Saturday, December 3, 2011

தமிழரின் மானத்தை கப்பலேற்றும் ஆபாசத் தளங்கள்!

இன்றைய கால கட்டத்தில் தொழில் நுட்ப விருத்தியின் பயனாக நமக்குக் கிடைக்கும் நன்மைகளை விட நம்மை அச்சத்திற்குள்ளாக்கும் தீமையான விடயங்களே அதிகளவில் நடந்தேறுகின்றன.தொழில் நுட்ப முன்னேற்றத்தின் ஊடாக சந்தையில் தற்போது; தரத்தில் உயர்ந்த - அளவில் மிகச் சிறிய ஒளிப் படக் கருவிகள் (வீடியோ கமெரா) மலிவான விலையில் விற்பனைக்கும் வந்து விட்டது. கடனட்டை வசதி உள்ள ஒருவர் EBAY எனப்படும் இணைய கொடுக்கல் வாங்கல் துறையூடாக சீனச் சந்தையில் வெறும் $20 அமெரிக்க டாலர்கள் செலவழித்தாலே கூலிங் கிளாஸில் பொருத்தப்பட்ட வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் இயங்கும் சிறியளவிலான வீடியோ கமெராவினை அல்லது கையில் கட்டும் மணிக் கூட்டில் பொருத்தப்பட்ட கமெராவினை குறுகிய தினங்களுக்குள் இலங்கை இந்தியப் பகுதிகளுக்கு இறக்குமதி செய்து கொள்ளவும் முடியும்.
இத்தகைய தொழில் நுட்ப வளங்கள் எம் தமிழரின் கைகளுக்குக் கிடைத்தால் சொல்லவும் வேண்டுமா? மேலைத் தேச நாட்டவரைப் பொறுத்த வரை ஆபாசப் படங்களைத் தயாரிப்பதற்கும், அதனை வெளியிடுவதற்கும் தனித் தனியான சினிமாக் கம்பனிகளை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். அரசாங்கத்தின் ஆதரவோடு சட்ட ரீதியான முறையில் மேலைத் தேசத்தில் ஆபாசப் படங்கள் தயாரிக்கப்பட்டு, உலக சந்தையில் வெள்ளை இன மக்கள் முதல் ஆசிய நாட்டவர் வரை அனைவரினதும் மன - உடற் பசியினைப் போக்கும் வகையில் பாவனைக்கு விடப்பட்டிருக்கின்றது.ஆனால் எம் தமிழில் ஆபாசத்திற்கென்று தனியான துறை ஒரு வேளை இருந்தாலும் கூட; அடுத்தவனின் அந்தரங்கத்தினைப் பார்த்து மகிழ வேண்டும் எனும் வக்கிர எண்ணம் கொண்ட தமிழர்களின் திருட்டு வீடியோ எடுத்து மகிழும் செயற்பாடுகளை எவராலும் கட்டுப்படுத்த முடியாதல்லவா?

உலக அரங்கில் கூகிளிலும் சரி, யூடியூப்பிலும் சரி SCANDAL வீடியோக்கள் என்று தேடினால் இந்திய, இலங்கை மக்களின் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட பாலியல் காட்சிகள் தான் தேடலின் முடிவாக முதலில் கிடைக்கின்றன. சரி, ஒரு காலத்தில் ஆர்வக் கோளாறில் எம்மவர்கள் இத்தகைய செயற்பாடுகளைச் செய்தார்கள் என்று சொன்னாலும்; இன்று தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது தம்மை இந்த வக்கிர குணத்திலிருந்து விடுவித்து, தமது இழிவான செயல்களை தமிழர்கள் மாற்றிக் கொள்வார்கள் என நாம் நினைக்கின்ற இவ் வேளையில் தான் இளையோர்கள் மொபைல் போன்கள், சிறிய ரக வீடியோ கருவிகளின் உதவியுடன் பெண்களின் அந்தரங்க செயற்பாடுகளையும், பாலுறவுக் காட்சிகளையும் வீடியோக்களாக எடுத்து இணையத் தளங்களுக்கு அனுப்பி தம் வக்கிர உணர்வினை வெளிப்படுத்திக் கொள்கின்றார்கள்.

இன்றைய கால கட்டத்தில் நடு நிலையான ஊடகச் செய்திகளை ஈழத்தில் வெளியிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ் ஊடகங்கள் தான் ஆபாசப் படங்களை இணையத்தில் அப்லோட் செய்வதில் முதலிடம் வகிக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியா தான் திருட்டு வீடியோக்களை இணையத்தில் அப்லோட் செய்யும் நாடாக முதலிடத்தில் இருந்தது. ஆனால் இன்றோ ஈழ வள நாடு அந்த நற் பெயரை ஈழத்தில் வாழும் சில இழிவான நரிகள் மூலம் தனதாக்கிக் கொண்டுள்ளது. வெளி நாடுகளிலும், உள் நாடுகளிலும் வாழும் சிலரால் யாழ்ப்பாணம் எனும் பெயரையும் JAFFNA எனும் பெயரையும் முதன்மைப் பெயராக கொண்டு நடாத்தப்படும் இணையத் தளங்கள் தான் தமது செய்தியாளர்களின் கையில் ரகசிய கமெராக்களை கொடுத்து திருட்டு வீடியோக்களை எடுத்து இணையத்தில் அப்லோட் செய்து மகிழ்வதில் அலாதி இன்பம் காண்கின்றன. 

பஸ்களில் போகும் போது ஆண் பெண் தவறுதலாக உரசினால், வீதியோரத்தில் (மூத்திரச் சந்தில்) ஆண் பெண் சிறுநீர் கழித்தால், பூங்காக்களில் காதலர்கள் கொஞ்சிக் குலாவி மகிழ்ந்திருந்தால், ஆலயங்களில் ஜோடிகளாக இருவர் கை கோர்த்துக் கொண்டு சென்றால் இவர்களால் சகிக்க முடியாதிருக்கின்றது. இவை எல்லாம் கலாச்சார சீரழிவு விடயங்கள் எனக் கூப்பாடு போட்டு திருட்டுத்தனமாகப் படமாக்கி அடுத்த நிமிடமே இணையத்தில் அப்லோட் செய்து விடுவார்கள் இந்த அரைவேக்காட்டு செய்திளார்கள். ஒரு நாட்டில் போருக்குப் பின்னர், காதல் செய்யும் உள்ளங்கள் தனிமையில் அந்நியோன்யமாக இருப்பது தவறா? சமூகத்திற்குத் தீங்கு செய்யாதவாறு, ஓரமாக ஒதுக்குப் புறத்தில் தமது களியாட்ட நடவடிக்கையில் யாராவது ஈடுபடுவதும் தவறா? 

இவை தான் இன்றைய யாழ்ப்பாணக் குடாநாட்டின் கலாச்சார சீரழிவுகள் எனக் கூறி இந்த மனிதாபிமானம் அற்ற ஜந்துக்கள் ரகசியமாகப் படம் பிடித்து இணையத் தளத்தில் அப்லோட் செய்து மகிழ்கின்றன. இதே நிலமை தான் தமிழகத்திலும். இந்தக் கும்பலைச் சேர்ந்த கிருமி நாசினிகள் சிலர் தமிழ் டர்ட்டி தளத்திற்கும் யாழ்ப்பாணத்தில் இடம் பெறும் கலாச்சார சீரழிவு எனும் பெயரில் தலைப்பிட்டு,குறித்த வீடியோக்களை ஆபாசமாக அப்லோட் பண்ணிட அனுப்பி வைத்துச் சுய இன்பம் கண்டு மகிழ்கின்றார்கள். இன்று குடா நாட்டில் அவசர ஆபத்திற்கு கூட மூத்திரச் சந்துகளில் யாரும் ஒதுங்க முடியாத பரிதாப நிலமை. காரணம் கமெராவும் கையுமாக அலையும் இந்த டர்ட்டி தமிழ் இணையத் தளங்களின் செய்தியாளர்கள் யாழ்ப்பாணம் எனும் நாகரிமான இணையத் தளப் பெயரினை வெளிப்படையாக கூறி சில காட்சிகளை படமாக்கி தமது தளங்களில் குடா நாட்டின் கலாச்சார சீரழிவு என்று கூறி முகத்தினை மறைத்து, சில காட்சிகளை சென்சர் செய்து வெளியிடுவார்கள்.
அதே காட்சிகளை டர்ட்டி தமிழ் தளத்திற்கு அனுப்பும் போது சென்சர் செய்யாது வெளியிட்டு தாம் தான் குடா நாட்டில் இடம் பெறும் பாலியல் அத்துமீறல்களைப் படமாக்கி தமிழ் டர்ட்டி தளத்திற்கு வழங்கும் ஏக விநியோகிஸ்தர்கள் என்பதனை மறைமுகமாச் சொல்லி நிற்கின்றார்கள் இந்த வக்கிர மனிதர்கள். இன்றைய காலத்தில் இவர்களைத் திருத்த யாரும் இல்லை எனும் நிலையில் தான் இப்படிச் செய்கிறார்களா? அல்லது கெட்டுக் குட்டிச் சுவராகுவது தமது சகோதரிகள் அல்லவே!வேறு யாருடைய யாழ்ப்பாணத்து தமிழ்ச் சொந்தங்கள் தானே என நினைத்து இவ்வாறு செய்கின்றார்களா? என நினைக்கையில் கவலை தான் மனதில் எழுகின்றது. பஸ்களிலும், கடற் கரைகளிலும், பொது இடங்களிலும் கையில் கமெராவுடன் அலைந்து பெண்களின் மேலாடை காற்றில் பறக்கையிலும், பெண்கள் தூங்கும் போதும், பெண்கள் சிறுநீர் கழிக்கும் போதும், பீரியட் PAD மாற்றும் போதும் படமாக்கி இணையத் தளங்களில் அப்லோட் செய்வது தான் இவர்களின் முதன்மைச் செயற்பாடுகளாகும். 

தம் செய்தித் தளங்களில் கலாச்சார சீரழிவுகள் இந்த மாதிரியான செயல்களால் தான் இடம் பெறுகின்றது என கீழ்த்தரமாக யாழ் மக்களின் உணர்வுகளை விமர்சித்து எழுதுவது,காதலர்கள், மற்றும் ஜோடிகளின் அந்நியோன்யமாக கலந்திருக்கும் காட்சிகளையும் படமாக்கி வெளியிடுவது ஆகிய செயற்பாடுகளில் யாழ்ப்பாணம் எனும் பெயரைத் தாங்கிய இணையத் தளங்கள் தான் தற்போது ஆசிய நாட்டில் முதன்மை வகிக்கின்றன. ஒரு பெண் தன் குழந்தைக்குத் தாய்ப் பாலூட்டுவதும் ஆபாசமாம்! "பொது இடத்தில் பஸ்ஸினுள் மார்பைக் காட்டிய பெண்" என்று தலைப்பு வைத்து இதற்கு ஓர் செய்தி வேறு. என்ன ஒரு கடமை உணர்ச்சி. இந்த இணையத் தளங்களுக்கு தமிழர்களாகிய நாம் என்ன செய்யப் போகின்றோம்? எம் சந்ததியின் அந்தரங்கங்கள் யாவும் இந்த மாதிரியான இணையத் தளங்கள் ஊடாக வெளி உலகிற்கு தெரியட்டும் என்று சொல்லிப் பொறுமையாக இருக்கப் போகின்றோமா?இல்லை இவர்களின் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எம்மால் இயன்ற நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றோமா? 

குடாநாட்டையும், முழு இலங்கை மக்களின் அந்தரங்க காட்சிகளையும் டர்ட்டி தமிழிற்கு விற்கும் இந்த இணையத் தளங்கள் யாவும் தமிழ்ப் பதிவர்களை நம்பித் தாம் தம் தளங்களை நடாத்துகின்றன என்பது ரொம்ப காமெடியான விடயமாக இருக்கிறது அல்லவா? சொந்தச் சரக்கு ஏதுமின்றி பதிவர்கள் பலர் சிரமப்பட்டுத் தொகுத்து எழுதும் பதிவுகளைக் கூடத் தமது தளங்களில் அப்படியே நகல் எடுத்து வெளியிட்டு விளம்பரங்கள் மூலம் பணம் ஈட்டுவதனைத் தான் நோக்கமாகக் கொண்டு இவர்கள் செயற்படுகின்றார்கள். காப்பி பேஸ்ட் பண்ணும் இணையத் தளங்களைப் பற்றிக் கூடப் பதிவில் கெட்ட வார்த்தையால் வெளித் தெரியாதவாறு மறைத்து எழுதி வைத்திருந்தாலும் அதனைக் கூட அப்படியே நகல் எடுத்து பதிவினைப் படிக்காது காப்பி பேஸ்ட் செய்கிறார்கள் இந்த கலாச்சார காவலர்கள். 

சைக்கிள் கேப்பில் சல்லாப காட்சிகளை படம் பிடித்து பலரது வாழ்க்கையினை நாசம் செய்யும் இந்த இணையத் தளங்களின் நடவடிக்கையினை தமிழர்களாகிய நாம் எப்படிக் கட்டுப்படுத்தப் போகின்றோம்?இலங்கை இந்தியாவில் மாத்திரம் அடுத்தவனின் அந்தரங்கங்களை ஆபாசப் படங்கள் எனக் கூறி அப்லோட் செய்வதற்காக ரகசிய கமெராக்களுடன் அலையும் நபர்களை எப்படி இனங் காணப் போகின்றோம்? இது தமிழர்களாகிய நம் அனைவரின் சிந்தனைக்கும் உரிய விடயங்களாகும். தொழில் நுட்ப விருத்தியினைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்தி மேற்குலம் இன்று நாம் வியந்து பார்க்குமளவிற்கு பல புரட்சிகரமான சாதனைகளை மேற் கொள்கின்றது. ஆனால் எம்மவர்கள் இப்போதும் அடுத்தவனின் உறவினைப் படமாக்கி ரசிப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.

இப் பதிவிற்கான படங்கள் அனைத்தும் கூகுள் தேடல் மூலம் பெறப்பட்டவை!

23 Comments:

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம்,நிரூபன்!வளர்ப்பு அப்படி என்றால் யார் தான் என்ன செய்ய முடியும்??????

Yoga.S. said...
Best Blogger Tips

இந்தச் செய்தி உண்மையாயின்,எதிர் பார்க்கப்பட்டது தான்.இதனால் நன்மையே விளையும்,தீமையல்ல! முறிவடைந்தது கூட்டமைப்பு - அரசு பேச்சுவார்த்தை _
வீரகேசரி இணையம் 12/3/2011 3:25:02 PM

தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் சுமார் ஒரு வருட காலமாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இன்று முறிவடைந்துள்ளது.

அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்குமிடையில் 15 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றபோது, பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நியமிக்கக் கூடிய தமிழத்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பெயர்களை முன்வைக்குமாறு அரசதரப்பில் வலியுறுத்தப்பட்டதையடுத்தே பேச்சுவார்த்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் இடம்பெற்ற 14 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது இவ்விவகாரம் ஆராயப்பட்டு இணக்கப்பாடு ஒன்று காணப்பட்டது.

அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களின் போது காணப்படும் இணக்கப்பாட்டை பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சமர்ப்பிப்பதெனவும் அச்சந்தர்ப்பத்தில் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஆரம்பமான போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறும் தமது உறுப்பினர்களின் பெயர்களை உடன் வெளியிடுமாறு கூட்டமைப்பினரை அரச தரப்பு கோரியதையடுத்தே பேச்சுக்களில் முறுகல் நிலை ஏற்பட்டது.

கூட்டமைப்பினர் அவ்வாறு தமது உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியி டவில்லை எனில் தம்மால் பேச்சுக்களைத் தொடரமுடியாது என அரச தரப்பினர் கூற, இணக்கப்பாடு எட்டப்பட்டு அதனைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்வைப்பதற்கு முன்னதாக தம்மால் பெயர் விபரங்களைத் தர முடியாது என கூட்டடைப்பு உறுதியாகக் கூற பேச்சுக்களைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பிலான அறிக்கை ஒன்றை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ளார். டிசம்பர் மாதத்தில் 1, 06, 14, 15ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. அதன்படி முதலாம் திகதி பேச்சுவார்த்தை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவே அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழு தெரிவுக்குழு என்பதும் குறிப்பிடத்தக்கது. Thanks;வீரகேசரி இணையம் _

நிரூபன் said...
Best Blogger Tips

அன்பிற்குரிய யோகா ஐயா,
வணக்கம்,
நலமா?

ஏலவே எதிர்பார்த்த செய்தியினைத் தான் பகிர்ந்திருக்கிறீங்க.

இன்னும் கொஞ்சக் காலம் காதில பூச் சுத்தியிருப்பார்கள்.

நாங்கள் ஏமாந்த சோனகிரிகள் அல்ல என்று உணர்ந்து கொண்டார்களோ என்னவோ, முறித்துக் கொண்டார்கள்.

இது தொடர்பாக ஓர் கட்டுரையினை வரையலாம் என்றிருக்கிறேன்.
நேரம் கிடைக்கனும். பார்ப்போம்!

சீனுவாசன்.கு said...
Best Blogger Tips

என்ன செய்ய போகிறோம்?

நிரூபன் said...
Best Blogger Tips

@சீனுவாசன்.கு

என்ன செய்ய போகிறோம்?
//

இதற்கான விடையினை எதிர்பார்த்துத் தான் இப் பதிவினை எழுதியிருக்கிறேன்.
நீங்கள் தான் சொல்ல வேண்டும், நாம் என்ன செய்யப் போகின்றோம்?

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

:((((((((((((

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

வணக்கம்,நிரூபன்!வளர்ப்பு அப்படி என்றால் யார் தான் என்ன செய்ய முடியும்??????
//

மீண்டும் வணக்கம் ஐயா,
சிலவற்றின் பழக்க வழக்கங்களை நாம் நினைத்தால் மாற்ற முயற்சிக்கலாம் அல்லவா?

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]

@Yoga.S.FR
வணக்கம்,நிரூபன்!வளர்ப்பு அப்படி என்றால் யார் தான் என்ன செய்ய முடியும்??????
// மீண்டும் வணக்கம் ஐயா,
சிலவற்றின் பழக்க வழக்கங்களை நாம் நினைத்தால் மாற்ற முயற்சிக்கலாம் அல்லவா?///நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]

@Yoga.S.FR
வணக்கம்,நிரூபன்!வளர்ப்பு அப்படி என்றால் யார் தான் என்ன செய்ய முடியும்??????
// மீண்டும் வணக்கம் ஐயா,
சிலவற்றின் பழக்க வழக்கங்களை நாம் நினைத்தால் மாற்ற முயற்சிக்கலாம் அல்லவா?// /பழக்க,வழக்கங்களை மாற்ற முயற்சிப்பது, நாய் வாலை நிமிர்த்த எடுக்கும் முயற்சிக்கு ஒப்பானது!போட்டுத் தள்ளிவிட வேண்டும்,அந்தக் காலம் மீள வரவேண்டும்!பழக்க,வழக்கங்களை மாற்ற முயற்சிப்பது, நாய் வாலை நிமிர்த்த எடுக்கும் முயற்சிக்கு ஒப்பானது!போட்டுத் தள்ளிவிட வேண்டும்,அந்தக் காலம் மீள வரவேண்டும்!

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!
இப்படியான தளங்களை பார்கும் பார்வையாளர்களில்தான் பிரச்சனை.. இதைப்போல் மனநோயாளிகளுக்காக இயங்கும் தளங்களை புறக்கனிப்போம்..!!

shanmugavel said...
Best Blogger Tips

உலகம் முழுக்க இருக்கும் விஷயம்தான் நிரூபன்,செல்போன்களால் அதிகமாகிவிட்டது.

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

ஆபாசமான, மற்றவர்களின் அந்தரங்களை குறிவைத்து வீடியோ எடுக்கும் கயவர்களுக்கு "அதை" கட் பண்ணனும் மச்சி அப்பத்தான் இவங்க திருந்துவாங்க..

இந்த மாதிரி தளங்களை புறக்கணிப்போம்..

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

சீனுவாசன் போல்தான் நானும்.என்ன செய்ய முடியும்?

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

நாம் என்னதான் கரடியாக கத்தினாலும் அதற்கான கூட்டம் பின்னால் செல்லவும், அதனால் சிலர் காசு பார்க்கவும் இருக்கத்தான் செய்யுறாங்க சகோ, ஆனால் இது மாதிரியான பதிவுகள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.

Yoga.S. said...
Best Blogger Tips

இன்று வணக்கம் நெற்.கொம் இல் மதுரனின் வலைப்பூ அறிமுகம் வந்திருக்கிறது! நிரூபன்,காட்டான்,ஊக்கம் கொடுப்பதாக மதுரன் குறிப்பிட்டிருக்கிறார்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

இன்று வணக்கம் நெற்.கொம் இல் மதுரனின் வலைப்பூ அறிமுகம் வந்திருக்கிறது! நிரூபன்,காட்டான்,ஊக்கம் கொடுப்பதாக மதுரன் குறிப்பிட்டிருக்கிறார்!
//

அந்தப் பேட்டி வெளியான உடனே அதனைப் படித்தேன். தகவற் பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா.

Unknown said...
Best Blogger Tips

கலாச்சார காவலர்களின் ஆர்வகோளாறு தாங்க முடியல, ஊடகம தர்மங்களின் அடிப்படையே தெரியாமல் எல்லாரும் வெளிக்கிட்டால் இப்படித்தான்.

சசிகுமார் said...
Best Blogger Tips

ஆமாம் மச்சி இது தடுக்கப்படவேண்டிய ஒன்று....

Unknown said...
Best Blogger Tips

மாப்ளை அடுத்தவன் தும்முறானா தூங்குறானா இதப் பாக்குறதே...தமிழனுக்கு தொன்றுதொட்டு வரும் பழக்கம் திருத்தமுடியாதுப்பா....
நாய் வால நிமிர்த்த முடியுமா?

முத்தரசு said...
Best Blogger Tips

என்ன செய்யலாம்? எப்படி தடுக்கலாம் யோசிக்கலாமே???

curesure Mohamad said...
Best Blogger Tips

ஆதங்கம் வரவேற்க தக்கது ..ஆனால் ..எதை செய்யகூடாது என்றால் அதை தான் விரும்பி செய்கிறார்கள் ..
விபச்சாரத்தின் பக்கமே நெருங்கக் கூடாது என்று குரான் நமக்கு வழி காட்டுகிறது ..
பாவத்தின் கூலி நாம் அதை பார்ப்பதால் கூட பெறப்பட்டு விட கூடும் ...
மறுமை பயம் இருந்தால் இதை வென்றெடுக்கலாம் ..

மருத்துவனாய் ..இந்த ப்ரோனோ கிராபி அடிக்க்ஷன் திருத்தப்பட வேண்டிய வியாதி

Mahan.Thamesh said...
Best Blogger Tips

இவர்கள் இப்படி செய்ய அவர்களின் வளர்ப்பு அப்படி ; இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும இல்லாவிடில் இது பெருகிவிடும் .

திண்டுக்கல் தனபாலன் said...
Best Blogger Tips

இதைத் தடுக்க முடியாது. நாம் பார்க்காமல் இருக்க வேண்டியது தான். பகிர்விற்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

மன்மதகுஞ்சு said...
Best Blogger Tips

நிரு சின்ன கொசுறு தகவல் செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுனருடன் ஒரு அனைத்து அரச திணைக்கள அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையால அலுவலகத்தில் நடைபெற்றது.கலந்துரையாடலுக்கு முன்பு அங்கே இருந்த அதிகாரிகள் ஒருவருக்கொருவர் உடையாடிக்கொண்டிருந்தபோது அனைவரின் உடையாடலில் உணர்ந்த விடயம் அந்த யாழ் இணைய செய்திகளினால் கொஞ்சம் கிலி அடைந்துள்ளார்கள் என்பதெ, அவர்கள் எல்லாவற்றையும் வெளிகொணர வேண்டும் எனநினைத்து தாமே தவறிழைக்கிறார்கள்.அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்டதா என தெரியாது,யாழில் இடம்பெற்ற அண்மைய சுகாதார பறக்கும் படை விசாரணையில் பிடிபட்ட முக்கிய சுகாதார அதிகாரிகளைப்பற்றி அவர்கள் பெயர் சொல்லி குறிப்பிட்டிருந்தது அந்த அலோசனைகூட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் கிலேசத்தை உண்டாக்கியிருந்தது என்பது உண்மை..ஆனாலும் அவர்களுக்கு சுயதணிக்கை கட்டாயம் வேண்டும் எனபதே எனது அவாவும்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails