Monday, February 14, 2011

காதலர் தின கிறுக்கல்கள்

உலகில் காதலர்களுக்கெல்லாம் இன்று காதலர் தினம்- காதலை
உதறித் தள்ளும் எனக்கும் உன்னக்கும் இன்று என்ன தினம்?
.............................

காதலர்கள் மட்டும் காதலைக் கொண்டாடலாம்- ஆனால்
காதலர்களை காலத்திற்கு ஒரு தரம் மாற்றும்
நீயும் நானுன் மாத்திரம் எதைக் கொண்டாடலாம்?
...............................அன்பே நீ இல்லையென்றால்;
நான் உயிரை விடுவேனா- நோ சான்ஸ்
உடனே அடுத்த பிகரை தேடுவேன்!
................................

கண்ணும் கண்ணும் பேசியது அந்தக் காலம்
பெற்றோர் கண்ணில் மண்ணைத் தூவி
ஊர் சுற்றி பிள்ளை வாங்கி அழிப்பது இந்தக் காலம்!
.................................

அடியே உனக்குத் திருமணமா?
அதனையேன் இப்படி விம்மி வெடித்துக்
கண்ணீரோடு சொல்கிறாய்;
உனக்குத் தெரியாமல் என்னோடு
இவ்வளவு காலமும் ஊர் சுற்றிய
உன் வகுப்புத் தோழியும் இதனைத் தான்
நேற்றுச் சொன்னாள்;
ஆதலால் நோ பீலிங்ஸ்!
....................................

உன் பார்வை என்னும் சுனாமி வைரஸ்ஸை எதிர்க்க
உலகில் இதுவரை எந்தவொரு அன்ரி வைரஸ்சுகளும் இல்லை!
........................................

கோபத்தில் நீ பாத்திரங்களை உருட்டும் போது தான் தெரிகிறது
என் மெமரியும் அடிக்கடி ஸ்ரக்(Stuck) ஆகிறது எனும் உண்மையும்.
..........................................

நிலா வெளிச்சத்தில் நீ அழகு என்றோர்
அசிங்கமான பொய்யை சொல்ல மாட்டேன்;
உன்னை உள்ளூர ரசித்த பிறகு பொய்யெதற்கு?
உதறித் தள்ளுவதற்கா?
உடனே போய்க்கிட்டிருப்பேன்:))
..........................................

காதலி அடுத்த சந்திப்பிற்கு வரும் போதாவது
நீ ஐந்தாறு தொலை பேசி கொண்டு வருவதை நிறுத்தி விடு
நீயும் நானும் பேசும் போது அவை எழுப்பும்
அசிங்க ஒலிகளை என்னால் கேட்க முடியாதுள்ளது.
.............................................

உனக்கு ஒவ்வோர் நம்பருக்கு ஒருவனா?
உன் சிம் கார்ட்டை போல
நீ என்னையும் கழற்றி வீசப் போகிறாய்
எனச் சொன்ன போது தான்
இந்த உண்மையும் புரிந்தது-:)


இன்றைய தினம் காதலர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

11 Comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

//கண்ணும் கண்ணும் பேசியது அந்தக் காலம்
பெற்றோர் கண்ணில் மண்ணைத் தூவி
ஊர் சுற்றி பிள்ளை வாங்கி அழிப்பது இந்தக் காலம்!//


ஹா ஹா ஹா ஹா சரியாக சொன்னீர்கள்...

ஆதவா said...
Best Blogger Tips

வலைப்பதிவுகளில் இன்னும் எந்த காதலர் தின கவிதைகளையும் படிக்கவில்லை. நீங்கள் தான் முதல்... கிண்டல் மனோபாவமும், மிதமான எதிர்ப்புத்தன்மையும் இக்கவிதைகளில் நிலவுகிறது!!

வாழ்த்துக்கள் நண்பா

அன்பரசன் said...
Best Blogger Tips

//அன்பே நீ இல்லையென்றால்;
நான் உயிரை விடுவேனா- நோ சான்ஸ்
உடனே அடுத்த பிகரை தேடுவேன்!//

இது டாப்

Jana said...
Best Blogger Tips

ஆஹா..விபரமாகத்தான் எல்லோரும் இருக்கின்றீர்கள். இரசித்து படித்தேன்.

Thanglish Payan said...
Best Blogger Tips

Nanba .. innum neraya unmayana kathalkal irukkathan seikinrathu..

anyway arumai nadai

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

Hi nirupan....! your poem is super.i'll write more in Thamil later.

ஆனந்தி.. said...
Best Blogger Tips

பரவாலையே சகோ ..செம நக்கல் நையாண்டியோட காதலர் தின ட்ரீட்...:-)))

Riyas said...
Best Blogger Tips

நல்லாவே இருக்கு.. உங்க எழுத்து நடையும் அழகு இப்போதுதான் உங்கள் தளம் பார்வையிடுகிறேன்.. எல்லாம் நல்ல பதிவுகள்..

ஹேமா said...
Best Blogger Tips

நிரூபன்....நக்கல் நக்கல்.
உங்களுக்குள்லயும் காதல் வரும்தானே.
அப்ப என்ன எழுதுவீங்கள் பாத்துக்கொள்றன் !

சிவகுமாரன் said...
Best Blogger Tips

உண்மையில் வாழ்த்து சொல்றீங்களா , வசை பாடுறீங்களா தெரியலையே.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails