Thursday, December 8, 2011

கலியாண வயசுப் பையனின் கனவு குசு(று)ம்புகள்!

கலியாணம் கட்டாத பிரமச்சாரியின் கனவு(ப்) புலம்பல்!

குட்டி குஷ்பூவிடம் தம் மனதை(க்) கொட்டி(த்) தொலைத்தனர் பலர் 
தமிழில் ஹன்சி கொடி கட்டி(ப்) பறக்காளா என கோயிலில் - அங்க(ப்)
பிரதிஷ்ட்டை அடிக்கின்றனர் இன்னும் சிலர்!
நட்ட நடு இராத்திரியிலும் கனவில் ஹன்சி(கா) வரவே 
மிட் நைட் மசாலா தேடுகின்றனர் சிலர் - அவள் அழகு படுத்தும்
பாட்டால் ஹன்சியே கதியென அலையும் ஜொள்ளர்களும் நம்மில் உளர்!
பேஸ்புக் நோய்க் காவி!

முதலாவது காதலன் யார் என்றேன் முகுந்தன் என்றாள் - அடியே உன்
அடுத்தவன் யார் என(க்) கேட்டேன் - ஆதவன் என்றாள்
தற்போது யார் என்றேன் - நீ தான் நிரூபா என்று உரைத்தாள்!
இனி மேலும் யாராச்சும் இருக்கா என்றேன் - அதனை என்
பேஸ்புக் தான் முடிவு செய்யனும் என்றாளே பாவி - 
ஆள் விட்டு ஆள் மாற்றும் நீயோ காதல் நோய்(க்) காவி! 

லிப்ஸ்டிக் பவரும் - அவளின் லீலையும்!

மோவாய் திருப்பி உன் லிப்ஸ்டிக் பவரை காட்டு என்றேன் - அவளோ தன்
செவ்வாய் இதழ் கொண்டு மேலும் வார்த்தைகள் வரா வண்ணம் - என்
வாய் மூடினாள் பாவி! எனை தன் உதட்டு முத்தத்தாள் கொன்றாளே தேவி!

பிரமச்சாரியின் இரவு(க்) கீதம்! 

கையில் மணி பிடித்தேன் - எந்தன்
மெய்யில் உனை நினைத்தேன்
பையில் மலரெடுத்து தூவினேன்
பைங்கிளியே உனை வேண்டி
தெய்வ பூஜை செய்தேன் - இறுதியில்
தேக சுகம் இதுவா என நினைத்து
உனை மறந்தேன் - அடுத்த பிகரை
அடியேனும் தேட(த்) தொடங்கினேன்!
கலியுக காதலும் கனவில் நிகழ்ந்திடும் கர்ப்பமும்!

மனசிற்குள் நான் தானே உள்ளேன்?
மங்கையே மௌனமாய்
நீயும் இருப்பதேன் என்றேன்?
கனவிலே வந்த நீயா எனை கர்ப்பமாக்கினாய்?
கள்வனே நானும் முழுகாமல் இருக்கிறேன்
என என் மூச்சுக் காற்றை நிறுத்தும் சேதி சொன்னாள்!
அடியே நான் தானே
உனை ஏதும் பண்ணலையே என
நாக்கைத் தொங்க விட்ட நாய் போல
கேள்வி கேட்டேன் - கொஞ்சம் பொறு
என் இன்னோர் காதலனை
கெஞ்சிக் கேட்டு வாரேன்
என்று எழுந்தாள் சிறுக்கி - எனை
ஏமாற்றி தந்தாள் காதல் பெருந் தீ!

பிற் சேர்க்கை: அன்பிற்கினிய சொந்தங்களே! தற்போது வேலை அதிகமாக உள்ள காரணத்தினால் பதிவர் அறிமுகம் பகுதியினை ஒவ்வோர் பதிவின் கீழும் இணைத்துக் கொள்ள முடியவில்லை. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் உங்கள் வலைப் பூ அறிமுகமும் நாற்று தளத்தில் இடம் பெற வேண்டுமானால் என் வலையில் உள்ள வாசகர் கருத்துப் பகுதியினூடாக உங்கள் வலைப் பூ பற்றிய விபரங்களை அனுப்பி வைக்க முடியுமா?
நன்றி! வணக்கம்!

இப் பதிவிற்கான படங்களும் வழமை போலவே கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை!

37 Comments:

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

தம்பி ....!!

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

நல்ல தலைப்பு ...

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

உனக்கும் கண்டிப்பா ஆகும் தம்பி....!

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

ஏன் கவலை ....
MR,IDEA MANI...என்னதான் பண்ணுரீர் ...ஏன் அன்பு தம்பிய இப்படி புலம்ப விட்டுட்டு ....???

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

அப்படியே எனக்கும் சேர்த்து பரப்பா....
நானும் யூத் தான் ....

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

என்ன நிருபனை விட ஒரு மாதம் மூத்தவன் ...ஹி ஹி ...

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

:)))))))))))))))))))))))))

Unknown said...
Best Blogger Tips

//பேஸ்புக் நோய்க் காவி!//
சூப்பருங்கோ! :-)

சசிகுமார் said...
Best Blogger Tips

உனக்கு குசும்பு கொஞ்சம் அதிகம் தாம்பா....

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

என் வலையில் உள்ள வாசகர் கருத்துப் பகுதியினூடாக உங்கள் வலைப் பூ பற்றிய விபரங்களை அனுப்பி வைக்க முடியுமா? /// மச்சி கண்டிப்பா அனுப்புவோம்..

N.H. Narasimma Prasad said...
Best Blogger Tips

அருமையான காதல் கவிதைகள் நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

M.R said...
Best Blogger Tips

பல தகவல்கள் ,கவிதை நடையில் கலியுகக் காதல் ,பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே

ம.தி.சுதா said...
Best Blogger Tips

/////மோவாய் திருப்பி உன் லிப்ஸ்டிக் பவரை காட்டு என்றேன் ////

இது வீண் வம்பு தானே மவனே நல்லா வாங்கிக் கட்டினியா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன்!
நண்டு கொழுத்தா பறிக்குள்ள இருக்காதுன்னு சொல்லுவாங்க.. அத போலதான் உங்க நிலைபோல..? எதுக்கும் சீக்கிரமா நல்ல சேதி சொல்லய்யா..:-)

vanathy said...
Best Blogger Tips

கவிதை எழுதுறதை விட்டுப் போட்டு பெண்ணைத் தேடுங்கோ. வர வர ஒரு மார்க்கமாவே போகுது.

நானும் காட்டானை வழி மொழிகிறேன்.

ஹேமா said...
Best Blogger Tips

கலியுகத்தில காதல் நலிஞ்சு மெலிஞ்சு வருத்தம் வாற நிலைமையிலதான் இருக்கு நிரூ.அதனால அப்பா அம்மா பேசிவைக்கிறதைக் காதலியுங்கோ !

Unknown said...
Best Blogger Tips

//முதலாவது காதலன் யார் என்றேன் முகுந்தன் என்றாள் - அடியே உன்
அடுத்தவன் யார் என(க்) கேட்டேன் - ஆதவன் என்றாள்
தற்போது யார் என்றேன் - நீ தான் நிரூபா என்று உரைத்தாள்!
இனி மேலும் யாராச்சும் இருக்கா என்றேன்//

மாப்பு நம்ம பேஸ்புக் ஐடி கொடுப்பா போரடிக்குது
அவ்வ்வ்வ்வ்வ்வ்

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

இதுக்குத்தான் காலாகாலத்தில் கல்யாணத்தை முடிக்கணும்னு சொல்வது!

Unknown said...
Best Blogger Tips

கவிதைகள் அனைத்தும் இனிமை
கருத்துகள் தான் க....!புலவர் சா இராமாநுசம்

சித்தாரா மகேஷ். said...
Best Blogger Tips

நல்ல புலம்பல்தான் போங்க.அண்ணாச்சி,கவிதைகள் நல்ல இருக்குது அண்ணா.

சித்தாரா மகேஷ். said...
Best Blogger Tips

அண்ணாச்சி ஒண்ணு சொல்லிக்கவா?இங்க புலம்புறதவிட்டு உங்க அப்பா அம்மாகிட்ட போய் புலம்பினாச்சும் ஏதாச்சும் விடிவு கிடைக்குமே?

உயிரில் பூத்த என் ஒற்றைக் காதல்.

Anonymous said...
Best Blogger Tips

எப்பா அங்க யாரு!! இவரு வீட்ல சொல்லி சட்டு புட்டுன்னு கல்யாணத்த கட்டி வைக்க சொல்லுங்க.. ஹீ ஹீ

கோகுல் said...
Best Blogger Tips

@சென்னை பித்தன்ஐயாவே சொல்லிட்டாரு பெரியவங்க சொல் மீறக்கூடாது!

K said...
Best Blogger Tips

மச்சி நிரூ, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை! என்னைச் சொல்லிக் குற்றமில்லை! காலம் செய்த கோலமடா, கடவுள் செய்த குற்றமடா!

K said...
Best Blogger Tips

மச்சி நிரூ, போனால் போகட்டும் போடா! இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா?

K said...
Best Blogger Tips

மச்சி நிரூ, சொன்னாலும் குற்றமடா சொல்லாவிட்டால் துக்கமடா! குற்றமில்லாமல் துக்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா!

K said...
Best Blogger Tips

மச்சி நிரூ, நான் தந்தனத்தான் பாட்டு தாளமில்லை! என் குற்றம் ஏதும் கேட்க ஆள்ய்ம் இல்லை!!

K said...
Best Blogger Tips

மச்சி நிரூ, தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலமா?

K said...
Best Blogger Tips

ஹி ஹி ஹி ஹி இப்படியான விரக்தியான பாட்டுக்களை, உன்னைப் பார்த்து பாடுவததைத் தவிர எனக்கு வேறு வழி தெரியலை!

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

நிரூப்... அந்த சிங்கள நடிகையின் பெயரென்ன...? தயவு செஞ்சு சொல்லிடுங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

மாப்ளே, ஆபீஸ்ல புதுசா பிகர் சேர்ந்திருக்கா? கொஞ்ச நாளா மார்க்கமா இருக்கிறியே?வாசிக்க:
இப்படியா துப்பட்டா போடறது? சின்ன பீப்பா, பெரிய பீப்பா அரட்டை

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம், நிரூபன்!வாலிபக் கவிதை நன்று!இன்பம்(பக்கத்து வீட்டு இ......... அல்ல) உண்டாகட்டும்!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ஓவர் குசும்புதான் ஹி ஹி...!!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

இங்கே ஒரு ஆச்சர்யம் என்னன்னா, நம்ம நாய் நாக்ஸ் நக்கீரன் அண்ணன் தமிழ்ல கமெண்ட்ஸ் போட்டுருக்கிறாரே...!!!!!!!!!!!!!!!!!

திண்டுக்கல் தனபாலன் said...
Best Blogger Tips

கலக்குறீங்க...வாழ்க வளமுடன்.
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

shanmugavel said...
Best Blogger Tips

//நீ தான் நிரூபா என்று உரைத்தாள்!
இனி மேலும் யாராச்சும் இருக்கா என்றேன் - அதனை என்
பேஸ்புக் தான் முடிவு செய்யனும் என்றாளே பாவி - //

ஐயோ பாவம்!

Unknown said...
Best Blogger Tips

பதிவு அருமை. எல்லாம் சொந்த அனுபவம்தானே? மேலும் படத்தில ஹன்சி கிளவி போல இருக்கு?

//முதலாவது காதலன் யார் என்றேன் முகுந்தன் என்றாள் - அடியே உன்
அடுத்தவன் யார் என(க்) கேட்டேன் - ஆதவன் என்றாள்
தற்போது யார் என்றேன் - நீ தான் நிரூபா என்று உரைத்தாள்!//


இதில உள் குத்து ஒண்டும் இல்லைதானே?

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails