Sunday, March 20, 2011

மீண்டும் ஓர் ஈழ யுத்தம்! உலகத் திரையரங்குகளில் முதன் முறையாக..

உலகத் திரையரங்குகளில் முதன் முறையாக, வெகு விரைவில் எதிர்வரும் மேமாதம் திரைக்கு வரவிருக்கிறது மீண்டும் ஓர் ஈழயுத்தம் திரைப்படம்.
அதி நவீன தொழில் நுட்ப உதவிகளுடனும், இதுவரை தமிழ்ச் சினிமாவில் பயன்படுத்தப்படாத கிறபிக்ஸ்(Graphics) தொழில் நுட்பங்களுடனும் திரைக்கு வரவிருக்கிறது மீண்டும் ஓர் ஈழயுத்தம்.!

மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் இலங்கை, இந்தியக் கூட்டுத் தயாரிப்பாகவும், உலகத் தமிழர்களின் பெருமளவான பொருட் செலவுடனும், பங்களிப்புடனும், பிரமாண்டமான முறையில் திரைக்கு வரத் தயாராகிறது இத் திரைப்படம்.

ஆசியாக் கண்டத்தில் உள்ள மங்களவர் கூட்டுத் தாபனத்தின் தயாரிப்பில், கோமான், சைக்கோ, மற்றும், வருவாய்நிதி, பனிமொழி முதலிய முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பிலும், ஸ்பெக்ரம் விருது புகழ் பாசாவின் இசையிலும் திரைக்குவரத் தயாராகிறது இந்தப் படம்.

இனித் திரைப்படம் பற்றிய ஒரு சிறிய முன்னோட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆங்கிலத் திரைப்படங்களையே ஒரு கணம் உற்றுப் பார்க்க வைக்கும் அளவிற்கு, ஆங்கிலத் திரைப்பட உலகையே ஒரு கணம் புரட்டிப் போடுமளவிற்கு Inspired by true events (இப் படத்தில் வரும் நிகழ்வுகள் யாவும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை) எனும் அறிமுக டைட்டிலோடு ஆரம்பமாகிறது படம்.

படத்தின் கதைப்படி கதாநாயகர்களான சைக்கோ, மற்றும் கோமான் ஆகியோர் ‘அபுகா ஜிபுகு குபுகா’ எனப்படும்’ அதி நவீன தொழில் நுட்பங்கள் கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் விமானத்தில் ஆசியாக் கண்டத்திலுள்ள மகிழ்நாடு எனும் இடத்திலிருந்து, அந்த நாட்டிற்கு அருகேயுள்ள சலங்கை எனும் நாட்டிற்குப் போகிறார்கள்.

போகும் வழியில் பல அடி உயரத்தில் விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக நின்று விடுகிறது. உடனடியாகச் சுற்றும் முற்றும் பார்த்த இருவரும் இப்ப பிளேனை ஓட்டுறதுக்கு என்ன வழி என்று கேட்கிறார்கள்.
உடனே கதாநாயகர்களுள் ஒருவரான சைக்கோ அவர்கள் ‘கோமான் நீங்க அனல் பறக்கப் பேசினிங்க என்றால் பிளேன் பறந்திடும் என்கிறார், 
அதற்கு கோமானோ, என்ன சைக்கோ அப்பிடிச் சொல்லிட்டீங்க, நீங்க தானே என்னை விடப் பெரிய, முதிர்ந்த நடிகர், அப்ப நீங்களே பேசிடுங்க, இப்படிச் சொல்லி முடித்ததும் கடுப்பாகிய நடிகர் சைக்கோ அவர்கள்
கோமானின் கழுத்தைப் பிடித்து, நீ பேசுறியா இல்லை, உன்னோடை சலங்கைத் தீவிற்கு ஆதரவான நடிகர்களின்ரை படத்தைப் புறக்கணிக்கச் சொல்லுவதன் உள் கூத்தை, ரகசியத்தைப் போட்டுடைக்கவா என்றதும்,
தன்னையே ஒரு கணம் உற்றுப் பார்த்த இயக்குனர் கோமான், ’’ஓக்கே சைக்கோ நானே பேசிடுறேன் என்று பேசத் தொடங்குகிறார்.

‘’என் அன்புக்குரிய மகிழ் நாட்டு மக்களே, சலங்கை அரசிற்கு ஆதரவாக அங்கு போய் கும்மியடித்து, குதூகலம் புரிந்த நடிகை பிசினைப் புறக்கணிக்கலாம். அதற்காக அவர் பஜயுடன் நடிக்கும் காவலனை எப்படி நாங்கள் புறக்கணிக்க முடியும்? நடிகர் பஜய் இப்போது எனது அன்புக்கும், பண்புக்கும் பாத்திரமாகி நாம் மகிழ்வர் கட்சியிலும் இணைந்து விடுவார் போலிருக்குது. ஆகவே இன்று முதல் அனைத்துத் திரைகளிலும் அவர் படமே ஓடட்டும்,  என்றதும் முற்பத்தி மூவாயிரம் அடிகளுக்கு மேல் பறந்து கொண்டிருக்கையில் தொழில் நுட்பக் கோளாறால் கீழே விழும் வகையில் வேகமாகப் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த, விமானம் கோமானின் அனல் பறக்கும் பேச்சைக் கேட்டுப் பறக்கத் தொடங்குகிறது.

இந்தத் தொழில் நுட்பத்தை இயக்குனர் கோமான் அவர்களே(இப் படத்தின் இயக்குனர்) தனது உயிரையும், சைக்கோவின் உயிரையும் பணயம் வைத்து வானத்தில், அதுவும் 33,000 அடி உயரங்களுக்கு மேல் பழுதடைந்த விமானத்தினை ஓட்டவைக்கும் வகையில், விமானம் விழுவதற்கு முன்  டயலாக் பேசி வானத்தின் இடை நடுவில் வைத்து மீண்டும் விமானத்தைப் பறக்கச் செய்து எடுத்திருக்கிறார் என்பது சிறப்பம்சமாகும். இக் காட்சிக்கு ரசிகர்களும், பார்வையாளர்களும் நிச்சயம் தியேட்டரை விட்டெழுந்து கைதட்டித் துள்ளி மகிழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.

இத் தொழில் நுட்பத்திற்கு இணையாக உலகில் இதுவரை எந்தவிதப் படங்களிலும் தொழில்நுட்பங்கள் இல்லை என்பதால் ஹொலிவூட் இயக்குனர்கள் கூட இவ் விடயத்தினை அறிந்து கோமானின் வீட்டை நோக்கிப் படையெடுக்க விசாவிற்கு விண்ணப்பிபதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.

’’என்ன கோமான் சார், உங்க பேச்சைக் கேட்டு ஆப் ஆன எஞ்சினே ஓர்க் பண்ணுது, ஆனால் ஏன் சார் பொட்டு வரும், பொட்டு வரும் என்று அடிக்கடி சொல்லுறீங்களே, அவர் இன்னும் வரல்லை? 
‘யோ சும்மா வாயை மூடிக்கிட்டு இரய்யா. நானே மக்களை வைச்சுக் காமெடி பண்ணிக் கிட்டு இருக்கிறன். நீ வேற.. என்னைய வைச்சு காமெடி பண்ணப் பாக்கிறாய். பிளேனைத் திசை மாத்திக் கடலிலை இறக்கிடுவன். கவனமாக இருங்கோ சைக்கோ சார்.
என்றதும் சைக்கோ வாயை மூடிக் கொண்டிருக்கிறார்.

விமானம் பறந்து கொண்டிருக்க இருவரும் கண்ணை மூடுகிறார்கள். அப்போது படத்தின் முதலாவது பாடல் ஆரம்பிக்கிறது.
‘அடிப்பேன் திருப்பி அடிப்பேன்.. 
எனது புளுகால் சலங்கை ஆமிக்கு திருப்பி அடிப்பேன்
அடிப்பேன் திருப்பி அடிப்பேன்
எனது பேச்சால் உலகை அளப்பேன்....
இவ்வாறு பாடிக் கொண்டிருக்க விமானம் சலங்கை எனும் நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் இடத்தில் தரையிறங்குகிறது.

அபுகா ஜிபுகு குபுகா விமானத்திலிருந்து இறங்கி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு, கையில் உள்ள கடிகாரத்தை எடுத்து 19.05.2009 எனும் திகதியை மாற்றி, நாங்கள் எங்களிடம் உள்ள டைம் மிசின் மூலம் இப்போதிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் போகப் போகிறோம் என்று கூறியதும் படத்தின் காட்சிகள் அனைத்தும் மாறுகின்றன.

படத்தின் கதைப்படி நாயகர்கள் சைக்கோ, மற்றும் சீமான் அவர்கள் முள்ளிவாய்க்காலில் இருந்து இறுதி நேரத்தில் இறந்த ஒரு பெரியவரின் DNA அல்லது மரபணுவை எடுத்துக் கொண்டு மீண்டும் மகிழ் நாட்டிற்கு வருகிறார்கள். மகிழ் நாட்டில் உள்ள தமது ’வாய்ப்பேச்சு வீரம்’ எனும் ஆய்வு கூடத்தில் வைத்து மைக்ரோ பில்டர் கண்ணாடி (Micro Filter Glass) மூலம் ஒரு படைத் தலைவனையும், அவனுக்கு கீழே போராடும் வகையில் பல வீரர்களையும் சலங்கையில் உள்ள சிறுபான்மை இன மக்களுக்காக விடுதலை வேண்டிப் போராடும் வண்ணம் உருவாக்கிறார்கள். 

இவர்களால் உருவாக்கப்பட்ட இயந்திர மனிதர்கள் அனைவரும் இவர்களின் சொல்லினைக் கேட்டு, மீண்டும் ஒரு போர் வேண்டி சலங்கை நாட்டில்த் தரையிரங்கிப் போரினைத் தொடுக்கிறார்கள். இறுதியில் இந்த வாய்ச் சொல்லில் வீரர்களின் போலியான பேச்சினை நம்பி ஏமாந்து விட்டோமே எனும் உண்மையினை உணர்ந்தவர்களாக மீண்டும் தங்களை உருவாக்கியவர்களான கோமான், சைக்கோ ஆகியோரைத் தேடி வந்து கடித்துக் குதறுவதுடன் இப் படம் முடிவடைகிறது. இதுவே இப் படத்தின் கதையுமாகும்.

படத்தின் சிறப்பம்சமாக தேனிசை தென்னப்பாவின்
‘புலம் பெயர்ந்த மகிழர் நாங்கள் இருக்கிறோம்
எங்க பிள்ளைகளை படிக்க மட்டும் அனுப்புறோம்
போர் புரியும் உங்களுக்கு உதவுறோம்
நீங்கள் போரில் சாகையிலே வெற்றிக் கூத்தாடுறோம்.............
எனும் உணர்ச்சியான எழுச்சிப் பாடல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தில் பளிப் படிப்பை இடை நடுவில் கைவிட்டு விட்டு, பன்னிரண்டு வயதிலே போராடப் புறப்பட்ட இயந்திர மனிதர்கள், உணவுவோ உறக்கமோ இன்றி சளைக்காது போரிடும் காட்சி நிச்சயம் மனதை ஒரு கணம் உறையச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் அடுத்த கணமே தமது பிள்ளைகளைப் படிக்கவும், சொகுசு வாழ்க்கை வாழவும் அனுப்பி விட்டு, இக் கள முனையில் நிற்கும் இயந்திர மனிதர்களைப் பார்த்து ஒரு ’’சிலர் பேசும் காமெடி வசனங்கள் உங்களை மகிழ்வித்து விடும் வகையில் இயக்குனர் படத்தை நகர்த்தியிருக்கிறார்/ செதுக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

’அடியுங்கோ...அடியுங்கோ.. விடாமல் அடியுங்கோ..
முல்லைத்தீவிலே மாமியா.. எங்கடை தலைவருக்கே சவாலா...
என வசனங்கள் பேசுவதும்,
’’ஊரிலை சனம் செத்தால் தான் எங்களின் வீட்டு உணவு மேசையில் சப்பாடு விழும்!
இனியொரு வெற்றிச் செய்தி கேட்காமல்
வெளிநாட்டிலை இருந்து ஊருக்குப் போக மாட்டேன்...... என ஒரு சில வெளிநாட்டுத் தமிழர்களும் டயலாக் பேசி உணர்ச்சியினைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

படத்திற்குக் காமெடிக்குப் பஞ்சமே இல்லை எனும் வகையில் பிரபல காமெடி நடிகர் வருவாய் நிதி அவர்கள் நடித்திருக்கிறார்கள், வெளுத்துக் கட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய் நிதி அவர்கள் அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதும், பின்னர் உண்ணாவிரதம் ஆரம்பித்து ஒரு சில மணி நேரத்தினுள் ’’கழிப்பறைக்குப் போய் விட்டு வருகிறேன்’’ என்று புறப்பட்டு; மேடைக்குப் பின் புறத்தில் இருந்து ‘டாஸ்மாக் பியர்’ அருந்துவதும் பார்வையாளர்களின் வயிறுகளைப் புண்ணாக்கும் வகையில் சிரிப்பினை வர வழைக்கும் காட்சிகளாம்.

படத்தின் ஒரு காட்சியில் வருவாய் நிதியுடன் அடிக்கடி காட்சிகளில் தோன்றிய பாசா கைது செய்யப்பட்டவுடன், பாசாவை விடுவிக்கக் கோரி
’’சாகும் வரை உண்ணாவிரதத்தினை வருவாய் நிதி தொடங்குகிறார்.
உண்ணாவிரதம் தொடங்கி ஒரு சில மணி நேரத்தினுள்
’மக்களே... என்னுடைய சொல்லுக்குச் சத்திய அரசு இணங்கி விட்டது. நான் வழங்கப் போகும் தொகுதிகளை நம்பி, பாசாவை விடுதலை செய்ய, சத்திய அரசு இணங்கியதால்’ நான் இப்போதே இந்த உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன் எனச் சொல்லி மேடையில் இருந்து இறங்குகிறார். இத்தகைய காட்சிகள் படத்தில் வருவதால் பார்வையாளர்களின் கரகோசம், விசிலோசை முதலியவற்றால் தியேட்டர்களே அதிரப் போகுகிறது என்பது மட்டும் உண்மை.

படத்தில் கவர்ச்சிப் பாடல் போட வேண்டும் எனும் சைக்கோ சாரின் கூற்றுக்கு அமைவாக நடிகையினைத் தேடி அலைந்த இயக்குனர் கோமான் அவர்கள் இறுதியில் ஊழல் வழக்கில் கைதாகி,  ஜெயிலில் இருக்கும் நடிகையான பனி மொழியினைக் கவர்ச்சிப் பாடலில் நடிக்கச் செய்திருப்பது படத்திற்குப் பிளஸ் பொயின்ற்.

பனி மொழியுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள முன்னணி நடிகர்கள் பலரும் இப் படத்தில் தோன்றி நடனமாடியிருக்கிறார்கள் என்பது சிறப்பம்சம்.
உங்களுக்காக இப் பாடலினையும் இங்கே இணைத்துள்ளேன். நீங்களனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய பாடல் இது.

இந்தத் திரைப் படத்தினை ஆங்கிலத் திரைப்படங்களான Splice, Piranha முதலியவற்றைத் தழுவி எடுத்திருப்பது போலத் தோன்றினாலும், படத்தின் பின்னணிக் காட்சிகளில் நிஜமான, உயிரையே பணயம் வைத்து நடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், இப் படம் வேறு படங்களின் தழுவல் இல்லை என்பதையும் பார்வையாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பது இயக்குனரின் அபிப்பிராயம்.

நான்கு சுவருக்குள் இருந்த படி படத்தின் இசையினைப் பாசா அவர்கள் சிறப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார். இத் திரைப் படத்தினை, புதிய படங்களை வழமை போல நீங்களனைவரும் திருட்டு வீசிடியில் பார்த்து மகிழ்வது போலல்லாது தியேட்டரில் சென்று பார்த்து மகிழும் வகையில் 3D தொழில் நுட்பத்துடன் கூடிய வகையில் உருவாக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப் படத்தில் பல பஞ்சு வசனங்கள் இடம் பெற்றிருப்பதால், உலகின் முதல் தரப் படங்கள் அனைத்தையும் விட ‘மிக நீண்ட நாட்களுக்குத் தியேட்டர்களினை இப்படம் தக்க வைக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.
உலகின் திரையரங்குகளை நோக்கி எதிர்வரும் மேமாதம் வரத் தயாராகிறது மீண்டும் ஓர் ஈழப் போர்!
ஆகவே இப் படத்தினைப் பார்த்து விட்டு, உங்களின் விமர்சனங்களை எழுத அனைவரும் தயாராகுங்கள்.

14 Comments:

டக்கால்டி said...
Best Blogger Tips

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

டக்கால்டி said...
Best Blogger Tips

முதன்முதலில் பார்த்தேன்...

டக்கால்டி said...
Best Blogger Tips

இருங்க படிச்சுட்டு வரேன்

டக்கால்டி said...
Best Blogger Tips

இடுகையின் புனைவில் நகைச்சுவை இருப்பினும் உண்மையை நினைக்கும் போது சிரிக்க முடியவில்லை..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

’’என்ன கோமான் சார், உங்க பேச்சைக் கேட்டு ஆப் ஆன எஞ்சினே ஓர்க் பண்ணுது, ஆனால் ஏன் சார் பொட்டு வரும், பொட்டு வரும் என்று அடிக்கடி சொல்லுறீங்களே, அவர் இன்னும் வரல்லை?
‘யோ சும்மா வாயை மூடிக்கிட்டு இரய்யா. நானே மக்களை வைச்சுக் காமெடி பண்ணிக் கிட்டு இருக்கிறன். நீ வேற.. என்னைய வைச்சு காமெடி பண்ணப் பாக்கிறாய். பிளேனைத் திசை மாத்திக் கடலிலை இறக்கிடுவன். கவனமாக இருங்கோ சைக்கோ சார்.
என்றதும் சைக்கோ வாயை மூடிக் கொண்டிருக்கிறார்.

ஹா.....ஹா..... இது செம காமெடி நிரு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

‘கோமான் நீங்க அனல் பறக்கப் பேசினிங்க என்றால் பிளேன் பறந்திடும் என்கிறார்,

ஹி....... ஹி...... ஹி...... !

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

படத்தின் கதைப்படி நாயகர்கள் சைக்கோ, மற்றும் சீமான் அவர்கள் முள்ளிவாய்க்காலில் இருந்து இறுதி நேரத்தில் இறந்த ஒரு பெரியவரின் DNA அல்லது மரபணுவை எடுத்துக் கொண்டு மீண்டும் மகிழ் நாட்டிற்கு வருகிறார்கள். மகிழ் நாட்டில் உள்ள தமது ’வாய்ப்பேச்சு வீரம்’ எனும் ஆய்வு கூடத்தில் வைத்து மைக்ரோ பில்டர் கண்ணாடி (Micro Filter Glass) மூலம் ஒரு படைத் தலைவனையும், அவனுக்கு கீழே போராடும் வகையில் பல வீரர்களையும் சலங்கையில் உள்ள சிறுபான்மை இன மக்களுக்காக விடுதலை வேண்டிப் போராடும் வண்ணம் உருவாக்கிறார்கள்.

இவர்களால் உருவாக்கப்பட்ட இயந்திர மனிதர்கள் அனைவரும் இவர்களின் சொல்லினைக் கேட்டு, மீண்டும் ஒரு போர் வேண்டி சலங்கை நாட்டில்த் தரையிரங்கிப் போரினைத் தொடுக்கிறார்கள். இறுதியில் இந்த வாய்ச் சொல்லில் வீரர்களின் போலியான பேச்சினை நம்பி ஏமாந்து விட்டோமே எனும் உண்மையினை உணர்ந்தவர்களாக மீண்டும் தங்களை உருவாக்கியவர்களான கோமான், சைக்கோ ஆகியோரைத் தேடி வந்து கடித்துக் குதறுவதுடன் இப் படம் முடிவடைகிறது. இதுவே இப் படத்தின் கதையுமாகும்.

சூப்பர் கற்பனை நிரு! எவ்வளவு துணிச்சல் வேறு? கவனம் யாராவது அனானிமஸ் பேர்ல வந்தி திட்டப் போகிறார்கள்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

படத்தின் சிறப்பம்சமாக தேனிசை தென்னப்பாவின்
‘புலம் பெயர்ந்த மகிழர் நாங்கள் இருக்கிறோம்
எங்க பிள்ளைகளை படிக்க மட்டும் அனுப்புறோம்
போர் புரியும் உங்களுக்கு உதவுறோம்
நீங்கள் போரில் சாகையிலே வெற்றிக் கூத்தாடுறோம்.............
எனும் உணர்ச்சியான எழுச்சிப் பாடல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நச்! நெற்றியடி!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

’அடியுங்கோ...அடியுங்கோ.. விடாமல் அடியுங்கோ..
முல்லைத்தீவிலே மாமியா.. எங்கடை தலைவருக்கே சவாலா...
என வசனங்கள் பேசுவதும்,
’’ஊரிலை சனம் செத்தால் தான் எங்களின் வீட்டு உணவு மேசையில் சப்பாடு விழும்!
இனியொரு வெற்றிச் செய்தி கேட்காமல்
வெளிநாட்டிலை இருந்து ஊருக்குப் போக மாட்டேன்...... என ஒரு சில வெளிநாட்டுத் தமிழர்களும் டயலாக் பேசி உணர்ச்சியினைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

ஒருபுறம் சிரிப்பாகவும், மறுபுறம் கடுப்பாகவும் இருக்கும் யதார்த்தத்தை நினைக்கும் போது!

ரேவா said...
Best Blogger Tips

மங்களவர் கூட்டுத் தாபனத்தின் தயாரிப்பில், கோமான், சைக்கோ, மற்றும், வருவாய்நிதி, பனிமொழி முதலிய முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பிலும், ஸ்பெக்ரம் விருது புகழ் பாசாவின் இசையிலும் திரைக்குவரத் தயாராகிறது இந்தப் படம்...

படமெல்லாம் சரி தான் ஆனா வியாபார ரீதியா வெற்றி பெறுமா நிரூபன் (ஹி ஹி ).

‘புலம் பெயர்ந்த மகிழர் நாங்கள் இருக்கிறோம்
எங்க பிள்ளைகளை படிக்க மட்டும் அனுப்புறோம்
போர் புரியும் உங்களுக்கு உதவுறோம்
நீங்கள் போரில் சாகையிலே வெற்றிக் கூத்தாடுறோம்.............

படத்தின் ஒரு காட்சியில் வருவாய் நிதியுடன் அடிக்கடி காட்சிகளில் தோன்றிய பாசா கைது செய்யப்பட்டவுடன், பாசாவை விடுவிக்கக் கோரி
’’சாகும் வரை உண்ணாவிரதத்தினை வருவாய் நிதி தொடங்குகிறார்.
உண்ணாவிரதம் தொடங்கி ஒரு சில மணி நேரத்தினுள்
’மக்களே... என்னுடைய சொல்லுக்குச் சத்திய அரசு இணங்கி விட்டது. நான் வழங்கப் போகும் தொகுதிகளை நம்பி, பாசாவை விடுதலை செய்ய, சத்திய அரசு இணங்கியதால்’ நான் இப்போதே இந்த உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன் எனச் சொல்லி மேடையில் இருந்து இறங்குகிறார்.
நெத்தியடி.........

நிரூபன், ரஜீவன் சொன்ன மாதிரி உங்களுக்கு துணிச்சல் அதிகம் தான்... ஆனாலும் உங்கள் பதிவில் உண்மையை யாவரும் அறிவோம்... இருந்தும் என்ன செய்ய...நெத்தியடி பதிவு... தொடர வாழ்த்துக்கள்...

நிலாமகள் said...
Best Blogger Tips

சம்பந்தப் பட்டவர்களை நெளிய வைக்கும் பதிவு... பெருகிவரும் நகையடியில் உறைந்திருக்கும் துயரம் அசைத்துப் பார்க்கிறது மனிதத்தை.

ஹேமா said...
Best Blogger Tips

நேத்து இரவே படிச்சிட்டேன்.எனக்கே மனசில ஒரு சின்னதா பயம்.
ரொம்பத்தான் துணிச்சல் தம்பிக்கு.ஆராச்சும் டின் கட்டப்போறாங்கள்.கவனம் !

நிரூபன் said...
Best Blogger Tips

டக்கால்டி said...//
முதன்முதலில் பார்த்தேன்..//

என்ன காதல் வந்ததோ?

//டக்கால்டி said...
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்//

டக்கால்டி said...
இடுகையின் புனைவில் நகைச்சுவை இருப்பினும் உண்மையை நினைக்கும் போது சிரிக்க முடியவில்லை..//

நன்றிகள் சகோதரம்.

Sathish Murugan . said...
Best Blogger Tips

மன்னிக்கணும் நிரூபன் அண்ணா, உங்களின் பகடிக்கு என் எதிர்ப்பு... சற்றேனும் இந்தியாவில் உங்களுக்கு (ஈழ தமிழர்களுக்கு) குரல் கொடுக்க இருக்கும் ஒரே அரசியல் கட்சி தலைவர் வைகோ மட்டுமே. உங்களின் விரக்திதான் வார்த்தையில் என்று ஆறுதல்தான் அடைய முடியும் என்னால்...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails