Saturday, November 5, 2011

Water For Elephants - ஹாலிவூட் பட விமர்சனம் - மணமான பெண் மீதான டீன் ஏஜ் பையனின் காதல்!

தும்மலையும், காதலையும் நெருப்பு புகையினையும் இலகுவில் மறைக்க முடியாது என்று கூறுவார்கள். காதல் உணர்வின் அடிப்படையிலும், ஒரு மனிதனது உடல் இச்சையின் அடிப்படையிலும் எங்கு வேண்டுமானலும் எப்போது வேண்டுமானலும் பிறந்து கொள்ளும். இளங் கன்னியர் மீதும், மணமான பெண்கள் மீதும் வாலிப வயசுப் பையன்களுக்கு அவர்களின் மன உணர்வின் அடிப்படையில் காதல் பிறந்து கொள்ளும். இந்த வகையான காம உணர்வோடு கூடிய பொருந்தாக் காதல்கள் கை கூடுவதென்பது அரிதிலும் அரிது. ஆனால் மனதளவில் சுகம் காண நினைக்கும் ஆடவனுக்கு அவனது மன உணர்வினைப் பூர்த்தி செய்யும் வகையில் பிறக்கும் காதலானது சில வேளை கசப்பான உணர்வுகளையும் தோற்றுவிக்கக் கூடும் அல்லவா?
வயது கூடிய ஆடவன் அழகும் இளமையும் கவர்ந்திழுக்கும் அட்ராக்சன் கலந்த லுக்கும் உடைய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து தன் அருகே வெறுமனே பெயருக்கு மனைவியாக மனைவி என்ற அடை மொழியோடு வைத்திருக்கும் போது, அவனிடம் பணம் இருந்தால் என்ன? இவ் உலகினை ஆளுகின்ற மகா பலம் இருந்தால் என்ன? ஒரு பெண்ணுக்கு வேண்டிய ரொமான்டிக் கலந்த சாந்தமான காதல் உணர்வு இல்லையேல் அவனது துணைவியாக உள்ள பெண்ணின் மன நிலை என்னவாகும்? 

வயது கூடிய ஆணை மணம் புரிந்துள்ள இளம் பெண்ணின் வாழ்க்கையில் அழகும், அவளுக்கு ஆதரவு கொடுத்து அவள் உணர்வுகளைச் செவிமடுக்கும் இயல்பும் கொண்ட ஒரு ஆடவன் குறுக்கிடும் போது அப் பெண்ணின் மனதில் தன்னைப் பெயருக்கு மனைவி என்ற நாமம் சூட்டி மகிழும் கணவன் மேலா அல்லது இளைஞன் மேலா காதல் உருவாகும்? இத்தகைய வினாக்களுக்கான விடையினைத் தன்னகத்தே கொண்டு நிற்கும் திரைப்படம் தான் WATER FOR ELEPHANT.

சிறு வயதில் தன் தாய் தந்தையரை இழந்த இளைஞனான ஜக்கோப் தன் கால் போகும் திசையில் நடந்து காட்டுப் பாதையூடே ஓடும் புகைவண்டியில் தொற்றி ஏறிக் கொள்கின்றார். அந்தப் புகை வண்டியானது அமெரிக்காவின் பென்சில்வேனிய மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற சர்க்கஸ் குழுவான Benzini Brothers சர்க்கஸ் குழுவினர் தமது சர்க்கஸ் நிகழ்வுகளுக்கான பயணங்களை மெற்கொள்ளும் புகை வண்டியாகும். 

தன் நிலையினை எடுத்துச் சொல்லி பென்சினி பிரதர்ஸ் சர்க்கஸ் குழுவுடன் இணைந்திருக்கும் ஜக்கப்பின் வாழ்வானது சிறிது சிறிதாகத் துளிர் விடத் தொடங்கும் சமயத்தில் சர்க்கஸ் குழுவின் ஓனர் ஓர்க்கஸ்ட் அவர்களின் இளம் மனைவியும் தேவதையுமான மெலீனா ஜக்கப்பின் பார்வைப் புலனை ஊடுருவிச் செல்கின்றா. அழகிய பெண்ணை அருகே வைத்துக் கொண்டு பணம் பணம் என சர்க்கஸே கதியென்று இருக்கும் ஓர்க்கஸ்ட் அவர்களை விட்டு ஜக்கப்பின் மீது மெலீனாவின் மன உணர்வுகள் தாவத் தொடங்குகின்றது.
காதலன் ஜக்கப் ஒரு புறம், மறு புறம் கணவன் ஓர்க்கஸ்ட் எனத் தத்தளிக்கும் நீர்க்குமிழி நிலையில் நிற்கும் மெலீனாவின் வாழ்விற்கு என்ன ஆச்சு? முக்கோணக் காதல் கதையினூடாக, ஒரு இளைஞனின் வயது முதிர்ந்த பெண் மீதான காதல் உணர்வுகள் எப்படி அமைந்து கொள்ளும் என்பதனையும் அழகுறச் சொல்லி நிற்கும் படம் தான் இந்த Water For Elephant. Sara Gruen's அவர்களின் Water For Elephants நாவலை அடிப்படையாக வைத்து 20th Century Fox நிறுவனத்தின் வெளியீட்டில் இவ் வருடத்தின் ஏப்ரல் மாதமளவில் ரிலீஸ் ஆகியிருக்கிறது இந்த திரைப்படம். 

Francis Lawrence அவர்கள் இக் கால இளைஞர்களின் ரசனைக்கேற்ற மாதிரி மென்மையான ரொமான்டிக் காட்சிகளினைப் புகுத்தி இப் படத்தினை இயக்கியிருக்கிறார். James Newton Howard அவர்களின் இசை காதல் உணர்வினை உடலினுள் ஊடுருவச் செய்து மனதை மயக்கச் செய்கின்றது. Reese Witherspoon, Robert Pattionson, Christoph Waltz ஆகியோர் இப் படத்தின் முன்னணி நட்சத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். ஜக்கப் ஆக வரும் நடிகர் Robert Pattionson அவர்களும், மெலினாவாக இப் படத்தில் நடித்திருக்கும் நடிகை Reese Witherspoon அவர்களும் காதல் மற்றும் ரொமான்டிக் காட்சிகளில் தம் இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள்.

பொழுது போக்கிற்காகப் படம் பார்க்க விரும்புவோருக்கும்;சர்க்கஸ் காட்சிகளைக் கண்டு களிக்க விரும்பும் நபர்களுக்கும்; காதல் ரசம் நிரம்பி வழியும் ரொமான்டிக் காட்சிகளைக் கண்டு களிக்க விரும்புவோருக்கும் விருந்தளிக்கும் இந்த திரைப்படம். 120 நிமிடங்கள் நேர அளவை கொண்ட இத் திரைப்படத்தை நீங்கள் விரும்பினால் கூகிளில் தேடுவதன் மூலம் ஆன்லைனில் கண்டு களிக்க முடியும்.

Water For Elephants: காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள ஆசைப்படும் இளம் உள்ளங்களின் உணர்வுகளைச் சொல்லும் படம்!

27 Comments:

Anonymous said...
Best Blogger Tips

///காதல் உணர்வின் அடிப்படையிலும், ஒரு மனிதனது உடல் இச்சையின் அடிப்படையிலும் எங்கு வேண்டுமானலும் எப்போது வேண்டுமானலும் பிறந்து கொள்ளும்./// அனுபவஸ்தர் சொல்லுகிறார் கேட்டுக்கோங்கோ )))

Anonymous said...
Best Blogger Tips

///இளங் கன்னியர் மீதும், மணமான பெண்கள் மீதும் வாலிப வயசுப் பையன்களுக்கு அவர்களின் மன உணர்வின் அடிப்படையில் காதல் பிறந்து கொள்ளும்./// நாம கொழந்தைகள் ...)

Anonymous said...
Best Blogger Tips

///வயது கூடிய ஆடவன் அழகும் இளமையும் கவர்ந்திழுக்கும் அட்ராக்சன் கலந்த லுக்கும் உடைய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து தன் அருகே வெறுமனே பெயருக்கு மனைவியாக மனைவி என்ற அடை மொழியோடு வைத்திருக்கும் போது,/// ஹிஹி பெண்களை தெய்வமாய் மதிக்க வேண்டும் என்பதை கரெக்டாய் புரிஞ்சுக்கிட்டவர்கள்...

சுதா SJ said...
Best Blogger Tips

ஹே... ஹே.... அந்த ஹீரோ நம்மள மாதிரி போல.... யோவ் சும்மா சொன்னனப்பா.... ஆனாலும் வயசான பெண்களை சைட் அடிப்பதும் ஒரு அலாதி சுகம்தானப்பா.... ஹும்..

சுதா SJ said...
Best Blogger Tips

பட லிங்கை பத்திர படுத்தி விட்டேன்.... நேரம் கிடைக்கும் போது பாக்குறேன்... தேங்க்ஸ் நிரூ

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ...அன்று ஒருபடம் அறியத் தந்திருந்தீர்கள்.யூ ட்யூப்பில் கிடைக்கவில்லை.இதாவது கிடைக்குமா தேடிப்பார்க்கிறேன் !

கவி அழகன் said...
Best Blogger Tips

அது சரி ஏன் கந்தசாமி அண்ணே இப்படி விழுந்தடிச்சு கருத்து போடுறார்

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

உங்கள் அழகு தமிழில் சிறப்பான ஒரு உலக சினிமா பதிவு எப்போது கிடைக்கும்...?
வரமாய் கேட்கிறேன்.

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////கந்தசாமி. said...

///இளங் கன்னியர் மீதும், மணமான பெண்கள் மீதும் வாலிப வயசுப் பையன்களுக்கு அவர்களின் மன உணர்வின் அடிப்படையில் காதல் பிறந்து கொள்ளும்./// நாம கொழந்தைகள் ...////

என்னய்யா கந்து எப்பவும் கொழந்த கொழந்த என்று புலம்புறார்......சீக்கிரம் கலியாணத்தை கட்டுங்க.....கந்து

K.s.s.Rajh said...
Best Blogger Tips

அண்ணே நம்ம தமிழ்சினிமா காரங்க இதே கதையை மூலக்கதையாக வைத்து பல சினிமாப்படங்களை முன்னமே எடுத்துட்டாங்க..........

உதாரணம்..முதல்மரியாதையும் கிட்ட தட்ட கதை ஒன்றுதான் என்ன முதல் மரியாதையில் பெயரளவில் கணவனாக வாழும் வயதான நாயகன் மீது ஓரு நாயகி காதல் கொள்கின்றாள்....

இந்தப்படத்தில் மாறி நடக்குது அவ்வளவுதான் மூலக் கரு ஓன்றுதான்.....இன்னும் இதே கதையில் பல தமிழ்சினிமா உண்டு...

நம் தமிழ் சினிமாவை பார்த்து இவர்கள் எடுத்து இருக்க மாட்டார்கள் ஆனால் அந்த நாவலை வாசித்து நம்ம தமிழ் சினிமா ஆளுகள் படம் எடுத்து இருக்கலாம்.

Yaathoramani.blogspot.com said...
Best Blogger Tips

னைவருக்குமான படம் என தங்கள் விமர்சனம்
அழகாக உணர்த்திப்போகிறது
அருமையான விமர்சனம்
த.ம 7

Anonymous said...
Best Blogger Tips

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

rajamelaiyur said...
Best Blogger Tips

நல்ல விமர்சனம் ..

rajamelaiyur said...
Best Blogger Tips

இப்போதுலம் ஏன் யாரையும் அறிமுகபடுத்துவதிலை ?

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

தடையம்..

சசிகுமார் said...
Best Blogger Tips

சூப்பர் விமர்சனம் மச்சி நன்றி...

Mathuran said...
Best Blogger Tips

அசத்தல் விமர்சனம் நிரூபன்

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

இது போன்ற சினிமா விமர்சனங்கள் உங்கள் தளத்திற்கு நிரந்தர வெற்றியை தரும்.வாழ்த்துக்கள்..வாரம் இரண்டு விமர்சனங்கள் எதிர்பார்க்கிரேன்..

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்
என்னங்கோ நீங்க ஏழாம் அறிவு படத்திற்கு விமர்சனம் போடுவீங்கன்னு எதிர் பார்த்திருந்தேன்....!!!???

காட்டான் said...
Best Blogger Tips

அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள்..

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அருமையான விமர்சனம் படத்தை தேடிபிடிச்சு பாத்துரவேண்டியதுதான்...!!!

Anonymous said...
Best Blogger Tips

நல்ல விமர்சனம் அண்ணே...
//நீங்கள் விரும்பினால் கூகிளில் தேடுவதன் மூலம் ஆன்லைனில் கண்டு களிக்க முடியும்.///

நீங்களே லின்க தர இருந்துச்சு, பரவால்ல விடுங்க தேடி பாக்குறேன்...

shanmugavel said...
Best Blogger Tips

//காதல் உணர்வின் அடிப்படையிலும், ஒரு மனிதனது உடல் இச்சையின் அடிப்படையிலும் எங்கு வேண்டுமானலும் எப்போது வேண்டுமானலும் பிறந்து கொள்ளும்//

ஹே...ஹே...எனக்கு புரிஞ்சிடுச்சி!

Anonymous said...
Best Blogger Tips

காதல் உணர்வின் அடிப்படையிலும், ஒரு மனிதனது உடல் இச்சையின் அடிப்படையிலும் எங்கு வேண்டுமானலும் எப்போது வேண்டுமானலும் பிறந்து கொள்ளும்//

கொஞ்ச நாளாவே வேற பாதையிலே பயணிக்கிற மாதிரி இருக்கே சகோதரம்...:)

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள ஆசைப்படும் இளம் உள்ளங்களின் உணர்வுகளைச் சொல்லும் படம்!//

அப்படியா? காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளனும். நல்ல மெசேஜ்


நம்ம தளத்தில்:
மக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்க அனிமேஷன் படங்கள்

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

தேடிப்பார்க்கிறேன்.நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நிரூபனும் கில்மாப்படம் பார்க்க ஆரம்பிச்சுட்டாரே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails