Sunday, July 10, 2011

நமீதாவை மடக்கிய நம்ம ஊர் நண்பன்!

ஈழத் தமிழனாகப் பிறந்தால் சுதந்திரம் முதற் கொண்டு, ஏனைய மனித உணர்வுகளையும் இழந்து தான் ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக எம் வாழ்க்கையோடு இணைந்து வந்து கொண்டிருக்கிறது. எம்மைச் சூழ்ந்திருந்த கவலைகள், துன்பங்கள்.  இடப் பெயர்வு- கொடிய யுத்தம் முதலிய பல காரணிகளுக்கு நடுவேயும், எம் மனங்களைச் சந்தோசமாக வைத்திருக்க உதவிய ஒரு விடயம்; நண்பர்களின் இணை பிரியாத நட்பு என்று தான் கூறலாம். அதே வேளை என் மனதை வேதனைப்பட வைத்த விடயமாகப் பல நண்பர்களது உயிரிழப்புக்களையும் கூறலாம்.
அப்பாவின் வேலை மாற்றம், அதன் பின்னரான இடப் பெயர்வு நிகழ்வுகள், கல்வி நடவடிக்கைகளுக்காக வெளி மாவட்டங்களில் தற்காலிகமாக குடியேறிய செயற்பாடுகள்; எனக்கு நீண்டு நிலைத்திருக்கும் ஒரு நட்பு வட்டத்தினைத் தரவில்லை.

ஆனாலும் சிறிது காலம் பழகினாலும் மனதில் இன்றும் நிழலாடும் நினைவுகளைத் தந்து விட்டுச் சென்றவர்கள், நினைத்து நினைத்து அடிக்கடி அவ் நினைவுகளினூடாக என் மனதினைச் சிரிக்க வைக்கும் நண்பர்கள் வரிசையில்; சிலரை இணைய வலையினூடாக உங்களோடும் பகிர்ந்து கொள்வதே இப் பதிவின் நோக்கம்.

சகோதரன் ரியாஸ் அஹமது- நுனிப்புல்லில் ஓர் பனித்துளி வலைப் பதிவின் சொந்தக்காரன்- விடுத்த அன்புக் கட்டளையினை ஏற்று நானும் நண்பேன்டா எனும் தொடர் பதிவின் மூலம் என் நண்பர்களைப் பற்றிய சிறிய குறிப்புக்களை உங்களோடு பகிரவிருக்கிறேன். 

யௌவனன்: 

ஈழத்தின் வன்னிப் பகுதியின் துணுக்காய் பகுதியில் நான் பாலர் பாடசாலைக்குச் சென்ற போது என்னுடன் அறிமுகமான ஓர் நண்பன் தான் இந்த யௌவனன். ஐந்தாம் வகுப்பு வரை தான் இவனது நட்பு என் கூடத் தொடர்ந்தது. பின்னர் தந்தையின் வேலை நிமித்தம் நான் வன்னியினை விட்டு, யாழிற்கு இடம் பெயர வேண்டிய சூழ் நிலையால் யௌவனனின் நட்புப் பாலமானது துண்டிக்கப்பட்டு விட்டது. சிறு வயதில் இருவரும் வாழ்ந்த பகுதி ஒரே பிரதேசமாதலால், பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களிலும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். 

ஐஸ் பழம்(குச்சி ஐசு) வாங்குவதற்காக பழைய தகரப் பேணிகளைப் பொறுக்கி விற்றுக் காசாக்கி, ஐஸ்பழம் வாங்கிக் குடித்திருக்கிறோம் கிட்டிப் புல், கிளித்தட்டு எனப் பல விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்திருக்கிறோம். வீதியால் இந்திய ராணுவம் போகும் போதெல்லாம் வீட்டில் இருந்தோர் நாயினக் கட்டி வைத்திருந்தாலும், இருவரும் குறும்பாக கட்டி வைத்திருக்கும் நாயினை அவிழ்த்து விட்டு, சூ...காட்டி- நாயினை ஏவி விட்டு வேடிக்கை பார்த்திருக்கிறோம். 

அதற்குப் பயனாக ஒரு நாள் நாங்கள் கிளித் தட்டு விளையாடி மகிழும் போது வீதியால் ரோந்து சென்ற இந்திய இராணுவ வீரர்கள் என்னையும், யௌவனனையும் அழைத்து சாக்லேட் தந்தார்கள். பின்னர் யௌவனனை அருகாக அழைத்து அவன் பொக்கற்றினுள் கிரைனைட்டைப் போட்டு விட்டார்கள். பின்னர் அவன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு அந்தக் கிரைனைட் குண்டினை வெளியே எடுத்து எறிந்து விட்டான். 

நாம் செய்த முன் வினைப் பயனோ என்னவோ, கிளிப் கழற்றாது வைத்திருந்த அந்தக் குண்டு வெடிக்கவில்லை.  சிறு வயதில் விளாம்பழம் பொறுக்கச் செல்லுதல். பாலப் பழம் பிடுங்கப் போதல், ஈச்சம் பழம் பிடுங்கப் போதல் முதலிய பல நடவடிக்கைகளை நானும் யௌவனனும் சேர்ந்தே செய்திருக்கிறோம். காலவோட்ட மாற்றத்தின் பிரதிபலனாக 1990ம் ஆண்டோடு எங்கள் நட்புத் துண்டிக்கப்படு விட்டது. 

கோழிப் பீ என நாம் செல்லமாக அழைக்கும் கோகுலன்:

தந்தையின் வேலை மாற்றத்தின் பின்னர், நாங்கள் யாழில் வசித்த காலப் பகுதியில் எனக்கு அறிமுகமான நண்பன் தான் கோகுலன். ஆங்கிலப் பாடத்தில்- நீயா நானா எனும் போட்டி நிலையில் இருந்த நாமிருவரும், பாடசாலையில் ஒரு குறும்பு நிகழ்வு மூலம் தான் நண்பர்களாகினோம். கோகுலன் என்னைப் பற்றிக் கிண்டலாக எங்கள் ரியூசனில் படித்த வகுப்புத் தோழி ஒருவரின் பெயரோடு இணைத்து ‘தேவி சிறீ தேவி....உன் திருவாய்....பாடலை மாற்றி எழுதிப் பாடிச் சக நண்பர்களோடு இணைந்து கலாய்த்துக் கொண்டிருந்தான். 

திடீரென வகுப்பறையினுள் நுழைந்த தலமையாசிரியரின் கையில் இந்த உல்டா செய்த குறும்புப் பாடல் மாட்டியதும்- கோகுலனுக்கு பிரம்பு முறியும் வரை ஆசிரியர் அடித்துக் களைத்திருப்பார். பின்னர் கோகுலன் நடந்தவற்றை மறந்து சமரசம் பேசி என்னோடு நண்பனாய் இணைந்து கொண்டான். 

கோகுலன் எனும் பெயர் கொண்ட காரணத்தால் அவனை நாங்கள் செல்லமாக கோழிப்பீ என்றே சொல்லி மகிழ்வோம். பாடசாலை விடுமுறை நாட்களில் வயற் கிணறுகளில் நீந்தி மகிழுதல், ஆளரவமற்ற காணிகளிற்குள் நுழைந்து இளநீர் பிடுங்கி மகிழுதல் எனப் பல செயற்பாடுகளைச் செய்து மகிழ்ந்திருக்கிறோம். 

பல்கலைக் கழகம் வரை ஒன்றாகப் போய் லூட்டி அடிப்போம் எனும் நினைப்பிலிருந்த எம் நட்பு, அவனது குடும்பப் பொருளாதாரச் சூழ் நிலை காரணமாக- கோகுலன் வெளி நாட்டிற்குப் புலம் பெயர தந்தியறுந்த தொலை பேசிக் கம்பியாய் மாறியது. 

கோகுலன் பற்றி நான் இப்போதும் நினைத்து நினைதுச் சிரிக்கும் விடயம், பாடசாலை முடிந்த பின்னர், வீதியால் செல்லும் போது நாம் இருவரும் சைற் அடிக்கும் நோக்கில் ஒன்றாகச் செல்வது தான் வழமை. ஒரு சில பிகருங்களைப் பார்த்து ஹலோ சொன்னால்- அற்லீஸ்ட் தலையினைக் குனிந்தாவது சிர்ப்பார்கள். சிலர் சிரிக்கமாட்டாளுங்க. முறைப்பாளுங்க. 
இப்படியான் சூழ் நிலையில் கோகுலன் பிகருங்களுக்குப் பக்கமாக சைக்கிளைக் கொண்டு போய்ச் சொல்லும் ஒரு வசனம் தான்
‘ஐஞ்சு ரூபா வடையை வைச்சிருக்கிற உனக்கே இவ்வளது திமிர் என்றால்;
பத்து ரூபா ரோலை வைச்சிருக்கிற எனக்கு எப்படித் திமிர் இருக்கும்?

ராஜ்குமார்- ரவுடி ராஜ் குமார்: 

எங்கள் கல்லூரி நட்பு வட்டத்தில் அடிக்கடி கோமாளித்தனமாகப் பேசி அனைவரையும் சிரிக்க வைக்கும் வல்லமை படைத்தவ்ன் தான் இந்த ராஜ்குமார். ஒரு முறை ரியூசனில் ஆசிரியர் பாடம் சொல்லித் தரும் போது,  மாட்டிற்கு வாய் ஏன் நீளமாக இருக்கிறது என்று கேட்க, 
நீளமா இருந்தால் தானே ஓட்டிக் குடிக்க முடியும்’ எனக் குறும்பாகப் பதில் சொல்லி வகுப்புத் தோழிகள் உட்பட அனைவரையும் சிரிக்க வைத்த குறும்புக்காரன். வகுப்பில் அடி தடி எதுவானாலும், நாம் அடைக்கலம் கோருவது இவனிடம் தான். இதனால் தான் இவனை ரவுடி ராஜ் குமார் என்று அழைப்போம். 

அடி தடிக்கு இவனை அழைத்தால், அதற்கு கூலியாக விஞ்ஞானப் பாடப் பரீட்சையின் போது, தெரியாத வினாக்களுக்கு விடை கேட்பான். பல் தேர்வு வினாக்களுக்குரிய விடைகள் முதல் நான்கு இலக்கங்களுக்குள் அமைவதால், சைகை மூலம் இலக்கங்கலை விரலின் உதவியுடன் காண்பிக்க வேண்டும். கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். இல்லா விட்டால் நம்ம மேலையே கை வைத்திடுவான்.

இவனுக்கு எங்களோடு ரியூசனில் படித்த ஒரு குண்டுப் பெண்ணை ஜோடி சேர்த்து கிண்டல் பண்ணி மகிழுவோம். ஒரு நாள் எதேச்சையாக இவனும் அவளும் தனிமையில் ரியூசன் முடியும் நேரம் சந்தித்ததை நாங்கள் கண்டு விட்டோம். அப்புறமென்ன ‘மச்சான் ராஜ்............. எனும் பெயர் கொண்டவளை மடக்கிட்டாண்டா....
என்று எல்லோருக்கும் கதை பரப்பி விட்டார்கள். அன்று முதல் அவனை ..... எனும் பெயர் கொண்ட பிகரை மட்க்கிய ராஜ் என்று தான் கிண்டல் பண்ணி மகிழுவோம்.

ராஜ் ஈழம் எனும் கனவினைத் தாங்கிய பலரோடு, பின் நாளில் மண்ணுள் புதையுண்டு போனான். 

அந்தப் பொண்ணு, எம் 17 வயதுக் காலத்தில் ‘நமீதா போன்ற தோற்றத்தில் இருந்தா. அப்போது நமீதா எனும் நடிகை இல்லா விட்டாலும், இப்போது 
அவளது தோற்றம் இக் கால நமீதாவுக்கு இணையாக இருப்பதால் பதிவுக்கும் இப்படி ஓர் தலைப்பினை வைக்க வேண்டி ஏற்பட்டது. 

நேமிசா என நான் அழைக்கும்..............

என்னுடைய ஆறாம் வகுப்பு முதல், கம்பஸ் வாழ்க்கை வரை முதுகில் ஒட்டிச் சவாரி செய்த ஒரு அன்புள்ளம். பிறர் பார்வையில் காதலர்கள் எனச் சிறப்பிக்கப்பட்டாலும், ‘நான் உங்களின் உயிர் நண்பி’ என்ற ஒரு வார்த்தையினைக் கூறி நட்போடு விலகி நின்ற ஓர் ஜீவன்.

என் மனதிலும் அவள் மீதான காதல் தோன்றினாலும், அவளது நட்பிற்கு மதிப்பளித்து எங்கே இந்தக் காதலால் என் நட்புக் களங்கப்பட்டு விடுமோ என்னுள் ஓர் இனம் புரியாத உணர்வினை ஏற்படுத்தி; என் சொல்லாத காதலை மனதோடு வைத்து மௌனிக்கச் செய்தவள்.

ஆறாம் வகுப்பு முதல் ஒன்றாகவே டியூசனிற்குப் போய், ஒன்றாகவே விளையாடி, ஒன்றாகப் படித்து மகிழ்ந்த நாட்கள் நினைவில் இன்றும் நிழலாக நிற்கிறது. எங்கள் வீட்டிற்கும் வந்து என் அம்மா, அக்கா, தம்பி, தங்கைகளோடு எப்போதும் தன் இன் முகம் காட்டிப் பழகிய இனிமையானவள் அவள்.

இறுதியாக 2005ம் ஆண்டு யாழில் அவளைச் சந்தித்தேன். போர்ச் சூழல் காரணமாக 2006இன் பிற் காலங்களில் நேமிசா வாழ்ந்த பகுதியும்- நான் வாழ்ந்த பகுதியும் இரு வேறு துருவங்களாகத் துண்டாடப் பட, இன்று வரை அவளை மீண்டும் பார்க்க முடியாதவனாகி விட்டேன், அவள் தற்போது திருமணம் செய்து வெளி நாடொன்றிற்கு குடி புகுந்து விட்டாள் என்று அண்மையில் அறிந்தேன். 

ஸ்...........ஆ........ஸப்பா.....ஒரு மாதிரியாக ஒரு தொடர் பதிவினை எழுதி முடிச்சாச்சு. 


நண்பேன்டா எனும் தொடர் பதிவினைத் தொடர, என் சொந்தங்களையும் அழைப்பது என் கடமை தானே. அந்த வகையில் கீழ் வரும் அன்பு உள்ளங்களை நண்பேன்டா எனும் தொடர் பதிவினைத் தொடருமாறு அழைப்பு விடுக்கிறேன். 
*தமிழ் வாசி ப்ளாக் சொந்தக்காரர்- பிரகாஷ்,


*Counsel For Any ப்ளாக் ஓனர் சண்முகவேல்,

*சிபி பக்கங்கள் ஓனர் செந்தில்குமார்,

*நாஞ்சில் மனோ பக்கங்கள் ஓனர் மனோ,


*தனி மரம் ப்ளாக் ஓனர் நேசன்

*கூடல் பாலா ப்ளாக் ஓனர் பாலா,


*கவி அழகன் ப்ளாக் ஓனர் கவிக் கிழவன்(யாதவன்),


*என் பக்கம் ப்ளாக் ஓனர் அதிரா,


*மணிராஜ் ப்ளாக் ஓனர் இராஜராஜேஸ்வரி,

*ஸ்டார்ட் மியூசிக் ஓனர் பன்னிக்குட்டி ராம்சாமி.

அப்பாடா, கோர்த்து விடுறதுன்னா, வம்பில் மாட்டி விடுறதுன்னா என் நினைவில் நிறையப் பெயர்கள் வருகிறது. இப்போதைக்கு இவ்வளவும் போதும் என்பதால் விடை பெறுகின்றேன். 

68 Comments:

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ் !

Anonymous said...
Best Blogger Tips

//ஈழத் தமிழனாகப் பிறந்தால் சுதந்திரம் முதற் கொண்டு, ஏனைய மனித உணர்வுகளையும் இழந்து தான் ஆக வேண்டும் என்பது எழுதப்பட்டாத விதியாக எம் வாழ்க்கையோடு இணைந்து வந்து கொண்டிருக்கிறது. //காலம் ஒரு நாள் மாறும் ( என்ன செய்ய இப்பிடி சொல்லியாவது ஆறுதலடைய வேண்டியது தான்)

Anonymous said...
Best Blogger Tips

நண்பேன்டா எனும் தொடர் பதிவின் மூலம் என் நண்பர்களைப் பற்றிய சிறிய குறிப்புக்களை உங்களோடு பகிரவிருக்கிறேன்.
//ம்ம் தொடருங்க தொடருங்க )))

Anonymous said...
Best Blogger Tips

///வீதியால் இந்திய ராணுவம் போகும் போதெல்லாம் வீட்டில் இருந்தோர் நாயினக் கட்டி வைத்திருந்தாலும், இருவரும் குறும்பாக கட்டி வைத்திருக்கும் நாயினை அவிழ்த்து விட்டு, சூ...காட்டி வேடிக்கை பார்த்திருக்கிறோம்.
// அப்ப கனக்க நாயை ஆமிக்கு பலி கொடுத்திருக்கீங்க எண்டு சொல்லுரிங்க...ங்கொய்யால என்ன ஒரு சாதனை

Anonymous said...
Best Blogger Tips

///கோழிப் பீ என நாம் செல்லமாக அழைக்கும் கோகுலன்://எனக்கும் ஒரு கோழிப்பீ ஏன்டா நண்பன் இருந்தான் ஆனா இப்ப தெரியல்ல

Anonymous said...
Best Blogger Tips

///இப்போது
அவளது தோற்றம் இக் கால நமீதாவுக்கு இணையாக இருப்பதால் பதிவுக்கும் இப்படி ஓர் தலைப்பினை வைக்க வேண்டி ஏற்பட்டது. // அப்ப நீங்களும் அந்த பெண்ணை ரூட்டு விட்டிருக்கீங்க # டவுட்டு

Anonymous said...
Best Blogger Tips

///ஆறாம் வகுப்பு முதல் ஒன்றாகவே டியூசனிற்குப் போய், ஒன்றாகவே விளையாடி, ஒன்றாகப் படித்து மகிழ்ந்த நாட்கள் நினைவில் இன்றும் நிழலாக நிற்கிறது. எங்கள் வீட்டிற்கும் வந்து என் அம்மா, அக்கா, தம்பி, தங்கைகளோடு எப்போதும் தன் இன் முகம் காட்டிப் பழகிய ஓர் உள்ளம்./// இது எதோ திரைப்படத்தின்ர கதை போலவல்லோ இருக்குது...))

Anonymous said...
Best Blogger Tips

///அவள் தற்போது திருமணம் செய்து வெளிநாடொன்றிற்கு குடி புகுந்து விட்டாள் என்று அண்மையில் அறிந்தேன். //அவள் பறந்து போனாலே என்னை மறந்து போனாளே..))

Anonymous said...
Best Blogger Tips

நேமிசா இதை பார்த்தா அவவின்ர குடும்பத்துக்க குழப்பம் வரப்போகுதே..

Anonymous said...
Best Blogger Tips

//*நிகழ்வுகள் ப்ளாக் ஓனர் கந்தசாமி,/// நானுமா ! சாரி பாஸ் என்னால இப்போதைக்கு எழுத முடியாது .நானே முகத்தை மறைச்சு, பேரை மறைச்சு, ஊரை மறைச்சுக்கொண்டு திரியிறன் நீங்க வேற , தெரியும் தானே ..))

Mahan.Thamesh said...
Best Blogger Tips

ஈழத் தமிழனாகப் பிறந்தால் சுதந்திரம் முதற் கொண்டு, ஏனைய மனித உணர்வுகளையும் இழந்து தான் ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக எம் வாழ்க்கையோடு இணைந்து வந்து கொண்டிருக்கிறது.
உண்மைதான் சகோ

Mahan.Thamesh said...
Best Blogger Tips

நண்பர்களின் பிரிவு என்பது தாங்கிக்கொள்ள முடியாத பிரிவு .

Mahan.Thamesh said...
Best Blogger Tips

பள்ளி பருவமும் பாடசாலை , கல்லூரி வாழ்வும் அங்கு நண்பர்களோடு வாழ்ந்த வாழ்வும் எப்போதும் இனிக்கும் வாழ்வு . மறக்க முடியா உங்கள் நண்பர்களின் பதிவு எனக்கு இன்னும் தேடிகொண்டிருக்கும் பல பள்ளி நண்பர்களையும் . பிரிந்த நண்பர்களையும் நினைவுபடுத்தியது சகோ .

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

நண்பரே!
உங்கள் பதிவு எனது பால்ய கால நண்பர்களை நினைத்து பார்த்து மகிழத்தோன்றியது.
பிளாஷ்பேக்கில் மூன்றாம் வகுப்பு வரை பயணம் செய்தேன்.
நான் இன்று உயிரோடு இருப்பதே நண்பனால்தான்.
இப்பதிவின் மூலம் நீங்கள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விட்டீர்கள்.
நட்பு என்ற மதம் மட்டும் வாழட்டும்...வளரட்டும்.

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

தூக்கம் கண்ணைக்கட்டுது நாளைக்கு வாறன் பாஸ்
வோட் மட்டும் இப்போ
கமெண்ட்ஸ் நாளை
ஹி ஹி

மகேந்திரன் said...
Best Blogger Tips

பால்யப் பருவ நட்புகள்
நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காதவை.
அறியாப் பருவத்தில் பிரியா நட்பின்
உணர்சிக் கவிதை.
நன்று.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Best Blogger Tips

நல்ல நண்கள் கிடைப்பது இறைவன் கொடுத்த வரம் மாப்ள. உனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்,,
வாழ்த்துக்கள்..

FOOD said...
Best Blogger Tips

//நண்பேன்டா எனும் தொடர் பதிவினைத் தொடர, என் சொந்தங்களையும் அழைப்பது என் கடமை தானே. அந்த வகையில் கீழ் வரும் அன்பு உள்ளங்களை நண்பேன்டா எனும் தொடர் பதிவினைத் தொடருமாறு அழைப்பு விடுக்கிறேன்//
நண்பிகளை மறந்த நிரூபனுக்கு, நிறைய நண்பிகள் கண்டனமாம்.

கவி அழகன் said...
Best Blogger Tips

நண்பர்கள் பற்றி சந்தோஷ கவலை பிரிவு போன்ற உணர்வுகள் தாங்கி வந்திருக்கிறது
வாசிக்கும் போது பள உணர்வுகள் மாறி மாறி வருகிறது

FOOD said...
Best Blogger Tips

என்ன,குழப்பமாக இருக்கிறதா! நேமிசா தவிர ஏனைய நண்பிகள்தான் புகார் செய்துள்ளனர்.

FOOD said...
Best Blogger Tips

//அந்தப் பொண்ணு, எம் 17 வயதுக் காலத்தில் ‘நமீதா போன்ற தோற்றத்தில் இருந்தா. அப்போது நமீதா எனும் நடிகை இல்லா விட்டாலும், இப்போது
அவளது தோற்றம் இக் கால நமீதாவுக்கு இணையாக இருப்பதால் பதிவுக்கும் இப்படி ஓர் தலைப்பினை வைக்க வேண்டி ஏற்பட்டது.//
தலைப்பை நியாயப் படுத்தியாச்சு!

FOOD said...
Best Blogger Tips

தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி. ஏதோ, என்னால் முடிந்தவரை விரைவில் வருகிறேன்.

koodal bala said...
Best Blogger Tips

பழச நெனச்சி பாக்கிறதுல உளவியல் ரீதியா சில நன்மைகள் இருக்குது

செங்கோவி said...
Best Blogger Tips

சிரிப்பும் சீரியஸுமாக கலந்து கட்டி எழுதிஉள்ளீர்கள்..ஆஃபீசர் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நிரூபா.. தொடர் பதிவுக்கு என்னை அழைக்காததால் நான் வெளி நடப்பு செய்கிறேன்.. அழைப்பு விடுக்கப்படாத அனைத்து நண்பர்களும் இதை ஃபாலோ பண்ணவும்.. ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

நல்ல நண்பர்கள் கிடைக்க பெற்றவர்கள் பாக்கியசாலி மக்கா....

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

ஹிஹி என்னைய கூப்பிட்டிருக்கான்கப்பா...

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

எத்தின நண்பர்கள் பத்தி எழுதலாம்???இப்பவே தொடங்கிர வேண்டியது தான்!!!

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

//நானும் நண்பேன்டா எனும் தொடர் பதிவின் மூலம் என் நண்பர்களைப் பற்றிய சிறிய குறிப்புக்களை உங்களோடு பகிரவிருக்கிறேன்.
//
தலைப்பு நம் இஷ்டப்படி வைக்கலாமா பாஸ்??

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

ஹிஹி நமீதாவ மடக்கிய நண்பன் எண்டோன நான் சி பி ஆக்கும் எண்டு நினைச்சு அரக்க பறக்க ஓடி வந்தன் பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

நமீதா எங்க,நமீதா எங்க...? பாவம் சிபி... !

ஜீ... said...
Best Blogger Tips

சூப்பர் பாஸ்!
நானுமா? ஏற்கெனவே செங்கோவியும் அழைத்திருந்தார். விடமாட்டாய்ங்க போலிருக்கே! :-)

ரியாஸ் அஹமது said...
Best Blogger Tips

நன்றி நண்பா ...
மிக சிறப்பாய் நட்பை சொல்லி , நகைச்சுவை கலந்து ..சூடாக தலைப்பிட்டு அசத்தி விட்டீர்கள்///

M.Shanmugan said...
Best Blogger Tips

நாங்களும் உங்கட நேசமிசா உறவு போலதான் பாஸ். ஆனா நல்ல காலம் இப்பதான் கேம்பஸ் போக போறாங்க. நண்பர்களை பற்றி பதிவா? எத்தனை பேர் பற்றி கனக்கில்லை

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

நல்ல நட்புக்கிடைப்பதும்,அதைப் போற்றிப் பாதுகாப்பதும் ஒரு வரம். அதை நினைவை கூர்ந்து பகிர்ந்து கொள்வது ஒரு சுகம்!அருமை.
15 பேரைக் கோத்து விட்டு ஒரு ரெகார்ட் உண்டாக்கிட்டீங்க!

மாலதி said...
Best Blogger Tips

ஈழத் தமிழனாகப் பிறந்தால் சுதந்திரம் முதற் கொண்டு, ஏனைய மனித உணர்வுகளையும் இழந்து தான் ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக எம் வாழ்க்கையோடு இணைந்து வந்து கொண்டிருக்கிறது.
உண்மைதான் ..........நண்பர்களின் பிரிவு என்பது தாங்கிக்கொள்ள முடியாத பிரிவு .

ரேவா said...
Best Blogger Tips

வலையுலகில் வலம் வரும் எத்தனையோ தொடர்பதிவுகள் மத்தியில், நட்புக்களை பற்றி அசை போடும் இந்த தொடர் பதிவு படைக்கவும், படிக்கவும் தனி சுகம் தான்...நீங்கள் பகிர்ந்த விதம், எங்களையும், எங்கள் நட்புக்களின் நினைவுகளோடு பயணப் பட வைத்தது....முதலில் தலைப்பை பார்த்து பதிவை ஒதுக்கினேன்...படித்ததும், நட்பின் கரங்களைப் பற்றிய நிம்மதி அடைந்தேன்...
சொல்ல மறந்துட்டேன்...தலைப்பை நியாயப்படுத்திய விதம் #சிபி சகோ வோட சமாளிப்பிகேசன் தானே... சூப்பர் போ....ஹி ஹி
வாழ்த்துக்கள் சகோ...

மருதமூரான். said...
Best Blogger Tips

பாஸ்.......!

காலையில எழும்பி பார்த்த நமிதாவை மடக்கிய நண்பன் என்ற தலைப்பை பார்த்ததும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

சரி எப்படி மடக்கியிருக்கிறாங்கள் என்று வாசித்த பின்னர்தான். நண்பர்களுடனான அனுபவத்தையும்- ஆழத்தையும் அற்புதமாக எழுதியிருப்பது தெரிந்தது.

தொடர்ந்தும் சூப்பரா எழுதிறீங்க. அதெல்லாம் சரி நம்மளையும் கோத்து விட்டீங்களே மக்கா........!

நிச்சயம் உங்களின் அழைப்பை ஏற்கிறேன். சில நாட்களுக்குப் பின்னர் எழுதுகிறேன்.

kavithai said...
Best Blogger Tips

சகோதரர் நிரூபன்! மிக சுவையாக உள்ளது உங்கள் நண்பர்கள் பற்றிய இடுகை. அதோடு பதிவர்களைக் கூப்பிட்டு இதைப் பாருங்கோ என்று உரிமையாகக் கூப்பிடும் முறை எனக்கு புதிதாக உள்ளது. நாங்க (ஐ மீன்) இலை விரித்துப் போட்டாலும் சில பிரபலங்கள் திரும்பியே பார்ப்பதில்லை எமது வலையை. கருத்திடவும் மாட்டார்கள். நீங்கள் கொடுத்து வைத்தவர் வாழ்த்துகள். Vetha.Elangathilakam.
Denmark. http://www.kovaikkavi.wordpress.com

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

//என் மனதிலும் அவள் மீதான காதல் தோன்றினாலும், அவளது நட்பிற்கு மதிப்பளித்து எங்கே இந்தக் காதலால் என் நட்புக் களங்கப்பட்டு விடுமோ என்னுள் ஓர் இனம் புரியாத உணர்வினை ஏற்படுத்தி; என் சொல்லாத காதலை மனதோடு வைத்து மௌனிக்கச் செய்தவள்.////

நட்பு காதலாகும் போது ஏற்ப்படும் அவஸ்த்தையை இதைவிட யாராலும் சிறப்பாக சொல்லமுடியாது சகோ, நட்பை கொண்ட விதமும் பகிர்ந்த விதமும் அருமை

எஸ்.பி.ஜெ.கேதரன் said...
Best Blogger Tips

அதுச்சரி... அதான் சரி.
தலைப்புன்னா இதான் தலைப்பு.

எஸ்.பி.ஜெ.கேதரன் said...
Best Blogger Tips

பாடசாலைக்காலமும்,நட்புகளும் யுத்த சூழ்நிலைகளில் சின்னாபின்னமாகிப்போய், நெருங்கிய நட்பை "நிரந்தரமாக" இழந்து, அடுத்து.. அவ்வாறான நிலையான நட்புகள் கிடைக்காமல் இருப்பவர்களில் நானும் அடக்கம்.
(இழந்தவற்றின் பாதிப்பில் அவ்வாறு புதிய நட்பை ஏற்படுத்துவதிலும் பிடிப்பில்லாமல்- பழைய ஞாபகங்கள் வரும்போது அந்த நட்புக்கு பதிலாக இன்னொரு நட்பை தேடிக்கொள்வதென்பது இயலாத காரியம்.)
பாடசாலைக்காலத்தை ஞாபகப்படுத்தி இன்னும் எழுதுங்கள்.

எஸ்.பி.ஜெ.கேதரன் said...
Best Blogger Tips

http://shuvadugal.blogspot.com/2010/12/blog-post_28.html

vidivelli said...
Best Blogger Tips

சகோ/அழகான நட்பு படைப்பை மிக சுவாரசீகமாக படைத்திருக்கிறீங்கள்.
வாழ்த்துக்கள்,,,

அதுசரி...நல்ல பிகரை மிஸ்பண்ணிய சோகத்தில காலத்தை மிஸ்பண்ணிடாதேங்க,,,
hahahahahahhaha!!!!!!!!!!!!

குணசேகரன்... said...
Best Blogger Tips

ஈழத் தமிழனாகப் பிறந்தால் சுதந்திரம் முதற் கொண்டு, ஏனைய மனித உணர்வுகளையும் இழந்து தான் ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக எம் வாழ்க்கையோடு இணைந்து வந்து கொண்டிருக்கிறது. //

ஆரம்ப வரிகள் வலியோடு ஆரம்பிக்கிறது. ஆனால் போக போக உங்கள் எழுத்தின் மேன்மைகள் நட்புகள் நிச்சயம் நன்றியுடன் மகிழ்ச்சி கொள்ளும்..(தங்களை
பற்றிய பதிவைப் பார்த்து)

...αηαη∂.... said...
Best Blogger Tips

வலியையும் இனிய நினைவுகளையும் கலந்து கொடுத்து இருக்கிங்க..

ஒரு பெரிய லிஸ்டையே கூப்பிட்டு இருக்கிங்க....

தமிழ்வாசி - Prakash said...
Best Blogger Tips

நண்பர்களை பற்றி ஒரு தொடர்பதிவு எழுத நிரு அழைத்துள்ளார். செங்கோவியும் அழைத்துள்ளார். இந்த நண்பர்களின் அன்பு தொல்லை தாங்கமுடியவில்லை... சீக்கிரமா எழுதணும்.

தமிழ்வாசி - Prakash said...
Best Blogger Tips

சகோ... உங்கள் நண்பர்களை பற்றி பகிர்ந்திருக்கிங்க... அருமை.

! சிவகுமார் ! said...
Best Blogger Tips

நிறைய பேரை கோத்து விட்டு இருக்கீங்க. பல ரகசியங்கள் வெளியே வரட்டும். காத்திருக்கிறோம்.

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

நன்பேண்ட பதிவு
உண்மையில் நன்பேண்டா தான் ,

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

//நேமிசா//

அழகான வித்தியாசமான பெயர்

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

//என் மனதிலும் அவள் மீதான காதல் தோன்றினாலும்,//பாஸ் சொல்லவே இல்லை

நம்ம நிருபன் அண்ணா லவ் பண்ணிய பொண்ணு ஆச்சே
ஹும்.. இப்பவே பாக்கணும் போல இருக்கு பாஸ் .
அவங்க எப்படி இருப்பாங்க?? கொஞ்சம் வர்ணிச்சு இருக்கலாம் இல்ல

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

//என்னுள் ஓர் இனம் புரியாத உணர்வினை ஏற்படுத்தி; என் சொல்லாத காதலை மனதோடு வைத்து மௌனிக்கச் செய்தவள்.//

வலிமிகு வரிகள் பாஸ்,

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

விடுங்க பாஸ்
சுகராகம் சோகம்தானே

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

பாஸ் உங்கள் நன்பேண்டா
நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் ஒன்றே அமைந்த
சூப்பர் பதிவு பாஸ்
வாழ்த்துக்கள்

Nesan said...
Best Blogger Tips

நானும் ஓடிவந்தேன் நமீத்தா நம்மநாட்டு மருமகள் ஆகிவிட்டா என்று பிறகுதான் தெரியுது இப்படிக் கூத்து என்று.

Nesan said...
Best Blogger Tips

அதிகமான நண்பர்கள் நண்பிகள் எனக்கு இருப்பதால் தான் நானும் சுகதுக்கங்களை பகிர முடிகிறது இதில் யாரை எல்லாம் சேர்ப்பது என ஜோசிக்கின்றேன்.

Nesan said...
Best Blogger Tips

தனிமரத்திற்கும் ஒரு கருனைகாட்டி மற்றவர்கள் யார் இவன் எனப் பார்க்கும் வண்ணம் வலைப்பதிவு நண்பர்கள் நண்பிகளுக்கு முகவரிவ்காட்டும் உங்கள் சேவையை சிரம் ஏற்று விரைவில் பதிவு போடுகின்றேன்  நண்பா!

Nesan said...
Best Blogger Tips

இதற்கு ஏதாவது போட்டி விதிமுறை இருக்கா பாஸ் எத்தனை பேரைச் சேர்க்கனும் எத்தனை பந்தி என்று வரையரை உண்டா ?கொஞ்சம் அதிகமானவர்கள்.

Nesan said...
Best Blogger Tips

அழகான பதிவு உங்கள் உண்மையான நண்பர்கள் மற்றும் பறந்து போன கிளியையும் ஞாபகப்படுத்தினது. கவலையில் சில நினைவுகள் அழகான சிந்தனைகள். 

Dr.எம்.கே.முருகானந்தன் said...
Best Blogger Tips

"...கிட்டிப் புல், கிளித்தட்டு எனப் பல ..." மனதினிக்கும் வளமான காலங்கள். ரசித்துப் படித்தேன்.

ஹேமா said...
Best Blogger Tips

அட....நானுமோ.சரிதான் நான் அப்பவே இப்பிடித்தான்.நானும் என்பாடும்.ஆரோடயும் சேரமாட்டன் !

உங்கட அனுபவங்கள் கொஞ்சம் சந்தோஷமும் கொஞ்சம் வலியுமா நினவுகளை அடைச்சு வைக்காமல் ஏதோ சந்தர்ப்பத்தில் வெளில மனசைவிட்டுக் கதைக்கிறதும் நல்லது நிரூ.ஆமிக்காரன் நல்லாத்தான் உங்கட குழப்படியை அடக்கியிருக்கிறான் !

athira said...
Best Blogger Tips

டெய்லி பதிவுபோடுற நீங்கள், இடையில ஒரு கிழமை எங்க காணாமல் போனனீங்க நிரூபன்? கர்ர்ர்ர்:).

இளமைக்கால நினைவுகளை அழகாகச் சொல்லிட்டீங்க...

நான் உண்மையில் நேமிஷா ஒரு கற்பனைக் காதலி என நினைத்து, பகிடியாகப் பதில் சொல்ல இருந்தேன், நல்லவேளை..... பகிடி விடாமல் தப்பிட்டேன்...

கதவைத் தட்டாத காரணத்தால், எத்தனையோ சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டிருக்கின்றனவாம்.....சரி அது போகட்டும்:)).

//அந்தப் பொண்ணு, எம் 17 வயதுக் காலத்தில் ‘நமீதா போன்ற தோற்றத்தில் இருந்தா. //

நான், இப்போதான் உங்களுக்குப் 17 வயதென நினைச்சிருந்தேனே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:), அப்போ...இப்ப வளர்ந்திட்டீங்க:)).

athira said...
Best Blogger Tips

என்னையும் அழைச்சிருக்கிறீங்க... மியாவும் நன்றி.

நான் ஏற்கனவே, என் best friend பற்றி, என் பக்கத்தில் எழுதியிருக்கிறேன்..

நீங்க அழைத்தமைக்காக... எப்படியும் தொடர முயற்சிக்கிறேன்... உடனே அல்ல... ஓக்கை??? .

vanathy said...
Best Blogger Tips

பின்னர் யௌவனனை அருகாக அழைத்து அவன் பொக்கற்றினுள் கிரைனைட்டைப் போட்டு விட்டார்கள். பின்னர் அவன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு அந்தக் கிரைனைட் குண்டினை வெளியே எடுத்து எறிந்து விட்டான். //என்னா ஒரு வில்லத்தனம். இதை விட கொடுமை எங்கவூரில் நடந்திருக்கு.
நல்ல பதிவு.

( இன்று தான் வெக்கேஷன் முடிஞ்சு வந்தேன். அதனால் தான் சில நாட்களாக யார் ப்ளாக் பக்கமும் போகவில்லை.)

akulan said...
Best Blogger Tips

மிகவும் அருமை....
எனது நாடோடி வாழ்க்கையும் ஒருமுறை திரும்பி பார்த்தேன்....மிகவும் சந்தோசமாக உணர்கிறேன்....
ஒரு வித்தியாசம் மூஞ்சி புத்தகம் முலமாக எனது பழைய நண்பர்களை கண்டு பிடித்து விட்டேன்....

shanmugavel said...
Best Blogger Tips

நிறைய இருக்கிறார்கள் என்று யோசிக்கிறேன்.எழுத முயற்சி செய்கிறேன்,நல்ல பகிர்வு சகோ.

Kss.Rajh said...
Best Blogger Tips

///என்னுடைய ஆறாம் வகுப்பு முதல், கம்பஸ் வாழ்க்கை வரை முதுகில் ஒட்டிச் சவாரி செய்த ஒரு அன்புள்ளம். பிறர் பார்வையில் காதலர்கள் எனச் சிறப்பிக்கப்பட்டாலும், ‘நான் உங்களின் உயிர் நண்பி’ என்ற ஒரு வார்த்தையினைக் கூறி நட்போடு விலகி நின்ற ஓர் ஜீவன்.

என் மனதிலும் அவள் மீதான காதல் தோன்றினாலும், அவளது நட்பிற்கு மதிப்பளித்து எங்கே இந்தக் காதலால் என் நட்புக் களங்கப்பட்டு விடுமோ என்னுள் ஓர் இனம் புரியாத உணர்வினை ஏற்படுத்தி; என் சொல்லாத காதலை மனதோடு வைத்து மௌனிக்கச் செய்தவள்.///

நானும் இப்படி ஒரு காதலை சொல்லாமலே தொலைத்து இருக்கின்றேன்.
நண்பர்களைப் பற்றிய அருமையான பதிவு பாஸ்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails