Tuesday, August 7, 2012

டெசோ மாநாட்டின் கவர்ச்சி நடனத்தால் விம்மும் கலைஞர்!

வாக்குறுதி வழங்கியதால் பம்மும் ஜெயலலிதா!
விம்மியழும் கலைஞர்!

கண்ணீரில் மூழ்கி கதறியழுகின்றார் ஐயா கலைஞர்
கனிமொழியின் வாழ்வையும் சிதைத்த முன்னாள் தமிழ் தலைவர்!
மண் ஆசையால் இன்றும் போக மனமின்றி தள்ளாடுகின்றார்
மஞ்சள் துண்டே சரணம் என நாளும் திண்டாடுகின்றார்!

தமிழ்த்தாயின் மடியில் தன்னுயிர் போகுமாம்
தவறுகளைச் செய்த உயிர் காரணமாய் இருந்தவரால்
தமிழுக்கும் அ(இ)ழிவு வந்து சேருமோ?

டெசோவெனும் கபட நாடகத்தில் கவர்ச்சி நடனம் - அது
குஜாலென அமையாததால் குலுங்கி அழுகிறாராம்!
விடாத சனியென இன்னமும் பதவியெனும் ஆசையை - கை
விடாது தொடர்கிறார் கருணாநிதி! காலத்திற்கேற்றாற் போல
உலக தமிழர்களையும் தொட்டுக் கொள்கிறார் ஊறுகாயாய்!

கனிமொழியின் கவலை நிலை!

அப்பா சொல் கேட்டேன்! என் ஆதரவை இழந்தேன்!
தப்பாக ஊழல் செய்தேன்! பல நாள் தனிமையில் உள்ளேன்!
முப்பாலும் கொண்ட திருக்குறளை மொழி பெயர்த்த முத்தமிழறிஞர்
எப்போதோ நல் வழி சொல்லியிருந்தால் ஏளனமாய் ஆகியிருப்பேனா?

எத்தனை நாள் உள் இருந்தேன் தண்டனையை எண்ணி
ஏளனமாய் வெந்து நொந்தேன் - எனைப்
"பெத்தவரும் கை விட்டாரோ" என எண்ணியதால் - இன்று
பேதைப் பெண் யானும் ஜாமீனில் வந்தேன்!
சொத்து பல சுருட்டியதால் இன்னமும் எனை விடாத
பித்துப் பிடித்த துன்பம் இன்றும் தொடர்கிறதே - என் மன்னவனின்
நினைப்பால் மனமும் தொல்லையில் வாடுதே!

"சொத்ததனைப் பங்கிட்டோர் மட்டும் வெளியே- சொகுசாய்
சொர்க்க உலா வருகின்றார்" - செம் மொழியின் காதலினால்
புத்தகமாய் வெளியிட என் நிலையை எழுதி வைத்திருந்தேன்
பேப்பரில் கூட ஊழல் பணம் இருக்கும் எனும் நினைப்பில்
புத்தகத்தை கசக்கி கூடையிலே எறிந்திட்டார் - கனி நான்
புழுப் பூச்சி போல திஹார் வெயிலில் துடித்து வாடி நின்றேன்!
பத்திரத்தில் என் விடுதலையை எழுதி தந்தார் - ஆனாலும் வெளியே
பாவை நானும் சென்று வாழும் போதும் பின் தொடர்கிறார்களே சிபிஐ!

வார்த்தைகளை வீசியதால் பம்மும் ஜெயலலிதா!

இலவசமாய் இணையில்லா பல எலக்ட்ரோனிக் பொருட்கள் தந்தார்!
அதை இயக்கிடவும் முழு நேர மின்சாரம் வரும் என்றார்!
தலைவியிப்போ பெருந் தலை வலியில் வாடுகின்றார் - இன்றளவில்
தமிழகத்தில் ஐந்து மணி மின் வெட்டாம்- அம்மாவிற்கோ திண்டாட்டமாம்!
வார்த்தைகளை இலவசத்தோடு இலவசமாய் வீசினார் அம்மா - மக்கள்
வாழ்வு சிறக்க மின் வழங்குவேனா என மூச்சு வாங்குகின்றார் சும்மா!

மண்டியிட மறுக்கும் மாறன்!

மண்டியிட மறுக்கின்றார் மாறன் - மச்சமுள்ள அதிஷ்டகாரன்!
ரெய்டு வந்த சிபிஐக்கு ஏமாற்றதோடுஆப்படித்தார்!
மச்சினனின் மூலம் நாடகம் ஆடி தப்பி நிற்கின்றார்!
கைது செய்ய வந்த சிபிஐக்கு கலாநிதி உதவியுடன்
கேள்வி மேலே கேள்வி கேட்க வைத்த வீரன்!
இன்றோ ஆனந்தகிருஷ்ணனுக்கும் செக் வைத்தார் மாறன்!
*****************************************************************************************************************************

மக்களே, புரட்சி எப்.எம் உடன் இணைந்து பாடல் கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள்

1 Comments:

”தளிர் சுரேஷ்” said...
Best Blogger Tips

எல்லாரையும் போட்டு தாக்கி இருக்கீங்க! சூப்பர்!
இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails