Sunday, August 12, 2012

மக்களே உஷார்! உள்குத்து பதிவெழுத ஊர்மிளா கெளம்பிட்டாங்கோ!

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

முற் குறிப்பு: இந்தப் பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவையான ஒரு பதிவு. இப் பதிவின் நோக்கம் யார் மனதையும் நோகடிப்பதல்ல. பதிவு பிடிக்காதவர்கள் இந்த அறிமுகத்தைப் படித்து விட்டு, எஸ்கேப் ஆகலாம். இவ் அறிமுகத்தின் கீழே அபாயக் குறியீடுகள், சிகப்புக் கோடுகள் உள்ளன. மனதில் தைரியம்- தெம்பு உள்ளவர்கள், சாதிக்க விரும்பும் அன்பர்கள், எல்லோரும் இந்தச் சிகப்புக் கோட்டினைத் தாண்டி வரலாம். பதிவில் உள்ள கருத்துக்கள் நேரடியாக உங்களில் யாரையாவது தாக்குகிறது, பதிவில் உள்ள கருத்துக்கள் எனக்கே குத்தலாக உள் குத்துடன் எழுதப்பட்டிருக்கிறது என்று பஞ்சாயத்துப் பண்ண சால்வையைத் தோளில் போடுற ப்ளாண் உள்ள உள்ளங்கள் இப்பவே எஸ் ஆகிடுங்க. சிகப்புக் கோட்டைத் தாண்டி வந்தீங்க- ரொம்ப சீரியஸ் ஆகிடுவீங்க! இனிப் பதிவிற்குள் போவோமா.
டிஸ்கி: சிகப்புக் கோடு உபயம்:  மாத்தியோசி மணி)
_________________________________________________________________________________
ன் பாட்டிக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை, தானும் ஒரு ப்ளாக்கர் ஆகனுமாம். 

ஒரு நாள் பூரா வேலை செஞ்ச களைப்போடை,  வேலையால வந்து மாலைச் சாப்பட்டைச் சாப்பிட்ட பின்னர் கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்து நம்ம நண்பர்களின் பதிவினைப் படிப்போம் என்று வெளிக்கிட்டால், அந்தக் கிழவி...ஒரு வித அதட்டலுடன் என்னைக் கூப்பிட்டது(அழைத்தது)

‘எடேய் பேராண்டி.... எடேய் பேராண்டி! இங்கே வாடா தம்பி”

என்ன அம்மம்மா! என்னயா  அழைத்தீங்க? என்ன விசயம் சொல்லுங்கோவன்? என்று கேட்டேன்.

 ”நானும் கொஞ்ச நாளாப் பார்க்கிறன், நீ அடிக்கடி கம்பியூட்டரிலை போய் உட்காருறாய். நீ என்ன கம்பியூட்டரையே கலியாணம் பண்ணப் போறியே? கம்பியூட்டரே உன்ரை மனுசி? என இழுத்து விட்டா அம்மம்மா

"இல்லை அம்மம்மா. அது வந்து நான் ப்ளாக் எழுதுறேன்".

"என்ன ப்ளாக் எழுதுறியோ. நீ மட்டும் தான் ப்ளாக் எழுதலாம் என்று உன்ரை மனசிலை நினைப்போ, அப்போ நான் மட்டும் என்னவாம், வீட்டிலை உட்கார்ந்து மூன்று வேளையும் சாப்பிட்டுப் போட்டு, சரிஞ்சு படுக்கிறதே. எனக்கும் உந்த ப்ளாக் வித்தையளைச் சொல்லித் தரலாம் தானே தம்பி நிரூபன்"

"கிழிஞ்சுது போ... ஏன் கிழவி, உனக்குச் சாகப் போற வயசிலை, அதுவும் எழுபத்தியாறு வயதிலை ப்ளாக் கேட்குதோ. யம தர்மன் உன்னட்டை எப்ப வாறார் என எழுத உனக்கு ப்ளாக் கேட்குதோ?"

"அடேய் பேராண்டி, உன்னையைப் பிச்சுப் புடுவன்! பிச்சு. சாகப் போற வயசிலை சாதிக்கக் கூடாது என்று யாராச்சும் சொல்லியிருக்காங்களே! படுவா! வர வர என்ரை மரியாதையும் போகுது. உனக்கு ப்ளாக் படிச்சு வாய் நீண்டு போய்ச்சு. இரு உன்ரை வாயை நானும் ஒரு ப்ளாக் பதிவரா வந்து அடக்கிறன். சும்மா பீலா வுடுற வேலையை நிறுத்திட்டு, ப்ளாக்கர் ஆக வேணும் என்றால் நான் என்ன பண்ணனும் என்று சொல்லு பேரா"

"கிழவி, ப்ளாக் என்பது ஒரு போதை மாதிரி. எழுதத் தொடங்கிட்டியோ விடமாட்டாய், ப்ளாக் எழுதத் தொடங்கினால், நீ லேசிலை நிறுத்த மாட்டாய் அம்மம்மா. உனக்கு வாசகர்கள் பெருகும், நீ பிரபலம் ஆகிட்டாய் என்றால் உனக்கு கோயில் கட்டி கும்புடுற அளவிற்கு நம்ம ஆளுங்க பின்னாடி வருவாங்க. அப்புறம் இண்டைக்கோ, நாளைக்கோ என்று போகப் போற உன்ரை சீவனும்(உயிரும்) போகாமல் அந்தரித்துக் கொண்டு இருக்கும். நீ படுக்கையிலை இருந்து கொண்டும், பம்பரமாய் ப்ளாக் எழுதுவாய் கிழவி".

"அடேய் பொடிப் பயலே! நான் என்ன கேட்கிறன், நீ என்ன சொல்கிறாய். ப்ளாக்கர் ஆகனும் என்றால் என்ன பண்ணனும்?"

கிழவி! வர வர உன் தொல்லை அதிகமாகிக் கொண்டு போகுது. கூகிளில் எக்கவுண்ட் இருக்கனும், உனக்கென்று ஒரு சொந்த ப்ளாக் இருக்கனும்! இவ்ளோ விபரமாக் கேட்கிறியே கிழவி, உன் கிட்டை சொந்தச் சரக்கிருக்கா? ப்ளாக்கிலை எழுத ஏதாச்சும் கைவசம் இருக்கா! உனக்கு கம்பியூட்டரிலை ஏதும் தெரியுமா? அதை முதலில் சொல்லு கிழவி!

"அடேய் நிரூபா, நேற்றுப் பெய்த மழையிலை- இன்றைக்கு முளைச்ச நீ வந்து எனக்கு கம்பியூட்டர் தெரிஞ்சிருக்கோனும் என்று சொல்லுறாய். நான் எல்லாம் அந்தக் காலத்திலை எஸ் எஸ் எஸ்ஸி (SSSC) பாஸ் பண்ணின ஆளு. ப்ளாக் எழுத என்ன கம்பஸிலை படிச்சே இருக்கனும்?
என் கிட்டேவா. ஏன் என்கிட்ட மேட்டர் இல்லையா. அவிட்டு வுடுறன். கேள் பொடியா.
நாலு கவிதை, ரெண்டு கட்டுரை, ஒரு பாட்டு.. இதெல்லாம் தெரிஞ்சிருக்கனும்."

நிறுத்து கிழவி, இந்த ரேஞ்சிலை நீ போய்க் கொண்டிருந்தால் எப்போ நீ பிரபலம் ஆகிறது. எப்போ நீ ஹிட்ஸ் அள்ளுறது?

"கொஞ்சம் பொறு நிரூபா. 
எனக்கென்ன பதிவுலக மேட்டர் தெரியாது என்று நினைச்சிட்டியே. எட்டி உதைச்சால் பல்லுப் பறக்க நிலத்திலை போய் விழுவாய். இனி வாயை மூடிக் கொண்டு நான் சொல்லுறதைக் கேட்கனும். 

ப்ளாக் தொடங்கிப் பிரபலமாக என் கிட்ட வழி இல்லை என்றே நீ நினைக்கிறாய். என் ரகசியத்தை எப்படியாவது கேட்டு சைட் கப்பிலை- நீ பெரிய ஆள் ஆகிடலாம் என்று பார்க்கிறாய் போல இருக்கு. இருந்தாலும் உனக்கென்ற படியால், காதைக் கொஞ்சம் கிட்டக் கொண்டு வா..

ப்ளாக் தொடங்கி எழுத மேட்டர் இல்லை என்றாலும், முதலில் எல்லோர் ப்ளாக்கையும் படிக்கனும், எல்லா இடத்திற்கும் போய் வரனும், ப்ளாக்கிலை யார் ரொம்ப பிரபலமா இருக்கிறாங்களோ, அவங்களோடை பதிவில்- குற்றம்  குறை கண்டு பிடிக்கனும், அந்தக் குறையை வைத்து விமர்சிக்கத் தொடங்கனும். மத்தவங்க சந்தோசமாக எந்த எந்த ப்ளாக்கில் இருக்கிறாங்களோ அங்கே எல்லாம் போய் அவங்கள் என்ன மேட்டர் பேசுறாங்க என்று படித்துப் பார்த்து, அதிலிருந்து ஒரு மேட்டரை செலக்ட் பண்ணி என் வலையில் தலைப்பா வைத்து அவங்களை கிழி கிழி என்று கிழிச்சு நாறடிக்கனும். 

இதையும் வைச்சு நான் பிரபலம் ஆக முடியலை என்றால், சொந்த சும்மா இருந்து எழுதுற- சிவனே என்று போய்க் கொண்டிருக்கிற பதிவர்களினை வலிய அழைத்து வம்பிழுக்கிற மாதிரி ஒரு பதிவு போடனும். அந்த மேட்டராலையும் ஹிட்ஸ் ஏறலை என்றால், ஒருவரின் பதிவில் உள்ள பின்னூட்டங்களில் போய் உன் கருத்தை திணிக்கனும். அந்த கருத்துக்கள் மூலம் சண்டையை வர வைக்கனும். சண்டையை மூட்டிப் போட்டு,  அந்தப் பதிவில் தவறு என்று உன் ப்ளாக்கில் எழுதனும். இதுவும் வேலைக்கு ஆகலைன்னா யாருக்கும் தெரியாம இன்னோர் பெயரில ஓர் ப்ளாக் தொறந்து, அதன் பிறருக்கு தெரியா வண்ணம் உனக்கு நீயே விருது கொடுக்கனும். மத்தவங்க இப்படி விருது கொடுப்பது உன் சித்து வேலைன்னு கண்டு பிடிச்சிட்டாங்க என்றால் உடனடியாகா அந்த ப்ளாக்கை இழுத்து மூடனும்.  இப்ப சொல்லு நிரூபா! எப்படி என் ஐடியா?"

"உன்ரை ஐடியாவும், நீயும் கிழவி! இந்த ரேஞ்சிலை நீ ப்ளாக் தொடங்கினாய் என்றால், தொடங்கி மூன்றாம் நாளே நீ தான் ஈ ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும்."

"யாரைப் பார்த்து, என்ன வசனம் பேசுறாய் பேராண்டி! தனிக் கடை என்றாலும், பொழைப்பை ஓட்டிட மாட்டேனா. நானே எழுதிப் போட்டு, அதை நானே திரும்பத் திரும்ப வாசித்து ஹிட் கவுண்டர் எண்ணிக்கையினை, பார்வையாளர் வருகையினை ஏத்திட மாட்டேனா என்ன. 

"மக்கள் வரலைன்னா பரவாயில்லைன்னு; 
எப்பவோ ஒரு நாள் விகடன் குட் ப்ளாக்கில என் ப்ளாக் வந்திச்சோ அந்த செய்தியை ஒவ்வோர் வாரமும் ஒவ்வோர் பதிவு மூலமா எழுதி நான் பதிவுலகில் செய்த சாதனைகள் என்று பட்டியல் போட்டு, தமிழ்மணம் டாப் 20 இல என் பதிவுகள் பல தடவை வந்திருக்கு என்று சுய தம்பட்டம் அடித்து, எனக்குள்ள தாழ்வு மனப்பான்மையை பிறரும் அறியனும் எனும் நோக்கில் ஓசில பிரச்சாரம் பண்ண மாட்டேனா?"

"அடுத்த மேட்டர் என்ன என்று கேட்க உனக்கு ஆவல் வரவில்லையா பேரா. பதிவர்களைத் திட்டி, அரசியல் கட்சிகளுடன் தொடர்புபடுத்தி சைட் கப்பிலை எலக்சன் முடிவு வர முன்னாடி புகுந்து விளையாடனும். அப்போ தான் நமக்கும் ஹிட்ஸ் எகிறும், நாமளும் அரசியல் கட்சி ஆள் என்று பந்தா காட்டலாமில்ல.

பதிவோடை தரத்தை, பதிவில் உள்ள தவறுகளை யாரு இப்போ உற்றுப் படிக்கிறாங்க. பதிவினைப் படிக்காமல் பின்னூட்டம் போட்டுத் தங்களின் பதிவுகளைப் படிக்க வைக்க, ஓட்டு வாங்க் ஒரு கூட்டம் அலையுது தானே, அவங்க ஆதரவு என் பதிவிற்கு கண்டிப்பா கிடைக்கும் பேரா. நான் என்ன மேட்டர் எழுதினாலும், அதனைச் சரி என்று சொல்லி என்னைப் புகழ்ந்து பின்னூட்ட என் பேரப் பிள்ளைகள் இருக்கிற உலகத்தில் ஹிட்ஸைப் பற்றியோ, இல்லை பாலோவர்ஸை பற்றியோ நான் ஏன் கவலைப் பட வேணும்?

இதையும் மீறி நான் பாப்புலர் ஆகலை என்றால்,  கலாச்சாரம், சமூகம் முதலியன பதிவர்களால் சீரழிகிறது என்று பொங்க வேணும். அப்போ தான் சிங்கில் கப்பில் நாம சிக்ஸர் அடிக்கிறதா முடியுமில்லே?”

"கிழவி இவ்வளோ, விபரமாப் பேசுறியே, இம்புட்டு மேட்டரையும் எப்பூடிக் கற்றுக் கிட்டாய் கிழவி? யார் உனக்குச் சொல்லித் தந்தது?
பதிவுலக பில்லாக்கள் யாருடனாவது உனக்கு ரகசியத் தொடர்பிருக்கோ கிழவி!”

"தம்பி நிரூபா, உன்னோடை வயசு, என்னோடை அனுபவம்! நீ ப்ளாக் எழுத கம்பியூட்டரை ஆன் பண்ணும் நேரம் பார்த்து,  நான் மறைஞ்சிருந்து உன் கம்பியூட்டர் பாஸ்வேர்ட்டை நோட் பண்ணியெல்லோ வைச்சிருக்கிறேன்!
இது எப்பூடி......."

"ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியாக என் ப்ளாக்கையே நீ கடிச்சுப் போட்டியே கிழவு! உண்மையிலே நீ வெகு விரைவில் பிரபலம் ஆகிடுவாய்! இன்றே பதிவெழுத தொடங்கு கிழவி!

எல்லாம் இருக்கட்டும், ப்ளாக்கிற்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க அம்மம்மா?"

"என் ப்ளாக்கிற்கோ, தூசனம்!"

"ஆனால் இங்கை தானே உதைக்குது, நீ ப்ளாக்கிற்கு வைச்சிருக்கிற தலைப்பு விவகாரமா இருக்கே அம்மம்மா. உன் பதிவினைத் தூக்கிடுவாங்களே கிழவி?"

 யார் சொன்னது..

"தூ............. என்றால் மழை......
சனம் என்றால் மக்கள்!

என் ப்ளாக்கின் அர்த்தம் என்ன என்று இப்பவாச்சும் உன் மர மண்டைக்குப் புரியுதா நிரூபா?
 மக்களுக்கான ப்ளாக் இது!
இது எப்புடிப்பேரு?"

"ஐயோ.......கிழவி, உன் கூடப் பேசிக் கொண்டிருந்தால், எனக்கு லூசாக்கிடும், ஆளை விடு!
ஐ ஆம்.......எஸ் கேப்!"

டிஸ்கி: இவையாவும் என் பாட்டியின் உணர்வலைகள்! யாராச்சும் சண்டை போட விரும்பினீங்க, உடனடியாக என் பாட்டியுடன் தொடர்பு கொள்ளுங்க.
தொல்லை பேசி: 0094-777111444


உறவுகளே, இணையத்தில் புரட்சி வானொலி அப்படீன்னு ஒண்ணு இருக்குங்க.

டிசூட்டி: இது ஒரு ரீமேக் பதிவு!

5 Comments:

Yoga.S. said...
Best Blogger Tips

காலை வணக்கம்,நிரூபன்!அருமையாக இருந்தது.///இந்த நம்பருக்கு போன் பண்ணினா,சொர்க்க லோகத்துக்கு ரிங் போகுது!ஹி!ஹி!ஹி!!!

கவி அழகன் said...
Best Blogger Tips

Nalla kilavithan

”தளிர் சுரேஷ்” said...
Best Blogger Tips

நல்லாவே தூசனம்பண்ண சொல்லுங்க உங்க பாட்டியை!

இன்று என் தளத்தில்
இதோ ஒரு நிமிஷம்!
மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
http://thalirssb.blospot.in

சுதா SJ said...
Best Blogger Tips

ஜயோகோ ......... மறுபடியுமா???? துஷி ஒரு மாசத்துக்கு லீவு....... ஹா ஹா.....

'பசி'பரமசிவம் said...
Best Blogger Tips

நீங்க அதட்டி, உருட்டி, மிரட்டினதில் யாருமே உங்க பதிவுக்குள்ள நுழைய இல்ல பார்த்தீங்களா?!

நான் நுழைஞ்சு கமெண்ட்டும் போட்டுட்டேன்.

இந்தக் கிழவனைப் பாராட்டிக் கிழவியை ஒரு பதிவு போடச் சொல்லுங்களேன்?

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails