Sunday, August 26, 2012

சென்னைப் பதிவர் சந்திப்பும், சொக்கவைக்கும் டாஸ்க்மாக்கும்

போதையேறிய டாஸ்மாக் பதிவனின் மிட் நைட் அதிரடிப் பதிவு!

வருக தமிழ் உறவுகளே - இங்கே நான் தெளித்திருக்கும்
தெள்ளு தமிழ் கள்ளை அள்ளிப் பருகுக - உங்களால் முயன்றால் கொஞ்சம்
தருக- சியர்ஸ் சொல்லி என்னோடு இணைந்து தமிழ் வாழ்த்து 
தருக! எம் உறவுகளை வாழ்த்த வருக!
திருநாளாம் இன்று - சென்னையிலே எம் பதிவர் குழாத்திற்கு
பெரு நாளாம் - கணினித் திரையூடே கை குலுக்கி மகிழ்ந்த உறவுகளிற்கு
புது நாளாம் இன்று - பதிவர் சந்திப்பாம் - தமிழால் கணினியில் கலக்கும்
புதுமை நிறை தமிழ்ப் பதிவர்களுக்கு இன்று ஓர் இன்பத் திருநாளாம்!

வாருங்கள் நாமும் வாழ்த்தி மகிழ்வோம் - பதிவுலகம் எனும் மதுப் போதையினைக் குடித்த எம் உறவுகளை வாழ்த்திட ஒன்று
சேருங்கள் உற்சாகமாய் கூடி ஆடுங்கள் - அனைவரும் ஒருங்கு சேர்த்து
வீதியெல்லாம் தமிழ்ப் பதிவர்க்கு விழா எடுக்கும் வண்ணம் வாழ்த்துங்கள்
கூடுங்கள் - இன்பத் தமிழ் மொழியால் இனிய கருத்துக்களைப் பேசி மகிழுங்கள்!

வாழ்த்த வயதில்லை - ஐயா இராமாநுசத்தின் முயற்சியினை 
போற்ற முடியவில்லை சென்னைப் பித்தனின் செயற்பாட்டினை
ஆற்ற முடியவில்லை மத வெறியர் (கள்) கட்டவிழ்த்திட்டிருக்கும் போலிச் சேதியினை
தேற்ற முடியவில்லை அச் செதி கேட்டும், ஆனாலும் 
வாட்டமுற வேண்டாம் உறவுகளே - அந்த வசை மொழியர் சொல் கேட்டு
வாய் விட்டுச் சிரியுங்கள் - பதிவரெல்லாம் ஒன்று கூடி சியர்ஸ் சொல்லி
பேசி மகிழுங்கள் - ஆக்கபூர்வமான தீர்மானம் எடுங்கள் - முடிந்தால்
அடுத்த சந்திப்பில் அடியேனும் கலந்துக்க இறைவன் அருளனும் என்று
கொடு முடி மன்னனை வேண்டுங்கள் - உங்களின் திரு நாள் சிறக்க 
தொலைவினில் இருந்து வாழ்த்தும் இந்த உறவுகளின் வாழ்த்தையும்
அள்ளிப் பருகுங்கள் - அனைவரிடமும் எம் வாழ்த்தையும் தெரிவித்து மகிழுங்கள்!

அரும்பத விளக்கம்/ பொழிப்புரை: 
சியர்ஸ்: மகிழ்ச்சியினை வெளிப்படுத்த பயன்படுத்தும் சொல்.
பதிவெழுதுவதும் ஒரு போதை போன்றது, பல பதிவர்கள் தொட்டால் விடாத குறையாகப் பதிவுலகோடு பலவருடங்களாகப் பயணிப்பதால், பதிவுலகின் சிறப்பினை விளக்கின உவமான, உவமேயங்களாக இங்கே மது உள்ளிட்ட போதையேற்றும் வார்த்தை(கள்) பயன்படுத்தப்பட்டுள்ளது.12 Comments:

ADMIN said...
Best Blogger Tips

பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..!

ADMIN said...
Best Blogger Tips

அன்பிற்குரிய நிரூபன் அவர்களே..!

பதிவின் வழியே தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தவிதம் அருமை. கவிதை நடையில் பதிவை எழுதி, பதிவர் சந்திப்பு குறித்த அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து கொடுத்த விதம் அருமை...!

உங்களது மனநிலையில் நானும்..!!!

உளம் மகிழ்கிறேன்.. உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்...!!!!

Anonymous said...
Best Blogger Tips

சியர்ஸ் பிரதர்ஸ்

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

வாழ்த்தும்...வசவும்...நிரூபனிடம்
வாங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

கவி அழகன் said...
Best Blogger Tips

Kalai kadduthu pathivar santhippu

கும்மாச்சி said...
Best Blogger Tips

சியர்ஸ், விழா இனிதே நடைபெற வாழ்த்துகள்.

Yoga.S. said...
Best Blogger Tips

வாழ்த்திய உங்களுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்!!!!ஏலவே,பல இடங்களில் வாழ்த்துச் சொல்லியிருப்பினும்,தங்கள் கவி மழை?!யுடன் நானும் வாழ்த்துகிறேன்,பதிவர் திருவிழா சிறக்க!!!!!

'பரிவை' சே.குமார் said...
Best Blogger Tips

பதிவர்களுக்கு சியர்ஸ்...

”தளிர் சுரேஷ்” said...
Best Blogger Tips

சிறப்பான பகிர்வு! தலைப்புத்தான் பயமுறுத்துச்சு!

இன்று என் தளத்தில்
பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
கோப்பை வென்ற இளம் இந்தியா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html

நிரூபன் said...
Best Blogger Tips

கருத்துரை வழங்கிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி,
பதிவினைப் படித்த அனைத்துச் சொந்தங்களுக்கும் நன்றி.
அடுத்த பதிவினூடாகச் சந்திப்போம் அன்பு உறவுகளே.

K said...
Best Blogger Tips

மச்சி தாமதத்துக்கு மன்னிக்கோணும்! உன்னுடைய ஸ்டைலில் சிறப்பான கவிதை! பதிவர் சந்திப்பு இனிதே நடந்து முடிந்துள்ளது! எல்லோருக்கும் மகிழ்ச்சியே!

கிஷோகர் said...
Best Blogger Tips

அண்ணே இலக்கிய நடையெல்லாம் செமையா இருக்கு! விட்டா வைரமுத்து வாலிக்கே கிளாஸ் எடுப்பிங்க போல இருக்கே!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails