Tuesday, August 7, 2012

திமுகவிலிருந்து அடித்து விரட்டப்பட்ட பதிவர்!

திமுக கட்சியின் தீவிர விசுவாசிக்கு நிகழ்ந்த கொடுமை! 

மண்ணாங்கட்டி: ஏம்பா பதிவர் பன்னாடை, அந்த அப்பா பதிவரை கொஞ்ச நாளா திமுக அல்லக்கைங்க லிஸ்ட்டில காண முடியலையே! என்னாகியிருக்கும்?
பன்னாடை: ஏலேய் மண்ணாங்கட்டி! இது கூட தெரியாமலா? அவர் திமுகவிற்காக காட்டிய ஓவர் விசுவாசத்திற்காக மூஞ்சில காரி துப்பாத குறையா விரட்டிட்டாங்க.

வழிப்போக்கனும், தெருப் பாடகனும்

வழிப்போக்கன்: ஏம்பா தெருப்ஸ், அந்த ஈழப் புளியமரத்தை பத்த சொன்ன எழுத்தாளர் இப்போ திமுக புகழ் பாடுவதை நிறுத்திட்டாராமே! என்னாகியிருக்கும்?
தெருப்பாடகன்: இது கூட தெரியாமலா? தவளையும் தன் வாயால கெடும் என்பது போல, அவரே திமுக பத்தி எழுதி திமுக கட்சி மானத்தை காத்துல பறக்க வுட்ட காரணத்தினால ஆளை அடிச்சு விரட்டிட்டாங்க! 

பிரபல பதிவர்: ஏம்பா சாதா பதிவர், கலைஞருக்கே இரங்கற்பா எழுதினாரே ஒரு பதிவர். அவர் இப்போ எங்கே போயிட்டாரு?
சாதா பதிவர்: அடப் போங்க சார், திமுக ஒண்ணா கூடி இரங்கற்பா எழுதினவருக்கே சங்கூதிட்டாங்க இல்லே!! 

திமுகவிலிருந்து விரட்டப்பட்ட பதிவர் புலம்பல்!

வாருங்கள் பதிவர்களே! என் கதையை கேளுங்கள்!
நானோ ஓர் அல்லக்கை! அப்பப்போ கிடைக்கும் 
சோற்றுப் பாசலுக்காய் என் கட்சியை உயர்த்தி எழுதினேன்
என்னே கொடுமை! பற்றச் சொன்னேன் புளிய மரத்தை - பாவிங்க
எல்லோரும் ஒண்ணா கூடி என்னை குட்டி 
கலைச்சிட்டாங்க அந்த ஒத்த பதிவோட! 
இப்போ இண்டர்நெஷனல் வரைக்கும் கெளம்புறாங்களாம்! 
**************************************************************************************************

அன்பு உறவுகளே,
உங்கள் புரட்சி வானொலிக்குரிய பனர் விளம்பரத்திற்கான HTML கோடிங்கை கீழே இணைத்திருக்கிறேன். இதனை உங்கள் வலைப் பூக்களில் இணைத்து ஏனைய தமிழ்ச் சொந்தங்களிடமும் இந்த வானொலியை அறிமுகப்படுத்துவற்கு நீங்களும் உதவலாம் அல்லவா? 

<a href="http://www.puradsifm.com/" target="_blank"><img src="http://i1219.photobucket.com/albums/dd437/nirupans/puradshi-1.gif" border="0" alt="Photobucket"></a>
அன்பு நண்பர்களே, மேலே உள்ள கோடிங்கை, உங்கள் ப்ளாக்கின் சைட் பாரில் Widget பகுதி ஊடாக Add Html பெட்டியில் அட் செய்வதனூடாக எமது வானொலியை பல உறவுகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு நீங்களும் உதவலாம் அல்லவா?

நாளை இலங்கை - இந்திய நேரம் காலை  10.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரைக்கும் உங்கள் புரட்சி இணைய வானொலியில் நேரடி நிகழ்ச்சிகள் இடம் பெற்றவிருக்கிறது.. நீங்களும், மின்னஞ்சல், தொலைபேசி, பேஸ்புக், Skype, Google Talk ஊடாக இணைந்து கொண்டு உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி மகிழலாம். 

ஹலோ இணையம் நிகழ்ச்சி காலை 10.00-12.00 மணி வரை இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் உங்கள் உற்றார், உறவினர் நண்பர்களுக்கு நீங்கள் வாழ்த்த்துக்களை தொலைபேசி, Skype ஊடாக நீங்களும் இணைந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
ஹலோ இணையம் நிகழ்ச்சியை தொடர்ந்து வாங்க பேசலாம் நிகழ்ச்சி உங்களுக்காக நண்பகல் 12.00-03.00pm வரை இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் நீங்கள் நாளாந்த செய்திகள், தினப் பலன்கள், இணையச் செய்திகளின் தொகுப்பு, சிறந்த வலைப் பதிவு பற்றிய விளக்கம் ஆகியவற்றையும் கேட்டு மகிழ்வதோடு நேரடியாக இணைந்து பாடல்களையும் கேட்டு மகிழலாம். 

இரவு 08.00 மணிக்கு அறிவிப்பாளர் இராமலிங்கம் ராகவன் தொகுத்து வழங்கும் "சினிமா கபே” நிகழ்ச்சி இடம் பெற காத்திருக்கிறது. இந் நிகழ்ச்சியினூடாக தமிழ் சினிமாவின் உடனி அப்டேற்ஸ் தகவல்களை நீங்க அறிந்து கொள்ள முடியும். அதனை தொடர்ந்து இரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை உங்கள் மனதிற்குப் பிடித்தமானவர்களுக்கு நீங்கள்  பாடல் விரும்பி கேட்டு மகிழும் "காதலா காதலா" நிகழ்ச்சி இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை உங்கள் மனதிற்கு பிடித்தமானவர்களுக்கு கேட்டு மகிழலாம். உங்கள் விருப்ப பாடல்களை அனுப்ப puradsifm@gmail.com

புரட்சி எப்.எம் உடன் இணைந்திருங்கள்! 

5 Comments:

மண்டை மனோகர் said...
Best Blogger Tips

கலக்கிட்டேழ் போங்கோ

விக்கியுலகம் said...
Best Blogger Tips

அடிவருடிகள்னா அப்பிடித்தான்...

ஏம்பா தானியங்கியா பிலாக்க ஓபன் பண்ணா எப் எம் இயங்காம...ஆன் பண்ணா இயங்குவது போல கொடுப்பா!...ஆபிஸில் இருப்பவர்களுக்கு சிரமம்...!

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்
மன்னிக்கனும் அண்ணே,
இப்போ சேஞ்ச் பண்ணிட்டேன்!
நன்றி

வீடு சுரேஸ்குமார் said...
Best Blogger Tips

புளியம்பழம் பழுத்தா உதிர்த்து சந்தைக்கு கொண்டு போகனுமில்ல....இல்லையினா புழு பிடிச்சிரும்மப்பு!

மனசாட்சி™ said...
Best Blogger Tips

அடடா ஆல் அல்லகைஸ் நிலைமை இப்பூடி ஆயிடுச்சா..

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails