Sunday, July 10, 2011

ஈழப் போர் தந்த சாபங்கள்- உண்மைச் சம்பவம்!

இருபத்தியிரண்டு ஆண்டுகளாக உலக அரங்கில் விடுதலை கோரிய நாடு ஒன்று, இன்றைய கால கட்டத்தில் தென் சூடான் எனும் நாமத்தோடு சுதந்திரக் குழந்தையாகப் பிறந்திருக்கிறது. முப்பது வருடத்திற்கும் மேலான ஆயுதப் போராட்டத்தில்- உலகின் பல விடுதலை அமைப்புக்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டியவர்கள் எனச் சொல்ல்லப்படும் ஈழத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று அமைப்பு- வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏதுமின்றி வேரோடு வெட்டிச் சரிக்கப்பட்டிருக்கிறது.
தென் சூடானில் ஈழத்தினைப் போலப் பல்வேறு சிறு சிறு பிரிவினைவாதக் குழுக்கள்- துணைக் குழுக்கள் இல்லாமையும், சுய நலம் கலந்த மக்கள் இல்லாது பொது நலத்தோடு போர் செய்து விடுதலை எனும் நாமத்தைத் உயிரணுவில் ஏற்றி வாழ்ந்தோரும் வாழ்ந்ததால் தான் இவை சாத்தியப்பட்டது எனலாம். இத்தோடு உலக வல்லாதிக்கத்தின் அரவணைப்பும் அவர்களின் சுதந்திரப் பிறப்பிற்கு படிக்கற்களாக அமைந்திருக்கிறது.

ஈழப் போர் எம் இடத்தில் பல வெளித் தெரியாத- வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற முடியாத- கொடூரமான விடயங்களையும் மறைவாக விட்டுச் சென்றிருக்கிறது. ஈழத்தில் வாழ்வோரும் சரி, ஈழத்துக்காக வாழ்கிறோம் என்ற கோட்பாட்டுடன் ஈழத்திற்கு அப்பால் வாழ்வோரும் சரி அடிக்கடி போராட்டம் என்கின்ற விடயத்தில் ஆளாளுக்கு வேறுபடும் மனோ நிலைகளைக் கொண்டிருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இதன் ஒரு வடிவம் தான் நான் கீழே உங்களோடு பகிரவிருக்கும் ஒரு சம்பவம்.

வெளி நாட்டில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர் ஒருவருக்கு - ஈழத்தின் வடபகுதியில் வசிக்கும் படித்த அழகிய மணமகள் தேவை எனும் நிலை உருவாக, எங்கள் வீட்டிற்கு அண்மையில் உள்ள ஆறுமுகம் எனும் கல்யாணப் புரோக்கரைத் தொடர்பு கொண்டார். 

மாப்பிளைக்குப் பொருத்தமாக அவரது ஊரான வட்டக்கச்சியினைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படத்தைஅனுப்பியதும், அவரும் ஓக்கே சொல்ல- புரோக்கரும் ஜாதகத்தினைப் பார்த்து- டபுள் ஓக்கே- இனிமேல் சம்பந்தம் பேசி முடிக்க வேண்டும் எனும் நிலையில் மாப்பிளை- பெண் வீட்டார் பகுதியினை ஒன்றாகச் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யத் தொடங்கினார்.

எங்கிருந்தோ புற்றீசல் போல மாப்பிளையின் உளத்தில் ஞானோதயம் கிட்டியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். திடீரென வெளி நாட்டவர் ஆறுமுகம் புரோக்கருக்கு போனைப் போட்டார். 

வெளி நாட்டவர்: ஆறுமுகம் அண்ணை; பொம்பிளை இறுதி யுத்தம் வரைக்கும் வன்னியில் தானே இருந்திச்சு.

புரோக்கர்: ஓம் தம்பி.

வெளிநாட்டவர்: அப்படியென்றால் ஐயா. யுத்தத்திற்குப் பின்னர் அவள் அகதிகள் தடுப்பு முகாமில் தானே இருந்திருக்க வேண்டும்.

புரோக்கர்: ஓம் தம்பி. எல்லாச் சனமும் அகதிக் காம்பிலை இருந்ததுகள் தானே.

வெளிநாட்டவர்: அப்படியென்றால், அவள் ஆமிக்காரங்க கூடப் படுக்காமல் இன்றும் கற்போடு இருக்கிறாள் என்று நிரூபிக்க முடியுமோ?

புரோக்கர்: என்ன தம்பி நீங்க இப்படிச் சொல்லுறீங்கள்? அவள் நல்லாப் படிச்ச- ஒரு டீச்சர். 
நல்ல தங்கமான பிள்ளை அவள். நான் கூட அவளை வவுனியா நலன்புரி முகாமில் பார்த்திருக்கிறேன். பொட்டை(பெண்) தாயாக்கள் கூடத் தான் இருந்திச்சு.

வெளிநாட்டவர்: எனக்கு அந்தக் கதையெல்லாம் தேவையில்லை. இங்கே வெளிநாட்டிலே வன்னியில் போர்க் காலத்தில் இருந்த பொம்பிளையளைக் கலியாணம் கட்டினால் மதிக்கமாட்டாங்கள் ஐயா. 
அதாலை எனக்கு இந்தக் கலியாணம் வேண்டாம். அத்தோடு வன்னி இறுதி யுத்தத்தின் பின்னர் முகாமில் இருந்த பெண்களைப் பற்றி இங்கே ஒரு மாதிரியாகத் தான் பேசுறாங்க. எனக்கு இந்தக் கலியாணத்திலை விருப்பமில்லை.

புரோக்கர்: நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங்கள் தம்பி...வையடா போனை....................................மவனே...........அவள் எனக்குத் நன்றாகத் தெரிந்த பிள்ளை. அவளைப் போய் நீ தப்பாகப் பேசுறியே ராஸ்கல்.... கட்...கட்.......கட்...

மேற்படி சம்பவம் யாழ்ப்பாணத்திற்கும்- வன்னிக்கும் என மாறி மாறி ஓடித் திருமணப் பொருத்தங்களை மேற்கொள்ளும் ஆறுமுகம் புரோக்கரால் அண்மையில் எனக்குச் சொல்லப்பட்ட விடயங்கள்.

இந்தச் சம்பவத்தில் வரும் வெளிநாட்டு நபர், மூச்சிலும் பேச்சிலும் ஈழ விடுதலையினை நேசிக்கும் ஒரு நபர். அத்தோடு ஈழம் பற்றிய செய்திகள் முதற் கொண்டு போராட்ட விடயங்கள் வரை பகிரும் முன்னணித் தமிழ் இணையத் தளம் ஒன்றின் சொந்தக்கார். இவர்களின் நடவடிக்கைகள் ஈழம் என்பது இவ்வளவு அவலங்களின் பின்னரும் ஒரு வியாபாரப் பொருளாகத் தான் இவர்கள் பார்வையில் இருக்கிறது என்பதனை உணர்த்தி நிற்கிறது எனலாம். 

ஈழப் போர் இப்படி எத்தனை வெளித் தெரியாத சாபங்களை எங்கள் சகோதரிகளிற்கு கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறது. 

தீயில் எம் தேசம் கருகையில்
திரை மறைவில் 
தீக்கதிர்கள் வாங்கி
பாயில் சுருட்டி மறைதனுப்பினீர்கள்
மூச்சில் முழு மனதாய்
நாமம் ஈழம் எனச் சொல்லி
மகிழ்ந்திருந்தீர்!

இன்றோ காட்சிகள் யாவும் 
கலைந்த பின்னர்;
திரை விலகிக் கொள்ள
சண்டைப் படங்கள் பற்றிய
சத்தங்கள் ஓய்ந்து விட;
சல்லாபம் பற்றிப் பேசுகீறிர்- எம்
சோதரிகள் கற்பிற்கு
நிறுத்தற் படி கேட்கின்றீர்!

விடுதலையின் பெயரால்
விபச்சாரம் செய்தோரே
விடுதலைக்கு எம்மை வீழ
வைத்த பெருச்சாளி கூட்டமே
போதும்! போதும்! இனிமேல்
பேச எம்மிடம் ஏதும் இல்லை!

எஞ்சியுள்ளோராவது 
ஏகாந்த பெரு வெளியில்
வாழ்ந்து தொலையட்டும்
விட்டு விடுங்கள்!!

79 Comments:

செங்கோவி said...
Best Blogger Tips

முகத்தில் அறையும் நிஜம் நிரூ..படித்துவிட்டு வேதனையாக உள்ளது.

செங்கோவி said...
Best Blogger Tips

தீக்குளித்து கற்பினை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ..இந்த மாதிரி ஆட்களுக்கு வாழ்க்கைப்படுவதை விட கல்யாணம் செய்து கொள்ளாமலே இருந்து கொள்ளலாம்.

செங்கோவி said...
Best Blogger Tips

எந்தக் கொள்கையும் வீட்டு வாசல்படி வரை தான் என்பது தான் பெரும்பாலான தமிழர்களின் நிலைப்பாடு.

சாதீயம் ஒழிக என்போம், வீட்டிற்குள் சாதியைப் பேணுவோம்.

பகுத்தறிவு வாதம் செய்வோம், வீட்டுப் பெண்டு பிள்ளைகளை கோயிலுக்கு அனுப்பி விட்டு.

செங்கோவி said...
Best Blogger Tips

நம்மில் பாதியான பெண்களை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழீழம் யாருக்கு அமைத்துத் தரப் போகிறோம்?

வெறுப்பாக உள்ளது நிரூ.

Nesan said...
Best Blogger Tips

வணக்கம் நண்பா கதை கேட்டு மனசு வலிக்குது.இதே விடயத்தை இப்போது பார்த்துவிட்டு வந்த தீராநதியிலும் நண்பன் மதன் ஒரு சேருகளாக சொல்லியதை நீங்களும் பதிவு செய்தது இத்தனை தொழில் நுட்பவேகமாக என ஜோசிக்கின்றேன்.

Nesan said...
Best Blogger Tips

இந்த கேவளமான மாப்பிள்ளைகள் இங்கு காசு கொடுத்து பாலியல் தேவை தீர்க்க பாலியல் தொழில் மாதுக்களுடன் பல இடங்களில் காமத்தை தீர்ப்பார்கள் துரதிஸ்டவசமாக விருப்பம் இன்றி  சீரலிக்கப்பட்ட நம் சகோதரிகளை கற்புக்கரசி என்று நிருபிக்க கேட்கும் இவர்கள் எயிட்ச்,முதலில் தான் ஒருத்தியுடனும் படுக்கையைப் பகிராத உத்தமன் என்று எழுதிக்கொடுப்பார்களா?

Nesan said...
Best Blogger Tips

இப்படியான அடிப்படைவாதிகள் மனநோய்பிடித்த ஒரு சமூகம் இந்த வளர்ந்த நாட்டில் இருப்பது கேவலம் நண்பா.இது ஒரு நோய் இத்தனை தூரம் புலம் பெயர்ந்தும் இவர்கள் கேட்கும் கன்னிப்பெண் தான் என்ற அத்தாட்சியை இவர்கள் சகோதரிகளை மணக்கும் புலம் பெயர் மாப்பிள்ளைகள் விரும்பியோ/விரும்பாமலோ(விசா வேனுமே) என்று மணம் முடிப்பவர்களுக்கு கொடுப்பார்களா?

Nesan said...
Best Blogger Tips

தீராநதியில் ஒரு பாத்திரம் தன் தமக்கை ரானுவம் சீரலித்ததால் அவளின் திருமணம் தடைப்பட்டதாக என்னி அழும்போது எத்தனை பேர் சேர்ந்து அழுத காட்சியைப் பார்த்துவிட்டு வந்து இன்னும் நான் சுயநினைவுக்கு வர 1 மணித்தியாலம் பிடித்துவிட்டது அதுக்குள் உங்கள் பதிவு வந்து என்ணை மீண்டும் கோபம் வருகிறது.

Nesan said...
Best Blogger Tips

இப்படியான கோழை ஜந்துக்கு பெண் கொடுப்பதைவிட அந்த சகோதரி சுயமரியாதையுடன் தாயகத்தில் வாழ்வதே மேல் நண்பா. புலம்பெயர் தேசத்தில் இப்படியும் மிருகங்கள் இருப்பதை என்னி நானும் வெட்கப்படுகின்றேன்.

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///இருபத்தியிரண்டு ஆண்டுகளாக உலக அரங்கில் விடுதலை கோரிய நாடு ஒன்று, இன்றைய கால கட்டத்தில் தென் சூடான் எனும் நாமத்தோடு சுதந்திரக் குழந்தையாகப் பிறந்திருக்கிறது. ///வாழ்த்துவோமாக ...

Nesan said...
Best Blogger Tips

பொதுவாக சொல்லுகின்றன் நண்பா வெளிநாட்டு மாப்பிள்ளையை மணப்பவர்கள் அவர்களிடம் என்ன வியாதிகள் இல்லை என்று மருத்துவச் சான்றிதல்கள் தாருங்கள் பிறகு குறிப்பும் படமும் தருகின்றன் என்று சாட்டை அடி கொடுங்கள் இவர்களின் பொய் வேசம் வெளிப்படும்.

தமிழ்வாசி - Prakash said...
Best Blogger Tips

சகோ... மொதல்ல அவிங்க கன்னித் தன்மையா இருக்காங்களான்னு செக் பண்ணனும். அப்புறம் உங்கள் சகோதரிகளை பற்றி பேசட்டும்.

தமிழ்வாசி - Prakash said...
Best Blogger Tips

அவிங்க பொண்ணுகளை நம்பாம இருக்கறதனால அவிங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக மாட்டிங்குது.

Nesan said...
Best Blogger Tips

இப்படியான தெருப்பொறிக்கிகள் வெள்ளைகாரியுடன் குடும்பம் நடத்துவார்கள் ஊருக்கும் உலகத்துக்கும் ஈழத்தில் இன்னொருத்தியின் வாழ்வை சீரலித்து அவர்களையும் இங்கு கொண்டு வந்து இரட்டைவாழ்க்கை வாழும் முதுகெழும்பு இல்லாத ஜந்துக்கள் இது கோபமாகத்தான் பதிவு செய்கின்றேன் நண்பா நாளை வாரேன் இன்னும் பின்னூட்டத்துடன்.

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///இத்தோடு உலக வல்லாதிக்கத்தின் அரவணைப்பும் அவர்களின் சுதந்திரப் பிறப்பிற்கு படிக்கற்களாக அமைந்திருக்கிறது.// உலக வல்லாதிக்கத்திடம் தென் சூடானில் பிடிங்கி கொள்வதற்கோ இல்லை அதை பகடைக்காயாக பாவிப்பதற்க்கோ எதுவும் இல்லை என்றும் சொல்லலாம்..

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///வெளிநாட்டவர்: அப்படியென்றால், அவள் ஆமிக்காரங்க கூடப் படுக்காமல் இன்றும் கற்போடு இருக்கிறாள் என்று நிரூபிக்க முடியுமோ?//அப்ப பாருங்களன் ,இவங்களை எல்லாம் என்ன தான் செய்யலாம்.

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///இந்தச் சம்பவத்தில் வரும் வெளிநாட்டு நபர், மூச்சிலும் பேச்சிலும் ஈழ விடுதலையினை நேசிக்கும் ஒரு நபர். ////ஈழ விடுதலையை வச்சு வியாபாரம் செய்யும் நபர் எண்டு சொல்லுங்கோ (( , நேசிப்பவன் எல்லாம் இப்படி செய்யமாட்டான்.

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

அர்த்தம் பல பொதிந்த கவிதை ..என்ன தான் செய்வது நாம், ((

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

இதோ வந்துட்டோம் இல்ல
வெயிட் பதிவ படிச்சுட்டு வாறோம்

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

பாஸ்
என்ன பாஸ் இப்படி எல்லாம் மனசங்க வெளிநாட்டில் இருக்காங்களா??

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

//வெளிநாட்டவர்: அப்படியென்றால், அவள் ஆமிக்காரங்க கூடப் படுக்காமல் இன்றும் கற்போடு இருக்கிறாள் என்று நிரூபிக்க முடியுமோ?//

இதுகலெல்லாம் மனுஷ ஜென்மமே இல்லை பாஸ்
இவனுக்கு பொண்டாட்டி ஆகாமல் அந்த அப்பாவி பெண்
தப்பித்தர்க்கு முதலில் கடவுளுக்கு நன்றி சொல்குறேன்,
பாவம் அந்த மனித மிருகத்துக்கு எந்த அப்பாவி பெண்
கழுத்தை நீட்டபோறாலோ

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

//ஈழப் போர் இப்படி எத்தனை வெளித் தெரியாத சாபங்களை எங்கள் சகோதரிகளிற்கு கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறது//

மனசை கனக்க செய்யும் பதிவு பாஸ்

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

ஊரில் அழகான பொண்ணு தேடும் இந்த மன்மதன்கள்
தங்கள் மூஞ்சியை கண்ணாடியில் பார்ப்பதே இல்லை போல் ,
வெளிநாட்டில் இருக்கும் ஒரு தகுதியே போதும் என நினைக்கும் இந்த
மன்மத குஞ்சுகளை நாடு வீதியில் நிக்க வைத்தே சுடனும்.

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

கோபம் கொப்பளிக்கும் கொள்கை முழக்கம் சகோ , சந்தர்ப்பவாதிகளை சாட்டை கொண்டு விளாசி இருக்கீங்க

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...
Best Blogger Tips

பொதுவாக இல்லை நேசன் இனி கட்டாயமாக வெளிநாட்டு மாப்பிள்ளையை மணப்பவர்கள் அவர்களிடம் AIDS போன்ற வியாதிகள் இல்லை என்று மருத்துவச் சான்றிதல்கள் தாருங்கள் பிறகு குறிப்பும் படமும் தருகின்றன் என்று சாட்டை அடி கொடுக்க வேண்டியது காலத்தின் தேவை .

FOOD said...
Best Blogger Tips

அதிகாலையிலேயே மனம் வலிக்க வைத்துவிட்டது.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>எஞ்சியுள்ளோராவது
ஏகாந்த பெரு வெளியில்
வாழ்ந்து தொலையட்டும்
விட்டு விடுங்கள்!!

நிஜம் நண்பா..

akulan said...
Best Blogger Tips

இதுதான் தமிழன்......
இவர்களது உள் மனது மிகவும் கேவலமானது.................

மகேந்திரன் said...
Best Blogger Tips

தன்னினப் பெண்களைப் போல்
நம்மினப் பெண்களை எண்ணுவதா??!!
வெளியில் வெள்ளைத் தோலுடனும்
அகத்தில் புழுதியுடனும் உள்ள
உங்களை எங்களுடன் ஒப்பிடுவதா?!!
புலியை முறத்தால் அடித்து விரட்டிய
செம்மாந்தர்கள் எம்மினப் பெண்டிர்

வேதனையின் வெளிப்பாடாய்
பதிவேற்றிருக்கும் சகோதரரே
நம்மினப் பெண்டிரின் கற்பை
சோதனை போடும் இவர்கள்
செந்தீ மாள்வது நிச்சயம்
எம்குலப் பெண்டிரின் விரல் ஒன்று
போதுமய்யா
உம வஞ்சகக் குலம் அறுக்க!!!

அன்பன்
மகேந்திரன்

ATHAVAN said...
Best Blogger Tips

 இதே விடையத்தை மேலோட்டமாக நானும் பதிவிட்டிருந்தேன்.. வெளிநாட்டில் இருக்கும் எல்லோரும் ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தவர்கள் போல்தான் நடந்து கொள்கிறார்கள் இங்கு எங்களை எல்லோரும் வெளி நாட்டவர்கள் என்றே அழைக்கிறார்கள் இதில் இங்கு பிறந்த எங்கள் பிள்ளைகளையும் சேர்த்தே...

என்னை யாராவுதல் நீ எந்த நாடு என்று கேட்டால் அவருக்கு பதிலை சுருக்கி கொடுப்பதற்காக இந்தியன் என்பேன் ஏனெனில் இந்தியாவை இங்குள்ளவர்களுக்கு ஓரளவு தெரியும் இல்லை இலங்கையன் என்று சொன்னால் அது எங்கு இருக்கிறது என்று அடுத்த கேள்வி வரும் இங்கு பிறந்த பிள்ளைளே தங்களை பிரன்சுக்காரர்கள் என சொல்வதில்லை என்னை போன்ற இரண்டும் கெட்டான்கள் வாழ்கையின் அரைவாசி காலத்தை இலங்கையில் கழித்துவிட்டு வெளிநாட்டிற்கு வந்து இங்கு இந்த நாட்டு பாஸ் போட் எடுத்தவுடன் அவர்கள் பிரன்சுக்காரர்கள் ஆக முடியுமோ அப்படியென்றால் ஏன் இன்னும் சோத்துகொட்டையை விடாமல் சப்புகிறார்கள்..? இந்த நாட்டுக்காரன் போல் எல்லா விடயத்திலும் இருக்கலாமே தங்கள் வசதிக்காக எதையும் சொல்ல அல்லது செய்ய துணிந்த ஐந்துக்கள் இவர்கள்... ?

அடுத்து தென்சூடானையும் ஈழத்தையும் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை ஏனென்றால் இனி வரும் காலங்களிள் தென்சூடான் அரபு நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நம்ம அணாச்சிக்கு உதவும் ஒரு நாணயக்கயிறுகளில் ஒன்றாக மாறும் சாத்தியம் அதிகமே..
ஏனென்றால் நைல் நதி இந்த நாட்டின் ஊடாக சூடானுக்கு சென்று பின்னர் எகிப்த்திற்கு வந்தடைகிறது..!!இதை வைத்து நம்ம அண்ணாச்சி தன்ர விளையாட்ட காட்டுவார் அடுத்து இங்கு கிறிஸ்தவர்களே அதிகமானோர் ..ஆனால் வட சூடான்  இவர்களுக்கு அதி முக்கியம் ஏனெனில் இங்கு அகழ்ந்தெடுக்கப்படும் எண்ணெய் வழங்களை ஏற்றுமதி செய்வதற்கு வட சூடானின் துறை முகங்கள் இவர்களுக்கு தேவை.. இதைப்பற்றி இன்னும் சொல்லலாம் காட்டானுக்கு தூக்கம் வருகிறது போட்டு வாரன் மாப்பிளங்களா..!?

koodal bala said...
Best Blogger Tips

கற்பனையில் கூட வடிக்க முடியாத வேதனையான நிஜங்கள் ...........கடவுள்தான் இந்நிலையை மாற்றவேண்டும் .

Ramani said...
Best Blogger Tips

மனிதர்களில் இத்தனை கேவலமானவர்களும் இருக்கிறார்கள் என அறிய
உள்ளம் நொந்து போனேன். மனம் கனக்கச் செய்து போகும் பதிவு

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

நண்பரே...அந்த பேயை திட்டிய வார்த்தைகளை சென்சார் செய்திருக்கத்தேவையில்லை.

ATHAVAN said...
Best Blogger Tips

இதில நம்ம பத்திரிகைகளின் செயல்பாடும் சொல்லிமாலாது இறுதியுத்தத்தின் பின்பு வந்த பத்திரிகைகளை பார்தீர்களானால்  தெரியும் குறிப்பாக இங்கு ..!?ஒரு கட்டத்தில் இவர்கள் உணர்சியை தூண்டுவதற்காக முகாம்களில் உள்ள பெண்களை இராணுவம் கற்பலித்து விட்டதாகவும் அதனால் உண்டான கருவை கலைப்பதற்காக நமது சகோதரிகள் கியூவில் நிற்பதாகவும் செய்தி போட்டார்கள் பொத்தாம் பொதுவாக...

இது எவ்வளவு பாதிப்புக்களை அங்கு உள்ள பெண்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதையறியாது ..?கல்யாணமான சில பெண்கள் கருக்கலைப்பை செய்திருக்கலாம் ஏன் ..? முகாங்களின் வசதியை இந்த உலகமே அறிந்ததுதானே..!! குண்டு மழைக்கு நடுவில் வாழ்ந்தவர்கள் எதிர்காலம் என்னவென்றே தெரியாமல் வந்தடைந்தவர்களை..முகாம்களில் பிள்ளைகளை பெற்று ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ..? என பாட சொல்கிறார்கள் போலும்... 

இவ்விடயத்தில் எனது குடும்பம்  முகாமில் தங்க நேர்ந்தால் எனது மனைவியும் பிள்ளையை பெற விரும்பியிருக்கமாட்டாள்..இதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதற்காக இலங்கை இராணுவம்  யோக்கியமானவர்கள் என்று சொல்ல வரவில்லை.. 

எங்களிடத்தில் ஏதோ ஒரு வக்கிர புத்தி ஒளிந்திருக்கிறது அன்மையில் ஒரு விசா இல்லாத பொடியனை சந்தித்தேன் அவன் சொல்கிறான் தனக்கு விசா வேண்டுமென்பதற்காக இங்குள்ள ஒரு தமிழ் பெண்னை திருமணம் செய்துவிட்டு விசாகிடைத்தவுடன் களட்டி விடபோறாராம் ஏனென்றால் இங்குள்ள பெண்கள் மோசம் என்கிறான் இவனுக்கு எப்படியான சிகிச்சை அளிக்க வேண்டும்..?

நிரூபன் இப்படி ஒரு பதிவ போட்டு என்ன நித்திரையில்லாம பண்னிட்டியே இபோ நேரம் அதிகாலை 5மணி நாளை காலை 8மணிக்கு எழும்பவேனும். இந்த பாவம் உன்னை சும்மா விடாது மாப்பிள..!!??

புலவர் சா இராமாநுசம் said...
Best Blogger Tips

எழுந்த உடன் படித்த முதல் பதிவு
இது தான்
இதயத்தை, இனந்தெரியாத யாரோ ஒருவர் தம் கைகளால் கசக்கிப்
பிழிவதைப் போன்ற வேதனை
மீள இயலாத சோகம்.
புலம் பெயர்ந்த ஈழத்தமிழனே இப்படி
ஈனத் தமழனாய் இருந்தால்....
எதை எழுதுவது எதை எண்ணுவது
புலவர் சா இராமாநுசம்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Best Blogger Tips

Thanks for sharing..
sorry mobile comment.

Nesan said...
Best Blogger Tips

ஈழம் என்று பேசுபவர்கள் வேசம் நடிப்பு எல்லாம் இப்போது  முகம் கிழிக்கப்படும் நிலையில் இப்படி மனநோய்யாளர்கள் பற்றிய உங்கள் பதிவும் கவிதையும் மனதை வேதனைப்படுத்துகிறது.

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
ஜீ... said...
Best Blogger Tips

விடுங்க பாஸ்! திருத்தமுடியாது நம்மாளுகளை! நிறையப்பேர் இப்படிஹ்தான் இருக்கிறானுகள்!

ஜீ... said...
Best Blogger Tips

வெளிநாட்டில இருக்கிறவர்களெல்லாம் ஏன் யாழ்ப்பாணப் பெண் வேண்டுமென்று கேட்கிறார்கள்? இந்த ஒரு விஷயம் தானே மெயின் காரணம்? அவர்கள் வைத்திருக்கும் மிகப்பெரிய மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று என்பதை அவர்கள் உணர நியாயமில்லை! அப்படியே இருந்து தொலைக்கட்டும்!

shanmugavel said...
Best Blogger Tips

இவனை மாதிரி ஆட்களுடன் எந்த பெண்ணாவது வாழமுடியுமா?

shanmugavel said...
Best Blogger Tips

சிறப்பான பகிர்வு .சகோ.

Yoga.s.FR said...
Best Blogger Tips

சொல்வதற்கு எதுவுமில்லை.அவரின் தூய்மை எப்படியோ,யார் சோதிப்பது?????

Yoga.s.FR said...
Best Blogger Tips

அவருடைய உறவினர்கள் ஈழத்தில் உயர் பதவியிலிருக்கிறார்களே?

சிவ.சி.மா. ஜானகிராமன் said...
Best Blogger Tips

படித்ததும் மனம் நொந்தது..

எம் ஈழத் தமிழர்களுக்கு
எந்த எந்த வகையில் எல்லாம் பிரச்சினை ?

மனச்சோர்வோடு அமைகிறேன்..

ஹேமா said...
Best Blogger Tips

என்ன சொல்லவென்றே தெரியவில்லை நிரூ.நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் இதுமாதிரியான் செய்திகள் !

பிரணவன் said...
Best Blogger Tips

எல்லாமே வெளிவேசம் தான் நிரு. . .பெண்மையின் உணர்வுகளை மதிக்காத இவங்க, கற்ப மட்டும் வச்சு என்ன செய்யபோறாங்க. . .மனது வலிக்கின்றது. . .

கவி அழகன் said...
Best Blogger Tips

கேவலம் படு கேவலம் தமிழ் இனத்துக்கே கேவலம்

கவி அழகன் said...
Best Blogger Tips

தென் சூடான் வெள்ளைக்கார அரசியலுக்கு பிறந்த கறுத்த பிள்ளை என்றே நான் நினைக்கிறன்

கவி அழகன் said...
Best Blogger Tips

இதுக்கு மேல நான் கருது சொல்ல போனால் கெட்ட வார்த்தைகள் தான் வருது வாய்க்குளால

எஸ்.பி.ஜெ.கேதரன் said...
Best Blogger Tips

ஓ...
வெளிநாட்டுல தனியா இருந்தவரெல்லோ,அங்க ஏதும் வேற தொடர்பு இருக்காதோ என்று அந்தப்பெண் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பார்?
எப்படி நிரூபித்திருப்பார்?
கேட்டு சொல்லுங்கப்பா.

எஸ்.பி.ஜெ.கேதரன் said...
Best Blogger Tips

நாதாரி... உனக்கு அந்த பொம்பிள வேண்டாமெண்டா அத சொல்லு- எனக்கு அந்த பொம்பிள வேண்டாமெண்டு.
அதுக்காக... உனக்கு நிரூபிச்செல்லாம் காட்டோணுமோ?மவனே..

கவி அழகன் said...
Best Blogger Tips

செண்பகத்தின் படைப்பை பார்த்தவுடன் வந்த கவிதை அங்கே அங்கங்கள் இழந்தவர்கள்
இங்கே வேண்டாம் நான் சொல்லல

தெய்வங்கள் இன்று
அங்கங்கள் இழந்து
புகழ் இழந்து போனதால்
மனிதனால் மறந்து
துன்பங்கள் கொண்டு
சோகங்கள் தாங்கி
தன்மாணம் மறந்து
உதவி கேட்க
வைத்துவிட்டான்

துப்பாக்கி ஏந்தி
சொந்த மண்ணை காக்கையில்
அக்காக்கள் என்றும்
அண்ணாக்கள் என்றும்
புகழோடு வாழ்த்தி
பொருளாக கொடுத்து
புன்னகைத்த மனிதன்

சசிகுமார் said...
Best Blogger Tips

வலியை உணர்த்தும் பதிவுகள். இவர்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை

கவி அழகன் said...
Best Blogger Tips

விடுதலையின் பெயரால்
விபச்சாரம் செய்தோரே
விடுதலைக்கு எம்மை வீழ
வைத்த பெருச்சாளி கூட்டமே
போதும்! போதும்! இனிமேல்
பேச எம்மிடம் ஏதும் இல்லை!

பேசத்தேவை இல்லை காரி மூஞ்சில துப்பனும் நாய்களுக்கு

Dr.எம்.கே.முருகானந்தன் said...
Best Blogger Tips

மிக அருமையான பதிவு.
நீச முகங்களின் பாவ வடுக்கள், காலமெல்லாம் அவர்
மனதுறுத்த வைக்கும் உங்கள் வழுத்தில்.
"...விடுதலையின் பெயரால்
விபச்சாரம் செய்தோரே..."

Dr.எம்.கே.முருகானந்தன் said...
Best Blogger Tips

என் முகப்புத்தகத்தில் உங்கள் பதிவைப் பகிர்ந்துள்ளேன். முன் அனுமதி பெறாததற்கு மன்னி்கவும்.

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

நச்சென்று இடிக்கும் பதிவு. ஆனால் நிஜமென்று அறிய வலிக்கிறது.

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
Best Blogger Tips

நிஜம் நண்பா..

நெஞ்சு பொறுக்குதில்லை இது போன்ற செய்திகள் படிக்கும் போது காறி உமிழ தோன்றுகிறது நண்பா

இது போல் இன்னும் எத்தனையோ ... போதுமட சாமி

angelin said...
Best Blogger Tips

நேற்றே படித்து விட்டு ,பின்னூட்டமிட திராணி இன்றி போய் விட்டேன் .

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

என்ன கொடுமை இது?

JOTHIG ஜோதிஜி said...
Best Blogger Tips

கவி அழகன் சொன்னது தான் சரியான விமர்சனம்.

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

//எனக்கு அந்தக் கதையெல்லாம் தேவையில்லை. இங்கே வெளிநாட்டிலே வன்னியில் போர்க் காலத்தில் இருந்த பொம்பிளையளைக் கலியாணம் கட்டினால் மதிக்கமாட்டாங்கள் ஐயா. //
எல்லாம் யாரால ???
அங்க போயிட்டு இப்பிடி கதைக்கலாமா?

niyas said...
Best Blogger Tips

விடுதலையின் பெயரால்
விபச்சாரம் செய்தோரே
விடுதலைக்கு எம்மை வீழ
வைத்த பெருச்சாளி கூட்டமே
போதும்! போதும்! இனிமேல்
பேச எம்மிடம் ஏதும் இல்லை!
இவர்களையெல்லாம் என்னவென்று சொல்ல தலைவா.......

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

என்ன தான் இருந்தாலும்,அவர்கள் நமக்காக தானே...
அது புரியாதா இவர்களுக்கு??
காலங்கள் மாறும் போது காட்சிகள் மாற்றப்படுகிறன!!

anthony said...
Best Blogger Tips

உண்மை என்னன்னா இப்படிப்பட்ட கழிசடைகளின் கையில் தான் இப்போது ஈழ போராட்டம் வந்து சேர்ந்து இருக்கிறது ..... மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் தறுதலைகள் தான் இவனுக

மதுரன் said...
Best Blogger Tips

//இருபத்தியிரண்டு ஆண்டுகளாக உலக அரங்கில் விடுதலை கோரிய நாடு ஒன்று, இன்றைய கால கட்டத்தில் தென் சூடான் எனும் நாமத்தோடு சுதந்திரக் குழந்தையாகப் பிறந்திருக்கிறது.....///

தென் சூடானின் விடுதலையும் சரி, யூதர்கள் இஸ்ரவேலை வென்றெடுத்ததும் சரி... அது அவர்களின் வளைந்து கொடுக்காத ஒற்றுமையால் சாத்தியமான ஒன்று.. உலக வரலாற்றில் எங்கெல்லாம் விடுதலை கிடைக்கப்பெற்றிருக்கிறதோ அங்கெல்லாம் நிச்சயமாக அவர்களுடைய அசைக்கமுடியாத, கருத்தியல் ரீதியான ஒற்றுமையே அத்திவாரமாக மாத்திரமன்றி, போராட்டத்தின் இறுதிவரைக்குமான நிலைத்திருப்பிற்கு காரணகர்த்தாவாக விளங்கியிருக்கிறது.. ஆனால் தமிழர்களுக்கும் ஒற்றுமை என்ற சொல்லுக்கும் இடையில் உள்ள இடைவெளி விடுதலை, தனிநாடு என்ற சொற்களுக்கு அப்பாற்பட்டது. கருத்தியல் ரீதியிலான தெளிவின்மை, பதவி ஆசை, போட்டி, பொறாமை போன்றவற்றால் ஒருகாலமும் விடுதலையை வாங்கிவிட முடியாது. ஆனால் தமிழன் இருக்கும் இடங்களில் இருந்து இவற்றை நீக்கிவிடவும் முடியாது.

மதுரன் said...
Best Blogger Tips

//அப்படியென்றால், அவள் ஆமிக்காரங்க கூடப் படுக்காமல் இன்றும் கற்போடு இருக்கிறாள் என்று நிரூபிக்க முடியுமோ?//

தமிழிலே ”நாயினும் கடையன்” என்றொரு சொல் இருக்கிறது. அது இந்த ஈனப்பிறவிக்குத்தான் பொருந்தும்.....
களிசடைகள்.....

vidivelli said...
Best Blogger Tips

வலிக்குது சகோ/
இவர்களை அறிவற்ற மிருகத்தனமுள்ள மனிதரென்றுதான் சொல்ல வேண்டும்....
இதுதான் தன்னலமுள்ள முட்டாள் தமிழன்!!!!

மதுரன் said...
Best Blogger Tips

//எனக்கு அந்தக் கதையெல்லாம் தேவையில்லை. இங்கே வெளிநாட்டிலே வன்னியில் போர்க் காலத்தில் இருந்த பொம்பிளையளைக் கலியாணம் கட்டினால் மதிக்கமாட்டாங்கள் ஐயா. //

ஆமாம் எங்கள் சகோதரிகளை கட்டினால் மதிக்கமாட்டார்கள்.. ஆனால் ஒருநாளைக்கு ஒரு வெள்ளைக்காரியுடன் ********** எழும்பினால் மதிப்பார்களாமா? கேவலம் கெட்ட நாய்கள்...

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

இரு நூறு போலோவர்களை மிக குறுகிய காலத்தில் அடைந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோ...
மிக விரைவில் (இரு வருடத்தில்)இரண்டாயிரம் ஆகட்டும்,.அது உங்களாலும் சிபியாலுமே முடியும்!!

கார்த்தி said...
Best Blogger Tips

தென் சூடான் தனி நாடு பெற்றமைக்கு அவர்களின் போரட்டம் மட்டுமல்ல வேறு நாடுகளின் ஆதரவும் முக்கிய காரணம்!!!

நீங்கள் மேல குறிப்பிட்ட ஆக்களை நிக்க வைசு்சு சுடவேண்டும்!! நாதாரிகள்!!

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

நீங்கள் இந்த பதிவு போட்டதற்கு இணையதளக்காரரின் முகத்திரையையே கிழித்திருக்கலாம்.அல்லது உங்கள் மூலமாக இல்லாமல் உங்கள் நண்பர்கள் யாருடைய பெயரிலாவது பதிவை போட்டிருக்கலாம்.

இப்பவும் கெட்டுப்போய் விடவில்லை.பின்னூட்டப் பகுதியின் மறுமொழியில் பொய் தேச நேசனின் முகத்திரையை கிழியுங்கள்.

புல்லுருவிகளை அடையாளம் காண்பது என்னைப் போன்றவர்களுக்கு அவசியமான ஒன்று.

Mahan.Thamesh said...
Best Blogger Tips

இப்படியும் மனிதர்களா , ? ? படிக்கும் போது அந்த மனிதரின் மேல் அடக்க முடியாத ஆத்திரம் .

மருதமூரான். said...
Best Blogger Tips

நிரூபன்..........!

நேற்று அதிகாலையே இந்தப் பதிவை படித்துவிட்டேன். சில வேலைகளின் காரணமாக உடனடியாக பின்னுாட்ட முடியவில்லை.

புலம்பெயர் மாப்பிள்ளைகளில் சிலர் ஈழத்திலிருக்கும் பெண்களை மணப்பதற்கு எதிர்பார்க்கும் தகுதிநிலைகளில் தடுப்பு முகாம்களில் இருந்திருக்க கூடாது என்பதுவும் அண்மைக்காலத்தில் சேர்ந்திருக்கிறது என்கிற பயங்கர உண்மையை வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள். நானும் இப்படிப்பட்ட சில விடயங்களை அறிந்திருக்கிறேன்.

ஈழத்தமிழன் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.

இந்தப் பதிவை என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன் நண்பா. (தங்களின் மின்னஞ்சல் முகவரியை முடியுமானால் எனக்கு அனுப்ப முடியமா?)

the critics said...
Best Blogger Tips

tholare kannir athiram mattumae varukirathae .......... enna soluvathu endru ennaku theriyavilai ...... emathiri manthiralkal vaazhlnthu enna payan? ....

the critics said...
Best Blogger Tips

tholare kannir athiram mattumae varukirathae .......... enna soluvathu endru ennaku theriyavilai ...... emathiri manthiralkal vaazhlnthu enna payan? ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

என்று மாறுமோ இந்த சமூகம்...? இவ்வளவுக்கு பிறகுமா இப்படி?

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

>இத்தோடு உலக வல்லாதிக்கத்தின் அரவணைப்பும் அவர்களின் சுதந்திரப் பிறப்பிற்கு படிக்கற்களாக அமைந்திருக்கிறது.

இது முக்கியமான ஒன்று. அத்தோடு அங்கு எண்ணையும் உண்டு.

மற்றது கற்புக் காவலர்கள் பற்றி -- நல்ல சாட்டையடி.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails