Thursday, August 2, 2012

தாம்பூலத் தட்டில் தமிழீழம்! கலைஞர் கொடுக்கிறார்! வாங்க வாரீர்!

ஆகஸ்ட் 12ம் திகதி YMCA திடலில் கலைஞர் வழங்குகிறார்! உலக தமிழர்களே அணி திரளுங்கள்! !
இலங்கையில இறுதி யுத்தம் நடந்திட்டு (வைகாசி மாதம் 2009ம் ஆண்டு) இருந்த சமயம் ஓர் காமெடி உலக மக்கள் மத்தில் பரவிக் கொண்டிருந்தது. அப்போது இடம் பெற்ற தேர்தலில் கலைஞர் ஆதரவளித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் தோல்வியடைய நேர்ந்தால் கலைஞர் ஜி தன் வசமுள்ள இறுதி அஸ்திரத்தினையும் யூஸ் பண்ணி தேர்தலில் வெற்றி பெறுவார் என்பது தான் அந்தச் செய்தி. அதனைச் சற்று விரிவாக நோக்கினால், இலவசம் மேல் இலவசம் கொடுத்து தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றும் கலைஞர், தேர்தலில் தன் கட்சி தோல்வியடைய நேர்ந்தால் "தமிழீழத்தையும் இலவசமாக கொடுப்பார்” என்பது தான் அந்தச் செய்தி. 
மகா காமெடியான விடயம் என்னவென்றால், அனுதாப ஓட்டு பெறலாம் எனும் நோக்கில்; கலைஞர் இலவசங்கள் வரிசையில் கூட தமிழீழத்தை வைத்து பார்த்தார். தமிழக மக்களின் உணர்வுகளை இம்மியளவும் அவரால் அசைக்க முடியவில்லை. பின்னர் தமீழ மக்களுக்காக தான் வருந்துகிறேன். ஆனால் பிரபாகரனுக்காக வருந்தவில்லை என அறிக்கை விட்டார். கிளம்பிய எதிர்ப்பலைகள் காரணமாக வயது முதிர்ந்த நிலையில் தான் சரியாகப் பேசுறேனா என யோசிக்க ஆரம்பித்தார். உலகெல்லாம் வாழும் தமிழ் இன உணர்வாளர்களை, மொழிப் பற்றாளர்களை ஒன்று திரட்டி செம்மொழி மாநாடு நடாத்தி பார்த்தார். ம்...ம்ம்.. தமிழர்கள் அசையவேயில்லை!

இப்போது தூங்கும் தமிழர்களை தட்டியெழுப்பலாம் எனும் நோக்கில் ஈழக் கனவினை நேரடியாக கையிலெடுக்கா குறையாக டெசோ மாநாடு எனும் பெயரில் தமிழர்களின் உள உணர்வினைக் கரைக்க நினைக்கிறார் கருணாநிதியார். இம்புட்டு நாளா பல வருட கால அரசியல் முதிர்ச்சி  கொண்டவராய் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் கலைஞருக்கு ஈழ மக்களின் அபிலாஷைகள், ஈழ மக்களின் எதிர்பார்ப்புக்கள், ஈழ மக்கள் வேண்டி நிற்கும் தீர்வு என்னவென்று தெரியாதாம்! ஹி...ஹி..அதனை அறியவா இம்புட்டு பணம் செலவு செய்து ஓர் மாநாடு நடத்த வேண்டும்? 

மானாட மயிலாட பார்க்கும் டைம்மை மீதப்படுத்தி இணையத்தில் தேடினால் கூட அதற்கான பதில் கிடைக்கும் அல்லவா? உலக நாடுகள் வரிசையில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்காக விதிமுறைகள், மனிதாபிமான நெறி முறைகளை கூட மதிக்காமல் தமிழகத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் ஈழ அகதிகளை மிருகங்களை விட கேவலமாக ஆளும் வர்க்கத்தினர் நடாத்துகிறார்களே! இம்புட்டு செலவு செஞ்சு விழா எடுக்கும் பணம் முழுவதையும் அந்த மக்களின் வாழ்க்கை செலவிற்கு கொடுத்தாலாச்சும் சாகும் வயதில் செய்த பாவம் அனைத்தும் கழுவப்பட்டு மோட்சம் கிடைக்கும் அல்லவா கலைஞர்ஜி? 

மக்களே! இலவசங்கள் வரிசையில் இப்போது தாம்பூலத் தட்டத்தில் கலைஞரின் கையில் தமிழீழம் இருக்கிறது. வாருங்கள் புறப்பட்டுச் சென்று பெற்றுக் கொள்வோம்! உலகெல்லாம் வாழும் தமிழினத்தை பிரதிநித்துவம் செய்யும் அனைத்து தலைவர்களையும் அழைத்து கலைஞர்ஜி கலர் பிலிம் காட்டப் போகிறாராம்! நாமும் டெசோ மாநாடு பார்த்து எம்மில் ஒட்டியிருக்கும் அழுக்கினை கழுவுவோம் வாருங்கள் மக்களே! வெற்றிலை தட்டத்தில் கலைஞரின் முன்னே இருக்கும் தமிழீழத்தை எம் கைகளால் ஓடிச் சென்று பற்றிப் பிடிப்போம்! கொஞ்சம் தாங்குவோம்!

மூன்று சுற்று மதில் தாண்டி
முகுந்தன் சேர் வீட்டில் ஓர் நாய் 
நான்கு வேளையும் உண்ணும்,
நம்மை கண்டால் வாலாட்டும்
நான்கு நாள் பேசாது படுத்திருக்கும்
நள்ளிரவில் புத்தி வந்தது போல் ஊளையிடும்!!!
********************************************************************************************************
அன்பு உறவுகளே,
உங்கள் புரட்சி வானொலிக்குரிய பனர் விளம்பரத்திற்கான HTML கோடிங்கை கீழே இணைத்திருக்கிறேன். இதனை உங்கள் வலைப் பூக்களில் இணைத்து ஏனைய தமிழ்ச் சொந்தங்களிடமும் இந்த வானொலியை அறிமுகப்படுத்துவற்கு நீங்களும் உதவலாம் அல்லவா? 

<a href="http://www.puradsifm.com/" target="_blank"><img src="http://i1219.photobucket.com/albums/dd437/nirupans/puradshi-1.gif" border="0" alt="Photobucket"></a>
அன்பு நண்பர்களே, மேலே உள்ள கோடிங்கை, உங்கள் ப்ளாக்கின் சைட் பாரில் Widget பகுதி ஊடாக Add Html பெட்டியில் அட் செய்வதனூடாக எமது வானொலியை பல உறவுகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு நீங்களும் உதவலாம் அல்லவா?

இன்றைய தினம் இலங்கை - இந்திய நேரம் இரவு 08.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரைக்கும் உங்கள் புரட்சி இணைய வானொலியில் நேரடி நிகழ்ச்சிகள் இடம் பெற்றவிருக்கிறது.. நீங்களும், மின்னஞ்சல், தொலைபேசி, பேஸ்புக், Skype, Google Talk ஊடாக இணைந்து கொண்டு உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி மகிழலாம். 

இரவு 08.00 மணிக்கு அறிவிப்பாளர் இராமலிங்கம் ராகவன் தொகுத்து வழங்கும் "காதலா காதலா” நிகழ்ச்சி இடம் பெற காத்திருக்கிறது. அதனை தொடர்ந்து இரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இனிய இடைக்காலப் பாடல்களை நீங்கள் விரும்பி கேட்டு மகிழும் "இதயம் கேட்கும் பாடல்" நிகழ்ச்சி இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை உங்கள் மனதிற்கு பிடித்தமானவர்களுக்கு கேட்டு மகிழலாம். உங்கள் விருப்ப பாடல்களை அனுப்ப puradsifm@gmail.com

புரட்சி எப்.எம் உடன் இணைந்திருங்கள்! 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails