Tuesday, October 18, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 11

இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....

பத்தாவது பாகத்தின் தொடர்ச்சியாக....
ஐயா எப்படி ஒத்த பண்பாடு, ஒத்த மொழிப் பேச்சு உடையவர்கள் என்று எப்படி ஆதாரம் இல்லாது சொல்லுவீங்க. Any Evidence? என நான் கேட்கையில், ஐயா சிரித்தவாறு, பொடியனுக்கு சுமதி டீச்சரிடம் ரெண்டு நாள் படிச்ச இங்கிலீஸ் ஒர்க் பண்ணுது என நக்கல் அடித்தார்.  ஆதாரம் இல்லாமல் நான் ஏதும் சொல்லுவேனோ பேரா? கொஞ்சம் பொறுமையாக கதையினைக் கேள் பேரா எனச் சொல்லியவாறு ஐயா தொடர்ந்தார்.
கற் கருவிகளைப் பயன்படுத்தி நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மக்கள் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பதாக இரும்புக் கருவிகளைப் பயன்படுத்த தொடங்குகிறார்கள்.  இரும்புக் கருவிகளைக் கண்டறிந்து உபயோகிக்கத் தொடங்கிய இம் மக்கள் தம் முன்னைய நாடோடி முறையில் நின்றும் நீங்கி, மீன்பிடி, விவசாயம், வேட்டையாடல் முதலிய தொழில்களைக் கண்டறிந்து செய்யத் தொடங்குகிறார்கள். இந்த இரும்புக் கருவிகளின் பாவனையானது இந்தியாவிலிருந்து மேற்கு கரை வழியாகத் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் பரவியிருக்கிறது.


தமிழ் நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகம் போன்ற பகுதிகளில் நிலவிய பண்பாட்டு அம்சங்களும், இலங்கையின் வடக்கில் மன்னார், கந்தரோடை, ஆனைக்கோட்டை, வேலணை, வட மேற்கில் காரைதீவு, புத்தளம், பொம்பரிப்பு ஆகிய பிரதேசங்களிலும், கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, கதிரவெளி, அம்பாறை முதலிய இடங்களிலும், வன்னியில் பூநகரி, முல்லைத் தீவு, மாமடு, பறங்கியாறு, அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டு அம்சங்களுக்கு இடையிலும் மிகச் செறிவான தொடர்புகள் இருப்பதனை வரலாற்று ஆசிரியர் "ஸூதர்சன் ஸெனிவிரத்ன" அவர்கள் தன் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார் எனச் சொல்லிப் பெரு மூச்சு விட்டார் ஐயா. 


கற் காலத்தில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தொடர்பில் இதுவரை எந்த வித தடயங்களும் கண்டறியப்படவில்லை. ஆனால் ஆதிகால இரும்புக் கற்காலப் பண்பாட்டிற்கு ஆதாரமாக இலங்கையின் ஆனைக்கோட்டைப் பகுதியில் 1980 ஆண்டு கண்டறியப்பட்ட தாழி அடக்க முறையினை அடிப்படையாக வைத்து ஆதி கால இரும்புக் கற் காலத்தில் தென் இந்தியா மற்றும் இலங்கைப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் திராவிட மொழியினைப் பேசினர் என்பதனை வரலாற்று ஆசிரியர்கள் உறுதி செய்திருக்கிறார்கள் என ஐயா கூறி முடிக்கவும்;
"ஐயா, 1980ம் ஆண்டில ஆராய்ச்சி செய்தார்கள் என்றால் இப்போ கொஞ்ச காலம் முன்னாடி தானே? அப்போ தமிழ் மொழி எப்போது முக்கியத்துவம் பெற்றது என்று நீங்கள் இன்னமும் கூறவில்லையே?"என நான் கேள்வியெழுப்பினேன்.


தென் இந்தியாவில் கி.பி முதலாம் நூற்றாண்டில் சங்க இலக்கியங்கள் வாயிலாக எவ்வாறு தமிழ் மொழி செம்மொழி எனும் நிலையில் நோக்கப்பட்டதோ, அக் காலம் தொட்டே இலங்கையின் ஆதி இரும்புக் காலத்தில் வாழ்ந்த மக்களிடத்திலும் தமிழ் மொழி செல்வாக்குப் பெற்றிருக்கிறது. இதனால் ஏனைய திராவிட மொழிகள் இலங்கையில் வாழ்ந்த மக்களிடத்தே அக் காலத்தில் வழக்கொழிந்து போகத் திராவிட மொழிகளுள் ஒன்றான தமிழ் தனக்கெனத் தனியிடத்தினை இலங்கைத் தமிழர்களிடம் ஆதி இரும்புக் காலத்தில் பெற்றுக் கொள்கின்றது. 
இந்த (1980ம் ஆண்டு ஆராய்ச்சி) ஆராய்ச்சி மேலும் சில காலம் தொடர்ந்திருந்தால் இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்கள் என்பது நிரூபணமாகி, சிங்களவர்களின் தோற்றம் பற்றிய பல உண்மைகள் அம்பலமாகிடும் என்பதனை உணர்ந்த சிங்கள அரசாங்கம் இற்றை வரை இந்த அகழ்வாராய்ச்சிக்கு தடை விதித்திருக்கிறது. எங்களுக்கென்றோர் தனி அரசு அமைந்தால் தான் இந்த ஆராய்ச்சியெல்லாம் சாத்தியமாகும். தம்பி எங்களைக் கை விடான் எனச் சொன்னார் ஐயா. 


"அப்போ சிங்கள மொழி எப்படித் தோன்றியது என்று நீங்கள் இன்னமும் சொல்லையே? எனக் கேள்வியெழுப்பினேன். ஐயா பின் வருமாறு தொடர்ந்தார்.


இலங்கையில் பௌத்த மதம் பரவியதனைத் தொடர்ந்து; அக் காலப் பகுதியில் வட இந்தியாவிலிருந்து இலங்கையினுள் காலடி எடுத்து வைத்த மக்கள் வாழ்ந்த இலங்கையின் தென் பகுதிகளில் அம் மக்களின் பேச்சு மொழியாக கலப்புற்றிருந்த சமஸ்கிருதம், பாளி, பிராகிருதம் ஆகிய மொழிகள் இலங்கையில் செல்வாக்குப் பெறத் தொடங்கின. 


இம் மொழிகள் வட இந்தியாவில் செல்வாக்கற்று வீழ்ச்சி நிலையினை அடையத் தொடங்கும் போது இலங்கையிலும் தம் செல்வாக்கினை இழக்கின்றது. காலப் போக்கில் இலங்கையில் வாழ்ந்த வட இந்திய வழித் தோன்றல் மக்கள் பேசிய மொழிகளிலிருந்தும், தமிழிலிருந்தும் வளர்ந்த ஒரு மொழியாக சீஹள எனும் மொழி தோற்றம் பெறுகின்றது. பின்னர் இம் மொழியே சிங்களம் என பெயர் மாற்றம் பெறுகின்றது.  இப்படித் தான் இலங்கையில் தமிழும், சிங்களமும் தோன்றியது என ஐயா தனது நீண்ட பிரசங்கத்தினை நிறைவு செய்தார். 


அப்போது அம்மா குறுக்கிட்டார். "இலக்கிய ரீதியில் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே செல்வாக்கினைப் பெற்றுள்ள செம் மொழியான தமிழ் மொழி இலங்கையிலும், இந்தியாவிலும் ஆதி கால இரும்புக் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக சொல்லுறீங்களே. அப்படியாயின் எம் தமிழர்கள் தானே இலங்கையின் பூர்வீக குடிகள்?" என கேள்வியெழுப்பினா(ர்). 
ஐயா, "ஆம்" எனத் தலையசைத்தவாறு விளக்கம் கொடுக்கத் தொடங்கினார். தமிழர்கள் எழுத்து ஆதாரங்களுடன் தமது வரலாற்றினை கி.பி 17ம் நூற்றாண்டு வரை எழுதத் தொடங்கவில்லை. ஆனால் சிங்களவர்கள் கொஞ்சம் முற் போக்காக சிந்தித்து கி.மு 300ம் ஆண்டிலிருந்து வரலாற்றினை எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். 
இந்த இடத்தில் எம் தமிழர்கள் தவறு செய்திருக்கா விட்டால், இன்றைக்கு சிங்கள ஆட்சியாளர்களுக்கு அஞ்சி எம் தமிழர்கள் யாரும் வாழ வேண்டிய தேவையே வந்திருக்காது. எம் மூதாதையர்கள் விட்ட மிகப் பெருந் தவறு தான் இது என ஐயா விரிவாகச் சொல்லி முடிக்கவும், 
"அப்படீன்னா எம் தமிழ் மன்னர்கள் எப்போது இலங்கையில் தோன்றினார்கள் என்று சொல்லவில்லையே ஐயா எனக் கேட்டேன் நான். 


"உனக்கு எல்லாவற்றுக்கும் அவசரம் எனக் கடிந்தவாறு, தமிழ் மன்னர்கள் தோன்றியது பற்றிக் கேட்க முன்னாடி; தமிழர்களின் வரலாறு எப்படி இருட்டடிப்புச் செய்யப்பட்டது என்பது பற்றி அறிய உனக்கு ஆவல் இல்லையா எனக் கேட்டார் ஐயா?" 


"இருட்டடிப்பு என்றால் என்ன?" என ஐயாவினைப் பார்த்துக் கேட்டேன். " இருட்டடிப்பு என்றால் மறைக்கிறது என்று வி(வெ)ளக்கம் கொடுத்தார் ஐயா. "வரலாற்றில் இருட்டடிப்புச் செய்யப்பட்ட காலம் அல்லது வரலாற்றில் இருண்ட காலம் எனத் தமிழர்களால் சொல்லப்படுகின்ற காலம் பற்றி உனக்கு அறிய ஆர்வம் இல்லையா?" என ஐயா கேட்டார். 
நானும் ஆர்வத்தோடு "எனக்கும் அறிய ஆவலாக இருக்கிறது" எனச் சொன்னேன். 
"அப்படீன்னா இப்போ போய் நீ தூங்கு. நான் நாளை இரவு மிகுதிக் கதையினைச் சொல்றேன்" எனக் கூறியவாறு ஐயா அவ் இடத்தை விட்டு நகர்ந்தார். 
                                                                 வரலாறு விரியும்.......................
பிற் சேர்க்கை: ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் தொடரின் முதலாவது அத்தியாயம் இப் பதினோராம் பாகத்தோடு நிறைவு பெறுகின்றது. அடுத்த அத்தியாயத்தில் ஈழத்து தமிழ் மன்னர்களின் வரலாற்றினையும், தமிழர்கள் எப்படிச் சிங்களவர்களின் கீழ் வாழ வேண்டும் எனும் நிலைக்கு நிர்ப்பந்திகக்ப்பட்டார்கள் என்பதனையும் பார்ப்போம்.


இத் தொடருக்கான உச்சாத் துணை நூல்கள்: 
*Ancient Jaffna: By M.C. Rasanayagam.
*இலங்கையில் தமிழர்: கலாநிதி முருகர் குணசிங்கம்
*The Demography Of Ceylon An Introductory Survey: B.L.Panditaratna And S.Selvanagakam.

*வரலாற்று ஆய்வாளர் K.இந்திரபாலாவின் குறிப்புக்கள்.



அன்பிற்குரிய உறவுகளே! உங்களுக்கு ஓர் அறிவித்தல்!


என் தனிமை கலந்த நிலை, பெற்றோரை, என் சகோதரர்களை விட்டு தொழில் - கல்வி நிமித்தம் பிரிந்திருக்கும் நிலை காரணமாகவும், 
ஈழம் - இலக்கியம் மீதான தீராத காதல் காரணமாகவும் தான் பதிவுலகினுள் காலடி எடுத்து வைத்தேன். இந்த வருடத்தின் கார்த்திகை மாதம் ஈழத்தில் பெறும் முக்கியத்துவத்தினைக் கருத்திற் கொண்டு பல சிறப்புப் பதிவுகளை எழுதவுள்ளேன். 


பதிவுலகிலிருந்தும், உங்களிடமிருந்தும் விடை பெறலாம் என முடிவெடுத்துள்ளேன். (நிரந்தரமாக) டிசம்பர் மாதத்தின் பின்னர் பல் சுவைப் பதிவுகள் எழுதுவதனை நிறுத்தவுள்ளேன். ஈழ வயல் தொடர் மாத்திரம் டிசம்பர் மாதத்தின் பின்னர் என் வலையினூடாக  உங்களை நாடி வரும்.  என் வழமையான பின்னூட்டப் பணி எனக்கு நேரம் கிடைக்கும் சமயத்தில் நான் பதிவெழுதாத சந்தர்ப்பத்திலும் தொடரும் என்பதனையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.


குறுகிய காலத்தினுள் பதிவுலகினுள் பல திசைகளை நோக்கி என்னைப் பயணிக்கச் செய்த (10 மாதங்களினுள்) உங்கள் அனைவரையும் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.  எனக்கு ஆதரவு நல்கிய அனைத்துத் திரட்டிகளுக்கும் இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


என் கூடவே இருந்து உறுதி தந்து பயணிக்க வைத்த உங்கள் அனைவருக்கும் இந் நேரத்தில் என் சிரம் தாழ்த்தி, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! 


எனக்கு எப்பொழுதும் பேராதரவு வழங்கும் உங்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து ஆனந்தக் கண்ணீரோடு இப் பதிவினை நிறைவு செய்கிறேன்!


நேசமுடன்,
செல்வராஜா நிரூபன்.
இப் பதிவில் உள்ள படங்கள் யாவும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை

71 Comments:

K R Rajeevan said...
Best Blogger Tips

இந்த வருடத்தின் கார்த்திகை மாதம் அம் மாதம் ஈழத்தில் பெறும் முக்கியத்துவத்தினைக் கருத்திற் கொண்டு என் பின்னணி பற்றிக் கவலையின்றிப் பல பதிவுகளை எழுதவுள்ளேன்.//////

யோவ்! இதென்ன முடிவு! உனது துணிச்சலை பாராட்டுகிறேன்! இருந்தாலும், நாட்டு நிலைமை மோசமா இருக்கு! எதுக்கும் எச்சரிக்கையாக இருந்து உனது பணியை தொடரு!

K R Rajeevan said...
Best Blogger Tips

இதனால் திராவிட மொழிகள் வழக்கொழிந்து போக தமிழ் தனக்கெனத் தனியிடத்தினை இலங்கைத் தமிழர்களிடம் ஆதி இரும்புக் காலத்தில் பெற்றுக் கொள்கின்றது. //////

மச்சி! இந்த இடத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யலாமா என்று பார்! காரணம் பல திராவிட மொழிகள் இன்றும் வழக்கில் உள்ளன!

K R Rajeevan said...
Best Blogger Tips

இலங்கையிலும், இந்தியாவிலும் ஆதி கால இரும்புக் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக சொல்லுறீங்களே. அப்படியாயின் எம் தமிழர்கள் தானே இலங்கையின் பூர்வீக குடிகள்?" என கேள்வியெழுப்பினா. ////////

மச்சி இதுதான் உண்மை! இதை எழுதியமைக்காக உனக்கேதும் சிக்கல்கள் வந்திடப் போகுது! கவனம்!

மாலதி said...
Best Blogger Tips

வணக்கம் உங்களின் ஆக்கம் கண்டேன் சிறந்த பதிவு திராவிட மொழிகள் என்பது தமிழில் இருந்து தோன்றிய மொழிகள் துளு , கேண்டு,கன்னடம் , கேரளம் ,இப்படி இவைகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு ம்ன்னமே தோற்றம் கொண்டவைகள் .தமிழ் மொழி தோன்றியது இன்றய்க்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே என்பது தமிழ்ரைஞ்சர்கள் கூறும் ஆய்வு முடிவு ....

Unknown said...
Best Blogger Tips

சரியா சொன்னீங்க நிரூபன்!! நாம் இழந்த வரலாற்றுக்குறிப்புகள் ஏராளம்..

எனினும் இந்த கட்டுரை வாயிலாக நிறைய புது விஷயங்களை நாங்கள் தெரிந்து கொண்டோம் நன்றி நிரூபன்..

தனிமரம் said...
Best Blogger Tips

"இருட்டடிப்பு என்றால் என்ன?" என ஐயாவினைப் பார்த்துக் கேட்டேன். " இருட்டடிப்பு என்றால் மறைக்கிறது என்று வி(வெ)ளக்கம் கொடுத்தார் ஐயா. "வரலாற்றில் இருட்டடிப்புச் செய்யப்பட்ட காலம் அல்லது வரலாற்றில் இருண்ட காலம் எனத் தமிழர்களால் சொல்லப்படுகின்ற காலம் பற்றி உனக்கு அறிய ஆர்வம் இல்லையா?" என ஐயா கேட்டார். // இப்படித்தான் பலர் கொண்ட ஆர்வம் முடிவைத் தரவில்லையே!

தனிமரம் said...
Best Blogger Tips

இந்த நேரத்தில் உங்கள் முடிவு வேதனை அளிக்கின்றது பாஸ் என்ன செய்வது என்று தெரியவில்லை??????

தனிமரம் said...
Best Blogger Tips

ஒரு வாசகனாக உங்கள் பதிவுகளை வாசிக்க காத்திருக்கின்றேன்!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

எம் மூதாதையர்கள் விட்ட மிகப் பெருந் தவறு தான் இது என ஐயா விரிவாகச் சொல்லி முடிக்கவும்//

முன்பு நீங்க சொன்னாமாதிரி தின்னுட்டு தூங்கிருக்காணுக...

shanmugavel said...
Best Blogger Tips

தொடர்ந்து பதிவுலகில் செயல்படவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் சகோ!

Anonymous said...
Best Blogger Tips

என் பின்னணி பற்றிக் கவலையின்றிப் பல பதிவுகளை எழுதவுள்ளேன்.
///

உங்களைப்போன்றோர் குரல் நெடுநாள் ஒழிக்கவேண்டும் என்பதே என் அவா...

சுவர் இருந்தால் தான் சித்திரம்...உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதிக்கும் எந்த எழுத்தும் தேவை இல்லை என்பதும் என் கருத்து..

எப்படி முடிவு எடுத்தாலும் தீர ஆராய்ந்து முடிவு எடுங்கள் சகோதரம்...

Anonymous said...
Best Blogger Tips

டிசம்பர் மாதத்தின் பின்னர் பல் சுவைப் பதிவுகள் எழுதுவதனை நிறுத்தவுள்ளேன்//

அது ஒரு இழப்பாயினும் உங்கள் பணி நம் மக்களுக்காக தொடரும் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே...

Anonymous said...
Best Blogger Tips

எனக்கு எப்பொழுதும் பேராதரவு வழங்கும் உங்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து ஆனந்தக் கண்ணீரோடு இப் பதிவினை நிறைவு செய்கிறேன்!...//

The feeling is mutual சகோதரம்...

செங்கோவி said...
Best Blogger Tips

கடந்த 3 பகுதிகளையும் படித்துவிட்டு, தொடர் பற்றி பின்னூட்டுகிறேன்.

செங்கோவி said...
Best Blogger Tips

//அன்பிற்குரிய உறவுகளே! உங்களுக்கு ஓர் அறிவித்தல்!
//

என்ன அறிவிப்பு இது? ஏன் இப்படி ஒரு முடிவு? நீங்கள் எங்கள் செல்லப்பிள்ளை ஆயிற்றே..

என்ன மனவருத்தம் என்று சொல்ல முடியுமா?

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

அண்ணே வணக்கம்ண்ணே, உங்கள் தைரியத்துக்கு தலைவங்குகிறேன்.. எதற்கும் கொஞ்சம் பார்த்து சூதானமாக இருந்துகொள்ளவும்.

SURYAJEEVA said...
Best Blogger Tips

முதல் அத்தியாயத்தை முடித்து விட்டேன்.
நீங்கள் கூறுவது போல் விக்கிபெடியாவில் யார் வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் ஆதாரமில்லாமல் எழுத முடியாது.. அப்படி ஆதாரம் இல்லை என்றால் அவை நீக்கப் பட்டிருக்கும் அல்லது சந்தேகமாக இருந்தால் சந்தேகமாக இருக்கிறது என்று முகப்பிலேயே போட்டு விடுகிறார்கள்... ஆதாரமாக அவர்கள் கொடுத்திருக்கும் புத்தகங்களை ஆய்வு செய்து பாருங்களேன்...

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்
நீங்கள் சொல்வது உண்மைதான் எமது வரலாற்றை எம் முன்னோர்கள் சரிவர எழுதவில்லை..

முகலாய மன்னர்களின் வரலாற்றை பாருங்கள் அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதில் இருந்து நோய்களுக்கு என்ன மருந்து எடுத்தார்கள் என்பதுவரை எழுதி வைத்துள்ளார்கள்... ம் அவர்கள் விட்ட தவறுகளை நாங்களும் விடக்கூடாது...!!!!

Mohamed Faaique said...
Best Blogger Tips

சிங்களம் தமிழில் இருந்து வந்தது என்று சொல்ல முடியுமா???
சுங்களத்தில் ஏகப்பட்ட, வங்காள, ஹிந்தி வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் தமிழ் சொற்கள் மிக அரிது.இல்லை என்றே சொல்லலாம். ஒரு சில இருக்கின்றன..அவை புதியன உ+ம்: சீனி....

தெலுங்கு, மலையாள, கன்னட எழுத்துருக்களும் சில சிங்களத்தில் இருக்கின்றன..

Yoga.S. said...
Best Blogger Tips

இரவு வணக்கம், நிரூபன்!உங்கள் ஆதங்கம் புரிகிறது.இருந்தாலும் ஏதோ ஒன்றை இந்தச் சந்தர்ப்பத்தில் இழப்பது போல் இருக்கிறது!ஒரு வேளை உங்கள் கிரக பலன் துணை ஒன்றைத் தேடிக் கொடுக்கும் என்ற நம்பிக்கை என் மனதில் தோன்றுகிறது.முடிந்தால் நேரில் சந்திப்போம்.அது வரை இணையத்தினூடு!

கோகுல் said...
Best Blogger Tips

பல விசயங்களை அறிய வைத்த தொடர்!
//
அடுத்த அத்யாயங்களை எதிர் பார்க்கிறோம்!~
//

கோகுல் said...
Best Blogger Tips

குறுகிய காலத்தினுள் பதிவுலகினுள் பல திசைகளை நோக்கி என்னைப் பயணிக்கச் செய்த (10 மாதங்களினுள்) உங்கள் அனைவரையும் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.
என் கூடவே இருந்து உறுதி தந்து பயணிக்க வைத்த உங்கள் அனைவருக்கும் இந் நேரத்தில் என் சிரம் தாழ்த்திய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
//

நமக்குள் எதுக்கு பாஸ் நன்றி!
நாமெல்லாம் ஒரு கூட்டுப்பறவைகள் தான்!
நீங்கள் அடிக்கடி எழுதாமல் போனால் அது எங்களுக்கெல்லாம் இழப்புதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

அருமையாக வந்ததொடர் சட்டென்று முடிந்து விட்டதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

///// சிங்கள அரசாங்கம் இற்றை வரை இந்த அகழ்வாராய்ச்சிக்கு தடை விதித்திருக்கிறது.//////

தடயங்களாவது சேதமாக்கப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

சிங்களர்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒருசில ஒற்றுமை இருப்பதாக உணரமுடிகிறது, இதுகுறித்தும் நீங்கள் ஆய்ந்து எழுத வேண்டும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

////இந்த வருடத்தின் கார்த்திகை மாதம் அம் மாதம் ஈழத்தில் பெறும் முக்கியத்துவத்தினைக் கருத்திற் கொண்டு என் பின்னணி பற்றிக் கவலையின்றிப் பல பதிவுகளை எழுதவுள்ளேன். ////

கவனம் நிரூபன், ஆபத்தானது என்றால் வேண்டாம்......!

சுதா SJ said...
Best Blogger Tips

வணக்கம் நிரூ பாஸ்.. என்ன இது.......!!!! ரெம்ப ஆச்சரியமாய் கவலையாய் இருக்கு... ஏன் இந்த திடீர் முடிவு .... வலையில் எழுதுவவர்களிலேயே வலை எழுத்தை உயிராய் நேசிப்பவர் எனக்கு தெரிந்து நீங்கள் மட்டும் தான் ... உங்கள் இந்த முடிவு வேதனை அளிக்குது.. ஆனாலும் இடையிடையே வருவேன் என்று நீங்கள் சொன்னது ஆறுதல் அளிக்குது.... நிரூ பாஸ்.... நீங்கள் விட்டு சென்றாலும் வலையுலகம் உங்களை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்காது...எதற்க்காக இந்த முடிவு எடுத்தீர்களோ அந்த காரியம் வெற்றி பெற்று அதில் உங்களுக்கு சந்தோஷம் பெருகி கிடைக்க என் வாழ்த்துக்கள்...
I MISS YOU

tamilvaasi said...
Best Blogger Tips

எனக்கு எப்பொழுதும் பேராதரவு வழங்கும் உங்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து ஆனந்தக் கண்ணீரோடு இப் பதிவினை நிறைவு செய்கிறேன்!///

சகோ, முதல் அத்தியாயம் அருமையா எழுதி முடிச்சிருகிங்க. அடுத்த அத்தியாயம் விரைவில்....

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

>பதிவுலகிலிருந்தும், உங்களிடமிருந்தும் விடை பெறலாம் என முடிவெடுத்துள்ளேன். டிசம்பர் மாதத்தின் பின்னர் பல் சுவைப் பதிவுகள் எழுதுவதனை நிறுத்தவுள்ளேன்.

கல்யாணமா?

BTW, எதுவென்றாலும் தேவையில்லாத ரிஸ்க் எடுக்கவேண்டாம். (ம்ம்ம்ம் நான் கல்யாணத்தைச் சொல்லவில்லை :-) )

K.s.s.Rajh said...
Best Blogger Tips

என்ன பாஸ் பதிவுலகைவிட்டு போகப்போறீங்களா?

எங்களை எல்லாம் பதிவுலகில் வழிகாட்டிவிட்டு இப்ப விலகுகின்றேன் எனறு சொல்கிறீங்களே?

M.R said...
Best Blogger Tips

நண்பரே ப்திவுலகம் விட்டு செல்கிறேன் என்று சொல்வது மனது வேதனைப் படுகிறது நண்பரே ஏன் இந்த திடீர் மாற்றம், விலகினாலும் அவ்வப்பொழுது தொடர்பில் இருங்க நண்பரே.தங்கள் நட்பு வேண்டும் நண்பரே.

Unknown said...
Best Blogger Tips

பொருள் ஈட்டுவதற்காக இந்த பிரிவு என்றால் வாழ்த்துக்கள் ஓய்வு கிடைக்கும் போது எழுதுங்கள் நன்றி

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

யோவ்! இதென்ன முடிவு! உனது துணிச்சலை பாராட்டுகிறேன்! இருந்தாலும், நாட்டு நிலைமை மோசமா இருக்கு! எதுக்கும் எச்சரிக்கையாக இருந்து உனது பணியை தொடரு!//

மச்சி, நீ இருக்கும் வரை நான் ஏன் பயப்படனும்;-))

ஹே...
நீ தான் எனக்கு விசா கொடுத்து பிரான்ஸிற்கு கூப்பிடுவியே/..

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

மச்சி! இந்த இடத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யலாமா என்று பார்! காரணம் பல திராவிட மொழிகள் இன்றும் வழக்கில் உள்ளன!//

மச்சி, அவ் இடத்தில் இலங்கையில் என்று குறிப்பு வர வேண்டும், தற்போது மாற்றி விட்டேன்.
மிக்க நன்றி,

//
தென் இந்தியாவில் கி.பி முதலாம் நூற்றாண்டில் சங்க இலக்கியங்கள் வாயிலாக எவ்வாறு தமிழ் மொழி செம்மொழி எனும் நிலையில் நோக்கப்பட்டதோ, அக் காலம் தொட்டே இலங்கையின் ஆதி இரும்புக் காலத்தில் வாழ்ந்த மக்களிடத்திலும் தமிழ் மொழி செல்வாக்குப் பெற்றிருக்கிறது. இதனால் ஏனைய திராவிட மொழிகள் இலங்கையில் வாழ்ந்த மக்களிடத்தே அக் காலத்தில் வழக்கொழிந்து போகத் திராவிட மொழிகளுள் ஒன்றான தமிழ் தனக்கெனத் தனியிடத்தினை இலங்கைத் தமிழர்களிடம் ஆதி இரும்புக் காலத்தில் பெற்றுக் கொள்கின்றது.
//

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

மச்சி இதுதான் உண்மை! இதை எழுதியமைக்காக உனக்கேதும் சிக்கல்கள் வந்திடப் போகுது! கவனம்!
///

ஹே...ஹே...என்ன இடியப்ப சிக்கலா?

நிரூபன் said...
Best Blogger Tips

@மாலதி

வணக்கம் உங்களின் ஆக்கம் கண்டேன் சிறந்த பதிவு திராவிட மொழிகள் என்பது தமிழில் இருந்து தோன்றிய மொழிகள் துளு , கேண்டு,கன்னடம் , கேரளம் ,இப்படி இவைகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு ம்ன்னமே தோற்றம் கொண்டவைகள் .தமிழ் மொழி தோன்றியது இன்றய்க்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே என்பது தமிழ்ரைஞ்சர்கள் கூறும் ஆய்வு முடிவு ....//

நன்றி சகோதரி,

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜ.ரா.ரமேஷ் பாபு

சரியா சொன்னீங்க நிரூபன்!! நாம் இழந்த வரலாற்றுக்குறிப்புகள் ஏராளம்..

எனினும் இந்த கட்டுரை வாயிலாக நிறைய புது விஷயங்களை நாங்கள் தெரிந்து கொண்டோம் நன்றி நிரூபன்..//

நன்றி சகோதரம்,

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
இப்படித்தான் பலர் கொண்ட ஆர்வம் முடிவைத் தரவில்லையே//

ஏன் பாஸ்...பலர் முடிவினைச் சொல்லியிருக்காங்களே;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

இந்த நேரத்தில் உங்கள் முடிவு வேதனை அளிக்கின்றது பாஸ் என்ன செய்வது என்று தெரியவில்லை??????//

நன்றி பாஸ்..என்ன செய்ய முடியும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

ஒரு வாசகனாக உங்கள் பதிவுகளை வாசிக்க காத்திருக்கின்றேன்!//

புல்லரிக்குது போங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

எம் மூதாதையர்கள் விட்ட மிகப் பெருந் தவறு தான் இது என ஐயா விரிவாகச் சொல்லி முடிக்கவும்//

முன்பு நீங்க சொன்னாமாதிரி தின்னுட்டு தூங்கிருக்காணுக...//

ஆமாண்ணா...
தமிழனின் தலையாய கடமையே அது தானே...

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavelதொடர்ந்து பதிவுலகில் செயல்படவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் சகோ!
//

என்னால் முடிந்த வரை செயற்படுகிறேன் அண்ணா

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி

உங்களைப்போன்றோர் குரல் நெடுநாள் ஒலிக்கவேண்டும் என்பதே என் அவா...

சுவர் இருந்தால் தான் சித்திரம்...உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதிக்கும் எந்த எழுத்தும் தேவை இல்லை என்பதும் என் கருத்து..

எப்படி முடிவு எடுத்தாலும் தீர ஆராய்ந்து முடிவு எடுங்கள் சகோதரம்...
//

இல்லை நண்பா, அப்படி ஏதும் நடக்காது என நினைக்கிறேன்.

பார்ப்போம், உங்கள் அன்பிற்கு நன்றி,

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

கடந்த 3 பகுதிகளையும் படித்துவிட்டு, தொடர் பற்றி பின்னூட்டுகிறேன்.
//

நன்றி அண்ணே

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

என்ன அறிவிப்பு இது? ஏன் இப்படி ஒரு முடிவு? நீங்கள் எங்கள் செல்லப்பிள்ளை ஆயிற்றே..

என்ன மனவருத்தம் என்று சொல்ல முடியுமா?//

பாஸ்...மனவருத்தம் எல்லா இல்லை.

மேற்படிப்பினைத் தொடர வேண்டும் என்று ஆவல்...

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr. Butti Paul

அண்ணே வணக்கம்ண்ணே, உங்கள் தைரியத்துக்கு தலைவங்குகிறேன்.. எதற்கும் கொஞ்சம் பார்த்து சூதானமாக இருந்துகொள்ளவும்.//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@suryajeeva

முதல் அத்தியாயத்தை முடித்து விட்டேன்.
நீங்கள் கூறுவது போல் விக்கிபெடியாவில் யார் வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் ஆதாரமில்லாமல் எழுத முடியாது.. அப்படி ஆதாரம் இல்லை என்றால் அவை நீக்கப் பட்டிருக்கும் அல்லது சந்தேகமாக இருந்தால் சந்தேகமாக இருக்கிறது என்று முகப்பிலேயே போட்டு விடுகிறார்கள்... ஆதாரமாக அவர்கள் கொடுத்திருக்கும் புத்தகங்களை ஆய்வு செய்து பாருங்களேன்...//

நன்றி பாஸ்..

கண்டிப்பாக அந்தப் புத்தகங்களையும் படித்துப் பார்க்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

வணக்கம் நிரூபன்
நீங்கள் சொல்வது உண்மைதான் எமது வரலாற்றை எம் முன்னோர்கள் சரிவர எழுதவில்லை..

முகலாய மன்னர்களின் வரலாற்றை பாருங்கள் அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதில் இருந்து நோய்களுக்கு என்ன மருந்து எடுத்தார்கள் என்பதுவரை எழுதி வைத்துள்ளார்கள்... ம் அவர்கள் விட்ட தவறுகளை நாங்களும் விடக்கூடாது...!!!!//

ஆமாம் அண்ணா.

நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Mohamed Faaique

சிங்களம் தமிழில் இருந்து வந்தது என்று சொல்ல முடியுமா???
சுங்களத்தில் ஏகப்பட்ட, வங்காள, ஹிந்தி வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் தமிழ் சொற்கள் மிக அரிது.இல்லை என்றே சொல்லலாம். ஒரு சில இருக்கின்றன..அவை புதியன உ+ம்: சீனி....

தெலுங்கு, மலையாள, கன்னட எழுத்துருக்களும் சில சிங்களத்தில் இருக்கின்றன..//

நண்பா, தமிழோடும், ஏனைய வட இந்திய மொழிக் கலப்போடும் உருவாகிய வார்த்தையே சீஹள எனப் பெயர் பெற்று சிங்களம் என மாறியதாக சிங்கள வரலாற்று ஆசிரியர் இந்திரபாலா அவர்களும், செனிவிரத்ன அவர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Mohamed Faaique

சிங்களம் தமிழில் இருந்து வந்தது என்று சொல்ல முடியுமா???
சுங்களத்தில் ஏகப்பட்ட, வங்காள, ஹிந்தி வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் தமிழ் சொற்கள் மிக அரிது.இல்லை என்றே சொல்லலாம். ஒரு சில இருக்கின்றன..அவை புதியன உ+ம்: சீனி....

தெலுங்கு, மலையாள, கன்னட எழுத்துருக்களும் சில சிங்களத்தில் இருக்கின்றன..//

காலப் போக்கில் இலங்கையில் வாழ்ந்த வட இந்திய வழித் தோன்றல் மக்கள் பேசிய மொழிகளிலிருந்தும், தமிழிலிருந்தும் வளர்ந்த ஒரு மொழியாக சீஹள எனும் மொழி தோற்றம் பெறுகின்றது. பின்னர் இம் மொழியே சிங்களம் என பெயர் மாற்றம் பெறுகின்றது. இப்படித் தான் இலங்கையில் தமிழும், சிங்களமும் தோன்றியது என ஐயா தனது நீண்ட பிரசங்கத்தினை நிறைவு செய்தார்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

இரவு வணக்கம், நிரூபன்!உங்கள் ஆதங்கம் புரிகிறது.இருந்தாலும் ஏதோ ஒன்றை இந்தச் சந்தர்ப்பத்தில் இழப்பது போல் இருக்கிறது!ஒரு வேளை உங்கள் கிரக பலன் துணை ஒன்றைத் தேடிக் கொடுக்கும் என்ற நம்பிக்கை என் மனதில் தோன்றுகிறது.முடிந்தால் நேரில் சந்திப்போம்.அது வரை இணையத்தினூடு!//

நன்றி ஐயா..
உங்களிடமிருந்து இப்படி ஒரு வார்த்தையினைக் கேட்கையில் புல்லரிக்கிறது,.

என் மின்னஞ்சல், பேஸ்புக் முகவரி எலலாம் தந்திருக்கிறேன்.
நேரம் உள்ள போது தொடர்பு கொள்ளுங்கள். தொடர்ந்து என்னால் எழுதுமளவிற்கு நேரம் அமையுமா என்பது ஐயமாக உள்ளது.
முடிந்த வரை முயற்சி செய்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கோகுல்

நமக்குள் எதுக்கு பாஸ் நன்றி!
நாமெல்லாம் ஒரு கூட்டுப்பறவைகள் தான்!
நீங்கள் அடிக்கடி எழுதாமல் போனால் அது எங்களுக்கெல்லாம் இழப்புதான்!//

நன்றி பாஸ்..
மெய் சிலிர்க்க வைத்திருக்கிறீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

அருமையாக வந்ததொடர் சட்டென்று முடிந்து விட்டதே?
//

அண்ணே, தொடரின் முதல் அத்தியாயம் தான் முடிந்திருக்கு..

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் தொடரின் முதலாவது அத்தியாயம் இப் பதினோராம் பாகத்தோடு நிறைவு பெறுகின்றது. அடுத்த அத்தியாயத்தில் ஈழத்து தமிழ் மன்னர்களின் வரலாற்றினையும், தமிழர்கள் எப்படிச் சிங்களவர்களின் கீழ் வாழ வேண்டும் எனும் நிலைக்கு நிர்ப்பந்திகக்ப்பட்டார்கள் என்பதனையும் பார்ப்போம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

///// சிங்கள அரசாங்கம் இற்றை வரை இந்த அகழ்வாராய்ச்சிக்கு தடை விதித்திருக்கிறது.//////

தடயங்களாவது சேதமாக்கப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறதா?//

சில இடங்களில் பௌத்த விகாரைகளை அமைத்து பூசி மெழுகி மறைக்கப் பார்க்கிறார்கள்.

பார்ப்போம்

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

சிங்களர்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒருசில ஒற்றுமை இருப்பதாக உணரமுடிகிறது, இதுகுறித்தும் நீங்கள் ஆய்ந்து எழுத வேண்டும்!//

கண்டிப்பாக எழுதுகிறேன் அண்ணே..

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

கவனம் நிரூபன், ஆபத்தானது என்றால் வேண்டாம்......!//

ம்.....பார்ப்போம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
துஸி கவலை வேணாம்.
நான் எப்பவும் உங்க கூடவே இருப்பேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash

சகோ, முதல் அத்தியாயம் அருமையா எழுதி முடிச்சிருகிங்க. அடுத்த அத்தியாயம் விரைவில்....//

ஆமாம் பாஸ்..
அடுத்த அத்தியாயம் விரைவில் வரும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@எஸ் சக்திவேல்

கல்யாணமா?

BTW, எதுவென்றாலும் தேவையில்லாத ரிஸ்க் எடுக்கவேண்டாம். (ம்ம்ம்ம் நான் கல்யாணத்தைச் சொல்லவில்லை :-) )//

ஹே....ஹே...
அதெல்லாம் இப்ப இல்லை அண்ணா.
வீட்டில சொல்லீனம்.
இன்னும் வயசிருக்காம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

என்ன பாஸ் பதிவுலகைவிட்டு போகப்போறீங்களா?

எங்களை எல்லாம் பதிவுலகில் வழிகாட்டிவிட்டு இப்ப விலகுகின்றேன் எனறு சொல்கிறீங்களே?//

இருப்பேன் பாஸ்..

கவலை வேணாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@M.R

நண்பரே ப்திவுலகம் விட்டு செல்கிறேன் என்று சொல்வது மனது வேதனைப் படுகிறது நண்பரே ஏன் இந்த திடீர் மாற்றம், விலகினாலும் அவ்வப்பொழுது தொடர்பில் இருங்க நண்பரே.தங்கள் நட்பு வேண்டும் நண்பரே.//

நன்றி நண்பா,
தொடர்பில் இருப்பேன், என் பேஸ்புக் முகவரி கொடுத்திருக்கிறேனே/

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu

பொருள் ஈட்டுவதற்காக இந்த பிரிவு என்றால் வாழ்த்துக்கள் ஓய்வு கிடைக்கும் போது எழுதுங்கள் நன்றி//

கண்டிப்பாக ஓய்வு கிடைக்கும் போது எழுதுவேன் பாஸ்,.

பொருளீட்டுவதற்காக அல்ல,
மேற் படிப்பிற்காக.

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

என்ன சொல்வதென்று தெரியவில்லை நிரூ.உங்கள் முடிவைத் தலை வணங்கி ஏற்றுக்கொண்டு உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவதைத் தவிர வேறென்ன என்னால் செய்ய முடியும்? எங்கள் நெஞ்சில் என்றும் இருப்பீர்கள்.வாழ்த்துகள்.

Unknown said...
Best Blogger Tips

அன்பின் இனிய சகோ!

இதுவென்ன திடீர் முடிவு!
திடீர் அறிவிப்பு!

உவப்பத் தலை கூடி
உள்ளப் பிரிதல் ஒன்றே புலவர்
தொழில் என்பது போல!

எதிர் கால முன்னேற்றம்
கருதி பிரிய இருப்பதால் என்
மனதை ஆற்றுப்படுத்திக் கொண்டு
ஒரு தந்தையின் நிலையில் நின்று
வாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன்
வலை வழி இல்லை
என்றாலும் மாற்றுப் பல வழி
நம் தொடர்பு மேலும் நெருக்கமடையும்


புலவர் சா இராமாநுசம்

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

நான் மிகவும் நேசிக்கும் பதிவர் நீங்கள்.
தங்களின் இந்த முடிவு தமிழ் பதிவுலகிற்க்கு இழப்புதான்.
மீண்டும் புதிய வேகத்தோடு எழுதுவீர்கள் என்ற அடிமனதின் நம்பிக்கை வலுவூட்டுகிறது.காத்திருக்கிறோம்.

செங்கோவி said...
Best Blogger Tips

// ஆனால் ஆதிகால இரும்புக் கற்காலப் பண்பாட்டிற்கு ஆதாரமாக இலங்கையின் ஆனைக்கோட்டைப் பகுதியில் 1980 ஆண்டு கண்டறியப்பட்ட தாழி அடக்க முறையினை அடிப்படையாக வைத்து ஆதி கால இரும்புக் கற் காலத்தில் தென் இந்தியா மற்றும் இலங்கைப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் திராவிட மொழியினைப் பேசினர் என்பதனை வரலாற்று ஆசிரியர்கள் உறுதி செய்திருக்கிறார்கள் //

ஆமாம், இது போன்ற தாழிகள், திருநெவேலிக்கு அருகில் 1890லேயே ஆதிச்சநல்லூரிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பானைகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். காலம் கி.மு.3000-ஆக இருக்கலாம்.

செங்கோவி said...
Best Blogger Tips

//பிற் சேர்க்கை: ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் தொடரின் முதலாவது அத்தியாயம் இப் பதினோராம் பாகத்தோடு நிறைவு பெறுகின்றது. அடுத்த அத்தியாயத்தில் ஈழத்து தமிழ் மன்னர்களின் வரலாற்றினையும், தமிழர்கள் எப்படிச் சிங்களவர்களின் கீழ் வாழ வேண்டும் எனும் நிலைக்கு நிர்ப்பந்திகக்ப்பட்டார்கள் என்பதனையும் பார்ப்போம்.//

சீக்கிரம் தொடருங்கள்...

Unknown said...
Best Blogger Tips

கட்ந்த பல மாதங்களாக உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன் நண்பரே, சகலகலா வல்லவராக, பதிவுலகை கலக்கிய காத்திரமான பதிவரான நீங்கள், பதிவுலகிலிருந்து படிப்படியாக விலகப்போவது குறித்து அதிர்ச்சிதான்.பதிவுலகில் உங்கள் இடத்தை உங்களால் மட்டுமே நிரப்ப முடியும்.உங்கள் மற்ற தனிப்பட்ட நோக்கங்கள் மகிழ்ச்சியுடன் நிறைவேற மனமார வாழ்த்துகிறேன்.எழுத்தார்வம் உங்களை விடாது என்ற நம்பிக்கையுடன் உங்கள் நண்பன்.

Unknown said...
Best Blogger Tips

//இந்த வருடத்தின் கார்த்திகை மாதம் அம் மாதம் ஈழத்தில் பெறும் முக்கியத்துவத்தினைக் கருத்திற் கொண்டு என் பின்னணி பற்றிக் கவலையின்றிப் பல பதிவுகளை எழுதவுள்ளேன்.//////

எதுக்கும் கவனம் அண்ணா.கார்த்திகை மாதம் ஒரு போதும் மறக்க முடியாது.

Angel said...
Best Blogger Tips

அன்பு சகோதரா.நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதில் ஒரு காரணமில்லாமல் இருக்காது .நேரம் கிடைக்கும்போது வந்து பின்னூட்டமிடுங்கள் .May God Bless you.

மாய உலகம் said...
Best Blogger Tips

எனக்கு எப்பொழுதும் பேராதரவு வழங்கும் உங்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து ஆனந்தக் கண்ணீரோடு இப் பதிவினை நிறைவு செய்கிறேன்!//

நண்பா! நான் இப்பொழுதுதான் கவனித்தேன்.. ஏன் இந்த திடிர் முடிவு... என்னாயிற்று... நீங்கள் ஒரு முடிவு எடுத்தால் கண்டிப்பாக ஒரு காரணமிருக்கும்.. நேரம் கிடைக்கும் பொழுது பதிவுகள் இட்டு தொடருங்கள்.... எங்கிருந்தாலும் நலமுடன் வாழ இந்த அன்பு நண்பனின் வாழ்த்துக்கள்..... என்றும் மறவேன் நட்பை...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails