Tuesday, October 25, 2011

LIMITLESS - ஹாலிவூட் திரிலிங் பட விமர்சனம் - போதை மாத்திரையால் சூப்பர் மேனாகும் ஹீரோ!

முன் அறிவித்தல்: இளகிய மனமுடையோர்க்கு உகந்த படம் அல்ல.
பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய உறவுகளே! சில திரைப்படங்கள் அப் படம் கொண்டிருக்கும் கதை நகர்விற்கு அமைவாக "ஏன்டா இப் படத்திற்கு வந்தோம்" என மனதில் சலிப்பினை ஏற்படுத்தி விடும். சில திரைப்படங்களோ, எம் மனதில் இருக்கும் ஏனைய சிந்தனைகளையெல்லாம் மறந்து அப்படியே அத் திரைப்படத்தோடு ஒன்றித்திருக்க வைத்து விடும். ஆரம்பத்தில் கொஞ்சம் சலிப்பினை வர வைத்தாலும் படத்தின் மையப் பகுதியில் சூடு பிடிக்கத் தொடங்கும் திரைப்படங்களும் இருக்கின்றன. இன்றைய இயந்திர உலகில் மக்கள் பொதுவாக விரும்புவது மனதினை மகிழ்விக்கின்ற, அதே நேரம் மக்களை இலகுவில் கவர்கின்ற படங்களையே ஆகும். அந்த வகையில் நாம் இப் பதிவின் வழியே அலசவிருக்கும் படம் தான் LIMITLESS.
Virgin Produced மற்றும் Relativity Media தயாரிப்பில் இவ் வருடத்தின் (2011) மார்ச் மாதமளவில் திரைக்கு வந்துள்ள படம் தான் இவ் LIMITLESS. Neil Burger அவர்களின் இயக்கத்தில், Paul Leonard Morgan அவர்களின் திரிலிங் கலந்த விறு விறு இசையில், Bradley Copper, Abbie Cornish, Robert De Niro, உட்பட மற்றும் பல ஹாலிவூட் நட்சத்திரங்களின் நடிப்பில், The Dark Fields எனும் Alan Glynn அவர்களின் நாவலை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட இப் படத்தினை, Lesile Dixon, Rayan Kavanaugh, Scoot Kroopf ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். படத்தின் முதல் பத்து நிமிடங்களும் "ஏன்டா படத்திற்கு வந்தோம்? படத்தில் ஒன்றையும் காணமே!" என எண்ணுகையில் தான் படத்தின் விறு விறுப்புக் காட்சிகள் திரையில் தெரியத் தொடங்குகின்றன.

தன்னுடைய முன்னாள் நண்பனைச் சந்திக்கும் ஹீரோ Bradley Copper அவர்கள் அவன் கொடுக்கும் போதை மாத்திரைய (Smart Pills) முதலில் வாங்க மறுப்பது போல் பாசாங்கு செய்தாலும், பின்னர் தன் நண்பனின் சொற் கேட்டு ஒரு மாத்திரையை வாங்கி உட் கொண்ட பின்னர் தன் மூளைப் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் 30 செக்கன்ஸ் கணப் பொழுதில் இடம் பெறுவதனை உணர்ந்து கொள்கிறார். இந்த ஸிமார்ட் பில் மாத்திரையானது கூப்பருக்கு ஒரு மணித்தியாலத்தினுள் ஒரு மொழியினைக் கற்றுக் கொள்ளுகின்ற வேகத்தினையும், நான்கு நாட்களினுள் நாவல் எழுதுகின்ற வல்லமையினையும், அதே வேளை துரித கதியில் சூப்பர் மேன் போன்று தன்னை எதிர்க்க வருவோரை எதிர் கொள்ளும் மனோதிடத்தினையும் கொடுக்கின்றது. 

ஒரு மாத்திரையினை உட் கொண்ட பின்னர் இலகுவில் போதையினை மறந்து விலகி இருக்க முடியாது என்பதனை உணர்ந்தவராய், சில நாட்களின் பின்னர் மீண்டும் நண்பனிடம் சென்று போதை மாத்திரையினைக் கேட்கின்றார் கூப்பர். அப்போது "தான் எது கேட்டாலும் செய்வியா?" என வினவும் கூப்பரின் நண்பரின் கூற்றுக்கு அமைவாக கூப்பர் வெளியே சென்று உணவுப் பொருட்களை தன் நண்பரிற்காக வாங்கிவரச் சென்று மீண்டும் வீட்டிற்கு வரும் போது, அங்கே நண்பனின் வீடு இனந் தெரியாதோரால் சேதமாக்கப்பட்டு, உடைத்து நொறுக்கப்பட்டிருக்கையில், நண்பனைத் தேடிப் பார்க்கையில் நண்பனும் கொலையுண்டிருக்க காண்கிறார். 
அவசர அவசரமாக கொலையாளிகளைத் தேடிப் பார்க்கையில் கொலையாளிகள் துரித கதியில் மறைந்து விட, நண்பனிடமிருக்கும் போதை மாத்திரைகளையும், பணத்தினையும் தேடி எடுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நகரும் ஹீரோ கூப்பரை, கொலையாளிகள் மர்ம நபர்களாக பின் தொடர படத்தின் திரிலிங் + மர்மங்கள் ஆரம்பமாகின்றது. தன் வசமுள்ள மாத்திரைகளை ஒவ்வொன்றாக உட் கொள்ளத் தொடங்கும் போது, கூப்பரின் மூளை கம்பியூட்டரை விட வேகமாகவும், அதே வேளை விவேகமாவும் தொழிற்படும் வல்லமையினை பெற்று விட, ஒரு டிஸ்கோ பார்ட்டியில் அக்கவுண்டிங் நபர்களை கண்டு அவர்களுடன் தன் விவேகத் திறமையால் பேசும் போது, அதுவே அப் பைனான்ஸ் புரோக்கர் கம்பனி நபர்களுக்கு பிடித்துக் கொள்ள அவரைத் தம்மோடு இணைத்துக் கொள்ளப் பிரியப்படுகின்றார்கள்.

ஒரு புறத்தில் விவேகத்தால் பங்கு மார்க்கட்டுக்களையும், நட்டத்தில் இயங்கிய புரோக்கர் கம்பனியின் வளர்ச்சியினையும் மேம்படுத்தும் கூப்பர் மறு புறத்தில் கொலையாளிகள்; அவருக்கு கடன் கொடுத்து விட்டு, போதை மாத்திரையினை வாங்கிய அதே ருசியால் மீண்டும் பின் தொடரும் ரஷ்ய மாபிய கும்பல் நபர்கள் என பல தரப்பட்டவர்களுடன் மோத வேண்டிய சூழ் நிலைக்கு ஆளாகின்றார். கூப்பரின் நண்பரைக் கொலை செய்தவர்கள் அடுத்து கூப்பர் நைட் கிளப்பில் மீட் பண்ணிய மற்றுமோர் பெண்ணைக் கொலை செய்கிறார்கள். இக் கொலையொடு தொடர்புடையவர் கூப்பர் என ஆதாரங்களை வைத்து போலீஸ் வலை விரிக்க கொலையாளிகள் தப்பித்து விடுகின்றார்கள். 

தன்னைப் பின் தொடரும் கொலையாளிகள் யார்? அவர்கள் ஏன் பின் தொடர்கிறார்கள்? கூப்பர் கொலையாளிகளிடம் மாட்டினாரா? அடுத்தடுத்து இடம் பெறும் மூன்று கொலைகளுக்கான சந்தேக நபர்கள் யார்? கூப்பர் தன் விவேகத் திறமையால் முன்னேறினாரா? இல்லை நஷ்டத்தில் இயங்கிய கம்பனியை மேலும் அதல பாதாளத்தில் வீழ்த்தினாரா?போதை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுக்கும் நபரின் நிலை எவ்வாறு அமைந்து கொள்ளும்? முதலிய பல வினாக்களுக்கு படத்தின் இறுதிப் பகுதி விடையாக அமைந்து கொள்கிறது. படத்தினை பார்க்கையில் மேற் கூறபட்ட வினாக்களுகான விடையினை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பதற்கு அமைவாக கூப்பரை விட்டுப் பிரிந்த காதலியாக இப் படத்தில் வரும் நடிகை Abbie Cornish அவர்கள், கூப்பரிடம் வசதி வாய்ப்புக்கள் வந்து கொள்ள அவரைத் தேடி வந்து இடையிடையே ரொமாண்டிக் சீன்களால் சூடேற்றியும், செண்டிமெண்ட் காட்சிகளால் மனதில் இரக்கத்தை வரவழைத்தும் செல்கிறார். கூப்பரின் தங்கையாக ஒரு சீனில் மாத்திரம் வரும் நடிகை Anna Friel அவர்கள் போதை மாத்திரைகளைத் தொடர்ந்து யூஸ் பண்ணுவதால் வரும் விளைவுகளையும், இடையில் நிறுத்துவதால் ஏற்படும் தீமைகளையும், போதை மாத்திரைகளைப் பயன்படுத்தியதால் தனக்கு ஏற்பட்ட விபரீதத்தினைக் கூறிச் சமூகத்திற்கு விழிப்புணர்வினைத் தந்திருக்கிறார். திரிலிங் பிரியர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் இயக்குனர் Neil Burger அவர்கள் இப் படத்தினை விறு விறுப்பான கதை அம்சம் கொண்ட படமாக படைத்திருக்கிறார்.

LIMITLESS: திரிலிங் கலந்து சமூகத்திற்கு முரண்பாடான பாதையின் விபரீதத்தினை சொல்லி நிற்கும் படம்.
27மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப் படமானது 105 நிமிடங்கள் கால அளவை கொண்டுள்ளது.

பிற் சேர்க்கை: இவ் வருடம் வெளியான புதிய படம் எனும் காரணத்தினால் இப் படத்தினைப் பார்ப்பதற்கான லிங்கினை இணைக்க முடியவில்லை. 
**************************************************************************************************************
இப் பதிவினூடாக நாம் செல்லவிருக்கும் வலைப் பதிவின் பெயர் "நாட்டவிழி நெய்தல்" ஆகும். இலங்கை வானொலித் துறையூடாகவும், இலக்கிய உலகினூடாகவும் நன்கு பரிச்சயமான பெயராக விளங்கும் "அஷ்ரஃப் சிஹாப்தீன்" அவர்கள் இவ் வலைப் பூவினை எழுதி வருகின்றார். இலக்கிய நயம் சொட்டும் அழகு தமிழ்ப் பதிவுகளோடு உலக விடயங்கள், பயண அனுபவங்கள் எனப் பல வகையான பதிவுகளைப் பதிவேற்றி வருகின்றார். 

நாட்டவிழி நெய்தல் வலைப் பூவிற்கு நீங்களும் சென்று வரலாம் அல்லவா?:
***************************************************************************************************************

அன்பிற்குரிய உறவுகளே!
நாற்று வலைப் பதிவு வாசகர்கள், நண்பர்கள். பின்னூட்டவாதிகள், மற்றும் ஒவ்வோர் பதிவிற்கும் பேராதரவு நல்கும் வலையுலகச் சொந்தங்கள், திரட்டிகளின் உரிமையாளர்கள் அனைவருக்கும் இனிய இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் அகம் மகிழ்கின்றேன்!

32 Comments:

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் போல! ஆமா அந்த மாத்திரை எங்க கிடைக்கும் நண்பா? :)

- அஷ்ரப் சிஹாப்தீனுக்கான அறிமுகம் போதாது! இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்!

- உங்க ப்ளாக் அழகாக உள்ளது!

F.NIHAZA said...
Best Blogger Tips

த்ரில்லிங் படம் என்றாலே கேட்கவும் வேண்டுமா..????

அருமையான விமர்சனம்.....

அஷ்ரப் ஷிஹாப்தீன் ஸேரின் அனைத்துப் புத்தகங்களும் அருமை....
அவர்...எழுத்தாளர்களை நன்றாக ஊக்குவிக்கும் ஒரு படைப்பாளி...

காட்டான் said...
Best Blogger Tips

விமர்சனம் நல்லா இருக்கையா ஆனா படம் பார்க்கதான் நேரமில்ல..

காட்டான் said...
Best Blogger Tips

அஷ்ரப் சிஹாப்தீனுக்கு எனது வாழ்த்துக்கள்..

மதுரன் said...
Best Blogger Tips

சூப்பர் விமர்சனம் பாஸ்
படத்த இப்போது இங்க பார்க்க முடியுமா தெரியல்ல..
டிவிடி வரட்டும் பார்ப்பம்

மதுரன் said...
Best Blogger Tips

உங்களுக்கும் இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள் நிரூ

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Best Blogger Tips

நல்ல விமர்சனம்

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips

இலக்கிய நயம் சொட்டும் அழகு தமிழ்ப் பதிவுகளோடு உலக விடயங்கள், பயண அனுபவங்கள் எனப் பல வகையான பதிவுகளைப் பதிவேற்றி வருகின்றார். /

இனிய இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

செங்கோவி said...
Best Blogger Tips

//முன் அறிவித்தல்: இளகிய மனமுடையோர்க்கு உகந்த படம் அல்ல//

அப்போ நான் பார்க்க முடியாதா...

செங்கோவி said...
Best Blogger Tips

போதை மருந்தால், சக்தியா...


தப்பான கான்செப்ட்டாக உள்ளதே..இம்மாதிரிப் படங்களை ஆதரிக்காமல் இருப்பதே நல்லது.

Anonymous said...
Best Blogger Tips

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

Kumaran said...
Best Blogger Tips

தலைவா..நேரம் குறைமையால் இன்னும் பதிவை முழுதாக படிக்கவில்லை..படித்துவிட்டு கமெண்ட் எழுதுகிறேன்..

M.R said...
Best Blogger Tips

படம் அருமையாகத்தான் இருக்கும் போல இருக்கு ,முடிந்தால் பார்க்கலாம் .
நன்றி நண்பா

K.s.s.Rajh said...
Best Blogger Tips

நானும் இந்தப்படம் பார்த்தேன் பாஸ்..ஆனாலும் விமர்சணமாக படிக்கும் போதும் ரசிக்கமுடிகின்றது...

Anonymous said...
Best Blogger Tips

பட விமர்சனம் நல்ல இருக்கு பாஸ் ... ஆனா படம் இப்போ பார்க்கிற நிலையில நான் இல்ல என்பதை மிக வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன் ))

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...
Best Blogger Tips

Happy dewali

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...
Best Blogger Tips

super

நிரூபன் said...
Best Blogger Tips

@பிரெஞ்சுக்காரன்
மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் போல! ஆமா அந்த மாத்திரை எங்க கிடைக்கும் நண்பா? :)

- அஷ்ரப் சிஹாப்தீனுக்கான அறிமுகம் போதாது! இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்!

- உங்க ப்ளாக் அழகாக உள்ளது!//

உங்கள் முதல் வருகைக்கு நன்றி சகோதரம்,
உங்களை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் அந்த மாத்திரை கொடுக்க முடியாது சார்...
பிறகு பின் விளைவுகள் அதிகமாகிடாது.
ஹே...

அப்புறமா, அஷ்ரஃப் சிஹாப்தீன் பற்றி இரண்டு மூன்று பதிவளவிற்கு நிறைய விடயங்கள் எழுதலாம்.
வழமையாகப் பதிவர் அறிமுகத்தில் சிறியளவான அறிமுகங்கள் கொடுப்பதால், எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிமுகங்கள் இடம் பெற வேண்டும் எனும் நோக்கில் தவிர்த்து விட்டேன்.

ராஜி said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி சகோ, போதை மாத்திரையால அழிவுதான் இதுவரை படத்துல பார்த்திருக்கோம். முதல் முறையா நல்ல விதமா பார்க்குறோம். இதைப் பார்த்து புள்ளைங்களாம் அட்வாண்டேக் எடுத்துக்காம இருந்தால் சரி

Yoga.S.FR said...
Best Blogger Tips

வணக்கம்!////முன் அறிவித்தல்: இளகிய மனமுடையோர்க்கு உகந்த படம் அல்ல.////அதனால் "விமர்சனமே" படிக்கவில்லை!தீபாவளி நல வாழ்த்துக்கள்!விடுமுறை தானே?என்ஜாய் தீபாவளி!!!

Yoga.S.FR said...
Best Blogger Tips

நிரூபன் தளம் மூலம் ஈழா உறவுகள் அனைவருக்கும் தீபாவளி நல வாழ்த்துக்கள்!வலிசுமந்த அத்தனை உறவுகளும் இன்றைய நாளை இறை வழிபாட்டுடன் அனுட்டிக்க வேண்டும். எல்லோருக்கும் சாந்தி,சமாதானம் கிட்ட வல்லோனை வேண்டுவோம்!

! ஸ்பார்க் கார்த்தி @ said...
Best Blogger Tips

அன்பு பதிவருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் எனது தளத்தை தரிசித்தமக்கு, நன்றி!!!!!!!!!!

Yoga.S.FR said...
Best Blogger Tips

இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள், நிரூபன்!இந்நன்நாளில் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து நரகாசுரனைப் பலி கொண்டாட வாழ்த்துகிறேன்!

athira said...
Best Blogger Tips

நிரூபன்.... வீட்டிலயோ? இல்ல புளொக்கிலயோ இருக்கிறீங்க? .........இல்ல தெரிஞ்சுகொள்ளத்தான் கேட்டேன்...:)))).

ஒரு டவுட்... இளகிய மனமென்றால்.... லிக்குயிட் கிட்னியாக இருக்குமோ?:)))))...

athira said...
Best Blogger Tips

ஓ.... பிரிஞ்சுபோச்ச்ச்ச்ச்(புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்))... நிரூபன் புளொக்கில இல்லை:))).

நான் இந்தப்படம் பார்க்க மாட்டேன்....

ஹேமா said...
Best Blogger Tips

நல்ல படமென்று நினைக்கிறேன்.
பார்க்கவே வேணும் நிரூ.

என் தேச உறவுகள் அனைவருக்குள்ளும் தீபஒளி பரவ என் மனம் நிறைந்த வாழ்த்துகள் !

வைரை சதிஷ் said...
Best Blogger Tips

சூப்பர் விமர்சணம் பாஸ்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

அம்பலத்தார் said...
Best Blogger Tips

வணக்கம், தங்களிற்கும் தங்கள் குடும்ப உறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மாய உலகம் said...
Best Blogger Tips

செங்கோவி said...
போதை மருந்தால், சக்தியா...


தப்பான கான்செப்ட்டாக உள்ளதே..இம்மாதிரிப் படங்களை ஆதரிக்காமல் இருப்பதே நல்லது.//

ஆமோதிக்கிறேன் நண்பா...

மாய உலகம் said...
Best Blogger Tips

அருமையான விமர்சனம்... சூப்பர் பாஸ்

மாய உலகம் said...
Best Blogger Tips

"அஷ்ரஃப் சிஹாப்தீன்" அவர்களது நாட்டவிழி நெய்தல் வலைப் பூவிற்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நான் இன்னும் பார்க்காத படம் , விமர்சனம அழகு. வலைப்பூ அறிமுகத்துக்கு பாராட்டுக்கள்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails