Sunday, July 17, 2011

அவர்கள் உன்னைக் கற்பழித்தார்களா- ஈழப் போரின் மறு வடிவம்!

’’மன்மதன் வந்து மனசிற்குள் நுழையும் வரையும்,
மனதினுள் உண்ர்ச்சிகள் உறங்கியே இருக்கும் 
உன் பொன் முகமது பதிலொன்றைத் தந்தால், 
என் தேகமும் உன் நினைப்பினில் 
தினம் தினம் சிலிர்க்கும்; 
எனத் தனக்குள் யோசித்தபடி நிவேதிகாவின் வருகைக்காக காத்திருந்தான் கானகன்.  
எண்ணமே அவள் வடிவம் என, அவன் மன அலைகளைச் சூழ்ந்து கொண்டதால், உண்ணவும் முடியவில்லை என புலம்பினான். தான் இம் மண்ணினில் பிறந்ததற்கான பெருமையினை, அவ் நிவேதிகாவின் அழகில் கண்டு தெளிவதாக கனவு கண்டான். கண்களில் தீயாக காதல் கருக் கொண்டது. தீ கருக் கொண்டால், குளிர்விக்க நீர் வேண்டுமல்லவா. அது நிவேதிகாவின் நீண்ட விழிப் பார்வையில் உண்டென்பதால் தீயின் தகிப்பில் தவித்துக் கொண்டிருந்தான்.

அவள் அவனைப் பார்க்கையில் பார்வையினூடு, மேனியில் ஊடுருவி மோகத்தைத் தூண்டும் விஞ்ஞானக் கதிர்கள் உள்ளதாக பெருமிதப்பட்டான். காரணம் அவள் அவனைக் கடந்து செல்கையில் வயிற்றில் புதிவித திராவகம் சுரந்து மேனியில் குளிர் காற்றுப் படாமலே, சிலிர்க்கின்ற உணர்வெழுவதாக உய்த்தறிந்தான்.  அவள் வருகையிலே, பல மாற்றங்கள் கிடைப்பதாக அவளுக்காக காத்திருக்கும் ஒவ்வோர் நொடியிலும் புதிதாய்ப் பிறந்தான். 

ஒரு நாள் மாலை; வவுனிக் குளம் ஆற்றில் நிவேதிகா தனித்து நீராடிக் கொண்டிருப்பதைக் கண்டு, மனதிலிருந்த காமம் எனும் புயலுக்கு சக்தி கொடுத்து, ஓர் இடத்தில் மையப்படுத்தி. அவள் மீதான தன் பார்வையினை வீரியப்படுத்தினான். அவள் ஆற்றில் குளித்து கரையேறும் போது கட்டியிருந்த மெல்லிய ஒற்றைத் துணி - அவனுக்குள் தன் இளமைக்கான மோட்சத்தினை அதிகமாக்கியது. நிவேதிகாவின் உடல் நீட்சி அவ் ஆடையினூடாக, கானகனின் காமம் நிறை கண்களெனும் கமெராவினுள் பதிவாகி, உடற் கூற்றில் மாறுதலை உண்டாக்கியது. 

ஏலவே உடம்பில் பற்றிக் கொண்ட காதல் தீ....குளிர்த்தி செய்வதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த யாருமற்ற பொழுது அது. அவனின் பார்வைப் புலன்கள் மெல்லிய ஆடையினூடாக ஊடுருவி அவள் மேனியில் ஏற்ற இறக்கங்களைத் துளைத்தெடுகின்றது என்பதை உணர்ந்தவளாய் நாண முற்றாள். ஆனாலும் அவன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவ் இடத்தை விட்டகன்றாள். 

காலப் பெரு வெளியின் ஒவ்வோர் சிறு அசைவுகளும், வேகம் எடுக்கவும், கால்களுக்கு வேண்டிய போது வீரியம் கொடுக்கவும், வேண்டிய போது படு குழியில் வீழ்த்தவுமே நிர்ணயிக்கப்பட்டவை என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்ட காலம் அது. ’ஊர் போர் என்ற ஒரு அரக்கனின் பிடிக்கு ஆளாகியிருந்த காலம். எதிர்பாராத விதமாக நிவேதிகாவின் குளக்கரைத் தரிசனத்தோடு அவளை மறு முறை காண முடியாதவனாக கானகன் பல மைல் தொலைவிற்கு இடம் பெயர்க்கப்பட்டான். 

தேடினான் - கண்களில் கொப்பளித்த காமம் எனும் தீ- கந்தகத் துகள்களின் மணத்தோடு கலந்து சென்று விட, நிவேதிகாவைத் தேடிப் பார்த்தான். அவள் உள் இருப்பதற்கான எந்தவிதத் தடயங்களும் இன்றி வாட்டமுற்றான். அந் நேரம், அவன் காதில் யாரோ அசரீரி போன்று அச்சமூட்டினார்கள். ’’மாற்றான் பிடியில் மங்கையர் யாராவது அகப்பட்டால், கற்பழிக்கப்படுவார்கள். காம வெறிக்காக துண்டாடப்படுவார்கள். வன் புணர்விற்காளாவார்கள். இவை அனைத்திற்கும் இடங் கொடுக்கா விட்டால். கொலை செய்யப்படுவார்கள். 

இவ் வார்த்தைகளைக் கேட்டதும் கானகனின் நெஞ்சம் நிவேதிகா பற்றிய காத்திருப்பைக் கேள்விக் குறியாக மாற்றியது. நாட்கள் சில சென்ற பின், கானகனும் தன் இருப்பிடம் விட்டு, இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள அகதி முகாமொன்றுக்கு வந்து சேர்ந்தான். எதேச்சையாக ஒரு நாள் வரிசையில் உணவுக்காய் நிற்கையில் நிவேதிகாவைக் கண்டான். 
‘அல்லியாய் இருந்து அவன் வாழ்விற்கு ஆனந்தமூட்டியவள்- இன்று
மெல்லிதாய் வாடிப் போய், மேனியில் உயிரறற்று சோர்ந்திருந்தாள்’’!

’’இரு கண்கள், இரு கனிகள். அடர்ந்து படர்ந்த கூந்தல், குடைந்த வீணையின் பின் புறங்கள் என இருந்த நிலை மாறி வாடிப் போயிருந்தாள். மெலிந்து வாடிய பயற்றங்காய் போல் ஆகியிருந்தாள். ஆயினும் பழைய அன்போடு , இராணுவ வீரர்களுக்கு தெரியாதவாறு அவள் அருகே சென்று பேச்சுக் கொடுத்தான். அவள் நிலை கேட்டறிந்து கொண்டிருக்கையில்; திடீரென அவன் மேனியில் இருந்து அணுக் கதிர்கள் அளவுக்கதிகமாக வெளியேறத் தொடங்கியது. 
அவளிடம் சந்தேகம் கேட்டான். ‘நீ இந்த இராணுவ முகாமிற்கு நான் வருவதற்கு முன்பு தானே வந்தாய்? 
’ஆமா என அவள் தலையசைத்தாள்.

’அப்படியென்றால் அவர்கள் உன்னைக் கற்பழித்தார்களா? எனக் கேட்டான்.
இல்லை அப்படியேதும் நடை பெறவில்லை எனத் திடமாய் உரைத்தாள். 
’சே..........என அவள் அவன் மூஞ்சியில் காறி உமிழாத குறையாக நிலத்தில் எச்சில் துப்பினாள். 
’அப்படியென்றால் உன் கற்பிற்கு ஏதும் களங்கமில்லையே? நீ இப்போதும் ஒழுக்கமாகத் தானே இருக்கிறாய்? என மறு அம்பு தொடுத்தான் கானகன். 

‘நான் இப்போதும் உன் பழைய நிவேதிகா போன்றே இருக்கிறேன் என மீண்டும் உரைத்தாள். ’கற்பு என்பது மனசு சம்பந்தப்பட்டது. உடல் உறுப்போடு தொடர்பற்றது எனும் உண்மையினைக் கோபக் கனலோடு உரைத்தாள்.  ’’முட்டாள்களே! உங்களைப் போன்றோரால் தாம் எம் போன்ற பெண்களின் கற்பே களங்கமாகின்றது என முகத்தில் அறையும் படி ஏசினாள். கற்பு ஒழுக்கத்தோடு ஒன்றித்துப் போயிருப்பது. அது உனக்கும் எனக்கும் பொதுவானது என நவீன புறநானூற்றினை மீண்டும் ஓர் மங்கையாக நிலை நாட்டினாள். 

’மாற்றான் படைகள் எங்கள் மங்கைகளின் மார்பினைச் சுவைத்து. கற்பழித்து விட்டார்கள் எனக் கதையளக்கும் நீங்கள் தான் காமுகர்கள்’ என திட்டினாள். ’என்னை- உன்னிலிருந்து தொலைத்து விட்டாயே எனக் கண்ணீர் விட்டுக் கதறினாயே? அதன் பரிசு தானா கற்பு? என கத்தினாள். 
வரிசையில் உணவுக்காய் நின்றோர் திரும்பி அவளைப் பார்த்தார்கள். ‘’அவளுக்கு மனநோய், எனச் சொல்லி விட்டு கானகன் அவ் இடத்தை விட்டு நகர்ந்தான். ஏனைய ஆணாதிக்க வாதிகள் நிவேதிகாவைப் பார்த்து ‘இவளுக்கு கற்பு என்றால் என்னவென்றே தெரியாத போலிருக்கே’ எனச் சொல்லிச் சிரித்துக் கொண்டு நின்றார்கள். 

’’கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை 
நீட்டி அளப்பதோர் கோல். 
திருக்குறள் 1123

பொருள் விளக்கம்: கேடு(தீமை) வருகின்ற போது தான், அதில் ஓர் நன்மையும் கிடைக்கும். அத் தீமை தான் நண்பர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதையும் அளந்து காட்டும் கருவியுமாகின்றது. இது நண்பர்களுக்கும் சரி, காதலர்களுக்கும் சரி. பொதுவானது. 

50 Comments:

செங்கோவி said...
Best Blogger Tips

மீண்டும் ஒரு உக்கிரமான பதிவோடு வந்துள்ளீர்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

அவள் அவனைப் பார்க்கையில் பார்வையினூடு, மேனியில் ஊடுருவி மோகத்தைத் தூண்டும் விஞ்ஞானக் கதிர்கள் உள்ளதாக பெருமிதப்பட்டான்>>>>

பார்வையில் இவ்ளோ கூர்மை இருக்கா?

செங்கோவி said...
Best Blogger Tips

கற்பு என்பது வெறுமனே உடல் சம்பந்தப்பட்டது என்ற மாயையில் இருந்து எப்போது நாம் விடுபடப் போகிறோம்?

செங்கோவி said...
Best Blogger Tips

எதிரியின் மேல் வெறுப்பைக்கூட்ட, சொந்தச் சகோதரிகளின் வாழ்வு பற்றி சிந்திக்காது கதையளந்தது யார் குற்றம்?

செங்கோவி said...
Best Blogger Tips

இந்த விஷயம் பற்றிப் பேசுகையில் வெறுப்பே மிஞ்சுகிறது நிரூ.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

’’மாற்றான் பிடியில் மங்கையர் யாராவது அகப்பட்டால், கற்பழிக்கப்படுவார்கள். காம வெறிக்காக துண்டாடப்படுவார்கள். வன் புணர்விற்காளாவார்கள். இவை அனைத்திற்கும் இடங் கொடுக்கா விட்டால். கொலை செய்யப்படுவார்கள். >>>>

என்ன கொடுமை இது..... கற்பை காப்பாற்றினால் உயிருக்கு உத்திரவாதம் இல்லையே...

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ் , ஈழ போரின் எச்சங்களாக விட்டுச்சென்றதில் மிகவும் கொடுமையானது இது தான்..((

Anonymous said...
Best Blogger Tips

///அவனின் பார்வைப் புலன்கள் மெல்லிய ஆடையினூடாக ஊடுருவி அவள் மேனியில் ஏற்ற இறக்கங்களைத் துளைத்தெடுகின்றது என்பதை உணர்ந்தவளாய் நாண முற்றாள். ஆனாலும் அவன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவ் இடத்தை விட்டகன்றாள். /// அவன் செய்தது காதலா என்பது இந்த இடத்தில் கேள்வி....!காமம் தான் அதிகமாக உள்ளது... !

Anonymous said...
Best Blogger Tips

///காலப் பெரு வெளியின் ஒவ்வோர் சிறு அசைவுகளும், வேகம் எடுக்வும், கால்களுக்கு வேண்டிய போது வீரியம் கொடுக்கவும், வேண்டிய போது படு குழியில் வீழ்த்தவுமே நிர்ணயிக்கப்பட்டவை என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்ட காலம் அது.// உண்மை தான், நீங்கள் சொன்ன விதம் தெளிவு ..

மகேந்திரன் said...
Best Blogger Tips

பேசுவதற்கு வார்த்தை இல்லை தோழரே
தொண்டைக்குழி அடைக்கிறது

Anonymous said...
Best Blogger Tips

//’’கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
திருக்குறள் 1123 /// பதிவுக்கு பொருத்தமான குறள்...

Anonymous said...
Best Blogger Tips

என்ன செய்வது, 'இதுவும் ஒருநாள் கடந்து போகும்' என்று எம்மை தேற்றிக்கொள்வதை விட !

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

கற்பனைக் கதை என்றாலும்.. இப்படிப் பல நிஜங்களும் உண்டுதானே? கனகிறது மனது.

//பொருள் விளக்கம்: கேடு(தீமை) வருகின்ற போது தான், அதில் ஓர் நன்மையும் கிடைக்கும். அத் தீமை தான் நண்பர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதையும் அளந்து காட்டும் கருவியுமாகின்றது. இது நண்பர்களுக்கும் சரி, காதலர்களுக்கும் சரி. பொதுவானது.
//

சூப்பர்.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

முன்பு நேமிஷா...
இப்போ கானகன்... சூப்பர் பெயர்கள்....
எங்கே தேடிப்புடிக்கிறீங்க? நான் பெயரைத்தான் கேட்டேன்:)).

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

நிஜத்தை கதையென்று கதை விடாதீர்கள்.
ஒவ்வொரு எழுத்திலும் ரத்தமும்,கண்ணீரும் தெறிக்கிறது.

Yaathoramani.blogspot.com said...
Best Blogger Tips

கவித்துவமான வரிகள்
உள்ளத்தில் கனலேற்றிப் போகுது
அருமை அருமை
இறுதியில் இணைப்பாகச் சொல்லியுள்ள
வள்ளுவனின் குரல் இந்த கதைக்கெனவே
எழுதப்பட்டதைப்போல மிக இயல்பாய்
பொருந்திப்போகிறது
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

Rathnavel Natarajan said...
Best Blogger Tips

வேதனை.

உணவு உலகம் said...
Best Blogger Tips

//’’மாற்றான் பிடியில் மங்கையர் யாராவது அகப்பட்டால், கற்பழிக்கப்படுவார்கள். காம வெறிக்காக துண்டாடப்படுவார்கள். வன் புணர்விற்காளாவார்கள். இவை அனைத்திற்கும் இடங் கொடுக்கா விட்டால். கொலை செய்யப்படுவார்கள்//
மனித மிருகங்கள்.

Unknown said...
Best Blogger Tips

ஒட்டு போட்டுவிட்டேன் சகோ...கருத்துகள்......................:(

கவி அழகன் said...
Best Blogger Tips

கோபக்கனல் அனல்லாய் பறக்கிறது பதிவு முழுக்கவும்

Unknown said...
Best Blogger Tips

செருப்படி மாப்ள!

சரியில்ல....... said...
Best Blogger Tips

சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லை... நீங்க தான் சொல்லிட்டிங்களே...
"காமம்+காதல்+கற்பு" இந்த மூன்றையும் பற்றி முழுதாக அறியாதவர்கள் நிறைய உண்டு... இந்த அறியாமையினால் பாதிக்கப்பட்ட பெண்கள் கோடி உண்டு...

சரியில்ல....... said...
Best Blogger Tips

இவ்வளவு கனமான பதிவை எழுதுவதற்கு நிரூபனை விட்டால் யாரும் இல்லை... நண்பன் என சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

சரியான சவுக்கடி தலைவரே...... அடிக்க அடிக்கத்தான் அம்மியும் நகரும்...!

Unknown said...
Best Blogger Tips

என்ன பாஸ் செய்றது இப்படியானவர்களை?
உக்கிரமான பதிவு! எப்பதான் புரிந்து கொள்வார்களோ?

Yoga.s.FR said...
Best Blogger Tips

கருத்துரைக்க "முடியாது".

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

அனல் பறக்கிறது!
//”காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக்
கற்பு கற்பென்றுலகோர் கதைக்கின்றாரே”


”கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்.”//
(பாரதி)

shanmugavel said...
Best Blogger Tips

சிறப்பாக தோலுரித்து காட்டியிருக்கிறீர் சகோ.வாழ்த்துக்கள்.

ஷஹன்ஷா said...
Best Blogger Tips

இன்றைய காலத்திற்கு பொருத்தமான உக்கிர பதிவு...

maruthamooran said...
Best Blogger Tips

நிரூ....!

மனதை ஆட்டம் காணச் செய்த பதிவு.

எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம். ஆனால், உறவுகள் என்ற போர்வைக்குள் இருக்கும் துரோகிகளை மன்னிக்கவே கூடாது.

அதுதவிரவும், எம் சமூகத்துக்குள் இருக்கின்ற பொறுப்பற்ற குணங்களினால்தான் நாம் முன்னோக்கி பயணப்பட முடியவில்லை. அதற்கு இந்தப்பதிவின் கருவும் நல்லதொரு சான்று.

வாழ்த்துக்கள் பாஸ்.

KANA VARO said...
Best Blogger Tips

பதிவின் ஆரம்பத்தை படிக்கும் போது, முடிவு இவ்வாறு இருக்கும் என நினைக்கவில்லை. ஒவ்வொரு பதிவின் உள்ளிருந்தும் எழுதுவதால் தான் நீங்கள் தனித்து தெரியுரீர்கள்

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

நிரு..
முதல்ல வாழ்த்துக்களை பிடிங்க..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

பதிவில் உங்களின் கோபத்தில் அனல் பறக்கிறது..

ஸ்ரீராம். said...
Best Blogger Tips

குறளுக்கு விளக்கமாய் நிகழ்வைச் சொன்ன விதம் பாங்கு.

கார்த்தி said...
Best Blogger Tips

நிரூபன் கோவிக்க கூடாது நான் ஒன்று சொல்லட்டா? உண்மையில் இப்படியான பதிவுகள் மக்களிடையே மாற்றத்தை கொண்டு வருவதற்கு பதிலாக பிழையான எண்ணத்தை நிலைப்பாடுகளை எடுக்க துாண்டிவிடுகிறது. பல இதுமாதிரியான பதிவுகள் போடுவதால் சொல்கிறேன். உண்மையில் இப்பிடியான எண்ணங்கள் இல்லாத ஒரு சராசரி ஆணும் இப்படியானவற்றை வாசித்த பின் பிழையாக எல்லோரையும் நோக்க தொடங்கிவிடுவார்கள்.
- தவறு இருப்பின் மன்னிக்கவும். -

தனிமரம் said...
Best Blogger Tips

பலர் இப்படித்தான் கற்பு ,கண்ணகி என்று கதைவிட்டுக் கொண்டே மற்றவர் வாழ்வை சீரலிக்கிறார்கள் இது சமூக நோய் என நினைக்கிறன் வலிமிகுந்த படைப்பு !

காட்டான் said...
Best Blogger Tips

இப்ப கொஞ்ச நாளா புள்ள பிடிக்கப்போய் காட்டான் இப்படியான பதிவுகளுக்கு குழ மட்டும்தான் போடுவான் காட்டானுக்கு இவையெல்லாம் ஒரு வித்தியாசமான அனுபவம் பிரான்சில் ஒரே பத்திரிக்கைகளையே ஏன் வாசித்தேன்னு இப்போ கவளைப்படுறான் அதனால்தான் காட்டான் ஓடுகிறான் புள்ளைகள் பிடிப்பதற்கு பதிவுலகில் நல்ல புள்ளைகள் இருந்தா காட்டுங்கோ காட்டான் வருவான் கொப்போடு குழ போட..

பிரபாஷ்கரன் said...
Best Blogger Tips

ஒவ்வொரு வரியும் சாட்டயடி நண்பரே

TJ said...
Best Blogger Tips

யாவும் காமமே

curesure Mohamad said...
Best Blogger Tips

இது கற்பனையா ? நிஜம் போலவே ..

ம.தி.சுதா said...
Best Blogger Tips

///ஒரு நாள் மாலை; வவுனிக் குளம் ஆற்றில் நிவேதிகா தனித்து நீராடிக் கொண்டிருப்பதைக் கண்டு,////

யோவ் மண் வாசனையோட பெண் வாசனையும் வீசுதே....

ad said...
Best Blogger Tips

ஆமா.. இது அதுல்ல..!!
அந்த வெளிநாட்ட்ல இருந்து கலியாணம் பேசி,வேண்டாமெண்டாரே.. ஆவர்தான் ஹீரோவா?சாரி,, வில்லனா?? இந்தக் கதையில?
(பார்ப்பவர்கள் தவறாக நினைக்கவேண்டாம்.இதற்குமுதலும் நிரூபன் அண்ணா எழுதிய ஒரு பதிவில் இருந்த ஒரு விடயத்தைத்தான் குறிப்பிட்டேனே தவிர யாருடைய தனிப்பட்ட விடயத்தையும் அலசவில்லை.)

இத நாம பேசி என்ன பண்றது? ஊர்ல இதமாரி இன்னும் எத்தனையோ நடந்துகொண்டிருக்கு.பதினெட்டு வயசுல விபச்சாரியாக்கப்பட்டவள்ன்னு எத்தன பேர சொல்ல...
வேலிகள் பயிர்களை மேய்ந்துகொண்டிருப்பதற்கு-உள்ளே காவலுக்கு வைத்த வெருளிகளுமல்லவா துணைபோகின்றன.கண்டிப்பாக நம்மவர்கள் சிந்திக்கவேண்டிய விடயமண்ணா.சிந்திப்பார்களா என்பதுதான் கேள்விக்குறி.

சுதா SJ said...
Best Blogger Tips

வந்தேன் பாஸ்

சிவகுமாரன் said...
Best Blogger Tips

மிகவும் அருமையான் படைப்பு. இராமன் காலந்தொட்டு தொடரும் இந்த நிலை ஆணாதிக்க உலகின் அவலம்.
" கற்பென்னும் முள்வேலி கன்னியருக்கு உண்டென்றால்
அற்பமான ஆணென்ன அவிழ்த்துவிட்ட வெள்ளாடா ?"
-- சிலம்பின் புலம்பலில் நான் எழுதியது.

param said...
Best Blogger Tips

கற்பென்னும் முள்வேலி கன்னியருக்கு உண்டென்றால்
அற்பமான ஆணென்ன அவிழ்த்துவிட்ட வெள்ளாடா ?"
அருமையான கருத்து சிவகுமாரன்.

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

அருமையான பகிர்வு தோழரே.. வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...
Best Blogger Tips

வரிகள் அனைத்தும் நெத்தியடி

Unknown said...
Best Blogger Tips

சுடும் உண்மைகள்!!! எமது சமூகத்தின் இன்னொரு முகத்தை வெளிக்காட்டி இருக்கிறீர்கள்.

அன்னியன் ஏற்படுத்தும் காயத்தை கூட காலம் மறக்கடிக்கலாம். ஆனால் நம்மவர் தரும் காயங்கள்தான் ரணவேதனை :(

நிரூபன் said...
Best Blogger Tips

@கார்த்தி
கார்த்தி said...
நிரூபன் கோவிக்க கூடாது நான் ஒன்று சொல்லட்டா? உண்மையில் இப்படியான பதிவுகள் மக்களிடையே மாற்றத்தை கொண்டு வருவதற்கு பதிலாக பிழையான எண்ணத்தை நிலைப்பாடுகளை எடுக்க துாண்டிவிடுகிறது. பல இதுமாதிரியான பதிவுகள் போடுவதால் சொல்கிறேன். உண்மையில் இப்பிடியான எண்ணங்கள் இல்லாத ஒரு சராசரி ஆணும் இப்படியானவற்றை வாசித்த பின் பிழையாக எல்லோரையும் நோக்க தொடங்கிவிடுவார்கள்.
- தவறு இருப்பின் மன்னிக்கவும். -//


வணக்கம் சகோ, தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி,
மன்னிப்பெல்லாம் எதற்கு மச்சி,
உண்மையில் இவ்வாறான வக்கிர + வன்மம் கலந்த சபல புத்தி உள்ளோர் எம் சமூகத்தில் உள்ளார்கள் என்பதனை வெளிகாட்டவே இப்படி ஓர் பதிவினை எழுதினேன் சகோ. தவறேதுமிருப்பின் என்னை மன்னிக்கவும்.

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

உக்கிரமான பதிவு. ஆனால் தேவையான ஒன்று. 'கற்பு'ப் பற்றி எம் பார்வைகள் மாறவெண்டும்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails