Wednesday, November 23, 2011

ஈழத்தின் இறுதிப் போரைத் திசை திருப்ப புலிகள் கையாண்ட தந்திரங்கள்!

நெருப்பு, டக்ளஸ், விமலன் ஆகியோர் களத்தில் இறங்கினார்கள். மறு நாள் 12.04.2007 அன்று; வவுனியா நகரம் அதிரத் தொடங்கியது. வவுனியா வைத்தியசாலையினை நோக்கி அம்புலன்ஸ் வண்டிகள் ஓடத் தொடங்கியது. 11.04.2007 அன்று புலிகளுக்கு ஆதரவானோர் மூவரையும் இராணுவத்தினர் சுட்டுக் கொன்ற சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. புலிகளின் கோட்டையாக வவுனியா அரச கட்டுப்பாட்டுப் பகுதியிற்குள் இருந்த உக்குளாங்குளம்,கூமாங்குளம் பகுதிகளில் இராணுவத்தினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களினால் புலிகளோடு நெருங்கிப் பழக மக்கள் அச்சம் கொண்டார்கள். மக்கள் ஆதரவு இல்லாத ஒரு பிரதேசத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது மிகவும் இயலாத காரியமாக இருந்தது.
நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது உங்கள் அபிமான நாற்று வலைப் பதிவில் தொடராக வந்து கொண்டிருக்கும், "ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின்" எட்டாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உல்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள்.  நெருப்பு, டக்ளஸ், விமலன் ஆகியோர் தம்மால் தானே தம்மை ஆதரித்த மக்கள் மூவர் கொல்லப்பட்டார்கள் எனப் பலமாகச் சிந்தித்தார்கள். கவலையுற்றார்கள். துன்பத்தைத் தருபவர்க்கே "துன்பத்தைத் திருப்பிக் கொடு" எனும் வாக்கிற்கமைவாக; தம் மீது தாக்குதல் நிகழ்த்த முடியாது தம்மை ஆதரித்த மக்களின் உயிரோடு விளையாடியவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என இரவோடு இரவாகத் திட்டம் தீட்டினார்கள்.

ன்றைய தினம் வவுனியா நகரம் ஒரு கணம் அதிர்ந்தது. 12.04.2007 அன்று மாலை 05.45 மணி. வவுனியா மாவட்டத்திலுள்ள "அவரந்தலாவ" எனும் சிங்களக் கிராமத்தினுள் புகுந்த இனந் தெரியாத ஆயுததாரிகள் அங்கு வாழ்ந்த சிங்கள மக்களைத் துப்பாக்கியால் சுட்டும், வாளால் வெட்டியும் படு கொலை செய்யத் தொடங்கினார்கள். இச் சம்பவத்திற்கு முதல் நாள் 05.47 மணியளவில் உக்குளாங்குளம் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டதற்குப் பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் இச் சம்பவம் இடம் பெற்றது. சிங்கள மக்கள் தம் பகுதி மீது இனந் தெரியாத ஆயுததாரிகள் தாக்குதல் நிகழ்த்துவார்கள் எனச் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

க்கிரமப்பாளர்களின் உச்சபட்ச இயலாமையின் வெளிப்பாடாக தமிழ் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதற்குப் பழி வாங்கும் நோக்கில் இனந் தெரியாத நபர்களினால் வவுனியாவில் நிகழ்த்தப்பட்ட இக் கொலை வெறித் தாக்குதலில் ஏழிற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் கொல்ல்லப்பட்டார்கள். பத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். காயப்பட்டோரை ஏற்றியவாறு அம்புலன்ஸ் வண்டிகள் வவுனியா வைத்தியசாலையினை நோக்கி ஓடத் தொடங்கியது. நெருப்பு, டக்ளஸ், விமலன் ஆகிய மூவரும் பற்றைக் காடுகளூடாகப் பதுங்கி வந்து மீண்டும் கூமாங்குளத்தினுள் நுழைந்து கொள்கின்றார்கள்.இப்போது இராணுவத்தினருக்கு ஒரு விடயம் புரிந்திருக்க வேண்டும்.
க்கள் மீது தாக்குதல் நிகழ்த்தினால் அதற்கான எதிர் வினைகள் சிங்கள மக்கள் மீது உடனடியாகப் பிரயோகிக்கப்படும் என்பதனை இராணுவம் உணர்ந்து கொள்கின்றது. அதே வேளை வவுனியாவிலிருந்து வன்னி முற்றுகையினைத் தொடங்குவதா அல்லது மன்னாரிலிருந்து வன்னி மீதான படையெடுப்பினைத் தொடங்குவதா என இராணுவம் திண்டாடிக் கொண்டிருந்தது. ஏ 9 நெடுஞ்சாலையூடாக முகமாலை முன்னரங்கினை உடைத்து எப்படியாவது வன்னிக்குள் நுழைய வேண்டும் என ஒவ்வோர் முறையும் படை நடவடிக்கையினைத் தொடங்கிய இராணுவத்தினர் பல முறை அடி வாங்கி அடி வாங்கிப் பின்னகர்ந்து கொண்டிருந்தார்கள். லங்கை இராணுவத் தலமையகத்திற்குப் பலத்த ஏமாற்றம்.

புலிகளைப் பூண்டோடு அழிக்கலாம் எனப் புறப்பட்டு ஆனையிறவையும், அதனைத் தொடர்ந்து கிளிநொச்சியினையும், பூநகரியினையும் கைப்பற்றுவோம் எனச் சூளுரைத்துப் பொன்சேகா விடுத்த அறிக்கை பொய்த்துப் போவதனைக் கண்டு மகிந்தருக்கு ஏமாற்றத்தின் மேல் ஏமாற்றம் கிடைத்துக் கொண்டிருந்தது.ஏ 9 நெடுஞ்சாலையில் முகமாலை முன்னரங்கினூடாக முன்னேற முயலும் இராணுவத்தினரை வழி மறித்துத் தாக்கியவாறு புலிகளின் இம்ரான் பாண்டியன் படையணியினரும், மாலதி படையணியும் எதிர் சமர் புரிந்து கொண்டிருந்தார்கள். இராணுவம் இம் முறை எப்படியாவது வன்னிக்குள் நுழைந்து கிளிநொச்சி நகரைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் விடாப் பிடியாக இருந்தது.

இராணுவம் இப்போது முன்பை விட தீவிர வெறியோடு புலிகளின் வவுனியா நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கங்கணம் கட்டத் தொடங்கியது. விமலன் வவுனியா வைரவப் புளியங்குளம் வீதியூடாக வீதிச் சோதனை நடவடிக்கையின் நிமித்தம் (ரோந்து) செல்லும் இராணுவத்தினர் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்துவதற்குத் திட்டமிட்டார். வவுனியா வைரவப் புளியங்குளக் குளக் கட்டிற்கும் கீழ்ப் பகுதியில் நெல் வயல் அமைந்திருக்கிறது. நெல் வயலின் பின்னே அம்மன் கோவில் ஒன்று உள்ளது. விமலன் தன் திட்டத்தினைச் செயற்படுத்தும் நோக்கோடு அம்மன் கோவிலடிக்கு வந்தார். 
விமலனின் திட்டம் என்ன? அந்த திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு அமைந்தது? இராணுவம் வன்னிக் களமுனையின் முதலாவது தாக்குதலை எங்கே தொடங்கியது? இது பற்றி அறிய ஆவலா? அடுத்த பாகம் வெகு விரைவில் உங்களை நாடி வரும்.அது வரை காத்திருங்கள்! எதிர்பார்த்திருங்கள்!

11 Comments:

Anonymous said...
Best Blogger Tips

விமலனின் திட்டம் என்ன?//

தொடருங்கள்...புதிய வியுகம்..அதே களம்...
நிறைய தெரிந்து கொள்கிறேன்...

shanmugavel said...
Best Blogger Tips

தொடருங்கள்,விரிவாகசெல்கிறது.

Unknown said...
Best Blogger Tips

திட்டம் என்ன என்பதை அறிய நாங்களும் காத்து நிற்கிறோம்.. !!

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

காத்திருக்கிறேன்.

Yoga.S. said...
Best Blogger Tips

இரவு வணக்கம், நிரூபன்!தொடருங்கள்,தொடர்வோம்!

Unknown said...
Best Blogger Tips

நிரூபன்,
நிறைய புதிய தகவல்கள்...
காத்திருக்கிறேன்.

உணவு உலகம் said...
Best Blogger Tips

விலாவரியான தகவல்கள்.

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
செங்கோவி said...
Best Blogger Tips

விரிவான தகவல்களுடன் விறுவிறுவென நகர்கிறது தொடர்..

ராஜீவ் காந்தி said...
Best Blogger Tips

வணக்கம்

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அறியாத பல தகவல்கள் ஆச்சர்யம் ஊட்டுகிறது...!!!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails