Saturday, August 31, 2013

!!க(கொ)லைஞர் டீவியும் கம்பியூட்டர் கஸ்மாலமும்!!

உலகத் தமிழர்களுக்கான ஒரு பொதுவான தொலைக்காட்சியினை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் திரு கஸ்மாலம் அவர்களின் தனித்துவமான முயற்சியில் உருவாக்கப்பட்டது தான் கும்ஸ்கா டீவி. கும்ஸ்கா டீவியில் பல்சுவையான, மக்களைக் கவரும் நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டு வந்தாலும், அவை மக்கள் மனங்களில் ஏகோபித்த வரவேற்பினைப் பெறாத காரணத்தினால், கும்ஸ்கா டீவியின் ஓனர் கஸ்மாலம் அவர்கள் தொழில்நுட்பத் தகவல்களைப் பகிரும் நோக்கில் கம்பியூட்டர் மற்றும் நவீன தொழில் நுட்பங்களோடு சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றினை ஆரம்பிக்கின்றார்.
இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

Friday, August 30, 2013

பதிவுலகில் சர்ச்சையை கிளப்பப் போகும் பதிவர் சந்திப்பு

வணக்கம் பாசத்திற்கும், நேசத்திற்கும் உரிய உறவுகளே, 
உலகின் ஓர் மூலையில் இருந்து, நானும் இச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லையே எனும் கவலையோடு மிகவும் பிரமாண்டமாக எழுத்துலகால் எதையும் சாதிக்கலாம் எனும் உத்வேகத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது பதிவர் சந்திப்பு சிறக்க சிறியேனின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பதிவர் சந்திப்பை முன்னிட்டு, பொங்கிப் படைத்து சுற்றத்தாரோடு உணவுகள் பரிமாறி உண்ட பின்னர்; பதிவர்கள் அனைவரும் இணைந்து, தமிழகத்தில் கலைகளுக்குப் புகழ் பெற்ற மதுரை மாநகரில் கவியரங்கம் ஒன்றினை ஒழுங்கமைத்திருந்தார்கள். கவியரங்கத்தினை திரு.பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும், திரு.யோகா(Yoga.S.FR) அவர்களும், திருமதி ஏஞ்சலின் அவர்களும் தலமையேற்று நடாத்தியிருந்தார்கள். பல ஆயிரம் பதிவர்கள் போட்டி போட்டு இக் கவியரங்கில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்த முண்டியடித்த போதும், குறிப்பிட்ட சில பதிவர்களை மாத்திரம் தான் இக் கவியரங்கில் இணைத்துக் கொள்ள முடிந்தது. நேரம் போதாமையே இதற்கான காரணம் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தார்கள். வாருங்கள்! கவியரங்கினுள் நுழைவோம்.

மதம் பரப்பும் பதிவுலக மத வெறியர்கள் அடங்கமாட்டார்களா?


எச்சரிக்கை : இது ஓர் பொதுவான பதிவு! இங்கே எந்த ஓர் மதத்தையோ, மதவாதிகளையோ தனியாக பெயர் சுட்டி ஓர் வசனம் கூட எழுதப்படவில்லை!

நீண்ட இடை வேளைக்குப் பின்னர் பதிவுலகப் பக்கம் வந்து பார்த்தால் பல மாற்றங்கள். பதிவர் சந்திப்பு தொடர்பான சந்தோசமான விடயங்கள் என பல மாற்றங்களை அன்றாடம் ஒவ்வோர் பதிவுகளின் ஊடாகவும் காணக் கூடியதாக இருந்தது. அட, பதிவுலகில் மதம் பரப்பும் நடவடிக்கைகளில் இருந்தவங்க எல்லோரும் திருந்திட்டார்கள் என நிம்மதிப் பெரு மூச்சி விட்டேனுங்க. ஆனால் பாருங்க ஒரு கொடூரமான நிகழ்வு. இன்னமும் நாம் மாற மாட்டோம் என அடம் பிடித்து, வலிந்து திணித்து மதம் பரப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றார்கள் இந்த கொடியவர்கள் என்பதை நினைக்கையில் சிரிப்பாக இருக்கிறது! 

Thursday, August 29, 2013

ஆ(மூ)பாசப் பதிவர் நிரூபனை அடியோடு விரட்டுவோம்!!

வாருங்க வலையுலக மக்களே,  பதிவுலகில் யாரோ நிரூபன் என்று ஒரு பய புள்ளை இருக்காராம். அவருக்கு எதிராக தான் இந்த பதிவு அப்படீன்னு எழுத ஆரம்பிச்சிருக்கேன்! அட என்ன மேல பார்க்கிறீங்க. ஆமாங்க நீங்கள் இங்கே வந்திருப்பது நிரூபனின் நாற்று தளம் தான்! ஆனால் ஒரு விசயம் என்னவென்றால், அடிக்கடி நிரூபன் தன் பேரை மாற்றிக்கிறார். ஆமாங்க நானே தான் நிரூபன் பேசுறேனுங்க! ஒரு பதிவு ஹிட் ஆகனும் என்றால், இப்படி ஏதாச்சும் ஒரு பதிவர் பேரை வைச்சு தீயை பத்த வைச்சாலே போதும். பதிவு பத்திக்கும்! இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

மனந் திறக்கிறார் பிந்து மாதவி - முகம் சுழிக்கிறார் மீடியாக்காரர்

மீடியாக்காரர்களுக்கு வேறு வேலையே கிடையாதுங்க எனக் கோபத்தில் தன் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார் பிந்து மாதவி! தனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் அது என்று வரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை எனச் சொல்லியிருக்கிறார். 

Wednesday, August 28, 2013

பட்டய கெளப்ப போகும் பதிவர் மதிசுதாவின் படம்!

போருக்குள் வாழ்ந்த ஒரு சமூகத்திலிருந்து தன் வாழ்க்கையோடு போராடி ஓர் சமூகத்தில் சாதித்துக் காட்டியோர் பலர் உள்ளார்கள் என்றால், அந்தப் பலரினுள் ஒருவராக நம்ம பதிவர் மதிசுதாவும் வந்து கொள்வார். தென் இந்தியா சினிமா வரைக்கும் சுடு சோறு என்ற வன்னி வார்த்தையை கொண்டு சென்று சேர்த்தவர் நம்ம சுதா என்றால் மிகையாகாது. அத்தி பூத்தாற் போல இலங்கையைப் பொறுத்தவரை குறும்படங்களும், முழு நீளத் திரைப் படங்களும் அவ்வப்போது தலை காட்டுவது உண்டு! 

முனி வேசம் போடும் அஞ்சலி

ஆடலரசி ஜெயலலிதா - பாடலரசன் கருணாநிதி - லிவ்விங் டாக்கீஸ்

ஆடலரசி ஜெயலலிதா! 

நடனத்தில் ஓர் காலத்தில் தாரகை
நம் எம்ஜி ஆர் கூட வந்திடுவார் மேனகை - இன்றோ
தமிழரை வைத்து அரசியல் நடனமாடுவதில்
அம்மா ஓர் அரசியல் ஆடலரசி
அவர் செய்கையால் நாமோ
செய்வதறியாத பாவ ஜீவன்களாய்!

இருபதே நாட்களில் இங்கிலீஷில் தேறலாம்

ஆங்கிலம் என்றால் நம்மில் அதிகளவானோருக்கு ஓர் இனம் புரியாத கசப்புணர்வு ஏற்படும். சிலரைப் பார்த்தால் ஆங்கில மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக எழுத்து, வாசிப்பு ஆகிய துறைகளில் நன்றாக வெளுத்து கட்டுவார்கள். ஆனால் பேசும் போது பம்மிடுவாங்க. இன்னும் சிலரைப் பார்க்கையில் நம்மில் சிலருக்கு "அடடா இவனு ரொம்ப நல்லா இங்கிலீசு பேசுறானே...நம்மால முடியலையே" என்கிற தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இன்னும் சிலர் என்னா பண்ணுவாங்க என்றால் நம்ம டீவி, ரேடியோக்களில் புரோக்கிராம் பண்றவங்க மாதிரி ஒரு வசனம் பேசும் போது மூனு தமிழ்ச் சொற்களையும், நாலு ஆங்கிலச் சொற்களையும் கலந்து கட்டிப் பேசுவாங்க. இவங்க பேசும் இங்கிபீசைக் கேட்டால் நம்மளுக்கு இருக்கிற ஆங்கில அறிவும் பறந்தோடிப் போயிடுமுங்க.

இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

Tuesday, August 27, 2013

இறுதிக் காலத்தில் கலைஞர் - கவலையுறும் தொண்டர்கள்?


85 ப்ளஸ் வயதில் ஒரு மனிதனால் ஓர் சமூகத்தின், ஒரு மாநிலத்தின் தலை விதியைத் தீர்மானிக்க முடியும் என்றால் அதற்கான சிறந்த எடுத்துக் காட்டு கலைஞர் ஜி! மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் விதமான ஆசை இருக்கும். ஆனால் பொன் ஆசை ஒரு மனிதனுக்கு இருந்தால் பொன் பொருளை அள்ளிக் கொடுத்து அந்த ஆசையை விரட்டிடலாம். பெண் ஆசை இருந்தால், அதுவும் அவனுக்குப் பெண்கள் பற்றிய தெளிவு வருகின்ற போது இல்லாது போய் விடும். ஆனால் ஒரு மனுஷனுக்கு மண்ணாசை இருந்தால் என்னா பண்ண முடியும்? எப்படியுங்க விரட்ட முடியும்? 

அட பேஸ்புக்கில் லவ் பண்ணுவது இப்படியா?

இன்றைய காலத்தில் முகம் பார்த்து காதல் செய்யும் காதலர்களை விட முகம் பாராமல் காதலிப்போர் தான் அதிகம் என்று சொல்லலாம்! இதற்கு எல்லாம் காரணம் சாட்டிங் ரூம்களும், பேஸ்புக்கும் தான்! பேஸ்புக்கில் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்று தொடர்ச்சியாகப் பார்த்து வருகின்றோம். பேஸ்புக்கில் நல்ல நண்பர்களைத் தேடலாம். அரட்டையடிக்கலாம். பொழுது போக்கிற்கு குறைவின்றி கும்மியடிக்கலாம். பேஸ்புக்கில் நீங்கள் முகம் பார்க்காமல் லவ் பண்றீங்க, உங்களுக்கும் எதிரிபாலார் மீது காதல் தொற்றி விட்டது என்றால் நீங்கள் படு குழியில் விழுகிறீர்கள் என்று அர்த்தமாம்! இது நம்ம சுவாமிஜி பேஸ்புக்கானந்தா சொல்லியது! 

Monday, August 26, 2013

கள்ளக் காதலில் சிவகார்த்திகேயன் - இது உண்மையா / பொய்யா?

அது , இது , எது என சின்னத் திரையில்ஆரம்பித்து, திரைத் துறையில் தற்போது ஜமாய்த்து வருபவர் தான் சிவகார்த்திகேயன்! கேடி பில்லா கில்லாடி ரங்காவில் நடித்த பிந்து மாதவியுடன் கிசு கிசுவில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகிருக்கிறது. பொதுவாக திரையுலகப் பிரபலவங்கள் வாழ்வில் கிசு கிசுக்கள் வருவது இயல்பு. ஆனால் ஏற்கனவே மாமன் மகளை மணமுடித்து இல்லற பந்தத்தில் இணைந்துள்ள சிவகார்த்திகேயன் வாழ்வில் இப்படி ஒரு நிலமை ஏற்பட்டிருப்பதானது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

கலைஞரின் கலர் டீவியில் ஜெயாவின் கவர்ச்சிப் படம் - ரீமேக்

டெசோவென்றும், ஈழ விசுவாசமென்றும்
வயது போன வேளையில் ஐயா
என்னவென்னவோ உளறித் தான் பார்க்கிறார்
உஷா பேன் - கிரைண்டர் மிக்ஸி இதெல்லாம்
இலவசமாய் அள்ளி விட்டும் பார்த்தார்
ம்....ம்ம் யாருமே கண்டுக்கலை
அவருக்கு இனியும் வெற்றி கிடைக்கும் என
இப்போது வரை நம்பிடவும் யாரும் தயாரில்லை!

இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

Sunday, August 25, 2013

அட சே! பேஸ்புக்கிலும் இப்படியா?

வணக்கம் நண்பர்ஸ், பேஸ்புக்கில் என்னவெல்லாம் பண்ணலாம் என்று யோசிக்கிறீர்களா? பணம் சம்பாதிக்கலாம். நல்ல நண்பர்களைக் கண்டு பிடிக்கலாம். ஏன் நண்பிகளை, காதலன், காதலிகளைக் கூட நமக்கு ஏத்த மாதிரி தேடிக்கலாம். இவை எல்லாவற்றையும் விட, நாம நம்ம பதிவுகளை பலரிடம் கொண்டு செல்லலாம். பேஸ்புக்கில் செம பிரபலமா இருக்கும் பதிவர்கள் அப்படீன்னு பார்தமுன்னா, நம்ம ஈரோடு கதிர் , விக்கியுலகம் வெங்கட் குமார், மைந்தன் சிவா, நாஞ்சில் மனோ, இந்திரா, செல்வி ஆகியோர், இவங்க போஸ்ட் போட்டாலும் சரி காலை வணக்கம் சொன்னாலும் சரி 100+ லைக் குறுகிய நேரத்தினுள் வரும் அப்படீங்கிறது கேரண்டி! 

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்ஸே?

கோத்தபாய ராஜபக்ஸ: அண்ணா! உலகெல்லாம் வாழும் தமிழர்களோ உங்களை போர்க் குற்றவாளி என்று சொல்லி அசிங்கப்படுத்துறாங்க. ஆனா உங்க காலடிக்கு கீழே இருக்கும் தெமிழங்களோ நீங்க நல்லவன்னு சொல்லி பெருமைப்படுறாங்களே! ஏன் இவங்க மட்டும் இப்படி இருக்காங்க?
மகிந்த ராஜபக்ஸ: தம்பியே! அதுகள் நாய்கள்! நான் போடும் எலும்புத் துண்டிற்கு வாலாட்டுவது தானே அவர்களின் வழக்கம்! அவர்கள் குணத்தினை மாற்றவா முடியும்?

அந்த பதிவரின் மனைவிக்கு பெயர் ஹி(க)ட்டழகியா? பதிவுலகம் அதிர்ச்சி!

ஜாலினோ ஜிம்கானா காமெடி ஜிம்மி!

பதிவுலக நகைச்சுவை இளவல் சாம் ஆன்டர்சனும், சா(தா)தா பதிவரும் பேசிக்கிறாங்க
சாம் ஆன்டர்சன்: ஏலேய் தாதா பதிவரு, ஒனக்கு விசயம் தெரியுமா? அந்தப் பதிவரோட மனைவிக்கு ஏன் ஹிட்டழகின்னு பேரை மாத்தி வைச்சிருக்காங்க?
சா(தா)தா பதிவர்: தெரியலைங்க. நான் பதிவுலகிற்கு புதுசில்லே!
சாம் ஆன்டர்சன்: அடப் போய்யா, ஹிட்டு பதிவு போட முன்னாடி சுட்டுப் போடுற பதிவுகளை அவங்க வூட்டுக்காரம்மா தான் கரெக்சன் பார்த்து கம்புசூட்டரில ஏத்தி கொடுப்பாங்களாம். அதற்கு பரிகாரமா பொண்டாட்டி பேரை மாத்திப்புட்டாரு.

Saturday, August 24, 2013

விஷால் வாங்கிய மதகஜ ராஜா

ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்து, சுந்தர்.சியின் இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி இணைந்து நடித்த படம் மதகஜராஜா. இந்த படத்தில் விஜய் ஆண்டனி இசையில் பாடலொன்றையும் பாடியுள்ளார் விஷால்.
இப்போது இந்த படம் ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்கு ஏற்ப்பட்ட பைனான்ஸ் பிரச்னையால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதனால் நீண்ட நாளாக அப்படியே இருக்கிறது மதகஜராஜா.

ஈழ மகன் இன்னும் இறக்கவில்லை

எல்லோருக்கும் இனிய காலை வணக்கம், எல்லோரும் இன்றைய பயிற்சிக்கு ரெடியோ? என்ன கடைசி வரிசையில ஒராள் குறைகிற மாதிரி இருக்கு. ஓ...செந்தோழன் இன்னும் ட்ரெயினிங்கிற்கு வரவில்லையே! ஓக்கே நீங்கள் எல்லோரும் ஒரு ஐஞ்சு நிமிசம் துள்ளத் தொடங்குங்கோ. நான் செந்தோழனைப் போய்க் கூட்டி வாரேன்" என்று சொல்லியவாறு ட்ரெயினிங் மாஸ்டர் புரட்சி வேகமாக தன் வேஸினுள்(போராளிகள் முகாம்) போய் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த செந்தோழனைத் தட்டி எழுப்புகிறார்.

Friday, August 23, 2013

ஆபாச வெறி கொண்டலையும் டமிலர்கள்!

அன்பிற்குரிய சொந்தங்களே.. எல்லோரும் நல்லா இருக்கீங்களா?
உங்க எல்லோருக்கும் அட்வைசு செஞ்சு எழுதுமளவிற்கு நான் ஒன்னும் அப்பாடக்கர் இல்லைங்க. என் மனசில பட்ட சில விசயங்களை உங்க கூட பகிர்ந்துக்கலாம் எனும் நோக்கில் இந்தப் பதிவினை எழுதுகின்றேன். வாங்க பதிவுக்கு போகலாம். எம் தமிழர்களிற்கு என சில தனித்துவமான இயல்புகள் உள்ளன. அவ் இயல்புகள் உலகினில் வாழும் ஏனைய இன மக்களுக்கு இல்லாத தனித்துவ இயல்புகள் என்றும் கூட சொல்லிக்கலாமுங்க. 

ஆபாச பட ஆசையால் அவமானப்பட்ட பதிவர் - உண்மைம் சம்பவம்

பாய அறிவிப்பு: இந்தப் பதிவு கலாச்சார காவலர்களுக்கும், சிறுவர்களுக்கும் உகந்ததல்ல. முகம் சுளிக்கும் விடயங்கள் நிரம்பியுள்ள இப் பதிவினைப் பிடிக்காதோர் முன்னெச்சரிக்கையாகத் தவிர்ப்பது நல்லது.

ஒவ்வோர் மனிதனது மனங்களுக்குள்ளும் வித்தியாசமான ஆசா பாசங்கள் வெவ்வேறு உருவில் மெது மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும். சமூகத்தின் முன்னால் என்னை நல்லவன் என்று எடை போட்டுக் காட்டும் வகையில் நான் ரொம்ப நல்லவன் இல்லைங்க. பல பேர் தாம் நல்லவர்கள் என்று சொல்லித் திரை மறைவில் தில்லு முல்லு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் இக் காலத்தில்; வெளிப்படையாகவே சொல்லிடுறேன் நான் ரொம்ப நல்லவன் இல்லைங்க. ஹி.....ஹி.....

ஊதிப் பருத்த ஊர்மிளா - ஒன் ஒடம்பு சைஸிற்கு இது தேவையா?

தூர இடப் பயணங்களிற்கு எல்லோரும் இரவு ரயிலினைத் தான் தெரிவு செய்வார்கள். நானும் அலுவலகப் பணி நிமித்தம் தலை நகருக்குச் செல்லும் நோக்கோடு ஒரு நாள் இரவு ரயிலில் என் பயணத்தினைத் தொடங்கினேன். 

வழமையாகப் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் ரயில், என் நல்ல நேரம், யாருமே இல்லாத பெட்டி ஒன்று எனக்கு கிடைக்க, அதில் டபுள் சீட் உள்ள இடத்தில் நான் நீட்டி நிமிர்ந்து தூங்கத் தொடங்குகிறேன்.  பாயிண்டு பாயிண்ட் எக்ஸ்பிரஸ் ஆகப் புறப்பட்ட ரயில் ஒரு இடத்தில் நிற்கத் தொடங்க, நானும் விழித்துக் கொள்ள, அழகிய பெண்ணொருத்தி, நான் இருந்த அதே பெட்டியினுள் வந்து உட்காருகிறாள். 

சுப்பர் ஸ்டார் ரிலீஸ் செய்யும் ‘ராஜா ராணி”

வாங்க மக்கள்ஸ், தமிழ் சினிமாவில் அண்மைய நாட்களாக பெரிய இயக்குனர்களின் பட ரிலீஸ் பற்றிய செய்திகளும், பாடல் வெளியீடுகளும் வந்து கொண்டிருக்குதுங்க. இந்த வகையில் அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் தான் ராஜா ராணி!



இது பற்றி மேலும் அறிந்து கொள்ளனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்

Thursday, August 22, 2013

நேரம் பட நாயகி நஸ்ரியாவுக்கு கிடைத்த யோகம்!

ஒரு படத்தில் தான் நடித்தார், இப்போது பட வாய்ப்புகள் எல்லாமே அவருக்கு தான் குவிகிறது… எரிச்சலில் கோடம்பாக்க நடிகைகள்…
நேரம் படத்தில் அறிமுகமானவர் நஸ்ரியா, படமும் சுமாராக தான் போனது. ஆனாலும் முதல் படத்திலேயே ரசிகர் கூட்டத்தை கவர்ந்து இழுத்து விட்டார் நஸ்ரியா. ராஜாராணி, தனுசுடன் நையாண்டி, அதைத் தொடர்ந்து கார்த்தி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்குகிறார்.

Wednesday, August 21, 2013

மனைவிக்கு தெரியாமல் கள்ள காதலில் காளையர்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்

*காலாதி காலமாக காதலி தேடி அலைந்தது ஆணாதிக்கம் - இப்போ
கழட்டி விட்டு விட்டு டாட்டா காட்டுவது நவீன பெண்ணாதீக்கம்!

*மிஸ்ட் காலில் லவ் செஞ்சு பணத்தை மீதப்படுத்தினால் நீ சுகவாசி
பேஸ்புக்கில் Tag செஞ்சு லவ் சொன்னால் நீயோ சர்வாதிகாரி! 

*உள்ளம் உன்னை நினைத்தாலும், உன்னை விட அழகான பெண்ணை
கண்டால்
பள்ளம் என நினைத்து இடறி விழுகிறது!

அசத்தப் போகும் அஜித்தின் ஆரம்பம் போஸ்டர் விமர்சனம்!

வலையுலக வரலாற்றில் சர்ச்சையை கிளப்ப போகும் அஜித் குமாரின் ஆரம்பம் போஸ்டர் விமர்சனம்! 
வணக்கம் மக்கள்ஸ், எப்படி இருக்கிறீங்க? எல்லோரும் நலம் தானா? 

என்ன முறைச்சு பார்க்கிறீங்க! கூல் டவுண்! கூல் டவுண்! நம்ம மாத்தியோசி மணி முதன் முறையாக அஜித் பட போஸ்டருக்கு விமர்சனம் எழுதினாருங்க. அதனை தொடர்ந்து நானும் ஈயடிச்சான் காப்பி மாதிரி விஜயின் வேலாயுதம் போஸ்டருக்கு விமர்சனம் எழுதினேன்! இப்போ அஜித்தின் ஆரம்பம் மூவி போஸ்டர் விமர்சனம் மூலமாக உங்க எல்லோரையும் சந்திப்பதில் ரொம்ப மகிழ்சியுங்க!

உயிருடன் பிரபாகரன் - உறங்கும் உண்மைகள்

வணக்கம் மக்கள்ஸ், எல்லோரும் சௌக்கியமா? தமிழீழ விடுதலைப் புலிகளின்  தலைவர் திரு. வே.பிரபாகரன் உயிருடன் இல்லை என்று ஒரு சாராரும், உயிரோடு இருக்கிறார் என்று இன்னோர் தரப்பினரும் நீண்ட நாட்களாக கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றமை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சமீபத்தில் பிரபாகரன் உயிருடன் இருக்கலாம் என்று அனைவரும் ஆச்சரியப்படுமளவிற்கு ”விக்கி லீக்ஸ்’ ஓர் செய்தியை வெளியிட்டிருக்கிறது. 

கமலுடன் ஜோடி சேரும் அசின்

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கலைஞானி கமலஹாசன் நடிக்கும் படம் உத்தம வில்லன். இப்படத்திற்கு கிரேஸி மோகன் திரைக்கதை, வசனங்கள் எழுத, இப்படத்தில் கமல் கதையும் எழுதி உள்ளார்.

Tuesday, August 20, 2013

சூப்பர் ஸ்டார் பற்றி டூப்பர் ஹிட் நியூஸ்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா திரையுலகிற்கு நடிக்க வந்து இத்தோடு 38 வருடங்கள் நிறைவாகியுள்ளது.

ரஜினியின் முதல்படமான அபூர்வ ராகங்கள் இதே நாளில் தான் 1975ம் ஆண்டு வெளியானது.

நடிகையின் சதையை நம்பி நடு வீதியில் தமிழ் சினிமா

சினிமாவும், அரசியலும் தமிழ் மக்கள் வாழ்வோடு இன்றைய கால கட்டத்தில் இரண்டறக் கலந்து விட்டன. சினிமாவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் நட்சத்திரங்கள் தமக்குரிய ஆதரவு சினிமாவில் பல்கிப் பெருகியவுடன், தம்மைச் சூழ்ந்திருக்கும் ரசிகர்களின் பலம் தமக்கும் அரசியலில் காலூன்றப் பின்னணியாக இருக்கும் 

Monday, August 19, 2013

ஊதிப் பருத்த உடம்பை ஊசி போல மாற்ற உகந்த வழிகள்!

எல்லோருக்கும் வணக்கமுங்க, எல்லோரும் நல்லா இருக்கீங்களா?
நம்மில் பலருக்கு ஓர் தீராத மன அழுத்தம் இருந்துக்கிட்டே இருக்குமுங்க. அது தான் உடல் எடை பற்றிய பிரச்சினையாகும். நம்ம ஆன்றோர்கள் "கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்" அப்படீன்னு ஓர் நன் மொழி சொல்லியிருக்காங்க. ஆனால் இன்றளவில் "கண்டதை தின்பவன் வண்டியனாவான் (தொப்பையனாவான்)" அப்படீன்னு நம்ம பசங்க அந்த வசனத்தையே மாத்திப்புட்டாங்க. இளைஞர்களில் கட்டிளம் பருவத்தை அடைந்ததும், நம் அழகை நாமே கண்ணாடியில் பார்த்து ரசிக்க ஆரம்பிப்போம்.

நாளை திரையில் தலைவா - மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்


வணக்கம் மக்கள்ஸ், எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? என்னடா இந்த நிரூபன் பய பிள்ளய ப்ளாக்கில காணல்லையே என்று யோசிக்கிறீங்களா? ஆமாங்க இப்ப புதுசா ஒரு நியூஸ் தளம் ஆரம்பிச்சிருக்கோம். நீங்கள் அங்கேயும் வந்து ஜமாய்க்கலாமில்லே! 

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க