர்கள் அச்செழு ஊரெழு முகாம்கள் ஊடாக பலாலி உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் கனரக வாகனங்களில் உள்ளே கொண்டு சென்றமைக்கான பல தடயங்கள் வெளிவந்திருக்கின்றன.

எனினும் பின்னர் அவர்கள் எவருமே வெளியே வந்திருக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் சித்திரவதையின் பின் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றது. அந்த வகையிலேயே இந்த சித்திரவதைக் கூடங்களும் அமைந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

வன்னி யுத்தத்தில் கைது செய்யப்பட்ட போராளிகளில் ஒரு பகுதியினர் பலாலியில் உள்ள தடுப்பு முகாம்களில்:-

இதனிடையே வன்னி யுத்தத்தில் கைது செய்யப்பட்ட போராளிகளில் ஒரு பகுதியினர் பலாலியில் உள்ள தடுப்பு முகாம்களில் இரகசியமாக உள்ளதனையும் ஜீரீஎன் புலனாய்வுச் செய்தியாளர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே தெல்லிப்பளையில் விசேட தடுப்பு முகாம் ஒன்று இயங்கிய போதிலும் அது திடீரென மூடப்பட்டது. அங்கிருந்தவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்பது பற்றித் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையிலேயே வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இராணுவ சித்திரவதை கூடங்களும் மனிதப் புதைகுழிகளும் இருக்கலாம் என்ற ஊகங்களும் தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.


http://www.tamilwin.com/view.php?22GpXbc2BI34eC29303jQqdd3Qjb20D922e42LBcb3pGG2

நிரூபன் said...
Best Blogger Tips

இக்பால் செல்வன் said...
உண்மைதான் ! தோழரே - ஈழத்தமிழர்களின் இன்றைய தேவை எது எனத் தெரியாமல் தமிழ் - வீரம் - தூஷணம் பேசி அலையும் என் தமிழ்நாட்டு தலைவர்கள் நிச்சயம் இதைப் புரிந்துக் கொள்ள வேண்டும் ........... இந்த தமிழ் நாட்டு தலைவர்களான சீமான், வைக்கோ, நெடுமாறன், ராமதாஸ், திருமா - அறுந்த வால்களான விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் எல்லாரும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். இவர்கள் பேசுவதால் ஈழத்தமிழர்கள் வாழ்வில் வசந்தம் வீசப்போவதில்லை, மாறாக எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையாக முடியும். மத்திய இந்திய அரசைப் பகைப்பதால் ஈழத்தமிழர்களுக்கு நன்மை ஒன்றும் கிடைக்கப் போவதில்லை, அவர்களை சிலர்ப் பகைத்ததன் விளைவு ஈழத்தமிழர்களை குழியில் தான் தள்ளியது. இப்போது இருக்கும் ஒரே சூழல் ஈழத்தமிழர்கள் அவர்களுக்கான தலைமையை ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுத்து சிங்கள் அரசுடனும், இந்திய அரசுடனும் பேசுவது - இது அரசியல் ... ஈழத்தமிழர்கள் படிக்கவும், வேலைவாய்ப்பு பெறவும் தமிழ்நாட்டிலும். இலங்கையில் வடக்கு கிழக்கில் நல்ல பள்ளி, மருத்துவமனை, சாலை, சுயதொழில், விவசாயம் போன்றவற்றுக்கு தமிழகத் தமிழர்கள் முன்வந்து உதவ வேண்டும் .................................. இது வாழ்வியல்.. இது தான் அவசியமும் கூட//

நன்றிகள் சகோ இக்பால் செல்வன்.
எங்களின் அரசியல் வாதிகள் அடித்தால் திருப்பி அடிப்பேன், இறந்த சாம்பலிலிருந்து மீண்டும் அவர்கள் எழுவார்கள் என்று பஞ்சு வசனம் பேசிப் பேசியே தமது காலத்தை ஓட்டி வருகின்றார்கள். இவர்கள் எங்கே எமது மக்களின் எதிர்காலம் பற்றி, மக்களின் நலம் பற்றிச் சிந்திக்கப் போகிறார்கள்?

நிரூபன் said...
Best Blogger Tips

ஜீவன்சிவம் said...
உலகின் ஒரு மூலையில் நம் சகோதர சகோதரிகள் இவ்வளவு கொடுமைக்கு உள்ளாகும் பொழுது
அதனை தடுக்க வாய்பிருந்தும் தட்டி கழித்த இந்த குள்ளநரி அரசியல் வாதிகளை நினைக்கும் போது
உடலெல்லாம் எரிகிறது.
மீண்டு(ம்) பிரபாகரன் வரவேண்டும்..//

உங்களுக்கான பதிலை சகோதரன் மதி சுதா தந்து விட்டார். மீண்டும் இன்னொரு தலைமுறையைப் பலிக்கடா ஆக்க நினைக்கும் நீங்களும், இன்னும் பலரும் ஏன் உங்களின் தலையில் அந்தச் சுமையைச் சுமந்திருக்கக் கூடாது?

எல்லாம் அனுபவித்தவனுக்குத் தான் புரியும். வேண்டாம். வேண்டாம்! இனியும் ஒரு அவலம் வேண்டாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

சுவனப்பிரியன் said...
சிரமத்தில் தவிக்கும் அகதி முகாம்களில் அல்லலுரும் சாமான்ய மக்களின் அத்தியாவசிய தேவைகளை எவ்வாறு பூர்த்தியாக்கப் போகிறோம? அதற்கு என்ன வழி என்று சிந்திக்க வேண்டிய நேரமிது.

சித்திரவதைக் காட்சிகளைப் பார்த்து மனது மிகவும் சங்கடப்பட்டது. போரின் கொடுமை இனிமேலாவது இல்லாமல் ஒழியட்டும்..//

நன்றிகள் சகோதரம், எங்காவது ஒரு நல்ல நோக்கமுள்ள அரசியல்வாதி இது பற்றிச் சிந்திக்கிறாரா? இல்லைத் தானே. தமது நலனிலும், தங்களைப் பிரபலமாக்குவதிலும் தான் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

Anonymous said...
நிரூபன் says March 15, 2011 5:18 PM
வணக்கம் பிரபாகரன்! முதலில் உங்கள் பெயருக்கு ஒரு சிறப்பு வணக்கம். தமிழர்கள் என்றொரு சிறுபான்மை இனம் இலங்கையில் இருந்து வாழ்ந்து வந்தது, வந்து கொண்டிருக்கிறது என்பதனை உலகறியச் செய்த உத்தமனின் பெயரும் உங்களைப் போன்ற ஒரு பெயர் தான்.நன்றி நிரூபன். நீங்கள் யார்? என்ன நோக்கத்திற்காக இந்த பொய் பதிவு எழுதினீர்கள் என்பதை தெளிவுபடுத்திவிட்டீர்கள்//

வணக்கம் உறவே, மீண்டும் நீங்கள் இக் கருத்தினைப் பல பெயர்களில் மறைக்கவும், மறுத்துரைக்கவும் முனைகிறீர்கள் என்பதனை நினைத்து நான் வருத்தமடைய வில்லை. சிரிக்கிறேன். உங்களிற்கு இன்னமும் இலங்கையில் கடந்த காலங்களில் இடம் பெற்ற கசப்பான விடயங்கள் முழுமையாகத் தெரியவில்லை என்பதனை நினைத்து வெட்கப்படுகிறேன். இந்த நூற்றாண்டில் இலத்திரனியல் உலகில் தொழில்நுட்பங்கள் மலிந்துள்ள நாட்டில் இணையம் பயன்படுத்தும் என் உறவாகிய உங்களுக்கு பல விடயங்கள் தெரியாமல் போய் விட்டதோ அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறீர்களோ என்பதையிட்டு சிரிக்கிறேன். பாவம் நீங்கள். பல வரலாறுகளைத் தவற விட்டுவீர்கள்.

நேரமிருந்தால் சங்கரி என்ற ஈழத்துப் பெண் எழுத்தாளரின் கவிதை நூல்களையும், ஓட்டமாவடி அரபாத், சோலைக் கிளி முதலியோரது நூல்களையும், மரணத்துள் வாழ்வோம், செம்மணி -சித்தார்த்த சேகுவேரா.. எனும் நூல்களையும் தேடிப் படித்துப் பாருங்கள் இன்னும் நிறைய விடயங்களை அறிந்து கொள்வீர்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

நிரூபன் said...
Anonymous said...
நிரூபன் says March 15, 2011 5:18 PM
வணக்கம் பிரபாகரன்! முதலில் உங்கள் பெயருக்கு ஒரு சிறப்பு வணக்கம். தமிழர்கள் என்றொரு சிறுபான்மை இனம் இலங்கையில் இருந்து வாழ்ந்து வந்தது, வந்து கொண்டிருக்கிறது என்பதனை உலகறியச் செய்த உத்தமனின் பெயரும் உங்களைப் போன்ற ஒரு பெயர் தான்.


நன்றி நிரூபன். நீங்கள் யார்? என்ன நோக்கத்திற்காக இந்த பொய் பதிவு எழுதினீர்கள் என்பதை தெளிவுபடுத்திவிட்டீர்கள்//

//
நன்றிகள் தோழா, நீருபன் யார்? உங்களைப் போல இரண்டு கண்கள், இரண்டு காது, ஒரு மூக்கு, ஒரு வாய் உள்ள சாதாரணம் தமிழன். என்ன சரி தானே?
இல்லையென்றால் புலிகளைப் பற்றி எழுதுவதால் புலிகளின் ஆதரவாளர்களின் பார்வையில் - புலி எதிர்பாளனாகவும், இராணுவ ரீதியில் இப்போது யாழ்ப்பாணத்தில் பிழைக்க வழியேதுமின்றி இராணுவத்தின் காலை நக்கும் துரோகித் தமிழனாகவும், சிறிலங்கா ரெலிக் கொம்மில் மேல் பதவிகளைப் பெறுவதற்காக(நான் வேலை செய்யும் நிறுவனத்தில்) சில நேரம் அடிக்கடி சிறிதர் தியேட்டர் ஆட்களுக்கு வாளி வைக்கும் ஒரு பச்சோந்தியாகவும், போருக்கு எதிரான, போர் வேண்டாம் எனும் கருத்துக்களைப் பரப்புவதால் ஒரு தேசத் துரோகியாகவும், வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றவாளியாகவும் இந்த நிரூபன் இருக்கலாம் தானே.

இதனைப் பற்றியெல்லாம் நான் கவலைப் படமாட்டேன். இப்படிக் கவலைப்படுபவனாக இருந்தால்,
;தாய் நிலத்தைத் தகர்க்க ஆமி வந்திருக்கும் போது - நீ என்ன
பாய் விரித்தா படுத்திருக்கிறாய்??
எனும் வரிகளைக் கேட்டு என்றோ ஆவேசம் கொண்டு அனற் காற்றாய்(இது அவர்கள் பாசையில்) மாறியிருப்பேன்.

இது பொய்க் கதையோ? உங்களிடம் ஒரு சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.
‘’ஒரு இனத்தை, அவ் இனத்தின் விருப்பத்திற்கு மாறாக அதன் சொந்த நிலத்திலிருந்து எந்தவித முன்னறிவித்தல்களுமின்றி, விடிகாலை வேளை அடித்துத் துன்புறுத்தி வாகனங்களில் ஏற்றி அனுப்புவதும் ஓர் சித்திரவதை, அடிப்ப்படை மனித உரிமை மீறல் தானே?

அப்படியாயின் குடாநாட்டினை வலுக்கட்டாயமாக, துப்பாக்கி முனையில் இளம்பரிதி, பாப்பா, ஈஸ்வரன், தமிழ்ச்செல்வன் ஆகியோரால் அங்கு வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தினர் விரட்டி அனுப்பப்பட்டார்களே? அதனை நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அதுவும் பொய்யா?

அல்லைப் பிட்டி, மன்னார் துள்ளுக்குடியிருப்பு முதலிய பகுதிகளில் இரவோடு இரவாக இளம் பெண்களை பலவந்தமாக வல்லுறவிற்கு உட்படுத்திப் படுகொலை செய்தார்களே, சிறுவர்களைப் படுகொலை செய்தார்களே, வெட்டிப் படுகொலை செய்தார்களே? அவற்றையும் கூட நீங்கள் அறியவில்லையா?

மனித மனங்களின் விருப்பங்கள் ஏதுமின்றி வான் கொண்டு வந்து பிடித்து ஏற்றிக் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்தி, முன்னரங்கில் பகடைக் காய்களாக 13, வயது தொடக்கம் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை நிறுத்தினார்களே அதுவும் பொய்யா?

நான் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க, என்னுடன் நின்றவர்கள் வலைஞர் மடம் பகுதியிலிருந்து இராணுவத்தின் பிரகடனப்படுத்தப்பட்ட புலிகள் பகுதியிலிருந்த பாதுகாப்பு வலயத்திலிருந்து - தனது தள்ளாடும் வயதிலும் உயிரைப் பாதுக்காக-
இனியும் புலிகளை நம்பிப் பலனேதும் இல்லை எனும் நோக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல முயன்ற பல முதியவர்களை துப்பாக்கிப் பிடிகளாலும், கால்களாலும் புலிகள் உதைந்தும், அடித்தும், தள்ளியும் விழுத்திப் போக வேண்டாம் என்று மிரட்டினார்களே அதுவும் பொய்யா?
இவையெல்லாம் சித்திரவதைகள் இல்லையா?

நிரூபன் said...
Best Blogger Tips

Anonymous said...//

//நிரூபன் says March 15, 2011 5:18 PM
வணக்கம் பிரபாகரன்! முதலில் உங்கள் பெயருக்கு ஒரு சிறப்பு வணக்கம். தமிழர்கள் என்றொரு சிறுபான்மை இனம் இலங்கையில் இருந்து வாழ்ந்து வந்தது, வந்து கொண்டிருக்கிறது என்பதனை உலகறியச் செய்த உத்தமனின் பெயரும் உங்களைப் போன்ற ஒரு பெயர் தான்.//


நன்றி நிரூபன். நீங்கள் யார்? என்ன நோக்கத்திற்காக இந்த பொய் பதிவு எழுதினீர்கள் என்பதை தெளிவுபடுத்திவிட்டீர்கள்/

நன்றிகள் தோழா, நீருபன் யார்? உங்களைப் போல இரண்டு கண்கள், இரண்டு காது, ஒரு மூக்கு, ஒரு வாய் உள்ள சாதாரணம் தமிழன். என்ன சரி தானே?
இல்லையென்றால் புலிகளைப் பற்றி எழுதுவதால் புலிகளின் ஆதரவாளர்களின் பார்வையில் - புலி எதிர்பாளனாகவும், இராணுவ ரீதியில் இப்போது யாழ்ப்பாணத்தில் பிழைக்க வழியேதுமின்றி இராணுவத்தின் காலை நக்கும் துரோகித் தமிழனாகவும், சிறிலங்கா ரெலிக் கொம்மில் மேல் பதவிகளைப் பெறுவதற்காக(நான் வேலை செய்யும் நிறுவனத்தில்) சில நேரம் அடிக்கடி சிறிதர் தியேட்டர் ஆட்களுக்கு வாளி வைக்கும் ஒரு பச்சோந்தியாகவும், போருக்கு எதிரான, போர் வேண்டாம் எனும் கருத்துக்களைப் பரப்புவதால் ஒரு தேசத் துரோகியாகவும், வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றவாளியாகவும் இந்த நிரூபன் இருக்கலாம் தானே.

இதனைப் பற்றியெல்லாம் நான் கவலைப் படமாட்டேன். இப்படிக் கவலைப்படுபவனாக இருந்தால்,
;தாய் நிலத்தைத் தகர்க்க ஆமி வந்திருக்கும் போது - நீ என்ன
பாய் விரித்தா படுத்திருக்கிறாய்??
எனும் வரிகளைக் கேட்டு என்றோ ஆவேசம் கொண்டு அனற் காற்றாய்(இது அவர்கள் பாசையில்) மாறியிருப்பேன்.

இது பொய்க் கதையோ? உங்களிடம் ஒரு சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.
‘’ஒரு இனத்தை, அவ் இனத்தின் விருப்பத்திற்கு மாறாக அதன் சொந்த நிலத்திலிருந்து எந்தவித முன்னறிவித்தல்களுமின்றி, விடிகாலை வேளை அடித்துத் துன்புறுத்தி வாகனங்களில் ஏற்றி அனுப்புவதும் ஓர் சித்திரவதை, அடிப்ப்படை மனித உரிமை மீறல் தானே?

அப்படியாயின் குடாநாட்டில் வலுக்கட்டாயமாக, துப்பாக்கி முனையில் இளம்பரிதி, பாப்பா, ஈஸ்வரன், தமிழ்ச்செல்வன் ஆகியோரால் அங்கு வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தினர் விரட்டி அனுப்பப்பட்டார்களே? அதனை நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அதுவும் பொய்யா?

அல்லைப் பிட்டி, மன்னார் துள்ளுக்குடியிருப்பு முதலிய பகுதிகளில் இரவோடு இரவாக இளம் பெண்களை பலவந்தமாக வல்லுறவிற்கு உட்படுத்திப் படுகொலை செய்தார்களே, சிறுவர்களைப் படுகொலை செய்தார்களே, வெட்டிப் படுகொலை செய்தார்களே? அவற்றையும் கூட நீங்கள் அறியவில்லையா?

மனித மனங்களின் விருப்பங்கள் ஏதுமின்றி வான் கொண்டு வந்து பிடித்து ஏற்றிக் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்தி, முன்னரங்கில் பகடைக் காய்களாக 13, வயது தொடக்கம் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை நிறுத்தினார்களே அதுவும் பொய்யா?

நான் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க, என்னுடன் நின்றவர்கள் வலைஞர் மடம் பகுதியிலிருந்து இராணுவத்தின் பிரகடனப்படுத்தப்பட்ட புலிகள் பகுதியிலிருந்த பாதுகாப்பு வலயத்திலிருந்து - தனது தள்ளாடும் வயதிலும் உயிரைப் பாதுக்காக-
இனியும் புலிகளை நம்பிப் பலனேதும் இல்லை எனும் நோக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல முயன்ற பல முதியவர்களை துப்பாக்கிப் பிடிகளாலும், கால்களாலும் புலிகள் உதைந்தும், அடித்தும், தள்ளியும் விழுத்திப் போக வேண்டாம் என்று மிரட்டினார்களே அதுவும் பொய்யா?
இவையெல்லாம் சித்திரவதைகள் இல்லையா?

நிரூபன் said...
Best Blogger Tips

Anonymous said..
நன்றி நிரூபன். நீங்கள் யார்? என்ன நோக்கத்திற்காக இந்த பொய் பதிவு எழுதினீர்கள் என்பதை தெளிவுபடுத்திவிட்டீர்கள்//

சகோதரம், நான் எப்படியான துரோகியாகவும் இருந்து விட்டுப் போகிறேன். விட்டு விடுங்கள். என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

மணலாற்றில் வெலி ஓயா சிங்களக் குடியிருப்பினுள் புலிகளால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட புலிகளின் விசேட அதிரடிப்படையினர் சிங்கள மக்களை வெட்டிக் கொலை செய்தார்களே? அதனை நீங்கள் அறியவில்லையா? அது சித்திரவதையில்லையா? துடிக்கத் துடிக்க, கதறக் கதற, கையெடுத்துக் கும்பிடக் கும்பிட ஒரு உயிரை வெட்டுவது என்ன கருணைக் கொலையா? இதுவும் பொய்யா?

மணலாற்றில் தமிழர்களை வெட்டிக் கொன்றார்களே அதனை அறியவில்லையா?
கிழக்கிலங்கையில் வந்தாறு மூலையில் தமிழர்களை வெட்டிக் கொன்றார்களே அதனை நீங்கள் அறியவில்லையா?
மட்டக்களப்பில் ‘ராசிக்’ குழு உறுப்பினர்களையும், அவர்களால் கடந்த காலங்களில் செய்யப்பட்ட சித்திரவதைகளையும் நீங்கள் அறியவில்லையா?

மாற்றுக் குழு உறுப்பினர்களைப் புலிகள் கைது செய்து கொண்டு போய்த் தமது வதை முகாம்களில் வைத்து சித்திரவதை செய்ததை நீங்கள் அறியவில்லையா?

இப்போது வதை முகாம்கள் என்ற பெயரில் முன்னாள் புலிகள் என்ற பெயரில் பல நூற்றுக்கணக்கானோருக்குத் தண்டனைகள் வழங்கி, சித்திரவதைகள் செய்வதையும் நீங்கள் அறியவில்லையா?
நான் நினைக்கிறேன்.

நீங்கள் 1948ம் ஆண்டிற்கு முன்னர் உள்ள காலப்பகுதியில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். வெகு விரைவில் கால ஓட்டத்தின் பாதையில் நாம் கடந்து வந்த சம்பவங்களை அறிந்து கொண்டு தற்காலத்திற்கு வாருங்கள். நாங்கள் இன்னும் நிறைய விடையங்களை விவாதிப்போம்.

Do you still remember about the 1983 riots?

rangreen8 said...
Best Blogger Tips

இவங்களும் மனுஷங்களா அகோரி

blackboy said...
Best Blogger Tips

உங்கள் வலைப்பதிவை இன்றுதான் பார்த்தேன்,நீங்கள் கூறிய சித்திரவதைகள் உண்மைதான் ஆனால் நீங்கள் விடுதலைப்புலிகள் கொடுத்த தணடனைகள் சிறிலங்கா ராணுவம் செய்த சித்திரவதைகள் என தனியா பிரித்து எழுதி இருக்கலாம் ஏனெனில் நீங்கள் சிறிலங்கா ராணுவம் செய்த சித்திரவதைகளை கூறிவிட்டு விடுதலைப்புலிகள் செய்தமாதிரி கூறுகிறீகள் .

விடுதலைப்புலிகள் சிலதீயசக்திகளுக்கு ‘பச்சை மட்டை அடி கொடுத்து விசாரணை செய்தல்’.ஒரு பெரிய பூங்காவிற்கோ அல்லது தோட்டத்திற்கோ சிறிய சோடா மூடியின் உதவியுடன் நீர் பாய்ச்ச விடுதல். குற்றம் செய்தவரை மின்சாரக் கம்பத்தில் கட்டி வைத்துச் சுட்டுக் கொல்லுதல்.புலிகளின் தண்டனை முகாம்களைப் பற்றிய உண்மைகளை விளக்க ஊரில் ஒரு பழ மொழி சொல்லுவார்கள், ‘மவனே நீ வட்டுவாகல் போனாய், உனக்குப் பற்பொடி தந்தால் தான் விடிஞ்சுது என்று தெரியும்’ ஆகவே கவனமாக இரு என்று மிரட்டுவார்கள். அந்தளவிற்கு வெளி உலகே தெரியாத இருட்டறைகளாகத் தான் அச் சித்திரவதைக் கூடங்கள் விளங்கியிருக்கின்றன.இவை மாபெரும் குற்றம் இழைத்தவர்களுக்கு விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டது.

நீங்கள் சிங்களவன் செய்த(மனிதஉரிமைகளை ) சித்திரவதைகளையும் சேர்ர்த்து விடுதலைப்புலிகள் மீது அப்பட்டமாக சுமத்துகின்றீர்கள் .இவ்வாறன கட்டுரைகள் எழுதும்போதுசிறிலங்கா ராணுவக்கட்டுப்பட்டில் நடந்த குற்றங்கள் மனித உரிமைமீறல்கள் எவ்வளவு என்பதனையும் விடுத்தலைப்புலிகள் கட்டுப்பாட்டில் நடந்த குற்றங்கள் தண்டனைகள் என்ன என்பதையும் தெளிவாகக எழுதவும்

நிரூபன் said...
Best Blogger Tips

@blackboy

அன்புக்குரிய சகோதரம், கட்டுரையினை நடுநிலையோடு தான் எழுதியிருக்கிறேன். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுயில் நீங்கள் வாழவில்லை என்பதால் இவை ராணுவத்தினர் செய்தது போன்ற மாயையினை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கலாம்.

புலிகளால் பாதிக்கப்பட்டவர்களைக் கேட்டுப் பாருங்கள். இச் சித்திரவதைகள் பற்றிச் சொல்லுவார்கள்.

பதிவினை மீண்டுமொருதரம் படித்துப் பாருங்கள் சகோ.

குறுக்காலபோவான் said...
Best Blogger Tips

"இவ்வாறான கொடிய தண்டனைகளைப் புலிகளும் வழங்கியிருக்கிறார்கள்"
உங்க நேர்ம எனக்கு பிடிச்சிருக்கு.

blackboy said...
Best Blogger Tips

நான் எங்கு இருந்தேன் என்பதை உங்களுக்கு கூறினேனா ?ஓ... உங்களுடைய ஊகம் எவ்வாறு இருக்கின்றது என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது..இந்த ஊகமே பிழைத்திருக்கின்றது என்றால்...

நீங்கள் இப்பந்தியில் முன்னுரிமைப்படுத்திய தண்டனைகள் விடுதலைப்புலிகளால் வழங்கப்படவில்லை
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீலங்கா ராணுவம்செய்த மனித உரிமைமீறல்கள் மிகவும் கொடூர மானவை அவற்றுடன் வவுனியாவில் பிளாட்,epdp போன்ற குழுக்களால் செய்யப்பட்ட கொடூரக்களை கூறிவிட்டு ..........இவ்வாறான தண்டனைகளைப் புலிகளும் வழங்கியிருக்கிறார்கள். என்று அபாண்டமாக பொய் சொல்கின்றீர்களே.அந்த மனித உரிமை மீறல்கள் சிறிலங்கா ராணுவத்தினரால் தான் மேற்கொள்ளப்பட்டது .ஆனால் நீங்கள் திட்டமிட்டு விடுதலைப்புலிகள் மீதும் குற்றம் சுத்துகிண்றீர்கள் ஆனால் தீன குழுவினரால் யாழ் மக்களின் பாதிப்பு என்பது மிகவும் அளப்பரியது அவர்களில் ஒருவருக்கு அவ்வாறான தண்டனைகள் வழங்குவது சரியானது ஆனால் அத்ததண்டனை அமைப்பு ரீதியாக வழங்கப்படவில்லை குறித்த குழுவினரால் பாத்திக்கப்பட்ட உறவினன் வழங்கியிருந்தான் ஒரு குழு திருந்துவதற்காக ஒருவனுக்கு தண்டனை வழங்கு வதில் தப்பு இல்லைதானே . ஸ்ரீலங்கா ராணுவம்செய்த மனித உரிமைமீறல்கள் மிகவும் கொடூர மானவை அதற்கெதிரான .( மனித உரிமை மீறல்களுக்கு) உங்களுடைய ஆதங்கத்தை வரவேற்கின்றேன்

நான் கூறியது இவ்வாறன கட்டுரைகள் எழுதும்போதுசிறிலங்கா ராணுவக்கட்டுப்பட்டில் நடந்த குற்றங்கள் மனித உரிமைமீறல்கள் எவ்வளவு என்பதனையும் விடுத்தலைப்புலிகள் கட்டுப்பாட்டில் நடந்த குற்றங்கள் தண்டனைகள் என்ன என்பதையும் தெளிவாகக எழுதவும்

பனங்கொட்டை (Panangkoddai) said...
Best Blogger Tips

தமிழீழத்தின் முன்னால் தேசியத்தலைவர் சொன்ன வார்த்தை இது "வல்லவன் வாழ்வான்". அதே போல் IPKF அதிகாரி சொன்னது "ஆயுதம் தரித்தவர்கள் எல்லோருமே ஒரே இயல்புடையவர்கள்". நண்பர் மேற்க்கூறியவற்றை சரி என்று நியாயப்படுத்தவில்லை. ஆனால் ஆயுதம் தரித்தவர்கள் சாதாரன மக்களிலும் வல்லவர்கள். அதனால் தாம் விரும்பியவற்றை சரியோ பிழையோ செய்தார்கள். ஏனெனில் குருக்கள் செய்தால் தப்பில்லையே.

ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் கடவுளும் இருக்கிறார், மிருகமும் இருக்கிறது. எதை நாம் தட்டி எழுப்பி வைத்திருக்கிறோம் என்பதைப்பொருத்தது நாம் நல்லவர்களா கெட்டவர்களா என்பது. சூழ்நிலைகளும் இதற்கு உடந்தை.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails