Tuesday, March 8, 2011

மகளிர் தினம் கொண்டாட வேண்டுமா?

வணக்கம் உறவுகளே, அன்பு நெஞ்சங்களே, மகளிர் தினம் என உலகெல்லாம் சிறப்பிக்கப்படு இந் நன் நாளில் ஒரு விவகாரமான விடயத்துடன் உங்களைச் சந்திக்கலாம் என நினைக்கிறேன்

பெண்கள்- காப்பியங்களின் பாடு பொருளாகவும், வரலாறுகளின் தோற்றத்தின் மூலாதாரங்களாகவும், பல போர்களுக்கும், பல சர்ச்சைகளுக்கும், பல நாடுகளின் அழிவுகளுக்கும், எங்களைப் போன்ற மனிதர்களின் தோற்றத்திற்கும், உயிரினங்களின் பிறப்பிற்கும் அத்திவாரமாக அமைந்துள்ளார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.பெண்கள் எம் தேசத்தின் கண்கள் என்றும், புதுமைப் பெண்கள் புரட்சியின் கண்கள் எனவும், ‘நாணும் அச்சமும் நாய் கட்கு வேண்டுமாம், ஞான நல்லறம், வீர சுதந்திரம், பேணு நற்குடி பெண்களின் குணங்களாம் என்றும் கவிஞர்களால் பெண்கள் காலந் தோறும் சிறப்பிக்கப்படிருக்கிறார்கள்.

அன்னையர் தினம், மகளிர் தினம்- இவையெல்லாம் காலதி காலம் தொட்டு பெண்களுக்காக, பெண்களின் பெருமைகளை விளக்கும் வண்ணம் கொண்டாடப்பட்டு வருகின்றன.  ஆண்களுக்கு இப்படி ஏதாவது தினங்கள் உலகினில் உண்டா?  உலகில் சமீப காலமாகத் தான் தந்தையர் தினம் எனும் ஆண்களுக்கான ஒரு நினைவு கூரல் நாள் அறிமுகப்படுத்தப்படு பிரபலமாகி வருகின்றது. எங்கள் நாட்டைப் பொறுத்தவரை ஆண்களின் நிலை என்ன? ஆண்கள் எத்தகைய கண் கொண்டு சமூகத்தால் நோக்கப்படுகிறார்கள்?

ஈழத்தைப் பொறுத்தவரை அடக்கி ஒடுங்கிப் போயிருந்த பெண்கள்- சிறிமாவோ பண்டாரநாயக்கா, மற்றும் மாலதி முதலியோரின் முற்போக்கு, அல்லது சமூகத் தடைகளை உடைத்தெறியும் எண்ணங்களால் உடைத்தெறியப் பட்டு முன்னேற்றப் பாதை நோக்கிச் சென்றாலும் சம உரிமை எனும் வகையில் உற்று நோக்கும் போது சம உரிமை இல்லாதவர்களாகவே காணப்படுகிறார்கள்.

ஈழத்தில் போராட்ட காலப் பகுதியில் தான் தமிழ் பெண்களின் வாழ்வியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன, அவர்கள் மீதிருந்த சமூகத்தின் மூட நம்பிக்கைகள் களைந்தெறியப்பட்டிருந்தன. ஆனாலும் இற்றை வரை ஈழத்தில் வாழும் எல்லாப் பெண்களும் சுதந்திரமானவர்களாகவோ, ஆணுக்குப் பெண் சரி நிகர் சமமானவர்களாகவோ வாழவில்லை என்பதே எனது கருத்து.

சுதந்திர இந்தியாவில் பெரு நகரங்களைத் தவிர்த்துப் பார்த்தால், ஏனைய சிறு கிராமங்களில் மகளிர் தினம் கொண்டாடப்படும் இந் நன் நாளிலும் பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரங்களாகவும்,  நுகரப் படும் பழங்காளாகவும், கணவனால் அடிமைப்படுத்தப்படும் அடிமைகளாகவும், மூட நம்பிக்கைகள் ஊடாக முடங்கிப் போயிருக்கும் ஓர் ஜீவனாகவுமே பெண்கள் இன்றும் காணப்படுகிறார்கள்.

சினிமாவில் ஆணுக்குப் பெண் சரி சமமாக காட்டப்படுகிறார்களா? இல்லைத் தானே?
‘எந்தவொரு ஆண் மகனாவது தன் ‘நெஞ்சு மயிர் தெரிய அரை குறையாக இருப்பதை, ஆடை குறைத்துக் காட்டுவதை சினிமா காட்டுகிறதா அல்லது இத்தகைய காட்சிகளைப் பெண்கள் விரும்பிப் பார்க்கிறார்களா?
இல்லைத் தானே எவ்வளவு தான், மகளிர் விடுதலை, மகளிர் தினம் என நாங்கள் வாய் கிழியக் கத்தினாலும் நாம் கொடுக்கும் பணத்தினையும், ரசிகர்கள் படத்திற்கு கொடுக்கும் வரவேற்பின் அடிப்படையிலும் தானே நடிகைகளின் கவர்ச்சியும் அதிகரித்துக் கொண்டு போகிறது.

ஆகவே சினிமாவில் கூட இயக்குனர் எனும் ஒரு நபரினூடாக மக்களாகிய நாங்கள், பணத்தினை வீசியெறிந்து நடிகையின் பொக்குள், முதல் முன்னழகு, பின்னழகு வரையான அனைத்தையும் ரசிக்கிறோம், பார்த்து மகிழ்கிறோம். ஆக இங்கேயும் பெண்கள் அடிமைப் பொருள்கள் தானே அல்லது வியாபாரப் பொருள்கள் தானே?

ஈழத்தின் நடுத்தர வர்க்க பொருளாதார (Middle Class) வகுப்பினரிடையேயும் சரி, இந்தியாவின் கிராமப் புற, நடுத்தர வர்க்க மக்கள் வாழும் பிரிவினரிடையேயும் சரி பெண்களிற்கு முற்று முழுதாக விடுதலை கிடைக்கவில்லை என்றே கூறலாம். மேலை நாடுகளைப் போன்று பெண்கள் வாழ்க்கை நிலை உயரவில்லை என்பதே எனது கருத்து.

அடிமைகளாகவும், ஆண்களின் சுக ஊக்கிகளாகவும், சமூகத்தில் ஆணுக்குப் பின்னர் தான் பெண்களின் கருத்துக்கள் எடுபடும் எனும் கோட்பாட்டில் வாழ்வோராகவும் இப் பெண்கள் இருக்கும் நிலையில் நாங்கள் இன்று என்ன செய்கிறோம்?
மகளிர் தினம் என மனம் விட்டு பதிவெழுதுகிறோம்.

காலாதி காலமாக சமைத்துப் போடுவதும், வீட்டு வேலைகள் செய்வதும், அடுப்படியில் முடங்கியிருப்பதும் தான் பெண்களின் வேலைகளா? இத்தகைய பெண்கள் பற்றி எமது கருத்துக்கள் என்ன?

மகளிர் தினம் இன்றைய நாளில் கொண்டாடினாலும், மேற் கூறப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் வாழ்வினை வளம்படுத்த, இந்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தி அவர்களுக்கும் நல்ல தொரு எதிர்காலத்தை உருவாக்க வலைப் பதிவர்களால் முடியுமா?

கிராமம் தோறும் அடிமைச் சின்னமாக தெரிந்தோ, தெரியாமலோ உபயோகப்படுத்தப்படும் பெண்கள் மத்தியில் எந்த வகையில் விழிப்புணர்வினை ஏற்படுத்தலாம்?
இவை நான் உங்கள் முன் வைக்கின்ற கேள்விகள். பதில் தெரிந்தால் யாராவது சொல்லுங்கோ.

14 Comments:

ஹேமா said...
Best Blogger Tips

இப்பவெல்லாம் பெண்கள் முன்னைப்போல இல்லை நிரூபன்.கிராமப்புறங்களிகூட பெண்களின் முன்னேற்றம் கூடுதலாகவே இருக்கு.ஈழத்திலும் அப்படியே !

”எழுதுகிறேன் ஒரு கடிதம்” எனக்கும் மிக மிகப் பிடித்த பாடல்.ரசித்தேன் !

எல் கே said...
Best Blogger Tips

பற்பல கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். பார்ப்போம் யாரவது பதில் சொல்கிறீர்களா என்று

Chitra said...
Best Blogger Tips

"கண்ணின் மணியே..." பாடலை இப்பொழுதுதான் முதன் முறை பார்க்கிறேன். தமிழ்நாட்டு பெண்களின் நிலையை நல்லா சொல்லி இருக்காங்க .... அதை சரியான நேரத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க... உங்கள் பதிவிலும், சிந்திக்க நிறைய கருத்துக்களை தந்து இருக்கீங்க.

Unknown said...
Best Blogger Tips

மகளிர் தினத்துக்கு பதிவு போட்டாச்சு...ம்ம்
நல்லா எழுதிறீங்க பாஸ் கட்டுரைகள்...

ஆனந்தி.. said...
Best Blogger Tips

//அடிமைகளாகவும், ஆண்களின் சுக ஊக்கிகளாகவும், சமூகத்தில் ஆணுக்குப் பின்னர் தான் பெண்களின் கருத்துக்கள் எடுபடும் எனும் கோட்பாட்டில் வாழ்வோராகவும் இப் பெண்கள் இருக்கும் நிலையில் நாங்கள் இன்று என்ன செய்கிறோம்?
மகளிர் தினம் என மனம் விட்டு பதிவெழுதுகிறோம்.//

mm...:(

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
Anonymous said...
Best Blogger Tips

கடந்த இரு தசாப்தங்களுடன் ஒப்புடுகையில் பாரிய மாற்றம் ஈழ பெண்கள் இடத்தில் இருக்கிறது.அன்று பலருக்கு கல்வி உரிமையே மறுக்கப்பட்டிருந்தது. இன்று நிலைமை மாறிக்கொண்டு இருக்கிறது. முற்றாக மாறுமா என்பது கேள்விக்குறியே. அத்தோடு நீங்கள் சொன்னது போல சினிமாவை பொறுத்த வரை பெண்கள் போகப்பொருள்கள் மட்டுமே. பல நாட்க்களுக்கு பிறகு ஒரு சிறந்த பாடலை கேட்ட திருப்தி...நன்றி நிரூபன்.உங்களிடம் இருந்து சமூகம் சார்பாக அதிகம் எதிர்பார்க்கிறோம் தொடருங்கள் ...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

//எந்தவொரு ஆண் மகனாவது தன் ‘நெஞ்சு மயிர் தெரிய அரை குறையாக இருப்பதை, ஆடை குறைத்துக் காட்டுவதை சினிமா காட்டுகிறதா//

நம்ம கவுண்டமணி எல்லா படத்துலயும் நெஞ்சி முடிய காட்டிட்டுதான் திரியுறார்.....

இருந்தாலும் பெண்கள் நிலை மாற்ற பட வேண்டும் என்ற உங்க எழுத்துக்கு ஒரு சல்யூட்...

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

பெண்கள் நிலை மாற்ற பட வேண்டும் என்ற உங்கள் கருத்துக்கு ஒரு சல்யூட்...

சிவகுமாரன் said...
Best Blogger Tips

மகளிர் தினம் வேண்டுமா வேண்டாமா என்று நாம் பதில் சொல்வது சரியாகாது.பெண் வலைப்பதிவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நாம் துணை நிற்கலாம்

Unknown said...
Best Blogger Tips

பெண்களின் நிலை பற்றிய உங்களின் பதிவு யதார்த்தமாக இருக்கிறது.
.
ஆனாலும் கூட மகளிர் தினம் குறித்து எதிர்மறையான பதிவுகள் நிறைய படிக்க நேர்ந்தது.

ஒரு சில பெண்களின் நடவடிக்கைகளை வைத்து, பெண்கள் அனைவரும் உரிமை பெற்றதால் எல்லை மீறுகிறார்கள் என்று சொல்லவும் முடியாது. இன்னும் அடித்தட்டில் சிக்கிக்கிடப்பவர்கள் ஏராளம்.

Unknown said...
Best Blogger Tips

மகளிர் தினம் என்பது வெறும் சம்பிரதாய நிகழ்வாக இருக்காமல், பெண்களுக்கு உணர்வூட்டக்கூடிய நிகழ்வாக இருக்க வேண்டும்.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நல்ல பதிவு பாஸ்

விச்சு said...
Best Blogger Tips

முன்பைவிட பெண்கள் இப்போது எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளனர். உதாரணமாக ஆசிரியர்கள் கூட்டங்களில் இப்போது பார்த்தால் அதிகம் காணப்படுவது பெண்கள்தான். ஆண்களின் எண்ணிக்கை அருகிவிட்டது.எழுதுகிறேன் ஒரு கடிதம் பாடல் எனக்கும் பிடிக்கும்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails