Thursday, August 30, 2012

இந்துக்கள் அனைவரும் இஸ்லாமியர்களே - அதிர்ச்சியூட்டும் ஆய்வு!

அதிர்ச்சியில் இந்துக்கள் - மகிழ்ச்சியில் இஸ்லாமியர்கள்!

வணக்கம் உறவுகளே, எல்லோரும் வியர்க்க, விறு விறுக்க ஓடி வந்து பதிவைப் படிக்க முன்னாடி “நிரூபன் பயலுக்கு பதிவிற்கு தலைப்பு வைக்க வேறு ஏதுமே சிக்கலையா” அப்படீன்னு மனசிற்குள் திட்டுறீங்களா? கொஞ்சம் பொறுங்க மக்கள்ஸ், பதிவினைப் படிச்சிட்டு அப்புறமா, என்னை திட்டுவது சரியான்னு நீங்களே யோசிப்பீங்க. 
இப்போ இந்தப் பதிவில் நாம இணைத்திருக்கும் போட்டோவில உள்ளவர் யாருன்னு உங்க எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அட... இந்துக்களின் முழு முதற் கடவுள், உமாதேவியாரின் ஆசை நாயகன் அவர் தான் உங்க சிவபெருமான். ஆனால் இந்த சிவபெருமான் பிறப்பால் இஸ்லாமியர் அப்படீன்னு அமெரிக்காவுல ஆராய்ச்சி நடத்தி கண்டறிந்திருக்கிறார்களாம். பதிவுலகில் மதம் பரப்பும் மேனியா அப்படீன்னு ஒரு தொற்று நோய் பல மாதங்களாக பரவி வருவது உங்க யாவருக்குமே நன்றாக தெரியும். ஒரு சில மதவாதிகள் பண்ணும் சித்து விளையாட்டுக்கள் இருக்கே! நீங்க அவங்களுக்குப் பக்கமா நின்னா செருப்பை கழட்டி மூஞ்சிலே அடிப்பீங்க! அம்புட்டு அழகா தங்கள் மதத்தை பரப்புவதற்காக, ஏனைய மதங்களை இழிவு செய்யுறாங்க இந்த மதவாதிகள்.

சிவபெருமானின் தலையில் இருக்கும் பிறைச் சந்திரன் இஸ்லாமியர்களின் குறியீடாக இருக்கிறதாம். இதனால் சிவபெருமான் பிறப்பால் இஸ்லாமியர் என்றும், பின் வந்த இந்துக்கள் இஸ்லாம் மீதுள்ள காழ்ப்புணர்வின் விளைவாக சிவபெருமானின் மூலாதாரத்தை மறைத்து சிவபெருமான் இந்து அப்படீன்னு பொய் சொல்றாங்க அப்படீன்னு ஒரு மதவாதி எழுதுகிறார். உலகில் ஏகாதிபத்தியத்தின் முதல்வன் அமெரிக்கா, இஸ்லாமியர்களின் எதிரி அமெரிக்கா அப்படீன்னு பல பட்டங்களை அமெரிக்காவிற்கு அள்ளி வழங்கி, அமெரிக்காவை எல்லா விடயங்களிலும் எதிரியாக நோக்கும் இஸ்லாமிய மதவாதிகள் அமெரிக்க ஆராய்ச்சியாளர் சொல்லும் கருத்துத் தமக்கு சாதகமாக இருக்கே என நினைத்து தங்கள் செப்படி வித்தையினைக் கட்டுகிறார்கள்.
அது மட்டுமா? இயேசு நாதரும் ஒரு இஸ்லாமியராம். இதையும் அந்த அமெரிக்கப் பேராசிரியர் சொல்லியிருக்கார் அப்படீன்னு சைட் கேப்பில் கெடா வெட்டிப் பொங்கல் வைக்கிறாங்கோ. சங்க இலக்கியங்களில் முருகக் கடவுளர் வழிபாடு பற்றிய பல சான்றாதாரங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சங்க காலத்திற்குப் பின்னர், தோன்றிய இஸ்லாமிய மதத்தினைப் பின்பற்றியவராக சிவபெருமானைச் சுட்டியிருப்பது எவ்வளவு மடமைத்தனம் என்று இந்த மதவாதிகளின் ஞானக் கண்ணுக்குத் தெரியவில்லைப் போலும்.

என்னங்க ஆச்சரியப்படுறீங்க, முருகன் கூட இஸ்லாமியர் என்று பேசிக்கிறாங்க. ஏன்னா முருகக் கடவுளருக்கு வள்ளி, தெய்வயானை அப்படீன்னு இரண்டு ஆசை நாயகிகள் இருக்காங்கள் இல்லையா. இந்த முருகக் கடவுளரும் ஏழு நாயகிகளை ஆசை நாயகிகளாக ஆக்கிக் கொள்ளலாம் எனும் கொள்கையில் வந்தவர் என்பதால் அவரும் ஓர் இஸ்லாமியர் தானாம். அப்புறம் உங்க தொப்பையப்பன், அவர் தானுங்க பிள்ளையார் இருக்காரே! அவரும் ஒரு இஸ்லாமியர் தானாம். ஏன்னா அவரோட நெற்றியில் பிறை வடிவில் விபூதி அடையாளம் இருக்கிறதாம்.
பார்த்தீர்களா? நாம் அனைவரும் இஸ்லாமியர்கள் தான்! 
சந்தேகமே வேணாம்! அமெரிக்கப் பேராசிரியர் சொன்னதா எந்த மதம் பரப்பும் பதிவர் எழுதுகிறாரோ இல்லையோ நாம் அனைவரும் இஸ்லாம் மதத்தவர்கள் தான்!
இன்று முதல் எங்கள் மூலாதார மதமாக விளங்கும் இஸ்லாத்தைப் பின்பற்றி மோட்சம் அடைவோம் பதிவர்களே! வாருங்கள்! ஒன்றாக கூடுங்கள்!

ஆரம்பமாகிவிட்டது நாற்று குழுமத்தின் பதிவர் அறிமுகத் திருவிழா!

அன்பு உறவுகளே, கடந்த வருடம் முழுவதும் ஒவ்வோர் பதிவுகளின் கீழும் புதிய பதிவர்களின் வலைப் பூக்களைப் பற்றிய அறிமுகத்தினைத் தாங்கி வந்த பதிவர் அறிமுகம் பணிச் சுமை காரணமாக தொடர இயலாத விடயமாகி விட்டது. அதனால் மீண்டும் இன்று முதல் பதிவர் அறிமுகம் உங்களை நாடிவரவிருக்கின்றது.
நீங்களும் புதிய பதிவரா? உங்கள் வலைப் பூக்களும் பதிவர் அறிமுகம் பதிவில் இடம் பெற வேண்டுமா? பின்னூட்டம் மூலம் அறியத் தாருங்கள். அல்லது nirupan.blogger@gmail.com எனும் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வாருங்கள் இன்றைய பதிவர் அறிமுகம் பகுதிக்குச் செல்வோம்.

இலக்கிய ரசனை உள்ளவர்களுக்கும், இதயத்தில் பல நினைவுகளைச் சுமந்து தமிழைக் காதல் செய்வோருக்கும் களமாக இருக்கும் வண்ணம் வல்வையூரான் எனும் வலைப் பூவினை எழுதி வருகின்றார் இராஜமுகுந்தன் அவர்கள். அறிவிப்பாளர், கவிஞர், எனப் பல்வேறுபட்ட திறமைகளைக் கொண்டவரும்,இலங்கையில் நாடறிந்த அறிவிப்பாளராக பணியாற்றியவருமான இராஜமுகுந்தனின் வலைப் பூவிற்கு நீங்களும் செல்ல வேண்டுமா? வல்வை வெளித் தென்றல் சுமந்து வரும் இனிய தமிழ்க் காற்றைச் சுவாசிக்க வேண்டுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

நீங்களும் புதிய பதிவரா? உங்கள் வலைப் பூக்களும் பதிவர் அறிமுகம் பதிவில் இடம் பெற வேண்டுமா? பின்னூட்டம் மூலம் அறியத் தாருங்கள். அல்லது nirupan.blogger@gmail.com எனும் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இப் பதிவின் நோக்கம் ஏனைய மதங்களை அவதூறு செய்வதல்ல. இப் பதிவில் தனிமனித் தாக்குதல் எதுவும் இடம் பெறவில்லை. இப் பதிவிற்கு தொடர்பின்றி நூலாதாரங்களை மையப்படுத்தி மதம் பரப்பும் நோக்கில் பின்னூட்டமிடுவோரின் பின்னூட்டங்கள் உடனடியாக அகற்றப்படும்! 

உங்கள் Apple iPhone, Android Mobile, மற்றும் Smart Phone Devices இல் தமிழ் வானொலி கேட்கனுமா? புத்தம் புதிய வானொலியாம் புரட்சி இணைய வானொலியோடு இணைந்து கொள்ளனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்தப் பதிவினை எழுதுவதற்குரிய ஐடியாக்கள் யாவும் நண்பன் ஐடியா மணியின் ஐடியாப் பெட்டியிலிருந்து ரகசியமாகத் திருடப்பட்டவை. இதனால் அவருக்கு ஒரு ஸ்பெசல் பாராட்டினை உங்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன். 

35 Comments:

நெற்கொழுதாசன் said...
Best Blogger Tips

உண்மையாவோ .....................
அப்புறமா மன்னர்கள் அரசர்கள் என அவர்களும் அப்படியா ?
முடியல்லப்பா முடியல்ல

ராஜ் said...
Best Blogger Tips

நீங்க சொல்லுற லாஜிக் சரியா இருக்கிற மாதிரி தான் இருக்கு.. (ரொம்ப சீரியஸ் ஆக தான் பாஸ் சொல்லுறேன்)
சிரிக்காதீங்க...சிரிக்காதீங்க...!!!

நிரூபன் said...
Best Blogger Tips

மைனஸ் ஓட்டு குத்திய சிந்திக்கவும் உண்மைகள் உளறல் நாயகன் வாழ்க!

Yaathoramani.blogspot.com said...
Best Blogger Tips

வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்
அதை அருமையாக ரசிக்கும்படியாக எழுதுகிறீர்கள்
ரசித்துப்படித்தேன் தொடா வாழ்த்துக்கள்

நிரூபன் said...
Best Blogger Tips

@நெற்கொழுதாசன்
இப்படிச் செய்தால் தானே பொழைப்பை ஓட்டலாம் சகோ

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ்

நன்றி நண்பா..
நான் சீரியஸ் ஆக மாட்டேன். அவங்க தான் சீரியஸ் ஆகிடுவாங்க

நிரூபன் said...
Best Blogger Tips

@Ramani
நன்றி ஐயா

மர்மயோகி said...
Best Blogger Tips

நீ சொன்னாலும் சொல்லாட்டியும், பிறப்பால் அனைவரும் முஸ்லிம்கள்தான்..
வளர்ப்பில்தான் கண்ட கண்ட கல்லையும் மண்ணையும் சிலையும் வணங்கி அவர்கள் மற்ற மதத்தவர்களாகிவிடுகின்றனர்..
சிவபெருமானும், பிள்ளையாரும், கிருஷ்ணனும் முஸ்லீம்கள் என்பதில் முஸ்லிம்களுக்கு எந்த பெருமையும் இல்லை..அதை வைத்து பதிவுபோட்டு பிரபலமாக நினைக்கிற உன்னைமாதிரி கூமுட்டைகளுக்குதான் இந்த செய்திகள் கிடைக்கின்றன..

//இயேசு நாதரும் ஒரு இஸ்லாமியராம். இதையும் அந்த அமெரிக்கப் பேராசிரியர் சொல்லியிருக்கார் அப்படீன்னு சைட் கேப்பில் கெடா வெட்டிப் பொங்கல் வைக்கிறாங்கோ.//
இயேசு நாதர் என்று கிருஸ்துவர்களால் கொண்டாடப்படுபவர் - எனகளது இஸ்லாமிய நம்பிக்கையின்படி - இஸ்லாத்தை மக்களுக்கு சொல்லவந்த இறைவனின் தூதர்தான்...- நீ நக்கலடிப்பதாலோ கிண்டலடிப்பதாலோ இஸ்லாத்திற்கும் அதன் உறுதியான நம்பிக்கைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது...

Anonymous said...
Best Blogger Tips

அத விடுங்க பாஸ், உலகம் 2012 டிசெம்பர்ல அழிய போகுதம்.. நல்லவுங்க மட்டும்தான் எஞ்சி இருப்பாங்களாம்... யாரோ ஒருத்தர் அழைக்கிறாராம்.. என்ன சொல்றீங்க போவோமா?

Anonymous said...
Best Blogger Tips

அதிகம் படித்து மதப்பித்தும் சேர்ந்துக் கொண்டால் இப்படி எல்லாம் யோசிக்கத் தூண்டும் !

முதலில் உங்கள் பதிவில் சில இடங்களில் மாறுபடுகின்றேன். சிவன் இந்துக்களின் முழுமுதற்கடவுள் அல்ல --- சைவர்களின் முழுமுதற் கடவுள் !!! இந்து மதம் என்றால் அதில் சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், கணபாத்யம், சாங்கியம் எனப் பிரிவுகள் வருகின்றன.. ஆகவே மற்ற பிரிவினர் சிவனை முழுக் கடவுளாகவோ, கடவுளாகவோ ஏற்பதில்லை !!

அடுத்து அமெரிக்க சைக்கோவுக்கு வருவோம்... இஸ்லாமியர்களின் இந்தப் பிரச்சாரம் புதிதல்ல !!!

இஸ்லாம் தோன்றிய போது அவர்களுக்கு பெரிதும் தெரிந்த மதம் யூதம் / கிருத்தவம் ... அவற்றைக் காப்பியடித்தே இஸ்லாம் உருவாக்கப்பட்டது. உலகின் அனைத்து இனங்களுக்கும் பல தூதர்களை அனுப்பினோம் எனக் கூறிவிட்டு, இஸ்லாமிய குரானில் 90 சதவீத தூதர்கள் யூத இனத்துக் காரர்களாகவே இருப்பார்கள்.

இஸ்லாம் பிற இடங்களுக்கு பரவிய போது அந்த மண்ணின் கடவுளர்களை ஏற்றுக் கொள்ளவில்லை, அழிக்கவே செய்தது.. காலிப்கள் அரசாங்கமும், ஓட்டோமேன் அரசாங்கமும் அதனையே செய்தது.

கடைசியில் பகாவுல்லா என்ற மனிதர் பகாய் என்ற மதத்தை நிறுவினார். அவர் சொன்னார் முகம்மது மட்டுமல்ல, இயேசு, சோராஸ்டரர், கிருஷ்ணர் போன்றவர்களும் இறைத்தூதர்கள் என. அவற்றைத் தொற்றிக் கொண்டனர் பிற்கால முஸ்லிம்கள். குறிப்பாக இந்தியாவில் தோன்றிய அகமதியா முஸ்லிம்கள் கிருஷ்ணர், ராமர் போன்றவர்களும் இறைத்தூதர்கள் எனப் பிரச்சாரம் செய்தனர் ...

இதேப் பாணியை இன்று வகாபிகளும் எடுத்துக் கொண்டுள்ளனர். சாகிர் நாயக் போன்றோர் தமக்கு சாதகமான வேதங்களை மட்டும் மேற்கோள் காட்டுவது வழக்கம், அவர் மேற்கோள் காட்டும் வேத பாசுரம் எல்லாம் அகமதியாக்கள் எழுதிய நூலில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என்பது பலருக்கு தெரியாது !!!

முருகன் / ஸ்கந்தன் என்பதே ஒன்றா அல்லது வெவ்வேறா என்ற சர்ச்சை இருக்கும் நேரத்தில் !!! முருகன் கூட ஒரு இறைத்தூதர் என கவிக்கோ அப்துல் ரகுமான் ஒருமுறை அளந்துவிட்டார். அடப்பாவமே ! இவ்வளவு பெரிய எழுத்தாளர் கூட உளறுகின்றாரே என அப்போது தான் தோன்றியது.

முருகன், சிவன் எல்லாம் இறைத்தூதர்கள் என்றால் குரானை கடவுள் ( நம்புவோமாக ) கொடுக்கும் போது அவர்களின் குறிப்புக்களும் வந்திருக்குமா அல்லவா ? ஆனால் வரவில்லை. ஏனெனில் முகம்மதுக் காலத்தில் முகம்மதுவுக்கு இவர்கள் குறித்து ஒன்றும் தெரியாமல் இருந்ததே காரணம். தெரிந்திருந்தால் சேர்த்து அடித்துவிட்டுருப்பார் !!!

Anonymous said...
Best Blogger Tips

//அதிகம் படித்து மதப்பித்தும் சேர்ந்துக் கொண்டால் இப்படி எல்லாம் யோசிக்கத் தூண்டும் !//

இது உங்களை சொன்னதல்ல ! அந்த அமெரிக்க ஆசாமியைக் குறித்து சொன்னது !

கும்மாச்சி said...
Best Blogger Tips

வித்தியாசமான சிந்தனைதான்.

சார்வாகன் said...
Best Blogger Tips

வணக்கம் சகோ நலமா,

மத பிரச்சாரத்தில் இது எல்லாம் சகஜமப்பா!!!.
இது நமக்கு புதிய விடயம் இல்லை என்றாலும் நாம் கேட்கும் ஒரே கேள்வி.

தெய்வங்களில் கூட ஆண் தெய்வத்தை எங்க ஆள் என்பவர்கள் ஏன் நம் அன்னையர் ஆதிபராசக்தி காளியாத்தா,மாரியாத்தா, போன்றவர்களை சொல்வது இல்லை??

இதில் கூட ஆணாதிக்கமா!!!!!!!!!!!!!
*****
இது வேறு மகாகவி பாரதியாரும் மத ஒற்றுமை குறித்து நம் த்வா சகோக்களின் கருத்தையே மாறு பட்டு கூறி இருக்கிறார். இது மிக அருமையாக இருக்கிறது.

ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத்திருக்கும் முழுவெண்மேனியான்
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்துணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்
****
இப்படி ஏதாவது சொன்னால் கூட பரவாயில்லை!!! ஆனால்...............

நன்றி!!!!!!!!!!!!!!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!அருமையான வகுப்புணர்வுப் பகிர்வு!அல்லாஹூ அக்பர்!

காரிகன் said...
Best Blogger Tips

உலகில் உள்ள எல்லாருமே இஸ்லாமியர்கள் என்று சில முஸ்லிம்கள் சொல்வது இப்போது வழக்கமாகிவிட்டது.ஆதிமனிதன் கூட ஒரு முஸ்லிமாகத்தான் இருந்தான் என்பது கூட அவர்களது மத நம்பிக்கை என்று விட்டுவிடலாம்.ஆனால் ஏசு புத்தர் விஷ்ணு சிவன் முருகன் அலெக்சாண்டர் நெப்போலியன் ஹிட்லர் ராஜா ராஜ சோழன் நீல் ஆர்ம்ச்டாங் வில் ஸ்மித் என்று சகட்டுமேனிக்கு இவங்க எங்க ஆளுதான் என்று வெட்கமில்லாமல் பிதற்றுவது கேட்க சகிக்கவில்லை.யூத கிருஸ்துவ மதங்களுக்கு வெகு காலத்திற்கு பிறகு தோன்றிய மதம் இஸ்லாம் என்பதை இவர்கள் நம்பமாட்டார்கள்.மாறாக இஸ்லாமியராக இருந்த எல்லோரும் வழிதவறி சென்றுவிட்டதாக சொல்வார்கள்.இஸ்லாமின் மிக முக்கியமான கடமையான முகமதுவை நம்புவது எப்படி அவர் தோன்றுவதற்கு முன்பே பலராலும் செய்யப்பட்டிருக்கும் என்று கேள்வி கேட்டால் பம்மி பதுங்கி அது அப்படிதான் என்று சாகிர் நாயக் பீ ஜே போன்று உளறுவார்கள். எல்லாம் மதம் எனும் அபின் செய்யும் வேலை.

காரிகன் said...
Best Blogger Tips

உலகில் உள்ள எல்லாருமே இஸ்லாமியர்கள் என்று சில முஸ்லிம்கள் சொல்வது இப்போது வழக்கமாகிவிட்டது.ஆதிமனிதன் கூட ஒரு முஸ்லிமாகத்தான் இருந்தான் என்பது கூட அவர்களது மத நம்பிக்கை என்று விட்டுவிடலாம்.ஆனால் ஏசு புத்தர் விஷ்ணு சிவன் முருகன் அலெக்சாண்டர் நெப்போலியன் ஹிட்லர் ராஜா ராஜ சோழன் நீல் ஆர்ம்ச்டாங் வில் ஸ்மித் என்று சகட்டுமேனிக்கு இவங்க எங்க ஆளுதான் என்று வெட்கமில்லாமல் பிதற்றுவது கேட்க சகிக்கவில்லை.யூத கிருஸ்துவ மதங்களுக்கு வெகு காலத்திற்கு பிறகு தோன்றிய மதம் இஸ்லாம் என்பதை இவர்கள் நம்பமாட்டார்கள்.மாறாக இஸ்லாமியராக இருந்த எல்லோரும் வழிதவறி சென்றுவிட்டதாக சொல்வார்கள்.இஸ்லாமின் மிக முக்கியமான கடமையான முகமதுவை நம்புவது எப்படி அவர் தோன்றுவதற்கு முன்பே பலராலும் செய்யப்பட்டிருக்கும் என்று கேள்வி கேட்டால் பம்மி பதுங்கி அது அப்படிதான் என்று சாகிர் நாயக் பீ ஜே போன்று உளறுவார்கள். எல்லாம் மதம் எனும் அபின் செய்யும் வேலை.

இந்திரா said...
Best Blogger Tips

ஒரு புறாவுக்குப் போரா??
ஒரே அக்கப்போரா இருக்கே..
:-)

இராஜ முகுந்தன் said...
Best Blogger Tips

நன்றிகள் நிருபன். மதம் எனும் மதம் பிடித்த மத யானைகள் இருப்பது பின்னூட்டத்திலேயே தெரிகிறது.....

சிரிப்புசிங்காரம் said...
Best Blogger Tips

ஹூம்...எப்பிடியெல்லாம் பொழப்பு நடத்த வேண்டியிருக்குன்னு பாருங்க....
பன்னிக்கு பொறந்த பயலுங்க... தன்னொட பொறப்பு ரகசியம் தெரிஞ்சிடும்ன்னுதான் எங்களுக்கு பன்னி ஹராம்ன்னு சொல்லுவானுங்க....சரி..சரி இத எழுதின ஒங்களுக்கு அவனுகளோட சாந்தியும் அவ அக்கா சமாதினியும் கெடைக்கட்டும்.....என்னது அவளுங்கள வச்சிகிட்டு என்ன பண்ணுறதா......???? என்ன கேள்வி இது..??கேணத்தனமா இருக்கு..எதாச்சும் பண்ணுங்க தம்பி...நாரே தஹ்பீர்..குல்லாஹு அஹ்பர்

மொட்டைபையன் said...
Best Blogger Tips

அப்படி இருந்தா அவனுங்க மதத்துக்கு நம்ம நந்தியெம்பெருமான், திருமூலர் அல்லது அப்பர்,ஞானசம்பந்தர், அகஸ்த்தியர்,பட்டினத்தார் இப்படி யாராச்சும்ல்ல தலவரா ஆகியிருக்கனும்...இந்த மொட்டபையன் எப்படி...????ஆனாகும் இந்த இக்பால் செல்வன் நல்லாதான் ஆராய்ச்சி பண்ணீயிருக்காரு...........வாழ்த்துக்கள்....

நிரூபன் said...
Best Blogger Tips

அன்பு நண்பர்களே,
வாசகர் கருத்துப் பகுதியினூடாக இரு நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்கள்.
அவர்களின் கருத்துக்களையும் இங்கே பகிர்கிறேன்.
சரவணகுமார் எனும் அன்பர் அனுப்பிய கருத்து இது,,

saravana kumar
**********@gmail.com
இந்துக்கள் அனைவரும் இஸ்லாமியர்களே - அதிர்ச்சியூட்டும் ஆய்வு!
தங்களது பதிப்பு என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது, இது போல எந்த விசயத்தையும் பெரிது படுத்த வேண்டாம். மடத்தனமான இது போன்ற பதிவுகள் சில முட்டாள்களிடம் சீக்கிரமே சென்று சேரும்.

பெரும் பாரம்பரியம் உள்ள இந்து மதம் அழிவது என்பது இவ்வுலகில் நடக்கமுடியாது ஒன்று, இதை அழிக்க எவனும் பிறக்கப் போவது இல்லை.

நன்றிகள் பல

நிரூபன் said...
Best Blogger Tips

அடுத்து, மின்னஞ்சல் ஊடாக,
லசாந்தன் அவர்களும் தன்னுடைய கருத்தினை அனுப்பியிருந்தார்.

ATHIRCHIYAANA PATHIVU !!1 INTHU MATHATHTHAI IZHIVU PANNA VAENDAAM !!!

நிரூபன் said...
Best Blogger Tips

@மர்மயோகி
அதான் உங்க மைனஸ் ஓட்டு வீரத்தைப் பார்த்தாலே தெரிகிறது.
என்னா ஒரு கொல வெறி உங்களுக்கு!

இன்னும் இன்னும் புதிதாக புதிய வரலாறுகளை நீங்கள் உருவாக்க வாழ்த்துக்கள்

நிரூபன் said...
Best Blogger Tips

@மொக்கராசு மாமா

இப்படியும் இருக்கா? இவர்களுக்கும் ஒரு செம கடி கொடுத்தாப் போச்சு..
அடுத்தடுத்த பதிவுகளில் ஆரம்பிச்சிடுவோம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

வணக்கம் சகோ,
உண்மை தான்,
//முதலில் உங்கள் பதிவில் சில இடங்களில் மாறுபடுகின்றேன். சிவன் இந்துக்களின் முழுமுதற்கடவுள் அல்ல --- சைவர்களின் முழுமுதற் கடவுள் !!! இந்து மதம் என்றால் அதில் சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், கணபாத்யம், சாங்கியம் எனப் பிரிவுகள் வருகின்றன.. ஆகவே மற்ற பிரிவினர் சிவனை முழுக் கடவுளாகவோ, கடவுளாகவோ ஏற்பதில்லை !!
//


தவறாக எழுதி விட்டேன், இப்போது திருத்திக்கிறேன் நண்பா.

நல்ல கருத்துக்களை வரலாற்று ஆதாரங்களுடன் இணைத்துச் சொல்லியிருக்கிறீங்க.
நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்
/அதிகம் படித்து மதப்பித்தும் சேர்ந்துக் கொண்டால் இப்படி எல்லாம் யோசிக்கத் தூண்டும் !//

இது உங்களை சொன்னதல்ல ! அந்த அமெரிக்க ஆசாமியைக் குறித்து சொன்னது !//

இது கூடப் புரியாமலா? இம்புட்டு காலமா நாம பழகிறோம் நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@கும்மாச்சி
நன்றி சகோ

நிரூபன் said...
Best Blogger Tips

@சார்வாகன்
நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீங்க.
நன்றி சகோ

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.

ஹி..ஹி..
நன்றி ஐயா

நிரூபன் said...
Best Blogger Tips

@காரிகன்
தங்களின் இனிய கருத்திற்கும் நன்றி நண்பா..

நிரூபன் said...
Best Blogger Tips

@இந்திரா

என்ன செய்வது? இப்படிச் செய்தால் தானே அடுத்தவன் மதத்தை வீழ்த்தி தாம் வாழலாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Muhunthan Rajadurai
நன்றி அண்ணா,
இவர்களுக்கு இதுவே பிழைப்பாகிப் போச்சு

நிரூபன் said...
Best Blogger Tips

@சிரிப்புசிங்காரம்

வணக்கம் சிங்காரம் சார்,
நீங்க தான் புரட்சி எப்.எம் இல நிகழ்ச்சி பண்ணுவீங்களா?
உங்க கருத்திற்கும் நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@மொட்டைபையன்
உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

பதிவினைப் படித்த சொந்தங்களுக்கும்,
கருத்துரை வழங்கிய அனைவருக்கும்.
வாக்களித்த அனைவருக்கும்
மைனஸ் ஓட்டு குத்தினாலும் வழமை போலவே அதிக ஹிட் வரும் வண்ணம் பதிவிற்கு ஊறுகாயான மதவாதிகள் - மத வெறியர்கள் அனைவருக்கும் நன்றிகள்! நன்றிகள்!
அடுத்த பதிவில் சந்திப்போம்!

அம்பாலிக்கா வாங்க! சிம்பாலிக்கா சொல்றேன்! மதம் பரப்புவது எப்படி என்பது தான் அடுத்த பதிவு!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails