Sunday, October 16, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 10

இலங்கைத் தமிழர்களின் மொழி - கலாச்சார - வரலாற்றுப் பரம்பல்:
இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....

ஒன்பதாவது பாகத்தின் தொடர்ச்சியாக.....

இவ்வாறு ஐயா நீண்ட தன்னுடைய பிரசங்கத்தை நிறைவு செய்கையில் அம்மா தான் வரலாற்றினை முழுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தா(ர்) என்பதற்கு சான்றாக "இலங்கையில் தமிழ் மொழியின் பரம்பல், தமிழ் மொழி தமிழர்களின் பேச்சு மொழியாக எப்படி உருமாற்றம் பெற்றது என்று சொல்லாமே" என ஐயாவிற்கு நினைப்பூட்டினா(ர்). 


"இன்னைக்கே நான் சொல்லத் தொடங்கி என்னோட நித்திரையினையும் கை விட்டு நிற்பதுதான் உனக்கு விருப்பமோ? இப்பவே பேரன் தூங்கிட்டான். அவனைக் கொண்டு போய் தூங்க வை.நான் நாளைக்கு மிகுதி வரலாற்றினைச் சொல்கிறேன்" எனப் பேசியவாறு படுக்கையறையினை நோக்கிப் போனார் ஐயா.

கதை கேட்கும் ஆவலில் இருந்த எனக்கு எவ்வாறு மறு நாள் பொழுது புலர்ந்து மாலையாகியது என்பதே தெரியாதவனாக பட்டம் கட்டி ஏற்றுவதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது தான் இருண்டு விட்டதற்கு அடையாளமாக அம்மாவின் அழைப்பொலி என் செவியில் விழுந்தது. வீட்டிற்குச் சென்று சாப்பிட்ட பின்னர், பாடசாலையில் தந்த கை வேலையினைச் செய்யத் தொடங்கினேன். அம்மாவின் உதவியோடு ஒரு ரோஜாப் பூவைக் கீறி அதன் மேல் துணியால் டிசைனிங் செய்து ஒட்டி மறு நாள் பாடசாலைக்கு கொண்டு செல்வதற்கு தயாராக புத்தகப் பையிற்குள் சிறிய பைல் (File) ஒன்றினுள் சொருகி வைத்தேன். 


ஐயா இரவுச் சாப்பாட்டை முடித்த பின்னர், வரலாற்றினைச் சொல்லத் தொடங்கினார். 
"பேரா நீ சொல்லு பார்ப்போம்! நேற்று எந்த இடத்தில கதையினை நிறுத்தினோம்?" என ஐயா கேட்டதும், "நான் தமிழர்களின் மொழிப் பரம்பல் தொடர்பாகச் சொல்லுவதாகச் சொல்லியிருந்தீங்க ஐயா என்று நினைவூட்டினேன். ஐயா, நான் வரலாற்றினை ஆவலாகச் செவிமடுப்பதாகா அகம் மகிழ்ந்து கொண்டு, கதையினைத் தொடங்கினார். 


இலங்கைத் தமிழர்களின் ஆரம்ப காலத் தோற்றம் - அவர்களின் மொழிப் பரம்பல் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் எப்படி நோக்குவார்கள் எனத் தெரியுமா?" என ஐயா கேட்டார்.
"நீங்க சொன்னாத் தானே தெரியும்" என நான் ஓர் டைம்மிங் காமெடி பண்ணினேன். "ஆரியக் கூத்தாடினாலும் பேரன் காரியத்தில் கண்ணாயிருக்கானே" எனச் சொல்லி; ஹா...ஹா.....எனச் சிரித்தவாறு ஐயா தொடர்ந்தார். 


வரலாற்றுக்கு முந்திய காலம், வரலாற்றுக் காலம் எனும் இரு பெரும் பிரிவுகளினுள் நின்றும், கற்காலம், இரும்புக் காலம் எனும் பிரிவுகளினுள் நின்றும் இலங்கைத் தமிழர்களின் கலாச்சார - மொழியியல் பண்பாட்டு - வரலாற்று விழுமியங்களை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் நோக்குவார்கள்.


உலக வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஆபிரிக்க கண்டத்திலே தான் மனித இனம் முதன் முதலில் தோன்றியதாம். இதற்குச் சான்றாக சாட் என்ற {Chad) என்கிற ஆபிரிக்க கண்டத்தில் உள்ள பகுதியில் கண்டறியப்பட்ட ஆதி மனிதன் தொடர்பான எச்சங்கள் ஏறத்தாழ ஏழு மில்லியன் அல்லது எழுபது இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இக் காலத்தில் தோன்றிய மனிதர்கள் இன்றைய காலத்தில் வாழும் மனிதர்களைப் போன்றவர்கள் அல்ல.


மனிதனது பரிணாம வளர்ச்சியில் அவன் இன்றைய இயல்பான மனிதத் தோற்றத்தினைப் பெற்றுக் கொள்ள பல இலட்சம் ஆண்டுகள் எடுத்திருக்கிறது. அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆபிரிக்காவில் இருந்து மனித வர்க்கத்தினர் வெவ்வெறு இடங்களை நோக்கித் தம் தேவை கருதித் செல்லத் தொடங்கினார்கள்.


"ஐயா நிறுத்துங்க, அப்படீன்னா எங்களின் பாடப் புத்தகத்தில் படத்தோடு போட்டிருக்கிற I'm Muru, I'm From Nigeria என்ற ஆளும் எங்கட சொந்தக்காரன் என்று சொல்ல வாறீங்களா? என நான் கேள்வியெழுப்பினேன். 
"ஆமாம். எங்களைப் போன்ற மனித இனங்கள் தோன்றுவதற்கான முன்னோடிகள் தான் இந்த ஆபிரிக்கர்கள் எனச் சொல்லியவாறு ஐயா தொடர்ந்தார். இந்த ஆதிமனிதர்களின் தோற்றம் பற்றி அறிவியல் ரீதியில் நாம் நோக்கும் போது, ஆபிரிக்காவில் இருந்து இடம் பெயரத் தொடங்கிய ஆதி மனிதர்கள் செங்கடலின் தென் பாகத்தினைக் கடந்து, அரேபியாவின் தென் கரை வழியாக இந்தியாவின் தென் கரையினை அடைந்து, அங்கிருந்து இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியாவினை அடைந்தார்களாம். 


இந்த இனப் பரம்பலின் அடிப்படையில் ஆசியாக் கண்டத்தில் தென் இந்தியாவில் தான் மனித இனம் முதலில் தோன்றியிருக்கிறது. இந்த ஆதி மனிதர்கள் தோன்றிய காலத்தில் வட இந்தியா என இப்போது அழைக்கப்படுகின்ற பகுதியில் மனிதர் நடமாட்டம் ஏற்பட முன்னதாகவே தென் இந்தியாவில் தான் மக்கள் குடியேறியுள்ளார்கள். இலங்கை தென் இந்தியாவின் அடிப் பாகத்திலிருந்து பூகோள ரீதியாக 7000ம் ஆண்டுகளுக்கு முன்பதாகப் பிளவு பட்ட போது, இந்த மூதாதையர்கள் அல்லது ஆதிக் குடிகளும் இலங்கை இந்தியப் பகுதிகளில் சிதறி வாழ்ந்திருக்கிறார்கள். 


நான் ஏலவே உங்களுக்குச் சொன்ன மாதிரி தென் இந்தியப் பூர்வீக குடிகளுக்கும், இலங்கையில் வாழும் பூர்வீக குடிகளுக்கும் இடையில் பல்வேறு வகையில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் ஒற்றுமைகள் இருந்திருக்கிறது. தென் இந்தியாவில் வாழ்ந்த மக்களும், இலங்கையில் வாழ்ந்த மக்களும் ஆரம்ப காலத்தில் கற் கருவிகளைப் (கல்லால் ஆன) பயன்படுத்தித் தமது வாழ்க்கையினை நடாத்தியிருக்கிறார்கள்.


இலங்கையில் வடக்கு வட மேற்குப் பகுதியில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய கற் கருவிகளும், தென் இந்தியாவின் தமிழ் நாட்டின் திருநெல்வேலிக் கரையில் பயன்படுத்திய கற் கருவிகளும் ஒரே தன்மை உடையனவாக காணப்படுகின்றன. இவ் இரு பிரதேசங்களிலும் வாழ்ந்த மக்கள் ஒத்த பண்பாடு, மொழிப் பேச்சு ஆகியவற்றினை உடையவர்களாக காணப்பட்டார்கள் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். 


ஐயா எப்படி ஒத்த பண்பாடு, ஒத்த மொழிப் பேச்சு உடையவர்கள் என்று ஆதாரம் இல்லாது சொல்லுவீங்க. Any Evidence? என நான் கேட்கையில், ஐயா சிரித்தவாறு, பொடியனுக்கு சுமதி டீச்சரிடம் ரெண்டு நாள் படிச்ச இங்கிலீஸ் ஒர்க் பண்ணுது என நக்கல் அடித்தார்.  ஆதாரம் இல்லாமல் நான் ஏதும் சொல்லுவேனோ பேரா? கொஞ்சம் பொறுமையாக கதையினைக் கேள் பேரா எனச் சொல்லியவாறு ஐயா தொடர்ந்தார்.
                                                                                 வரலாறு விரியும்..........................

இத் தொடருக்கான உச்சாத் துணை நூல்கள்: 
*Ancient Jaffna: By M.C. Rasanayagam.
*இலங்கையில் தமிழர்: கலாநிதி முருகர் குணசிங்கம்
*The Demography Of Ceylon An Introductory Survey: B.L.Panditaratna And S.Selvanagakam.

*வரலாற்று ஆய்வாளர் K.இந்திரபாலாவின் குறிப்புக்கள்.


பிற் சேர்க்கை: அன்பிற்கினிய உறவுகளே, வார இறுதி நாட்களில் வலைப் பதிவிற்கு வாசகர்கள் குறைவாக வரும் காரணத்தினால், வழமையாக என் பதிவுகளில் இடம் பெறும் பதிவர் அறிமுகத்தினை வார நாட்களில் வெளியாகும் பதிவுகளில் சேர்த்துக் கொள்கிறேன்.


இப் பதிவில் உள்ள படங்கள் யாவும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை

34 Comments:

Unknown said...
Best Blogger Tips

:)

Unknown said...
Best Blogger Tips

விரியும் வரலாற்றை படிக்க காத்திருக்கின்றோம்....

SURYAJEEVA said...
Best Blogger Tips

நாளை பத்து பாகங்களையும் ஒரே மூச்சில் படிக்க போகிறேன்,

Anonymous said...
Best Blogger Tips

///மனிதனது பரிணாம வளர்ச்சியில் அவன் இன்றைய இயல்பான மனிதத் தோற்றத்தினைப் பெற்றுக் கொள்ள பல இலட்சம் ஆண்டுகள் எடுத்திருக்கிறது.// அமீபாவில் ஆரம்பித்து பல்வேறு பரிணாம வளர்ச்சிக்கட்டங்களின் பின்னே மனிதன் தற்போதைய தோற்றத்தை பெற்றுள்ளான் ஆனால் இது முடிவல்ல இதன் பின்னும் மனிதனின் தோற்றம் பலநூறாண்டுகளில் மாற்றமடையும்.

உங்க இந்த பாகத்தில் பல தகவல்கள் அறிந்துகொண்டேன் நன்றி ...

Anonymous said...
Best Blogger Tips

////ஐயா சிரித்தவாறு, பொடியனுக்கு சுமதி டீச்சரிடம் ரெண்டு நாள் படிச்ச இங்கிலீஸ் ஒர்க் பண்ணுது என நக்கல் அடித்தார்./// பொடியன் ஒரு மார்க்கமாயே அந்தகாலத்தில திரிஞ்சிருக்கான்.....ஆக நெசமாயே பொடியன் சுமதி ரீச்ச்சரிட்ட படிச்சிருப்பானா ஹிஹி

கூடல் பாலா said...
Best Blogger Tips

தமிழர்களுக்கு விறு விறுப்பான தொடர் ....

SURYAJEEVA said...
Best Blogger Tips

http://en.wikipedia.org/wiki/Sinhalese_people

http://en.wikipedia.org/wiki/Genetic_studies_on_Sinhalese

http://en.wikipedia.org/wiki/Sinhala_language

transliteration not working..
these are links ascertaining sinhalese as indo aryan origin...

நிரூபன் said...
Best Blogger Tips

@suryajeeva

http://en.wikipedia.org/wiki/Sinhalese_people

http://en.wikipedia.org/wiki/Genetic_studies_on_Sinhalese

http://en.wikipedia.org/wiki/Sinhala_language

transliteration not working..
these are links ascertaining sinhalese as indo aryan origin...
//

இணைப்பு பகிர்விற்கு நன்றி நண்பா,
வீக்கிப் பீடியா சொல்லும் அனைத்தையும் நான் உண்மையான தகவல்கள் என்று எடுக்க முடியாது, இதே வீக்கிப் பீடியாவில் தமிழர்களின் பூர்வீகம் பற்றி சரியாகச் சொல்லப்படவில்லை.

வீக்கிப் பீடியாவில் யார் வேண்டுமானாலும் எதுவும் எழுதலாம் எனும் நிலை இருப்பதால் தான் இந்தப் பதிவிற்கு வீக்கிப் பீடியாவின் கருத்துக்களை உள்வாங்காமல் சிங்களவர்கள் பற்றி நான் பதிவில் சுட்டியுள்ள வரலாற்று ஆய்வாளர்களின் நூலில் தேடி எடுத்தேன்.

ஆரியர்களின் வழித் தோன்றல் என்பது பற்றி சரியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், இந்தியாவின் ஒரிசாவிலிருந்து வழி வந்து தமிழர்கள் அல்லது நாக இனப் பெண்ணோடு கலந்த கலப்பின் மூலம் பரம்பலுக்குள்ளான இனமே சிங்கள இனம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

Unknown said...
Best Blogger Tips

இந்த பாகத்திலும் வறலாறைப் பற்றி அதிகமாகவே அறிந்தேன்

தனிமரம் said...
Best Blogger Tips

நல்ல வரலாற்றை தொடர்கின்றீர்கள் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கின்றேன்!

தனிமரம் said...
Best Blogger Tips

"ஐயா நிறுத்துங்க, அப்படீன்னா எங்களின் பாடப் புத்தகத்தில் படத்தோடு போட்டிருக்கிற I'm Muru, I'm From Nigeria என்ற ஆளும் எங்கட சொந்தக்காரன் என்று சொல்ல வாறீங்களா? என நான் கேள்வியெழுப்பினேன். // 
இப்படித்தானே எங்கள் ஆங்கிலப்பாடம் எங்களுக்கு அறிமுகமானது அந்த ஆப்பிரிக்கப் பேர் இன்னும் ஞாபகத்தில்.

தனிமரம் said...
Best Blogger Tips

ஐயா எப்படி ஒத்த பண்பாடு, ஒத்த மொழிப் பேச்சு உடையவர்கள் என்று ஆதாரம் இல்லாது சொல்லுவீங்க. Any Evidence? என நான் கேட்கையில், ஐயா சிரித்தவாறு, பொடியனுக்கு சுமதி டீச்சரிடம் ரெண்டு நாள் படிச்ச இங்கிலீஸ் ஒர்க் பண்ணுது என நக்கல் அடித்தார்.  ஆதாரம் இல்லாமல் நான் ஏதும் சொல்லுவேனோ பேரா? கொஞ்சம் பொறுமையாக கதையினைக் கேள் பேரா எனச் சொல்லியவாறு ஐயா தொடர்ந்தார்.// ஆதாரம் காட்டி நிறுவுவது  என்றாள் நாங்கள் என்ன வளந்த நாட்டு முறையிலா இயங்குகின்றோம் !

தனிமரம் said...
Best Blogger Tips

 பொடியனுக்கு சுமதி டீச்சரிடம் ரெண்டு நாள் படிச்ச இங்கிலீஸ் ஒர்க் பண்ணுது என நக்கல் அடித்தார்.  //
இப்படி ஒரு ஆங்கிலம் படிப்பிக்கும் பண்டிதமணி  என்க்கு கிடைக்கவில்லை என்று பொறாமையாக இருக்கு பாஸ்!

சுதா SJ said...
Best Blogger Tips

மிக நன்று..... நீங்க செல்வத்தில் முக்காவாசி எனக்கு தெரியாத தகவல்களே....
படிக்க படிக்க நிறைய தெரிந்து கொண்டேன்...... தொடர்ந்து எழுதுங்கள்...
இப்படி பட்ட தொடர் நிறைய தெரிந்தவர்கள் மட்டுமே எழுத முடியும்.....
உங்களால் மட்டுமே எழுத முடியும்
வாழ்த்துக்கள்.

இந்த தொடரை நீங்கள் புத்தக வடிவில் கொண்டு வரவே எழுதுகிறீர்கள்
என்று நினைக்குறேன்... நல்ல முயற்சி அப்படி புத்தக வடிவில் கொண்டு வரும் எண்ணம்
இல்லை எனில் அதற்கும் முயற்சிக்கலாமே.....

M.R said...
Best Blogger Tips

"ஆரியக் கூத்தாடினாலும் பேரன் காரியத்தில் கண்ணாயிருக்கானே"//

ஆரியக் கூத்தாடினாலும் அப்பிடின்னா ?

அம்பலத்தார் said...
Best Blogger Tips

@நிரூபன்
ஆம் நிரூபன் கூறுவதுபோல விக்கிபீடியா 100% நம்பகத்தன்மையுள்ள தகவல் களஞ்சியம் இல்லை.

M.R said...
Best Blogger Tips

அவர் சொல்லும் கதையை (வரலாறை) உங்கள் வழியாக படித்தறிந்தேன் நண்பா, நன்றி

மகேந்திரன் said...
Best Blogger Tips

நிறைய வரலாற்று செய்திகள் தாங்கி வரும்
உங்கள் படைப்புகள் கோப்புகளில் பொதிந்து
வைக்க வேண்டியவை.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூ. இயன்றவரை வரலாற்று ஆய்வு ஆதாரங்களுடன் தொடர்ந்து ஆவணப்படுத்துங்கள்.

F.NIHAZA said...
Best Blogger Tips

வரலாற்றுப் பதிவாக மிளிரட்டும்....

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

வரலாற்று தகவல்களின் பகிர்வுக்கு நன்றி...

மாய உலகம் said...
Best Blogger Tips

நிறைய தெரிந்துகொண்டே வருகிறோம் நண்பா.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள் அன்பரே!

கவி அழகன் said...
Best Blogger Tips

வரலாறு தகவல்கள் வசிக்க சுவாரசியம்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நிருபா.. நாங்கள் அறியாத வரலாற்றுத்தகவல்கள்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

நல்லா இருக்கு அசந்துங்க பாஸ்

முத்தரசு said...
Best Blogger Tips

இந்த வரலாறு எனக்கு புதுசு - தொடருங்கள்

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

தொடர்ச்சிக்காக காத்திருக்கிறோம் நண்பரே..

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன்
அழகாக கொண்டு செல்லும் இத்தொடரில் பலவிடயங்கள் எனக்கு புதிது.. நீங்கள் சொல்வதுபோல் விக்கிபீடியாவின் அடிப்படையில் எழுதமுடியாதுதான்... அட இப்ப கோகிலில் அக்கா என்று எழுதி அக்காவை தேடினால் கிடைப்பதை பாருங்கள்..!!!!????? ஆராச்சிகளின் அடிப்படையிலேயே தொடருங்கள்..

Yoga.S. said...
Best Blogger Tips

தொடரட்டும்,வாழ்த்துக்கள்!

Unknown said...
Best Blogger Tips

நல்ல தொகுப்பு

K R Rajeevan said...
Best Blogger Tips

நல்ல தொடர் மச்சி!

shanmugavel said...
Best Blogger Tips

வணக்கம் சகோ!சிறப்பானதொரு தொடரை வழங்கிக்கொண்டிருக்கிரீர்கள் .வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

நல்ல வரலாற்றுத் தொடர்.எனக்குத் தெரியாத பல செய்திகளை அறிந்து கொள்கிறேன்.

செங்கோவி said...
Best Blogger Tips

//இலங்கையில் வடக்கு வட மேற்குப் பகுதியில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய கற் கருவிகளும், தென் இந்தியாவின் தமிழ் நாட்டின் திருநெல்வேலிக் கரையில் பயன்படுத்திய கற் கருவிகளும் ஒரே தன்மை உடையனவாக காணப்படுகின்றன. //


இது புதிய தகவல் தான்..தொடருங்கள்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails