Friday, November 18, 2011

நடிகையின் சதையை நம்பி நடுத் தெருவில் நிற்கும் தமிழ் சினிமா!

சினிமாவும், அரசியலும் தமிழ் மக்கள் வாழ்வோடு இன்றைய கால கட்டத்தில் இரண்டறக் கலந்து விட்டன. சினிமாவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் நட்சத்திரங்கள் தமக்குரிய ஆதரவு சினிமாவில் பல்கிப் பெருகியவுடன், தம்மைச் சூழ்ந்திருக்கும் ரசிகர்களின் பலம் தமக்கும் அரசியலில் காலூன்றப் பின்னணியாக இருக்கும் எனும் நம்பிக்கையுடன் களமிறங்கி தம் வசமுள்ள பணத்தையெல்லாம் வாரியிறைந்த்து மண் கவ்வுகின்றார்கள். மக்கள் திலகத்திற்குப் பின்னர் அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனும் ஆசையோடு களமிறங்கிய பல நட்சத்திரங்கள் இறுதியில் மண் கவ்விய வரலாற்றினைத் தான் நாம் அனைவரும் கண்டு வருகின்றோம். 
மக்களுக்கான சினிமா என்று நாம் நோக்குகின்ற போது மக்களின் ரசனையினைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் தான் தமிழ்த் திரைப்படங்கள் செயற்படுகின்றன. குத்துப் பாட்டினை ரசிக்க வேண்டும்; கதா நாயகன் கூட்டமாக வரும் கும்பலை எதிர்த்து நின்று தனித்துச் சண்டை போட வேண்டும்;பிரபல நடிகர்களை அவர்களின் ரசிகர்களின் தலைவனாக காண்பித்து திரைப்படம் வெளி வர வேண்டும் எனும் நோக்கில் மக்களின் ரசனை என்பது இருக்கும் போது நல்ல சினிமாவினைத் தமிழ்த் திரையுலகம் தரவில்லையே என்று நாம் ஆதங்கப்படுவது நியாயமில்லைத் தானே. 
எண்ணம் எழுத்துருவாக்கம்: செ.நிரூபன்.
வரலாற்றுத் திரைப்படத்திலும் நடிகையின் பொக்குள் தெரிய குத்துப் பாடல் வைத்தல் தான் வரமாகும் எனும் நிலையினை தமிழ் சினிமாவினை ரசிக்கும் ரசிகர்கள் தாமாக விரும்பி ஏற்படுத்தியிருக்கின்றார்கள். பெரும்பாலான படங்களில் நடிகைகளின் உடற் சதையினை வைத்துப் பணமீட்டும் நோக்கிலான காட்சிகள் வலிந்து திணிக்கப்படுகின்றன.மக்களுக்கான யதார்த்தம் நிறைந்த வாழ்வியலைப் பற்றிப் பேசுகின்ற திரைப்படங்களின் வருகை என்பது இத்தகைய இழி நிலைகளின் காரணத்தினால் காலப் போக்கில் குறைந்து கொண்டே போகின்றது. பொக்கிஷம், அங்காடித் தெரு, மைனா போன்ற படங்கள் ஆண்டுக்கொரு முறை வருமா என்பதே இன்றைய தமிழ் சினிமாவின் நிலையினைப் பார்க்கையில் சந்தேகமாத் தான் இருக்கின்றது. 
எண்ணம் எழுத்துருவாக்கம்: செ.நிரூபன்.
மசாலாத் திரைப்படங்கள் தான் இன்று அதிகளவில் மக்களின் ரசனையினை மையமாக வைத்து எடுக்கப்படுகின்றன. நடிகைகளுள் யார் தொடையினை நன்றாக காட்டுகிறார்? யார் அதிகம் கவர்ச்சி காட்டுகின்றார் எனப் பல போட்டிகளை ரசிகர்கள் ஏற்படுத்தி விடுகின்றார்கள். அதிகம் கவர்ச்சி காட்டும் நடிகையின் மார்க்கட் மாத்திரம் தமிழ் சினிமாவில் நின்று நிலைக்கும் சந்தர்ப்பங்களையும் நாம் கண்டு கடந்து வந்திருக்கிறோம். மக்களின் உணர்வுகளை மையப்படுத்திய கலாரசனை நிறைந்த படங்களின் வருகை என்பது அண்மைக் காலத்தில் குறைந்து கொண்டே போகின்றது. நல்ல சம்பவங்களை, வரலாற்றுக் கதைகளை, மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்திப் படமெடுக்கவும்;முதலிடவும் இயக்குனர்களும், முதலீட்டாளர்களும் தயக்கம் காட்டுகின்றார்கள். 
எண்ணம் எழுத்துருவாக்கம்: செ.நிரூபன்.
இதே வேளை ஐந்து அல்லது ஆறு பாடல்களுடன் வரும் ஒரு திரைப்படத்தில் ஒரு சில நிமிடங்கள் வரும் நடிகையின் கசாமுசா காட்சிகளை மாத்திரம் ரசிக்கும் வகையில் மசாலாப் படங்களுக்குள் உட்புகுத்திப் படமெடுப்பதற்குப் பலரும் விரும்புகின்றார்கள். தமிழ் சினிமாவில் முழுதாக காட்டுகின்றார்களா என்று நாம் கேள்வியெழுப்பினால் இல்லை என்றே பதில் கூற முடியும்! ஆனாலும் அரை குறையாக காட்டப்படும் கவர்ச்சிக் காட்சிகளை கண்டு களிக்கப் பல ரசிகர்கள் வெறி பிடித்தவர்களாக அலைகின்றார்கள். தமிழில் ஆங்கிலத் திரையுலகிற்கு நிகராக நீலப் படங்கள் இல்லாமை தான் நடிகைகளின் வாளிப்பான உடல்வாகினை நாம் ரசிக்க ஒரு காரணம் என்றும், நீலப் படங்களை எம் சமூகத்தினுள் திணித்தால் கலாச்சாரம் சீரழியும் என்றும் கூறலாம்! 
ஆனாலும் நடிகையின் சதையினை நம்பித் தமிழ் சினிமாவின் போக்கினை அல்லது பாதையினை மாற்றுவதிலும் பார்க்க, நல்லதோர் கதையினை நம்பி மக்களின் பேரபிமானத்தினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஒரு படத்தினை எடுக்க எம் தமிழ் இயக்குனர்கள் ஏன் முன்வரக் கூடாது? நல்ல படம் அல்லது மசாலத் தன்மையற்ற வாழ்வியலைப் பேசுகின்ற படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் நிலையினை தமிழ் சினிமா இயக்குனர்கள் நினைத்தால் உருவாக்க முடியாதா? நாமும் எத்தனை நாளைக்குத் தான் மசாலாத் திரைப்படங்களைப் பார்த்து எம் மனதினுள் புகைந்து கொண்டிருப்பது. கொஞ்சமாவது வித்தியாசமாக அரைத்த மாவினை அரைப்பதனை நிறுத்தி விட்டு மேலைத் தேய சினிமாவினைப் போன்று ஜனரஞ்சக அந்தஸ்தினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் நல்ல படங்களைத் தருவதற்கு எம் தமிழ் சினிமா இயக்குனர்கள் முயற்சி செய்யலாம் அல்லவா? 
எண்ணம் எழுத்துருவாக்கம்: செ.நிரூபன்.
ஐந்து பாடல்களை ஒரு படத்தினுள் சொருகி படத்தின் நேரத்தினை அதிகரிப்பதனை விடுத்து பாடல்கள் அல்லது தமிழ் இசைக்கென்று தனியான ஆல்பங்களை உருவாக்கித் தமிழ் சினிமா பயணிப்பதற்கு யாராவது ஒரு இயக்குனர் அடியெடுத்து வைக்க கூடாதா? நடிகையின் சதையினை நம்பித் தம் படங்களில் காட்சிகளை அமைப்பதனை விடுத்து மக்களின் ரசனையினை வெல்லும் வகையில் நல்ல கதைகளை நம்பித் திரைப்படங்களைத் தயாரிக்கலாம் அல்லவா? வரலாற்றுக் கதைகள், தமிழ் நாட்டு மக்களின் வாழ்வியலைப் பேசும் சம்பவங்கள் எனப் பல விடயங்கள் புதைந்து போயிருக்க அவற்றையெல்லாம் விட்டு விட்டு மொழி மாற்றி ரீமேக் படங்களை எடுப்பதில் எம் கவனத்தினைச் செலுத்தலாமா?

எண்ணம், எழுத்துருவாக்கம்: செல்வராஜா நிரூபன்.

23 Comments:

Unknown said...
Best Blogger Tips

அப்படி இல்லை நிரூ.. கதை இல்லாத எந்த படமும் இங்கே கொண்டாடப்பட்டது இல்லை.

SURYAJEEVA said...
Best Blogger Tips

பணம் போடுபவன் எப்படி ஆட்டி வைக்கிறானோ அப்படி ஆடுபவர்கள் இயக்குனர்கள்...
அப்புறம் உச்ச நடிகர் என்றால் அவருக்காக ஒரு ஆட்டம்,,
உச்ச ஒளிப்பதிவாளர் என்றால் அவருக்காக ஒரு ஆட்டம்,
உச்ச நடிகை என்றால் அவருக்காக ஒரு ஆட்டம்...
இதை எல்லாம் மீறி நல்ல படங்கள் வரத் தான் செய்கிறது...
அன்பே சிவம்..
தம்பி..
தவமாய் தவமிருந்து...
வெயில்..
என்று விரல் விட்டு எண்ணக் கூடிய படங்கள் இருக்கத் தான் செய்கின்றன..

K.s.s.Rajh said...
Best Blogger Tips

நல்ல கதையுள்ள படங்களும் அவ்வப்போது வரத்தாம் செய்கின்றன ஆனால் அதில் வெற்றி பெரும் படங்கள் ஓரு சிலதான்.....

ஓப்பினிங் ஷாங் இல்லாமல் நடிகையுடன் 5 டூயட் இல்லாமலும் சினிமா என்றால் பல ஹீரோக்களின் நிலை என்ன ஆவது...போங்க பாஸ் இது நீங்க ஹிட்ஸ்க்காக எழுதிய பதிவு......

சேகர் said...
Best Blogger Tips

சரியாக சொன்னீங்க போங்க.. இப்ப வர்ற படத்துல கதையும் இருகமாடைகுது.. அதான் சதை யாது இர்குகடுமே.

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!
என்னையா ஒரு ஹன்சிகா,ஒருகார்த்திகா இல்லாத படமா..!! நோ சான்ஸ்...

Anonymous said...
Best Blogger Tips

இப்போதெல்லாம் நான் நிம்மதியாக தூங்குவதே வீட்டில் மற்றவர் தமிழ் படம் பார்க்கும் போது தான்...

நல்ல கதையுள்ள படங்களும் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன...

நல்ல படம் வரும்போது கொட்டை எழுத்தில் விமர்சனம் போடுங்கள் சகோதரம்...

முழித்துப் பார்க்கிறேன்...நல்ல அலசல்...

shanmugavel said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்,இப்போ நல்ல மாற்றங்கள் நிறையவே காண முடிகிறதே!

Unknown said...
Best Blogger Tips

என்ன செய்வது நல்ல படங்கள் நன்றாக ஓடியும் இயக்குனர்கள் திருந்தமாட்டார்கள் தற்சமயம் பார்த்த வாகைசூடவா அருமையான படம்
வாய்ப்பு கிடைத்தால் பாருங்க நிரூபன்

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

பணம் பன்னத்தானேய்யா படம் எடுக்குறாங்க, என்னத்தை சொல்ல....???

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

சகோ, அந்த ஹீரோயின், அந்த கவர்ச்சி நடிகை நடிச்சிருக்காங்க என சொல்லி தான் படத்தை நிறைய பேரு விநியோகம் செய்றாங்க.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

வெறும் ஐந்து பாடல்களை வச்சு ஒன்னும் ஈ ஓட்ட முடியாது. அது மட்டுமில்லாம ஹீரோயின் கவர்ச்சி படம் முழுசும் வர்ற மாதிரி கதை ரெடி பண்றாங்களே?

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

கவர்ச்சி இருந்தா தானே ரசிகர்களை சீட்டில் உட்கார வைக்க முடியும். இது தமிழ் படத்தில் மட்டும் அல்ல. கிட்டத்தட்ட எல்லா மொழி படங்களிலும் இந்த நிலை உள்ளது. ஆகவே இந்த பதிவுக்கு நீங்கள் வைத்துள்ள தலைப்பை (நடிகையின் சதையை நம்பி நடுத் தெருவில் நிற்கும் தமிழ் சினிமா!) நான் கண்டிக்கிறேன் சகோ...

ஆகுலன் said...
Best Blogger Tips

காட்டான் said...

வணக்கம் நிரூபன்!
என்னையா ஒரு ஹன்சிகா,ஒருகார்த்திகா இல்லாத படமா..!! நோ சான்ஸ்... //

well said kaddan mama ...i agary with him ....

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

இந்த நல்ல கருத்துள்ள பதிவினை தமிழுக்கு மட்டும் நீங்கள் கையாண்டது எனக்கு நியாயமாக தெரியவில்லை. தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடா,..... சகோ இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.


நம்ம தளத்தில்:
சின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்டைக் கச்சேரி

மாய உலகம் said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ்... படிச்சுட்டு வாரேன்... ;-)))

மாய உலகம் said...
Best Blogger Tips

பொக்கிஷம், அங்காடித் தெரு, மைனா //

பாஸ் இப்ப எவ்வளவோ மாற்றங்கள் வந்துகிட்டு தானிருக்கு...
நீங்க சொன்ன வரிசையிலயே... நான் கடவுள், ராம், ரமணா,கமல் படங்களில் நிறைய,வெயில், கல்லூரி, பூ, தவமாய் தவமிருந்து,காஞ்சிவரம்,இயக்குநர் மோகன் அவர்க்ளின் படங்கள்... இப்படிப்பட்ட படங்களுக்கு முக்கியதுவம் மக்கள் முழுக்க முழுக்க கொடுக்க ஆரம்பித்தாலே.. ஆட்டோமெட்டிக்காக உப்புமா படங்களும், குத்துபாடல்களை கொடுக்கும் படங்களும் தானாகவே குறைய ஆரம்பித்து.. கடைசியில் தானாகவே ஒழிந்துவிடும்.

மாய உலகம் said...
Best Blogger Tips

பாஸ் அதென்ன தேநிர்விடுதி ஸ்டில் போட்டுருக்கீங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்.. அதுல எனக்கும்பங்கிருக்கு அவ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...
Best Blogger Tips

நடிகையின் சதையினை நம்பித் தமிழ் சினிமாவின் போக்கினை அல்லது பாதையினை மாற்றுவதிலும் பார்க்க, நல்லதோர் கதையினை நம்பி மக்களின் பேரபிமானத்தினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஒரு படத்தினை எடுக்க எம் தமிழ் இயக்குனர்கள் ஏன் முன்வரக் கூடாது? //

பாஸ்... ஆல்ரெடி வந்துட்டாங்க.... வந்துட்டேருக்காங்க.. கண்டிப்பாக மிகப்பெரிய மாற்றம் உருவாகிக்கொண்டிருக்கிறது....

மாய உலகம் said...
Best Blogger Tips

நாமும் எத்தனை நாளைக்குத் தான் மசாலாத் திரைப்படங்களைப் பார்த்து எம் மனதினுள் புகைந்து கொண்டிருப்பது.//

இல்லை நண்பா.. நல்ல படங்களுக்கு முக்கியதுவம் நாம் தர ஆரம்பித்தோமென்றாலே.. இது போன்ற படங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்... அதுமட்டுமில்லாமல் இப்பவெல்லாம் ஆடியன்ஸ் தெளிவாக இருக்கிறார்கள்... அதற்காகவே இயக்குநர்கள் மெனக்கெட்டு தான் ஆகவேண்டும்.

மாய உலகம் said...
Best Blogger Tips

ஐந்து பாடல்களை ஒரு படத்தினுள் சொருகி படத்தின் நேரத்தினை அதிகரிப்பதனை விடுத்து பாடல்கள் அல்லது தமிழ் இசைக்கென்று தனியான ஆல்பங்களை உருவாக்கித் தமிழ் சினிமா பயணிப்பதற்கு யாராவது ஒரு இயக்குனர் அடியெடுத்து வைக்க கூடாதா?//

அதற்கான முயற்சி தான் குருதிபுனல்..

மாய உலகம் said...
Best Blogger Tips

வரலாற்றுக் கதைகள், தமிழ் நாட்டு மக்களின் வாழ்வியலைப் பேசும் சம்பவங்கள் எனப் பல விடயங்கள் புதைந்து போயிருக்க அவற்றையெல்லாம் விட்டு விட்டு மொழி மாற்றி ரீமேக் படங்களை எடுப்பதில் எம் கவனத்தினைச் செலுத்தலாமா?//

இங்கே உண்மை சம்பவங்கள் எடுத்தால் கூட ஏகப்பட்ட கத்திரி வேலைகள் நடப்பதால் எடுக்க அஞ்சிகின்றனர்... என்ன செய்வது... உங்களுடைய அருமையானதொரு ஆதங்கம் நினைவாகட்டும் நண்பா... நல்லதொரு அலசலுக்கு நன்றி பாஸ்.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

பிஸியாக இருக்கும் நிரூபனுக்கு எனது காலை வணக்கங்கள் ஹி ஹி

Siva Karur said...
Best Blogger Tips

vanakkam.. yenadhu mudhal kelvi yennavendraal, indha nadigaigal yean avvaaru nadikka sammadhikkiraargal?? pengalukku izhivu, penaai oru bodhaipporul/pgapporul pola payanpaduthappadugiraargal yena yeppodhum pen kulame? neengal avvaru nadikkamaattom yena sonnaal innum nallaayirukkum. naaladaivil ivvagaiyaana kalaarachaara seerazhivum thadukkappadum.. nandri.,..

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails