Tuesday, July 12, 2011

ஆபாச பட ஆசையால் அவமானப்பட்ட பதிவர்!

பாய அறிவிப்பு: இந்தப் பதிவு கலாச்சார காவலர்களுக்கும், சிறுவர்களுக்கும் உகந்ததல்ல. முகம் சுளிக்கும் விடயங்கள் நிரம்பியுள்ள இப் பதிவினைப் பிடிக்காதோர் முன்னெச்சரிக்கையாகத் தவிர்ப்பது நல்லது.

ஒவ்வோர் மனிதனது மனங்களுக்குள்ளும் வித்தியாசமான ஆசா பாசங்கள் வெவ்வேறு உருவில் மெது மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும். சமூகத்தின் முன்னால் என்னை நல்லவன் என்று எடை போட்டுக் காட்டும் வகையில் நான் ரொம்ப நல்லவன் இல்லைங்க. பல பேர் தாம் நல்லவர்கள் என்று சொல்லித் திரை மறைவில் தில்லு முல்லு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் இக் காலத்தில்; வெளிப்படையாகவே சொல்லிடுறேன் நான் ரொம்ப நல்லவன் இல்லைங்க. ஹி.....ஹி.....
ஹை ஸ்கூல்(உயர் தரம்) முடிக்கும் வரைக்கும் உள்ளூர் நண்பர்களோடு லூட்டி அடித்துக் கொண்டிருந்த நான் 2000ம் ஆண்டு பல்கலைக் கழக(கம்பஸ்) அனுமதி கிடைத்த பின்னர் வெளியூர் நண்பர்களோடு புதிய ஓர் இடத்தில்- புதிய சூழலில் என் கம்பஸ் வாழ்க்கையினை ஆரம்பித்தேன். குளு குளு காலநிலை நிலவும் பேராதனை எனும் பகுதியில் உள்ள, இலங்கையின் மூவின மாணவர்களும் கல்வி பயிலும் பெரதெனியா கம்பசில் நானும் ஒரு தமிழ் மாணவனாக இணைந்து கொண்டேன்.

இணைந்து கொஞ்ச காலத்தில் ராக்கிங்(பகிடி வதை) என்ற பெயரில் எல்லா வகையான பழக்க வழக்கங்களையும் சீனியர்கள் கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள் கற்றுக் கொடுத்த எல்லாவகையான பழக்க வழக்கங்களிலும் கிளாஸ் அடித்து, நல்லவன் எனும் முகமூடி அணிந்து பெண்கள் முன்னால் நான் ஒரு அந்தக் கால விஜய் மாதிரி வலம் வரத் தொடங்கினேன்.( அது யாருஙக செருப்பைத் தூக்குறது. ச்....சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்லுறேனுங்க. கோபம் வேணாம்)

ஒரு நாள் என்னுடன் நெருங்கிப் பழகும் வகுப்புத் தோழிகளில் ஒருத்தி- வவுனியாவைச் சேர்ந்தவள், திடீரெனக் கேட்டாள். ’’ஏன்டா நிரூ- உங்கட பொடியங்கட(பசங்களோடை) ஹாங்கிலை(Gang) ஒருத்தர் கிட்டயும் அந்தப் பட சீடி இல்லையாடா?
அடடா.....இதென்ன விளையாட்டு என்று யோசித்து, என்னைச் சுதாகரித்துக் கொண்ட நான்;
ஆமா அதென்ன அந்தப் படம்? 
’’போடா வெண்ணெய். அந்தப் படம் என்றால் உனக்குத் தெரியாது. சீன் படம். மற்றப் படம்.  இது கூடத் தெரியாதா லூசுப் பயலே.

1999ம் ஆண்டு வரை சீரான மின்சார வசதி, கணினி வசதியின்றி- ஒரு குக் கிராமம் போன்ற யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த எனக்கு- என்னை ஒரு பெண் இப்படிக் கேட்டு விட்டாளே என்றதும் ஒரு மாதிரியாகி விட்டது.
’’டாய் நிரூ, முடிஞ்சா ட்ரை பண்ணிப் பாரேன்.  இல்லேன்னா உன்னோட சிநேகிதர்களிடம் கேட்டுப் பாரேன். கண்டிப்பா வைச்சிருப்பாங்களடா. உனக்குத் தெரியாமல் போட்டுப் பார்ப்பாங்கள் போல இருக்கு. கேட்டுப் பார் நிரு’’
என்று கூறி என் ஆவலையும் ஆசையினையும் தூண்டி விட்டாள்.

இரு வாரேன், என்று கூறி விட்டு. அவளிடமிருந்து நைசாக நழுவி, என் ரூமிற்கு ஓடிப் போனேன். அங்கேயிருந்த என் கூட்டாளிப் பசங்களிடமும் கேட்டேன். அவங்களும் தங்களிடம் சீன் படம் இல்லை என்று கையை விரித்து விட்டார்கள். வேறு வழி.  
ஒரு பொம்பிளைப் பிள்ளையே என்னிடம் சீன் படம் கேட்கும் போது, இது வரைக்கும்- நான் ஒரு அப்பிராணிப் பையன் மாதிரிச் சீன் படம் பார்க்காமல் இருக்கிறேனே என்ற கௌரவப் பிரச்சினை ஒரு பக்கம் என்னை வாட்ட, என் நண்பனின் உதவியுடன் களத்தில் இறங்கினேன்.

கட்டுக்கலை செல்வ விநாகயர் கோயிலுக்கு அண்மையில் இருந்த திரைப் படக் கொப்பிகளை வாடகைக்கு விடும் கடைக்குச் சென்றேன். 
முதல் அனுபவமும், இது நாள் வரை பார்த்திராத புது முகமாக கடைக்காரர் இருந்த காரணமும் என்னை அறியாமலே என்னுள் வெட்கத்தை வர வைத்தது.
கடைக்காரர் பார்ப்பதற்கு சிங்கள மொழி பேசுபவர் போல இருந்தார். மனதில் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு நான் பின்னே நின்று, என் நண்பனை அனுப்பி படக் கொப்பி பற்றிக் கேட்கச் சொல்லுவோம் என்றால்;
‘’வெருளிக்கு வாய்ச்ச வெங்காயம் ரேஞ்சிலை’’அவனோ, 
தான் போய்க் கேட்க மாட்டேன் - நிரூ நீ போய்க் கேளடா என்று சொல்லிட்டான்.
வேறு வழி ஏதுமின்றி, மெது மெதுவாக கடை வாசலுக்குப் போய்ச் சுற்றும் முற்றும் பார்த்தேன், வில்லங்கமான(விவகாரமான) ஆளுங்க யாராச்சும் உள்ளே நிற்கிறாங்களா என்று. என் அதிஷ்டம் கடையினுள் கடை முதலாளியைத் தவிர வேறு யாருமே இல்லை.

அடிச்சுது பார் யோகம் எனும் ரேஞ்சில், மெதுவாக கடையினை நோட்டம் விட்டேன். சீன் படக் கொப்பி எங்காவது தெரிகிறதா என்று உற்றுப் பார்த்தேன். இல்லவே இல்லை. 
அட, இவ்ளோ தூரம் வந்திட்டமில்லே, இனி எதுக்கு வெயிட் பண்ணனும் எனும் நோக்கில்,
அண்ணே அந்தப் படக் கொப்பி இருக்கா?
என்று கேட்டேன்.
அவனோ சிங்களத்தில் ‘மொக்கத்த ஹியன்னா(என்ன சொல்லுங்க என்று கேட்டான்?

ஆகா. அவனுக்குத் தமிழ் தெரியாதது ரொம்ப நல்லது என்ற நினைப்பில், எனக்குத் தெரிந்த இண்டர்நேஷனல் மொழியில்(அதாங்க ஆங்கிலம் என்று சொல்லுவாங்களே) சீன் பட சீடி இருக்கா என்று கேட்டேன்.
அவனுக்கு அது புரியவில்லைப் போல. நோ...நோ என்று தலையாட்டினான்.
அப்புறம் விடுவேனா. அடுத்ததாக கேட்டேன். Do you have XXX?(Triple X)   உங்களிடம் 3X படக் கொப்பி இருக்கா என்று கேட்டேன். அவனும் ஓம் என்று தலையசைத்தான். ஓக்கே அருமையான சந்தர்ப்பம். விடாதே நிரூ என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

எவ்வளவு காசு? என்ன மாதிரிப் படம் இருக்கு என்று கேட்டேன். 
‘’150.00 ரூபா அட்வான்ஸ் தர வேண்டும். அத்தோடு ஐடி கார்ட்(அடையாள அட்டை) டீட்டெயில்ஸ் உம் நீங்கள் தந்தால், லேட்டஸாக வந்த படம் தாரேன் என்று சொன்னான்.

ஓக்கே என்று தலையாட்டி, ஐடியை எடுத்துக் கொடுத்தேன். ஐடியை கையில் வாங்கி வைத்துக் கொண்டு முறைத்தான்.  நீ வன்னித் தமிழனா. உனக்கெதுக்கு ஆபாசப் படம் பார்க்கிற ஆசை.(அட நாதாரி, ஏன் வன்னித் தமிழனுக்கும் கண் இருக்குத் தானே.. பார்க்கிறதில் என்ன தப்பு) 
இந்தா இப்பவே போலீஸை கூப்பிட்டு, உன்னை ஒரு வழி பண்ணி, உன் கம்பஸிற்கும் சொல்லிடுறேன் என்று மிரட்டினான்.

போலீஸ் என்றதும், போகம்பர சிறைச்சாலை தான் நினைவுக்கு வந்தது. தமிழர்களைக் காரணம் இன்றிக் கைது செய்தாலே இது தான் சந்தர்ப்பம் எனும் நோக்கில் போட்டுத் தாக்குவாங்கள். இதிலை சீன் படம் பார்க்கிற ஆசையிலை போலீஸில் மாட்டினால் எங்கெல்லாம் அடிப்பாங்களோ என்ற பயம் நெஞ்சை வாட்டத் தொடங்கியது. எனக்குப் பின்னே நின்று நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் நண்பனையும் உதவிக்கு அழைத்தேன். 

என் நிலமையினை விளக்கினேன்.  போலீஸை எல்லாம் கூப்பிட்டு எங்களை அவமானப்படுத்த வேண்டாம். பேசித் தீர்த்துக் கொள்ளுவோம் என்று கெஞ்சத் தொடங்கினேன். எனக்கு கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கிச்சு. ’’பாவிப் பய, என் ஐடியை வாங்கி தன் கையிற்குள் வைத்துக் கொண்டெல்லே வீராப்பு வசனம் பேசுறான். ஐடியை தந்திட்டு ஏதும் டீல் பண்ணினான் என்றால், பக்கத்திலை கிடக்கும் கல்லையாவது அவன்ரை மொட்டை மண்டையிலை எறிஞ்சு போட்டு ஓடலாம் என்று யோசித்தேன். ’’அடடா, பெரும்பான்மை இனத்துக் கடைக்காரன் மேலை சிறுபான்மைத் தமிழன் கை வைச்சிட்டான் என்று ஒரு இனக் கலவரத்தையெல்லே பய புள்ளைக உண்டு பண்ணிடுவாங்க. இதெல்லாம் வேலைக்காகாது’’.
எல்லாம் என்னோட கெட்ட காலம் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். 

டீலிங் ஆரம்பமாச்சு. ’’ஐயா சாமி! நீ என்னோடை அண்ணா மாதிரி! உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். இனிமேல் உன்ரை கடைப் பக்கம் வர மாட்டேன். எனக்கு சீன் பட ஆசையும் இனிமேல் வராது. ஆளை விட்டிடு சாமி’’ என்றேன். 

அவனோ மசிவதாக இல்லை. நீண்ட நேர டீலிங்கிற்குப் பின்னர், பாக்கட்டில் இருப்பதை உருவுவதே ஒரே வழி என முடிவெடுத்தான். ’’எவ்வளவு இருக்கோ அவ்வளவையும் தா என்றான்””.  உதவிக்கு வேறு, கடையில் இருந்த போனில் போன் பண்ணி, இன்னொரு சிங்கள நண்பரையும் கூப்பிட்டு வைத்துக் கொண்டு டீலிங்கில் குறியாக இருந்தான். 
என் பாக்கற்றில் இருந்த ஐநூறு ரூபா, என் நண்பன் பர்சில் இருந்த எழுநூறு ரூபா என மொத்தமாக ஆயிரத்து இருநூறு ரூபாவைக் கொடுத்தோம். 

ஆள் இறங்கி வரக் காணோம். ஆயிரத்து இருநூறு ரூபாவை வாங்கினாப் பிறகும், ஐடி கார்ட்டை தார நோக்கம் இல்லை. என் கையில் கட்டியிருந்த மணிக்கூட்டில் கண் வைச்சிட்டான் பாவி. 
அப்பா ஆசை ஆசையாக மூத்த பொடியன் கம்பசிற்குப் போறான் என்று வாங்கித் தந்த அறு நூறு ரூபா பெறுமதியான புத்தம் புது CASIO- கசியோ மணிக்கூட்டில் கையை வைச்சிட்டான். வேறு வழி. அதையும் கொடுத்து, போட்டிருந்த ஆடைகளை மட்டும் உருவாத குறையாக- வெட்கித் தலை குனிந்து கம்பஸ் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். வரும் வழியில் நானும் சீன் படக் கொப்பி வாடகைக்கு எடுக்கச் சென்ற என் நண்பனும் ஒரு டீலிங் மேற் கொண்டோம்.

’’மச்சான், நடந்ததை வெளியில் சொல்லிடாதை. என் மானம் போயிடும். 
உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். மச்சி வெளியே சொல்லிப் போடாதே. நாளைக்கே பாங்கிற்குப்(Bank) போய் உன்னோடை எழு நூறு ரூபாவை எடுத்து தாரேன்’’ என்று சொல்லிச் சமாளித்தேன்.  இனிமேல் சீன் படம் பார்க்கும் ஆசையே மனதில் வராதபடி படக் கொப்பிக் கடைக்காரன் நல்ல பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறான் என்ற நினைப்போடு மறு நாள் கம்பசிற்கு வந்தேன். 

மதிய வகுப்புக்கள் முடிந்த பின்னர், மீண்டும் என் வகுப்புத் தோழிகளைச் சந்திக்க நேர்ந்தது. டாய் நிரூ, எங்கேயடா படக் கொப்பி என்று கேட்டாள் அவள்....
நான் படக் கொப்பி வாங்கப் போய் அவமானப்பட்ட மேட்டரையா அவளிடம் சொல்ல முடியும். 
அடிப் பாவி....நீ இதே நினைப்பிலை தான் எப்பவும் இருக்கிறியா என, மனதிற்குள் நினைத்தபடி அவளை ஒரு பார்வை பார்த்தேன். என் பார்வையில் உள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, உனக்கு வேணும்னா, நான் ஒரு படக் கொப்பி தரவா. போட்டுப் பாரேன் என்றாள். ஹி.....ஹி....

நம்மடை கம்பஸ் காலத்தில் பசங்களை விடப் பொண்ணுங்க தான் சீன் படம் பார்க்கிறதில் முன்னுதாரணமாக இருந்தாளுங்க. 
வர வரப் பொண்ணுங்களும் முன்னேறிக்கிட்டே போறாங்க இல்லே...

ச்சே.....சொந்தக் கதை சோகக் கதையாககிட்டுதே. 

இதன் அடுத்த பாகம்:  சீன் படம் பார்க்கையில் விடுதலைப் புலிகளிடம்(LTTE) மாட்டிய அப்பாவி ஆண் மகனின் அனுபவங்கள். உங்களுக்காக அடுத்த பதிவில்.......

93 Comments:

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

வடை??

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

ஆமா வடை!!

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

ஹிஹி சீன் பதிவுக்கு வடை வாங்காட்டிக்கு நமக்கெல்லாம் என்ன மதிப்பு ஹிஹி

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

ஹிஹிஹீ பொண்ணு கேட்டிச்சா பாஸ்???நம்பவே முடியல அவ்வவ்

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

ஹிஹிஹி கடைசியில சீன் படத்துக்கு ஆசைப்பட்டு ஒரு சீன் காட்டிட்டு தான் வந்திருக்கிறீங்க எண்டுங்க ??

மைந்தன் சிவா said...
Best Blogger Tips

//’மச்சான், நடந்ததை வெளியில் சொல்லிடாதை. என் மானம் போயிடும்.
உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். மச்சி வெளியே சொல்லிப் போடாதே. /
ஹிஹி அது தான் இப்போ உலகத்துக்கே தெரிஞ்சு போச்சே!!

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் தலீவா )) என்ன கிளம்பீட்டிங்களா ))

Anonymous said...
Best Blogger Tips

///சிறுவர்களுக்கும் உகந்ததல்ல. // அப்ப நான் வாசிக்க முடியாதா....

Anonymous said...
Best Blogger Tips

///இணைந்து கொஞ்ச காலத்தில் ராக்கிங்(பகிடி வதை) என்ற பெயரில் எல்லா வகையான பழக்க வழக்கங்களையும் சீனியர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.//எல்லாமெண்டால் ...........!!! விவரம்மா சொல்லணும்..சின்ன புள்ளைங்களுக்கு புரியாது தானே

Anonymous said...
Best Blogger Tips

///நல்லவன் எனும் முகமூடி அணிந்து பெண்கள் முன்னால் //அப்ப 'பெண்களை கண்டால் நல்லவன் மாதிரி நடிப்பேன்' எண்டு சொல்ல வாரிங்க அப்பிடி தானே ஹிஹிஹி...

Anonymous said...
Best Blogger Tips

///ஆமா அதென்ன அந்தப் படம்?
’’போடா வெண்ணெய். அந்தப் படம் என்றால் உனக்குத் தெரியாது. சீன் படம். மற்றப் படம். இது கூடத் தெரியாதா லூசுப் பயலே.
//ஆமா, இவரு பச்ச புள்ள பாருங்க..!

Anonymous said...
Best Blogger Tips

///அடடா, பெரும்பான்மை இனத்துக் கடைக்காரன் மேலை சிறுபான்மைத் தமிழன் கை வைச்சிட்டான் என்று ஒரு இனக் கலவரத்தையெல்லே பய புள்ளைக உண்டு பண்ணிடுவாங்க.///அப்ப பாருங்களேன் ஹஹஹா ...)

Anonymous said...
Best Blogger Tips

////என் பார்வையில் உள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, உனக்கு வேணும்னா, நான் ஒரு படக் கொப்பி தரவா. போட்டுப் பாரேன் என்றாள். ஹி.....ஹி....
///அடப்பாவி ...

செங்கோவி said...
Best Blogger Tips

ஹா..ஹா..நம்ம கதையே பரவாயில்லை போலிருக்கே..

செங்கோவி said...
Best Blogger Tips

//அபாய அறிவிப்பு: இந்தப் பதிவு கலாச்சார காவலர்களுக்கும், சிறுவர்களுக்கும் உகந்ததல்ல. முகம் சுளிக்கும் விடயங்கள் நிரம்பியுள்ள இப் பதிவினைப் பிடிக்காதோர் முன்னெச்சரிக்கையாகத் தவிர்ப்பது நல்லது.// அபாய அறிவிப்பா? ஆபாச அறிவிப்பா?

செங்கோவி said...
Best Blogger Tips

// பல பேர் தாம் நல்லவர்கள் என்று சொல்லித் திரை மறைவில் தில்லு முல்லு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் இக் காலத்தில்; வெளிப்படையாகவே சொல்லிடுறேன் நான் ரொம்ப நல்லவன் இல்லைங்க.// தம்பி, என்னையும் சேர்த்துக்கோங்க.

செங்கோவி said...
Best Blogger Tips

//ஒரு நாள் என்னுடன் நெருங்கிப் பழகும் வகுப்புத் தோழிகளில் ஒருத்தி- வவுனியாவைச் சேர்ந்தவள், திடீரெனக் கேட்டாள்.//அய்யய்யோ, பதிவரு தாய்க்குலங்களை அவமானப்படுத்திட்டாரு..

செங்கோவி said...
Best Blogger Tips

//அங்கேயிருந்த என் கூட்டாளிப் பசங்களிடமும் கேட்டேன். அவங்களும் தங்களிடம் சீன் படம் இல்லை என்று கையை விரித்து விட்டார்கள். // அப்பவே அவங்களை ரூமை விட்டு விரட்டி இருக்க வேண்டாமா?

செங்கோவி said...
Best Blogger Tips

//போட்டிருந்த ஆடைகளை மட்டும் உருவாத குறையாக- வெட்கித் தலை குனிந்து கம்பஸ் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். // அதையும் உருவிட்டு விட்டிருக்கணும்.

செங்கோவி said...
Best Blogger Tips

//மச்சான், நடந்ததை வெளியில் சொல்லிடாதை. என் மானம் போயிடும். // அப்போது அப்படித் தோன்றிய விஷயம், இப்போது காமெடி ஆகிவிட்டது இல்லையா..அதுவே காலத்தின் மகிமை.

செங்கோவி said...
Best Blogger Tips

//உனக்கு வேணும்னா, நான் ஒரு படக் கொப்பி தரவா. போட்டுப் பாரேன் என்றாள். ஹி.....ஹி....// வாலி ’சோனா’ பாட்டுல ஒரு வசனம் வருமே..’உன் வாயே மவுத் ஆர்கன் மாதிரி தான் இருக்குன்னு சொல்லிட்டு..

ஏன் நிரூ, அப்புறம் அப்படித்தானே நடந்துச்சு?

செங்கோவி said...
Best Blogger Tips

என்னய்யா இது..நாமளே கமெண்ட் போட்டிக்கிட்டு இருக்கோம்..நிரூவைக் காணோம்..தூங்கிட்டாரா?

’காத்திரமான பதிவு’ எழுதினப்புறம் எப்படித்தான் மனுசனுக்கு தூக்கம் வருதோ?

செங்கோவி said...
Best Blogger Tips

// மைந்தன் சிவா said...
ஹிஹிஹீ பொண்ணு கேட்டிச்சா பாஸ்???நம்பவே முடியல அவ்வவ்// சிவா, நமக்கு வயிறு எரியணும்னே இவரு அள்ளி விடுதாரோ?

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

எனக்கும் இது மாதிரியான அனுபவங்கள் உண்டு சகோ ஆனால் நான் உங்களைப் போல அல்ல என்னுடன் சொந்தமாகவே நிறைய இருந்தது. இதில் ஒன்றும் தவறான செயலும் அல்ல ,
பாதை தவறுபவர்கள் எல்லாம் இதை பார்ப்பவர்கள் அல்ல
இதை பார்ப்பவர்கள் எல்லாம் பாதை தவறுபவர்களும் அல்ல

மதுரை சரவணன் said...
Best Blogger Tips

ippadiyum aakumaa..

Mahan.Thamesh said...
Best Blogger Tips

ஆமா அதென்ன அந்தப் படம்?
’’போடா வெண்ணெய். அந்தப் படம் என்றால் உனக்குத் தெரியாது. சீன் படம். மற்றப் படம். இது கூடத் தெரியாதா லூசுப் பயலே.

சின்னனிலேயே கம்பஸ் போய்ட்டியல் போல அதுதான் தெரியல்ல ஹிஹி

Mahan.Thamesh said...
Best Blogger Tips

தேவை சகோ உனக்கு இந்த அவமானம் ஒரு பெண் சீன் படம் வேணும் ஏன்னு கேட்டதும் வந்கபோனே இல்லையா தேவ

காட்டான் said...
Best Blogger Tips

இஞ்ச ஒரு முறை பிள்கிளிண்டன் (பாத்தீங்களா இந்த காட்டானுக்கும் அவர தெரிஞ்சிருக்கு..?) சொனார் தான் சுய இன்பத்திற்கு ஆதரவுன்னு ..!?? என்னைப்பொறுத்தவர இப்பிடியான படங்களால் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் குறைகிறது..? 

அதனால் தான் இங்கு இப்படியான படங்கள் இரவு 12 மணிக்கு பிறகு அனுமதிக்கிறார்கள் படத்தின் கீழ் வயது வந்தவர்க்கு மட்டும்ன்னு போடுவார்கள் காட்டானும் வந்த ஆரம்பத்தில் அந்த படங்களை பார்கவெண்டு இரவில குந்தியிருபான் அதுக்குள்ளார ரூம் பொடியங்கள்ளாம் வந்த்துடுவாங்க வேலை முடித்து யோசித்து பாருங்க 15-16 பொடியங்க நாங்க ஒன்றா இருந்து இப்படி பார்தா ஏதோ கொமிக் படம் பாக்கிற மாதிரி முடியும் இப்ப நினைத்தாளும் சிரிப்பாய்தான் வருகுது  ..!!?

Nesan said...
Best Blogger Tips

மற்றக்கதையையும் விரைவா சொல்லூங்க பாஸ் தூக்கம் வருகிறது.

காட்டான் said...
Best Blogger Tips

செங்கோவி சொன்னது சரிதான் அப்போ நாங்க செய்யும் தவறான விசயங்கள் இப்போ நல்ல காமடியா  தெரியுது இப்ப காமடியா தெரியும் விசயத்திற்கு அப்ப ஏன்யா தண்டனை தந்தார்கள்..? நாட்டாமைகளுக்கு தீர்ப்பு சொல்ல தெரியவில்லை..!!?

கவி அழகன் said...
Best Blogger Tips

வெட்கம் அவமானம்
ஓட்டைசிலட்டேக்க தண்ணியவிட்டு குதிச்சு செய்திருக்கணும்
வெட்கம் கெட்ட புளைப்பையா
--

Vishali said...
Best Blogger Tips

சீனுக்கே சீனா......என்னமா தாளிசிருக்கங்கய்யா மாப்ள ஹிஹி!

மதுரன் said...
Best Blogger Tips

அடடா எங்கள் தன்மானச்சிங்கம் நிரூபனுக்கே மானப்பிரச்சினையா?

மதுரன் said...
Best Blogger Tips

யாரு பாஸ் அந்த பொண்ணு..........?

மதுரன் said...
Best Blogger Tips

அண்ணனுக்கே ஆப்பா?

சரியில்ல....... said...
Best Blogger Tips

லைவ்'வா ஏதாவது ட்ரை பண்ண வேண்டியது தானே? ஹிஹிஹி....

சிவ.சி.மா. ஜானகிராமன் said...
Best Blogger Tips

சிலர் சிரிப்பார்
சிலர் அழுவார்...

நான்..

சிரித்துக் கொண்டே அழுகின்றேன்..

http://sivaayasivaa.blogspot.com/

FOOD said...
Best Blogger Tips

பசுமை நிறைந்த நினைவுகளே!

சரியில்ல....... said...
Best Blogger Tips

பிட்டு'ப்படம் பாக்குற பொண்ணுங்க எல்லாம் இருக்கா? ஐயோ நான் அப்பாவிங்க....

FOOD said...
Best Blogger Tips

கல்லூரிப் பருவம், காதல் அரும்பும் பருவம், கன்னியர் வேறு கேட்டு விட்டார்களா, கஷ்டம்தான்!

சரியில்ல....... said...
Best Blogger Tips

எவ்ளோ அசிங்கப்பட்டாலும் அதை வெளில சொல்லுறதுக்கு ஒரு தில் வேணும் பாஸ்....

பலே பிரபு said...
Best Blogger Tips

அப்புறம் அந்த பொண்ணுகிட்ட அந்த படம் வாங்குனீங்களா??? இல்லையா?

சரியில்ல....... said...
Best Blogger Tips

அடுத்த பகுதிக்காக காத்..... திருக்கிறேன்.....

சரியில்ல....... said...
Best Blogger Tips

பலே பிரபு said...

அப்புறம் அந்த பொண்ணுகிட்ட அந்த படம் வாங்குனீங்களா??? இல்லையா?//

அதானே?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
Best Blogger Tips

அபாய அறிவிப்பா? ஆபாச அறிவிப்பா?

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ஐயய்யோ சிபி, நிரூ கையை பிடிச்சி இழுத்துட்டான்.....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ஐயையோ கில்மா பதிவு ஓடி வாங்க ஓடி வாங்க.....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ம்ஹும் நம்மகிட்டே ஒருத்தியும் இப்பிடி கேக்க மாட்டேன்கிறாங்களே....

koodal bala said...
Best Blogger Tips

பலான அனுபவம்தான் .ஆனா நிறையபேருக்கு இந்த அனுபவம் இருக்கும் .....வெளியே சொல்ல பயப்படுவாங்க

J.P Josephine Baba said...
Best Blogger Tips

எங்கள் அண்ணன் பிராபாகரனிடம் சொல்லியிருந்தால் உடுப்பிட்ட படம் கொடுத்தனுப்பியிருப்பாரே!!! (பார்க்கும் பொருளில் அல்ல பார்ப்பவனில் தான் பிரச்சனை)

மருதமூரான். said...
Best Blogger Tips

நாங்க ரொம்ப நல்ல பையன்கள் இல்லை.

நாங்க உயர்தரம் படிக்கும் போதே இந்த உலக சினிமா எனக்கு அறிமுகம்.

என்னைவிட ரொம்ப அப்பாவியாக இருக்கிறியள் பாஸ்.........!

மட்டுப்பட்ட கதையை மறைக்காமல் கூறவேணும். சரியோ?

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

டைட்டிலைப்பார்த்ததும் பயந்தே போயிட்டேன் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>நீ வன்னித் தமிழனா. உனக்கெதுக்கு ஆபாசப் படம் பார்க்கிற ஆசை.(அட நாதாரி, ஏன் வன்னித் தமிழனுக்கும் கண் இருக்குத் தானே.. பார்க்கிறதில் என்ன தப்பு)

haa haa ஹா ஹா நல்ல வேளை தமிழர்கள் யாரும் பார்க்கக்கூடாதுன்னு சொல்லலை.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நிரூபன் ஒரு தகவல் சுரங்கம்

vidivelli said...
Best Blogger Tips

நிரு நீங்களும் இப்படியா?
ரொம்ம நல்ல பிள்ளை என்று நினைத்தேன்....
உதெல்லாம் அச்சாப் பழக்கம் இல்லை..
அப்பாட்டை சொல்லத்தான் வேணும்!!
ஹிஹிஹி........

சசிகுமார் said...
Best Blogger Tips

//ஆயிரத்து இருநூறு ரூபாவை வாங்கினாப் பிறகும்//

அடப்பாவி நிறு இதுக்கு இவ்ளோ ரேட்டா. இங்க 10 ரூபாய்க்கு கூவி கூவி விக்கிறான். வேணும்னா சொல்லு ஒரு பார்சல் அனுப்புறேன்.

vidivelli said...
Best Blogger Tips

பொம்புளைங்களைச்சாட்டி அதுக்காக நீங்க பிளைக்காதேங்க...
கன்னத்தைப்பொத்தி ரண்டு சாத்து கொடுத்திருக்கலாமே....

!!நீங்க அப்ப ரொம்ப நல்ல பையன் எல்லே..
நம்மட ஆள் உங்கள அங்க அப்பிடி வளர்க்கல எல்லே....!!!

தமிழ்வாசி - Prakash said...
Best Blogger Tips

adang.... pittu anupavam...

ரியாஸ் அஹமது said...
Best Blogger Tips

ஹ ஹா ... இப்படி கதைகள் ஏராளம் இருக்கு நண்பா

Kss.Rajh said...
Best Blogger Tips

ஆகா கலக்கல் பதிவு பாஸ்.அதுவும் அந்த பொண்ணு சீன் சீடி கேட்டதா சொன்னிங்க பாருங்க அதான் மேட்டரே.அவள் உங்களிடன் நிறைய சீன் சீடி எதிர்பார்த்து இருக்கா நீங்கதான் பல்ப்பு வாங்கிட்டீங்க போங்க.

எஸ்.பி.ஜெ.கேதரன் said...
Best Blogger Tips

ஐயையோ...
என்னாங்க இது? விடுதலைப்புலிகளிடம் மாட்டினதும் நீங்களேதானா? எந்த இடம்?-வட்டுவாகலா?

Yoga.s.FR said...
Best Blogger Tips

ஹையோ! ஹையோ!!இது ஒரு பெரீ...............ய விஷயமெண்டு அவர் குத்தி முறியிறார்,இவையள் தூக்கி வச்சுக் கொண்டாடுகீனம்!மச்சானை லாடம் கட்டாம விட்டாங்களே!

Yoga.s.FR said...
Best Blogger Tips

மைந்தன் சிவா said...
ஆமா வடை!!///ஓம் தம்பி "வடை" தான் பிரச்சினையாயிருக்கு!அதிலயும் "ஓட்டை வடை" யெண்டா சொல்லவே தேவையில்லை!

Yoga.s.FR said...
Best Blogger Tips

///ஒரு நாள் என்னுடன் நெருங்கிப் பழகும் வகுப்புத் தோழிகளில் ஒருத்தி- வவுனியாவைச் சேர்ந்தவள், திடீரெனக் கேட்டாள். ’’ஏன்டா நிரூ- உங்கட பொடியங்கட(பசங்களோடை) ஹாங்கிலை(Gang) ஒருத்தர் கிட்டயும் அந்தப் பட சீடி இல்லையாடா?
அடடா.....இதென்ன விளையாட்டு என்று யோசித்து, என்னைச் சுதாகரித்துக் கொண்ட நான்;
ஆமா அதென்ன அந்தப் படம்?
’’போடா வெண்ணெய்". அந்தப் படம் என்றால் உனக்குத் தெரியாது. சீன் படம்.மற்றப் படம்.இது கூடத் தெரியாதா லூசுப் பயலே?.////இந்த விபரீத விளையாட்டுக்குப் போகாமல்,நெருங்கிப் பழகுற வகுப்புத் தோழி தானே,டிரெக்டா படம் ந............. பா....... கேட்டிருக்கலாம்!

ஷர்புதீன் said...
Best Blogger Tips

i am just 12 ( age )

:-)

மாய உலகம்4u said...
Best Blogger Tips

’போடா வெண்ணெய். அந்தப் படம் என்றால் உனக்குத் தெரியாது.மற்றப் படம். இது கூடத் தெரியாதா லூசுப் பயலே.

what a pity!
what a pity!!

மாய உலகம் said...
Best Blogger Tips

’போடா வெண்ணெய். அந்தப் படம் என்றால் உனக்குத் தெரியாது.மற்றப் படம். இது கூடத் தெரியாதா லூசுப் பயலே.

what a pity!
what a pity!!

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

//சீன் படம் பார்க்கையில் விடுதலைப் புலிகளிடம்(LTTE) மாட்டிய அப்பாவி ஆண் மகனின் அனுபவங்கள். இன்று மாலை வரும். காத்திருங்கள்.//
காக்க வைத்து விட்டீர்களே!முதல் பகுதி படித்தபின் காத்திருப்பது கொஞ்சம் சிரமம்தான்!

tharsigan said...
Best Blogger Tips

இரவாச்சுது பாஸ் அடுத்த கோப்பியை எப்ப போடுவிங்க...

tharsigan said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
குணசேகரன்... said...
Best Blogger Tips

ஹி..ஹி..உங்க தைரியத்தை பாராட்டுறேன்

Nesan said...
Best Blogger Tips

என்னைய்யா இன்னும் அடுத்த படம் வரவில்லை எவ்வளவு நேரம் படம்பார்க்க காத்திருப்பது ரசிகர்கள் வெளிநடப்பு செய்யுறாங்கள் படம்வருமா இல்லை பக்கத்து தெருவில் ஸாகிலா படம் போகுது!

shanmugavel said...
Best Blogger Tips

ஹா ஹா ஹா கலக்கல் சகோ!

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

நிருபன் அண்ணாவின் வழமைக்கு மாறான வித்தியாசமான பதிவு,
இதுவும் நல்லாத்தான் இருக்கு
தொடருங்கள் அண்ணா

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

பாஸ் அப்போ நீங்க இன்னும் அந்த படம் பாக்கவே இல்லையா ???
அவ்வவ்

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
Best Blogger Tips

அடுத்த பதிவை எதிர்பார்த்து ஜொள்ளு வடிய காத்து உள்ளோம் மக்கா
சீக்கிரம் சீக்கிரம்

cisco said...
Best Blogger Tips

can u post that girl's phone number....?

Yoga.s.FR said...
Best Blogger Tips

tharsigan said...
இரவாச்சுது பாஸ் அடுத்த "கோப்பி"யை எப்ப போடுவிங்க...////அவர் இரவில் "கோப்பி" குடிப்பதில்லை,"பால்" தான்!(என்ன "பால்" எண்டு கேக்கப்பிடாது)

Yoga.s.FR said...
Best Blogger Tips

கந்தசாமி. said...
///சிறுவர்களுக்கும் உகந்ததல்ல. // அப்ப நான் வாசிக்க முடியாதா....§§§§§வாசிக்கலாம்,ஆனால் அதற்கு மேல் "எதுவும்" செய்யப்படாது!

Yoga.s.FR said...
Best Blogger Tips

Blogger மதுரன் said...
யாரு பாஸ் அந்த பொண்ணு..........?////"அது" இப்போ "குடி"யும் "குடி"த்தனமுமாய் இருக்குது!!!!!!!!!!

Yoga.s.FR said...
Best Blogger Tips

ரியாஸ் அஹமது said...
ஹ ஹா ... இப்படி கதைகள் ஏராளம் இருக்கு நண்பா!////அப்போ,இது "தொடர் பதிவு" ஆகி விடுமோ????????(அடுத்து நீங்களே அழைக்கப்படக் கூடும்,ஜாக்கிரதை!)

Yoga.s.FR said...
Best Blogger Tips

cisco said...
can u post that girl's phone number....?///She is already married,boss!

tharsigan said...
Best Blogger Tips

sorry bass
அடுத்த "கோப்பி"யை எப்ப போடுவிங்க.

அடடா கொப்பி(கேசற்.. சிடிக்கு முன்னம் இருந்துச்சே அது) இணை "கோப்பி" ஏன்னு எழுதிட்டன்.
இதுவும் சரியா பிழையா எதாவது எடக்கு முடக்கா விளங்கிடபோரங்க.
சரி சரி அடுத்த படத்த போடுங்க பாஸ் சாமம் ஆச்சுது

tharsigan said...
Best Blogger Tips

sorry bass
அடுத்த "கோப்பி"யை எப்ப போடுவிங்க.

அடடா கொப்பி(கேசற்.. சிடிக்கு முன்னம் இருந்துச்சே அது) இணை "கோப்பி" ஏன்னு எழுதிட்டன்.
இதுவும் சரியா பிழையா எதாவது எடக்கு முடக்கா விளங்கிடபோரங்க.
சரி சரி அடுத்த படத்த போடுங்க பாஸ் சாமம் ஆச்சுது

tharsigan said...
Best Blogger Tips

sorry bass
அடுத்த "கோப்பி"யை எப்ப போடுவிங்க.

அடடா கொப்பி(கேசற்.. சிடிக்கு முன்னம் இருந்துச்சே அது) இணை "கோப்பி" ஏன்னு எழுதிட்டன்.
இதுவும் சரியா பிழையா எதாவது எடக்கு முடக்கா விளங்கிடபோரங்க.
சரி சரி அடுத்த படத்த போடுங்க பாஸ் சாமம் ஆச்சுது

tharsigan said...
Best Blogger Tips

sorry bass
அடுத்த "கோப்பி"யை எப்ப போடுவிங்க.

அடடா கொப்பி(கேசற்.. சிடிக்கு முன்னம் இருந்துச்சே அது) இணை "கோப்பி" ஏன்னு எழுதிட்டன்.
இதுவும் சரியா பிழையா எதாவது எடக்கு முடக்கா விளங்கிடபோரங்க.
சரி சரி அடுத்த படத்த போடுங்க பாஸ் சாமம் ஆச்சுது

LOSHAN said...
Best Blogger Tips

//அபாய அறிவிப்பு: இந்தப் பதிவு கலாச்சார காவலர்களுக்கும், சிறுவர்களுக்கும் உகந்ததல்ல. //

//வெளிப்படையாகவே சொல்லிடுறேன் நான் ரொம்ப நல்லவன் இல்லைங்க//

சரி தான் :)
இதைப் பொதுவெளியில் பகிரவும் துணிச்சல் வேண்டுமே :)

அனுபவமே ஆசான் தானே..
அதுசரி எனக்கு மட்டும் சொல்லுங்க.. பிறகு பார்த்தீங்க தானே ;)

வந்தியத்தேவன் said...
Best Blogger Tips

கண்டி டெவோன் ரெஸ்ரோரண்டுக்கு அருகில் உள்ள கடையில் நல்ல படங்கள் இருப்பதாக நண்பர்கள் சொல்லி அறிந்தேன்.

உங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள். அந்த நண்பி இப்போ எங்கே இருக்கின்றார்?

Yoga.s.FR said...
Best Blogger Tips

வந்தியத்தேவன் said... அந்த நண்பி இப்போ எங்கே இருக்கின்றார்?/////ரொம்ப லேட்டா கேக்குறீங்க;பாஸ்!நண்பிக்கு "எல்லா" அனுபவமும் முடிஞ்சு ரொம்ப நாளாச்சு!

Yoga.s.FR said...
Best Blogger Tips

LOSHAN said...
//அபாய அறிவிப்பு: இந்தப் பதிவு கலாச்சார காவலர்களுக்கும், சிறுவர்களுக்கும் உகந்ததல்ல. //
//வெளிப்படையாகவே சொல்லிடுறேன் நான் ரொம்ப நல்லவன் இல்லைங்க//
சரி தான் :)இதைப் பொதுவெளியில் பகிரவும் துணிச்சல் வேண்டுமே :)அனுபவமே ஆசான் தானே..
அதுசரி எனக்கு மட்டும் சொல்லுங்க.. பிறகு பார்த்தீங்க தானே ;)////சப்புக் கொட்டாதீங்க,பாஸ்!

♔ம.தி.சுதா♔ said...
Best Blogger Tips

நிரு அந்த பொண்ணு புளொக் எழுத வரமாட்டாளா ?

சா.இலாகுபாரதி @ Lavanyan Gunalan said...
Best Blogger Tips

இந்தப் பதிவுக்கு 91 கமெண்ட் வந்திருக்கு. இதுக்கு பதில் சீன் படமே போட்டிருந்தா 901 கமெண்ட் வந்திருக்கும் தலைவா... உங்க ரசிகர்களும் அதிகரிச்சியிருப்பாங்க!

நிரூபன் said...
Best Blogger Tips

@சா.இலாகுபாரதி @ Lavanyan Gunalan

இந்தப் பதிவுக்கு 91 கமெண்ட் வந்திருக்கு. இதுக்கு பதில் சீன் படமே போட்டிருந்தா 901 கமெண்ட் வந்திருக்கும் தலைவா... உங்க ரசிகர்களும் அதிகரிச்சியிருப்பாங்க!//

ஏன் பாஸ், நான் நல்லா இருப்பது உங்களுக்குப் பிடிக்கலையா?
அதுக்கென்று தானே ஆயிரம் இணையத்தளங்கள் இப்போது இருக்கு, ஆளை விடுங்க சாமி.
அதிக கமெண்ட் பெறுவதற்காக இந்தப் பதிவினை எழுதவில்லை. என் அனுபவத்தினைப் பகிரவே எழுதினேன்.
தங்களின் முதல் வருகைக்கும், மேன்மையான கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails