Monday, August 6, 2012

மின் வெட்டில் ஆட்டயப் போடும் அம்மா ஜெயலலிதா!

அம்மா ஜெயலலிதா
உந்தன் ஆட்சி காலமதில் நீயோ
பலருக்கும் புரியாத புதிரம்மா 
2G ஊழல் போதையில்
கொட்டமடித்த கலைஞர் 
கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பி நிரூபன் நாற்று
கெட்டியாக ஆட்சியினை பிடித்து
இலவச திட்டங்களோடு பலவற்றோடு
நீ நுழைந்தாய்!
சட்டமன்றம் நுழைந்த நாள் முதலே
சர்ச்சைகளின் நாயகியாய் நீ! நிரூபன் நாற்று
ஒன்றா இரண்டா - அடுதடுத்து பல 
சர்ச்சைகளில் சிக்கினாலும் - நீயோ
மூர்ச்சையாகவில்லை 
மும்முரமாய் செயற்பட்டாய்
சமச்சீர் கல்வியில் தொடங்கி,
சட்டமன்ற புறக்கணிப்பு ஊடாக
அண்ணா நூலகத்தின் 
அதிரடி அறிவிப்பையும் கடந்து
அருகே இருக்கும் கூடங்குளத்தையும் நீ மறந்து
இன்று மின் வெட்டில் வந்து நிற்கிறதம்மா
உந்தன் ஆட்சி - இதனால் மக்கள் நாற்று நிரூபன்
மனம் புண்பட்டு போயுள்ளதையும் 
அறியாயோ சொல்லம்மா? 
www.thamilnattu.com இலிருந்து அனுமதியின்றி காப்பியடிக்கப்பட பதிவு
மாட்டுக்கறி தின்ற மாமி 
என சொல்லியதும்
தமிழகத்தை ஒன்று திரட்டி
உந்தன் பவர் என்னவென்று 
உணர்த்திய பாவையே!!
இன்று பவர் இன்றி வாடுகின்ற 
பாமர மக்களின் உணர்வுகளை புரியாமல்
ஆட்சித் திமிர் கொண்டா இருக்கின்றாய்?
அனுமதியின்றி நாற்றிலிருந்து காப்பி செய்யப்பட்ட பதிவு
போயஸ்காடனில போர்த்திக்கிட்டு நீ படுப்பே
உடல் முழுதும் வியர்வையால் வழிந்தோட
உஷ்ணத்தை போக்கிட ஏசியின்றி நாம் தவிப்போம்!

வாயில் உணவு வைக்கையில கரண் போயிடுச்சே
என வாட்டமுற்று 
சிம்மி விளக்கினையும் தேடிடுவோம்
நீயோ சென்னையில் வாஞ்சையுடன் இருந்து
அடுத்த நாள் சட்ட சபை பத்தி திட்டம் தீட்டிடுவாய்
கனவில் தவிக்கும் பெருசுங்க முன்னாள்
நடிகை ஜெயாவின் மிட் நைட் பாடல்களை
டீவிப் பெட்டியில் பார்க்க நினைக்கையிலோ
நிலாவைப் பார்த்து ரசியுங்கடா என சொல்லி
கரண்டினை நீயும் கட் செஞ்சிடுவேய் - கொடுத்த
வாக்குறுதியின் மேல் ஏறி நின்று 
பூச்சாண்டி நீயும் காட்டுகின்றாய்!
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பியடிக்கப்பட்ட பதிவு
அடுத்த தேர்தலில் உனக்கான
ஆப்பை நீயே தேடி வைக்கின்றாயா - அம்மையே;
அணு உலை மூலம் மக்கள் வாழ்விற்கு
ஆப்படிக்க வழி இல்லையே என்பதால்
இப்படி ஓர் திட்டம் போடுகின்றாயா - நீ
கொடுத்த வாக்குறுதிகளோ இப்போது
காற்றில் பறக்கிறதே - கோதையே
அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியும் 
வெற்றி பெறுவதற்கான
அவலை நீயும் வாயிலே போட்டு விட்டாயே!

மின் வெட்டால் கொல்றியே அம்மா - மனம்
புண்பட்டு போகிறதே
உனை நினைத்தால் சும்மா!!
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரமா? - கரண்ட் 
போன பின்னர் ரெட்டை இலைக்கு 
ஓட்டும் கிடைத்திடுமா - எண்ணிப் பாரம்மா?

1 Comments:

கூடல் பாலா said...
Best Blogger Tips

வெளுத்து வாங்கிட்டீங்க நிரூ...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails