Thursday, August 16, 2012

புலிகளை வைத்து பொ(பி)ழைப்பு நடத்துவது எப்படி?

செய்முறை விளக்கங்களுடன் கூடிய செம்மொழி ஆராய்ச்சிப் பதிவு! 
வணக்கம் உறவுகளே, உலகில் பல்வேறு தொழில்கள் இருந்தாலும், ஒரு சந்ததியின் மானத்தை விற்றுப் பிழைப்பது போன்று சூப்பரான தொழில் இருந்தால் நீங்கள் சுலபமாக பணத்தை ஈட்டலாம் அல்லவா? வாருங்கள் நண்பர்களே! காதோடு காது வைத்தாற் போல புலிகளை வைத்து எப்படியெல்லாம் பிழைப்பு நடத்தலாம் என்பதனை சொல்லித் தருகின்றேன்.
தேவையான பொருட்கள்: தமிழ் மக்களின் மானத்திற்காகப் போராடிய, விடுதலைக்காக போராடிய புலிகளின் பெயர்.
தேசியம், சில தேசிய விடுதலைப் பாடல்கள், பிரபாகரனின் உருவப் படம் உள்ள புகைப்படங்கள், பாசிசம், துரோகி, அடிவருடி, அல்லக்கை, எட்டப்பன் எனும் செந்தமிழ் சொற்கள், இன்னும் சில விசேட வாசனைத் திரவியங்கள்.

இனி மேற்கூறிய பொருட்களை வைத்து எப்படிப் பொழைப்பு நடத்துவது என்று நோக்குவோம்.
முதலில் தேசியம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும், தேசியம் எனும் தொனிப் பொருளில் நாளுக்கு மூன்று முறை பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட வேண்டும். நண்பர்களோடு தேசியம் பற்றி வலிந்திழுத்து பேச வேண்டும்.
அடுத்து சில ஈழப் பாடல் வரிகளை மனனம் செய்து வைத்திருந்து, சிட்டுவேசனுக்கு ஏற்றாற் போல வில்லுப் பாட்டில் சிங்சக் போடும் நபர் பாணியில் எடுத்து விட வேண்டும். பாடல் வரிகளை மனனம் செய்ய முடியாவிட்டால் கூகிள் தேடு தளத்தில் தேடி எடுத்து அட்லீஸ்ட் Cut And Paste செய்யத் தெரிந்திருக்க வேண்டும். 
பிரபாகரனின் உருவப் படங்களை ரோல் மாடலாக பேஸ்புக் Profile இல் கொண்டிருப்பதோடு, உங்கள் பெயர்களையும் தூய தமிழ்ப் பெயர்களாக மாற்ற வேண்டும். 
தூய தமிழ்ப் பெயர்கள் கிடைக்கவில்லையெனில் பிரபாகரன், தமிழ்ச் செல்வன், பொட்டம்மான், ஈழமகன் என தாம் போலி ஆதரவாளர்கள் என்பது வெளித் தெரியா வகையில் ஈழம் மீதான பற்றுறுதியை வெளிப்படுத்தும் வண்ணம் வைத்திருக்க வேண்டும்.

புலிகளுக்கு ஆதரவாக எவர் எவர் தம் ஆதரவுக் கருத்துக்களை நேரடியாக வெளியிடுகிறார்களோ அவர்களே புலிகளின் தீவீர ஆதரவாளர்கள், நல்லவர்கள் என மணிக்கு நானூறு தரம் போற்றிப் புகழத் தெரிந்திருக்க வேண்டும். 
புலிகளுக்கு ஆதரவானவர்கள் சந்தர்ப்ப சூழ் நிலைகள், அகப் - புறச் சூழற் காரணிகளால் தம் ஆதரவினை வெளிக்காட்ட இயலாதவர்களாக இருந்தாலும், அவர்கள் துரோகிகளே என வாய் கிழிய கத்த தெரிந்திருக்க வேண்டும். 
"கொடி பிடித்து கொளுத்தும் வெயிலில் நிற்பவனே மனிதன் 
வெடி விழுகையில் ஓடி ஒளித்தவன் எல்லோரும் சனியன்” எனும் பாணியில் வெண்பா ஓதிடத் தெரிந்திருக்க வேண்டும். 
தூக்கத்திலும் தாம் புலிகளை வைத்துப் பிழைக்கிறோம் என்பதனை நினைவுபடுத்தும் வகையில் புலிகள் தொடர்பான போலி ஆதரவினை வெளிப்படுத்தும் கருத்துக்களை உளற வேண்டும். 

அல்லும் பகலும் வெளித் தோற்றத்தில் ஆதரவை வெளிப்படுத்துபவன் ஆதரவாளன்
கொல்லைப் புறத்தில் ஆமிக்குப் பயந்தவன் எல்லோரும் துரோகிகள்! என வசை மாரி பொழியத் தெரிந்திருக்க வேண்டும்.

இவ்வளவும் தெரிந்தால் போதும்! இலகுவாக நீங்களும் புலிகளை வைத்துப் பொழைப்பு நடத்தலாம் உறவுகளே! 

உறவுகளே, இணைய வானொலி வரலாற்றில் ஓர் புதிய உதயமாக புரட்சி இணைய வானொலி இப்போது வந்திருக்கிறது.நீங்கள் ஓய்வாக இருக்கும் போது புரட்சி வானொலியினைக் கேட்பதோடு, இவ் வானொலியை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தலாம் அல்லவா?


புரட்சி இணைய வானொலியோடு நீங்களும் இணைந்திருக்க இங்கே கிளிக் செய்யுங்கள்:

1 Comments:

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் ,நிரூபன்!இவ்வளவு தானா?நான் என்னமோ "பெரிசா" இருக்கும் எண்டு நினைச்சன்!துவங்க வேண்டியது தான்!!!!!!!!!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails