Wednesday, October 5, 2011

MONTE CARLO - விமர்சனம்- ஆள் மாறாட்டும் செய்து அட்டகாசம் புரியும் இளம் சிட்டுக்கள்!

வாழ்க்கையில் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் ஒரு வித்தியாசமான ஆசை இருக்கும். அதுவும் தம் மனதிற்குப் பிடித்த இடங்களில் ஏதாவது ஒன்றுக்குத் தாம் இறப்பதற்கு முன்பதாகப் போய் விட வேண்டும் என்கின்ற ஆசை பல உள்ளங்களின் அடி மனதில் நீண்ட நாட்களாகியும் நிறைவேறாத கனவாகப் பொதிந்திருக்கும். எம் மனதிற்குப் பிடித்த ஒரு இடத்திற்கு நண்பர்களுடன் ஜாலியாகச் செல்கின்ற போது, அதுவும் எமக்கு ஒத்த ரசனையுள்ள நண்பர்களுடன் ஜாலியாகச் செல்லும் போது கிடைக்கின்ற இன்பங்களும், எதிர்பாராத அதிர்ச்சிகளும் அந்தக் கணப் பொழுதில் ஏற்படுத்துகின்ற மகிழ்ச்சியின் அளவிற்கு எல்லை இல்லை என்றே கூறலாம். 

இந்த இன்பங்களையெல்லாம் விட, நாம் சுற்றுலா செல்லும் போது எம்மைப் போன்ற அதே சாயல் உடைய இன்னொரு நபர் உலகின் எங்காவது ஒரு மூலையில் இருக்கும் வேளையில் அந் நபர் என்று எம்மை நினைத்து, அவருக்கு கிடைக்கும் அதிசயிக்கத் தக்க விருந்துபசாரங்கள் எமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்?ஆம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் (Texas) மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளம் வாலிபச் சிட்டுக்கள், தாம் இறக்கை கட்டிப் பறக்க நினைத்துப் பிரான்ஸிற்குச் செல்கின்றார்கள். 

கிரேஸ், மெக், எ(ம்)மா ஆகிய மூவரும் தம்முடன் கூட வந்த சுற்றுலாப் பிரயாணிகளைத் தவற விட்டு விட்டுப் பிரான்ஸில் உள்ள ஓட்டலில் தனித்துத் தவித்திருக்கும் போது அவர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அது தான் இம் மூவரில் ஒருவராக உள்ள கிரேஸினைப் போன்ற இன்னோர் பெண்ணைச் சந்திக்க நேர்கிறது.அந்தப் பெண் தான் இத் திரைப்படத்தின் கதை நகர்விற்கும், திருப்பு முனைக்கும் கோடிலியா (Cordelia)  எனும் கதாபாத்திரம் மூலம் வலுச் சேர்த்திருக்கிறார். 

பிரித்தானியாவின் ஸ்கொர்ட் பகுதியினைச் சேர்ந்த பணக்கார இளவரசியான கிரேஸினை ஒத்த சாயலை உடைய கொடிலியா; 
ருமேனிய நாட்டிலுள்ள ஏழை மாணவர்களிற்கு நிதி சேகரிக்கும் நோக்கில் பிரான்ஸின் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான MONTE CARLO பகுதியில் இடம் பெறும் களியாட்ட - கேளிக்கைகளுடன் கூடிய நிதி சேகரிக்கும் வைபவத்திற்கு சிறப்பு விருந்தினராகச் செல்வதற்காக பிரான்ஸின் மையப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காத்திருக்கிறார். 

இறுதி நேரத்தில் உள்ளூர் விமான சேவை சதி செய்து விட, அவர் மன விரக்தியினால் அக் ஹோட்டலை விட்டு வெளியேறும் சமயத்தில், சுற்றுலாப் பயணிகளாகத் தம் கூட வந்தோரைத் தவற விட்டு விட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கும், மூன்று இளஞ் சிட்டுக்களுள் ஒருவரான கிரேஸினை கொடிலியா என்று நினைத்து பேசக் கூட சந்தர்ப்பம் கொடுக்க விடாது, அவர் தான் உண்மையான கொடிலியா எனும் நினைப்பில் விமானம் மூலம் MONTE CARLO பகுதிக்கு அனுப்பி விடுகின்றார்கள். 

அதிஷ்டவசமாக கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஜாலியாகத் தம் பொழுதினை Monte Carlo பகுதியில் இராஜ மரியாதைகளுடன் கழித்துக் கொண்டிருந்தோருக்கு திடீரென அசல் கொடிலியா - வந்து கொள்ள கிலி பிடிக்கத் தொடங்குகின்றது. இதன் பின்னரான விறு விறு நிகழ்வுகளையும், ஆள் மாறாட்டம் செய்யும் சிட்டுக்களின் அட்டகாசத்தினையும் நீங்கள் இத் திரைப்படத்தினைப் பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். 

(2011ம் ஆண்டு)- இந்த வருடத்தின் ஜூலை மாதம் 30ம் திகதி ரிலீஸ் செய்யப்பட்ட இவ் MONTE CARLO திரைப்படத்தினை FOX 2000 Pictures வெளியிட்டிருக்கின்றார்கள். தோமஸ் பெசூச்சா (Thomas Bezucha) அவர்களின் இயக்கத்தில், Kelly Bowe அவர்களின் மூலக் கதை அமைப்பில், John Bezucha, April Blair, Maria Maggenti, ஆகிய மூவரின் வசன அமைப்பில் Headhunters எனும் ஆங்கில நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இப் படத்திற்கு Michael Giacchino அவர்கள் இசை வழங்கியிருக்கிறார். 

Selena Gomez, Leighton Meester, Katie Cassidy, Catherine Tate, Pierre Boulanger, Andie McDowell, Cory Monteith ஆகிய நட்சத்திரங்கள் இப் படத்தில் முன்னணி நட்சத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். செலீனா அவர்கள் இரட்டை வேடத்தில் அழகுச் சிலையாகவும், ஆள் மாறாட்டம் செய்து அசத்தும் குயினாகவும் வலம் வந்திருப்பது இப் படத்திற்கு இன்னும் கூடுதல் சிறப்பினைத் தருகின்றது. 

படத்தினை இயக்குனர் தாமஸ் பெசூச்சா அவர்கள் சிறப்பான முறையில் நகர்த்தியிருப்பதோடு, காதல், இரக்கம், சந்தோசம், ரகளை ஆகிய உணர்வுகளிற்கு ஏற்றாற் போல ஒவ்வோர் பாகங்களாகப் பிரித்துப் படத்தின் ஒவ்வோர் பாகத்திலும் ஒவ்வோர் சிறப்பியல்புகள் வெளிப்படும் வண்ணம் தந்திருக்கிறார். உண்மைக் காதல் எத்தனை தூரம் பிரிந்து சென்றாலும் இலகுவில் அழியாது என்பதற்கு எடுத்துக் காட்டாக இங்கே எமாவின் காதலனாக நடித்திருக்கும் Cory Monte;  ”எமா சுற்றுலா சென்ற பின்னர் அவளின் தொடர்பேதும் கிடைக்கவில்லையே எனும் ஆதங்கத்தில்" கவலையோடு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து பிரான்ஸிற்கு வந்து பிரான்ஸ் நகர வீதிகளில் தனிமையில் அலைந்து தேடுவதனை உணர்ச்சிப் பெருக்கோடு வெளிப்படுத்தியிருக்கிறார். 

Mec எனும் கதாபாத்திரத்தின் மூலம் மேலைத் தேயர்களுக்கு சுற்றுலா செல்லும் இடங்களில் பற்றிக் கொள்ளும் காதலினை Luke Bracey அவர்களுடன் சேர்த்து ஆங்காங்க சிறு சிறு உரசல்களாக காட்டியிருப்பது படத்தில் ரொமான்ரிக் இல்லையே எனும் குறையினைத் தீர்த்திருக்கிறது. கொஞ்சம் ரொனான்ஸ், கொஞ்சம் தேடல், கொஞ்சம் சஸ்பென்ஸ், சிறிது ஆதங்கம், சிறிது நகைச்சுவை எனச் சுவாரஸ்யமாக குடும்பத்தோடு 13+ வயதிற்கு மேற்பட்டோர் பார்த்து மகிழும் வண்ணம் இப் படம் அமைந்திருக்கிறது. 

முக்கிய குறிப்பு: பிரான்ஸ் நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாப் பகுதிகளில் அதிகளவானவற்றை இப் படத்தில் காட்சிப்படுத்தியிருப்பதனால், பிரான்ஸ் நாட்டினைப் பார்க்க முடியவில்லையே எனும் குறையுள்ளோருக்கு காட்சிகள் மூலம் ஒரு இன்பச் சுற்றுலாவினையும் வழங்கியிருக்கிறது இந்தத் திரைப்படம். 

MONTE CARLO: ஆள் மாறாட்டம் செய்து அசத்தும் இளஞ் சிட்டுக்களின் லீலைகள் அடங்கிய சுவாரஸ்யமான நகர்வு.

$20 மில்லியன் அமெடிக்க டாலர் செலவில் எடுக்கப்பட்ட 109 நிமிடங்கள் கால அளவை கொண்ட இப் படத்தின் ட்ரெயிலரினைப் பார்த்து மகிழ:
*************************************************************************************************************
இன்றைய பதிவர் அறிமுகம் உங்களுக்கு விருந்தளிக்கப் போவது புதிதாகப் பதிவுலகினுள் நுழைந்திருக்கின்ற ஒரு பதிவரின் தளத்தினைத் தான். "நாய் - நக்ஸ்" எனும் பெயரில் சுவாரஸ்யமான பதிவுகளோடு பதிவுலகினுள் காலடி எடுத்து வைத்திருக்கின்றார் இவர். 

மரண மொக்கைகளையும், மனதில் சிரிப்பினை வர வைக்கும் பதிவுகளையும் படைத்து அசத்திக் கொண்டிருக்கும் "நாய்- நக்ஸ்" அவர்களின் வலைப் பதிவிற்குச் செல்ல:
*************************************************************************************************************

46 Comments:

K R Rajeevan said...
Best Blogger Tips

எலே! வணக்கம்லே!இருலே படிச்சுட்டு வர்ரேன்!

K R Rajeevan said...
Best Blogger Tips

அதுவும் எமக்கு ஒத்த ரசனையுள்ள நண்பர்களுடன் ஜாலியாகச் செல்லும் போது கிடைக்கின்ற இன்பங்களும், எதிர்பாராத அதிர்ச்சிகளும் அந்தக் கணப் பொழுதில் ஏற்படுத்துகின்ற மகிழ்ச்சியின் அளவிற்கு எல்லை இல்லை என்றே கூறலாம்.////////

பார்ரா! மச்சி தத்துவம்லாம் சொல்றாரு!

K R Rajeevan said...
Best Blogger Tips

ஆம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் (Texas) மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளம் வாலிபச் சிட்டுக்கள், தாம் இறக்கை கட்டிப் பறக்க நினைத்துப் பிரான்ஸிற்குச் செல்கின்றார்கள். ///////

அட! நம்ம ஊரு! வாங்க வாங்க!!

Unknown said...
Best Blogger Tips

நல்ல விமர்சனம் நிரூ

படங்களும் கண்ணை உறுத்தாத அழகு

Yoga.s.FR said...
Best Blogger Tips

இனிய பிரெஞ்சுக் காலை வணக்கம்,நிரூபன்!படமெல்லாம் தியேட்டருக்குப் போய்ப் பார்ப்பதில்லை!நன்றாக விமர்சியிருக்கிறீர்கள்!புள்ளிகள் போடவில்லையே?

K R Rajeevan said...
Best Blogger Tips

முக்கிய குறிப்பு: பிரான்ஸ் நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாப் பகுதிகளில் அதிகளவானவற்றை இப் படத்தில் காட்சிப்படுத்தியிருப்பதனால், பிரான்ஸ் நாட்டினைப் பார்க்க முடியவில்லையே எனும் குறையுள்ளோருக்கு காட்சிகள் மூலம் ஒரு இன்பச் சுற்றுலாவினையும் வழங்கியிருக்கிறது இந்தத் திரைப்படம். /////////////

மச்சி விமர்சனம் சூப்பர்! நம்ம உர்ல எடுக்குற எல்லாப் படத்துலையும் காதல், அழகு கொஞ்சம் எக்ஸ்ராவா இருக்கு! ஏன்னா இது காதல் பூமி!

அப்புறம், நான் இந்தப் படத்தை அவசியம் பார்க்கணும்!

K R Rajeevan said...
Best Blogger Tips

நாய் - நக்ஸ் நண்பருக்கு வாழ்த்துக்கள்!

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

ஃப்ரான்ஸ் சுற்றுலா சஸ்பென்ஸ் என போகும் கதையோ பார்த்துடலாம்

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

நல்லா எழுதி இருக்கீங்க..வாரம் நாலு விமர்சனம் போடுங்க பாஸ்

K R Rajeevan said...
Best Blogger Tips

@Yoga.s.FR

இனிய பிரெஞ்சுக் காலை வணக்கம்,நிரூபன்!படமெல்லாம் தியேட்டருக்குப் போய்ப் பார்ப்பதில்லை!நன்றாக விமர்சியிருக்கிறீர்கள்!புள்ளிகள் போடவில்லையே?////////

வாங்க நான் கூட்டிட்டுப் போறன்! ஆனா பிய்யே நீங்கள் தான் எடுக்கணும்!

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

நாய் நக்ஸ் என்ன பேருய்யா இது..முதல்ல இதுக்கு விளக்கம் சொல்ல சொல்லுங்க -;))

மகேந்திரன் said...
Best Blogger Tips

விமர்சனம் நல்லா எழுதி இருக்கீங்க சகோ....

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

மிக்க நன்றி நிருபன்......
இதை நான் எதிர்பார்க்கவில்லை....
இந்த அறிமுகம் என்னை மேலும்
எழத தூண்டுகிறது ...
மீண்டும் மீண்டும் நன்றி !!!

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...
நாய் நக்ஸ் என்ன பேருய்யா இது..முதல்ல இதுக்கு விளக்கம் சொல்ல சொல்லுங்க -;))////

அதற்கு தற்போது என் ப்ளாக் -ல்
விளக்கம் கொடுத்துள்ளேன் ....
நன்றி !!

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

Powder Star - Dr. ஐடியாமணி said...
நாய் - நக்ஸ் நண்பருக்கு வாழ்த்துக்கள்!/////

மிக்க நன்றி !!!

Unknown said...
Best Blogger Tips

விமர்சனம் சூப்பர் நண்பா.

அறிமுக பதிவருக்கு வாழ்த்துகள்

Yazhini said...
Best Blogger Tips

அசத்தலான கதையை மிக அழகாக விமர்சித்து உள்ளீர்கள்!

இந்த படத்தை நான் பார்க்க வில்லை ! கண்டிப்பாக பார்கிறேன் ! ரகளை செய்யும் பெண்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் !!

நன்றி அண்ணா !

Yazhini said...
Best Blogger Tips

ட்ரைலர் சுப்பர் !

அண்ணா, ட்ரைலர் உடைய இணைசங்கிலி இங்கு பிரசுரித்திருப்பது போலவே, படத்தை காண டோர்ரென்ட் அல்லது மெகா வீடியோ லிங்க் ஐ இங்கு பிரசுரிக்கலமே !

படம் பார்க்காத என்னை போன்றோருக்கு உபயோகமாக இருக்கும் அல்லவா !

இது என் கோரிக்கை தான் ! இதை பரிசீலிப்பீர்கள் என்று நினைக்கிறேன்

நன்றி அண்ணா !

( எக்ஸ்ட்ரா வேலை செய்ய தூண்டியதற்காக மன்னிக்கவும் அண்ணா ! )

tamilvaasi said...
Best Blogger Tips

விமர்சனம் அருமை சகோ... படம் பாக்க டைம் இல்லை... அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

செங்கோவி said...
Best Blogger Tips

ஸ்டில் கலக்கலா இருக்கே...

ஆள் மாறாட்டக்கதைல நம்மாளுக தானே ஸ்பெஷலிஸ்ட்..இதுவும் நல்லாயிருக்கா?

செங்கோவி said...
Best Blogger Tips

என்னய்யா இப்பல்லாம் இங்கிலிபீஸ் படமா பார்த்துத் தள்றீங்க..

செங்கோவி said...
Best Blogger Tips

//இந்த இன்பங்களையெல்லாம் விட, நாம் சுற்றுலா செல்லும் போது எம்மைப் போன்ற அதே சாயல் உடைய இன்னொரு நபர் உலகின் எங்காவது ஒரு மூலையில் இருக்கும் வேளையில் அந் நபர் என்று எம்மை நினைத்து, அவருக்கு கிடைக்கும் அதிசயிக்கத் தக்க விருந்துபசாரங்கள் எமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்?//

விருந்து கிடைச்சாச் சரி..வேறெதவாவது கிடைச்சா?

காட்டான் said...
Best Blogger Tips

இங்கீலீசு படங்களா பாக்கிறீங்க அதுவும் கதை பாரீசில நடக்குதா..? நாங்கதானே இஞ்ச எங்கட சொந்தகாரங்க,நண்பர்கள் வந்தா கைடா இருந்து பாரீச சுத்தி காட்டுவோமே..!! அழகான விமர்சனம்.

காட்டான் said...
Best Blogger Tips

நாய் நக்ஸ்க்கு வாழ்த்துக்கள்...அவரு நம்மாளு அடிக்கடி அவரையும் கும்பிட்டு வைப்பேனுங்க...!!!

Yazhini said...
Best Blogger Tips

இன்று இங்கு அறிமுகம் ஆகி இருக்கு திரு NAAI - NAKS அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

கண்டிப்பாக இந்தப்படத்தை பார்க்க தூண்டுகிறது உங்கள் பதிவு....!!!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

நாய்-நக்ஸ்'ன் பதிவுகளை படித்து ரசித்திருக்கிறேன், என் நண்பரும் கூட, அவர் எழுதிய "கண்மணி அன்போடு' பாடலை மரண மொக்கை ஆக்கி போட்டுருந்தார் மிகவும் ரசித்தேன்.

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

புதிய அறிமுகத்துக்கு வாழ்த்துக்களும், நிரூபனுக்கு நன்றிகளும்....!!!

M.R said...
Best Blogger Tips

அழகான விமர்சனம் ந்ண்பரே

thamil manam 10

indli 6

tamil10-13

ulavu 3

maruthamooran said...
Best Blogger Tips

ஆகா......! பீட்டர் பட விமர்சனமா போட்டுத் தாக்கிறார் நம்மட நிரூ!

நல்லாயிருக்கு.

rajamelaiyur said...
Best Blogger Tips

Good review boss

shanmugavel said...
Best Blogger Tips

இப்போவெல்லாம் நிறைய சினிமா பார்க்க ஆரம்பிச்சிட்டீங்க ! எதுனா வேண்டுதலா!

கோகுல் said...
Best Blogger Tips

பாஸ்!ஆங்கிலப்படத்துக்கு அழகுத்தமிழில் விமர்சனம்
அருமையா இருக்குங்க!

கோகுல் said...
Best Blogger Tips

பாரிஸ்ல நடக்குத? நம்ம காட்டான் மாமா'வுக்கு படத்துல இடம் கிடையாதா?

Unknown said...
Best Blogger Tips

மாப்ள விமர்சனம் அருமையா இருக்குய்யா....அதுவும் இம்புட்டு பணம் போட்டு எடுக்கறாங்க பாரு அதான் பெரிய விஷயம்....பகிர்வுக்கு நன்றி!அறிமுக பதிவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

Unknown said...
Best Blogger Tips

நல்லா இருக்கு பாஸ்! பாக்கணும்! ஓரே படம் படமா பாக்குறீங்க போல! கலக்குங்க! :-)

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

MANO நாஞ்சில் மனோ said...
புதிய அறிமுகத்துக்கு வாழ்த்துக்களும், நிரூபனுக்கு நன்றிகளும்....!!////
MANO நாஞ்சில் மனோ said...
நாய்-நக்ஸ்'ன் பதிவுகளை படித்து ரசித்திருக்கிறேன், என் நண்பரும் கூட, அவர் எழுதிய "கண்மணி அன்போடு' பாடலை மரண மொக்கை ஆக்கி போட்டுருந்தார் மிகவும் ரசித்தேன்.////

யாழினி said...
இன்று இங்கு அறிமுகம் ஆகி இருக்கு திரு NAAI - NAKS அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !///
காட்டான் said...
நாய் நக்ஸ்க்கு வாழ்த்துக்கள்...அவரு நம்மாளு அடிக்கடி அவரையும் கும்பிட்டு வைப்பேனுங்க...!!!///
தமிழ்வாசி - Prakash said...
விமர்சனம் அருமை சகோ... படம் பாக்க டைம் இல்லை... அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்///
வைரை சதிஷ் said...
விமர்சனம் சூப்பர் நண்பா.

அறிமுக பதிவருக்கு வாழ்த்துகள்///

அனைவருக்கும் மிக்க நன்றி !!!

Yoga.s.FR said...
Best Blogger Tips

Powder Star - Dr. ஐடியாமணி said... Best Blogger Tips [Reply To This Comment]

@Yoga.s.FR

இனிய பிரெஞ்சுக் காலை வணக்கம்,நிரூபன்!படமெல்லாம் தியேட்டருக்குப் போய்ப் பார்ப்பதில்லை!நன்றாக விமர்சியிருக்கிறீர்கள்!புள்ளிகள் போடவில்லையே?////////

வாங்க நான் கூட்டிட்டுப் போறன்! ஆனா பிய்யே நீங்கள் தான் எடுக்கணும்!///பிரட்டினையில்ல.கியூவில நிக்க வெக்கப்படுறியள் போலயிருக்கு!நான் கியூவில நிண்டு ரிக்கெற்(பிய்யே)எடுப்பன்,காசு நீங்கள் தான் தர வேணும்!ஒரு அப்பனுக்கு இது கூட செய்யாட்டி என்ன புள்ளை?

Anonymous said...
Best Blogger Tips

பொண்ணோட நச்சரிப்புக்காக பார்த்தது...சொதப்பல்ஸ்...டீன்ஸ்க்கு பிடிக்கும்...
BTW..நல்ல விமர்சனம் நண்பரே...

குறையொன்றுமில்லை. said...
Best Blogger Tips

விமரிசனம் நல்லா இருக்கு புதிய அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

நீங்க பாட்டுக்கு நல்ல படமாப் பார்த்து விட்டு விமரிசனம் எழுதிடறீங்க! பார்க்கணுமே.

F.NIHAZA said...
Best Blogger Tips

விமர்சனம் நல்லா இருக்கு....

சசிகுமார் said...
Best Blogger Tips

மாப்ள விமர்சனம் நல்லா இருக்குய்யா...

தனிமரம் said...
Best Blogger Tips

ஒரே ஆங்கிலப்படமாப் பார்க்கிறீங்க போல பாஸ் நமக்குத்தான் நேரம் வாய்க்குது இல்ல!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

///நாய் - நக்ஸ்////
இவரது பெயரே வித்தியாசமாக இருக்கே எனவே இவரது பதிவும் வித்தியாசமாக சுவாரஸ்யமாக இருக்கும்.வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

அப்பறம் இந்தப்படம் நான் பாத்துவிட்டேன் பாஸ் சோ உங்கள் விமர்சணம் சூப்பர்(இது டெம்ளேட் கமண்ட் இல்லை எல்லாம் நீங்க கண்டு பிடிச்ச மெசின் கமண்ட்)

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails