Friday, November 4, 2011

நான்காம் ஈழப் போரை திசை திருப்ப புலிகள் கையாண்ட தந்திரோபாயங்கள்!

ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு!
பாகம் 02....
யாழ் குடா நாட்டிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 24 மணி நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியது இலங்கை அரசு. இராணுவம் புலிகள் அமைப்பினருக்குத் தண்ணி காட்டும் நோக்கோடு கிழக்கு மாகாணத்தில் புதிய கள முனையினை வாகரையினை அண்டிய பகுதியிலும், சம்பூரிலும் திறந்தது. மக்களைப் பற்றிய கவலையேதுமின்றி புலிகளைப் பூண்டோடு அழித்தால் போதும் என்ற நோக்கோடு கிழக்கு மாகாணத்தில் இராணுவம் தன் தாக்குதல் நடவடிக்கையினைத் தொடங்கியது. இதே வேளை புலிகளுக்கு இருந்த மக்கள் ஆதரவினைச் சீர் குலைக்கும் நோக்கோடு வன்னிப் பகுதியில் வாழ்ந்த மக்களிற்குப் புலிகள் மீது வெறுப்பினை உருவாக்கும் நோக்கில் கண் மூடித்தனமான விமானக் குண்டு வீச்சினை இலங்கை இராணுவம் ஆரம்பிக்கின்றது.

இந்த விமானக் குண்டு வீச்சின் உச்சபட்ச வெறியாட்டமாக ஆகஸ்ட்டு 14ம் திகதி 2006ம் ஆண்டன்று வள்ளிபுனத்தில் அமைந்துள்ள செஞ்சோலைச் சிறுவர் வளாகம் மீது விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலை நிகழ்த்தி 61 அப்பாவிச் சிறார்களின் உயிரினைப் பலியெடுத்த பின்னர்; புலிகள் தமது மூர்க்கத் தனமான தாக்குதலை நிறுத்துவார்கள் என காத்திருக்கிறது இலங்கை அரசு.ஆட்பல ரீதியில் குறைவாகவும், மனோபலத்தில் உயர்வாகவும் உறுதியாகவும் இருந்த புலிகள் அமைப்பினர் கிழக்கு மாகாணத்திலும், அதே வேளை வட பகுதியிலும் சம நேரத்தில் சண்டையிடுவதற்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவிய காரணத்தினால் திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தினை எந் நேரமும் தமது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கக் கூடிய மூதூர் பகுதியிலிருந்தும், சம்பூர் பகுதியிலிருந்தும் பின் வாங்குகின்றார்கள். யாழ்ப்பாணத்திலும் ஈழ வரலாற்றில் முதன் முறையாக குடாநாடு மீது தாக்குதல் தொடுக்கும் நோக்கில் யாழ் தீவகத்தில் களமிறக்கியிருந்த புலிகளின் ஈரூடக அணியினரை (SPECIAL MARINE WING) வன்னிப் பகுதிக்கு மீளவும் அழைக்கின்றார்கள் புலிகள்.

ஈரூடக அணி எனப்படுவது சிறப்புப் பயிற்சி பெற்ற தரையிலும், கடலிலும் சம நேரத்தில் சண்டை செய்யக் கூடிய அணியாகும். புலிகள் குடாநாட்டின் தீவுப் பகுதியில் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஈருடக அணியினரைப் பின்னகர்த்தினாலும்;தரை வழியான எல்லைப் பகுதியான முகமாலையிலிருந்து ஒரு அடி கூட பின் வாங்கவில்லை. முகமாலையில் புலிகளின் அணியினர் மிகவும் பலமான நிலையில் தம்மை எதிர்க்க வரும் அல்லது முன்னேறி வரும் இராணுவத்தினரை விரட்டித் தாக்குதல் நிழத்தியாவாறு சமராடிக் கொண்டிருந்தார்கள்.வன்னியிலிருந்து தரை வழியாக முகமாலையிற்குச் செல்வதற்கு இருந்த A9 நெடுஞ்சாலை கிளிநொச்சி வீழ்ச்சியின் போது துண்டிக்கப்படும் வரை - இறுதிப் போரின் 2008ம் ஆண்டின் இறுதிக் காலப் பகுதி வரை முகமாலையூடான இலங்கை இராணுவத்தின் முற்றுகையினை எதிர்த்து சமராடினார்கள் புலிகள். அதுவரை இலங்கை இராணுவத்தால் முகமாலைப் பகுதியினூடாக முன்னேற முடியாத அளவிற்கு பலமான நிலையில் புலிகள் தமது நிலைகளைப் பலப்படுத்தி வைத்திருந்தார்கள்.

புலிகள் தந்திரோபாய அடிப்படையில் பின்னகர்ந்ததனை அறியாத இலங்கை இராணுவமும், இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க அவர்களும் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என நையாண்டிச் செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த காலமது. திருகோணமலை மாவட்டத்தில் புலிகளின் நடவடிக்கையினை முற்றாக இல்லாதொழித்து விட்டோம் என்றும், புலிகள் இனிமேல் கொழும்பு மீதோ அல்லது இலங்கையின் தென் மாகாணங்கள் மீதோ தாக்குதல் நடாத்த முடியாதென்றும் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள் இலங்கை அரச படையினர்.இத்தகைய அறிக்கைக்களுக்கெல்லாம் காரணம் திருகோணமலையில் புலிகள் வசமிருந்த சம்பூர், மூதூர் ஆகிய பகுதிகள் திருகோணமலை மாவட்டத்தினைக் கண்காணிப்பதில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகப் புலிகள் அமைப்பினருக்கு அமைந்திருந்ததோடு; வன்னியையும், கிழக்கு மாகாணத்தையும் இணைத்து விநியோக நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளும் போது ஒரு தரிப்பிடமாகவும் இருந்தமையும் ஆகும். 

ஆனால் புலிகளோ திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், சம்பூர் பகுதிகளிலிருந்து தாம் பின்னகர்ந்தாலும் தமது படையணிகளால் இலங்கையின் தென் மேற்கிலும், மத்திய பகுதியிலும் தாக்குதல் நடாத்திக் காட்ட முடியும் என்பதனை நிரூபித்துக் காட்டினார்கள். 16.10.2006 அன்று ஹபரணைச் சந்தியில் விடுமுறையில் செல்லும் பொலிஸார் மற்றும் கடற்படையினரை ஏற்றிச் செல்வதற்காக தரித்து நின்ற பஸ் வண்டி மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடாத்தி தம்மால் எங்கும் செல்ல முடியும் என்பதனை உணர்த்திக் காட்டினார்கள். இச் சம்பவத்தில் 88 இராணுவத்தினர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டார்கள். இலங்கை இராணுவமோ, சீற்றம் கொண்டவர்களாக தம் இயலாமையினை வெளிப்படுத்தும் நோக்கில் வன்னியில் மக்கள் நிலைகளை மீது தாக்குதல் கண் மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலை நிகழ்த்த தொடங்கினார்கள்.

அக்டோபர் மாதம் 17ம் திகதி, 2006ம் ஆண்டு செவ்வாய்க் கிழமை, காலை 09.45 மணியளவில் ஹபரணைத் தாக்குதலின் எதிரொலியாக இலங்கை இராணுவம் புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது இரண்டு ரொக்கட் குண்டுத் தாக்குதலை நடத்தியது. இதன் பின்னரும் தம் கோபமும் வெறியும் தணியாதவர்களாக வாகரை, வவுணதீவு ஆகிய கிழக்கு மாகாணப் பகுதிகள் மீது இலங்கை அரச படைகள் பீரங்கி மற்றும் விமானக் குண்டுத் தாக்குதல்களை நடாத்தின. வாகரை மருத்துவமனையில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருந்த பெருமளவான மக்களுக்கு இந்தத் தாக்குதல்கள் மூலம் சேதங்கள் ஏற்பட்ட காரணத்தினால் புலிகள் கிழக்கு மாகாணத்தினை விட்டு மக்களின் நலன் கருதியும், தமது போராளிகளின் நன்மை கருதியும் வன்னிப் பகுதி நோக்கிப் பின்வாங்க வேண்டிய தேவைக்கு ஆளாகின்றார்கள். இந்த வேளையில் புலிகள் அமைப்பினரை ஒரு சதுர வடிவான பிரதேசத்தினுள் வன்னிப் பகுதிக்குள் இராணுவத்தினர் முடக்குகின்றார்கள்.
வடக்கே முகமாலை ஊடாக இராணுவம் வன்னிக்குள் நுழைய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கையில், தெற்கே வவுனியா ஓமந்தை வீதி, நெடுங்கேணி வவுனியா வீதி, மற்றும் கிழக்கே மணலாறு முல்லைத்தீவு வீதி, மேற்கே மன்னார் - உயிலங்களும், மன்னார் பூநகரி வீதி ஆகியவற்றின் ஊடாக இராணுவம் எந்த நேரத்திலும் புலிகள் பகுதிக்குள் நுழையலாம் என புலிகள் முன் கூட்டியே தீர்மானித்தார்கள். இந்த வேளையில் தான் புலிகள் அமைப்பினர் வவுனியா, மன்னார்ப் பகுதிகளில் உள்ள இராணுவத்தினர் புலிகள் பகுதியினுள் முன்னேறுவதற்கு சாதகமாகத் திட்டங்கள் தீட்டுவதனையும், ஆயுத தளபாடங்களை நகர்த்துவதனையும் சீர்குலைக்க அல்லது குழப்ப முடிவு செய்தார்கள். வவுனியா, மற்றும் மன்னார்ப் பகுதியில் உள்ள இராணுவத்தினர் வன்னி மீதான முற்றுகை பற்றிச் சிந்திக்கா வண்ணம் குழம்ப வேண்டும். அச்சத்தில் உறைய வேண்டும் என முடிவு செய்த புலிகள் தமது தாக்குதற் பிரிவில் உள்ள சிறப்புப் போராளிகளை அழைத்து உளவுப் பிரிவு அல்லது வேவுப் பிரிவோடு ஒருங்கிணைத்து வன்னியில் ஒரு திட்டத்தினைத் தீட்டத் தொடங்கினார்கள்.....

இத் தொடரின் அடுத்த பாகம் நாளை சனிக்கிழமை வெளிவரும். 

இப் பதிவிற்கான படங்கள் அனைத்தும் கூகுள் தேடல் மூலம் பெறப்பட்டவை!

22 Comments:

suryajeeva said...
Best Blogger Tips

பாஸ், கலக்குங்க, நாளை வரை காத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை, இருந்தாலும் வேறு வழி இல்லை என்பதும் அறிவேன்..

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

மிக அழகாகவும் அருமையாகவும் செல்கிறது தொடர்! செஞ்சோலைத்தாக்குதல் என்றுமே மறக்க முடியாதது! அந்த நாட்களில் வன்னியில் நிலவிய சோகத்தை வார்த்தைகளில் வருணிக்க முடியாது!

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Best Blogger Tips

நல்ல தொடர் நண்பா

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Best Blogger Tips

இன்று என் வலையில்

கடுப்பேத்துரார் மை லார்ட் -பகுதி 2

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Best Blogger Tips

என்ன பிரசனை ? நம்ம வலை பக்கம் ஆளை காணும்

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

பல உண்மைகள் வெளியே வருகிறது, வரவேண்டும் என்பதே என் எண்ணம்...!!!

ஏன்னா யுத்தம் நடந்த சமயம் மீடியாக்களே எம்மை குழப்பியது, தொடருங்கள் நிரூபன்....!!!

துஷ்யந்தன் said...
Best Blogger Tips

பாஸ் தொடர் மிக நன்று... தொடர் மனசை ரெம்ப கனக்க வைக்குது பாஸ் :)
சில கொடுமைகளை மறந்து தொலைப்பதுதான் சால சிறந்தது மனசுக்கு நிம்மதியும் கூட.

shanmugavel said...
Best Blogger Tips

தொடர்ந்தது வாசிக்கிறோம்.தொடருங்கள்.

Anonymous said...
Best Blogger Tips

இந்த தொடர் நிறைய புதிய தகவல்களை புதிய கோணத்தில் தருகிறது...

அதில் பல நான் உண்மை என்று நம்பிய பலவற்றிலிருந்து முரண்படுகிறது...தொடருங்கள் சகோதரம்...

M.Shanmugan said...
Best Blogger Tips

நானும் வாசிக்கிறேன்

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

தெரியாத தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

தமிழ்வாசி - Prakash said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி சகோ... டெம்ப்ளேட் கருத்துரைக்கு மன்னிக்கவும்.


நம்ம தளத்தில்:
இந்த அதிசியத்தை நம்ப முடியுதா? படங்கள் பார்க்க...

Taker007 said...
Best Blogger Tips

பதிவு கொஞ்சம் வேகமாக இருக்கிறது....

...மீடியாக்களே எம்மை குழப்பியது...//
உண்மைதான்

Yoga.S.FR said...
Best Blogger Tips

இரவு வணக்கம் நிரூபன்!செஞ்சோலை வளாகத்துக்கு டிசம்பர் 2006 போயிருந்தேன்.சுமார் இருநூறு மீட்டர் தொலைவில் தான் எனது உறவுகள் குடியிருந்தார்கள்.முற்றத்து தென்னை மரங்களின் மீது துப்பாக்கிச் சன்னங்கள் தொளைத்திருந்தன!

ஈழம் தேவதை said...
Best Blogger Tips

உண்மையான பதிவு..ஈழம் சார்ந்த பதிவுகள் என்றும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டியவை ...நன்றி

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

நடந்தவைகளை நேரடி ஒளிபரப்பு செய்கிறீர்கள்.
தொடரட்டும் வரலாற்றுப்பணி.

மகேந்திரன் said...
Best Blogger Tips

வணக்கம் சகோ நிரூபன்,
உங்கள் பதிவை படிக்கையில் நிறைய செய்திகள்
தெரிந்துகொள்ள முடிகிறது..

ரா.செழியன். said...
Best Blogger Tips

இறுதி யுத்த செய்திகள் என்றால் பி.பி.சி தமிழோசை தவிர வேறு எனக்கு அப்போது வ்ழியில்லை.பதிவின் மூலமாக என்ன நடந்தது என்று புதிய தகவல்களை அள்ளி தருகிறீர்கள்.தொடர்கிறேன், நன்றி.

jayaram thinagarapandian said...
Best Blogger Tips

எங்களுக்கு தெரியாத பல உண்மைகளை
தெரிய வைத்தீர்கள் நன்றி ..

F.NIHAZA said...
Best Blogger Tips

தொடருங்கள் நிரூபன்....
உங்கள் விடாமுயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.....

கொஞ்சம் நாளா உங்கள் தளத்துக்கு வர நேரம் கிடைக்கவில்லை....ஞாயிறு இங்கே பெருநாள் அதான்....பிஸி..பிஸி...

FOOD said...
Best Blogger Tips

விறு விறு தொடர்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

சாரி ஃபார் லேட்.. 3 நாட்களாக பிஸி..

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails